Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொம்ப நல்லவங்க பிரிட்டிஷ் போலிஸ்.

Featured Replies

படிச்ச மனோ வந்து நிற்கின்றான் ,இரவு மாக்கூசுக்கு வா”

கதைத்த வேறொன்றும் நினைவில்லை படிச்ச மனோ என்ற சொல்லை தவிர. எட்டாம் வகுப்பில் இருந்து A/L வரை என்னோட படிச்சவன் இந்த படித்த மனோ. எவருக்கும் அடங்காத ஆனால் மிக ஆழுமையுள்ள ஒரு பிறப்பு.முதலாம் பிள்ளை என்பது O/L வரை அவனுக்கான இடம்.அதை இன்று உலகம் பூராக இருக்கும் யாழ் இந்து டாக்குத்தர்களோ,எஞ்சினியர்களோ எத்தனையோ பகீரத பிராயத்தனம் பண்ணியும் அந்த அவனுக்கான இடத்தை மாற்ற முடியவில்லை. ஒரு போல் பொயின்ற் பென், ஒரு கொப்பி, வாராத தலைமயிர், காக்கிகாற்சட்டை, பட்டன் பூட்டத சேட் இதுதான் அவனின் அடையாளம். இரண்டு மனோக்கள் எங்கள் செற்றில் இருந்ததால் நல்லா படிக்கும் இவன் படித்த மனோ .மற்றது மொக்கு மனோ .படிப்பிற்கும் இவனுக்கும் வெகுதூரம்,வீட்டில் செல்லப்பிள்ளை (பாடகி மியாவின் அம்மாவின் தம்பி இவன்.)

ஆசிரியர்களை அவன் மதிப்பதில்லை ஆனால் கணக்கோ அல்லது வேறு எந்த பாடமோ ஆசிரியர் கேட்க முதல் பதிலை வைத்திருப்பான் என்பதால் ஆசிரியர்களும் அவனுடன் சோலிக்கு போவதில்லை. ஆசிரியர்களே அப்படி என்றால் மாணவ தலைவர்கள் பற்றி சொல்ல தேவையில்லை.ஒருநாள் பிரேயர்கோலில் இருந்து வகுப்பு நோக்கி வரும்போது சேட் பட்டனை பூட்ட சொல்லி ஒரு மாணவர் தலைவர் சொல்ல, இவன் கேட்காத மாதிரி போக, அவர் மாணவர் செல்லும் லைனில் இருந்து இவனை வெளியில் இழுத்துவிட்டார்.என்ன கதைத்தார்கள் என எமக்கு தெரியாது. ஆனால் அடுத்தநாள் பாடசாலை வந்து சொன்னான் “நேற்று அவர் பாடசாலை முடிந்துபோகும் சயிக்கிளில் போகும்போது தான் இந்துமகளிர் தாண்ட இருக்கும் தண்டவாளத்தடியில் நின்று ஒரே கல்லுமழையாம்,அண்ணை திரும்பி பார்க்காமல் பறந்துவிட்டாராம்”.

இதே மனோ பாடசாலை மதிய உணவு இடைவேளையில் மைதானம் நோக்கி விளையாட போனால் கிரிக்கெட் என்றாலும் உதைப்பந்து என்றாலும் அவன்தான் கீரோ.வேக பந்து வீச்சு,நல்ல துடுப்பெடுத்தாட்டம்,யாரும் சீனியேர்ஸ் கொழுவினால் விக்கெட் தான் கதைக்கும்.இவனுக்கு கீழ் விளையாடிய பலர் பாடசாலை டீமில் விளையாட இவன் அதற்கும் போனதில்லை.

