Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தைரியமானவர்களாக வளருங்கள்

Featured Replies

அன்று விபத்து & உடனடிக் கவனிப்புப் பகுதியில் சில காவல் அதிகாரிகள் ஒரு இளம்வயதுப் ஆசியப் பெண்ணை அழைத்து வந்தார்கள். வழமையாக இளம் ஆண்களை காவல் அதிகாரிகள் அப்பகுதிக்கு அழைத்து வருவதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் இருந்ததால் அங்கு பார்த்தது ஒரு சிறு வியப்பாகவே இருந்தது..

தலையிலும், முழங்கை, கால்களிலும் காயங்கள், அவள் அணிந்திருந்த ஆடைகள் குருதியில் தோய்ந்தும், வடிந்த குருதி கொஞ்சம் காய்ந்து போயும் இருந்தது.. முகத்தில் ஒரு அசைவும் இல்லை, காயங்களில் ஏற்பட்ட வலியாவது முகத்தில் தெரிய வாய்ப்பும் இல்லை, எங்கோ அசைவின்றி தனது கண்களை வெற்றிடத்தை நோக்கியபடி ஒரு சடமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.. அப்படியானால் அந்தப் பெண்ணின் உடல் வலியை விட மனதில் பலமான வலி ஏற்பட்டுள்ளது, அதனால் தானோ அவள் அப்படி ஒரு நிலையில் இருக்கிறாள் என்று நினைக்கத் தோன்றியது..

மருத்துவ உழியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு சிறிய இடைவெளியின் பின் வெறும் ஆம் இல்லை என்ற பதில்கள் மட்டுமே அவள் குறிப்பிடுகிறாள். மருத்துவ உழியர்கள் அந்த இடத்தை விட்டு நகரவும், மீண்டும் ஒரு வேற்று இடத்தை நோக்கியே அவள் பார்வை போகிறது.. பாவம்! ஏதோ பிரச்னை போல.. என்ற எனது மனம்... ஒரு மணிநேர காத்திருப்பிகுப் பின் கூர்ந்து அவதானிக்கும் பகுதிக்கு அவளை மற்றம் செய்கிறார்கள்.. அங்கே ஒரு தனிமையில் அவளை இருக்க வைத்துள்ளார்கள்.. எந்த ஒரு சத்தமும் இல்லாது ஒரு மயான அமைதி..

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது, மணி இரவு பதினொன்று இருக்கும், மீண்டும் காவல் அதிகாரிகள் அவளை சூழ்ந்து கொள்கிறார்கள், அவர்களுடன் இம்முறை இன்னொருவரும் அவளிடம் போய் தன்னை மனநிலை மருத்துவர் என அறிமுகப் படுத்துகிறார். அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை..

பெயர், வயது, அவளின் முழு விபரமும் கேட்டபின்பு, இன்று என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்.. அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறாள்.. மொழி பெயர்ப்பு ஒருவரை அழைத்து வர காவல் அதிகாரிகளுக்கு மனநிலை மருத்துவர் கூற, ஒரு மணி நேரத்திற்குள் அவர்களும் வந்துவிடுகிறார்கள்.. மீண்டும் கேள்விகள் கேட்கப் படுகின்றன..

மொழி பெயர்ப்பு அதிகாரிகள் மூலம் அவளை பேச வைக்கிறார்கள்.. இன்று என்ன நடந்தது? என்ற கேள்விக்கு அவள் தனது தாய் மொழியில் சொல்லத் தொடங்கும் போது விம்மி அழும் சத்தமும் கேட்கிறது..

தனது கணவன் தன்னை வீட்டை விட்டுப் போகும் படி சண்டை பிடித்ததாகவும், கடந்த பல மாதங்களாக தினமும் இப்படித் தான் அடிக்கடி சண்டை போடுவதாகவும், அதை எல்லாம் பெரிது படுத்தாமல் தான் பொறுத்துப் போனதாகவும், இன்று விவாகரத்து எடுப்பதாகச் சொன்னதால் தான் மனமுடைந்து இந்த முடிவு எடுத்ததாகவும் கூறினாள். அவளுக்கென நண்பிகளோ, அல்லது உறவினர்களோ, குடும்பத்தினரோ யாரும் இங்கு இல்லை, யாரோடும் அவள் கதைத்ததும் இல்லை.. 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இங்கே அழைக்கப்பட்டவள்.. நன்றாகப் படித்து தொழிநுட்பப் பிரிவில் வேலை பார்க்கும் அவளது கணவனும் அவளை தனக்குத் தேவையான அளவுக்கு ஆங்கிலம் படிக்க வைக்கவில்லை.. இவ்வளவு சுயநலமான ஆண்களும் உள்ளார்கள்.

