Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று ஆண்டுகள் முடிந்தனவாம்...: கவிதை: நிழலி

Featured Replies

வாழ்வு சூறையாடப்பட்ட

தேசத்தில்

இருந்து வந்த சுடலைக் குருவி

எனக்கு கதை சொல்லிற்று

தம் நிலங்களில்

ஊழித்தாண்டவம் முடிந்து

மூன்று ஆண்டுகள்

ஆயினவாம்

மேய்ப்பனும் அவனது

ஆடுகளும் அறுக்கப்பட்ட

நிலத்தில்

அறுக்கப்படா உயிர்களின்

கேவல்கள் இன்னும்

அடங்கவில்லையாம்

பின்னிரவில் கதவுகள் தோறும்

கடக்கும் இராணுவ சிப்பாயின்

சப்பாத்துகளில்

ஒவ்வொரு முறையும்

மரணம் வந்து

குந்தி இருந்து கணக்கெடுத்து

போகுமாம்

ஊரெல்லாம் அடங்கிய பின்

உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து

உழுதப்பட்ட உடலங்களின்

பெருமூச்சு

பெரும் காற்றாய் வீசுமாம்

தம் ஆத்துமா இளைப்பாற

ஒரு சிறு விளக்குத்தானும்

இல்லையென அழுது அரற்றுமாம்

மம்மல் அப்பிய பொழுதொன்றில்

மாட்டு வண்டி கட்டி போகும்

வண்டிக்காரன் காடுகளுக்கிடையே

மறைந்து தெரியும் மேய்பனின்

ஆவியை அடிக்கடி காண்பானாம்

போராளிகளின் காவலரணாய்

இருந்த இடங்களில் எல்லாம்

மேய்ப்பனின் ஆவியை கண்டவர்கள்

கூறுவார்களாம்

தவித்த விழிகளுடனும்

ஆற்றாத் துயருடனும் அவனாவி

அலைகின்றதென

போராற்றில் முடமாக்கப்பட்ட கிழவனொருவன்

தன் கையுடன் காவு போன

தன் பேத்தியையும்

மகளையும் நினைத்து

நடு இரவில் வீறிட்டு அழுவானாம்

போரிற்காய் பிடித்து செல்லப்பட்டு

பலியாகிப் போன பிள்ளையை

சுமந்த தாய் ஒருத்தி

தாயிழந்த கன்றினை கட்டிப் பிடித்து

அழது அரற்றுவாளாம்

இன்னும் இன்னுமென

வாழ்வு சூறையாடப்பட்ட

தேசத்தில்

இருந்து வந்த சுடலைக் குருவி

எனக்கு கதை சொல்லிற்று

இடையில் கேட்டுக் கொண்டு

இருக்கும் போதே நானுறங்கிப்

போனது தெரியாமல்

தொடர்ந்து கதை சொல்லிற்று............

மே 10, 2012

நிழலி அண்ணா,

வாசிக்கும் போதே அழுகை வந்து விட்டது....

நிஜத்தை அப்படியே கவிதையாக வடித்துள்ளீர்கள்... எதை குறிப்பிட்டு கருத்து எழுதுவது என்று தெரியாத அளவுக்கு அனைத்தும் அழுத்தமான கருத்துகள்.

வரிக்கு வரி வலியின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது... எழுதிய விதமும் அதனை எடுத்துக்காட்டுகிறது...நன்றாக உள்ளது....

நன்றி உங்கள் கவிதைக்கு... கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர்கள் சிலர் தான் உள்ளனர்.. அவர்கள் அனைவரும் அதனை கைவிடாது தொடர வேண்டும் என்பது தான் என் கோரிக்கை... இன்னும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துகள்...

எத்தனை வலிகளுடன் அந்த மக்களின் காலம் கழிகிறது.

சோகத்துள் புதைந்து வாழும் சகோதரர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அருமையான கவிதை நிழலி.

