Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46783
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19122
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    14676
    Posts
  4. Kadancha

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2935
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/16/25 in all areas

  1. இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின் அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன். ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல குறியீடுகள் உள்ளது (சூரியனுக்கு நன்றி, உழவர் நன்றி திருநாள் .. போன்றவை , இங்கே உழவர் என்றே பொதுவாக வழங்கப்பட்டு வந்து இருக்கிறது என்பதையும், விவசாயி, கமக்காரர் .. என்று வழங்கப்படவில்லை என்பதும்). அனால் தமிழரை பொறுத்தவரையில் சமயம் சார்ந்தது அல்ல என்பதற்கு, தைபொங்கல் திதி எப்படி கூடி வருகிறது, வரலாறையும் பார்க்க வேண்டும். உ.ம். ஆக போத்துக்கேயர் வருகை, கிறிஸ்தவ மதம் வலோற்கார மாற்றம், போன்றவை தமிழ் கிறிஸ்தவர்களை பொங்கலில் இருந்து விலத்தியது என்பது உண்மை. (ஆயினும் கிறிஸ்தவம் போர்த்துக்கேயருக்கு முதலே வந்து பரவத் தொடங்கி விட்டது. உ.ம். தமிழ்நாடு பறங்கி மலையில் இருக்கும் Apostle (இயேசுவின் சீடர்) St Thomas இன் சமாதியும், அதன் பின் கட்டப்பட்ட தேவாலயாமும், இவர் இயேசுவை சந்தேகித்ததாக சொல்லப்படுகிறது.) இன்னொரு வளமாக, தமிழரின் தைப்பொங்கல் ( (மகர) சங்கராந்தி) திதி கூடுவது (இது முக்கியம், திதி கணிப்பது சந்திரனின் நிலையை கொண்டு, தமிழருக்கே உரிய சோதிட முறை, வாக்கிய பஞ்சாங்கம் ) சூரியன் மகரத்தில் நுழையும் முதல் நாள், தமிழ் வருடத்தின் படி தை மாதம் 1 ம் நாள். இதை உத்தராணாய காலம் என்பது, அதாவது பூமியை பொறுத்தவரை (பூமியின் சுழற்சியால்) சூரியன் வடக்கு சார்ந்து (வடவரைக் கோள ம்சார்ந்து) நிலைக்கு வர ஆரம்பிப்பது. உத்தராணாய காலம் தமிழ் தைமாதத்தில் இருந்து தமிழ் ஆனி மாதம் வரைக்கும். சூரியன் பூமியை பொறுத்தவரை தென்னரை கோளம் சார்ந்து நிலை எடுப்பதை தட்சிணாய காலம் என்பது, இது தமிழ் ஆடியில் இருந்து தமிழ் மார்கழி வரை. (தமிழரின் சோதிடத்தை பொறுத்தவரை, சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு வக்கிர பெயர்ச்சி இல்லை, வக்கிர பெயர்சி என்பது புவியின் சார்பாக குறிப்பிட்ட கிரகம் பின்னோக்கி செல்வதான (மாயத்) தோற்றம். இந்த தோற்றம் சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு ஏற்படாது. ) ஆகவே, பொங்கல் தமிழ் சோதிட (காலக்கணிப்பின்) படி தமிழரின் விழா (அங்கே மதம் இல்லை). இதில் உள்ள முரண்பாடு எண்னென்றால், தமிரின் மற்ற எல்லா சோதிட விடயங்களும் சந்திரனை மையமாக வைத்து (ஆம் தைபொங்கலின் திதி சந்திரனை வைத்து கணிக்கப்படுவது). ஆனால், திதி கூடுவது சூரியன் மகரத்தில் நுழையும் நாள், தமிழ் தை முதல் நாள். எதை சொன்னாலும் சூரிய நிலையயும்ம் கொண்டு கணிப்பை எடுப்பது, ஆரிய அடிப்படையும் கலந்துள்ளது. (தைப்பொங்கலை, அந்த காலத்தை, அகத்தியரின் அறிவுரை படி ) இந்திர விழா என்று சோழர் தொடக்கி கொண்டாடிய காலமும் என்றும் இருக்கிறது (என்று மணிமேகலையில் இருக்கிறது). அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் சூரியனின் நிலையை கொண்டு தைபொங்கல் நாள் (இப்போதும்) கணிக்கப்படுவதால். (மற்றது, சோழர் அவர்களை சூரிய வம்சம் என நம்பிக்கையும், இது எனது தனிப்பட்ட முடிவு). மாறாக, சூரியன் மட்டும் தான் அடிப்படை என்றால், மேற்கு நாட்டவர்களும் அதை கொண்டாடி இருக்க வேண்டும், ஏனெனில் மேற்கு சோதிட கணிப்பு, முழுமையாக சூரியனை அடிப்படையாக வைத்து. ஆனால், அப்டி இல்லை. அதனால், தைப்பொங்கல் (மகர சங்கராந்தி) இந்தப் பிராந்தியதுக்கான கலாசார நாளும், கொண்டாட்டமும்.
  2. பொங்கல் முற்று முழுதான தமிழ் பண்டிகை என்பதிலும், அதில் மதம் சிறிதளவும் இல்லை என்பதிலும் நான் தெளிவாக இருக்கின்றேன். அதனை என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு உரத்து சொல்ல ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த முறை பொங்கல் அமைந்தது. காரணம், என் அப்பாவின் தங்கை, எனக்கு மிகவும் பிடித்த மாமி இந்த மாதம் 10 ஆம் திகதி அன்று தன் 74 ஆவது பிறந்த நாள் அன்றே இயற்கை எய்தி விட்டார். அவர் இறந்தமையால், மத நம்பிக்கைகளின் படி, ஒரு நல்ல விடயமும் செய்யக் கூடாது என்று என் அம்மாவில் இருந்து சிலர் அறிவுறுத்தினர். ஆனால் நான், பொங்கல் என்பது தமிழர்களின் நன்றி உணர்வை இயற்கைக்கும், தன் உழவுத் தொழிலுக்கு உதவுகின்றவைக்கும் சொல்வதற்குமான ஒரு நாள் என்பதாலும், தமிழர்களின் பண்டிகை என்பதாலும் (ஆரிய பண்டிகை எதையும் நான் கொண்டாடுவதில்லை) அதில் மதம் ஒரு துளிதானும் இல்லை என்பதாலும் கண்டிப்பாக பொங்குவேன் என்று பொங்கல் வைத்து அதனை முக நூலிலும் பகிர்ந்து இருந்தேன். அதைப் பார்த்து முகம் சுளிக்கவும் சிலர் இருக்கத்தான் செய்தனர்.
