Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2951
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/29/24 in all areas

  1. இந்த புற்றை வளர்த்தவர்களில் ஒரு பிரிவினர் தான் இவர் சார்ந்த ஜேவிபி யினர். சாத்தான் தேவை ஏற்படின் வேதமும் ஓதும். இப்போ அதைத் தான் இவர்கள் செய்கின்றனர்.
  2. அண்ணை இதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பலகாரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.. 1) சுத்தமான நீர் குடிக்கவேணும் எண்ட அதிகளவான விளிப்புணர்வு.. முன்னர் அதைப்பற்றி மக்களுக்கு விளக்கமில்லை.. மாற்றுவழிகளும் இல்லை.. இப்பொழுது போத்தல் தண்ணீர் வருகை, வெள்நாட்டு உறவுகளின் அறிவுரை, அதிக சிறுநீரகப்பிரச்சினைகளால் அறிந்தவர்,தெரிந்தவர், உறவினர் ஊரார்களின் அதிக அண்மைக்கால மரணங்கள் மக்களிடம் ஏற்படுத்திய விளிப்புணர்வு.. 2) கிணற்று நீர் கல்பிரதேசம் அல்லாத யாழின் மணல் பிரதேசங்களில் சவர்(மணல் கலந்த சிவப்பு நீர்) ஆக மாறிவருகின்றன.. இந்த பிரச்சினையால் அதிகம பாதிக்கப்படுவது தென்மராட்சி மற்றும் யாழ்நகரின் கடலை அண்டிய பிரதேசங்கள்.. 3) கல் பிரதேசங்களில் நிலத்தடி நீர் வற்றி வருவது, போதுமான தண்ணிர் கோடைகாலங்களில் கிடைக்காமல் போகிறது.. கிணறுகள் வற்றி சேறு சுரி மட்டத்தில் தண்ணி போய் நிற்கிறது குடிக்க முடியாமல் 4) இன்னும் ஆழமாக அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளில் உப்பு நீர்தான் அண்மைக்காலமாக அடிக்கப்பட்ட பெரும்பாலான குழாய்க்கிணறுகளில் உப்புத்தண்ணி வருகிறது..எங்கள் வீட்டில் கூட அண்மையில் அடித்த குழாய்க்கிணற்றில் இருந்து உப்பு நீர்தான் வந்தது.. பிறகு அதுக்குள் கல் மண் எல்லாம் கொட்டி ஆக ஆழத்தில் இருந்த ஊற்றை அடைத்த பொழுது உப்பில்லா தண்ணி மேல் ஊற்றில் இருந்து வருகுது.. அதுக்கு கிணத்து தண்ணியே வழமைபோல பாவிச்சிருக்கலாம்.. கிணத்து தண்ணியும் மேல் ஊற்றில் இருந்துதான் வருகிறது.. ஆனா அந்த தண்ணி(கிணறு, குழாய்க்கிணறு) தடிப்பு அதிகமாகவும் ஒருவித கடினசுவையுடனும் இருக்கு.. அநேகமாக எனக்கு தெரிந்த பலர் அடித்த குழாய்க்கிணருகளில் இதுதான் நிலமை.. உப்புத் தண்ணி.. இதன் அர்த்தம் நிலத்தடி நீர் உப்பாகிக்கொண்டு வருக்கின்றது யாழில் என்பதுதான்.. இன்னும் மிகக்குறுகிய காலத்தில் இது யாழ்முழுவதும் வந்துவிடும்.. ஏனெனில் நிலத்தடி நீர் ஓட்டம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது.. முந்திய காலத்தில் குழாய்க்கிணற்றில் உப்பு நீர் வருவது அரிதிலும் அரிது.. எங்கயாலும் ஒண்டுக்குதான் வரும்.. ஆனால் இப்ப 4 குழாய்க்கிணறு தோண்டினா 2 உப்புத்தண்ணி..
  3. உலகின் முதல் இசை தமிழிசையே ........... படம் தவப்புதல்வன் .......சிவாஜிகணேசன் .........! 😍
  4. ஒரு போதும், எந்த திரியானாலும், நான் எண்ணுவதும் இல்லை, தாழ்த்துவதும் இல்லை, அதேவேளை படித்தவர் என்று (ஒப்பிட்டு) உயர்த்துவதும் இல்லை. ஆனால், ஒளவையருக்கு உங்களின் பதில் என்ன? "ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது"
  5. ஆறுமுகம் இது யாரு முகம்? விதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன்னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன. யேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறு பட்டு இருந்தது. அன்று நான் வசித்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எனது குடும்பம் மட்டும் தான் ஒரேயொரு தமிழ்க் குடும்பம். அப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நகரத்தில் கார்வண்ணர்களாக நாங்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தோம். உறவுகள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் தனித்து இருந்ததால் எந்நேரமும் அச்சம் ஒன்று என்னுடன் கலந்திருந்தது. புது இடம், பதுப் பாடசாலை, புதிய நண்பர்கள் என எல்லாமே முழுவதுமாக மாறுபட்டிருந்ததால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான நாசிகளிடம் இருந்த அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. அதைப் பெரிதாக்கிக் காட்டி பிள்ளைகளை அச்சங்களோடு வளர்க்க நான் விரும்பவும் இல்லை. ஆனாலும் நான் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். இரவில் சிறுசிறு சத்தங்களும் எனக்கு விழிப்பைக் கொண்டு வந்து விடும். பல நாட்கள் கோழித்தூக்கம் என்றாலும்கூட சில நாட்களில் நான் கும்பகர்ணனாகி விடுவேன். பகலில் செய்த வேலை அலுப்பில் அன்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கனவிலா நினைவிலா என்று நான் உணரும் முன்னரே எனது மனைவி என்னை உலுப்பிய வேகத்தில் எழுந்து விட்டேன். என் வீட்டுக் கதவுதான் தட்டப் பட்டுக் கொண்டிருந்தது. நித்திரைக் குழப்பம் அத்தோடு சேர்ந்து விட்ட பயம் இரண்டும் இணைந்து என்னைச் சிறிது நேரம் இயக்கம் இல்லாமல் செய்து விட்டிருந்தன. என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் நான் இருந்த பொழுது, "கதவு உடைஞ்சிடும் போல இருக்கு" என்ற எனது மனைவியின் குரல், "யோவ் எதாவது செய்" என்று என்னை எச்சரித்தது. "mach die Tür auf " (கதவைத் திற) என்று வெளியே இருந்து கர்ஜித்த குரல் மரக் கதவினூடாக புகுந்து காதுக்குள் நுளைந்து செவிப்பறையை உடைத்துக் கொண்டிருந்தது. வெளியே எத்தனை பேர்? ஒருவனா? அல்லது ஒரு குழுவா? நான் தனி ஒருவனாக எப்படி சமாளிக்கப் போகிறேன்? என்று கணக்குப் போட்டுப் பார்க்க பதட்டம் எனக்கு இன்னும் அதிகமாகிப் போனது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் வருவதை எதிர் கொள்ளத்தானே வேண்டும். மெதுவாக என்னை நானே தயார் செய்து கொள்ளத் தொடங்கினேன். முதற் கட்டமாக பொலிஸுக்கு அறிவிக்கும்படி மனைவியிடம் சொல்லி விட்டு, பிள்ளைகள் எழுந்து விடாமல் இருக்கவும் அவர்களது பாதுகாப்பைக் கருதியும் அவர்கள் அறைக் கதவுகளை சாத்தி வைத்தேன். கட்டில் மெத்தையை