சரி அவள் எந்த முடிவு தான் எடுத்தாள்? அன்று காலையில் தனது 4 வயது மகனுடன் வெளியே போனவளுக்கு அன்று அவள் கணவன் சொன்ன விவாகரத்து என்பதே திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வந்தது... அந்த யோசனையோடு பக்கத்தில் இருக்கும் கடைத்தெருவுக்கு ரயிலில் போவதற்கு பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு ரயிலுக்காகக் காத்திருந்தாள்... ரயில் தரிப்பிடத்தை நெருங்கும் போது தனது மகனையும் தூக்கிக் கொண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளாள்... நல்லவேளை ரயிலின் சாரதி உடனடியாக ரயிலின் வேகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் இவர்கள் இருவரும் அடிபட்ட காயங்களோடு உயிர் பிழைத்தார்கள்.. சம்பவத்தை காவல் அதிகாரிகள் அவளது கணவனுக்கு அறிவித்த போது அவர் தனது அலுவலக வேலை முடித்துத் தான் காவல் நிலையத்திற்குப் போய் தனது மகனை மட்டும் மீட்டெடுக்க கோரியுள்ளார். காவலதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே மகனை அவனது தகப்பனிடம் கொடுப்பது பாதுகாப்பு என்று நீ நினைக்கிறாயா என்று தாயிடம் கேட்க, அவளும் அதற்குச் சம்மதிதவள் தன்னை மட்டும் சாக விடும் படி காவல் அதிகாரிகளிடமும், மனநிலை மருத்துவரிடமும் அழுதபடியே கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள்.. அவள் தனது முடிவில் தெளிவாக இருப்பது தெரிந்தது, எப்படியும் அவளின் கோரிக்கையை அவர்கள் அமோதிக்கப் போவதில்லை. அவளை ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிப்பார்கள். அல்லது நாட்டை விட்டு திருப்பி அனுப்புவார்கள்..

திருமணம் செய்து வைத்த குடும்பத்தினருக்கு இங்கும் நடக்கும் பிரச்சனைகள் எதுவுமே தெரிய வாய்ப்பில்லை.. ஏன் இப்படியான திருமணங்கள் நடக்க பெண்களும் சரி ஆண்களும் சரி உடன் படுகிறார்கள்? வெளிநாட்டு மோகம் என்று வரும் பல பெண்களுக்கு இங்கே என்ன காத்திருக்கிறதென ஆழம் தெரியாமல் இரு கால்களையும் விடுகிறார்கள்.. பணத்தை மட்டும் வைத்து வாழ்கையை சந்தோசமாக என்றுமே வாழ முடியாது.. ஊரில் ஒரு நேரம் அந்தப் பெண் வசதி இல்லதவரைத் திருமணம் செய்திருந்தாலும், இப்படியான ஒரு முடிவிற்கு வந்திருப்பாளா?

பெற்றோர்களே, குடுபத்தில் உள்ளவர்களே.. உங்கள் பெண் பிள்ளைகளையும்/ சகோதரிகளையும் எதையும் முகங்கொள்ளும் தைரியமானவர்களாக வளர்த்தெடுங்கள்! திருமணம் கட்டிக் கொடுத்த பின்பு உங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள், அவர்களிடம் உண்மையான புரிந்துணர்வு உள்ளதா என்று பார்த்து உணருங்கள்.. மனம் விட்டுக் கதையுங்கள்.. உங்கள் பிள்ளைகளின் கஸ்ரத்தைக் கேட்கக் கூடிய மன நிலையில் நீங்கள் இருப்பதை பிள்ளைகளுக்குத்/ சகோதரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள்..அநியாய தற்கொலைகளை குறைப்பதற்கு இவை உதவும்.

(உண்மைச் சம்பவம், அடுத்த நாள் செய்திகளில் வந்திருக்குமென இணையத்தில் தேடிய எனக்கு ஏமாற்றமே கிடைத்தது.. ஆனாலும் அந்தச் சம்பவம் நடந்த பகுதியில் சில மணி நேரங்கள் ரயிலின் கீழ் யாரோ விழுந்தமையால் ரயில் சேவை தடைப்பட்டு இருந்ததாக வேலை இடத்தில் நண்பர்கள் உறுதிப்படுத்தினார்கள்.)

  • Replies 68
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகளை எதிர் நோக்குபவர்கள் எப்போதும் இறப்பு தான் தீர்வு என்று நினைத்து விடக் கூடாது..தாங்களும் தப்பான முடிவை எடுத்து தங்களுடைய பிள்ளைகளுக்கும் தண்டனை கொடுப்பதை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..ஒன்றும் அறியாத பிள்ளைகளையும் அளிக்க நினைப்பது மன்னிக்கவே ஏலாது..எவ்வளவுக்கு பிரச்சனைகளை சமாளிக்க முடியுமோ அவ்வளவுக்கு சமாளிக்க கூடிய தன்மையை பெற வேண்டும்.அதற்காக தினமும் அடி,உதை நச்சரிப்பு ஆய்க்கினைகளோடு தான் வாழ வேண்டும் என்று சொல்ல வர இல்லை... கடந்த மாதம் ஒரு பெண் பிள்ளை ஊரில் குடும்ப பிரச்சனை காரணமாக தவறான முடிவை எடுத்துக் கொண்டு ஆள் போய்ட்டா..3 பிள்ளைகளின் நிலை.....??? ஆகவே வெளி நாட்டில் தான் இப்படி நடக்கிறது என்று சொல்வதற்கும் இல்லை..வெளி நாட்டுப் பணம் உரிய நேரத்திற்கு தாயகம் நோக்கி போகா விட்டாலும் கஸ்ரம் தான்..

