Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19122
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/02/24 in all areas

  1. இப்படித்தான் நடக்கப் போகின்றது.................. நாங்கள் சுமந்திரனையும், சிறீதரனையுமே இன்னும் அடித்து முடியவில்லை. அடுத்ததாக யார் வரப் போகின்றார்கள் தேர்தல்களில் முன்னுக்கு நிற்க.................. இப்படிக் கைது செய்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்று ஒன்று தான் அவசியம் என்று இல்லை. கைது தான் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் வேறு சட்டங்களும் இருக்கின்றன. அமெரிக்காவில் பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று இல்லை தானே............ 2009ம் ஆண்டின் பின்னர் ஒரு நாள் எங்களில் நாலோ ஐந்து பேர்களின் வீடுகளின் கதவுகள் ஒரு அதிகாலைப் பொழுதில் தட்டப்பட்டன. அன்றுடன் அதுவரை இங்கு மிகப் பெரிதாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த மாவீரர் தினங்கள் அந்த வடிவில் முடிவுக்கு வந்தன. ஆனாலும் ஒரு சிறு வட்டத்திற்குள் வருடா வருடம் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டேயிருக்கின்றோம், இந்த வருடம் உட்பட, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட படங்கள் இல்லாமல்..................
  2. ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான். பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது. கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது.. எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று.. விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான். கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்.. நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு.. பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார். தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு.. மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான். கேட்டவன் எதிர்க்கட்சிக் காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார். அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு.. ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணி தான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்.. அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார். கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார். அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து.. மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து..மாவட்ட கலெக்டரிடமிருந்து தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து விஏஓக்கு வந்து.. விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.. (இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... 🙁 ) சிந்திக்கவும்.😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
  3. கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன் அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக இருந்திருக்கும் . வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம் மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள் அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் . புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும்
  4. ஆசாமி டக்ளசின் ஆளாக இருப்பாரோ. இலங்கையில் ஆட்சி மாறி கடல்தொழில் அமைச்சு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதை அறியாமல் எஜமானின் சொத்தை பாதுகாக்க பூட்டும் கையுமாக வந்திருப்பார்.
  5. நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு, நீண்டகாலத் தீர்வு பற்றியெல்லாம் அல்ல. இவர்களது தொடர்ந்த இருப்பு தொடர்பானது. நான் இப்படி அபிப்பிராயப் படக் காரணம், அவர்களே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது போல, அவர்களுக்கு ஒரே தீர்வு தான். அந்த தீர்வைத் தவிர மிகுதி எதையும் ஆராயவோ, பேசவோ முற்படும் தரப்புகள் எல்லாம் துரோகிகள். இந்த வரட்டுக் கொள்கையினால், போர்க்காலத்தின் பின்னர் கூட தாயக மக்களை இங்கே இருந்த படி ரிமோட் கொன்ட்ரோல் வழி கட்டுப் படுத்த முயன்றனர். இப்போது "சிறிலங்கா" என்ற ஒரே சாக்கில் அனுர போட்டு அடிக்க முயல்வது போல, எங்கள் தீவிர தேசியர்களும் மிதவாதம், இணக்கம், என்று பேசிய அனைவரையுமே "துரோகி" என்ற ஒரே சாக்கில் போட்டு இன்றும் கூட அடித்து வருகின்றனர். இதைச் செய்ய, ஒன்று இவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும், அல்லது "செத்த வீடானாலும் நான் தான் பிணமாக இருக்க வேணும்" என்று நினைக்கும் சுயநலமிகளாக இருக்க வேண்டும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, நன்கு தம் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டு விட்ட சுயநலமிகளாகத் தான் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். இவர்களுக்கே பேரச்சம். மக்களில் அக்கறை கொண்டோர் "எது வரை போகிறதெனப் பார்க்கலாம்" என்று இருக்கிறார்கள். யாழ் களத்திலே இந்த இரு வகையான போக்கு நன்கு வெளிப்படுவதைக் காண்கிறேன்.