தாங்கும் சட்டம் ஒன்றினை எடுத்து வந்து கதவின் பக்கமாக ஒளித்து வைத்தேன். இப்பொழுது என் நினைவுக்கு வந்தவர் சாண்டோ மணியம் மாஸ்ரர். எண்பதுகளின் ஆரம்பத்தில் எனக்கு தற்பாதுகாப்பிற்கான பயிற்சி தேவைப்பட்டது. சோதி அண்ணனிடம் கராட்டி பயிற்சி எடுக்கலாம் என்று நான் எண்ணி இருந்த வேளையில் ஒருநாள் அவர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வீரவாகு கிட்டங்கிக்குள் அதிரடிப் படை புகுந்து சோதி அண்ணனையும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்களையும் அள்ளிக் கொண்டு போனது. அதன் பிறகுதான் சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சிகள் பெற ஆரம்பித்தேன். நான் பயிற்சிக்குப் போவது எப்படியோ எனது நட்பு வட்டத்துக்குள் கசிந்து விட்டது. "பாத்து மச்சான். கண்டபடி எக்சசைஸ் செய்யாதை. பிறகு எலும்பெல்லாம் மசில்ஸ் வைக்கப் போவுது" என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். அன்று சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் நான் பெற்ற பயிற்சியை இப்பொழுது நினைத்துப் பார்த்தேன். "உன்னை விடப் பலசாலியான ஒருவன் உன்னை வேகமாகத் தாக்க வரும் பொழுது இடது அல்லது வலது பக்கமாகவோ சற்று ஒதுங்கி அவனது கையைப் பிடித்து, அவனது வேகத்தோடு உனது பலத்தையும் சேர்த்து இழுத்து கீழே விழுத்தி விட வேண்டும். பின்னர் அவனது முதுகில் இரண்டு முழங்கால்களால் அழுத்தி அமர்ந்து கொண்டு அவனது கழுத்தை நாடியோடு சேர்த்து மேல் நோக்கி இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டும். அவன் திமிரும் பொழுதோ அல்லது உன்னை விழுத்தி எழும்ப முயற்சிக்கும் பொழுதோ அவனது கழுத்தை மேல் நோக்கி இன்னும் பலம் கொண்டு இழுக்க வேண்டும்" சாண்டோ மணியம் மாஸ்ரர் சொல்லித் தந்து, விளையாட்டின் போது பயின்றதை இப்பொழுது நிஜத்தில் செய்யப் போகிறேன். கதவு உடைந்து இப்பொழுது ஓட்டை விழுந்து விட்டது. ஓட்டையினூடாகப் பார்த்தேன். வெளியே ஒரேயொரு முகம்தான் தெரிந்தது. அது எனக்கு கொஞ்சம் தைரியத்தைத் தந்தது. ஆனால் நிலமைதான் அந்தப் பக்கம் தீவிரமாகப் போயிருந்தது. என்னைக் கண்டவுடன் கதவை உதைக்கும் அவனது வேகம் இன்னும் அதிகரித்திருந்தது. எவ்வளவு நேரம்தான் உதைகளைத் தாங்குவது? கதவு தன் வாழ்வை முடித்துக் கொண்டு வாய் பிழந்து நின்றது. சிங்கத்தை எதிர் கொள்ள சிறு எலி வீட்டுக்குள்ளே தயாராக நின்றது. என்ன ஆச்சரியம். முன்பு சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சி பெற்றது அப்படியே எனக்குக் கைகூடி வந்தது. நான் இழுத்து அவனைத் தள்ளி விட்ட வேகத்தில் அவன் கொரிடோரில் விழுந்து விட்டான். விழுந்தவனைப்ப பார்த்தேன். எனக்கு வசதியாக முதுகைக் காட்டிக் கொண்டு தரையில் குப்புறப் படுத்திருந்தான். சாண்டோ மணியம் மாஸ்ரரின் அடுத்த பயிற்சியும் சரியாக வந்திருந்தது. பொலிஸ் வரும் வரை அவனை இப்படியே தரையோடு அழுத்திப் பிடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்த்தது. இதற்குள் எனது மூத்தமகனின் நித்திரையை எனது மனைவி கலைத்திருக்க வேண்டும். நித்திரைக் கலக்கத்தில் தனது அறை வாசலில் வந்து நின்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஓடிச் சென்று பொருட்கள் வைக்கும் அறையைத் திறந்து கூட்டுத்தடி எடுத்து வந்து யேர்மன்காரனின் பின் பக்கம் அடிக்க ஆரம்பித்தான். அவன் அடித்த அடிகளில் எழுபத்தைந்து வீதமானவை தரையிலே விழுந்தன. தரையில் பட்டு கூட்டுத்தடி உடைந்து போயிற்று. மீண்டும் ஓடிப் போய் அடுத்த கூட்டுத்தடியை எடுத்து வந்து மீண்டும் தரைக்கும், யேர்மன்காரனுக்கும் அடிக்க தொடங்கினான். அவனை எழுந்து தடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன். அன்றைய காலத்தில் எனக்கிருந்த பொருளாதரா நிலையில் ஒரு கூட்டுத்தடி வாங்கவே யோசிக்க வேண்டி இருந்தது. மலிவாகப் போட்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு கூட்டுத்தடிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாங்கி இருந்தேன். அந்த இரண்டு கூட்டுத்தடிகளும் சிதிலமாக தரையில் இப்போ சிதறி இருந்தன. அவைகளைக் கூட்டி அள்ள இன்னும் ஒரு கூட்டுத்தடி வாங்க வேண்டிய நிலை எனக்கு வந்திருந்தது. கூட்டுத்தடிகள் முறிந்ததால் வேறு ஏதாவது கையில் சிக்காதா என என் மகன் அங்கும் இங்குமாகத் தேடிக் கொண்டிருந்தான். கதவுக்குப் பக்கத்தில் நான் ஒழித்து வைத்த கட்டில் சட்டம் அவனது கண்ணில் பட்டு விடுமோ என்ற பயம் ஒரு கணம் எனக்கு வந்து போனது. அவன் கையில் ஏதும் கிடைப்பதற்கு முன்னர் நல்ல வேளையாக பொலிஸ் வந்து விட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள். பொலீஸைக் கண்டதும் நான் எழுந்து கொண்டேன். யேர்மன்காரனால் எழுந்து கொள்ள முடியவில்லை. தரையிலே அப்படியே படுத்திருந்தான். இரண்டு பொலிஸும் சேர்ந்து அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். "Ich habe in die Hose gemacht" (காற்சட்டையோடு போயிற்றேன்) என்று பரிதாபமாக பொலீஸைப் பாரத்துச் சொன்னான். இரண்டு போலிஸ்காரர்கள் முகத்திலும் சிரிப்பு வந்து போனது. மரண பயம் வரும் போது உடல் கழிவுகளை வெளியற்றி விடும் என எனக்குத் தெரியும். அந்தப் பயம் யேர்மன்காரனுக்கு வந்திருந்தது தெரிந்தது. ஒரு பொலிஸ் அவனை கைத்தாங்கலாக வெளியே அழைத்துப் போனார். மற்றையவர் நடந்த சம்பவங்களை என்னிடம் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். வெளியே போயிருந்த பொலிஸ் தனியாகத் திரும்பி வந்தார். வந்தவர் எனக்கு ஒரு பிரசங்கமே வைத்தார். "அநேகமான யேர்மனிய ஆண்கள் வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் களிப்பார்கள். அதற்கு Herren Abend (ஆண்களின் மாலைப்பொழுது) என்று சொல்வார்கள். வார விடுமுறை வருவதால் வெள்ளி மாலை ஆண்கள் தங்கள் வேலைக் களைப்பை மறந்து மகிழ்ந்திருக்க Bar இல் ஒன்று கூடி பியர் அருந்தி அளவளாவி களித்திருப்பார்கள். இன்று