Edited by யாயினி

குட்டி இது Stratford இல் நடந்த சம்பவம் என நினைக்கிறேன்.

http://www.metro.co.uk/news/893993-woman-tried-to-kill-boy-5-by-leaping-in-front-of-train-with-him-court-hears

அதிகமானவர்கள் சமூகத்திற்குப் பயந்து இந்த முடிவை எடுக்கிறார்கள். இதில் பெற்றோர் உறவினர்களின் பங்களிப்பும் உள்ளது. பெண் தனது பிரச்னையை உறவினர்களிடம் சொன்னாலும், எப்படியாவது கணவனுடன் சேர்ந்து வாழு என்று அறிவுரை சொல்லும் பழக்கம்தான் ஆசிய சமூகத்திடம் உள்ளது.

  • தொடங்கியவர்

இப்படியான பிரச்சனைகளை எதிர் நோக்குபவர்கள் எப்போதும் இறப்பு தான் தீர்வு என்று நினைத்து விடக் கூடாது..தாங்களும் தப்பான முடிவை எடுத்து தங்களுடைய பிள்ளைகளுக்கும் தண்டனை கொடுப்பதை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..ஒன்றும் அறியாத பிள்ளைகளையும் அளிக்க நினைப்பது மன்னிக்கவே ஏலாது..எவ்வளவுக்கு பிரச்சனைகளை சமாளிக்க முடியுமோ அவ்வளவுக்கு சமாளிக்க கூடிய தன்மையை பெற வேண்டும்.அதற்காக தினமும் அடி,உதை நச்சரிப்பு ஆய்க்கினைகளோடு தான் வாழ வேண்டும் என்று சொல்ல வர இல்லை...ஒரு பிள்ளை கடந்த மாதம் ஊரில் குடும்ப பிரச்சனை காரணமாக தவறான முடிவை எடுத்துக் கொண்டு ஆள் போய்ட்டா..3 பிள்ளைகளின் நிலை.....??? ஆகவே வெளி நாட்டில் தான் இப்படி நடக்கிறது என்று சொல்வதற்கும் இல்லை..வெளி நாட்டுப் பணம் உரிய நேரத்திற்கு தாயகம் நோக்கி போகா விட்டாலும் கஸ்ரம் தான்..

நன்றி யாயினி உங்கள் கருத்திற்கு.. உங்கள் ஒன்றுவிட்ட சகோதரியின் பிரிவையிட்டும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தும் வருந்துகிறேன்... இப்படியான முடிவுகள் தடுக்கப் படவேண்டும், அதற்காகவே அப்படி ஒரு தலைப்பையிட்டேன்..

குட்டி இது Stratford இல் நடந்த சம்பவம் என நினைக்கிறேன்.

http://www.metro.co....him-court-hears

அதிகமானவர்கள் சமூகத்திற்குப் பயந்து இந்த முடிவை எடுக்கிறார்கள். இதில் பெற்றோர் உறவினர்களின் பங்களிப்பும் உள்ளது. பெண் தனது பிரச்னையை உறவினர்களிடம் சொன்னாலும், எப்படியாவது கணவனுடன் சேர்ந்து வாழு என்று அறிவுரை சொல்லும் பழக்கம்தான் ஆசிய சமூகத்திடம் உள்ளது.

நன்றி தப்பிலி, நீங்கள் இணைத்த இணைப்பு வழக்கு ஆரம்பித்த நாளைக் குறிக்கிறதென நினைக்கிறேன்.. சம்பவம் நடந்த காலத்திலையே நான் இணையத்தில் தேடியும் கிடைக்காமல் போனது.

சமூகத்திற்குப் பயந்தும் எடுத்த முடிவாக இருக்கலாம், அதே நேரம் மொழிப் பிரச்னை, அவர்கள் பிரச்சனையை யாரும் கேட்க விரும்பாத நிலையிலும் தனிமைப் படுத்தப்பட்ட நிலையிலும் மன விரக்த்தியடைவதன் மூலம் இப்படியான முடிவிற்கு அவர்கள் உந்தப்படலாம்.. நீங்கள் கூறியது போல் அநேகமான ஆசிய நாட்டவர்கள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அவர்கள் தமது பெண்பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து வாழும் படியே அறிவுரை கூறுவார்கள்.. இதே ஒரு ஆணாக இருந்தால் நிலைமை வேறு... ஏன் சிலரின் உணர்வுகள் மட்டும் சமூகத்தால் மதிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.. (மொழி பெயர்க்க வந்தவர்களும் கொஞ்சம் வயதான ஆண் தான், அந்தப் பெண் நிறைய கூறியதை அவர்கள் ஓரிரு வசனங்களில் சுருக்கிக் கூறியிருந்தார்..)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகத்தில் விழிப்புணர்வின் தேவையை எடுத்துக் காட்டிய குட்டியின் பதிவுக்கு நன்றி. எனக்கு எப்போதுமே ஒரு தீர்வு தான் இதற்கெல்லாம் நினைவுக்கு வரும்: பெண் குழந்தைகளை நன்கு படிப்பிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் படிப்பிக்க வேண்டும். ஆனாலும் பெண் குழந்தைகளை உயர் கல்வி அல்லது நிபுணத்துவக் கல்வி வரை கொண்டு செல்ல வேண்டும். நவீன உலகில் அறிவு தான் துணிவும் ஆயுதமும். அதைக் கொடுத்து விட்டால் பெண்களை யாரும் நடுத்தெருவில் விட முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிறந்த அல்லது சின்னனில இங்கு வந்த பெடியங்கள் ஊரில போய் கல்யாணம் கட்ட விருப்பமில்லா விட்டால் கட்டக் கூடாது...பெற்றோரது விருப்பத்திற்கேற்ப வேண்டா விருப்பாக கட்டுவது பின்னர் வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்துவது இதெல்லாம் தேவையா?