  6. இலங்கை பிரஜாவுரிமையும் இருக்கும் நாட்டு பிரஜாவுரிமையும் வைத்துக்கொண்டு, பல லட்சம் டாலர்களில் சிங்கள நகரங்களிலே சொகுசு பங்களாக்கள், வியாபாரங்கள், வாகனங்கள் வைத்துக்கொண்டு இலங்கைக்கு எந்த சீசனில் பிளட் டிக்கெட் மலிவாக கிடைக்கும் என்று அடிக்கடி ஒன் லைலில் செக் பண்ணிக்கொண்டு, சிங்கள அரசு அனுமதியை சிரித்தபடி பெற்று அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்து , ஐயா அம்மா யாழ்ப்பாண நண்டு, பருத்துறை வடை, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், தோலகட்டி நெல்லிரசம் வாங்கலியோ என்று மேற்குலத்திலேயே பகிரங்க விளம்பரம் செய்துகொண்டு இன வரிசையில்தான் இலங்கையில் இரண்டாமிடம் ஆனால் இலங்கை திறைசேரிக்கு அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் இலங்கையின் முதலாவது இனமாக இருந்துகொண்டு திருமணங்களும், சொகுசு பங்களாக்களும் பார்ட்டிகளும் ஒன்று கூடல்களுக்கும் , கோவில் திருவிழாக்களுக்கும் இலங்கையிலேயே அதிகமாக செலவிடும் இனமாக இருந்துகொண்டு தமிழர்களிடம் வாக்கு வாங்கி சிங்கள அரசின் சொகுசு மகிழூந்து, தங்குமிடம்,ஒப்பந்தங்கள், வியாபாரத்திலிருந்து சாராய அனுமதிபத்திரம்வரை வாங்கி கொழுத்துக்கொண்டு கடலுணவிலிருந்து லிருந்து விவசாய உற்பத்தி பொருட்கள் வரை சிங்கள தேசத்திலேயே சந்தை படுத்திக்கொண்டு அதி சொகுசு பேரூந்துக்களில் இலங்கை முழுவதும் சுற்றுலா செய்துகொண்டு அதை ஆயிரக்கணக்கில் காணொலிகளாக இணையத்தில் தரவேற்றிக்கொண்டு இலங்கை தமிழரும் பாலஸ்தீனமும் ஒன்று எங்களின் சுய நிர்ணய உரிமையை ஏன் அங்கீகரிக்கவில்லையென்று கேட்டால், உலக தலைமை நாடுகள் கண்டிப்பாக தரும் வரிசையில் நில்லுங்க வாங்கிக்கலாம்.
  7. இதுதான் பொயிட்ன். ரோகண விஜவீரவை சுட்டு கொன்றாலும் குடும்பத்தை திரிகோண மலை நேவி காம்பில் பல பத்து வருடங்களாக பேணினார்கள். ஆனால் பாலச்சந்திரனை? ஏன்? இனவாதம். இந்த இனத்துக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது. ஜேவிபியை 1987 இல் மீள தடை செய்தார்கள். ஆனால் 1990 இல் இருந்து தடை நீக்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய விட்டார்கள். இதையேதான், நடேசன், புலித்தேவன் மூலம் புலிகள் செய்ய முயன்றார்கள். அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது. ஆனால் சோமவன்ச போல, நடேசன் உயிருடன் வாழ அனுமதிக்க படவில்லை. ஏன்? இனவாதம். மறுபடியும் சுயநிர்ணய கோரிக்கை எழும்ப விட கூடாது. 89 க்கு பின் ஜேவிபியை கையாண்டது போல் 2009 க்கு பின்னாக புலிகளை கையாளவில்லை இலங்கை அரசு. ஒரே காரணம் இனவாதம். அப்படி கையாண்டிருந்தால் - புலிகள் இப்போ ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பார்கள், இலங்கையே தடை செய்யவில்லை எனும் போது உலக நாடுகளும் தடையை விலக்கி இருக்கும். விஜேவீர போல, தலைவர் படத்தை தரவேற்றுவதும் ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்காது. முழு நாட்டையுமே ஆயுத புரட்சிமூலம் கைபற்ற முயன்று பல அப்பாவி சிங்களாவரை கொலை செய்த ஜேவிபிக்கு 3 வருடத்தில் புனர்வாழ்வு, ஆனால் 15 வருடம் கழிந்தும், நாட்டின் 1/3 பகுதிகை மட்டுமெ கைப்பற்ற முனைந்த புலிகளுக்கு இன்றும் தடை. ஒரு குழு சிங்களவர், மற்றையது தமிழர். இதுதான் இனவாதம்.