வெள்ளிக்கிழமை அதுதான் அவர் அதிகமாக குடித்திருக்கிறார். அவர் வசிப்பதும் நீங்கள் இருக்கும் இதே குடியிருப்புத்தான். மேல் மாடியில் குடும்பத்தோடு வசிக்கிறார். போதையில் வந்ததால் தன் வீடு என்று நினைத்து உங்கள் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார். உள்ளே ஆள் அரவம் கேட்டும் கதவு திறக்காததால் சினம் கொண்டு பலமாகத் தட்டி இருக்கிறார். அத்தோடு ஒரு ஆண் குரலும் உள்ளிருந்து கேட்டதால், தான் "பாரு"க்குப் போயிருந்த சமயம் பாரத்து தனது மனைவி வேறு ஒருவரோடு உள்ளே இருப்பதாக தவறாக நினைத்து கதவை உதைக்க ஆரம்பித்திருக்கிறார். கதவில் ஓட்டை விழுந்த பொழுது அதனூடாக உள்ளே உங்களைக் கண்டதால் தன் வீட்டில் ஒரு ஆண் இருப்பது உறுதியாகி கோபத்தில் கதவை முழுவதுமாக உடைத்து உள்ளே வந்திருக்கின்றார். மற்றும்படி உங்களைத் தாக்கவோ அல்லது வேறு நோக்கம் கொண்டோ அவர் உங்கள் வீட்டுக் கதவை உடைக்கவில்லை. உங்களுக்கான இழப்புகளை நாளை காலையில் பேசி முடிவு செய்து கொள்ளலாம். இல்லை இதைக் குற்றமாகப் பதியத்தான் வேண்டுமானால் சொல்லுங்கள் எழுதிக் கொள்கிறோம்" என்றார். "இனி ஒரு தடவை இந்த மாதிரியான பிரச்சனை இவரால் வராது என்றால் எனக்கு சரிதான்" என்றேன். "நல்லது" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு வெளியே நின்ற யேர்மன்காரனை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். உடைந்திருந்த கதவை தற்காலிகமாக ஒரு பலகை வைத்து மூடி அன்றைய இரவு தூங்கா இரவாகக் கழித்தோம். மறுநாள் காலையிலேயே புதுக் கதவு வந்திருந்தது. உடனேயே பொருத்தி விட்டும் போனார்கள், மதியம் அளவில் அழைப்பு மணி அடித்தது, திறந்து பார்த்தால் பூங்கொத்தோடு புன்னகை தவழ யேர்மன்காரன் நின்று கோண்டிருந்தான். "மன்னித்துக் கொள். மதுபோதையில் நடந்து விட்டது. உனது வீட்டுக் கதவுக்கான செலவை நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பொருத்தி இருக்கும் இந்தக் கதவு முன்னர் இருந்ததைவிட பலமானது" என்றான். "உதைத்தால் உடையுமா, மாட்டாதா என்று இன்னுமொரு தடவை வந்து முயற்சிப்பாயா?" என்று நான் கேட்ட பொழுது சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி மறுத்தான். நடந்து போன நிகழ்வை வழக்கென்று பதியாமல் விடயத்தைச் சுமூகமாக நான் முடித்தமைக்கு மீண்டும் ஒரு தடவை நன்றி சொல்லிவிட்டுப் போனான். இது நடந்து இப்பொழுது முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்றுள்ள நிலமையில் வெள்ளிக்கிழமைகளில் Herrenabend என்று ஒன்று இருக்கின்றதா என்று எனக்குத் தெறியவில்லை. அன்று கிழக்கு - மேற்கு என பிரிந்திருந்த யேர்மனி இப்பொழுது ஒரு குடைக்குள் பயணிக்கிறது. நான் யேர்மனிக்கு வந்த காலத்தில் யேர்மனியர்கள் தங்களைத் தாக்கி விடுவார்களோ என்று அகதிகளாக வந்தவர்கள் பயம் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அகதிகளாக வந்தவர்கள் தங்களை தாக்கி விடுவார்களோ என்று யேர்மனியர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் எனது இளைய மகனின் திருமணத்தின் பின் பெண் வீட்டார் தந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தோம். மகனின் மாமனார் ஒரு பொலிஸ் அதிகாரி. அதிகாரிக்கான எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாக என்னுடன் அகதிகள் பிரச்சனை பற்றி உரையாடினார். விருந்து இருபக்கமும் இருக்கின்றதுதானே? இப்பொழுது எங்களின் முறை. "நாங்கள் உங்களை விருந்துக்கு அழைப்பதற்றகான திகதியை உங்களுக்கு வசதியான நாளைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்" என்றேன். சற்று ஏற இறங்க என்னைப் பார்த்து விட்டுக் கேட்டார், "பாதுகாப்புக் கருதி வீட்டுக்கு கமரா பூட்டி இருக்கிறீங்கள்தானே?“ யேர்மனியில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு வீடு உடைக்கப்பட்டு களவாடப் படுகிறது என்ற தகவலை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதால் நாட்டில் நடக்கும் களவுப் பிரச்சனையை மனதில் வைத்து கேட்கிறார் என்று நினைத்து, 'கமரா பொருத்தி இருக்கிறேன்" என்றேன். என் பதிலைக் கேட்டு அவரது முகத்தில் சிரிப்பு வந்து போனது. நான் நினைத்தது போல் இல்லாமல் அவரது கேள்விக்கான அர்த்தம் அடுத்து வந்த அவரது வார்த்தைகளில் புரிந்தது. "ஏன் கேட்கிறேன் என்றால் முப்பது வருசத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று இன்னும் என் கண்ணில் நிற்கிறது. எனக்கும் அது போல் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையிலேயே கேட்கிறேன். முப்பது வருசங்களுக்கு முன்பு, அதுதான் ஒருத்தன் கதவை உடைத்து உள்ளே வர நீங்கள் அவனை நிலத்தில் வீழ்த்தி அவன் முதுகில் ஏறி இருந்தது..., " சொல்ல வந்ததை இடை நிறுத்தி விட்டு என்னைப் பாரத்தார். "அது எப்படி உங்களுக்கு தெரியும்?“ "முப்பது வருடங்களுக்கு முன் நான் ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர். அன்று உங்கள் வீட்டுக்கு வந்த இரண்டு பொலிஸில் நானும் ஒருவன் " "ஆச்சரியமாக இருக்கிறதே, நாங்கள் முன்னரே சந்தித்துக் கொண்டவர்களா?" சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் , "எதற்கும் பெல் அடிக்கிறேன் கமராவில் பார்த்துவிட்டு கதவைத் திறவுங்களேன்" வாழ்க்கையில் பின்னாளில் சந்தித்துக் கொள்ளப் போகும் ஒருவரை எங்களை அறியாமல் முன்னரே எதேச்சையாக சந்தித்துக் கொள்கிறோம். மீண்டும் அந்த முகம் கண்ணெதிரே வந்து நின்று. "என்னைத் தெரியலையா?" என்று கேடகும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 15.09.2016
  6. ❤️................... அசத்தலான எழுத்து, கவிஞரே............... நாங்கள் தெரியும் என்போம், அவர்கள் மறந்திருப்பார்கள்................. அவர்கள் தெரியும் என்பார்கள், நாங்கள் மறந்திருப்போம்............... பின்னர் இரண்டு பக்கங்களுக்குமே விந்தையாக இருக்கும்..........👍.