" மேய்ப்பனும் அவனது

ஆடுகளும் அறுக்கப்பட்ட

நிலத்தில்

அறுக்கப்படா உயிர்களின்

கேவல்கள் இன்னும்

அடங்கவில்லையாம் "

  • கருத்துக்கள உறவுகள்

போரிற்காய் பிடித்து செல்லப்பட்டு

பலியாகிப் போன பிள்ளையை

சுமந்த தாய் ஒருத்தி

தாயிழந்த கன்றினை கட்டிப் பிடித்து

ழுது அரற்றுவாளாம்

இதெல்லாம் சொன்ன சுடலைக் குருவி..

ஒரே கருவறையில் உதித்த

இன்னொரு தம்பி

கூலியாக நின்று

போட்டிக்கு வேட்டையாடி

பிணமாய் வீழ்ந்த

சொந்தத் தங்கையின்

ஆடை கிழித்த

கதை சொல்லாமல்

பறந்ததும் ஏனோ..??!

:unsure::(:o

  • தொடங்கியவர்

இதெல்லாம் சொன்ன சுடலைக் குருவி..

ஒரே கருவறையில் உதித்த

இன்னொரு தம்பி

கூலியாக நின்று

போட்டிக்கு வேட்டையாடி

பிணமாய் வீழ்ந்த

சொந்தத் தங்கையின்

ஆடை கிழித்த

கதை சொல்லாமல்

பறந்ததும் ஏனோ..??!

:unsure::(:o

இல்லை

ஆனால் அதே சுடலை குருவி, போராடப் போகாமல் பயந்து பதுங்கி வெளிநாட்டுக்கு புலமைப் பரிசில் வந்து குடியேறியபின் வெத்து வேடம் காட்டுபவர்கள் எப்படி தம்மையும் தமிழ் தேசியவாதிகளாகக் காட்டி பிழைப்பு நடத்துவர் என்று கொஞ்சம் சொன்னது,... அது இன்னொரு பதிவில். அது வரை பொறுக்கவும் :unsure::(:o

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

ஆனால் அதே சுடலை குருவி, போராடப் போகாமல் பயந்து பதுங்கி வெளிநாட்டுக்கு புலமைப் பரிசில் வந்து குடியேறியபின் வெத்து வேடம் காட்டுபவர்கள் எப்படி தம்மையும் தமிழ் தேசியவாதிகளாகக் காட்டி பிழைப்பு நடத்துவர் என்று கொஞ்சம் சொன்னது,... அது இன்னொரு பதிவில். அது வரை பொறுக்கவும் :unsure::(:o

தம் சுயநிலை அறியா

இப்படிப் பிதட்டும்

பித்து நிலையும்

சுடலைக் குருவியின்

கண் பட்டது

நியாயமே..!

மேய்ப்பனின்

அவன் ஆடுகளின்

அழிப்பில்

சுய விமர்சனம்

தேடும் தேவைகளில்....

சுயநிலை அறியாமை

எப்படி

சூல் கொண்டதோ..?!

சுடலைக் குருவி

அது அறியாது...

நிழலிக் குருவி

தான் மறைத்ததோ..?!

ஈழக் கனவோடு

மேய்ப்பனின்

பின் அணியாய் போய்

வீழ்ந்த

அந்த மந்தைகள்

எழும்பி வந்து

சொல்லவா போகுது

சுடலைக் குருவி

சொல்வதெல்லாம்

சத்தியம்

என்றே..!

சாட்சியற்ற சுடலையில்

சுடலைக் குருவியின்

கத்தலும்

சான்றாகும் நிலைமை

ஆண்டு 3

கழிந்தும்..

தீர்வு தேடும்

மண்ணில்

தீர்வெழுத

ஒரு நீதி இன்றி

அதை அளந்து போட

தராசு இன்றி..!

பெருமூச்சுக்களே

வெப்பக் காற்றாய்

வன்னி மண்

புழுதி கிளப்பும் நிலை..!

