Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை; த.தே.கூ.வும் தமிழீழம் கேட்காது: சுமந்திரன்

Featured Replies

'தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 'அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு' என்ற கருப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர்.

நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். உங்களின் கைதட்டல்களுக்காக பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது.

வட - கிழக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியமாகத் தேவையான ஒன்று. சர்வதேசத்திற்கு எமது சுயாட்சியைப் பற்றிய நியாயப்பாடுகள் தெளிவாக தெரியும். சர்வதேச தேசிய இனத்தினுடைய நிலப்பரப்பில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசு முயல்கிறது. இது தடுக்கப்பட வேண்டியதொன்று.

ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. நாடாளுமன்ற தெரிவிக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் வெற்றுத்தாளுடன் நாங்கள் செல்ல முடியாது. நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, எமது மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக்கான அமெரிக்காவினால் முடியும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தலமையுரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர,

"தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய பிரச்சனைக்கான தீர்வை கேட்டு நிற்கின்றோம். எமது பிரச்சனைக்கான தீர்வை எட்டுபதற்காக நாங்கள் ஆயுத ரீதியில் போராடினோம். அது உலகத்தின் சூழ்ச்சிகளினால் அழிக்கப்பட்டுள்ளது

உலகத்தின் ஓட்டத்தில் ஜனநாயக ரீதியாக எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளளோம். இளைய சமூதாயத்தை அரசியல் மயப்படுத்தி எமது உரிமைக்கான வென்றெடுக்க முயன்று வருக்கின்றோம்

வடக்கு மற்றும் கிழக்கு என்பது எமது தாயக பூர்வீகபூமி. அந்த பூமியில் எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுய நிர்ணய உரிமையுடன் கூடியதான தீர்வை நாங்கள் எதிர்பார்கின்றோம்

முள்ளிவாய்களில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர முடியாத நிலையில் இன்று இருக்கின்றோம். எமது உணர்வுகளுக்கு இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. என்றாவது ஒரு நாள் எமக்கான தீர்வு கிடைக்கும். அது சர்வதேசத்தின் கைகளில் தான் தங்கியிருக்கிறது" என்றார்

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/40940-2012-05-13-10-13-18.html

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமர்.....கொழும்பில் இருந்து விடுமுறைக்கு போயிருக்கிறார் போல.....ஐயாவை நல்லா கவனிச்சு அனுப்புங்கோ....கையிலை சிங்க கொடியும் கொடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை; த.தே.கூ.வும் தமிழீழம் கேட்காது: சுமந்திரன்

அப்ப தமிழீழ மக்கள் "தெலுங்கு ஈழம்" கேட்கிறார்கள் .. இந்த மாதிரி டுப்பாகூருகளை அடித்து வெளிய கிளப்பினால்தான் அங்கிட்டு உள்ள தமிழ்மக்கள் உருப்பட முடியும்.. ராஜிய சபா உறுப்பினர்(அங்கிட்டு ஏதோ தெரிவு உறுப்பினர் என சொல்கிறார்கள்)உண்மையில் மக்களை சந்தித்து வாக்குகேட்கதவன் எல்லாம் இப்படித்தான் உளறிட்டு திரிவான்.. அவங்க மனநிலை எல்லாம் இவுங்களுக்கு தெரியாது. அவன் வாங்குன காசுக்கு மேல கூவுறான்.. இன்னும் கொஞ்ச நாள் போனால் தமிழர்களுக்கு எதுவுமே தேவை கிடையாது.அனைவரும் சுபிட்சம் என்று சொல்லிபோடுவான்..

டிஸ்கி;

இன்னும் கொஞ்ச நாளில் ஐக்கிய தேசிய கட்சியிலோ அல்லது சுதந்திர கட்சியிலோ ஜிலு ஜிலு என்று கூத்தமைப்பை ஆட போகிறார்கள்.. (கேட்டால் உரிமை பெற்றுதருவார்கள் என பஞ்ச் டயலாக்ஸ் வேற வரும்)அவன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டான் என தெரிந்தும் காக்கா வாக உக்கார்ந்திருப்பதிற்கு கூலி வேற எவனோ தரான் .. கோட்டு சூட்டு போட்டவனெல்லா பெரிய மனுசன் என்றால் ஜவுளிகடை பொம்மை கூடதான் போட்டுட்டு நிற்குத்து..நல்லா உள்ள விட்டு முட்டிக்கு முட்டி தட்டி லாடம் கட்டினால் உண்மையெல்லாம் வெளியில் வரும்.

தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. கூட்டணிதான் சுயநல அரசியலிற்காக 'தமிழீழம்' கேட்டு, இளைஞர்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றி போராட அனுப்பியது. 71 இல் அமிர்தலிங்கம் தோற்றதற்காக 'வட்டுக் கோட்டை தீர்மானம்' கொணர்ந்தது கூட்டணிதான். அதில் அங்கம் வகித்தவர் இரா சம்பந்தன். ஏதோ சர்வதேச அரசியலையே தாங்கள்தான் நிர்ணயிப்பது மாதிரி அறிக்கை விடுகிறார்கள். (கூட்டணி உறுப்பினர்களின் பிள்ளைகள் எப்போது வெளிநாட்டிற்குப் போனார்கள்?)

இராமநாதன், ஜி ஜி பொன்னர், அமீர் சுயநல அரசியல் ஒரு இனத்தையே காவு வாங்கியுள்ளது. மீண்டும் அதைச் செய்ய வேண்டாம்.

சாத்திரி வேறு ஒரு திரியில் எழுதியது மாதிரி, சிங்கக் கொடியை ஆட்டியதிற்குப் பதிலாக சம்பந்தர் வேட்டியைக் கழட்டி ஆட்டியிருக்கலாம்.

(முடிந்திருந்தால் ரணிலின் ரவுசரைக் கழட்டி) ஒட்டு மொத்த ஈழத் தமிழனே கோவணத்துடன் நிற்பது உலகிற்குத் தெரிந்திரிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

<p>ஐயா சம்பந்தர் அவர்களின் அரசியல்வாரிசு சுமந்திரன்

அவர்கள் ஈழவிடுதலையைப் பற்றிக் கூறிய கருத்து

அவரின் சொந்தக் கருத்தாக இருக்கலாம் :rolleyes:

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடைநடுங்கிகளை அரசியலுக்குள் விட்டது தமிழர் குற்றமே....! உயிருக்கு பயந்த, சுயநலம் கொண்டவர்களின் செய்திகளை பிரபல்யப்படுத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர்.

மக்களுக்கு உங்கட உள்நோக்கங்கள் தெரிந்திருக்கவில்லை. களத்தில் விடுதலைப்புலிகள் அற்ற ஒரு நிலையில் மக்கள் போரின் பாதிப்பில் இருந்து மீள தவித்துக் கொண்டிருந்த வேளையில்.. அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு விடுதலைப்புலிகள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடுவது என்பது. ஆனால் அப்போதும் மக்கள் எச்சரிக்கையாகவே இருந்துள்ளனர். 2004 தேர்தலில் 22 எம் பி களை உள்வாங்கிய கூட்டமைப்பு.. கடைசித் தேர்தலில் 14-16 இற்கு சுருங்கிப் போனதை சுமந்திரன் மறந்து பேசுகிறார். எனி அதுவும் சுருங்கி 0 மா வரவும் எதிரிகளும் துரோகிகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகி.. தமிழ் மக்களின் உரிமைக் குரல்கள் நிரந்தரமாக இலங்கைத் தீவில் அடக்கப்பட சுமந்திரனும் சம்பந்தனும் சரியாகவே உழைக்கின்றனர் என்பதற்கு இந்த பேச்சு சரியான சான்றாகும். சர்வதேசம் அறியும்.. தமிழ் மக்களின் மனநிலை என்ன என்று.

ஜெனிவா பிரகடனம் என்பது முள்ளிவாய்க்காலில் மாண்ட மக்களும் புலம்பெயர் மக்களும் போட்ட மனிதாபிமானப் பிச்சை. அதில் சுமந்திரன் குளிர் காய முற்படக் கூடாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

களைகள் இருப்பது ஆரோக்கியம் இல்லை!

களை நாசினி தேவைப்படுகிறது!!!

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 'அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு' என்ற கருப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். உங்களின் கைதட்டல்களுக்காக பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது.

வட - கிழக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியமாகத் தேவையான ஒன்று. சர்வதேசத்திற்கு எமது சுயாட்சியைப் பற்றிய நியாயப்பாடுகள் தெளிவாக தெரியும். சர்வதேச தேசிய இனத்தினுடைய நிலப்பரப்பில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசு முயல்கிறது. இது தடுக்கப்பட வேண்டியதொன்று.

ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. நாடாளுமன்ற தெரிவிக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் வெற்றுத்தாளுடன் நாங்கள் செல்ல முடியாது. நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

அவர் பல உண்மைகளையும் தாயக இன்றையநிலையில் கடக்கவேண்டியவைகளையும் சரியாகவே சொல்லியுள்ளார் போலுள்ளது.

பத்திரிகையாளர்தான் தலைப்புக்காக திசை திருப்பியுள்ளார்.

தலைப்பு இப்படி வந்திருக்கணும்

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

இதுதான் உண்மையில் தலைப்பாக இருந்திருக்கவேண்டும் விசுகு நீங்கள் கூறுவது 100 வீதம் சரி :)

அவர் பல உண்மைகளையும் தாயக இன்றையநிலையில் கடக்கவேண்டியவைகளையும் சரியாகவே சொல்லியுள்ளார் போலுள்ளது.

பத்திரிகையாளர்தான் தலைப்புக்காக திசை திருப்பியுள்ளார்.

தலைப்பு இப்படி வந்திருக்கணும்

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

உண்மைதான் விசுக்கண்ணா. நம்மில் பலர் (நான் உட்பட) தலைப்பைப் பார்த்தவுடன் கருத்து இடுவது ஆரோக்கியமானதல்ல.

இதைத்தான் நுனிப்புல்லு மேய்தல் என்பார்கள். :)

நேரப்பிரச்சனை காரணமாக இருக்கலாம். :) :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா... சரி இப்படி அமிர்தலிங்கம் போல.. அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் தீர்வு கிடைச்சிடும் என்று நீங்கள் நம்புறீங்க..???!

சர்வதேசம்.. மனிதாபிமானப் பிரச்சனை.. போர்க்குற்றம் சாராது.. கூட்டமைப்பின் ஐக்கிய இலங்கை.. நிலைப்பாட்டுக்கு மதிப்பளிச்சு தீர்வு வாங்கித் தரும் என்று நம்புறீங்க..???!

இதெல்லாம் செல்வநாயகம் ஐயா செய்து பார்த்து தோற்ற விடயங்களாக இருந்தும்.. எதுக்கு.. இவர்களும்.. தூக்கிக் கொண்டு அலையினம்..!

தமிழ் மக்கள் சுதந்திர தமிழீழத்திற்கு வாக்களித்த வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை புலம்பெயர் மக்கள் முன்னிறுத்த.. கூட்டமைப்பு யாரும் தமிழீழமே கேட்கவில்லை என்று சொன்னால்.. எப்படி புலம்பெயர் மக்களின் குரலுக்கு எதிர்காலத்தில் சர்வதேச ஆதரவு கிடைக்கும்..???! இன்று புலம்பெயர் மக்களின் நகர்வுகளால் தான்.. சர்வதேசம்.. தனக்கு இலாபம் தரக்கூடிய மனித உரிமைகள் சார்ந்து சிறீலங்காவிற்கு.. நெருக்கடி கொடுக்கின்றனவே தவிர.. கூட்டமைப்பின் இந்த கேலிக்கூத்தான நிலைப்பாட்டை மதித்து அல்ல.

இப்படித்தான் கொஞ்சக் காலம் முன் சொன்னார்கள்.. பாருங்கள்.. சம்பந்தனின்.. சாணக்கியம் இதோ வருகுது என்று. அங்க பார்த்தால் இருந்த 22 எம்பிகளில் 6 தொலைச்சுப் போட்டு நிற்கிறார் அவர். ஈபிடிபி காரங்களுக்கு தாரை வார்த்திட்டு நிற்கிறார். இவர் இப்ப தமிழீழம் வேணாம் என்று சொல்லி புலம்பெயர் மக்கள் சர்வதேச சமூகத்திடம் கத்திக் கத்திக் கேட்டதை நிராகரித்து.. புலம்பெயர் மக்களின் குரலுக்கு பெறுமதி இல்லாமல் செய்கிறார். இதன் மூலம் நன்மை அடையப் போவது.. சம்பந்தனும்.. சுமந்திரனும்.. கொடிய சிங்கள ஆட்சியாளர்களுமே அன்றி.. வேறு யாருமில்ல.