  7. ஈழத்தமிழர்களும் புலிகளும், அவர்களுக்கு முன் அரசியல் செய்த தமிழ் கட்சிகளும் ஒரு போதும் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்தவில்லை. ஈழத்தமிழினம் தம்மை ஒரு தனித்த தேசிய இனமாக, சுயநிர்ணய உரிமை உள்ள இனமாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கு. அதே நேரம் இந்தியாவை பகைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் தற்கொலையை மீண்டும் செய்யவும் விரும்பவில்லை. சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் தான் காரணம் என்று சிங்களத்துக்கு சாமரம் வீசுகின்றீர்கள்.
  8. யாழ்நகரை அண்டிய புகுதிகளில் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மலசலகூடக்கழிவுகள் குழாய்கள் இணைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவற்றை எரித்து அழிப்பதோ அல்லது பசளைகாக மாற்றுவதற்கோ அல்லது வேறு ஏதாவது முறையில் அகற்றப்படுவதன்மூலம் யாழ்நகரை அண்மித்த பகுதிகளில் மலசலகூட கழிவு நீர் கிணற்று நீரிருடன் கலப்பது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.அதற்காக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.
  9. ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுப்பதில்லை. எல்லாம் மழை நீரை தேக்கங்களிள் சேகரித்தே அன்றாட பாவனைக்கு உபயோகப்படுத்துகின்றார்கள். இலங்கை அரசியல்வாதிகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போவார்களே ஒழிய இவர்களின் அரசியல் முறைகளையும்,வாழ்க்கை முறைகளையும்,தன்னார்வ திட்டங்களையும் கண்டு கொள்வதேயில்லை. ஆனால் அவர்களின் கோட்டு சூட்டுக்களுக்கு இன்னும் பஞ்சமில்லை.கோட்டு சூட்டின் அர்த்தம் தெரியாதவர்கள்.
  10. சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா? -பெரியார் திரைப்படப்பாடல்- நெஞ்சு கூடு கட்டும். தொய்வு வரும். கண்பார்வை மங்கும். இதெல்லாம் கூட ஓக்கே… கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣
  11. __ நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் ) கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன் கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....! __ நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை , வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது ) தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது அதை பூவலில் (குப்பையில் ) போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........! 💪
  12. வணக்கம் வாத்தியார் .........! ஆண் : { தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா } (2) ஹோ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஆண் : கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா பெண் : பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை ஆண் : கள்ளம் கபடமில்லை நானோ அறியாத பேதை மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை பெண் : ஹேய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா ஆண் : அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா பெண் : முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா ஆண் : முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா பெண் : தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா ஆண் : சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன பெண் : கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே ஆண் : மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே பெண் : மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே ஆண் : சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே பெண் : சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே ஆண் : கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே.......! --- தில்லானா தில்லானா ---
  13. மட்டகளப்பில் புத்தர் சிலை விகாரையாக பெருப்பிக்கப்பட்ளது. இது சாம்பிள் போதாதா? தையிட்டி விகாரையை கட்டி முடித்து காட்டினால் ஏற்பீர்களா? அதே
  14. இது வெளிப்பூச்சுக்கு அல்லது எம்மை நாமே திருப்திப்படுத்த சொல்லும் வசனம். நடைமுறையில் எமது அரசியல் கட்சிகள் எல்லாமே இந்தியாவின் எடுபிடிகளாக இருப்பது நாம் காணும் உண்மை. 2009 க்குப் பின்னர் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் அன்றும் இன்றும் எப்போதும் கொழுத்த ஆடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருக்கின்றனர். இவர்களை இணைப்பது மதமும் சாதியும் கிறீஸ்தவ எதிர்ப்பும். விபுக்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு.
