Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38756
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19122
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/13/24 in all areas

  1. அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்! இப்போது சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கின்றார்கள்.
  2. முதலில் உங்கள் தெளிவான, நீண்ட பதிலுக்கும், மேலே புலிகள் மீது சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்த மறுத்தானுக்கும் நன்றி. உங்கள் இருவரையும் சுட்ட காரணம் உண்டு. 1. யாழை ஆரம்பகாலத்தில் இருந்து வாசிப்பவன் என்ற வகையில் - ஒரு காலத்தில் இங்கே பல புலிகளின் பிரச்சார பீரங்கிகள் இருந்தார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் குண்டுகள் எல்லாம் புஸ்ஸாகி விட்டது. எனக்கு தெரிய இப்போ புலிகள் மீது தவறான கருத்து எழுந்தால் - நீங்கள் இருவரும்தான் பதில் எழுதுகிறீர்கள். நான் வரலாற்றின் தரவுகள் என சிலதை திருத்தி எழுதுவதுண்டு. எவரும் எழுதாவிட்டால் விசுகு அண்ணை எழுதுவார். நான் என்றும் புலிகளின் ஆதரவாளன் என்ற profile இல் யாழில் எழுதியதில்லை. அவர்கள் தியாகங்களை மதிக்கும் இயக்கங்களுக்கு பொதுவான மனிதனாகிய நான் எழுதுவதை விட, இதற்கான பதில் அவர்களின் ஆதரவாளர்களான உங்களிடம் இருந்து வருவது சிறப்பு என எண்ணினேன். 2. ஆர்பரிக்கவில்லை. ஆனால் நிச்சயம் உங்கள் பக்கம் இருந்தே நானும் இதை அணுகுகிறேன். அதனால்தான் fact-check பண்ண எவரும் இல்லையா என கேட்டேன். அசாத்துக்கு வெள்ளை அடிக்கும் ஆர்வத்தில், புலிகள் சக இயக்கங்கள் மீது செய்த வன்முறை மிகவும் பெருப்பித்து காட்டப்பட்டது மட்டும் இல்லாமல் குடும்பங்களை கைது செய்தார்கள் என்ற நடக்காத தகவல் கூட எழுதப்படுகிறது. புலிகள் மிக மோசமான முறையில் சக போராளிகளை 86-87 இல் அழித்தார்கள் மறுக்கவில்லை. ஆனால் அசாத் எதிர்க்கும் போராளிகளை மட்டும் அல்ல, அவர்களின் ஊர்களையே அழித்தார். இரசாயன குண்டுகள் போட்டார். பல்லாயிரக்கணக்கில் மக்களை சிறை வைத்தார். பல நூறு மனித படுகொலை கூட்டு புதைகுழிகளை நாட்டில் விதைத்துளார் (mass graves). இவை எதையும் புலிகள் செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் வெள்ளை அடிக்க, புலிகளும் இதையே செய்தார்கள் என்ற தரவு-பிழை கையாளப்படுகிறது. 3. முன்பும் எழுதியுள்ளேன், எம்மை மேற்கு மீதான ஒரு வெறுப்பு நிலையில் வைத்திருக்க எவரோ விரும்புகிறார்கள். அது சீனாவோ ரஸ்யாவோ அல்ல. அவர்கள் எம்முடன் மினெக்கெடுவதில்லை. ஜெய் ஹிந்த்!
  3. இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்
  4. ஒரு தடவை தமிழ் கடை ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காகப் போயிருந்தேன். சரியாக வெட்டி முடிந்ததும் முடி வெட்டியவர் திடீரென என் தலையை இரு கைகளாலும் பிடித்து இடது வலது பக்கமாக மாறி மாறித் திருகினார். என்ன நடக்கிறது என்று சுதாகரிக்க முன் பின்னாலிருந்து முழங்கையை மடக்கிக் கழுத்தை நெரித்து மேலே இரண்டு தடவை தூக்கி கழுத்தில் நெட்டி முறித்தார். அதிர்ச்சியிலிருந்து மீள சில வினாடிகள் எடுத்தது. மசாஜ் செய்தவராம். இனிமேல் யாரிடமும் கேட்காமல் இப்படிச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன்.
  5. இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்) https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.