  3. நன்றாக டிக்டொக் ,யூ டியுப் செய்ய தெரியுமா அவருக்கு ......நல்லவனாக இருந்து அரசியல் செய்வது கடினம்😀
  4. சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா? அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது.
  5. கிராம வாழ்வில் இவ்வாறான தனித்துவம் இருந்து இருக்கலாம். ஆனால் நகர வாழ்வில் எல்லாம் கலந்த ஒன்றே இனி சாத்தியம். இது நல்லது தானே. நீ வேறு நான் வேறு என்றில்லாமல் உனது நல்லது கெட்டதில் நான் உன்னோடு சேர்ந்திருக்கிறேன் என்று கட்டாயப் படுத்தாமல் அவரவராகவே ஒற்றுமை பேணும் எதுவும் நன்றே. கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான்.
  6. நல்ல வேளை..பாலத்துக்கு உள்ளை வைத்த நாலைந்து கம்பியையும் இழுக்காமல் விட்டான்கள்
  7. இது தேர்தல் ஆணையாளரின் வேலை அல்ல. ஒவ்வொரு வேட்பாளரையும் அவர் துப்பு துலக்கி கொண்டிருக்க முடியாது. வேட்புமனு கொடுப்பது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம். கீழே உள்ள லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தை நிரப்பி அதோடு ஜேபி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும். தகவல்கள் சரியாயின் வேட்புமனு ஏற்கப்படும். ஒரு எம்பியாக நிற்க அடிப்படை தகுதிகள் என்ன, அவற்றை எப்படி தன்னளவில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது என்பது வேட்பாளரின் வேலை. இந்த சின்ன விடயத்தை கூட கிரமமாக செய்யமுடியாதவர்கள் இப்படி வழக்குகளை சந்தித்து பதவி இழப்பார்கள். இதில் சட்டத்திலோ, நடைமுறையிலோ, தேர்தல் ஆணையத்திலோ எந்த தவறும் இல்லை. தவறு முழுக்க அருச்சுனாவில்தான். https://www.srilankalaw.lk/revised-statutes/alphabetical-list-of-statutes/862-parliamentary-elections-act.html தொழில் இருந்தால்தானே நிறுத்த🤣. ——— சட்டத்தில் ஒரு பாரபட்சமும் இல்லை. மிக சுருக்கமாக—- அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றால் தேர்தலில் நிற்க முடியாது. இடை விடுப்பு ஆவது எடுக்க வேண்டும். பல ரீச்சர்கள் இப்படி இடை-விடுப்பு எடுத்து விட்டு போட்டியிட்டனர் என நினைக்கிறேன்.
  8. பேராசிரியர் சண்முகதாஸின் ஒரு உரையில் கேட்டிருக்கிறேன். ஜப்பானிலும் பொங்கலை "அறுவடை நாள், நன்றி கூறல்" என்ற நிகழ்வாகக் கொண்டாடுவார்களாம். இந்தப் பண்டிகை koshogatsu என்பார்கள் . ஊரில், 90 களில் யாழ் நகரின் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவிருக்கிறது. ஆனால், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவர்களின் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடியதை 90 களில் நான் காணவில்லை. சில தரவுகள், தகவல்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திலும் பயன்படுத்தலாம்😂. 1960 களில், கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான ஒரு சிந்தனை உருவானது: "நாம் உலகம் முழுவதும் பல்வேறு இனங்கள் நாடுகளிடையே பரவி விட்டோம். ஐரோப்பிய மொழியான லத்தீனில் வழிபாடு செய்யும் படி இந்த ஐரோப்பியரல்லாத மக்களைக் கேட்க முடியாது. எனவே, அந்தந்த இனங்கள், நாடுகள், பாரம்பரியங்களின் படி வழிபாடு செய்ய விதிகளை வகுக்க வேண்டும்" இதன் விளவு தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதன் முடிவில் உருவான மாற்றங்களுள் சில உடனே அமலுக்கு வந்தன. உதாரணமாக, வழிபாட்டு மொழி, கீதங்கள் என்பன உடனே தாய்மொழிக்கு மாற்றப் பட்டன. சில மாற்றங்கள் நடைமுறையாக நீண்ட காலங்கள் எடுத்தன. பொங்கலை கத்தோலிக்க நிறுவனங்கள் கொண்டாடுதல் என்பது இப்படி நீண்ட நாட்களின் பின் அமலான மாற்றம். இது கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குரிய விளக்கம். இங்கிலாந்து திருச்சபை - தமிழ் நாட்டில் வேரூன்றியிருப்பதால்- அவர்களும் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.
  9. பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன். ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை. அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான். அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள். https://www.holidify.com/collections/harvest-festivals-in-india ———— பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை. அதன் தொடர்சியே பொங்கல். இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது. ————- எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை. ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்? சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பொருட்டா? எது முக்கியம்? நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை. பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான். என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.
  10. அந்த பாடலுக்கு கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா நடித்தனர். இப்பாடல் இலங்கை வானொலியால் மட்டுமே பிரபலமாந்து.
  11. ஒரு தெய்வம் தந்த தாய் நீ.....
