Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியின் பொலிகண்டியில் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இருந்த நிலையை கொண்டு வந்த பின் தான் இவர்களை காப்பாற்ற முடியும் என்பது எம்மை எம் பொறுப்பில் இருந்து தட்டிக் கழிக்கும் செயலே ஒழிய வேறொன்றும் இல்லை

செய்வது.. செய்வது என்றால் யார் மூலம் செய்வது?? செய்வதற்குரிய அரசியல் வெளி இருக்கா? போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவிகள் கிடைக்கச் செய்யலாம்? யார் செய்வார்? இப்போதைக்கு சிறிய அளவிலேயே உதவிகள் போகின்றது.. ஆலோசனை பிளீஸ்..

எனக்குத் தெரிந்த புலம்பெயர் அமைப்புகளில் இருப்பவர்கள், கடைசிச் சண்டைக்கு காசு சேர்த்தவர்கள் பலர் இரண்டுக்கு மேற்பட்ட சொகுசு வீடுகளும் வணிக நிலையங்களும் பல்பொருள் அங்காடிகளும் வைத்து இருக்கின்றனர்.

ஆ.. இதை முதலிலேயே சொல்லியிருக்கவேணும் அல்லோ..

அதுசரி.. சேர்த்த காசை செலவழிச்சால், சண்டைக்குத்தானே காசு குடுத்தனாங்கள்.. ஊருக்கு ஏன் அனுப்பினீங்கள் எண்டு காசு குடுத்தவை கேட்டால்??! :D இல்லை.. சும்மா ஒரு கதைக்குக் கேட்கிறன்.. :rolleyes:

செய்வது.. செய்வது என்றால் யார் மூலம் செய்வது?? செய்வதற்குரிய அரசியல் வெளி இருக்கா? போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவிகள் கிடைக்கச் செய்யலாம்? யார் செய்வார்? இப்போதைக்கு சிறிய அளவிலேயே உதவிகள் போகின்றது.. ஆலோசனை பிளீஸ்..

இசை என்னாலோ உங்களாலோ தனித்து செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

அடுத்த முறை நீங்கள் டொரன்டோ வரும் போது இத்தகைய செயல்களை சர்வதேச தொண்டர் மற்றும் மன்னிப்புச் சபை போன்றவற்றுடன் சேர்ந்து இயங்கக்கூடியளவுக்கு வல்லமை இருந்தும் பேசாமல் இருக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சிலரை நீங்கள் சந்திக்க விரும்பின் சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன் ..அவர்களுடன் கதைத்துப் பாருங்கள்

(நீங்கள் கொலைகாரனானால் என்னால் அதற்கான பொறுப்பை பொறுப்பெடுக்க முடியாது)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த புலம்பெயர் அமைப்புகளில் இருப்பவர்கள், கடைசிச் சண்டைக்கு காசு சேர்த்தவர்கள் பலர் இரண்டுக்கு மேற்பட்ட சொகுசு வீடுகளும் வணிக நிலையங்களும் பல்பொருள் அங்காடிகளும் வைத்து இருக்கின்றனர். தலைவர் வந்தால் தான் இவற்றுக்கு கணக்கும் காட்டுவம் என்கின்றனர்

தற்கொலை செய்து கொண்ட பெண் போராளியின் சாவில் இத்தகைய அயோக்கியர்களின் கை ரேகைகளும் கலந்து இருக்கின்றதாகவே உணர்கின்றேன்

இது பொறுப்பை சுமந்தவர்கள் மீது சுமத்தப்படுவதால் கவனமாக இருக்கவேண்டும்.

எனக்குத்தெரிந்தது நான் கண்டது பற்றித்தான் நான் எழுதமுடியும்.

பிரான்சில் அப்படி எவரையும் நான் கண்டதில்லை.

எனவே அப்படி கனடாவில் இருந்தால் அப்படி இருப்பவர்கள் மீது தங்கள் வரிகள் சரியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் பெயரால் புலம்பெயர்ந்த நாடுகளில் சேர்த்த பணத்தை அங்குள்ள போராளிகளுக்கும் மக்களுக்கும் கொடுத்திருந்தாலே இப்படியான துயர்கள் வந்திருக்காது. இதனைப் பற்றி சிலர் எழுதினார்கள். அதற்கும் யாழில் எதிர்ப்புத்தான் வந்தது.