:o:rolleyes:

Edited by nedukkalapoovan

வார்த்தையில் வடிக்க முடியாத சோகம் கவிழ்ந்த கவிதை .இன்றுதான் யாழில் எனது முதல் பச்சை .

குறிப்பு -எனது மனதில் பட்டதை எழுதுகின்றேன் ,நெடுக்கரின் பதிவிற்கு நிழலி பதில் எழுதியிருக்க கூடாது என்பது எனது அபிப்பிராயம் .முள்ளிவாய்காலில் நடந்த ஊழியையை விட அதில் சுயலாபம் தேட முனைபவர்கள்தான் அதிகம். அதை பலர் இப்போ புரிந்தேவிட்டார்கள் என்பதும் மிக உண்மை .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு -எனது மனதில் பட்டதை எழுதுகின்றேன் ,நெடுக்கரின் பதிவிற்கு நிழலி பதில் எழுதியிருக்க கூடாது என்பது எனது அபிப்பிராயம் .முள்ளிவாய்காலில் நடந்த ஊழியையை விட அதில் சுயலாபம் தேட முனைபவர்கள்தான் அதிகம். அதை பலர் இப்போ புரிந்தேவிட்டார்கள் என்பதும் மிக உண்மை .

சொந்த இன

மந்தைகள் அழிக்க...

ஏவலில்

கோடரி தூக்கிய

கொலைக்கரங்களே

ஊழியின்

பெரும் சுழலானது

மறந்து

நீலியாய் வடியும்

முதலைக் கண்ணீரின்

ஆதி அந்தம் அறியும்

ஈழத்து சுடலைகளின்

கதை சொல்ல

நிழலி நாடா

ஆயிரம் ஆயிரம்

சுடலைக் குருவிகள்..! :(

Edited by nedukkalapoovan

நிழலி அண்ணாவிடம் ஒரு கோரிக்கை...

பச்சையை கொஞ்சம் அதிகரியுங்கள்.... அல்லது இன்று குத்தாத பச்சைகளை பின்னொருநாளில் குத்தக்கூடிய மாதிரி வழி செய்யுங்கள்... பச்சை குத்த நினைக்கிற போதெல்லாம் பச்சை இருக்குதில்லை...... :( :(

Edited by காதல்

கொலையே தொழிலென செய்தேன்

கொன்றோரே வழிபட வைத்தேன்

மானிட பிறப்பில் மனிதம் அறியாது

வெற்றி வீராப்பில் திகழ்ந்தேன்

போற்றி பாட ஒருவனும்

எனக்காய் சாக இன்னொருவனும்

கிடைத்ததால் இவ்வுலகில்

அதுவே தீர்வு என்றிருந்தேன்

பொல்லாத உண்மை சொல்லி

புகலிடம் வெறுக்கப் பண்ணி

கல்லாமல் இருந்த எனக்கு

கடைசி கணக்கு என்றார்கள்

சுற்றம் போகினும் எனக்கென்ன

சுகம் போகினும் திரும்பவரும்

என்னை காக்க எனக்கு மட்டுமாய்

ஏழு தலை முறை பலி வேண்டினேன்

கற்றோர் என்னை கை விட

கணக்கிலா எதிரியும் சூழ்ந்திட

இஸ்ட தெய்வம் வேண்டினேன்

இன்னொரு உயிர்மட்டும் தரும்படி.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

கொலையே தொழிலென செய்தேன்

கொன்றோரே வழிபட செய்தேன்

மானிட பிறப்பில் மனிதம் அறியாது

வெற்றி வீராப்பில் திகழ்ந்தேன்

போற்றி பாட ஒருவனும்

எனக்காய் சாக இன்னொருவனும்

கிடைத்ததால் இவ்வுலகில்

அதுவே தீர்வு என்றிருந்தேன்

பொல்லாத உண்மை சொல்லி

புகலிடம் வெறுக்கப் பண்ணி

கல்லாமல் இருந்த எனக்கு

கடைசி கணக்கு என்றார்கள்

சுற்றம் போகினும் எனக்கென்ன

சுகம் போகினும் திரும்பவரும்

என்னை காக்க எனக்கு மட்டுமாய்

ஏழு தலை முறை பலி வேண்டினேன்

கற்றோர் என்னை கை விட

கணக்கிலா எதிரியும் சூழ்ந்திட

இஸ்ட தெய்வம் வேண்டினேன்

இன்னொரு உயிர் வேண்டி.