  12. தோழர் அனுரா மாவோவின் சமாதியில் மெளன பிராத்தனை செய்துள்ளார்...என்னடா உங்கன்ட இடதுசாரி கொள்கை ..மற்றவன் தனக்கு பிடித்த் தெய்வத்தை வணங்கினால் தனிமனித வழிபாடு நீங்கள் வ்ணங்கினால் "பொதுவுடமை தெய்யோ" எங்களுக்கு இப்ப சீனா இசையும் சூப்பராக இருக்கின்றது
  13. அவரின் இசை நல்லது இவரின் பாடல் சிறப்பு என்று எல்லாம் யாழ்களத்தில் எழுதுவார்கள் ஆனால் மயக்குகின்ற இசை என்றால் தமிழர்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்காக இசைக்கின்ற அந்த இசை தான்.
  14. பிக்குவின் ஆன்மா வந்த இடம்…. அடுத்ததென்ன? விகாரைதான். நாககோவில சுத்த பூமியட்ட சாதரேங் பிலிகமினு🙏
  15. கள்வர்கள்… கஸ்ரப்பட்டு களவெடுக்க மாட்டார்கள். நோகாமல்… நொங்கு தின்றுவிட்டு போய்விடுவார்கள். 😂
  16. பலஸ்தீனர்களின் துயரங்கள் முடிவுக்கு வருமா? அல்லது போரின் களைப்பு நீங்குவதற்கான காலமாக நகருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடிகளை முடிவுக்கொண்டுவர இந்த உலகு ஏன் உறுதியான முடிவுகளை எட்டாதிருக்கிறதோ. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. மிகவும் தெளிவான விளக்கம். நன்றிகள்.
  18. ஊரில் முதியவர்களைப் பார்க்க வேலைக்கு ஆட்கள் இல்லை, சரியான மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை. இந்த வேலையெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்களா? லூசுகள்
  19. யாழில் வித்தியாசமானப் போரட்டமாகத்தெரியலாம் ஆனால் மேலை நாடுகளில் எம்மில் பலர் மொப் வாளியுடன் தான் வாழ்க்கையைத் தொடங்குகினார்கள், ஆனால் இன்று எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.
  20. அந்தப் பெருமை எனக்கும் இருக்கு😊 ஆனால் விசித்திரமான பட்டங்கள் செய்யும் திறமை இருக்கவில்லை! சாதாரண பிராந்துப் பட்டத்திற்கு பலன்ஸ் செய்வதே கஷ்டம். இவர்கள் எப்படித்தான் இந்த விசித்திரமான பட்டங்களைக் கட்டுகின்றார்களோ தெரியவில்லை. aeronautical அறிவு கூடியவர்களாக இருக்கின்றார்கள்! முன்னர் யாழில் எழுதிய பதிவு. தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை! எனது புளக்கில் உள்ளது: https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3_e0D_c98EKwMBvSfBLI2s0wS6QqBaRJHr4O217e10-4Hj7wwBToOfLCo_aem_OxVa7NUruS_c3ye3Ii9SGQ&m=1
  21. தவிக்குது தயங்குது ஒரு மனது!
  22. அவ்வளவுக்கு தங்கம் தங்கமான செய்லில் ஈடுபட்டிருக்கின்றார்
  23. இந்த சீனா விஜயத்துடன் ...இந்திய கலாச்சார உட்ப்புக்கு பை.பை..சீனாவில் இருந்து மிக இறுக்கமான ஆடைவகை, நீச்சல் உடை என்பன இறக்குமதியாகின்றன..இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது..🙃
  24. நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை. ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர் பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது. என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது. நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?
  25. இல்லை நான் சொன்ன அனைத்து புலம்பெயர் நிகழ்வுகளும் பொங்கல் விழாவாகவே நடைபெறுகிறன. பொங்கல் பொங்குவது கூட நடப்பதுண்டு. வசதி கருதி பொங்கல் வாரநாளில் வந்தால் - அதை வார இறுதியில் கொண்டாடுவார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதை தள்ளி வைத்த பொங்கல் என்று வேணுமானால் சொல்லலாம். பொங்கல் சம்பந்தமான விழா அல்ல. உப்பிடி உங்களை போன்றோர் அறளை கதையள் கதச்சதும் கூட முஸ்லிம்கள் தாம் தமிழர் அல்ல சோனகர் என்ற தனி இனம் என பிரிய காரணமாகியது. இப்போ தமிழனாக உணரும் கிறிஸதவரையும் துரத்தி அடியுங்கோ. இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.
  26. "Ignorance breeds fear and hatred" அறிவின்மை என்பது பிரிவினைக்கு ஊற்றாகும் அச்சங்களின் விளை நிலம்! நிறுவனமயமான கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், உதிரிகளாக திரியும் ஓரக் குழுக்களான கிறிஸ்தவக் குழுக்களுக்குமிடையேயான வேறு பாடுகள் பற்றிய உங்களுடைய "அறிவின்மை" பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது (மேலே இஸ்லாமியர் பற்றி கேள்வி கேட்டவருக்கும் அதுவே பிரச்சினை😎). இது ஏன் உங்களைப் போன்ற சில சைவர்களிடம் மட்டும் இருக்கிறதென எனக்கு விளங்கவில்லை. ஏனெனில், நித்தியின் கூத்துகளைப் பார்த்து இந்துக்களை வேறு மதத்தவர் எடை போடுவதில்லை! சச்சியைப் பார்த்து "இலங்கை பீகார் போல ஆகி விட்டது" என நாம் யாரும் அச்சம் கொள்வதில்லை😂! ஆனால்: மேலே, நிழலி சுட்டிக் காட்டியிருப்பது போல உங்களைப் போல ஏனைய மதங்கள் பற்றிய அறிவின்மையை தங்கள் முடிவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வோரால், ஈழம் பீகாராக மாற வாய்ப்புகள் இருக்கின்றன.