இதுதான் படித்த மனோ. ஆனால் இதே குணத்தை இவர் ஒரு போல் பொயின்ற் பேனாவுடன் போய் O/L EXAM இல் காட்ட அவருக்கு 1-D,7-C மட்டும்தான் வந்தது. ஏழு எட்டு மாணவர்கள் இவரைவிட நல்ல பெறுபேறு பெற்றுவிட்டார்கள். அதே போல்பொயின்ற் பல்லவியை மீண்டும் A/L இல் காட்ட அதுவும் தாவரவியல்,விலங்கியல் பாடங்கள் எடுத்த படி காட்ட .3-C ,1-S தான் வந்தது. பின் அவனை நான் சந்திக்கவில்லை.

நான் வெளிநாடு பறந்துவிட்டேன். மனோ குடி ,அடிபிடி என்று பல குழப்படி விட்டு பின்னர் அப்போதிக்கரியாக மலையகத்தில் வேலை செய்வதாக அறிந்ததுதான் கடைசி செய்தி. பின்னர் பிரான்ஸ் போய் நிரந்தர இருப்பிடம் கிடைத்து இன்று லண்டன் வந்திருக்கின்றார்.சந்திப்பதை நினைக்கவே மிக சந்தோசமாக இருந்தது காரணம் ஒன்று நானும் அவனும் பல வருடங்கள் ஒரே வாங்கு, அதைவிட என்மனதில் எட்டாம் வகுப்பில் இருந்து அவன் ஒரு கீரோ.

NEWCROSS இல் இருக்கும் மார்குஸ் பப் தான் எங்கள் ஊர் சந்தி. வார இறுதியில் கிரிக்கேட் விளையாடிவிட்டு இங்குதான் கூடுவோம்,மாற்குஸ் காரன் மணியடித்து துரத்தும் வரை பூல் விளையாடுயாட்டு ஒரு புறம்,மறுபுறம் பியருடன் அவரவர் வீரப்பிரதாபம். .மாக்குசில் போய் நான் இறங்கினால் ஒரு பெரும்படையே நிற்கிறது .ரவி ,ரகு ,மோகன்,சாள்ஸ்,குகன்,கே.பி,பஞ்சுகுட்டி இன்னும் பலர் சுற்றி வர இருந்து கதைகேட்க மனோ நடுவில் இருந்து ‘நடந்தது என்ன “ விஜே டி வி நிகழ்சி போல் பழதை உருட்டுகின்றான் .என்னை கண்டவன் உடன் எழும்பி வந்து “எப்படி மச்சான் இருக்கின்றாய் “என கட்டி பிடித்தான்.நானும் எல்லை மீறிய சந்தோசத்தில் அவன் முதுகை தட்டி “நம்பவே முடியாமல் இருக்கு மச்சான் “என்றேன் .

எல்லோரும் பழைய நினைவுகளை பியருடன் கலந்து மீட்டோம்.மனோ பிரான்சில் இருந்தாலும் நல்ல ஆங்கிலம் கலந்ததாய் உலகத்தை கையில் வைத்திருப்பவனாய் கதைகள் சொல்லிக்கொண்டிருந்தான்.உதைப்பந்து ,டென்னிஸ்,உலக சினிமா,தமிழ் சினிமா என்று அனத்தும் தறிகெட்டு ஓடித்திரிந்தது.அரசியல் என்றே ஒன்று தொடங்குவதும் விடுவதுமாய் விக்கி நின்றது .பலருக்கு அது கதைக்கவிருப்பமில்லை என்பதும் அங்கு இருக்கும் சந்தோஷ சூழ்நிலையை அது சிலவேளை குழப்பிவிடும் என்பதையும் புரிந்தவனாய் நானும் வாயை திறக்கவில்லை.

பப்காரன் மணியடித்து தமிழில் போட்டு வாங்கோ சொன்னான்.நானும் ரவியும் கணேசும் மனோவும் மோகனின் காரில் ஏறி CATFORD இல் இருக்கும் ரவி வீடு நோக்கி விஸ்கி அடித்து, இறைச்சியும் புட்டும் சாப்பிட்டு, மீதிக்கதை கதைத்து தூங்க செல்கின்றோம்.நேரம் காலை ஒன்று, கார் பறக்கின்றது பின்னால் இருக்கும் மூவர் கைகளிலும் கிளாஸ் கிடந்து ஓட்ட வேகத்திற்கு ஏற்ப ஆடுகின்றது.