சுற்றம் நின்று

ஈழம் கேட்டோம்..

சோத்துப் பார்சலில்

அதனைக் கண்டோம்..!

பெட்டைக்கு ஏங்கி

ரவைகள் கக்கினோம்..!

புலியாய் எழுந்து

கொள்கையொடு

பகை துரத்திய

அண்ணன் மீது வெறுப்பாய் நின்றோம்..!

அவன் புகழ் அழிக்க

பழியைப் போட்டு

கொலைக்கும் அவனே

பொறுப்பு என்றோம்..!

நாமோ தப்பி

உயிர் வாழ

ஏவலிடம் சேர்ந்தோம்..!

அன்றே நாங்கள்

சுழியன்களாய் நின்றோம்..!

போற்றுதலும் தூற்றுதலும்

எங்கள் கொள்கை..!

ஈழம் என்பது

எங்களுக்குத் தொல்லை..!

கடைசியில் எல்லாம்

கைவிட்டே

காசிக்குப் போனோம்..

கனடாவுக்கும் போனோம்..!

கற்றவர் என்றோம்

இராணவன் பின்

விமானம் ஏகி

போராடப் போன

தமிழர் பரம்பரை என்றோம்...!

கீத்துறோவில்

கியூவில் நின்று

அசைலம் அடிப்பதே

எங்கள் இலட்சியமாக்கினோம்..!

களத்தில்

நின்றவனை

தூற்றியும்

கொன்றும்

இருப்பைக் காத்தோம்..!

சுற்றமும் இல்ல

சுகமும் இல்ல

சொந்தமும் இல்ல

பந்தமும் இல்ல

ஈழமும் இல்ல

மக்களும் இல்ல..!

சேனை கொண்டு போன நாங்கள்

சிங்களத் தேசத்தில்

அநாதையாய் தலைவன் கிடக்க

புலிக் காய்ச்சலொடு

மாற்றுக் கருத்தென்று

முழக்கித் தள்ளினோம்..!

உலகெங்கும்

நமக்கு நாமே

வெட்டிப் புகழ் பாடி..

புட்டியும் குட்டியுமாய்

எங்கள்

ஏழ் பிறவிப் பயன் அடைந்தோம்..!

கற்றோர் என்ற திமிர் தவிர

சரக்கே எதுவும் இன்றி

குட்டித் தீவு பிடித்து

சுதந்திரம் காணப் போனோம்..!

மோதிரக் கைகள் குட்ட

சிறைகள் எங்கள் வீடாக

எல்லாம் முடிய

மகே அம்மே என்றே

ஜோசப் முகாம் சேர்ந்தோம்..!

வயிற்றுப் பிழைப்புக்காய்

சொந்தத் தலை அறுக்கும்

வேள்விகள் செய்தோம்..

சகோதரப் படுகொலை என்று

நீலிகள் வடித்தோம்..!

வாக்கு வேட்டைக்கு

வெள்ளை வேட்டி

மக்கள் வேட்டைக்கு

பித்தளை வேட்டு...!

இதுவே எங்கள்

புரட்சிகர மக்கள் ஜனநாயகம்...!

அம்மா தாயே

இன்னும் எத்தனை பிறவி வரினும்

வேண்டும்

இந்தச் சுகமே...!

ஏங்கிக் கிடக்கிறோம்

ஆழ் கடல்கள்

கடந்தும்...!

நாங்களே...

சந்தர்ப்பவாதப்

பேய்கள்..!