  27. எங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் இருப்பது போல் எல்லா இனங்களிலு எல்லா மதங்களிலும் இப்படியான லூசுக் கூட்டங்கள் இருக்கின்றன. இதே போன்று அல்லா தான் ராமன் (இராமர்) என்று சொல்லும் இஸ்லாமிய மதவெறியர்களும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளனர். தம் குறுகிய நலங்களை அடைவதற்காக ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களிற்கிடையில் பிரிவினைகளை தோற்றுவிக்க முயல்கின்ற அயோக்கியர்கள் இல்லாத இனமோ மதமோ கிடையாது. மாட்டிறைச்சி உண்டதுக்காக முஸ்லிம்களை வெட்டி கொன்ற இந்து சமய வெறியர்களும் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்படியானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ தேசத்தையோ எடை போட முடியாது. அவ்வாறு எடை போடுவதும் இவர்களை வைத்துக் கொண்டு இனவாத / மதவாத ரீதியில் நாம் சிந்திப்பதும் இப்படியானவர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும்.
  28. தைப்பொங்கல் வரலாறு தைப்பொங்கல் - ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை. இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா. மானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர். பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர். நிலவமைவில் பொருளியல் வேறுபாடு: மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது. "ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று. இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர். ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது. விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன. பொங்கல் விழாவின் தோற்றம்: உழவு: வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும். உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாகப் பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன. வானவியல்: ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும். இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதைத் தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர். மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக ( Spring equinox) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக அமைகின்றது. இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும், அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெய்யிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர். மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன. பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு, நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல். சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய, பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை, தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை. பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும் தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு. சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு. சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்துப் பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல்விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம். பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்: பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம். தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது. ‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர் தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ தாயருகா நின்று தவத் தைந்நீராடல் நீயுரைத்தி வையை நதி’ பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம். சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது. 'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடைவிழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம். புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 'நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன' என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும் நோடையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' எனச் சுட்டுகிறார். சங்ககாலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அடுத்து, கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய குறிப்பு இடம்பெறுகின்றது. ‘மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ என கூறுவதன் வாயிலாகப் பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது. சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின் காளஹஸ்தி கல்வெட்டில் மகர சங்கராந்தி அன்று பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். தை முதல்நாளைக் கதிரவனின் வடசெலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம். கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது. சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள் 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள். சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள். இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (Manners and Customs of the Indus ) எனும் நூலை எழுதியுள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்: விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல் பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும். தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே. தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன். இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல்விழாவைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவித்தனர். இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல்விழா திகழ்கின்றது. இவ்விஉண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது. பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம். https://paniveli.blogspot.com/2019/01/blog-post.html
  29. பட்டங்கள் செய்வதிலும் அவற்றைப் பறக்க விடுவதிலும் வல்வெட்டித்துறை தேசத்தின் ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் . ....... அனைவருக்கும் பாராட்டுக்கள் . .......! 👍
  30. நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயத்தை பகிர்ந்தீர்கள். அதனால் அந்த கேள்வி வந்தது. மீண்டும் கேட்கின்றேன் அங்கே ஆயிரம் ஆயிரமாய் ஈழத்தமிழர்கள் அவதிப்படும் போது எப்படி உங்கள் உறவினருக்கு மட்டும் கனடா பறக்கும் அதிஷ்டம் வந்தது. ரகசியத்தை சொல்லித்தொலையுங்கள். கஷ்ரப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தேடட்டும்.
  31. எனக்கு ஒரு பெரிய குழி எங்கையாவது கிண்டி வைச்சிருப்பியள் எண்டு தெரியும்.😂 ஆனால் நம்மள் போக்கு இது மாதிரித்தான்...😎 துடைச்சிட்டு திருப்பியும்....🤪
  32. நாதமுனியின் கையால் பட்டம் பெற்றவர் நீங்கள். எனவே நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
  33. சமூகவியல் கற்றிருந்தால் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை. சூரியனுக்கு நன்றி கூறுதல் என்பது ஒவ்வொரு நாகரீகங்களிலும் இருந்து வரும் ஒரு பண்பாடு. இன்ரநெற் முழுவதும் இது தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக இருக்கின்றன. சாதாரண தேடலுக்கே கிடைக்கும்.
  34. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் விடயத்திற்கு சரியாக சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் 👈👍 முதலில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இன்றும் பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். அவலங்கள் இப்படியிருக்க..... அவர்களுக்கு வராத கனடா வசதி உங்கள் உறவினருக்கு எப்படி வந்தது? லஞ்சமா? ஊழலா? அல்லது.......அ...ர......சி....ய.....ல் செல்வாக்கா? 😎
  35. ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனடா மற்றும் அமெரிக்காவிற்கு கோட்டு சூட்டுடன் அடிக்கடி பறந்து வந்து ஒரேஞ்ச் யூஸ் மட்டும் குடித்துவிட்டு செல்லும் உங்கள் அபிமான தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லுங்கள். மேற்கத்தைய சமத்துவத்தை ஈழ மண்ணிலும் பேண வேண்டும் என்று....
  36. வழமை போல் தவறாக விளங்கி விட்டீர்கள். மக்களை,சமூகத்தை அவர்களின் நடவடிக்கைகளை திருத்தியெடுக்கும் மட்டும் ஆயுத முனை அவசியம். அதன் பின் புதிய சந்ததிகள் மாற மாற துப்பாக்கி முனையை சட்டங்களாக மாற்றலாம். இதே கொள்கையால் தான் உலகில் பல நாடுகள் பழமையை அழித்து புதுமையுடன் வாழ்கின்றது. சோம்பேறி இலங்கையில் விவசாயத்தை கூட ஆயுதமுனையில் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.🙂 தலைவர் பிரபாகரன் இருக்கும் மட்டும் சாதிபற்றி வாய்திறக்க பொதுமக்கள் பயந்தார்களா இல்லையா? அது வெற்றிதானே? தொடர்ந்திருந்தால் இன்றிருக்கும் சந்ததிக்கு சாதி ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அவர் இல்லாத கஷ்டகாலம் 100 வருட பழக்கங்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.