  8. மீட்பர் அனுரவுக்கு தூரப்பார்வை. அருகே இருப்பவை எதுவும் தெரியாது, சில ஆயிரம் மைலுக்கு அப்பால் எண்டால் கொதித்திடுவார், கொதித்து🤣
  9. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  10. புலம்பெயர் தேசத்தில் என்ன ஹைகோர்டையா அகற்றுகிறீர்கள்? இதற்கான விடை 2008 மாவீரர் நாள் உரையில் உள்ளது. புலம்பெயர் தேசத்தில் எஞ்சியோர் அந்த உரையில் சொன்னதுக்கு விசுவாசமாக இருந்தாலே, நடந்தாலே - பாதி கிணறு தாண்டிய மாதிரித்தான். எந்த வேலையும் கூடாத வேலை இல்லை? ஆனால் உங்கள் பிள்ளைகள் எவரையும் படிக்காதே, மாடு மேய் என நீங்கள் வழிநடத்தவில்லைத்தானே அண்ணை? அப்படித்தான் இதுவும்… மாடு மேய்தால் (இலங்கை தேசியம்), தினமும் சாணியோடு வாழ்க்கை போகும்🤣. படித்து ஒரு வேலை எடுத்தால் (தமிழ் தேசிய சுயநிர்ணயம்) கொஞ்சம் ரிலாக்ஸ்டா வாழலாம்.
  11. நான் ஒரு முறை நிலத்தடி தங்க சுரங்கத்திற்கு போனான் (1.2km ஆழம்) என்னால் மணித்தியாலத்திற்கு மேல் நிற்க முடியவில்லை, இவர்கள் மூன்று மாதம்????
  12. உங்கட பிரோ @goshan_che இனி பெரிய வாளியோட வந்து பிரிச்சு மேயப்போறார் பாருங்கோ 🤣
  13. நீங்கள் சொல்வதெல்லாம் சரியே. இது தெரியாமல் மாற்று கருத்துக்களை எவரும் வைக்கவில்லை என நினைக்கிறேன். அனுர ஆட்சிக்கு நான்கு வருட அவகாசம் இருக்கின்றது. அது வரைக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது என் கருத்து. ஆகக்கூடியது ஒரு வருடம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
  14. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந்தால் நமக்கென்ன? இப்போது இருப்போரை விட அவர்கள் மோசமானவர்களா நாம் எதையும் இழப்பதற்கு?" என்று கேட்ட ரஞ்சித்தே இன்று ஜேவிபி யின் ஆபத்துகளைப் பற்றித் தேர்வு செய்த கட்டுரைகளை இணைப்பது காலம் எவ்வளவு மாறி விட்டதெனக் காட்டுகிறது. ஏனெனில், புலத்தில் இருக்கும் தீவிர தமிழ் தேசியர்கள் பலர் எதிர்பார்க்காத ஒரு புதிய வகையான ஆபத்து அனுர அரசிடமிருந்து வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தேர்ந்தெடுத்த சில பிரச்சினைகளை அவர்கள் உணரக் கூடிய வகையில் தீர்ப்பதன் மூலம், அனுர அரசை நோக்கி ஒரு soft corner ஐ உருவாக்குவது. அந்த நட்புணர்வை வைத்து தீவிர தேசியம் மட்டுமல்ல, தீ கக்காத தேசிய உணர்வின் பக்கமிருந்து கூட தமிழர்களை இழுத்தெடுப்பது, என இந்த மென் முயற்சிகள் தான் அந்த ஆபத்து. வடமாராட்சியில், யுத்த காலத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் இப்படித் தான் மக்கள் "அங்கிள்" என்று அழைக்கக் கூடிய வகையில் மக்களோடு நட்பாக இருந்தாராம். "இதயத்தை வெல்லுதல்" என்ற புதிய அணுகுமுறையைக் கைக்கொண்ட அந்த சிங்கள அதிகாரி மாற்றலாகிச் செல்லும் வழியில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்டார். தமிழ் மக்களின் சில பிரச்சினைகளை கொஞ்சம் பரிவோடு ஒரு