முள்ளிவாய்க்கால்

சிங்களப்

பேயாட்டத்திலும்

எங்கள் பங்கு

உண்டு..!

Edited by nedukkalapoovan

நல்ல கவிதைப்போட்டி தான்... :D ஆளுக்காள் எழுதுங்கோ... நான் பார்வையாளரா இருந்து ரசிக்கிறன்... :D:icon_idea:

அவர்களது கவிதை சண்டையை ரசிக்கிறேன்... மற்றபடி எம்மக்களின் துன்பத்தையல்ல....

- என் கருத்தை கள உறவுகள் வேறு விதத்தில் புரிந்து கொள்வதால் இங்கு சிவப்பு நிறத்தால் எழுதப்பட்டது சேர்க்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் அடங்கிய பின்

உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து

உழுதப்பட்ட உடலங்களின்

பெருமூச்சு

பெரும் காற்றாய் வீசுமாம்

தம் ஆத்துமா இளைப்பாற

ஒரு சிறு விளக்குத்தானும்

இல்லையென அழுது அரற்றுமாம்!

மரணத்தின் பின்னிரவில் கூட,

மாவீரர்களின் மரணித்த ஆவிகள்,

பூட்சுக்களின் ஓசை அடங்கியபின்,

பக்கம் பார்த்து வரவேண்டிய நிலை!

வரலாறு எமக்களித்த தீர்வில்,

பெருமூச்சுக்கள் மட்டுமே எச்சமாய்......

விரைவில் எமது பொழுதும் விடியும்!

விடிகையில் நிழலியின் கவியும் உயிர்க்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைப்போட்டி தான்... :D ஆளுக்காள் எழுதுங்கோ... நான் பார்வையாளரா இருந்து ரசிக்கிறன்... :D:icon_idea:

இது மரணித்த மவீரர்களுக்கும் மக்களுக்கும் எழுதப்பட்ட கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

ஆனால் அதே சுடலை குருவி, போராடப் போகாமல் பயந்து பதுங்கி வெளிநாட்டுக்கு புலமைப் பரிசில் வந்து குடியேறியபின் வெத்து வேடம் காட்டுபவர்கள் எப்படி தம்மையும் தமிழ் தேசியவாதிகளாகக் காட்டி பிழைப்பு நடத்துவர் என்று கொஞ்சம் சொன்னது,... அது இன்னொரு பதிவில். அது வரை பொறுக்கவும் :unsure::(:o

புலமைப்பரிசில் வன்னிய இருந்த எல்லாருக்கும் கிடைச்சிருந்தா எப்பிடியிருந்திருக்கும். நீண்டநாளின் பின்னர் நிழலியின் கவிதை யதார்த்தத்தை கண்ணீரோடு தந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி கவிதைக்கு.

நெடுக்கு மற்றும்

அர்யூன் தங்கள் கவிதையும் அசத்தல்( கருத்தில் முரண்பாடு இருந்தாலும்)

  • கருத்துக்கள உறவுகள்

வன்னில இருந்த ஆக்களுக்கு கனடாவில வேர்க் பெமிட்டும்.. யேர்மனியில வெளிநாட்டில ஸ்பென்சர் செய்ய மாப்பிள்ளையும் கிடைச்சிருந்து.. எல்லாரும் அசைலம் அடிக்கிற அளவுக்கு வெளிநாட்டுக்கு வர காசு பணமும் இருந்திருந்தா.. எப்படி இருந்திருக்கும்..! முள்ளிவாய்க்கால் என்ற அவலமே நேர்ந்திருக்காது..!

வந்திட்டாங்கைய்யா.. தங்களின் சொந்த நிலைகளை அறியாமல்.. மற்றவனின் உண்மை நிலையும் விளங்காமல்.. யதார்த்தம் என்று பொய் பேசுற ஆக்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் கேட்டுக் கொண்டு

இருக்கும் போதே நானுறங்கிப்

போனது தெரியாமல்

தொடர்ந்து கதை சொல்லிற்று

அயர்ச்சியிலா அல்லது இயலாமையால் வந்ததா என்று தெரியாது. ஆனால் உறக்கம் வந்தது உண்மை..