இதில நுனிப் புல் மேய்தல் என்று கருதிறவங்க.. ஆளப் போய் ஆராய்ந்து சொல்லுங்கோ.. பார்ப்பம்.. கூட்டமைப்பின் இந்த கூத்தறிக்கைகள் தமிழ் மக்களுக்கு என்னத்தை வாங்கித் தர எந்த வகையில சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என்று..????! :(:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்களின் அடிப்படைக் கோரிக்கையான தமிழீழத்திற்கு வலுச் சேர்க்கும்

வகையில் ஆயுதப் போராட்டத்துடன் சமாந்தரமான வழியில் அரசியற்போராட்டத்தினையும் முன்னெடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு.

ஆனால் இன்று கூட்டமைப்பினர் தமிழீழம் நாம் கேட்கவில்லை

மக்களும் கேட்கவில்லை என்பது அந்த மக்களையும் மக்களுக்காக ஈழவிடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களைச் செய்த மாவீரர்களையும் அவமதிக்கும் செயல்.

தமிழீழக்  கோட்பாட்டைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் பற்றி கதைக்க முற்பட்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது அரசியல் இராஐதந்திரம் எனக் கனவு கண்ட காலங்கள் அறுபதுகளுடன் முடிந்துவிட்டன.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக; கூட்டமைப்பின் தலைவர்கள் என்ன செய்தாலும் அரசியல் தீர்க்க தரிசனத்தோடுதான் அப்படிச்சொல்கிறார்கள் என்று தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதால்தான் அவர்கள் தமிழர்கள் தலையில் தொடர்ந்து மிளகாய் அரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் வாயைப் பொத்திக் கொண்டிருந்தாலே தமிழர்களுக்கு நல்ல போல இருக்கிறது.ஏனெனில் அவர்கள் வாயைத் திறந்தால் தமிழரின் உரிமைப் போராட்த்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய எதனையும் பேசாது தமிழர்களின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யிற மாதிரி உளறகிறார்கள்.சரி பத்திரிகைகள்தான் தங்களுக்கு வசதியாகத் தலைப்புப்; போடுகிறார்கள் என்று சொல்பவர்கள்.சிங்கக் கொடியைத் தாக்கி ஆட்டிய காணொளியும் ஊடகங்களால் திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்று சொல்வார்களா?பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் வார்தைகளைக் கவனமாகப் பேச வேண்டும். அப்படிப் பேசத்தெரியாதவர்கள் அந்தப்பதவியில் இருக்கக் கூடாது.இப்படிப் பட்ட தமிழ்த் தலைமைகளை வைத்துக் கொண்டு தமிழர்களால் எதுவும் புடுங்க முடியாது.இதற்குக் கருத்தெழுதிற நேரம் சனல் 4 இற்கு வாக்குப் போட்டிருக்கலாம் நான் வாக்குப் போடப் போகிறேன் நீங்களும் வாங்கோ.

ஞரழவந

ஆரடவஞைரழவந

நுனவை

டீடழப வுhளை

Edited by புலவர்

புலம்பெயர்ந்துள்ள நாம் தமிழ் ஈழம் கேட்பது என்பது எங்கு எப்படி என விளங்கவில்லை. தாயக மக்களே தமிழ் ஈழம் கேட்க உரித்துடையவர்கள். புரியும் என நம்புகிறேன். தாயக மக்களின் ஒரே ஆயுதம் அவர்களின் வோட்டுரிமை. அதை அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள்.

நமக்குள்ள கடமை போர்க்குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதே.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்துள்ள நாம் தமிழ் ஈழம் கேட்பது என்பது எங்கு எப்படி என விளங்கவில்லை. தாயக மக்களே தமிழ் ஈழம் கேட்க உரித்துடையவர்கள்.

நீங்கள் நினைக்கின்றதைப் போல அன்று ஜூதர்களும் நினைத்திருந்தால்இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக் காணமுடியாது.

எத்தனையோ முறை இதை முயற்சித்தும் ஒரு பலனும் இல்லை வீணே காலங்கள் ஓடினதும் இழப்புகளும் தான் மிச்சம்.

எப்படியோ எம்மக்கள் அங்கே நிம்மதியா வாழ இலங்கைக்குள் தீர்வைக் காணமுடியுமாக இருந்தால் அதை செய்யுங்கோ.

எதுக்கெடுத்தாலும் மைக்கை பிடிச்சுக்கொண்டு சவுண்டு விடவேண்டாம்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் புலம்பெயர் மக்கள் கூட்டமைப்புக்குத்தான் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இருந்தாலும் இதன் கருத்து அரசு தான் விரும்பிய தீர்வை தர முடியும் என்பதல்ல.

நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். உங்களின் கைதட்டல்களுக்காக பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது.