எனக்குத் தெரிய பல ஆண்கள் படித்திருந்தாலும் பெரிய வேலையில் இருந்தாலும் கூட பெண்களை அடிமையாத் தான் வைத்திருப்பார்கள் இதே நேரத்தில பூப்போல பெண்களை வைத்திருக்கின்ற ஆண்களும் இருக்கிறார்கள்...ஊரிலே பெற்றோரது கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட பெண்கள் இங்கு வந்தவுடன் உலகம் புரியாமல் கஸ்டப்படுகிறார்கள் இதே நேரத்தில் கட்டினவனும் சரியில்லா விட்டால் அப் பெண்ணது பாடு திண்ணாட்டம் தான்.

இங்கு கல்யாணம் கட்டி வரும் பெண்கள் வந்த உடனேயே குழந்தை பெறக் கூடாது.

இந்த நாட்டு மொழி படிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும்.

நிறைய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வந்த உட‌னேயே கணவர் சொல்வது,செய்வதற்கெல்லாம் ஆமாம் போட‌க் கூடாது...இட‌ம் கொடுத்தீங்கள் என்டால் பிறகு கஸ்ட‌ம்.

ஆண்கள் ஊரில் போய் ஊர்ப் பெட்டையை கல்யாணம் கட்ட விருப்பமில்லா விட்டால் பெற்றோரிட‌ம் தைரியமாக சொல்ல வேண்டும்.சொல்ல வேண்டிய நேர‌த்தில் பேசாமல் இருந்திட்டு பிறகு தனது,அப் பெண்ணிணது,குழந்தைகளது வாழ்க்கையை வீணடிக்க கூடாது.

அதே நேர‌த்தில் ஆண்களைப் பெற்றோர் முக்கியமாக உங்கட‌ விருப்பத்திற்காக பெடியங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்க வேண்டாம்.

பெண்களைப் பெற்றோர் அப் பெண் பிள்ளைகளை தைரியமானவளாக வளருங்கள்.அட‌க்க,ஒடுக்கம் என சொல்லி அடிமையாக வைத்திருக்காதீர்கள்

இதே ஒரு ஆணாக இருந்தால் நிலைமை வேறு... ஏன் சிலரின் உணர்வுகள் மட்டும் சமூகத்தால் மதிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை

ஆணாக இருந்தால், 'அவளை விட்டுட்டு வா உனக்கு ஆயிரம் பெட்டைகள் கிடைக்கும்' என்று கூறுவார்கள். காரணம் எங்கள் சமூகம் ஆணாதிக்கச் சமூகம். ஆண்டாண்டு காலமாக அவனை மையமாக வைத்தே அவர்களின் உலகம் சுழல்கிறது. ஒப்பீட்டளவில் இந்திய பாகிஸ்தானிய, பங்களாதேஷ் சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது ஈழத் தமிழர்கள் சிறிது பரவாயில்லை என்று சொல்லலாம்.

ஆணோ பெண்ணோ, சக உறவு ஜஸ்டின் கூறியது மாதிரி சகலருக்கும் அறிவுக் கண்களைத் திறப்பதே சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு கீழ் சகோதரிகள் இருந்தால் அவர்களுக்காகவும்,தங்கட குடும்ப மானத்திற்காகவும் அனுசரித்து போக சொல்வார்கள்...அப் பெண்ணிணது குடும்ப,பொருளாதார நிலைமையும் கஸ்டமானதாக இருந்தால் அதிலிருந்து மீள்வது கஸ்டம் :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகத்தில் விழிப்புணர்வின் தேவையை எடுத்துக் காட்டிய குட்டியின் பதிவுக்கு நன்றி.

எனக்கு எப்போதுமே ஒரு தீர்வு தான் இதற்கெல்லாம் நினைவுக்கு வரும்:

பெண் குழந்தைகளை நன்கு படிப்பிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் படிப்பிக்க வேண்டும். ஆனாலும் பெண் குழந்தைகளை உயர் கல்வி அல்லது நிபுணத்துவக் கல்வி வரை கொண்டு செல்ல வேண்டும். நவீன உலகில் அறிவு தான் துணிவும் ஆயுதமும். அதைக் கொடுத்து விட்டால் பெண்களை யாரும் நடுத்தெருவில் விட முடியாது!

இது தான் உண்மையும் தேவையும் நிரந்ததரமும்.

என் பிள்ளையை அப்படித்தான் உருவாக்குவேன்.

கண்ணைக்கசக்கிக்கொண்டு நிற்பது எனக்குப்பிடிக்காத ஒன்று.

  • தொடங்கியவர்

எங்கள் சமூகத்தில் விழிப்புணர்வின் தேவையை எடுத்துக் காட்டிய குட்டியின் பதிவுக்கு நன்றி. எனக்கு எப்போதுமே ஒரு தீர்வு தான் இதற்கெல்லாம் நினைவுக்கு வரும்: பெண் குழந்தைகளை நன்கு படிப்பிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் படிப்பிக்க வேண்டும். ஆனாலும் பெண் குழந்தைகளை உயர் கல்வி அல்லது நிபுணத்துவக் கல்வி வரை கொண்டு செல்ல வேண்டும். நவீன உலகில் அறிவு தான் துணிவும் ஆயுதமும். அதைக் கொடுத்து விட்டால் பெண்களை யாரும் நடுத்தெருவில் விட முடியாது!

உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ஜஸ்டின்..

இங்கே பிறந்து வளரும் பிள்ளைகளை 16 வயது வரை சட்டப்படி பாடசாலைக்கு அனுப்பியே ஆகவேண்டும்.. அதோடு மற்றும் நின்று விடாது, பெற்றோர் தமது பிள்ளைகளோடு தினமும் உரையாடவேண்டும்.. அவர்களின் அன்றைய மனநிலையை அறிந்து கொள்ளவேண்டும். பிள்ளை எத்தனை தரம் விழுந்தாலும், மீண்டும் எழும்பி நிற்பதற்கு பெற்றோர் மனதளவிலாவது ஆறுதல், தைரியம், ஊக்கம், தனம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் அதுவே பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு ஒரு திடமான ஊன்றுகோலாக அமையும்.

  • தொடங்கியவர்

இங்கே பிறந்த அல்லது சின்னனில இங்கு வந்த பெடியங்கள் ஊரில போய் கல்யாணம் கட்ட விருப்பமில்லா விட்டால் கட்டக் கூடாது...பெற்றோரது விருப்பத்திற்கேற்ப வேண்டா விருப்பாக கட்டுவது பின்னர் வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்துவது இதெல்லாம் தேவையா?

எனக்குத் தெரிய பல ஆண்கள் படித்திருந்தாலும் பெரிய வேலையில் இருந்தாலும் கூட பெண்களை அடிமையாத் தான் வைத்திருப்பார்கள் இதே நேரத்தில பூப்போல பெண்களை வைத்திருக்கின்ற ஆண்களும் இருக்கிறார்கள்...ஊரிலே பெற்றோரது கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட பெண்கள் இங்கு வந்தவுடன் உலகம் புரியாமல் கஸ்டப்படுகிறார்கள் இதே நேரத்தில் கட்டினவனும் சரியில்லா விட்டால் அப் பெண்ணது பாடு திண்ணாட்டம் தான்.

இங்கு கல்யாணம் கட்டி வரும் பெண்கள் வந்த உடனேயே குழந்தை பெறக் கூடாது.

இந்த நாட்டு மொழி படிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும்.

நிறைய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வந்த உட‌னேயே கணவர் சொல்வது,செய்வதற்கெல்லாம் ஆமாம் போட‌க் கூடாது...இட‌ம் கொடுத்தீங்கள் என்டால் பிறகு கஸ்ட‌ம்.

ஆண்கள் ஊரில் போய் ஊர்ப் பெட்டையை கல்யாணம் கட்ட விருப்பமில்லா விட்டால் பெற்றோரிட‌ம் தைரியமாக சொல்ல வேண்டும்.சொல்ல வேண்டிய நேர‌த்தில் பேசாமல் இருந்திட்டு பிறகு தனது,அப் பெண்ணிணது,குழந்தைகளது வாழ்க்கையை வீணடிக்க கூடாது.

அதே நேர‌த்தில் ஆண்களைப் பெற்றோர் முக்கியமாக உங்கட‌ விருப்பத்திற்காக பெடியங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்க வேண்டாம்.

பெண்களைப் பெற்றோர் அப் பெண் பிள்ளைகளை தைரியமானவளாக வளருங்கள்.அட‌க்க,ஒடுக்கம் என சொல்லி அடிமையாக வைத்திருக்காதீர்கள்

நல்ல கருத்துகள் பகிர்ந்தமைக்கு நன்றி ரதி..

பெற்றோரின் கட்டுப்பாட்டில் உள்ள பெண் மட்டும் தான் திருமணமாகியாதும் கஸ்ரங்களுக்கு உள்ளாகிறாள் என்று இல்லை.. அதிக செல்லம், கேட்டதெல்லாம் உடனே கிடைத்து கஸ்ரம் தெரியாமல் வளர்ந்த பெண்பிள்ளைகளும் திருமணத்தின் பின் தமது செலவை கட்டுப்படுத்த முடியாமல், நினைத்ததை வாங்க முடியாமல் மனஉளைச்சல் அடைகிறார்கள். பெற்றோர் நல்லதையும்/ கெட்டதையும் சொல்லி வாழ்க்கை முறையை நன்கு தம் பிள்ளைகளுக்கு அறியப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களால் எதையும் எந்த சூழ்நிலையிலும் முகம் கொடுக்க முடியும் என நினைக்கிறன்.

ஒரு பெண்ணுக்கு கீழ் சகோதரிகள் இருந்தால் அவர்களுக்காகவும்,தங்கட குடும்ப மானத்திற்காகவும் அனுசரித்து போக சொல்வார்கள்...அப் பெண்ணிணது குடும்ப,பொருளாதார நிலைமையும் கஸ்டமானதாக இருந்தால் அதிலிருந்து மீள்வது கஸ்டம் :(

இதுவும் மெத்தச் சரியான ஒரு கருத்து!

'முதல் கோணினால் முற்றும் கோணும்' என்று சொல்லியே அவர்களை அடக்கிவிடுவார்கள்...