சிங்களத் தரப்பு அணுகினாலே தமிழ் மக்களின் தரப்பில் இருக்கும் தீவிர தரப்பிற்கு தங்கள் இருப்புப் பறிபோய் விடுமென்ற அச்சம் வந்து விடும். இந்த அச்சத்தையும், படபடப்பையும் மேலே இருக்கும் கட்டுரையிலும், யாழுக்கு வெளியே கேள்விப் படும் உரையாடல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, நேற்று உள்ளூர் மாவீரர் தினம் இங்கே. இந்த தேர்தலைப் பற்றியும், தமக்கு உவப்பானோர் பலர் ஓரங்கட்டப் பட்டதைப் பற்றியும் விரக்தியோடு பேசினார்கள். அச்சம் அப்படியே வெளித்தெரிந்தது - palpable fear!
  15. சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி இதன் மூலம் வலுப்படும். ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்ட மிக மோசமான ஒரு இனவாதக் கட்சி என்பதால் அது வெல்லக் கூடாது என தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இன்று நடப்பவை எனக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இன்னும் நிறைய நடக்கவுள்ளன. மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள அங்கு மிகவும் வரவேற்கின்றனர். வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.
  16. புலத்தில் இருக்கும் தமிழர்களோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களோ அப்படியான ஒரு அழுத்தத்தை இலங்கை அரசின் மீது ஏற்படுத்தும் பலம் இல்லாதவர்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். இது ஏலவே தேய்ந்து இன்று ஒரு கட்டெறும்பு, சிற்றெறும்பு நிலைக்கு வந்துவிட்டது. பல கருத்துகளை கருத்துகள் சொல்பவர்களின் நம்பிக்கைகளாகவும், அந்த நம்பிக்கைகளை தாங்கி நிற்கும் ஒரு வகைப் பிரச்சாரங்களாகவும் தான் எடுக்கவேண்டும் போல. ஒரு மதப் பிரச்சாரம் போல.
  17. அண்டபுளுகு புளுகுவதில் ரஷ்ய ராணுவமும் இலங்கை ராணுவம்போல்தான், சில மாதங்களின் முன்னர் முகவர்களால் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு பின்னர் பெலாரசில் கைவிடப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் கையளிக்கப்பட்டஇந்திய இளைஞர்களை 10 வருஷம் ஜெயிலுக்கு போகிறாயா அல்லது ராணுவத்தில் சாரதி போன்ற சாதாரண வேலைகளில் சேர்கிறாயா என்று எழுத்துமூலமான ஒப்பந்ததில் கையெழுத்து வாங்கி ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்ததாக செய்தி ஆதாரத்துடன் வந்தது, அப்போது ரஷ்யா அது அப்பட்டமான பொய் என்று அதை மறுத்தது. பின்னர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பின்னர் அந்த செய்தி காணாமலே போனது . இப்போது அதே பாணியில் முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய இலங்கை இளைஞர்கள், உலக வல்லரசு நாடு ஒன்றில் அவர்கள் ராணுவநாட்டின் உடையுடன் அவர்களுக்கு தெரியாமலே இந்த இளைஞர்கள் நடமாடுகிறார்களா? இந்தாபாரு ரஷ்யா தம்பி ஒரு மனிசன் பொய் பேசலாம் இப்படி ஏக்கர் கணக்கில புளுக கூடாது.