திடீரென கார் வீதியைவிட்டு விலகி ஒரு மரத்தை நோக்கி இந்தா வருகின்றேன் என்பதுபோல் பாய்கின்றது. நான் எனது தலையை இரு கைகளால் மூடவும் .”படார்” என்றொரு சத்தத்துடன் கார் பத்தி எரியவும் சரியாக இருந்தது .மோகன் வின்சீல் கண்ணாடியில் மண்டையை மோதி முகமெங்கும் இரத்தத்துடன் வேள்வி கிடாய் மாதிரி நாக்கை தள்ளிக்கொண்டு கிடக்கின்றான். நான் கதவை திறக்கின்றேன் கதவு மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது .திரும்பினால் கணேஷ் ஆங்கிலத்தில் ஏதோ படு தூசணத்தில் கத்துகின்றான்.மனோவும் ரவியும் பாதி திறந்த பின் கதவடியில் சரிந்தபடி.

வெளியில் இருந்து யாரோ எனது கார் கதவை உதைப்பது அந்த புகைளகிற்கூடே தெரிகின்றது.

இன்னும் ஒரு முறை மட்டும் தொடரும்.

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலிஸ் நலவனோ கெட்டவனோ, அது அந்த நேரத்தில் நீங்கள் செய்கிற தொழிலில் இருக்கு...ஒருக்கா நடந்தது மலைநாட்டில்..நானும் எனது நண்பனும் மோட்டர் சைக்கில் ஓடி வந்த போது கிட்டதட்ட 2 - 3 லைட் போட்டும் எங்களுக்கு என்ன நடக்குது என்று தெரியவில்லை..கடைசில் சைரன் அடித்தப்பிரகுதான்.......முறிந்து நிற்பாட்ட..

உடனே நாங்கள் சொன்னது நாங்கள் இன்னார் இங்கே வேலைசெய்கிறோம்....உடனே பதில் வந்தது "மாத்தையா"...எங்களுக்கு தெரியும், உங்களுக்கு தெரியும் என்று ...............கூடாது என்று, "..............." ஆனால் "................" போட்டு மோட்டர் சைக்கில் ஒடக்குடியலவிர்ற்கு " .............." என்று சொல்லி, - ஜீப் இல் கொண்டு போய் விடுகிறதோ என்று கேட்டார்கள்..எங்களுத்தான் எல்லாம் இறங்கி போய்விட்டதே, நாங்கள், பதிலுக்கு மாத்தையா போட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம்...

இங்கேயும் கிட்டடியில் பிடித்தார்கள்..வட அமெரிக்காவில்...அது ஸ்பீட்னிங் க்கு...எமேர்கேன்சி கால் என்று சொன்னேன்...இப்படி போனால் இன்னும் 4 பேருக்கு கூட பார்க்க வேண்டும் என்றார்கள்..அதே சிரிப்பு ....ச்பீட்டை பார்த்து ஓடச்சொனான் சலாம் அடித்து போட்டு வந்து சேர்ந்தாயிற்று...

மொக்குமனோவும் படித்த மனோவும். எனது நண்பர்கள்தான்.மொக்கு மனோ இப்போ இல்லை.படித்த மனோ எங்கு இருக்கின்றார்.

“நேற்று அவர் பாடசாலை முடிந்துபோகும் சயிக்கிளில் போகும்போது தான் இந்துமகளிர் தாண்ட இருக்கும் தண்டவாளத்தடியில் நின்று ஒரே கல்லுமழையாம்,அண்ணை திரும்பி பார்க்காமல் பறந்துவிட்டாராம்”.

அர்ஜுன் எத்தனைமுறை சொல்வது தேவையில்லாத சோலிகளை விட்டு விட்டு இந்தப்பகுதில் கலவுங்கோ என்று . யானையின் பலம் அதற்குத் தெரியாதாம் . உங்களுக்கு நல்ல சொல்லாட்சி இருக்கு ,பேந்தேன் எழுதிறிங்கள் இல்லை ?