  • தொடங்கியவர்

ஆணாக இருந்தால், 'அவளை விட்டுட்டு வா உனக்கு ஆயிரம் பெட்டைகள் கிடைக்கும்' என்று கூறுவார்கள். காரணம் எங்கள் சமூகம் ஆணாதிக்கச் சமூகம். ஆண்டாண்டு காலமாக அவனை மையமாக வைத்தே அவர்களின் உலகம் சுழல்கிறது. ஒப்பீட்டளவில் இந்திய பாகிஸ்தானிய, பங்களாதேஷ் சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது ஈழத் தமிழர்கள் சிறிது பரவாயில்லை என்று சொல்லலாம்.

ஆணோ பெண்ணோ, சக உறவு ஜஸ்டின் கூறியது மாதிரி சகலருக்கும் அறிவுக் கண்களைத் திறப்பதே சிறந்த வழி.

இந்தப் பதிவில் குறிப்பிட்ட பெண்ணின் நிலை வரவும் ஓர் ஆண் தானே காரணமாக உள்ளான்.. திருமணம் செய்து 4 வயதில் ஒரு குழந்தையும் இருந்தும், தனது மனைவியின் விருப்பு வெறுப்புகளை சரிவர உணர்ந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு இன்று இப்படி ஒரு நிலை வந்திருக்க வாய்ப்பில்லை..

மனவிரக்க்தியால் தனது இரு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியபின் தன்னையும் அழிக்க முயன்றதாக ஒரு ஈழத் தமிழ் பெண்ணின் நிலையும் இங்கே உருவானது..

மனவிரக்க்தி என்பது பெரும்பாலும் பெண்களிடையே நிலவும் ஒரு கொடூரமான நோய்.. இதனை குடும்பத்தினர் உறவினர், நண்பர்கள் அவதானித்து அவர்களை ஆறுதல் படுத்தி அவர்கள் சொல்வதைக் கேட்டாலே பாதி நோய் குறைந்து விடுமென நினைக்கிறன்..

இது தான் உண்மையும் தேவையும் நிரந்ததரமும்.

என் பிள்ளையை அப்படித்தான் உருவாக்குவேன்.

கண்ணைக்கசக்கிக்கொண்டு நிற்பது எனக்குப்பிடிக்காத ஒன்று.

விசுகு அண்ணா உங்கள் கருத்திற்கும் நன்றி

பொதுவாகப் பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களை எப்படிக் கரை சேர்ப்பது என்று எண்ணி பணமும் பொருளும் சேர்க்க முனைகிறார்களே தவிர தமது பிள்ளைகளை தைரியமானவர்களாக வளர்ப்பதும், போதிய கல்வியறிவைக் கொடுத்து சமூகத்திற்கு அவர்களைத் தூண்களாக்குவதும் சில பெற்றோரே...

இந்தப் பதிவில் குறிப்பிட்ட பெண்ணின் நிலை வரவும் ஓர் ஆண் தானே காரணமாக உள்ளான்.. திருமணம் செய்து 4 வயதில் ஒரு குழந்தையும் இருந்தும், தனது மனைவியின் விருப்பு வெறுப்புகளை சரிவர உணர்ந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு இன்று இப்படி ஒரு நிலை வந்திருக்க வாய்ப்பில்லை..

மனவிரக்க்தியால் தனது இரு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியபின் தன்னையும் அழிக்க முயன்றதாக ஒரு ஈழத் தமிழ் பெண்ணின் நிலையும் இங்கே உருவானது..

மனவிரக்க்தி என்பது பெரும்பாலும் பெண்களிடையே நிலவும் ஒரு கொடூரமான நோய்.. இதனை குடும்பத்தினர் உறவினர், நண்பர்கள் அவதானித்து அவர்களை ஆறுதல் படுத்தி அவர்கள் சொல்வதைக் கேட்டாலே பாதி நோய் குறைந்து விடுமென நினைக்கிறன்..

நான் எழுதிய கருத்து பிழையாக விளங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண் சமூகத்தின் அதிகார போதை உடைத்தெறியப்பட வேண்டும் எனப் பொருள்படவே எழுதினேன். . இந்த ஆணாதிக்கச் சமூக ஒழுங்குமுறை இருக்கும் மட்டும் பெண்களிற்கு மாத்திரமல்ல அந்தச் சமூகத்திற்கும் விடிவு கிட்டாது. பெண்களின் கண்ணீர் ஒரு ரயிலின் அடியிலோ ஒரு முழ கயிறின் சுருக்கிலோ மறைந்து விடும். சீதனம் வாங்கி மம்மிக்குக் கும்மியடிக்கும், பெண்களை அடிமையாய் நடத்தும் வீர புருசர்கள்தான் இதனை உணரவேண்டும்.

இல்லைத் தப்பிலி, நீங்கள் பதிந்த கருத்தை ஆமோதித்தே நானும் எனது கருத்தை சேர்த்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி குட்டி

""நவீன உலகில் அறிவு தான் துணிவும் ஆயுதமும். அதைக் கொடுத்து விட்டால் பெண்களை யாரும் நடுத்தெருவில் விட முடியாது""!