  18. மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் . .......! 👍
  19. மாவட்ட அதிகார சபையை விரிவு படுத்துவார்கள் மாகாணசபையை இல்லாது செய்வார்கள் ...மாகாண சபை தமிழரின் வீகிதாசாரம் அதிக மாக இருப்பதை உலகுக்குக்கு உணர்த்துகின்றது ஆகவே மாவட்ட அதிகாரசபைக்கு அதிகாரங்களை கொடுக்க முன் வருவார்கள் ஜெ.ஆர் உருவாக்க்கியது...தேர்தல்களும் மாவட்ட அடிப்படையில் இருப்பதால் ...யாழ் மாவட்டம் ,மட்டக்கிளப்பு மாவட்டம்..மட்டும் தமிழ் மாவட்டங்களாக இருக்கும்.... திருகோணமலை மாவட்டம் 75 வீத சிங்கள மாவட்டம் வட‌க்கையும் கிழக்கையும் தமிழர்கள் உரிமை கோர முடியாது....வன்னி ,முல்லைதீவு பல்லின சமுக மாவட்டம் ,மன்னார் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டம்.... தமிழருக்கு ஒர் இணக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பு தொடர்இல்லாமல் பண்ணுவதில் சிங்களம் வெற்றியடைந்து கொண்டே வருக்கிறது ...இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கு இணையானவ்ர்கள் சிங்களவர்கள் ...
  20. இன்று டிசெம்பெர் 2 ஆம் திகதி, டிசெம்பெர் 12 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் உள்ளதே.
  21. ட்ரம்ப் உலக அரங்கிலும், உள்நாட்டிலும் விசர்க் கூத்தாடிய போது ஆபத்பாந்தவனாக வந்து நம்பிக்கை தந்த பைடன் இப்படி சராசரி அரசியல் வாதியாக அரங்கிலிருந்து நீங்குகிறார். 4 வருடத்தில் அல்ல, இரண்டு வருடங்களில் வரும் இடைத்தேர்தலில் கூட நீலக் கட்சி சோபிக்காத வகையில் இந்தச் செயல்கள் விளைவைக் காட்டும்.
  22. நுணாவிலானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  23. நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கிறேன்
  24. வணக்கம் தங்கச்சி மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டது மிகவும் சந்தோசம்.
  25. உண்மையிலேயே தெரியாமல் கேட்க்கிறேன் ஜே வி பி நாட்டை பிரித்து தர சொல்லி போராடினார்களா?...அவர்களது போராட்டமும்,எமது போராட்டமும் எப்படி ஒன்றாகும் பவனிசன், பயங்கரவாத சட்டம் பற்றி கடைசியாய் ஒரு காணொளி போட்டு இருந்தார் ...பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..தலைவரது படத்தை பொது வெளியில் பகிர கூடாது என்று அரசு பகிரங்கமாய் சொல்லிய பின்னரும் லைக்ஸ்க்காக பகிந்தால் உள்ளே தான் இருக்க வேண்டும் .தலைவா மேல் மரியாதை இருந்தால் வீட்டிலே வைத்து கும்பிடலாம் ....பவனிசனை காட்டி கொடுத்து கொண்டு இருப்பவர்கள் சிங்களவர்கள் இல்லை.
  26. நினைவு இல்லமாக்குக - வருங்கால சந்ததிகள் பார்த்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
  27. திமுக நான் இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. ஆனால் இப்போ தவெக பக்கம் மனசு அலைபாய்வது உண்மை. நான் விரும்பும் சகல கொள்கை நிலைப்பாடும் அங்கே இருப்பதால்… ஒரு சின்ன ப்ரோ-மான்ஸ்.
  28. ஓய‌த‌ அலை அடிய‌ விட‌ அண்ண‌னுக்கு பெரிய‌ அடி கொடுக்க‌ த‌யாராகிட்டேன் தாத்தா பிரோவ‌ வ‌ர‌ட்டு ஆளை ஒரு கை பார்க்கிறேன் ஹா ஹா😁..............................