ரெண்டு பகுதிக்கும் பின்னேரம் பத்து நிமிட இடைவெளியில் தான் பள்ளிக்கூடம் முடியும் . காயளைப் பாக்க நாங்கள் ஓடிற ஓட்டம் இருக்கே.............. தொடர்ந்து எழுதுங்கோ சொல்லிப்போட்டன் .

  • கருத்துக்கள உறவுகள்

படிச்ச மனோ வந்து நிற்கின்றான் ,இரவு மாக்கூசுக்கு வா”

கதைத்த வேறொன்றும் நினைவில்லை படிச்ச மனோ என்ற சொல்லை தவிர. எட்டாம் வகுப்பில் இருந்து A/L வரை என்னோட படிச்சவன் இந்த படித்த மனோ. எவருக்கும் அடங்காத ஆனால் மிக ஆழுமையுள்ள ஒரு பிறப்பு.முதலாம் பிள்ளை என்பது O/L வரை அவனுக்கான இடம்.அதை இன்று உலகம் பூராக இருக்கும் யாழ் இந்து டாக்குத்தர்களோ,எஞ்சினியர்களோ எத்தனையோ பகீரத பிராயத்தனம் பண்ணியும் அந்த அவனுக்கான இடத்தை மாற்ற முடியவில்லை. ஒரு போல் பொயின்ற் பென், ஒரு கொப்பி, வாராத தலைமயிர், காக்கிகாற்சட்டை, பட்டன் பூட்டத சேட் இதுதான் அவனின் அடையாளம்.

எவருக்கும் அடங்காத, என்ற சொல் மிகைப் படுத்தப் பட்டது என... நினைக்கின்றேன்.

தனது அப்பாவை.... கண்டால், படிச்ச மனோவுக்கு கால் சட்டையில் யூரின் போய் விடும். :D:lol:

அழகான தொடரச்சியான எழுத்து நடை.

தொடருங்கள் அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்குது அண்ணா தொடருங்கள்...கேபியோட சேர்ந்தெல்லாம் தண்ணீ அடித்திருக்கிறீங்கள் :lol:

லண்டனை விட்டு எப்படி கனடாவில் வாழ முடிகிறது?

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்லது செய்தால் நல்ல போலிஸ்.

நமக்கு நல்லது செய்தால் கெட்ட போலிஸ்.

  • தொடங்கியவர்

பின்னோட்டமிட்டவர்களுக்கு நன்றிகள் .

போன சனி கணேஷ் வீட்டில் மோகனை விட மற்ற நால்வரும் சந்தித்தோம் .ரவி லண்டனில் இருந்து வந்திருந்தார்.படித்த மனோவின் நெற்றியில் இருக்கும் காயத்தை பார்த்த பின் தான் இதை எழுத தொடங்கினேன் , சிற்பி மொக்கு மனோ காலமானது தெரியும் . ஊக்கம் தரும் கோமகன் ,மணிவாசகன் ,ரதிக்கு நன்றிகள் .தமிழ் சிறி, மனோவின் தகப்பன் மிக பொல்லாதவர் எனக்கும் அவரை தெரியும் .

ரதி ,இது வேற கே.பி .

நாளை மிகுதி .

  • தொடங்கியவர்

லண்டனை விட்டு எப்படி கனடாவில் வாழ முடிகிறது?

நல்ல கேள்வி.ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதாய் தான் நினைக்கின்றேன்.

குடும்பமும் உறவினர்களும் குட்டி யாழ்ப்பாணமும் கனடா .பழைய பல நண்பர்கள் லண்டன் .

வெளிச்சமும் அகண்ட வாழ்விடமும் கொண்டது கனடா ,எப்போதும் மம்மலும் திறந்தால் சுடுதண்ணியே வராத நெருக்கமான அடுக்குமனைகள் கொண்டது லண்டன் .