  37. ஜி கே வெங்கடேசின் இசையில் மெளனமல்ல மயக்கம்
  38. எம்ஜிஆருக்காக இரண்டு பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்கின்றார். அதில் ஒன்று இது. நீதிக்குத் தலை வணங்கு திரைப்படத்தில் புலமைப் பித்தன் பாடலுக்கு எம்எஸ்வி இசை அமைத்திருப்பார்.
  39. ஆடி வெள்ளி, தேடி உன்னை வசந்த கால நதிகளிலே இரண்டு பாடல்களும் 'அந்தாதி' இலக்கணத்தை பின்பற்றி இயற்றப் பட்ட பாடல்கள் ... அதாவது ஆண் பாடகர் முடிக்கும் வார்த்தையை பயன்படுத்தி பெண் பாடகர் பாட ஆரம்பிப்பார்... இரண்டு பாடல்களும் அது போன்றே புனையப்பட்டவை ஆண் : {வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்} (2) {நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2) பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்} (2) பெண்: கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள் ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்} ** இரண்டு பாடல்களுமே இதே விதத்தில் தான் இயற்றப்பட்டிருக்கும்
  40. ரணிலை வீழ்த்த இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்கும் சந்திரிக்கா நாட்டு மக்களின் விருப்பினை அறியும் ஆணைக்குழு கடந்த திங்கள் கூடியது. ஆணைக்குழுவின் தலைவரான சமரவிக்கிரம முன்வைத்த யோசனைகளில் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் ஊடத்துறை என்பனவற்றை ரணில் அரசிடம் சந்திரிக்கா கையளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்புத்துறையினை சந்திரிக்காவே வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா உதவேண்டும் என்றும் அந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாலோசனைகளை சந்திரிக்காவிடம் கொண்டுசென்று அவற்றிற்கான பதிலினை தான் பெற்றுவருவதாக தித்தவலை ஆணைக்குழுவிடம் அறிவித்தார். இதன்படி தித்தவலை புதன்கிழமை சந்திரிக்காவைத் தொடர்புகொண்டபோது இதுகுறித்து விரிவாகப் பேசுவதற்கு தன்னை வியாழன் அன்று வந்து சந்திக்குமாறு சந்திரிக்கா கோரினார். இதனையடுத்து ஆணைக்குழுவின் கூட்டத்தினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தித்தவலை சரமவிக்கிரமிடம் தெரிவித்தார். ஆணைக்குழு வெள்ளியன்று கூடுவதற்கு முன்னதாக தனது கட்டுப்பாட்டில் இருக்கு ஊடக அமைச்சினூடாக அறிவித்தல் ஒன்றினை சந்திரிக்கா மேற்கொண்டார். சமாதானப் பேச்சுக்களை கண்காணித்து வழிநடத்துவதற்கென்று ஜனாதிபதி மற்றும் பிரதமை தலைமையிலான இணைந்த சமாதான ஆணையம் ஒன்றினை நிறுவுவதற்கான ஆலோசனைகள் அவ்வூடக அறிக்கையில் காணப்பட்டது. சமாதான முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதில் அக்கறையுடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் ஏனைய தேசிய அமைப்புக்கள் இணைந்த ஆலோசனைச் சபையொன்று ஜனாதிபதி பிரதமர் தலைமையிலான ஆணைக்குழுவிற்கு உதவலாம் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறும் அரச தரப்பு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் அதிகாரம் உட்பட பேச்சுக்கள் தொடர்பான அனைத்து தீர்மான‌ங்களையும் எடுக்கும் அதிகாரம் இவ்வாணைக்குழுவிடம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று சமரவிக்கிரமவைச் சந்தித்த தித்தவலை, ஜனாதிபதி சந்திரிக்கா தனது முடிவினை மாற்றிக்கொண்டிருப்பதாகவும், தனது ஆலோசனைகளை ஆணைக்குழுவின் முன்னால் வைக்கும்படி தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சமரவிக்கிரம, "ஜனாதிபதி சந்திரிக்கா தனது முடிவினை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பாரானால் சமாதானப் பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவது அர்த்தமற்றது, ஆகவே நாட்டு மக்களிடம் அவர்களின் விருப்பினைக் கேட்டு நாம் செல்லலாம்" என்று கூறினார். வெள்ளியன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்குழு ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசனைகளை நிராகரிப்பதென்று முடிவெடுத்தது. "தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நான் அடிபணியவேண்டுமென்று சந்திரிக்கா எதிர்பார்க்கிறார்" என்று ரணில் இக்கூட்டத்தில் தெரிவித்தார். சனியன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணில் சமாதானப் பேச்சுக்களை முன்கொண்டு செல்வதற்கான அதிகார பலம் ஏதுமின்றி தான் இருப்பதாகவும், இதனால் மீளவும் போர் மூளும் சூழ்நிலை உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். "இன்று நடக்கும் அதிகாரப் போட்டி தொடருமாக இருந்தால், சமாதானப் பேச்சுக்கள் முறிவடையும், பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எவரும் இல்லாமையினால் நாம் போரிற்கே செல்கிறோம் என்று புலிகள் கூறினால் அவர்களை எவராலும் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார். ஆனால், போரினை மீள ஆரம்பிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது புலிகள் அல்ல. சமாதானத்திற்கு தான் ஆர்வமாக இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு இருக்கும் சந்திரிக்காவே போர் மீள ஆரம்பிப்பதை விரும்பிச் செயற்பட்டு வந்தார். போர்வெறியர்களாக இருப்பது யாரென்பதை சர்வதேசச் சமூகம் மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த அரசாங்கங்களிடம் சந்திரிக்காவின் உண்மையான் நோக்கங்கள் குறித்தும், ரணிலின் செயற்பாடுகள் குறித்தும் தெளிவான விபரங்களைக் கூறுவது அவசியமானது. கடந்த