இதை நான் மறைமுகமாகவும்,பகிரங்கமாகவும் பல இடங்களில் கேட்டேன்.இதன் பின் எனக்கு கொண்டாட்ட மொய்யுக்கு கூட அழைப்பிதழ் இப்போது வருவதில்லை......

மிகவும் வருத்தமான செய்தி, எனது அஞ்சலிகள்,

கீழ்வரும் காணொளியில் அவரும் உள்ளார்.

http://youtu.be/oyXF0KB9gE0

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் மறைமுகமாகவும்,பகிரங்கமாகவும் பல இடங்களில் கேட்டேன்.இதன் பின் எனக்கு கொண்டாட்ட மொய்யுக்கு கூட அழைப்பிதழ் இப்போது வருவதில்லை......

மொய்யெழுதிற சிலவும் மிச்சம்தானே. :o

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று ஒரு அமைப்பு தாயகத்தில் அமையும்வரைக்கும் இந்த நிலமைகள் மாறப்போவதில்லை. முன்னால்ப் போராளிகளை விடுங்கள், சாதாரண தமிழ் மக்களையே சிங்களம் நடத்தும் விதத்தைப் பாருங்கள். இன்றைக்குக் கூட ஒதுங்க நிழலில்லாது வாடுகிறார்கள். அப்படியிருக்க போராளிகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாவது.

சிங்கள அரசமைப்பிக்குள் இருக்கும் நஎந்த ஒரு அமைப்புமே போராளிகள் பற்றிக் கவலைப்படப்போவதில்லை. தமிழ் அரசியல் வாதிகளால்க் கூட அது முடியாது. அவர்கள் விரும்பினாலும் கூட சிங்களம் அவர்களை முன்னால்ப் போராளிகளுக்கு உதவ விடப்போவதில்லை. கே.பீ போன்றவர்கள் கூட அர்சின் நாடகத்தின் அங்கமேயன்றி ஒருபோதுமே போராளிகளுக்கான உண்மையான புனர்வாழ்வுக்கு உதவப் போவதில்லை.

எமக்கென்று அதிகாரம் மிக்க அமைப்பினாலன்றி போராளிகளைப் பாதுகாப்பது கடிணமனாது.

இதை நான் மறைமுகமாகவும்,பகிரங்கமாகவும் பல இடங்களில் கேட்டேன்.இதன் பின் எனக்கு கொண்டாட்ட மொய்யுக்கு கூட அழைப்பிதழ் இப்போது வருவதில்லை......

நாடுகடந்த அரசை நெடியவன் குழுவினர் எதிர்ப்பதன் நோக்கமே இதுதான் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஓரிடத்தில் போய்த் தேங்கி நிற்கும் பணத்தை எடுத்து மக்களினதும் போராளிகளினதும் புனர்வாழ்வுக்கு உதவலாமே என்று ஒரு யோசனை நாடுகடந்த அரசால் முன்வைக்கப்பட்டதாம். ஆனால் மற்றையக் குழுவினர் அதை மூர்க்கத்தனமாக எதிர்த்து வருகிறார்கள். இந்தப் பணத்தையெல்லாம் என்ன செய்யப்போகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று அதிகாரம் மிக்க அமைப்பினாலன்றி போராளிகளைப் பாதுகாப்பது கடிணமனாது.

இப்போதைக்கு ஒவ்வொரு போராளியை இங்குள்ள ஒவ்வொருவர் பொறுப்பேற்று உதவலாம்தானே ?

இந்தப் பணத்தையெல்லாம் என்ன செய்யப்போகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அடுத்த ஒளி விரைவில் வருமாம் அதுக்கு தேவையாமெண்டு புனர்வாழ்வு ஒளிப்பக்கத்தார் ஒர கொஞ்சாநள் முதல் கேட்டதுக்குச் சொல்லிச்சினம்.

  • கருத்துக்கள உறவுகள்

Ex-LTTE female cadre harassed by SLA commits suicide in ‘resettlement’ camp

[TamilNet, Saturday, 05 May 2012, 09:35 GMT]

A senior female ex-cadre of the LTTE, ‘rehabilitated’ and ‘released’ recently by the genocidal SL military has self-immolated herself Thursday night in Polika'ndi in Vadmaraadchi inside a closed room at the camp for resettlement-seeking people. The deceased, 38-year-old Suganthy Sivalingam, had been a member of the LTTE for more than 15 years and was serving in the LTTE medics after she sustained serious injury in a combat operation in 1999. She was engaged in medical services during the final days of the war in Vanni. Suganthy, who was mentally strong, was seen depressed and physically ill on the day of the suicide, the family said. Informed sources further said that the SL military had subjected the victim to severe mental torture in their 'rehabilitation' detention.