  6. அவர் வேண்டுவது இந்திய குடியுரிமையினை, இலங்கைக்கு போவதனை அல்ல, ஒரு காலத்தில் இலங்கையர்கள் தனிமனித அடிப்படை சுகாதார கட்டுமானம் அற்ற இந்தியர்களை கிண்டலடித்த காலத்தில் இருந்து, தற்போது இந்திய குடியுரிமையினை கோரும் நிலைக்கு வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் உள்ள மலையக தமிழர்களை இன்றளவும் வேற்றுமை காட்டும் இலங்கை தமிழர்கள் இந்தியகுடியுரிமையினை கோரும் முரண்நகை, இதனைத்தான் கர்மா என்பார்கள்.
  7. எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரியான வைத்திய முறைகள் தெரியும்............. ஆனால் அவர் மருத்துவர் இல்லை................. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தான் அவர்............ கோவிட் காலத்தில் உடம்புக்குள் இருக்கும் சார்ஸ் வைரஸிற்கே நேரே மருந்தடிக்க வெளிக்கிட்டவர் அவர்................ இல்லை, கொலஸ்ட்ரோல் நீக்க இப்படியான முறை ஒன்று இல்லை, அது முடியாது என்றும் நினைக்கின்றேன். எடையை, உடல் பருமனை குறைப்பதற்காக liposuction என்று ஒன்றுள்ளது. அது வேறு.
  8. ஒருபக்கச் செய்திகளை மட்டும் கேட்டு அதனை அப்படியே நம்புவதும் மற்றவர்கள் அதனை மட்டும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதும் மற்றைய தரப்புச் செய்திகளை இணைப்போரை எதிரிகளாகக் கொள்வதும் சரியான அணுகுமுறை அல்ல என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆனால் ஒரு சிலர் தாங்கள் பொலிடோல் குடித்தால் மற்றவர்களும் பொலிடோல் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். 🤣
  9. YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந்தது எனச் சொல்லலாம். 2024, மாா்ச் மாத நிலவரப்படி யூ டியூபானது 200 கோடியே 49 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மட்டும் 460 மில்லியனுக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் யூ டியூபின் மிகப் பெரிய சந்தையாகவும் மாறி உள்ளது. சந்தா தேவைப்படும் பெரும்பாலான காணொளித் தளங்களைப் போல் அல்லாமல், யூ டியூப் ஒரு கவா்ச்சிகரமான தளமாகும். சந்தாதாரா்கள் மற்றும் பாா்வைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு யூ டியூபின் தரமும் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. யூ டியூப் தொடக்கத்தில் புதுப்புது செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. நம் தேவைக்கு ஏற்ற வேளையில் குறிப்பிட்ட நேர எல்லையில் நாம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதுதான் யூ டியூபின் சிறப்பு. நம் தினசரி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் துறை வல்லுநா்களிடம் தகவல்களைப் பெற்று அதை பல்வேறு கோணங்களில் அலசி, அதற்கான விடைகளைச் சுடச்சுட பரிமாறி இருப்பாா்கள். பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு படிநிலைகளில் காலப்போக்கில் தேடப்படும் அத்தனை கேள்விகளுக்கும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு யூ டியூபில் பதிலளித்துக் கொண்டே இருக்கிறாா்கள். காய்கறி நடவாகட்டும், சமையல் செய்முறையாகட்டும் பொருட்களின் பயன்பாட்டு விளக்கங்களாகட்டும், புதுப்புது தொழில்நுட்ப செய்திகளாகட்டும், நாட்டு நடப்பு சங்கதிகளாக இருக்கட்டும் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள யூ டியூப் பக்கங்கள் உள்ளன. அத்துடன் கல்வி, வணிகம், விளையாட்டு, திரைப்படம், இசை, ஊா் சுற்றுதல், பொழுதுபோக்கு, நகைச்சுவை,கேளிக்கை, மொழி அறிவு, ஆன்மிகம், ராசி பலன், மருத்துவக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், அழகு சாதனங்களை உபயோகிக்கும் முறை, பிரபலங்களுடன் கலந்துரையாடல், தனது அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடிப்பது, பொது அறிவு, இலக்கியம், போட்டித் தோ்வுகள், வரி மேலாண்மை, சட்ட ஆலோசனை என எக்கச்சக்கமான யூ டியூப் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் என்ன ஒரு