வியாழன் அன்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கான இரண்டாவது அமர்வின் வாக்கெடுப்பின்போதும் ரணிலைத் தோற்கடிப்பதற்கான காரியங்களில் சந்திரிக்கா ஈடுபட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கெதிராக வாக்களிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ஈ பி டி பி கட்சியின் தலைவரான டக்கிளசுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்ட சந்திரிக்கா, வாக்கெடுப்பில் ரணிலின் அரசை எதித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் வாக்களிப்போது டக்கிளஸ் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. ஆனால் ரணில் அரசைக் கவிழ்த்து தனது தலைமையில் அரசாங்கமொன்றினை அமைக்க சந்திரிக்கா எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்றே தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சந்திரிக்கா அமைக்க விரும்பும் அரசின் பிரதமராக வரப்போகின்றவர் என்று பேசப்படும் அவரது நண்பரான லக்ஸ்மண் கதிர்காமர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் கண்வைத்திருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. சந்திரிக்காவுடன் இணைந்து செயற்படலாம் என்று ரணில் வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் வீண்போய்விட்டது என்றே படுகிறது. இன்னொரு தேர்தலுக்கு அவரும் தயாராகி வருகிறார் போலத் தெரிகிறது. ஆனால் அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. பாராளுமன்றத்தைக் கலைத்து இன்னொரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் சந்திரிக்காவிடமே இருக்கிறது. ஆனால் அவரும் உடனடியாக இன்னொரு தேர்தலுக்குத் தயாரில்லை. அவரது மக்கள் முன்னணிக்கும் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, தேர்தலில் ரணில் மீளவும் பெருமளவு ஆதர‌வுடன் பிரதமராகும் வாய்ப்பிருப்பதாக சந்திரிக்காவின் கட்சியினரால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதில் சந்திரிக்காவுக்கு சில சிக்கல்களும் இல்லாமல் இல்லை. புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் தாம் முன்வைக்கும் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அன்றி சந்திரிக்காவினால் ரணிலை வீழ்த்தும் கூட்டணியொன்றினை ஏற்படுத்துவதென்பது சுலபமானதாக இருக்கப்போவதில்லை.
  41. ரணிலின் அரசைப் பலவீனப்படுத்துவதன் ஊடாக பேச்சுக்களைக் குழப்ப முயன்ற சந்திரிக்கா பட்டேர்னிடம் பேசும்போதும், பின்னர் தனது மாவீரர் தின உரையின் மூலமும் சர்வதேசத்திற்கான செய்தியைக் கூறும்போதும் புலிகள் பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதை பிரபாகரன் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனுடனான சந்திப்பின்போதும் "நாளை வேண்டுமானாலும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்" என்று பிரபாகரன் தமது இயக்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். பிரபாகரனுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு கொழும்பிற்கு உலங்குவானூர்தியூடாகப் பயம்ணப்படுவதற்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய ஹெல்கீஸ்ன் பிரபாகரனின் பேச்சுக்களுக்கான விருப்பினை தெரியப்படுத்தியிருந்தார். "பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்த்திரமின்மைதான்" என்பதை பட்டேர்னிடமும், ஹெல்கீசனிடமும் பிரபாகரன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். பேச்சுக்களுடன் நேரடியாகத் தொடர்புபடக்கூடிய முக்கிய மூன்று அமைச்சுக்களை ரணில் அரசாங்கத்திடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டதன் மூலம் ரணிலைப் பலவீனமானவராக, செயற்றிறன் அற்றவராக சர்வதேசத்தின் முன்னால் சந்திரிக்கா நிறுத்தியிருந்தார். ஆனால், இந்த மூன்று அமைச்சுப் பொறுப்புக்களும் தன்வசம் இருந்த ஆறு மாத காலத்தில் ரணில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை, குறிப்பாக பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் ரணில் தான் ஒத்துகொண்ட பல விடயங்களை செய்யத் தவறியிருந்தார். சந்திரிக்காவிற்கு விசுவாசமானவர்களாக வலம்வந்த இராணுவத்தளபதியும், கடற்படைத் தளபதியும் ரணில் பேச்சுவார்த்தைகளின்போது ஒத்துக்கொண்ட விடயங்களை செய்ய வெளிப்படையாகவே மறுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பபவற்றை முன்னெடுப்பதற்கு அடிப்படையாக தமிழ் மக்களின் வீடுகளில் இருந்தும், பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தனியார் காணிகளில் இருந்தும் இராணுவத்தையோ அல்லது கடற்படையினரையோ விலக்கிக்கொள்ள இத்தளபதிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். தற்போது பாதுகாப்புத் தரப்பின் அதிகாரம் சந்திரிக்காவின் கைகளுக்கு மாறியிருப்பதையடுத்து இராணுவத்தினரினதும் ஏனைய படைகளினதும் பிடிவாதம் இன்னும் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. சந்திரிக்காவின் சூழ்ச்சிகளையும், திட்டங்களையும் பிரபாகரன் நன்கு அறிந்திருந்தார். "சமாதானத்திற்கான போர்" எனும் மயக்கம் தரும் சுலோகத்தினூடாக சர்வதேசத்தினை நீண்ட ஏழு ஆண்டுகளாக அவர் ஏமாற்றி வந்திருந்தார். புலிகள் போரிற்குத் தயாராகி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே போர் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையினை அவர் ஏற்படுத்தி வந்திருந்தார். இப்போது அவர் செய்ய முனைவதும் அதையே. ஆனால் தற்போது அவர் தனது