  15. சிறிய, நான் அறிந்த சமகால வரலாறை (இது எங்கும் இணையத்தில் இருக்காது என்றே நினைக்கிறன்) சொல்லி விட்டு, வேறு நடந்த சுவாரசியமான விடயத்தையும் சொல்லி விட்டு, இதன் பதிலை சொல்கிறேன். (இதை சொல்வதால் உங்கள் தங்கையை, அவர் பயின்றதாக நீங்கள் சொல்லுவதில் எந்தவொரு விமர்சனமும் இல்லை, அனால், மருத்துவ அமைப்பு, சேவை எங்கே சென்று இருக்கிறது என்பது) நீங்கள் சொல்வது, நான் அறிந்த வரலாறோடு பொருந்தி வருகிறது. இலங்கையில் கடைசியாக சரத்வத்தேச தரத்தில் இருந்த மருத்துவ படிப்பு, பயிற்சிகன நுழையும் வருடமாக 1964 இருந்தது. ( அதாவது 1964 பின் நுழைவோரின் மருத்துவ படிப்பு சர்வதேச தரத்தில் இல்லை) அப்போதுவரை, இலங்கையில் மருத்துவம் படித்த ஒருவர், படித்த பின் 3-4 வருட அனுபவத்துடன் எந்த ஆங்கிலோ பின்னணி கொண்ட நாட்டிலும் சென்று, வைத்தியராக இணைய முடியும், அந்த நாட்டு வைத்திய துறைக்கும் வைத்தியர் தேவை, எடுக்கிறாரக்ள் என்றால். இந்த நாடுகள் - எல்லா பிரித்தானிய, காலனித்துவ பின்னணி நாடுகள், common wealth நாடுகள். மற்ற ஐரோப்பிய , மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பின்னணி கொண்ட நாடுகளிலும் இலங்கை மருத்துவ படிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் வேலை செய்வதில் மொழி பிரதான தடையாக இருந்தது. (1964 இல் படிப்பு தொடங்கினால் , 6 வருட படிப்பு, 1970 படிப்பு முடிவு , 3-4 வருட அனுபவம் - 1974 வரைக்கும் வருகிறது.) சிறிமா 2ம் தடவை ஆட்சி ஏறிய கட்டத்தில் இந்த சர்வதேச அங்கீகாரம் இழக்கப்படுகிறது. எல்லாரும் சொன்னது, ஸ்ரீமாவின் டொமினியன் (ceylon) இல் இருந்து குடியரசாக மாற்றியதே காரணம் என்று. அனால், அது முக்கிய காரணம் அல்ல என்பது நீங்கள் சொல்லிய 10ம் வகுப்பில் இருந்து தாதிக்கு பயிற்சிக்கு தெரிவாகியது. அனால், அதுவல்ல முக்கிய காரணம், சிறிமா அறிமுகப்படுத்திய HNC என்ற உயர்தர படிப்பு. மருத்துவ படிப்புக்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது. மற்றது, தரப்படுத்தல் வழியாக, மிகப் புள்ளிகள் குறைந்தோர் மருத்துவம் போன்ற உணர்திறன் உள்ள துறைக்கு தெரிவாகியது (ஆனால் இதில் பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள தமிழர்களும் உள்ளடக்கம்). அனால், எதுவென்றாலும், நிகரவிளைவு, இலங்கை மருத்துவ மற்றும் அதனுடன் நேரடி தொடர்பு உள்ள தாதி துறை தரம் இறங்கியது சர்வதேச பார்வையில். அனால் நான் கேட்பது உங்கள் தங்கை தாதி பயிற்சி செய்தார் என்பதற்கு எதாவது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வழங்கப்பட்டதா? இது உங்களையோ, நீங்கள் சொல்லுவதையோ, தங்கை கேள்வி கேட்பது, குறை சொல்லுவது அல்ல. (நீங்கள் சொல்லுவதை பார்த்தல், அப்படி ஒன்றும் வழங்கப்படவில்லை என்பதே தோற்றம்.) இலங்கை அந்த நேரத்தில் எதை தரச் சுட்டியாக பாவித்தது , அதாவது குறிப்பிட்ட காலம் தாதி பயிற்சி என்ற குறியீட்டுடன் (அந்த தனியார் வைத்திய சாலையில்) வந்த அனுபவத்தையா? அப்படி நடந்து இருந்தால், பயிற்சியால் வந்த தொழில்சார் நுட்ப அறிவு, புரிதல்கள், பிரக்ஞைகள், உள்ளுணர்வால் உருவாகும் அறிவு போன்றவை சரிபார்க்கப்படவிலைத்தானே? (அப்படி இருந்தால், அதை பயிற்சி என்று எப்படி எடுப்பது?, குறிப்பாக மனித உயிர்களை கையாள வேண்டிய தொழில் துறைக்கு). மாறாக, அப்போது (1975 - 1980) களில் மிகவும் குறுகிய மனப்பான்மை, மற்றும் மதி நிலையை உள்ள சிங்கள தலைமை எடுத்த முடிவுகளால் நடந்ததை, (அதே சிங்களவர் சரி செய்து விட, முற்றாக இலை விட்டாலும்), நாம் அதை இப்பொது செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ( இன்னொரு சுவாரசியமான சம்பவம் , சிறிமா ஆட்சியில், சிறிமா (விஞ்ஞானம்), பொருளாதாரம், சமூகம் என்பதில் அறிந்த நிலை எங்கு இருந்தது என்பதை அறிவதகு ஒரு கூட்டத்தில், சிறிமாவிடம் அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களின் மூத்த இலிகிதர்கள் என்று பிரசன்னமாகி இருந்தனர், முறையிட்டனர் பாணுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை இருப்பதாக. சிறிமா அப்போது சொல்லியது , பாண் இல்லவிட்டால் என்ன, cake சாப்பிடலாம் தானே, cake க்கும் பஞ்சமா என்று )
  16. எந்தவொரு நாடும் முதலில் தமது சொந்த நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும், இதற்கு இந்தியாவும் விதிவிலக்கில்லை, இந்தியா எமக்காகச் செய்யும் என நம்பிய நாங்கள் தான்!!!!
  17. இது தமிழர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய பூமி தமிழர்கள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடக்கக்கூடாது.தமிழர்கள் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று யாராவது கதைத்தால் அவர்களுக்டகு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருள் கொள்க.
  18. 🤣 எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய இப்போது படத் தாயாரிப்பு
  19. சில வேளைகளில் நாங்கள் சில காரியங்களை செய்யும்போது அது பிழையாகி போனால் அதை அப்படியே சரி செய்யாமல் முதலில் இருந்து தொடங்குவோம். அப்படி ஒரு நாடு தான் இந்தியா. இந்தியாவை திருத்த முடியாது அழித்து தான் முதலில் இருந்து கட்டவேண்டும். எனவே 3-ஆம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அதை சரியாக பயன்படுத்தி இந்தியர்கள் முயன்றுபார்க்கலாம்.
  20. தற்போது அவுஸ்ரேலியா தனது இரண்டாவது இனிங்ஸினை விளையாடுகிறது, 47/2 . இந்தியாவின் அற்புதமான பந்து வீச்சு, அதனை எதிர்கொள்ள திணறுகின்ற அவுஸ்ரேலிய மட்டையாளர்கள், முதல் இனிங்ஸில் பரபரப்பு ஏற்படுத்திய சாம் அவுட்டாகி விட்டார், அவுஸ்ரேலிய துடுப்பாட்டக்காரர்களின் கால்களை நகர்த்தி விளையாடத குறைபாடுகளை வர்ணனையாளர்கள் குறிப்பிட்டார்கள். ஆனாலும் இந்தியாவின் பந்து வீச்சு குறிப்பாக புல் லெந்த் பந்து nip ஆகும் அற்புதமான பந்து வீச்சிற்கு இன்றைய ஆட்டம் ஒரு சிறந்த டெஸ்ட் மட்ச் உணர்வை ஏற்படுத்துகிறது. 152 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்ரேலியா உள்ளது பந்து தனது உறுதியினை இழந்தால் இந்த சிறப்பான பந்து வீச்சு தொடராது.
  21. இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.