The international community, including India that have abetted the Sinhala state in the genocidal war, continue to follow a policy of leaving the Eezham Tamil ex-liberation fighters in the hands of the genocidal Sinhala military, causing the inhuman treatment meted out to them with international tolerance, human rights activists in Jaffna accused.

It is quite natural for the genocidal Sinhala military to treat ex-Eezham Tamil liberation fighters in inhuman ways. But it is an abnormal crime on the part of certain countries of the IC and India to facilitate such a situation, the activists further said.

UK was one of the countries that were directly involved in ‘funding’ the process of SLA’s handling of ex-LTTE cadres.

Refusing to admit the ethnic/ genocidal perspective of the crime and leaving matters as affairs of the Sri Lankan state is the fundamental encouragement given to the Sinhala state to commit the crimes whether in war or in the so-called post-war, the activists pointed out.

On Thursday, Suganthy had burnt herself with kerosene oil within a closed room.

At the time of her death, she was living with her parents at the resettlement camp at Paalaavi in Polika'ndi.

Suganthy's suicide comes at a time when former LTTE members are subjected to harassment and abductions by the SL military.

The ‘released’ LTTE cadres are ordered to come to the SL military camps for regular harassment.

Meanwhile, within the last 7 days, three former members of the LTTE, released after ‘rehabilitation’ by the SL military, have been abducted at Kamparmalai, informed civil sources said.

The families of the victims have been threatened not to disclose any details of the abduction or reveal their names to media.

The modes operandi of the SLA is not releasing those who were ‘abducted’ for ‘inquiries’ if the families complain or news stories appear on media on their abductions.

Accordingly, there was no complaint with the SL Human Rights Commission or with the Police on the latest abductions of the former LTTE members, journalists said.

However, whether complaints are made or not, not a single ex-LTTE member abducted after being released have returned alive, news sources point out.

But, parents hoping for the best, are reluctant to file complaints fearing that they would endanger the lives of their sons and daughters, held incommunicado at undisclosed locations by the SL military.

The entire apparatus of the occupying SLA and its intelligence, which have no combat role after May 2009, focus their energy on surveillance and harassment of former ex-LTTE members ‘rehabilitated’ and ‘released’ by the SL military.

The military has also told the ex-members of the LTTE that if they get arrested at the airport while leaving the island, they would never return alive.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35151

  • கருத்துக்கள உறவுகள்

]Ex-LTTE female cadre harassed by SLA commits suicide in ‘resettlement’ camp

ராணுவத்தின் துன்புறுத்தலால் தற்கொலை என்று போட்டிருக்கு..

The ‘released’ LTTE cadres are ordered to come to the SL military camps for regular harassment.

முன்னாள் போராளிகளை அடிக்கடி முகாமுக்கு வரவைத்து துன்புறுத்துகிறார்களாம்.

பணம் முக்கிய பங்கு வகிக்கும் மறுவாழ்வு என்பது எமது தற்போதைய பிரச்சினைகளில் ஓர் அங்கம் மட்டுமே.. ஆனால் இந்தப் போராளியைப் பணம் காப்பாற்றியிருக்க வாய்ப்பில்லை.. இதற்குரிய தீர்வையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் இருந்து ராணுவ ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை

இப்படியான துன்பகரமான நிகழ்வுகளை நிரந்தரமாக முடிவிற்குக் கொண்டுவர முடியாது.

நீண்டகால அடிப்படையில் இவ்வாறான நிகழ்வுகளுக்குத் தீர்வைத் தேடவேண்டும்.

பணம் வறுமை பசி வாழ்விடமின்மை என்பதெல்லாம் போலிக்குற்றச்சாட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. பச்சை போடமுடியவில்லை.. :D

முடிந்துவிட்டது..

ராணுவத்தின் துன்புறுத்தலால் தற்கொலை என்று போட்டிருக்கு..

...

வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர்

தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள்ள மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்தார். நேற்றைய தினம் வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீமூட்டி இறந்துள்ளார். இவரது சடலம் மந்திகைப் பொலிசாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

http://nilavaram.com...cilon&Itemid=18

முதல் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்... ஒரு தமிழ் ஈழப் புலிப் பெண் போராளியைப் பிடித்த இலங்கை ராணவம் அவரை எப்படி முகாமில் தடுத்து வைத்திருப்பார்கள் என்று இங்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை...