இல்லைத் தப்பிலி, நீங்கள் பதிந்த கருத்தை ஆமோதித்தே நானும் எனது கருத்தை சேர்த்தேன். :)

எனது பிழையான விளக்கம் போல. :lol:

குட்டி நல்லதொரு பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள். அன்று வேலை விடயமாக சென்ற எனது பயணமும் தடைப்பட்டது. மறுநாள் சிறு செய்தியாக வந்திருந்தது. ஆரம்பத்தில் அந்தப் பெண் தவறி விழுந்ததாகவே கூறியிருந்தார். தற்கொலை பிழைத்ததால், அதை வெளியில் காட்டாமல் மறுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டியருக்கு ஒரு கும்புடு! எவர்மனமும் கோணாமல் அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்.......ஒரு சமூகவிடயத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.இன்னும் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணாக இருந்தால், 'அவளை விட்டுட்டு வா உனக்கு ஆயிரம் பெட்டைகள் கிடைக்கும்' என்று கூறுவார்கள். காரணம் எங்கள் சமூகம் ஆணாதிக்கச் சமூகம். ஆண்டாண்டு காலமாக அவனை மையமாக வைத்தே அவர்களின் உலகம் சுழல்கிறது. ஒப்பீட்டளவில் இந்திய பாகிஸ்தானிய, பங்களாதேஷ் சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது ஈழத் தமிழர்கள் சிறிது பரவாயில்லை என்று சொல்லலாம்.

ஆணோ பெண்ணோ, சக உறவு ஜஸ்டின் கூறியது மாதிரி சகலருக்கும் அறிவுக் கண்களைத் திறப்பதே சிறந்த வழி.

ஆணாதிக்கம் இடத்திற்கிடம்....நாட்டுக்கு நாடு...இனத்திற்கு இனம் என வெவ்வேறுவடிவில் இருக்கின்றதே தவிர.......ஆணாதிக்கம் எங்கும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் இடத்திற்கிடம்....நாட்டுக்கு நாடு...இனத்திற்கு இனம் என வெவ்வேறுவடிவில் இருக்கின்றதே தவிர.......ஆணாதிக்கம் எங்கும் உள்ளது.

நல்லதொரு பதிவு குட்டி,

குசா நீங்க சொன்னது 100% உண்மை. சக மனிதன் என்ற நிலைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் உலகம் காத்திருக்கனும்

இங்கு ஒரு சிங்கள குடும்பத்தில் பிரச்சனை, கோபத்தில் சுத்தியலால் எறிய அது மண்டையில் பட்டு மனைவி காலி, பாவம் இரு பெண் பிள்ளைகள் & கணவன், கோபத்தையும் கட்டுப்படுத்த பழகனும், பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போக வேண்டியது தானே

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மாப்பிளை என்று கட்டிக்குடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.. சீதனம் குடுக்கிற காசைப் பாவித்து பெண்ணை வெளிநாட்டில் படிக்க வைக்கலாம்.. :unsure:

இல்லாவிட்டால், உள்ளூரில் கட்டி வைக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைக்கேற்ற நல்லதொரு பதிவு குட்டி.

இனியும்... வெளிநாட்டு, மாப்பிள்ளை என்றவுடன்... கண்ணை மூடிக் கொண்டு கட்டி வைக்காமால் பெற்றோரும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாச் சமூகங்களிலும் இப்படியான பிரச்சனைகள் உள்ளன. இவை பெண்களுக்கு என்றான பிரச்சனைகள் மட்டுமல்ல. ஆண்களுக்கும் இப்படியான பிரச்சனைகள் உள்ளன.

நாங்கள் முன்னர் வாழ்ந்த இடத்தில் ஆற்றைக் கடந்து செல்லும் பெரிய தொங்கு பாலம் உள்ளது. ஒரு மருத்துவர் காரை அதன் அருகில் நிறுத்திவிட்டு.. அந்தப் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..! இதற்கு குடும்பப் பிரச்சனையே காரணம் என்று செய்திகள் கூறின.

இப்படியான சமூகப் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் சரியான ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டுமே தவிர.. பெற்ற கல்வி அறிவைக் கூட பயன்படுத்த முடியாத அழுத்த சூழலில்.. நல்லா கற்றவர்கள் கூட முட்டாள் தனமான முடிவுகளை எடுத்து தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பதைக் காணவே தான் செய்கிறோம்.

இங்கு ஆணாதிக்கம்.. பெண்ணாதிக்கம் என்று.. கூப்பாடு போட்டு.. புரட்சி வசனம் பேசிக் கிட்டிருந்தா.. இவற்றை தடுத்து நிறுத்துவது என்பது எப்போதுமே சாத்தியமில்லை..! முதலில் இந்தக் கூப்பாடுகளை சமூகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். இவற்றின் விளைவாக ஆண் - பெண் இயல்பான நெருக்கம் மனதளவில் இல்லாமல் போய்.. ஆண் அடக்குகிறான்.. நான் ஏன் அடங்கனும்.. பெண் அடக்குகிறாள்.. நான் ஏன் அடங்க வேணும் என்று பெண்களும் ஆண்களும் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டப்படும் நிலையில்.. இயல்பான எண்ணங்களும் ஆண் - பெண் இயற்கையான நெருக்கவும் இணைவும் இப்படியான செயற்கையான வாதங்களால் அடிபட்டுப் போக.. குடும்பங்களில் சிக்கல்கள் தோன்றி.. பிரிவினைகள் தோன்றி.. அந்தப் பிரிவினைகளைப் பயன்படுத்தி.. கயவர்களும்.. கயத்திகளும்.. மற்றவர் வாழ்வை சீரழிச்சு.. தங்கள் உடல்.. உளத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள... இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.. தற்கொலை வரை போக தூண்டப்படுகின்றனர்..!