  22. அடிக்கடி இரணைமடு நீரை யாழுக்கு கொண்டு வாருங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள். என்னுள் புரியாத புதிராய் எப்போதும் இருப்பது என்னவென்றால், இரணைமடுகுளம் ஒன்றும் வற்றாத ஜீவநதி அல்ல, மாரிகாலத்தில் நிரம்பி வழிவதும் கோடைகாலத்தில் வற்றிபோவதுமாயுள்ள நீர்பிடிப்பு பகுதி. மாரிகாலத்தில் யாழுக்கு குடிநீர்தேவை வராது, கோடைகாலத்துக்குத்தான் அதிகமாக தேவை , கோடைகாலத்தில் வற்றி காணப்படும் இரணைமடு கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சமுள்ள யாழ்மண்ணின் தேவையை எப்படி பூர்த்தி செய்யும்? நீர்மட்டம் கீழிறங்கி காணபடும் இறணைமடுவிலிருந்து பல லட்சம் மக்கள் குடிதொகையை கொண்ட யாழ்ப்பாணத்தின் தேவையை பூர்த்தி செய்ய எப்படி நீரை வழங்கமுடியும்? ஒரே உறிஞ்சலில் அணையிலுள்ள நீரே காலி ஆகிவிடும். மறுபக்கம் இரணைமடுவை நம்பியிருக்கும் நமது விவசாயிகள் எப்படி நெற்செய்கை பயிற்செய்கைகளில் ஈடுபடமுடியும்? யாழ்ப்பாணத்துக்கு குடிக்க நீர் தேவையென்றால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உணவை உற்பத்தி செய்ய நீர் வேண்டும். இதில் எதை இழக்கலாம் என்று எப்படி முடிவு செய்வது? முதலில் யாழ்பகுதி மக்கள் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம், அளவுக்கதிகமாக குளாய்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதை தவிர்ப்பது, நீர்பிடிப்பு இருக்ககூடிய பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்க்கவேண்டும். மூன்றுபக்கமும் உப்புநீராலும், குடாநாட்டை ஊடறுத்தும் ஓடும் உப்புநீர் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும் நமது பிரதேசம் பொறுப்பற்றமுறையில் நன்னீரை வீணாக்கினால் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக உப்புநீர் மண்ணாக மாறிவிடும். சிறிது காலத்தின் முன்னர் தாளையடி பகுதியில் கடல்நீரை குடிநீராக்குகிறோம் அதை யாழுக்கு வழங்கபோகிறோம் என்று ஆரம்பகட்ட நடவடிக்கைகளீல் இறங்கி பெரும் எடுப்பில் பிலிம் காட்டினார்கள், பின்பு அதுபற்றிய பேச்சையே காணோம். எனக்கென்னமோ இன்னும் ஓரிரு தசாப்தங்களில் நீர் விஷயத்தில் மிக பெரும் அபசகுனத்தை யாழ் எதிர்கொள்ளபோகிறது என்று அச்சமுள்ளது.முடிந்தவரை நீரை சிக்கனமாக பாவிக்க கற்றுக்கொள்ளூங்கள், சிங்களவன் நமக்கு எப்போ நாக்கு வரண்டு சாவோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் அதற்கான வாய்ப்புகளை நாமே தேடி கொடுக்ககூடாது, புலம்பெயர்ந்த உறவுகள் உணவில்லையென்றால் காசு அனுப்பலாம், உடையில்லையென்றால் அதற்கும் உதவலாம், நீர் இல்லையென்றால் எதுவுமே யாரும் செய்ய முடியாது அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை இப்போதே ஏற்படுத்தவேண்யது அரசியல்வாதிகள், கற்றவர்கள், சமூக ஆர்வலர்களது கடமை.
  23. யாழ் மாவட்டம் நன்னீர் தேவைக்கு வன்னியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வராது சரியான மழை நீர் சேமிப்பு.. குளங்கள் ஏரிகள் நீரை சேமிச்சு பாவிக்கவும் நிலத்தடி நீர்பிடிப்பை தக்க வைக்க கூடிய நீர் முகாமைத்துவம்.. மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் என்று ஒருங்கிணைந்த திட்டங்களை பாவிப்பின். வீணான அரசியல் சண்டை இங்கு அவசியமில்லை. அது தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தி ஆதாயம் தேட நினைப்போருக்கே நன்மையாக அமையும். மக்களுக்கு அல்ல.
  24. ஓரு போர் குற்றவாளி எந்த தண்டனையும் இன்றி பதவியை முழுமையாக அனுபவித்து அடங்குகிறார். இதுவே போர் காலத்தில் தண்டனை தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்..தப்பித்திருந்தாலும் நடந்தே இருக்கும். ஏனெனில் இந்த உலகை ஆள்பவர்கள் எண்ணத்தில் நீதி இல்லை. சுயலாபமே உண்டு.
  25. உங்கள் அனுபவம் புதுமையானது. ஏன்,எதற்காக?
  26. பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போல பரம்பரை தலைவர் என்று அறிவித்து விட்டால் இப்படியான பொது சபை கூட்ட வேண்டிய அவசியமே இல்லை.
  27. வயது வந்தவர்களுக்கு மட்டும் 1- கண்ணும் கண்ணும் பார்த்தால் கற்பம் தரிக்கும் 2- உடுப்பு மற்றும் மலசல கூடத்தின் ஊடாக பிள்ளை உருவாகும் 3- பெண்களுக்கு மாதம் 31 நாளும் பிள்ளை தரிக்கும் 4- உடலுறவு என்பது நாய்க்கொழுவலில் தான் முடியும் 5- ஒரு பெண்ணை தொட்டால் கட்டிக்க வேண்டும். (இவற்றை நம்பி தொலைச்சவை அதிகம்) இனி சிறு குழந்தைகளுக்கானது தொடரும்....🤪
  28. இணைப்புக்கு நன்றி உடையார்.மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ கோடிபணம் தினமும் செலவிடப்படுகிறது.எப்படி? இது நடத்தும் செலவுக்கு எத்தனையோ கிராமங்களை தத்தெடுத்து நடத்தலாம். இருந்தும் ஏதோ ஓர் சந்தோசம் கொள்கை எதுவோ அதற்காக வளர்ந்த நாடுகளில் உள்ள மிருகக்காட்சிச்சாலையே இப்படி இருக்குமா என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்து இல்லை என்று தான் எண்ணுகிறேன்.