சோறா ? சுதந்திரமா ?

இது இன்றைய பல தமிழர்களின் கேள்வி .

முதன் நாள் சாப்பாட்டை கொட்டிவிட்டு புதிதாக சமைப்பபவனுக்கு சுதந்திரம் தான் பதில்.

நாலு நாள் சாப்பிடாதவனுக்கு சோறுதான் பதில்.

  • கருத்துக்கள உறவுகள்

சோறா ? சுதந்திரமா ?

இது இன்றைய பல தமிழர்களின் கேள்வி .

முதன் நாள் சாப்பாட்டை கொட்டிவிட்டு புதிதாக சமைப்பபவனுக்கு சுதந்திரம் தான் பதில்.

நாலு நாள் சாப்பிடாதவனுக்கு சோறுதான் பதில்.

வாத்தியாரின் கருத்திலேயே உங்களுக்கு பதில் இருக்கின்றது

வடகிழக்கில் இருந்து ராணுவ ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை

இப்படியான துன்பகரமான நிகழ்வுகளை நிரந்தரமாக முடிவிற்குக் கொண்டுவர முடியாது.

நீண்டகால அடிப்படையில் இவ்வாறான நிகழ்வுகளுக்குத் தீர்வைத் தேடவேண்டும்.

பணம் வறுமை பசி வாழ்விடமின்மை என்பதெல்லாம் போலிக்குற்றச்சாட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சோறா ? சுதந்திரமா ?

இது இன்றைய பல தமிழர்களின் கேள்வி .

முதன் நாள் சாப்பாட்டை கொட்டிவிட்டு புதிதாக சமைப்பபவனுக்கு சுதந்திரம் தான் பதில்.

நாலு நாள் சாப்பிடாதவனுக்கு சோறுதான் பதில்.

மிகச்சரி.. இதே வழிமுறையைத்தான் சிங்கள அரசும் கையாண்டது / கையாள்கிறது.. அதாவது சுதந்திரம் கேட்பவனுக்கு சோறு போடாமல் விட்டால் பிரச்சினை முடிந்தது..

சோறு, சுதந்திரம் இரண்டும் தான் முக்கிய பிரச்சினையா? போர் மற்றும் கைது செய்யப்பட்ட போது நடந்த சித்திரவதை, சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதில் உள்ள பிரச்சினைகள், இவற்றால் உண்டான மன உளைச்சல் தான் தற்கொலைக்கு தூண்டுகிறது என்று நான் நினைகிறேன். அவர்களுக்கு ஆதரவு, counseling தர, மற்றும் மீண்டும் கைது செய்யபடால் அதற்கு சட்ட ரீதியாக முறைப்பாடு செய்ய ஒரு அரச சார்பு அற்ற அமைப்பு அமைக்கப்பட்டு இயங்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

சோறு, சுதந்திரம் இரண்டும் தான் முக்கிய பிரச்சினையா? போர் மற்றும் கைது செய்யப்பட்ட போது நடந்த சித்திரவதை, சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதில் உள்ள பிரச்சினைகள், இவற்றால் உண்டான மன உளைச்சல் தான் தற்கொலைக்கு தூண்டுகிறது என்று நான் நினைகிறேன். அவர்களுக்கு ஆதரவு, counseling தர, மற்றும் மீண்டும் கைது செய்யபடால் அதற்கு சட்ட ரீதியாக முறைப்பாடு செய்ய ஒரு அரச சார்பு அற்ற அமைப்பு அமைக்கப்பட்டு இயங்க முடியாதா?

அதுதான் எல்லாவற்றையும் ஒழுங்காகவே செய்யிறோம் என்று சிங்களவன் சொல்லுறானே?! :wub: இதை சர்வதேச சமூகமும் கேட்டுக்கொண்டிருக்கு..

சர்வதேசத் தலையீட்டைக் கொண்டுவருவதன்மூலமே இடைக்காலத் தீர்வையாவது பெற்றுக்கொள்ளமுடியும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சோறா ? சுதந்திரமா ?

இது இன்றைய பல தமிழர்களின் கேள்வி .

முதன் நாள் சாப்பாட்டை கொட்டிவிட்டு புதிதாக சமைப்பபவனுக்கு சுதந்திரம் தான் பதில்.

நாலு நாள் சாப்பிடாதவனுக்கு சோறுதான் பதில்.