தற்கொலை முடிவுக்கு எவரும்.. உடனடியாக வருவதில்லை. ஒருவரின் விருப்பம்.. அல்லது மனநிலை மாற்றம்.. அல்லது அழுத்தம் நீண்ட நாள் தீர்க்கப்படாதிருப்பின்.. அவர்களே அதிகம் இந்த முடிவுக்கு வருகின்றனர். இந்த மாற்றங்களை அவதானிக்கவும்.. அதற்கேற்ப அப்படியானவர்களோடு.. நல்ல விட்டுக்கொடுப்போடும்.. புரிந்துணர்வோடும்.. நட்போடும்.. அரவணைப்போடும்.. பழகும்.. நிலையே.. அவர்களின் மனநிலையில்.. வாழ்க்கை பற்றிய பிடிப்பை உருவாக்கி வாழத்தூண்டும்..! அல்லது அவர்களுக்கு நல்ல மன நிலை மாற்ற ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் சரியான வேளையில் கிரமமாக வழங்கப்படுதல் வேண்டும்..! இப்படியானவர்களை ஒருபோதும் தனிமைச் சூழலுக்குள் தள்ளவே கூடாது..! பெண்கள் அதிகம் பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பதால்.. அவர்கள் தனிமைப்படும் போது.. அது பிள்ளைகளையும் பாதிக்கும்..!

குறிப்பாக.. அன்பை.. இதய சுத்தியோடு.. உள் நோக்கமின்றி.. நேர்த்தியாக.. எதிர்பார்ப்பில்லாமல்.. வழங்கும் நிலை வந்தால் அன்றி.. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதென்பது.. இயந்திரமயமான.. சுயநலமே.. பணமே... வசதியே.. வாழ்க்கை என்று கருதும் செயற்கைச் சூழலில்... மனித மனப் பிறழ்வுகளும்.. மன அழுத்தங்களும் முடிவின்றித் தொடரும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

வாவ் ........... சுப்பேர்வ் கருத்துங்க நெடுக்கால போவான் அண்ணன் . ஒங்க கருத்தை ரெம்பவே லைக் பண்றேங்க . ஆம்பிழைங்கள்ல எங்க ஊரில இப்புடீல்லாம் எழுதமாட்டாங்க . ஒங்க மிஸ்ஸஸ் ரொம்ப கொடுத்துவச்சவங்க அண்ணன் :):) .

  • கருத்துக்கள உறவுகள்

ஒங்க மிஸ்ஸஸ் ரொம்ப கொடுத்துவச்சவங்க அண்ணன் :):) .

நம்ம மிஸ்ஸஸ் இருக்கட்டுங்க.. நம்ம தமிழ் நாட்டுல.. ஏங்க இந்த நிலமை..???! பயபுள்ள நிலமை.. ஒண்ணும் சரியில்லையிங்களே..! எல்லாரும் தற்கொலை பண்ணிக்கிறாங்களே..! பொண்ணுங்களும் பாவம் தானுங்களே. அவங்களும் எதுக்குங்க தற்கொலை பண்ணிக்கிறா..?!

ஏன் எண்ணாச்சுங்க அவங்களுக்கு..! இதுக்கு ஒரு முடிவே இல்லையாங்க..! உங்களைப் போல படிச்சவங்க தாங்க..அவங்களுக்கு நாலு நல்லது எடுத்துச் சொல்லணு.. நல்ல வழி காட்டணுங்க..! :icon_idea:

---------------------------------------

தமிழ்நாட்டில் ஆண்கள் தற்கொலை அதிகரிப்பு

வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.

குடும்ப பிரச்சினை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களால் அதிகளவில் பெண்கள்தான் தற்கொலையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சமீப காலமாக ஆண்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

விரக்தி, வேலையின்மை, வறுமை, தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் ஆண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். தற்கொலை செய்து கொள்ள தேர்ந்து எடுக்கும் வழி முறைகளும் மாறியுள்ளன. தூக்குப் போட்டு கொள்வது, விஷம் குடிப்பது, உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே குதிப்பது, ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்ப்பது போன்ற நிலைகள் குறைந்து, தீக்குளிப்புகள் அதிகரித்துள்ளன.

தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் கடந்த 2005 ல் 875 பெண்களும், 384 ஆண்களும் தீக்குளித்து இறந்துள்ளனர். 2010 ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிரை விட்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த 2010 ல் இந்திய அளவில் 4137 ஆண்களும், 7,748 பெண்களும் தீக்குளித்து பலியாகி உள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2011 ல் மட்டும் 1,300 தீக்காய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அவர்களில் 230 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்த வரை, தலைநகர் சென்னையில்தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நக்கீரன்.கொம்

[ http://www.nakkheera...ws.aspx?N=75418 ]

Edited by nedukkalapoovan

ஒங்க மிஸ்ஸஸ் ரொம்ப கொடுத்துவச்சவங்க அண்ணன் :):) .

:lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.