அதுதான் நமக்கு தேவை. இலங்கை, இந்தியா தரும் தீர்வல்ல.

வட - கிழக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியமாகத் தேவையான ஒன்று. சர்வதேசத்திற்கு எமது சுயாட்சியைப் பற்றிய நியாயப்பாடுகள் தெளிவாக தெரியும். சர்வதேச தேசிய இனத்தினுடைய நிலப்பரப்பில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசு முயல்கிறது. இது தடுக்கப்பட வேண்டியதொன்று
அரசு வடக்கு கிழக்கை முன்னேற்றுவதாக கூறி இதை செய்கிறது. இந்தியா அதற்கு பணம் கொடுக்கிறது. இந்தியாவின் பணத்திலேயேதான் வீடுகட்டி தமிழர் அல்லாதர் வடக்கு கிழக்கில் குடி அமர்த்தவும்படுகிறார்கள்.

ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. நாடாளுமன்ற தெரிவிக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் வெற்றுத்தாளுடன் நாங்கள் செல்ல முடியாது. நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா... சரி இப்படி அமிர்தலிங்கம் போல.. அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் தீர்வு கிடைச்சிடும் என்று நீங்கள் நம்புறீங்க..???!

சர்வதேசம்.. மனிதாபிமானப் பிரச்சனை.. போர்க்குற்றம் சாராது.. கூட்டமைப்பின் ஐக்கிய இலங்கை.. நிலைப்பாட்டுக்கு மதிப்பளிச்சு தீர்வு வாங்கித் தரும் என்று நம்புறீங்க..???!

இதெல்லாம் செல்வநாயகம் ஐயா செய்து பார்த்து தோற்ற விடயங்களாக இருந்தும்.. எதுக்கு.. இவர்களும்.. தூக்கிக் கொண்டு அலையினம்..!

தமிழ் மக்கள் சுதந்திர தமிழீழத்திற்கு வாக்களித்த வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை புலம்பெயர் மக்கள் முன்னிறுத்த.. கூட்டமைப்பு யாரும் தமிழீழமே கேட்கவில்லை என்று சொன்னால்.. எப்படி புலம்பெயர் மக்களின் குரலுக்கு எதிர்காலத்தில் சர்வதேச ஆதரவு கிடைக்கும்..???! இன்று புலம்பெயர் மக்களின் நகர்வுகளால் தான்.. சர்வதேசம்.. தனக்கு இலாபம் தரக்கூடிய மனித உரிமைகள் சார்ந்து சிறீலங்காவிற்கு.. நெருக்கடி கொடுக்கின்றனவே தவிர.. கூட்டமைப்பின் இந்த கேலிக்கூத்தான நிலைப்பாட்டை மதித்து அல்ல.

இப்படித்தான் கொஞ்சக் காலம் முன் சொன்னார்கள்.. பாருங்கள்.. சம்பந்தனின்.. சாணக்கியம் இதோ வருகுது என்று. அங்க பார்த்தால் இருந்த 22 எம்பிகளில் 6 தொலைச்சுப் போட்டு நிற்கிறார் அவர். ஈபிடிபி காரங்களுக்கு தாரை வார்த்திட்டு நிற்கிறார். இவர் இப்ப தமிழீழம் வேணாம் என்று சொல்லி புலம்பெயர் மக்கள் சர்வதேச சமூகத்திடம் கத்திக் கத்திக் கேட்டதை நிராகரித்து.. புலம்பெயர் மக்களின் குரலுக்கு பெறுமதி இல்லாமல் செய்கிறார். இதன் மூலம் நன்மை அடையப் போவது.. சம்பந்தனும்.. சுமந்திரனும்.. கொடிய சிங்கள ஆட்சியாளர்களுமே அன்றி.. வேறு யாருமில்ல.

இதில நுனிப் புல் மேய்தல் என்று கருதிறவங்க.. ஆளப் போய் ஆராய்ந்து சொல்லுங்கோ.. பார்ப்பம்.. கூட்டமைப்பின் இந்த கூத்தறிக்கைகள் தமிழ் மக்களுக்கு என்னத்தை வாங்கித் தர எந்த வகையில சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என்று..????! :(:rolleyes::icon_idea:

நாட்டிலிருந்து எப்போ பயம் காரணமாக இடம் மாறினேனோ அன்றிலிருந்து களத்திலிருந்து நேரடியாக எதிரியையும் துரோகிகளையும் முகம் கொடுத்து வாழ்வோரை கேள்வி கேட்கும் உரிமையை நான் இழந்துவிட்டதை உணர்கின்றேன்.