  29. என்னங்க நான் ஜிம்முக்கு ஒர்க் அவுட் பண்ண போறேன்! கணவன் - ஹலோ! யாருங்க ஜிம் கோச்சா! கோச் - சொல்லுங்க ! என்ன வேண்டும் ! கணவன் - சார்! என் மனைவி ஹேமா! உங்க ஜிம்முக்கு தான் ஆறு மாதமா ஒர்க் அவுட் பண்ணராங்க! ஆனா ஒரு இம்புரூவ்மெண்ட்டும் தெரியலையே! கோச் - ஓ நீங்க ஹேமாவின் கணவரா! கொஞ்சம் இருங்க அவங்க எவ்வளவு சின்சியரா ஒர்க் அவுட் பண்றாங்க என்று நீங்களே பாருங்க!
  30. பெரிய‌ப்பு க‌வ‌லைய‌ ம‌ற‌க்க‌ ஒரு வைக் விரான்டி அடியுங்கோ க‌வ‌லைக‌ள் எல்லாம் ம‌ற‌ந்து போய் விடும்.......................... ந‌ட‌க்க‌ இருக்கும் த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில‌ க‌ந்த‌ப்பு அண்ணா போட்டி ந‌ட‌த்தினால் நீங்க‌ள் முன்னுக்கு வ‌ருவீங்க‌ள்...........................
  31. புலிகளை போலவே அதே வன்முறையை அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே செய்த அமைப்பு ஜேவிபி. ஆனால் விஜேவீர இறந்த பின் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படலாம் என அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை, புலிகளின் உறுப்பினர் மீது இன்னும் வைக்க முடியவில்லை. ஏன்? இனவாதம் பார்வை. ஜேவிபி ஜனநாயகம் மூலமும் வென்றாலும் பெளத்த-சிங்கள வாதத்தைதான் தூக்கி பிடிக்கும். ஆகவே அவர்களை ஏற்கலாம். ஆனால் புலிகள் ஜனநாயகத்தில் வென்றால் அது மாநில சுயாட்சி உடைய ஒரு தமிழ் அரசில் போய் முடியும் - அது ஒட்டு மொத்த இலங்கையும் பெளத்த சிங்களத்துக்கு உரிய தீவு என்ற பேரினவாதத்துக்கு உகந்ததத்தல்ல. ஆகவே ஜேவிபிக்கு ரிப்பீட்டு, புலிகளுக்கு அப்பீட்டு. இலங்கையில் ஒவ்வொரு துகளும் நகர்வது பெளத்த-சிங்கள மேலாண்மைவாத அடிப்படையில்தான். 75 வருடம் கழித்து இலங்கை தமிழருக்கு இதை எழுதி விளங்கவைக்க வேண்டி இருப்பதே காலக்கொடுமை. நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம். ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை. இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல.
  32. சட்டத்தின் முன்னர் யாராகினும் எவராகினும் தங்கள் விளக்கத்தை கொடுத்து தங்கள் பக்க நியாயத்தை நிறுவினால் இந்த அரசு அதற்கு ஆதரவு கொடுக்குமா ? அல்லது முந்திய அரசுகளை போலவே இவர்களும் இனவாத முகத்தை ஒளித்து வைத்துக் கொண்டு பசுத் தோல் போர்த்திய சிங்கங்களாக வலம் வருவார்களா ? என்பது மக்களுக்குத் தெரிய இன்னும் சில கால அவகாசம் தேவை தமிழ் தேசிய கட்சிகளே தங்கள் இருப்பைத் தக்க வைக்க தங்கள் வாக்காளர்களுக்கே அல்வா கொடுக்கும் பொது சிங்கள தேசிய கட்சியான NPP தமிழர்களுக்கு அல்வா கொடுக்காதா ?
