Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 25: புதிய உலகம் (பாதாளம்)

ஆனால்மூன்று மாதங்கள் கழித்து அவர் வந்து வேலையில் சேர்ந்தார். பார்த்தால் அவரும் என்னைப்போல ஒரு முதுநிலைப் பொறியியலாளர்தான். என்னடா இது ஒரு கண்ணுக்கு வெண்ணை.. இன்னொன்றுக்கு சுண்ணாம்பா என்று கடுப்பாகிவிட்டேன்.. :unsure:

(தொடரும்.)

இருக்காதா பின்னே?

சுயமரியாதை தமிழனின் சொத்தாச்சே....... :lol::icon_idea: :icon_idea:

  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 25: புதிய உலகம் (பாதாளம்)

-------

மூன்று மாதங்கள் கழித்து அவர் வந்து வேலையில் சேர்ந்தார். பார்த்தால் அவரும் என்னைப்போல ஒரு முதுநிலைப் பொறியியலாளர்தான். என்னடா இது ஒரு கண்ணுக்கு வெண்ணை.. இன்னொன்றுக்கு சுண்ணாம்பா என்று கடுப்பாகிவிட்டேன்.. :unsure:

(தொடரும்.)

பொறுத்த கட்டத்திலை, தொடரும்... என்று போட்டது, நல்லாயில்லை இசை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டடக்கலையில் மட்டுமல்ல திரைக்கதை அமைப்பதிலும் இசை ஒரு கலைஞன்

உங்கள் எதிர்கால வாழ்க்கை எங்கே என்பதையும் கூறிவிடுங்கள் இசைக்கலைஞன் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இசை எல்லோரும் உங்களை உசுப்பேத்தி சொந்த வியாபாரம் செய்ய வைக்கப் போயினம் நீங்கள் இதுக்கு எல்லாம் மசியாதீங்கோ சரியா :lol:

இன்று தான் வாசித்து முடித்தேன்.

இசையின் வாழ்க்கை ஒரு தினுசாக ஆரம்பித்து, சிங்கப்பூரில் எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துள்ளது.

உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

எழுதுவதற்கும் தான்! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ...துலாமேல் வெள்ளிபோல் இருக்கிறது.

உங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்வதற்கு உண்மையிலேயே நாம் உற்சாகம் தரவேண்டும். மனத்திரையில் டங்கு எங்கேயோ போய்விட்டார் அதுவேறு விடயம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக உங்கள் அனுபவப்பகிர்வுகள் இருக்கின்றன. நாங்களும் வந்து வாசிக்கிறோம். ஊமைக் கோட்டான்கள் மாதிரிப் போகாமல் பதிவிட்டுவிட்டுச் செல்கிறேன்.

இசையண்ணா :rolleyes:

இப்படியெல்லாம் மரியாதை தருவோம் என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

எப்பவுமே நீங்கள் டங்கு அல்லது இசை அப்படித்தான் மாற்றம் மரியாதையெல்லாம் மண்ணுக்கும் நம்மளுக்கு வராது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Super isai anna

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே நீங்கள் டங்கு அல்லது இசை அப்படித்தான் மாற்றம் மரியாதையெல்லாம் மண்ணுக்கும் நம்மளுக்கு வராது :lol:

அதைதான் இவளவுநாளும் நாங்கள் வாசிச்சோமே?

எழுதியும் காட்டவேண்டுமா? :D :D :D :D :D

(இது எப்படியிருக்கு?)

  • கருத்துக்கள உறவுகள்

அதைதான் இவளவுநாளும் நாங்கள் வாசிச்சோமே?

எழுதியும் காட்டவேண்டுமா? :D :D :D :D :D

(இது எப்படியிருக்கு?)