விழித்து இந்தப் போதை உலகைப் பார்ப்பதைவிட உறக்கத்தில் இருப்பதே நல்லதாக எனக்குப் படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அயர்ச்சியிலா அல்லது இயலாமையால் வந்ததா

என்று தெரியாது. ஆனால் உறக்கம் வந்தது உண்மை..

விழித்து இந்தப் போதை உலகைப் பார்ப்பதைவிட உறக்கத்தில் இருப்பதே நல்லதாக எனக்குப் படுகின்றது.

நிழலியின் பார்வைப்படி

அக்கறையின்மை போல் தெரிகிறது

அது தான் பலர் இங்கு செய்வது.

உங்கள் அடுத்த கருத்து

எல்லோராலும் முடியாது

ஏதோ ஒன்று எம்மை தூங்கவிடாது.

மிகவும் கனதியான உணர்வுபூர்வமான கவிதை நிழலி.

இது மரணித்த மவீரர்களுக்கும் மக்களுக்கும் எழுதப்பட்ட கவிதை

அது எனக்கும் தெரியும் அண்ணா...

நான் கூறியதன் அர்த்தம் நெடுக்ஸ் அண்ணாவின், அர்ஜுன் அண்ணாவின் கவிதை சண்டையை ரசிக்கிறன் என்று...

கவிதைப்போட்டி ஒன்று வருவதால் அவர்களுக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்.., அத்துடன் இச்சண்டையில் எமது மக்கள் படும் துன்பங்களை அதிகளவில் கவிதையில் கொண்டுவருவார்கள்... அந்த விதத்தில் இவர்களது கவிதை சண்டை நல்லதே என்று நான் நினைக்கிறேன்....

இப்படி ஒரு போட்டி வந்ததால் தான் எனக்கு அர்ஜுன் அண்ணா இப்படி கவிதை எழுதுவார் என்று தெரிந்தது... அர்ஜுன் அண்ணாவுக்கு பதில் கொடுப்பதற்கு நெடுக்ஸ் அண்ணா இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி அடுத்த கவிதை எழுதினார்... எனவே சரியோ பிழையோ நான் இப்போட்டியை வரவேற்கிறன்... மற்றபடி எம்மக்களின் துன்பத்தை கைதட்டி ரசிக்கவில்லை... புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்...

Edited by காதல்

  • தொடங்கியவர்

கருத்துக்களை பகிர்ந்த, விருப்புகளை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த மூன்றாண்டுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்னும் பின்னுக்கு போய்க்கொண்டு இருக்கும் எம் சமூகத்தின் அவல வாழ்வும், அரசியல் தேங்கு நிலையும் எப்போதாவது மாறுமா என்ற சந்தேகத்துடனான கேள்வி தான் அடிக்கடி வருகின்றது. எல்லா அவலங்களுக்கும் பின்னால் தமிழ் கைகளும் இருக்கு என்பதே எவ்வளவு கேவலமான நிலை

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை விடுதலை என்று பாடியபடியே

வீரத்தை தாயின் சேலைக்குள் புதைத்து விட்டு

போராட்டத்தை விட்டு ஓடிவந்து

பொடிநடையாகவும் கொழும்புவந்து

புலம்பெயர்ந்து ஓடி வந்து

புலன் பெயர்ந்து திரிந்துகொண்டு

இருந்தும் கண்களை விற்றுவிட்டு

இனத்தின் கண்ணீரை துடைக்காமல்

கல்லாய்க் கிடக்கும்-என்

பொல்லாத மனத்தின் கதையை

இடையில் கேட்டுக் கொண்டு

இருக்கும் போதே நானுறங்கிப்

போனது தெரியாமல்-குருவி

தொடர்ந்து கதை சொல்லிற்று............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.