அடுத்தது

அவரது பேச்சிலே இருந்த பல உண்மைகளை விட்டுவிட்டு ஒரே ஒரு சொல்லை பெரிதாக்கியமையையே கண்டித்தேன்.

இன்னுமொன்று நெடுக்கு

புலிகள் பலமாக இருந்தபோது ஒரு பிரதேசத்தை கட்டி ஆண்டபோது கூட பேச்சுவார்த்தைதகளில் தமிழ் ஈழத்தை முன் வைக்கமுடியவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

தற்போது போர்க்குற்றம் என்பது எமக்கு தலைவர் தந்த அடுத்த படி.

அதை வைத்துக்கொண்டு அதிஉயர் தீர்வை நாம் முதலில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதைத்தான் சர்வதேசமும் பரிந்துரைக்கிறது. அதன் பெறுபேறுகள் பூச்சியம் என்பதை உலகம் உணரும்போது அடுத்தநிலைக்கு சர்வதேசத்துடன் சேர்ந்து நாமும் செல்லலாம். அதையே அவரும் அங்கு குறிப்பிட்டிருந்தார் என எண்ணுகின்றேன்.

நன்றி.

நல்ல தெளிவான கருத்துக்களுக்கு நன்றி விசுக்கு அண்ணா.

இஸ்ரேல் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல் மக்கள் கூட்டம் கூட்டமாக துரதியட்டிக்கப்பட்டர்கள். நாசி இராணுவத்தால் ஆறு மில்லியனுக்கு மேல் கொல்லப்பட்டர்கள். இதில் அதிகம் பேர் குழந்தைகளும் பெண்களும். மேலும் தமக்காக ஒரு படையணி அமைத்து நேச நாடுகளுடன் இணைத்து கிட்லரின் நாசி படைகளுடன் போரிட்டார்கள். இதனால் அவர்களின் தனிநாடு கோரிக்கை வல்லருசுகளால் அங்கீகரிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அவர்களுடன் எம்மை ஒப்பிடுவது என்பது பொருத்தமற்ற ஒன்று.

நன்றி.

அவர் பல உண்மைகளையும் தாயக இன்றையநிலையில் கடக்கவேண்டியவைகளையும் சரியாகவே சொல்லியுள்ளார் போலுள்ளது.

பத்திரிகையாளர்தான் தலைப்புக்காக திசை திருப்பியுள்ளார்.

தலைப்பு இப்படி வந்திருக்கணும்

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

நீங்கள் சொல்வது தலைப்பைப் பொறுத்த வரைதான் உண்மை!

பச்சோந்திகள் தம்மை அடிக்கடி மாற்றிக்கொள்ளும்! நீண்டகாலம் இந்தாளை அறிந்திருந்தால் மட்டுமே சுமந்திரனைப் பற்றி விளங்கும்!

இன்னுமாப்பா உவங்களை நம்புறீங்க...?? :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமாப்பா உவங்களை நம்புறீங்க...?? :D

நீங்கள் எங்களைக்கைவிட்டுவிட்டு இப்படி மார்கழிக்கொருக்கால் மீண்டும் ஆவணிக்கொருக்கால் வந்தால்

நாம் என்ன பண்ணும்

அவர்களை நம்பாமல்................??? :lol::D :D

நீங்கள் எங்களைக்கைவிட்டுவிட்டு இப்படி  மார்கழிக்கொருக்கால் மீண்டும்  ஆவணிக்கொருக்கால்  வந்தால்

நாம் என்ன பண்ணும்

அவர்களை  நம்பாமல்................??? :lol::D :D

உலகத்திலையே அபாயகரமானது எண்டால் என்ன தெரியுமா..?  தமிழனுக்கு நன்மை செய்ய வேணும் எண்டு நினைக்கிறதுதான்...!    மிக இலகுவானது என்ன தெரியுமா...?? தமிழன் தலையிலை மிளகாய் அரைக்கிறது..!   ஓண்டு தமிழன் வக்கிரம் பிடிச்சவனாய் இருக்கிறான் இல்லை மிகவும் மென்மையானவனாய் எல்லாத்தையும் சகிப்போடை பாக்கிறவனாய் இருக்கிறான்...  இயல்பாக யாரும் இல்லை... இதுக்கை எனக்கு தேவையா ஏதாச்சும்...? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.