வந்தாரை யாரென்று இல்லை இன்முகம் கொண்டு கூழ் காச்சவா என வரவேற்கும் கனடா ,ஆரப்பா நீ என்ற ஆயிரம் கேள்விகளுடன் அரை கோழியை ஆறு பேருக்கு சமைக்கும் லண்டன் .

இதையும் சொல்ல வேண்டும் ,உந்த நிகழ்விற்கு பின்,உப்படியான வாழ்க்கை வாழ்ந்து விட்டுத்தான் இந்தியா போனேன் தமிழனை நம்பி ?

ஆரப்பா நீ என்ற ஆயிரம் கேள்விகளுடன் அரை கோழியை ஆறு பேருக்கு சமைக்கும் லண்டன் .

கேட்கவே சந்தோசமாகக் கிடக்கு. நீங்கள் இருந்த காலத்தில் அரைக் கோழி வாங்கி ஆறு பேருக்குச் சமைக்குமளவுக்கு லண்டன்காரர் ஊதாரியாக இருந்தார்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா அடுத்த தொடர்...எழுதுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தொடருங்கள் ..ஆனா ஒரு சந்தேகம் நான் கனடா வரும்போது கூழ் கிடைக்குமா அல்லது அடி கிடைக்குமா?? :lol: :lol:

  • தொடங்கியவர்

என்னதான் நாங்கள் இனத்துவேசம் பிடித்தவங்கள் என்று வெள்ளைகளை பார்த்து கத்தினாலும் ஆபத்து என்று வரும் போது உதவுவதற்கு அவர்களை கேட்டுத்தான்.இரண்டு மைக்குகள் (HAI MAITE என்றபடி , காலை வேலைக்கு போகும் போது வாயில் சிகரெட்டுடன், கையில் கோப்பியுடன், சன் பத்திரிகை மூன்றாம் பக்க அழகியை அங்குலம் அங்குலமாக விமர்சனம் வைக்கும் வெள்ளளைகளுக்கு நாம் வைத்த பெயர்) காரின் கதவை பிரித்து நான் வெளியில் இறங்குமுன் மற்ற நால்வரையும் காரால் இழுத்து புல்வெளியில் வளர்த்திவிட்டார்கள். சைரன் ஒலி கேட்க நிமிர்ந்து பார்த்தேன் ,அம்புலன்ஸ் ஒருபுறம் ,போலிஸ் கார்கள் ஒருபுறம் எம்மை சுற்றி வளைத்துவிட்டார்கள்.

Are you guys o.k என்றபடி அம்புலன்சால் இறங்க்கிவந்தவர்கள் மோகனையும் மனோவையும் அம்புலன்ஸில் ஏற்றிவிட்டு எங்களை வைட்சப்பல் ஹோஸ் பிடலுக்கு வரச்சொல்லிவிட்டு புறப்பட,போலீஸ்காரர்கள் எம்மிடம் வந்து எமது தண்ணி போத்திலையும் உடைந்த கிளாசையும் பார்த்து நிலைமையை நன்கு விளங்கியவர்களாக , கார் ஓட்டியவர் யார் என்பதை அறிவதில் புலன் புத்தியை விட நாம் ஒருமித்து மோகனை நோக்கி கையை காட்டிவிட்டோம்.மோகனிடம் வாக்குமூலம் இப்போ வாங்க முடியாது என்று அம்புலன்ச்காரர்கள் சொல்லிவிட்டார்கள்.

இதற்குள் கணேசு இவர் ஏற்கனே மோட்டர் சைக்கிள் விபத்தில் காலை முறித்தவர், தனது காலை இழுத்து இழுத்து நடந்தபடியே போலிஸ்காரரை பார்த்து அவனவன் சாக கிடக்கின்றான் அதற்குள் இந்த நாய்களுக்கு என்ன வேணுமாம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் புறுபுறுக்க ஆரம்பித்துவிட்டான்.இவங்கள் எல்லாம் இனவாதிகள் தனக்கு கால்முறித்த வெள்ளைஇன கார்காரனை விட்டுவிட்டு தன்னை சார்ச் பண்ணிய பன்றிகள் இவர்கள் என்று, தன்ரை பழதையும் எடுத்துவிட தொடங்கிவிட்டான் .அவனை கட்டுப்படுத்துவதே பெரிய வேலையாகிவிட்டது.