  29. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புஷ்பா ஸ்டைலில் கொண்டாடிய நிதிஷ் குமார் ரெட்டி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணி்க்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று, நிதிஷ் குமார் ரெட்டியின் அற்புதமான சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதில் சாதகமான வாய்ப்பைப் பெறும் என்பதால் ஆட்டம் உச்சக் கட்ட பரபரப்பில் செல்கிறது. சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா? 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? சுந்தர்-நிதிஷின் நங்கூரம் ரிஷப் பந்த்(6), ஜடேஜா (4) இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் செஷனிலேயே ரிஷப் பந்த் 36 ரன்னில் போலந்த் பந்துவீச்சிலும், ஜடேஜா 17 ரன்னில் லேயான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர். 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க 54 ரன்கள் தேவையாக இருந்தது. நண்பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மெல்ல ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். மெல்போர்னில் நன்கு வெயில் இருந்ததால் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் நிதிஷ், சுந்தர் இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் அநாசயமாக எதிர்கொண்டு பவுண்டரிகள், சிக்ஸர் அடித்த நிதிஷ் குமார் டெஸ்டில் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தின் இடையே இருமுறை மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. நிதிஷ் குமாருக்கு முழு ஒத்துழைப்பு தந்து பேட் செய்த சுந்தர், பவுண்டரிகள் அடிக்காமலேயே அரைசதத்தை நெருங்கினார், அரைசதம் அடித் தபோது ஒரு பவுண்டரி மட்டுமே வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க 6 பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தியும் முடியவில்லை. ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி, 96 ரன்கள் சேர்த்திருந்த போது, போலந்த் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார். 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்திருந்த போது லேயான் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த பும்ரா டக்அவுட் ஆனார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடன், சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நிதிஷ் குமார் ரெட்டி 171 பந்துகளில் சதம் அடித்து, 105 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு துணையாக பேட் செய்த தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்தார். 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர். பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி 116 ரன்கள் முன்னிலை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3வது நாளில் இன்று மாலை நேரத்தில் வெளிச்சக்குறைவு, மழை வருவது போல் இருந்ததால் ஆட்டம் 70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிக்கப்பட்டது. எடுபடாத ஆஸ்திரேலியப் பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் மெல்போர்னில் இன்று வெயில் நன்றாகவே அடித்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை, பந்தும் எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை. இதனால் 2வது செஷனில் இருந்து நிதிஷ் குமார், சுந்தரைப் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பல்வேறு வகைகளில் முயன்றும் முடியவில்லை. புதிய பந்து மாற்றிய பின்பும் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீசியும் எடுபடவில்லை. ஆடுகளத்தில் லேசான வெடிப்புகள் வரத் தொடங்கி இருப்பதால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறலாம். அப்போது நேதன் லயான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் பெரிய துருப்புச்சீட்டாக இருக்கும். இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 அணியைக் காத்த நிதிஷ் குமார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் முகமது சிராஜ் 3வது நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் நிறைந்திருப்பது நிதிஷ் குமாரின் முதல் சதம், அரைசதம் அடித்து புஷ்பா பட பாணியில் அவரின் செயல், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவைதான். பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டது நிதிஷ் குமாரின் பேட்டிங்தான். அதனால்தான் தொடர்ந்து 3 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டியை அமர வைக்க எந்தவிதமான காரணமும் இன்றி தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெறவும் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் காரணமாக இருந்தது. இந்த டெஸ்டில் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பிக்கவும் நிதிஷ்குமாரின் சதம் முக்கியப் பங்காற்றியது. இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் முன்னனி வீரர்கள் ரோஹித், கோலி, சுப்மான் கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் சராசரி 30 ரன்களுக்கு கீழ் இருக்கையில் நிதிஷ் குமாரின் சராசரி 50 ரன்களுக்கு மேல் இருப்பது அவரின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. நிதிஷ் குமார் ரெட்டியை 8-வது வரிசையில் களமிறக்குவது சரியா அல்லது நடுவரிசையில் களமிறக்கலாமா என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை சிந்திக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், போலந்த் பந்துவீச்சில் முன்னணி பேட்டர்கள் விக்கெட்டை கோட்டைவிட்டு தலைகவிழ்ந்து சென்ற நிலையில் நிதிஷ் ரெட்டி இவர்களின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்டு ஆடினார். கவர் டிரைவ், லாங் ஆனில் பவுண்டரி, புல் ஷாட் என அற்புதமான ஆட்டத்தை கம்மின்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் வெளிப்படுத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி: எஃப்.ஐ.ஆர் வெளியானதால் அதிர்ச்சி - சமீபத்திய தகவல்கள்26 டிசம்பர் 2024 புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 கவனிக்கப்படாத ஹீரோ வாஷிங்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தின் மொத்த கவனத்தையும் நிதிஷ் குமார் தனது சதத்தால் ஈர்த்துவிட்டாலும், பேசப்படாத ஹீரோ ஒருவர் இருக்கிறார் என்றால் அது வாஷிங்டன் சுந்தர்தான். நிதிஷ் குமாருக்கு துணையாக பேட் செய்து 127 ரன்கள் பார்டனர்ஷிப் அமைக்க வாஷிங்டன் முக்கியக் காரணமாக அமைந்தார். 2021ம்ஆண்டு சிட்னி டெஸ்டை வெல்ல வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் முக்கியமாக இருந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் இந்திய அணிக்கு மகுடமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அஸ்வின் ஓய்வுக்குப் பின் அணியில் தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் நிலை பல்வேறு விதங்களில் கேள்விகளை எழுப்பியது. சுப்மான் கில்லை அமரவைத்து வாஷிங்டனை தேர்வு செய்தது சரியா என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில், தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றியுள்ளார். 