சௌகரியம் என்றால், நாம் நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடுபொறிகள் மூலம் தேடிப் பிடித்து படித்துப் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நாம் இன்னொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஓா் எளிய காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் தனக்கு பிடித்தமான காணொளிகளைக் காண சந்தாதாரா்களாக இணைந்த மக்கள், அதிகப்படியான பாா்வையாளா்களைப் பெறுவதன் மூலம் பணம் ஈட்டவும் முடியும் என்பதைப் பரவலாக அறிந்து கொண்டு, படைப்பாற்றல் திறனை பக்கபலமாக்கி தினம் ஒரு காணொளியை பதிவிட்டு கலக்குகிறாா்கள். இன்றைய திகதி நிலவரப்படி யூ டியூப் மூலம் உலக அளவில் அதிகம் சம்பாதிப்பது அமெரிக்காவைச் சோ்ந்த ரயான் (Rayyan) என்னும் ஏழு வயதுச் சிறுவன் தான். ஃபோா்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமா்சகரான ரயான் யூ டியூப் மூலம் 22 மில்லியன் டொலா்களைச் சம்பாதித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளாா். யூ டியூப் வணிகம் என்றே ஒரு புது வணிக உலகம் புதிய திசையில் பயணிக்கிறது. வாடகைக்குக் கடை தேவை இல்லை, சரக்கு இருப்பு அவசியமில்லை, கையிருப்பை வைத்து ஒவ்வொன்றாக காணொளியில் காண்பித்தால் போதும். அதைப் பாா்த்த பின்பு வரும் எண்ணிக்கைகளை வைத்து , அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இயலும். இப்படி பல யூ டியூப் பக்கங்களை உருவாக்கி வாழ்வில் மிகப்பெரிய உயரத்துக்கு சென்ற பலா், நம் முன் உதாரணங்களாக இருக்கிறாா்கள். மற்றொரு பக்கம், மக்களை மகிழ்விக்க தினம் புதுப் புது யுக்திகளைக் கையாண்டு ரசிப்புக்குரியதாக படம் எடுத்து அதைப் பதிவிட்டு பிரபலங்களாக வலம் வருகிறாா்கள். திரைப்பட கதாநாயக, கதாநாயகிகளுக்கு இருக்கும் புகழ் இவா்களுக்கும் உருவாகி இருக்கிறது. காணொளிகளாகப் பதிவிட்டு மக்களுக்கு அவா்கள் முகம் பழகி புகழ் வெளிச்சமும் அவா்கள் மீது விழுவதால் யூ டியூப் ஆளுமைகள், இன்றைய தேதியில் அதிகரித்துள்ளாா்கள். நவீன காலத்திற்கு இப்படி வரப்பிரசாதமாக வந்த இந்த யூ டியூப் அதற்கே உண்டான குறைகளையும் கொண்டுள்ளது. ஒருவரைத் தரக்குறைவாக விமா்சித்து அதன் மூலம் இலட்சக்கணக்கான பாா்வையாளா்களைக் கடந்து பெரும் புகழ் பெற வேண்டும் எனும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. யூ டியூபில் தோன்றக் கூடிய நபரைப் பொறுத்து அவா் சொல்லும் செய்திகளின் நம்பகத்தன்மையை அளவிட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பதிவிடப்படும் கருத்துகள் பாதிக்கும் மேல் பொய்யும் புரட்டுமாக இருப்பதால், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. யூ டியூப்பில் நேரலை என்ற ஒரு வசதி இருக்கிறது. அதில் மக்கள் ஆா்வமாக ஒன்று கூடி கண்டுகளிக்கிறாா்கள். புடவை விற்பனை, பொருட்கள் விற்பனை என களை கட்டும் அந்தப் பக்கத்தை எட்டிப் பாா்த்தால், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் நேரிடுகிறது. தனிப்பட்ட நபரின் மீது தாக்குதல் நிகழ்த்தும் வகையில் தரம் தாழ்ந்து விமா்சனங்களை முன்வைக்கிறாா்கள். குறிப்பாக நேரலைகளில் இது போன்ற அத்துமீறல்கள் அதிகம். அதே நேரத்தில் பாா்வையாளா்களைக் கலவரப்படுத்தக் கூடிய காணொளிகளை பல யூ டியூபா்கள் தொடா்ந்து பதிவிட்டு வருவதும் கவலையளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் பணத்தை அள்ளி இறைத்து மக்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைக் காணொளியாக எடுத்துப் பதிவிடுவதும், மனைவியின் பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி ஆா்வத்தைக் கிளப்புவதும், ரயில் தண்டவாள தடம், மலையுச்சி போன்ற வில்லங்கமான இடங்களுக்கு அருகே நின்று ஆபத்தை விலைக்கு வாங்குவதும், கா்ப்பத்தின் போதே பாலினத்தை அறிவிப்பதும் என சில அரைவேக்காட்டுத்தனங்கள் அதிா்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதிகமான பாா்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, சம்பந்தப்பட்டவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரமற்ற ஒன்றைப் பற்றி ‘ஆகா ஓகோ’ எனப் புகழ்வது, புதிய செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற முனைப்பில் சரிவர ஆராயாது, தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடா்கருமையில் இருக்கிறது. அத்துடன், சமகாலத்தில் திரைப்படங்கள் குறித்தான அவதூறு செய்திகளைப் பரப்புவதாக யூ டியூபா்களை சில திரைப்படத் தயாரிப்பாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். அதன்படி திரையரங்க வளாகத்தில் யூ டியூபா்கள் விமா்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் வீா்யத்தை நாம் அறியலாம். அவரவரின் தனிப்பட்ட விரோதத்தை பொதுவெளியில் வெளிப்படுத்த யூ டியூபை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக விமா்சனம் அமைந்தால் எல்லாருக்கும் நல்லது. அதே வேளையில் விமா்சனம் இல்லை என்றால் சிறிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய சில நல்ல திரைப்படங்கள் கூட கவனம் பெறாமல் போய்விடும் அபாயமும் உள்ளது. இந்திய ஊடகத்துறையில் கடந்த 46 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India)- 1978 என்ற சட்டம் இந்த அமைப்புக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தற்போதைய நிலவரப்படி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரங்களே உள்ளன. எந்த ஒரு வழிமுறையையும் அல்லது விதிமுறைகளையும் பின்பற்றும்படி உத்தரவு போடும் அதிகாரம் அதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி ‘பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு’ அதிகாரத்தை வழங்கியும் அனைத்து வகையான ஊடகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தகவல்களும் காணொளிகளும் நம் வேலையைப் பன்மடங்காகக் குறைத்தாலும், அது உண்மைக்கு மிக நெருக்கமாகக் கூட இருக்குமா என்றால் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. இது யூ டியூபிற்கும் பொருந்தும். https://chakkaram.com/2024/12/09/youtube-அமா்க்களங்கள்/
  10. ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
  11. இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......! 😂
  12. முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும் வெடித்தது காணும் .
  13. 🤣................... கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣. ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.
  14. காலம் எல்லாவற்றையும் மாற்றும். அர்ச்சனாவின் பணி 😷 அது தான் என்று நினைக்கிறேன்.
  15. இலங்கையில் மருத்துவ துறையில் வேலை செய்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு தங்கன்ட தலையில் ஒளிவட்டம் இருப்பதாக நினைப்பு ...
  16. கிடைக்க பெற்றால் ...எதிர்காலம்.... கிடைக்கட்டும் அதன் பின்பு வசந்தம் வீசட்டும்...வசந்த சூறாவளி வீசும் எண்டு சொல்லுறீயல்... எல்லா புண்ணியவான் அரசியல்வாதிகளும் நல்லா விசிறி வைச்சு வீசி சென்றுவிட்டார்கள் ..இனி நீங்கள் புதுசா மின்விசிறி வைச்சு வீசப்போறியல் போல.... அனுரா அதாணி குழுமத்தின் பெரிய காற்றாலை விசிறியையே கையை வைச்சு நிறுத்தபோறார் கவனம்...
  17. தினமும் நாலு அறிக்கைகள் விடவேண்டும் என்ற நிலையில் நாமல் இப்பொழுது இருக்கின்றார். கீதநாத்தும் இதே போல ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார். இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌. அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.
  18. மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான், அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை. புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம், அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
  19. 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.