  33. 🤣 நன்றாகவே விளங்கி கொண்டிருக்கின்றீர்கள்
  34. சிங்களம் தமிழர்கள் மீதான எத்தனையோ இனக்கலவரங்கள்,மனித அழிவுகளை செய்தது. அத்து மீறல் குடியேற்றங்களை செய்தது/செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே வைத்து ஆட்சி செய்கின்றது.இது போல் சிங்களத்தின் தமிழர் மீதான அஜாரகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இது சர்வதேசத்திற்கு தெரியாமல் இல்லை. இருந்தும் சர்வதேசம் இன்று வரை இனவாத சிங்களம் சார்பாகவே நிற்கின்றது. இதற்கான காரணம் என்ன? ஒரு காலத்தில் அரசியல் பிரச்சனையாகினும் சமாதான பிரச்சனையாகினும் தமிழீழ புலிகளை மேசைக்கு அழைத்து பேசியவர்கள் தான் அவர்களை அழிக்கவும் உதவினார்கள். அழிப்பின் முன் சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் எதையும் நிறைவேற்றவில்லை.சர்வதேசமும் அதைப்பற்றி திருப்பி கேட்கவில்லை. இல்லாத புலிகள் மீதான தடைகளும் நீக்கப்படவில்லை.தமிழர் பிரச்சனைகளும் நீக்கப்படவில்லை.ஈழத்தமிழர் என்றால் பயங்கரவாதிகள் என்ற பட்டங்களும் நீங்கவில்லை.சர்வதேசமும் இதை கண்டுகொள்ளவில்லை. உண்மையான பயங்கரவாதிகள் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். ஆனால் உண்மையாக விடுதலைக்காக போராடியவர்கள்பயங்கரவாதிகளாக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழினம் பல வகைகளிலும் போராடி பார்த்தாகி விட்டது. இனி ஈழத்தமிழர்களுக்கு மடிப்பிச்சை எடுப்பதை தவிர வேறு வழிகள் இல்லை.
  35. இங்கே யார் இப்போ ஊரில் உள்ள மக்களை ஆயுதம் ஏந்தி போராடும் படி அறைகூவல் விடுத்தது? ஏன் நடக்காத ஒன்றை நடப்பதாக சொல்கிறீர்கள்?
  36. இனப்பிரச்சனை இலங்கையில் உருவாகி 75 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தமிழர் சார்பில் அரச அடக்குமுறைக்கு எதிராக தலைமை வகித்தோரால் எதையும் உருப்படியாக செய்ய முடியவில்லை. தலைமுறை தலைமுறையாக இளம் குருத்துக்களை அவர்கள் வாழவேண்டிய தில் பலி கொடுத்து, மக்களை கல்வி, பொருளாதார ரீதியிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பலவீனப்படுத்தியதை தவிர இந்த வரட்டு தேசியவாதிகளால் எதையும் சாதிக்க முடியவில்லை. பந்தி பந்தியாக வரட்டு தேசியவாதம் பேசி புலம்பும் பேர்வழிகளுக்கு நான் கூறிக்கொள்வது என்ன வென்றால், தாயகத்தில் தமிழ் மக்கள் பிள்ளைகளை பெறுவது போராடி அழிந்து போக அல்ல. உங்களுடைய பிள்ளைகளை எப்படி புலம் பெயர் நாடுகளில் படிப்பித்து சொகுசாக வளர்கக விரும்புகின்றீர்களோ அதே போன்ற ஆசை அவர்களுக்கும் உள்ளது. தாம் ஜாலியாக வாழ்ந்து கொண்டு தமது சந்திதியையும் அப்படி வாழ வைத்துக்கொண்டு மக்களை அறிவு ரீதியாக சிந்திக்க விடாது உணர்சசி வசப்படுத்தும் வரட்டு தேசிய கருத்துக்களை எழுதி தாம் இறப்பதற்குள் அடுத்த தலைமுறைக்கும் அள்ளி வைத்துவிட்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பில் பந்தி பத்தியாக விஷ கருத்துக்களை விதைக்கும் சுயநலமிகள் இதை சிந்திக்க வேண்டும். இல்லை இல்லை அவர்கள் சிந்திக்க போவதில்லை. தமது வாழ் நாள் முழுவதும் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் மன நோயாளர்களாகவே இவர்கள் இருப்பார்கள். எனவே இந்த மன நோயாளர்களின் பத்தி எழுத்துகளை முற்றாக புறக்கணித்து காலத்துக்கு ஏற்ப தம்மை தகவமைத்துகொண்டு அறிவுசார் ரீதியில் புதிய தந்திரோங்களின் அடிப்படையில் தாமாக சிந்தித்து செல்வதே புதிய தமிழ் தலைமுறையினருக்கு இப்போது உள்ள வழி. இதன் மூலமே புதிய தலைமுறை இலங்கையில் தமது இருப்பை பாதுகாத்து எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்.