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்20 டிசம்பர் 2024 ஹெட், ஸ்மித் சதம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா - உலக டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?15 டிசம்பர் 2024 122 ஆண்டு சாதனையை முறியடித்த நிதிஷ் குமார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணியில் 8-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை நிதிஷ் குமார்(105) ரெட்டி இன்று படைத்தார். இதற்கு முன் 1902ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ரெக்கி டப் 10-வது வீரராக களமிறங்கி 102 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை நிதிஷ் ரெட்டி முறியடித்துள்ளார். இந்திய அணியில் 8-வது வரிசை அதற்கு கீழாக களமிறங்கி சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை நிதிஷ் படைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 2008-ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 87 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8-வது வீரராக களமிறங்கி சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் குமார் பெற்றார். இதற்கு முன் விருத்திமான் சாஹா ராஞ்சியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 117 ரன்கள் சேர்த்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் –நிதிஷ் குமார் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிபாகும். இதற்கு முன் 2013ல் சென்னையில் நடந்த டெஸ்டில் தோனி- புவனேஷ்வர் குமார் 140 ரன்களும், 2008-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின், ஹர்பஜன் சேர்ந்து 108 ரன்களும் சேர்த்திருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை நிதிஷ் குமார் பெற்றார். இன்று நிதிஷ் குமார் சதம் அடித்த போது அவருக்கு 21 வயது நிரம்பி 214 நாட்கள் ஆகியிருந்தது. ஆனால், இதற்கு முன் சச்சின் 18 வயது 253 நாட்களிலும் ரிஷப் பந்த் 21 வயது 91 நாட்கள் இருந்த போது சதம் அடித்திருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் பெற்றார். இதற்கு முன் 1948-ஆம் ஆண்டு மன்கட் தனது முதல் சதத்தை மெல்போர்ன் மைதானத்தில் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் 2008-ஆம் ஆண்டு கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி தனது முதல் சதத்தை மெல்போர்னில் பதிவு செய்தார். அதன்பின் இதுவரை எந்த நாட்டு வீரரும் தங்களின் முதல் சதத்தை மெல்போர்னில் அடித்திராத நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நிதிஷ் குமார் இங்கு முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?26 டிசம்பர் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?26 டிசம்பர் 2024 புஷ்பா பாணியில் கொண்டாட்டம் நிதிஷ் குமார் ரெட்டி 81 பந்துகளில் இன்று முதல் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவரை சக பேட்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். நிதிஷ் குமார் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த மகிழ்ச்சியை புஷ்பா திரைப்பட பாணியில் பேட்டை கழுத்தில் வைத்து சீவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வர்ணனையாளர்களும் புஷ்பா திரைப்பட பாணியில் நிதிஷ் கொண்டாடுகிறார் என்று சிரித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்த போது அவரின் தந்தை முதால்யா ரெட்டி ஆனந்த கண்ணீர் வடித்தார் நிதிஷ் சதத்தை கண்டு ஆனந்தக் கண்ணீர் நிதிஷ் குமாரின் ஆட்டத்தைக் காண மெல்போர்ன் மைதானத்தில் அவரின் தந்தையும் வந்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி போலந்த் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் முதல் சதத்தை பதிவு செய்ததைப் பார்த்தவுடன் அவரின் தந்தை ஆனந்தக் கண்ணீர் வி்ட்டு அழுதார். கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ஆட்டத்தை ரசித்த அவரின் தந்தையை அருகே இருந்த ரசிகர்கள் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டம் யார் பக்கம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்டில் இன்னும் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது. கடைசி விக்கெட்டுக்கு நிதிஷ், சிராஜ் களத்தில் உள்ளனர். இந்திய அணி நாளை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் இன்னிங்ஸ் சிராஜ் விக்கெட்டை இழந்தால் முடிவுக்கு வரலாம். எப்படிப் பார்த்தாலும் 100 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இருக்கும். இந்த 100 ரன்கள் முன்னிலையை வைத்து ஆட்டத்தின் வெற்றியை ஆஸ்திரேலியா எளிதாக தீர்மானிக்க இயலும். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு இலக்கு வைத்து கடைசி நாளை முழுவீச்சில் எதிர்கொண்டால் ஆட்டத்தில் ஸ்வரஸ்யம் அதிகரிக்கும். கடைசி நாளில் ஆட்டம் யார் பக்கம் செல்லும், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து ஆட்டத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் நிலையில் ஆஸ்திரேலியஅணிதான் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c878wqv1nqzo
  30. அர்ச்சுனாவையும், அண்ணாமலையையும் ஒப்பிடுவது… பெருமாளையும், பெருச்சாளியையும் ஒன்றாக ஒப்பிடுவதற்குச் சமனானது போல் தோன்றுகிறது.🤪
  31. இப்பவெல்லாம் தலையங்கத்தை வைத்து செய்தி வாசிக்கக்கூடாது. தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பே இருக்காது. முதலில் செய்தியை வாசியுங்கள், தலையங்கத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இதனாற்தான் சிலர் தடுமாறுகிறார்கள் செய்தியை விளங்கிக்கொள்வதில். தவறு செய்து பழக்கப்பட்ட ருசிப்பட்டவனே திரும்ப திரும்ப செய்வான். மாட்டினாலும் பயமோ, வெட்கமோ கிடையாது. காரணம்; அரசியலே அங்குதான், அதிற்த்தான் தங்கியுள்ளது. அப்பன் காலத்தில், ஸ்ராலின் ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தியதாக செய்தியுண்டு. "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி." ஒருவரின் பின்புலம் தெரியாமல், நெருக்கத்தில் வைத்திருப்பார்களா? தங்களுக்கு வேண்டிய போது, தமது எதிரிகளை தாக்க, மிரட்ட இவர்கள் வேண்டும் அவர்களுக்கு. இவர்கள் பிடிபட்டால் அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை, எதிர்க்கட்சிகள் தங்கள் மேலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இணைத்துப்பேசுகிறார்கள் என்று கைகழுவி விடுவார்கள். எங்கள் நாட்டில் நடக்காத விஷயமா? இவர் தன்னைத்தானே அடிக்க விட்டிருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களால் அடிவாங்கியிருக்க வேண்டும். அவரது முதுகை யாராவது பார்த்து, ஒத்தடம் கொடுத்திருந்தால் அடி முதுகை எவ்வளவு தாக்கியிருக்கிறதென தெரிந்திருக்கும். மக்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அரசியலுக்காக பாவிக்கிறார்கள். இவரைப்பார்க்கும்போது, எமது அரசியற்தலைவர் எனகூறிக்கொள்ளும்சாணக்கியனின் நினைவுதான் எனக்கு வருகிறது.
  32. வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர். இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே P-TOMS உருவாக்கப்பட்டது ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். வரலாறே உண்மையான வழிகாட்டி. நன்றி - முகநூல்
  33. நுனிப்புல் மேய்ந்து தலையங்கத்தை மட்டும் முதலில் வாசித்துக் கலவரத்துக்கு உள்ளானேன்.🥺 ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி “,” இடப்படுகிறது முடிவிற்கு முற்றுப்புள்ளி “.” இடப்படுகிறது. தமிழகச் செய்தியில் வந்த இந்தப் பதிவின் தலையங்கத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி ஒருவர் கைது என்று வாசித்துத் திகைத்துவிட்டேன்🤔
  34. இதுதான் உண்மையும் குரங்கை விட மனிதனுக்கு குரங்குப்புத்தி அதிகம் அதிலும் அரசியல் வாதிகளுக்கு சொல்ல தேவையில்லை. பிரச்சினைகளுக்கு மேலே பெரிய கோடு போடுவது நேற்று ஒரு காணொளி பார்த்தேன் குவைத்தில் அதிகமாக இறங்கியுள்ள தேங்காய்கள் அத்தனை பொதிகளிலும் முத்திரை குத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என அது மட்டுமல்லாமல் நோய் தாக்கியது நோயை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமுமே பொறுப்பு. தற்போது குரங்குகளுக்கு தனி தீவாம் அனுப்ப வேண்டியது குரங்குகளை அல்ல
  35. காட்டுக்குள்ளே திருவிழா .......அபிநயசரஸ்வதி சரோஜாதேவி .......! 😍
  36. மன்னவனே அழலாமா ........! ஜெமினி & அழகான பேயாக கே .ஆர் . விஜயா ...........! 😍
  37. இந்த கிறிஸ்மஸ் ரைம்ல இனி வீட்ட விட்டு வெளிக்கிடக்கூடாது.😂 நான் கவனிச்சதில நத்தார் நேரங்களிலை தான் பெரிய அழிவுகள் நடக்குது.
  38. சும்மா அடிச்சுவிடலாம் என்பதை கொள்கையாக வைத்திருப்பதை வேடிக்கை பார்த்திருக்க முடியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.