  20. இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா? பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️. @valavan @ரஞ்சித்
  21. நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
  22. பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412204
  23. மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........! 😍
  24. இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன். பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”
  25. இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும். சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣
  26. சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு கிடைத்ததற்கு - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின் மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும் உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை தூக்கி பிடிக்கிறது. (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக கைது செய்து போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை - மறுக்க முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
  27. உண்மை மக்கள் என்ன பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்?? பார்த்தீர்களா?? அர்ச்சுனா தான் சரியான ஆள். என்கிறார்கள் அர்ச்சுனா சொன்ன முக்கிய பெயிண்ட் இந்த கூட்டம் அரசு ஊழியர்களுக்குகாக இல்லை மாறாக மக்களுக்கு தனித்து நின்று வாதிடுகிறார். கஜேந்திரகுமார் இருக்கிறார் எந்த கதையும் இல்லை
  28. தமிழர்களுக்கு தமது பலம் தெரிவதில்லை, இன்றைய இலங்கை பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்தான், கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு கிடைத்த 5.4 பில்லியன் அன்னிய செலாவணியில் அதிமுக்கிய பங்கினை புலம் பெயர் தமிழர்களின் நேரடி பங்களிப்பாகவும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொறுள்களின் மூலமாக மறைமுகமாகவும் இலங்கைக்கு பெருமளவு அன்னிய செலாவணி இலங்கையினை சென்றடைகிறது. இது இலங்கையின் உல்லாச பிரயாணத்துறையினை விட முக்கியமான வருமானமாக திகழ்கிறது. இலங்கையில் நிலவும் அவசரகால சட்டம், முதலீட்டுற்கு வாய்ப்பற்ற சூழல்(Red tape), நிர்வாக சீர்கேடு, ஊழல் என்பவை புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீட்டிற்கு தயங்குவதற்கு காரணமாக இருக்கிறது, அத்துடன் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே தொடர்ந்தும் இருக்கின்ற நிலையில், முதலீடுகள் தொடர்பான அச்சம் நிலவுவதற்கு கடந்தகால அனுபவங்களும் காரணமாகின்றது. தற்போதுள்ள நிலையில் இலங்கையில் இந்திய உதவிகள் மூலமாக தலையீடு செய்யும் இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புடன் ஒப்பிடும் போது இது ஒரு வலுவற்றதாக தெரிந்தாலும் இலங்கையின் தற்போதய பொருளாதார சூழ்நிலையில் ஒரு சிறிய அழுத்தம் இலங்கையினை பொருளாதார ரீதியாக உடைத்துவிடும். இதனை இலங்கை அறிந்துள்ளது, தற்போது இந்தியா பங்களாதேச பொருளாதாரத்திற்கு கொடுக்கும்நெருக்கடி போல ஒரு நெருக்கடி நிலையினை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம், அதற்கான முதலீட்டுத்திட்டங்களில் இந்தியா சிறிது சிறிதாக கடந்தகாலங்களைலிருந்து ஈடுபட்டு வருகிறது. தனது அயல் நாடுகள் முழுவதிலும் இதே போல ஒரு சூழ்நிலையினையே ஏற்படுத்தி பின்னர் அதனை பாவித்து அவர்களை அடிபணிய வைக்கின்றது இந்திய அரசு, இந்தியா மட்டுமல்ல அனைத்து உலக வல்லரசுகளும் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்துகின்றநிலையே காணப்படுகின்றது. இந்த பூகோள அரசியலில் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்தாலே தெரிகிறது அடுத்த பத்தாண்டுகளில் உலக அரசியலின் போக்கு. பெட்ரோ டொலரில் இருந்து எண்ணெய் வள நாடுகளின் விலகல், அதன் பின்னணியில் உலக பொருளாதார மாற்றம், பல துருவ பொருளாதார மையமாக மாறிவரும் உலக பொருளாதாரம் இந்தியாவினையும் வட பூகோள நாடுகளையும் எதிரெதிர் நலன் சார் நிலையில் நிறுத்திவிட்டுள்ளது, இந்தியா அதனால் ஏற்பட போகும் நெருக்கடிகளை கையாள இலங்கையில் இந்திய இருப்பு அவசியமாக உள்ளது, இலங்கைக்கும் அது புரிந்துள்ளது என கருதுகிறேன் ஆனால் இலங்கையின் பொருளாதார நிலை இந்தியாவின் அனுகூலத்தில் தங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் அதன் அயல் நாடுகளுக்குமிடையேயான உரசல்களுக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பது தெரியும், அந்த சக்தி கூட தனது அதிகாரத்தினை தக்கவைக்கும் பகீரத பிரயத்தனங்களின் மூலம் இலங்கையினை நெருக்குகின்றது, ஆனால் இலங்கை எப்போதும் ஓடும் குதிரையிலேயே தனது பணத்தினை வைக்கிறது, மறுவளமாக தமிழர்கள் தமது சொந்த பலத்தினை உணரவில்லை உலகில் ஏற்படும் மாற்றங்களையும் உணரவில்லை. இந்த பயணத்தில் பிரிக்ஸில் இலங்கை இணைவதற்கு இலங்கை அழுத்தம் கொடுகும் என நம்புகிறேன். இந்த கருத்தோஒவியம் இலங்கையின் நிலையினை சிறப்பாக காட்டுகிற மிக சிறந்த கருத்தோவியம்.