  37. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: திரு அனுரா குமார திசாநாயக்க அவர்கள் மிக சில நாட்களில்/வாரங்களில் சாதிக்க போவதாக வழங்கியிருந்த வாக்குறுதிகள் மின்சாரக் கட்டணத்தைக் மூன்றில் ஒரு பங்கு குறைப்போம். உதாரணமாக, ரூபா 3,000 மின்சார கட்டணம் , ரூபா 2,000 ஆக குறைக்கப்படும். ரூபா 9,000 மின் கட்டணம் ரூபா 6,000 ஆக குறைக்கப்படும். எரிபொருளுக்கான வரி ரூபா 50 வை நீக்கி எரிபொருள் மீதான விலையை குறைப்போம் உதாரணமாக டீசல் லீட்டர் ஒன்று ரூபா 100 இற்கு வழங்குவோம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மதிப்பீட்டில் (DSA) உடன்பட மாட்டோம் Bailout programme குறித்து மீள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு நன்மைகளை பெற்று கொடுப்போம் அரிசி இறக்குமதியை முழுமையாக தடை செய்து அரிசி மாஃபியா வை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அரசின் கமிஷன் கலாச்சாரத்தை முழுமையாக கட்டுப்படுத்தி முட்டை , தேங்காய் உட்பட்ட பொருட்களுக்கான விலை தளம்பலை இல்லாதொழிப்போம் பாராளமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவோம். பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்போம் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களிடம் மதுபான அனுமதி பத்திரம் (Liquor Permits) பெற்ற சகல அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துவோம் தகுதி அடிப்படையில் மட்டுமே அரசங்கத்தில் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் செய்யப்படும் ஊழல் மோசடி பேர்வழிகளுக்கு எந்த வாய்ப்பும் அரசாங்கத்தில் வழங்கப்படாது இவ்வாறு தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திரு அனுரா குமார திசாநாயக்க அரசாங்கம் தவறியதோடு IMF யின் DSA உட்பட்ட விவகாரங்களில் U TURN எடுத்திருக்கின்றது இது போதாதென்று அசாதாரண காலநிலை தொடர்பான Disaster Management யையும் சரியாக கையாள முழுமையாக தவறியிருக்கின்றார்கள் ஆனால் சலிக்காமல் பொய்களை சமூக தளங்களில் பரப்புகின்றார்கள் நன்றி: இனமொன்றின் குரல் https://www.facebook.com/share/p/18AXGvhU4u/
  38. அப்படியென்றால் அநுரவையும் அவனது கூட்டத்தையும் எதற்காக சிலர் வராது வந்த மாமணியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்?
  39. இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024 சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர். கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  40. நுணாவிலானுக்கும் அவரின் உற்றார் உறவினர்களுக்கும் அனுதாபங்கள். அப்பாவின் நினைவுகள் உங்களை வழிநடத்தட்டும்
  41. நுணாவிலான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 2017 ல் எனது தந்தையார் மறைந்தபோது, "இனி எனது மற்றும் என்னைச் சார்ந்தோரது பிரச்சினைகளை நான் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்" என்று எனக்குத் தோன்றிய தருணம். அந்த நிலையில் இப்போது நிற்கும் நுணாவிலான் அவர்களுக்கு எனது ஆறுதல் மற்றும் தேறுதல் மொழிகள் சேர்வதாக !
  42. ஆழ்ந்த இரங்கல்கள் நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.
  43. ஆழ்ந்த இரங்கல்கள் நுணா மற்றும் குடும்பத்தாருக்கு.
  44. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  45. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.