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "மூன்று மாதங்கள் கழித்து அவர் வந்து வேலையில் சேர்ந்தார். பார்த்தால் அவரும் என்னைப்போல ஒரு முதுநிலைப் பொறியியலாளர்தான். என்னடா இது ஒரு கண்ணுக்கு வெண்ணை.. இன்னொன்றுக்கு சுண்ணாம்பா என்று கடுப்பாகிவிட்டேன்"

தோலை பொறுத்தது. தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் நண்பர்களே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 26: பொறுத்தார் பூமி ஆள்வார்

நான் அதுவரை பழகியவரைக்கும் நிறபேதங்கள் என்னுடைய மேலாளர்கள் மட்டத்திலோ, நான் இணைந்து வேலை செய்தவர்கள் மட்டத்திலோ இருந்ததாகத் தெரியவில்லை.. ஓரிரு கிழமைகளில் புது அலுவலகக் கட்டடத்திற்கு எங்களது பொறியியல் பிரிவு மாத்திரம் நகர்ந்து செல்வதாகத் திட்டம் இருந்தது. இங்கே இடப்பிரச்சினை தானே.. புதிய இடத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணி கொஞ்சம் சாந்தமாக இருந்தேன். unsure.gif

என்னுடன் நட்பாக இருந்த ஒரு ஊழியர் ஒருநாள் என்னிடம் வந்தார். புதிய கட்டடத்திலும் உங்களுக்கு தனி அலுவலகம் இல்லையே என்று ஆதங்கப்பட்டார். கோபம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. :blink:

பொறுமையாகப் போவது ஒரு விடயம். ஆனால் நிறுவனமே மதிக்கவில்லையென்றால் கூட வேலைசெய்பவர்களும் மதிக்க மாட்டார்கள். உடனே எனது மேற்பார்வையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். unsure.gif

அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டு, ஒழுங்குகளைச் செய்தார். கடைசியில் பார்த்தால் இந்த அலுவலக அமைப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் தொழில்முறை சாராதவர்கள் (Non-professionals). அவர்களுக்கு பொறியியலாளர்கள் மேல் இயல்பாக இருக்கும் மரியாதை எதுவும் இல்லை. இதுவே எங்கள் நிறுவனத்தில் நடந்துகொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினை ஆகும். :blink: ஏற்பட்ட குழறுபடிகளுக்கெல்லாம் இவர்களே காரணம் என பின்னாளில் தெரியவந்தது.

பெரிய நிறுவனங்களில் வாயை மூடிக்கொண்டிருந்தால் ஓரங்கட்டப்படும் வாய்ப்புகள் அதிகம். unsure.gif சத்தம்போடும் சில்லுக்குத்தான் கிறீஸ் கிடைக்கும். :lol:

புதிய கட்டடத்தில் எல்லாம் சரியாக இருந்தது. எனக்கு புதிய வேலைத்திட்டங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த வேலைகளில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். unsure.gif

புதிதாக சேர்ந்த பொறியியலாளருக்கு ஒரு வேலைத்திட்டம் ஒதுக்கப்பட்டது. இது கொங்கிரீட்டினால் வடிவமைக்கப்பட வேண்டியது. 300 அடி உயரமான கட்டடம். ஆனால் அவருக்கும் கொங்கிரீட் வடிவமைப்பு தெரியாது. கனிமவளத்துறையில் 15 வருடங்களாக இரும்பில் வடிவமைத்தே பழக்கப்பட்டவர். எனக்கு கொங்கிரீட் தொழில்நுட்பம் தெரியும். ஆனால் கனிம வளத்துறையில் அனுபவம் இருக்கவில்லை. unsure.gif

இந்த நிலையில் நிர்வாகத்தினரால் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தது. அதாவது இரும்பினாலேயே வடிவமைப்பது என்று. உண்மையில் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால் பெரும் கருவிகள் எல்லாம் அந்தக் கட்டடத்தின் உச்சியில் நிலைநிறுத்தும்போது சில மில்லிமீற்றர்களே கட்டடம் அசைய அனுமதிக்க முடியும். இரும்பு வடிவமைப்பில் கட்டடம் கூடுதலாக அசையும். unsure.gif

அதே வேலைத்திட்டத்தில் வேறு மூன்று சிறிய கட்டடங்களை வடிவமைப்பது எனது வேலை. நானும் .. சரி வத்தலோ தொத்தலோ.. ஏதோ ஒன்று என்று நினைத்துக்கொண்டு என்னைச் செப்பனிடுவதைத் தொடர்ந்தேன்.. :D

ஒரு வருடங்கள் கடந்திருக்கும். எந்த வரைபடங்களும் செய்து முடிக்கப்படவில்லை. ஒரே குழறுபடிகள்.. வேலைத்திட்ட உரிமையாளர்களுக்கு விசனமே மிஞ்சியது. அனுபவப்பட்டவர் என்று கொண்டுவரப்பட்டவர் சொதப்பிக் கொண்டிருந்தார்.. :D நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.. :lol:

இன்னும் சில மாதங்கள் கழித்து அந்த உயரமான கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பு எங்கள் நிறுவனத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வேறொரு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. unsure.gifஆனால் நான் செய்து வந்த கட்டடங்கள் என்னிடமே விடப்பட்டிருந்தன. :wub:

கடைசியில் கலருடன் வந்தவருக்கு எங்கள் அலுவலகத்தில் வேலையே இல்லாமல் போய்விட்டது. :wub:

இந்த நேரத்தில் ஒரு இந்தியரும் முதுநிலை வடிவமைப்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்தியாவில் ஒரு 20 வருடங்களும் கனடாவில் 3 வருடங்களும் வேலை அனுபவம் இருந்தது. அவருக்கும் அப்போது கிடைத்த ஒரு வேலைத்திட்டம் ஒதுக்கப்பட்டது. கவனிக்கவும்.. கனிமவளத்துறையில் அவரும் அனுபவமில்லாதவர்.. :rolleyes:

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய காலமும் வரும். அப்போது நான் யாரென்று இவர்களுக்குக் காட்டவேண்டும் என்கிற ஓர்மம் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. unsure.gif

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், இசை!

இந்தியாவில் இருந்து ஒரு பொறியியலாளர் வருகின்றார், என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்து வாசிக்கத் தொடக்கி விட்டேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை இவ்வளவு தூரம் பொறுமை காத்திருக்கக்கூடாது.. மூக்கை நுழைப்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் மூக்கை நுழைக்கவேண்டும்!

இசை எல்லோரும் உங்களை உசுப்பேத்தி சொந்த வியாபாரம் செய்ய வைக்கப் போயினம் நீங்கள் இதுக்கு எல்லாம் மசியாதீங்கோ சரியா :lol:

உசுப்பேத்தின அவர் என்ன ஏறுற ஆள :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், இசை!

இந்தியாவில் இருந்து ஒரு பொறியியலாளர் வருகின்றார், என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்து வாசிக்கத் தொடக்கி விட்டேன்! :D

உங்களுக்கும் நல்ல அனுபவங்கள் போலை.. :D

இசை இவ்வளவு தூரம் பொறுமை காத்திருக்கக்கூடாது.. மூக்கை நுழைப்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் மூக்கை நுழைக்கவேண்டும்!

என்னுடைய அலுவலக தாரக மந்திரம்.. "Let them all fail first..!" :D

உசுப்பேத்தின அவர் என்ன ஏறுற ஆள :)

:wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 26: பொறுத்தார் பூமி ஆள்வார்

-------

பெரிய நிறுவனங்களில் வாயை மூடிக்கொண்டிருந்தால் ஓரங்கட்டப்படும் வாய்ப்புகள் அதிகம். unsure.gif சத்தம்போடும் சில்லுக்குத்தான் கிறீஸ் கிடைக்கும். :lol:

-------

அதே வேலைத்திட்டத்தில் வேறு மூன்று சிறிய கட்டடங்களை வடிவமைப்பது எனது வேலை. நானும் .. சரி வத்தலோ தொத்தலோ.. ஏதோ ஒன்று என்று நினைத்துக்கொண்டு என்னைச் செப்பனிடுவதைத் தொடர்ந்தேன்.. :D

ஒரு வருடங்கள் கடந்திருக்கும். எந்த வரைபடங்களும் செய்து முடிக்கப்படவில்லை. ஒரே குழறுபடிகள்.. வேலைத்திட்ட உரிமையாளர்களுக்கு விசனமே மிஞ்சியது. அனுபவப்பட்டவர் என்று கொண்டுவரப்பட்டவர் சொதப்பிக் கொண்டிருந்தார்.. :D நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.. :lol:

--------

கடைசியில் கலருடன் வந்தவருக்கு எங்கள் அலுவலகத்தில் வேலையே இல்லாமல் போய்விட்டது. :wub:

-------

(தொடரும்.)

தலைப்புக்கேற்ற உண்மையான வரிகள் இசை :) .

சிலர் அவசரப்பட்டு, காரியத்தை கெடுத்து விடுவார்கள்.