சுருதியினை சற்றே மாற்றிக்கொண்டிருக்கிறார். சமாதானத்திற்கான தனது முயற்சிகள் உண்மையானவை என்று கூறும் அதேவேளை பிரபாகரனை நம்பமுடியாது என்று அவர் பேசிவருகிறார். தன்னை ஒரு சமாதானத்தின் தேவதையாக சர்வதேசத்தின் முன்னால் காட்டி, யுத்தநிறுத்தத்திற்கு தான் உண்மையாகவே மதிப்பளிப்பதாகக் கூறிக்கொண்டு, புலிகள் யுத்தநிறுத்தத்தினை மீறும்வகையின் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் சந்திரிக்காவின் சூழ்ச்சியினை அறிந்துகொண்ட பிரபாகரன் முந்திக்கொண்டார். ரணிலின் அரசைக் கவிழ்த்து, தனது தலைமையில் அரசொன்றினை அமைக்கும் சந்திரிக்காவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியினர் கூட்டத்தில், பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்குத் தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை தனக்குத் தராமைக்காக தனது கட்சி உறுப்பினர்களைக் கடுமையாகச் சந்திரிக்கா கடிந்துகொண்டார். மேலும், சர்வதேசச் சமூகத்திடமிருந்து தன்மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்பதையும் அவர் கணிக்கத் தவறியிருந்தார். சர்வதேசத்தில் சரிந்துவரும் தனது பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமாதான வேடம் போடவேண்டிய கட்டாயம் சந்திரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேசத்திலிருந்து வருகின்ற விமர்சனத்தையும், அதிருப்தியினையும் சமாளிப்பதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட துரும்புதான் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கப்போகிறேன் எனும் சுலோகம். ரணில் அரசாங்கத்திடம் இருக்கும் அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவதே சந்திரிக்கா அமைக்க விரும்பும் தேசிய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம். ஆனால் சந்திரிக்காவின் தேசிய அரசாங்கத்திற்கான அறைகூவலினை முற்றாக நிராகரித்திருக்கும் ரணிலின் அரசாங்கம், முக்கியமான விடயங்கள் தொடர்பாக மக்களின் விருப்பினைக் கேட்டறியலாம் என்று கூறியிருக்கிறது. அவ்விடயங்களாவன, சமாதானப் பேச்சுவார்த்தைகள், பொருளாதார அபிவிருத்தி, தேர்தல் நடைமுறைகள் மற்றும் நல்லாட்சி ஆகியனவாகும். மேலும் மக்களின் விருப்பினை அறிவதே இன்று அவசியமானது என்று கூறியிருக்கும் ரணில் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது குறித்து நீண்டகால நோக்கில் சிந்திக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். நாட்டு மக்களின் விருப்பினை அறிவதற்கான ஆணைக்குழு ஒன்று சமரவிக்கிரம மற்றும் தித்தவலை ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன், ஜனாதிபதியின் ஆலோசகர் மனோ தித்தவலை மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கருணாரட்ண ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
  42. சமாதான முயற்சிகளுக்கெதிரான சந்திரிக்காவின் செயற்பாடுகளும், பிரபாகரனின் மாவீரர் தின உரையும் கடந்த 46 வருடங்களாக சிங்களத் தலைவர்கள் நடத்திவரும் இத்தெருக்கூத்துக்களை மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது. லேக் ஹவுஸ் பத்திரிக்கை நிறுவனத்தில் ஒரு நிருபராக 1957 ஆம் ஆண்டு இணைந்துகொண்ட நான், அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் செய்தியாக்கி வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் தமிழ் நாளிதழான தினகரனிலும் பின்னர் டெயிலி நியூஸ் பத்திரிக்கையிலும் செய்தியாளராகக் கடமையாற்றியிருக்கிறேன். மேலும், முடிவற்ற அரசியல் நாடகங்களின் பிரதான கதாப் பாத்திரங்களுடன் நெருங்கிப் பயணிக்கும் அனுபவங்களும் எனக்கு நிறையவே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவர்களுடன் நீண்டகாலமாக நெருங்கிப் பயணித்தவன் என்கிற வகையில் அவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான நோக்கம் என்னவெனில், தமிழர்களின் பிரச்சினையினை வைத்துக்கொண்டு தம்மை அரசியலில் உச்சத்திற்குக் கொண்டுவருவதேயன்றி, தமிழர்களுக்கான தீர்வினை எபோதும் வழங்குவது அல்ல என்பதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினை என்னவென்பதுபற்றிய தெளிவான விளக்கங்களோ அல்லது புரிதல்களோ இதுவரையில் சர்வதேசத்தில் வெளிக்கொணரப்படவில்லை. சர்வதேசத்தில் சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைக்கு நீதியான தீர்வைத் தர எத்தனிக்கின்றபோதிலும், தமிழர்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலட்சியமான தனிநாட்டில் உறுதியாக நிற்கிறார்கள், அதனை இராணுவ வல்லமையினால் அடைய முயற்சிக்கிறார்கள் எனும் மிகத் தவறான புரிதல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்தில் விதைக்கப்பட்டிருக்கும் தமிழரின் போராட்டம் தொடர்பான தவறான கற்பிதத்தினை உடைக்கும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றிருந்தார். "முடிவற்ற துன்பியல் நாடகமாக தமிழர்களின் பிரச்சினை நீண்டுகொண்டு செல்கிறது. ஒவ்வொருமுறையும் ஆட்சியில் இருக்கும் கட்சி பிரச்சினைக்கான தீர்வினைக் காண முயற்சி செய்கின்ற அதேவேளை, அந்த முயற்சிகளையெல்லாம் தடம்புரளச் செய்துத் தோற்கடிப்பதையே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. இதே வகையான சுழற்சிமுறைச் செயற்பாடுகளை எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆளும்கட்சியில் முன்னர் இருந்தவர்கள் செய்கிறார்கள். சிங்கள அரசத் தலைமைகளால் செய்யப்பட்டு வரும் இவ்வாறான