அண்ணை

பதில் உங்களிடமே உள்ளது

நீங்கள் போராடப்போனதாகச்சொல்கிறீர்கள்

சோத்துக்கு போராடப்போனீர்களா?

சுதந்திரத்துக்காக போராடப்போனீர்களா?

உங்கள் பதில்

அது சிங்களத்தின் பலத்தில் இருக்கு என்று சொல்லமாட்டீடீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

முதலில் மற்றவர்கள் என்ன எழுதுகின்றார்க்கள் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.

சோறு என்பது சாப்பிடும் சோற்றை குறிக்கவில்லை .ஒரு மனிதனின் உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை குறியிடும் சொல் .போராட எவனுமே சோத்திற்காக போகவில்லை ,அந்த வசதியில்லாமலும் இருக்கவில்லை .முள்ளிவாய்காலுக்கு பின்னரான நிலை அதுவல்ல ,

தமிழன் எந்தவொரு காலத்திலும் இல்லாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றான்.வன்னியில் மக்களும் முன்னாள் போராளிகளும் அவர்கள் படும் பாடும் தெரிந்தும் சுதந்திரம் எடுக்க மட்டும் பொறுத்திருங்கள் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது .அவர்களை வட கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களே ஒதிக்கி வைத்து பார்க்கும் ஒரு நிலையில் அவர்களை இப்படியே விட்டால் தற்கொலைகளும் ,விபச்சாரமும் ,பைத்தியமாவதிலும் தான் போய் முடியும் .

அதற்காக உரிமைகளுக்காக போராடுபவர்களை வேண்டாம் என்று சொல்லவில்லை ,கூட்டமைப்பும் புலம் பெயர் சில அமைப்புகளும் அவற்றை தொடர்ந்து செய்யட்டும் ,

அதே போரால் பாதிக்க பட்ட அந்த மக்களை இப்படியே பிச்சை எடுக்க விடுவதும் ,அவர்களுக்கு உதவி செய்ய முனைபவர்களை குற்றம் சொல்வதும் ஏற்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் 100 வீதம் உடன்படுகின்றேன்.

அர்ஜுன் மிக சரியான கருத்து. கூடவே முடிந்தால் என்ன செய்யலாம் என்றும் சொல்லுங்கள். நன்றி.

Edited by nadodi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் போராளி ஒருவர் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் புலம்பெயர் தேசத்திற்கு வந்த ஒருசில மாதங்களில் தன்னைத்தானே மாய்த்துள்ளார்.வரும் புதன்கிழமை பூதவுடலுக்கு இறுதிக்கிரியைகள்.சிங்களவனின் கைகளில் அகப்பட்டவன் நிஜவாழ்க்கைக்கு திரும்புவது கடினம்.

ஆமியின் கைக்குள் மாட்டுண்டு போனவர்களுக்கு எப்படி உதவலாம் என்பது தெரியாது.

1.இப்படி ஆமிக் கொலைகளை முடிந்தளவில் ஆவணப்படுத்தி தூதரகங்களுக்கும்,NGO களுக்கும் அனுப்ப வேண்டும்.

2.எங்களின் கதைகளை ஒரு அளவு தன்னும் கேட்கும் சுஸ்மா மாதிரி அரசியல் வாதிகளிடம் ராணுவத்தை பற்றி முறையிட வேண்டும். அரசு செய்வதை நாம் கூறுவதிலும் பார்க்க வெளியார் கூறினால் மட்டுமே அரசுக்கு நோகும். அதற்கேற்ற செயல்களில் இறங்க வேண்டும்.

3.தாயகத்து அரசியலுடன் புலம்பெயர் அரசியலை கலக்காமல் இருக்க வேண்டும். இது இராணுவத்திற்கு தாயகத்திலிருப்போர் மீது பழிவாங்குவதால் புலம் பெயர் அர்சியல் மேலும் மேலும் ஓங்கும் என்பதை காட்டி வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி ஒருவர் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் புலம்பெயர் தேசத்திற்கு வந்த ஒருசில மாதங்களில் தன்னைத்தானே மாய்த்துள்ளார்.வரும் புதன்கிழமை பூதவுடலுக்கு இறுதிக்கிரியைகள்.சிங்களவனின் கைகளில் அகப்பட்டவன் நிஜவாழ்க்கைக்கு திரும்புவது கடினம்.

குமாரசாமி,

தனிமடல் போட்டுள்ளேன் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.