பருத்தித் துறையானுக்கு, மண்டை முழுக்க மூளை என்று, சும்மாவா சொன்னார்கள். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அலுவலக தாரக மந்திரம்.. "Let them all fail first..!" :D

company ஐயும் காப்பாற்ற வேண்டுமே! அதற்காக நான் விசுவாசி என்று சொல்லமாட்டேன். என்றாலும் வருமுன் காப்போனாக இருக்கப் பழகிவிட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்

company ஐயும் காப்பாற்ற வேண்டுமே! அதற்காக நான் விசுவாசி என்று சொல்லமாட்டேன். என்றாலும் வருமுன் காப்போனாக இருக்கப் பழகிவிட்டேன்..

கிருபன்,

என்ன சொல்ல விளைகிறார் என்று.... சத்தியமாக புரியவில்லை.

அவர் சொல்வதைப் பார்த்தால்... சுயநலமே மேலோங்கி நிற்கின்றது என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1)தொழில் முறை சாரா ஊழியர்கள் எப்படி உங்களோடு சேர்ந்து வேலை செய்வார்கள்?

2)பொறுமையாக காத்திருக்கும் போது உங்கள் எதிரிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதில் வெற்றால் என்ன செய்வீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

என்ன சொல்ல விளைகிறார் என்று.... சத்தியமாக புரியவில்லை.

அவர் சொல்வதைப் பார்த்தால்... சுயநலமே மேலோங்கி நிற்கின்றது என நம்புகின்றேன்.

சுயநலமும் தேவைதான். இல்லாவிட்டால் பணத்தில் குறியாக இருக்கும் மேற்குலகக் கம்பனிகள் நமது தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். என்றாலும் நிறுவனங்களில் சிலரின் போக்கால் அதிகம் பாதிப்புவரும்போது திறமையைக் காட்ட அதிகம் தயங்கக்கூடாது. அதே வேளை உழைப்புக்குத் தகுந்த சன்மானத்தையும் கேட்டே வாங்கிடவேண்டும்!

இன்றுகூட ஒரு வேலை முகவரிடம் பேசும்போது இன்றைய பொருளாதார சூழலில் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது என்றார். அதற்கு நான் நிறுவனங்களுக்குத் தொண்டு செய்யும் வேலை தேடவில்லை என்று சொல்லிக் கதையை முடித்துவிட்டேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயநலமும் தேவைதான். இல்லாவிட்டால் பணத்தில் குறியாக இருக்கும் மேற்குலகக் கம்பனிகள் நமது தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். என்றாலும் நிறுவனங்களில் சிலரின் போக்கால் அதிகம் பாதிப்புவரும்போது திறமையைக் காட்ட அதிகம் தயங்கக்கூடாது. அதே வேளை உழைப்புக்குத் தகுந்த சன்மானத்தையும் கேட்டே வாங்கிடவேண்டும்!

இன்றுகூட ஒரு வேலை முகவரிடம் பேசும்போது இன்றைய பொருளாதார சூழலில் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது என்றார். அதற்கு நான் நிறுவனங்களுக்குத் தொண்டு செய்யும் வேலை தேடவில்லை என்று சொல்லிக் கதையை முடித்துவிட்டேன்!

எங்கள் நிறுவனம் பெரியது.. ஒழுங்கமைப்பு இல்லாது இருக்கிறது.. எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை..

என்னை வேலைக்கு எடுத்தவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் நான் எத்தகைய வேலைகளைச் செய்யக்கூடிய ஆள் என்று. அது தெரியாதவர்கள் அந்தப்பதவியில் இருக்க லாயக்கில்லை..

இது ஒருவகை அரசியல்.. :D கெஞ்சிப் பெறும் எதுவும் எனக்குப் பிடிக்காது.. மிகுதிப் பாகங்கள் வரும்போது இன்னும் விரிவாக எழுதுகிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1)தொழில் முறை சாரா ஊழியர்கள் எப்படி உங்களோடு சேர்ந்து வேலை செய்வார்கள்?

இரும்பு வெட்டும் இடத்தில் (Fabrication shop) வேலை செய்தவர்கள், AutoCad இல் வரைபடம் வரைந்துகொண்டிருந்த Draftsperson இவர்கள்தான் இப்ப பெரிய இடங்களில் உள்லார்கள். இவர்களையே non-professionals என்று குறிப்பிட்டேன்.. இவர்களுக்கு யாருடைய தகுதிகளையும் பற்றி அக்கறை இல்லை.. கனடாவில் கனிமவளத்துறையின் சாபக்கேடு இது.. இப்போது கொஞ்சம் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது..