நாடகங்கள் கடந்து 50 வருடங்களாகத் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த நாடகங்களின் இயக்குநர்கள் இருபிரதான சிங்கள அரசியற் கட்சிகளின் தலைவர்கள் தான். நாடகத்தின் பிரதான கதாப் பாத்திரங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தபோதிலும், நாடகத்தின் கதை எப்போதும்போல் மாறாது காக்கப்பட்டே வருகிறது. இன்று கொழும்பில் நடந்துவரும் அரசியல்க் கூத்துக்களும் அந்த நாடகத்தின் தொடர்ச்சிதான்". "சிங்களவர்களின் இந்த நாடகத்தில் தமிழர்கள் பகடைக்காய்களாகத் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வருகிறார்கள். சிங்களத் தலைமைகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட பல சமாதான ஒப்பந்தங்கள் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தீர்விற்கான முயற்சிகளும், தீர்விற்கான பொதிகளும் தடம்புரளச் செய்யப்பட்டு, கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக தமிழர்களின் இன்னல்கள் முடிவின்றித் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. எமது மக்களின் அவலவாழ்வும் முடிவின்றித் தொடர்கிறது" என்று கூறினார். தற்போதையன ஜனாதிபதி சந்திரிக்காவினால் பாதுகாப்புத்துறை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் ஊடத்துறை ஆகிய அமைச்சுக்கள் அடாத்தாக ரணில் அரசாங்கத்திடமிருந்து பிடுங்கப்பட்டிருப்பதானது சிங்கள அரசியல்த் தலைமைகள் கடந்த 50 வருடங்களாகச் செய்துவருகின்ற அதே நாடகத்தின் தொடர்ச்சிதான் என்றால் அது மிகையில்லை. புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நாளில் இருந்து அதனை மிக வன்மையாக எதிர்த்துவரும் சந்திரிக்கா, இச்சமாதான ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்றும், ரணில் அரசு புலிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுத்துவிட்டதாகவும், புலிகள் தம்மைப் பலப்படுத்தி மீள போரிற்குள் செல்வதற்கான அவகாசத்தை ரணில் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றும் கடுமையாக பிரச்சாரம் செய்துவருகிறார். சந்திரிக்காவின் இப்பொய்ப்பிரச்சாரத்திற்கான பதிலை பிரபாகரன் தனது மாவீரர் தினை உரையில் அளித்திருந்தார். "சந்திரிக்கா செய்துவரும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை நான் ஐயம் திரிபுற‌ தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எமது விடுதலை அமைப்பின் நம்பகத்தனமையினைக் கேவலப்படுத்தும் முகமாகவும், சமாதானச் செயற்பாடுகளைத் தடம்புரளச் செய்வதற்காகவுமே சந்திரிக்கா இதனைச் செய்கிறார். எமது விடுதலை அமைப்போ அல்லது எமது மக்களோ இன்னுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை. எமது பிரச்சினைகளை சமாதான வழிமுறைகளில் தீர்த்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். சமாதானத்திற்காக நாம் ஆளமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்". சந்திரிக்காவின் இரண்டாவது குற்றச்சாட்டான ரணில் அரசாங்கம் புலிகளுக்கு தாராளமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவருகிறது என்பதற்குப் பதிலளிக்கையில், "சமாதான முயற்சிகளின் பலனாக தெற்கின் மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பலன்கள் இதுவரையில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு வந்து சேரவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால் சந்திரிக்காவின் இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையிலேயே ரணில் அரசிடமிருந்து முக்கியமான அமைச்சுக்களைப் பறித்தெடுக்கும் தனது சூழ்ச்சிக்கான புறச்சூழலினை ஏற்படுத்துவதற்காகவே முன்வைக்கப்பட்டன என்பதனை பிரபாகரன் நன்கு அறிந்தே இருந்தார். மேலும், நாட்டை மீண்டும் இன்னொரு போருக்குள் இழுத்துவிடுவதற்கான முயற்சிகளில் சந்திரிக்கா ஈடுபட்டு வருகிறார் என்பதனையும் அவர் நன்கு அறிந்திருந்தார். கொழும்பிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் சர்வதேசப் பிரமுகர்கள், இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களின்போது புலிகள் இன்னொரு போருக்கான ஆயுதங்களை நாட்டிற்குள் கொண்டுவருகிறார்கள், சிறார்களை இயக்கத்தில் இணைத்து ஆள்ப்பலத்தைப் பெருக்கி வருகிறார்கள் என்று கடுமையான பிரச்சாரத்தை சந்திரிக்கா செய்துவருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரான கிறிஸ் பட்டேர்ன் அவர்களின் விஜயத்தின்போதும் சந்திரிக்கா இதனை கடுமையாக வலியுறுத்தியிருந்தார். புலிகளை நம்பமுடியாது, அவர்கள் இன்னுமொரு நீண்டபோரிற்குத் தயராகி வருகிறார்கள் என்று சந்திரிக்கா கிறிஸ் பட்டேர்னிடம் தெரிவித்திருந்தார். பிரபாகரனின் 50 ஆவது பிறந்ததினத்தில் அவரைச் சந்தித்த கிறிஸ் பட்டேர்ன் அவரிடம், "நீங்கள் இன்னுமொரு போரிற்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறதே, உண்மையாகவா?" என்று நேரடியாகவே கேட்டிருந்தார். பிரபாகரனுடனான இரு மணிநேர பேச்சுக்களின் பின்னர் கொழும்பு திரும்பிய கிறிஸ் ரணிலுடன் அதுகுறித்துப் பேசும்போது, "என்னுடனான இரு மணிநேர உரையாடலின்போது குறைந்தது ஆறு தடவைகளாவது தாம் மீளவும் யுத்தம் ஒன்றிற்குள் செல்லப்போவதில்லை என்பதை பிரபாகரன் என்னிடம் உறுதிபடக் கூறினார்" என்று தெரிவித்திருந்தார். பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பின்போதும் இதனையே கிறிஸ் தெரிவித்திருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.