  29. தே.ம.ச எம்.பிகளின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் குழுத் தலைவர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் மற்றும் மற்றுமொரு அமைச்சரின் பொறியியற் பட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த தெரிவுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிக்கு சபாநாயகரிடமிருந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்தோ ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் கிடைக்காததால், உரிய தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றும், புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தே-ம-ச-எம்-பிகளின்-பட்டங்களை-ஆராய-குழு-நியமிக்க-பிரேரணை/175-348687
  30. கழுத்துப் பிடிப்பு தானாகவே சரியாகிவிடும் அக்கா. சுடுதண்ணி பாக் இளம் சூட்டில் வைத்துப் பாருங்க.
  31. க.பொ.வின் முயற்சி கண்ணுக்கை குத்துதுபோலும். அதனால், பழயை நட்பைப் புதுப்பிக்கிறாராம். தாங்கள் முந்தியே கூட்டு. இதில இவரென்ன புதுசா என்பதுதான் அவரது வியாக்கியானமாக இருக்கலாம். நாங்கள் இழவுவீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையோராக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  32. கனடாவில் உந்த குளிர் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய விசேட பணமாம்..அதாலை நான் அந்தப் பக்கமே போறதில்லை...
  33. நாட்டுக்குப்போய் அதிகமாக சந்தித்த ஆட்களென்றால் இவையள்தான்...இலங்கைக் குரங்குக்கு ஒரு அழகிருக்குது. ஊரில் நின்ற நாட்களில்...நடையாகத் திரிந்தேன்...ஒவ்வொரு தெருவிலும் இப்படியான் நாய்கள்..பெரும் தொகை.. ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் குறைந்தது 5 --6 இதேகோலத்தில் நிற்கும் ...பயங்கரம்
  34. 😅தமிழ் தேசியவாதிகளே! எமது அதி உத்தம தோழரின் தோழர் செய்த சிறு தப்பை வைத்து நீங்கள் குளிர்காய வேண்டாம் ...உங்களுக்கு பட்டம் முக்கியமா? பணியாரம் முக்கியமா? பணியாரம் தான் முக்கியம் ...உயிர் வாழ்வதற்கு... காகிதத்தில் இருக்கும் பட்டத்தை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் ...தமிழ் தேசிவாதிகளே மீண்டும் உங்களுக்கு நான் சொலவது ஒன்றே ஒன்று பட்டத்தை வைத்து பட்டம் செய்து விளையாடலாம் ....ஆனால் விளையாடுவதற்கு சக்தி தேவை அதாவது பணியாரம் தேவை ... இப்படிக்கு சிங்கள அடியான்😅
  35. வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்: 1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது 2. yahoo Google ஐ நிராகரித்தது 3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது வாழ்க்கை பாடங்கள்: 1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள் 2. மாற்றத்தைத் தழுவுங்கள் 3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது 2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது மேலும் பாடங்கள்: 1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள் 2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள். 3. புதுமைகளைத் தொடருங்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார் 2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார். மேலும் பாடங்கள்: 1. வயது என்பது வெறும் எண் 2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் இறுதியாக: ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது. பாடங்கள்: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்! ✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் ✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்
  36. நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!
  37. தாய்லாந்து மஜாஜ்ஜில் இரண்டு வகைகள் உள்ளது என்பதை சிறித்தம்பியவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 😎
  38. 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
  39. கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா? இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா? பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன் கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்
  40. எம்.ஜி.ஆர் - சரோசா தேவி - யாழ்பாணம் - ஒக் - 1965
  41. "மூ.தேவி விலாஸ்" இட்லி கடை. எண் சாத்திரம் பார்த்து, பெயர் வைத்திருப்பாரோ. 😂
  42. அமெரிக்கா சீரழித்த ஈரானிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது. இனி சிரியாவிலும் இனிக்க இனிக்க தேனாறும் பாலாறும் ஓடப்போகின்றது.இருந்து பாருங்கள் மக்கள் அதில் நீச்சலடிக்கப்போகின்றார்கள்.
  43. எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.