2)பொறுமையாக காத்திருக்கும் போது உங்கள் எதிரிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதில் வெற்றால் என்ன செய்வீர்கள்?

அப்படி இதுவரை எதுவும் நடைபெறவில்லை.. என் மச்சம் அப்படி.. :D இன்னொருவன் திறமையானவனாக இருந்து வேலைகளைச் செய்தால் அவனுடன் போட்டியிடுவதே என் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும். இருவருக்கும் அதுதான் நன்மை தருவதாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

""இன்னொருவன் திறமையானவனாக இருந்து வேலைகளைச் செய்தால் அவனுடன் போட்டியிடுவதே என் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும். இருவருக்கும் அதுதான் நன்மை தருவதாக இருக்கும்..""

இன்றைய தத்துவம் எனக்குப்பிடித்திருக்கின்றது :D

தொடருங்கள் இசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 27: பதவி உயர்வு

கட்டட வடிவமைப்பு வேலை பிடுங்கப்பட்டது எங்கள் நிறுவனத்திற்குப் பெருத்த அவமானமாகிவிட்டது.. மேலாளர் மட்டத்தில் அடிபாடு நடந்தது.. ஆளை ஆள் மாறி குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.. :unsure:

வடிவமைப்பை இன்னொரு நிறுவனம் மேற்கொண்டது.. நான்கே மாதங்களில் கொங்கிரீட்டில் வடிவமைத்துவிட்டார்கள். கட்டுமானம் செய்வது மட்டும் எங்கள் நிறுவனத்தின் வேலை.

http://www.jsonsinc....projects/7.html

இந்தச்சமயத்தில் அமெரிக்காவிலும், சிலி நாட்டிலும் எங்கள் நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டன. எனது மேற்பார்வையாளரும், மேலாளரும் அங்கே இடமாற்றலாகிச் சென்றுவிட்டார்கள். புதிய மேலாளர்கள் வந்தார்கள். :unsure:

எனது மேற்பார்வையாளரின் இடத்திற்கு ஆளை நிரப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பங்களைக் கேட்டிருந்தார்கள்.

நான் கலர் காட்டுபவரிடம் (பெயர் பில்) சென்று ஏன் நீங்கள் அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்ககூடாது என்று கேட்டேன் (அரசியல்) :D ஆள் கொஞ்சம் தயங்கினார். கொஞ்ச நேரம் பேசியபிறகு, தான் கேட்டுப் பார்க்கிறேன் என்று சொன்னர்.. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஒரு ஆறுமாத விடுப்பில் சென்றுவிட்டார். :unsure:

இதனை அடுத்து, என்னை நேர்முகத் தேர்வு செய்த இளைய பொறியியலாளரும் வேலையை விட்டுவிட்டு ஊர்மாறிச் சென்றுவிட்டார். இப்போது இந்தியரான குஜராத்திக்காரரும் நானும் மட்டும் தான்.. :unsure:

ஒருநாள் புதிய பொது மேலாளர் என்னிடம் வந்தார்..

"உங்களை மேற்பார்வையாளர் நிலைக்கு பதவி உயர்த்துவதாக இருக்கிறோம்.."

எனக்கு யோசனையாக இருந்தது. பில்லுக்கு தன்னை விட்டால் யாருக்கும் எதுவுமே தெரியாது என்கிற நினைப்பு.. இந்தியன் தாத்தாவுக்கு என்னைவிட பல வருடங்கள் வயது கூட.. இவர்களுடன் ஒரு ஜேர்மன்காரப் பெடியன்.. இந்த மூன்றையும் மேய்க்க வேண்டும்.. :unsure:

"என்னைவிட பில்லுக்கு அனுபவம் கூட அல்லவா.. அவரை ஏன் நீங்கள் பதவி உயர்த்தக் கூடாது??"

"அவருக்கு கிடையாது.. உங்களுக்கு விருப்பமானால் சொல்லுங்கள்.."

"சரி.. யோசித்துவிட்டுச் சொல்கிறேன்.." :unsure:

(தொடரும்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.