உதவி செய்த வெள்ளைகளுக்கு நன்றியை சொல்லிவிட்டு ஒரு மினிகப்பை பிடித்து நாமும் கொஸ்பிடல் போய் சேர்ந்தோம்.மனோவிற்கு நெற்றியில் எட்டு இழை.மோகன் சிங்காரவேலனே படத்தில் கமல் ஒரு பாட்டு சீனுக்கு வந்த கோலத்தில் தலை முழுக்க கட்டுடன் கிடக்கின்றான். நேரம் அதிகாலை முன்றை தாண்டுகின்றது.அதே போலிஸ்காரர்கள் திரும்ப எம்மிடம் வருகின்றார்கள்.

மனோ பிரான்சால வந்தது, தண்ணியடித்தது,ரவி வீடு நோக்கி சென்றது எல்லாம் சொல்லி மோகன் குடிக்கவில்லை என்பதையும் அழுத்தமாக சொன்னோம்.தாங்கள் மோகனிடம் ஒரு வாக்குமூலம் எடுத்துவிட்டு போய்விடுவதாக சொன்னார்கள் .கொஸ்பிடல் வெறிச்சோடி கிடக்கின்றது. நாங்களும் ஆளுக்கு ஆள் மெல்ல இருந்த இடத்திலேயே கோழித்தூக்கம் போட தொடங்கிவிட்டோம்.

கணேஷ் மாத்திரம் போலீஸ்காரர்களை பார்ப்பதும் தகாத வார்த்தைகளால் முணு முணுப்பதுமாக இருந்தான், நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.ரவி மெல்ல தட்டினான் “மோகன் முழித்துவிட்டான் போலிஸ் வாக்குமூலம் எடுத்துக்கொண்டு இருக்கு” என்று.

மனோவையும் தட்டி எழுப்பிவிட்டு கணேசை தேடினால் காணவில்லை. ”சிகரெட் பத்த போயிருப்பான் “ என்று ரவி சொன்னான். தூரத்தில் ஒரு மூலையில் யாரோ இருப்பது போலிருக்க நெருங்கி போனால் கணேஷ் .

“என்ன கணேஷ் தனிய வந்து இருக்கின்றாய் “என கூப்பிட நிமிர்ந்தான்.முகமெல்லாம் வீங்கியபடி இருந்தது ஆனால் அப்பவும் ----ing ---holes” என்றுதான் அவன் வாயில் வருகுது. என்ன நடந்தது என கேட்டால்,தான் சிகரெட் பத்துவம் என வெளிக்கிட்டு வெளியில் போய் சிகரெட்டை வாயில் வைத்துதான் தெரியும் தனது இரண்டு ககைகளையும் இரண்டு பேர் வளைத்து பிடித்துகொண்டுபோய் ஒரு காரின் பின் சீட்டில் தன்னை தூக்கிஎறிந்துவிட்டு அவர்கள் இருவரும் முன்சீட்டுகளில் ஏறி, இருவரும் சராமாரியாக மாறிமாறி தனது முகத்தில் குத்த தொடங்கிவிட்டார்களாம். “Are you going to shut your mouth or not “ என்று கேட்டு கேட்டு, தான் “சொறி சொறி “ சொல்ல சொல்ல டைசன் கணக்கில் முகத்தை ஒருபதம் பார்துவிட்டார்களாம்.தமிழில வேறு கெட்ட வார்த்தையால் திட்டினான்.எங்களுக்கு சிரிப்பு வேறு வந்துவிட்டது.

“சரி எழும்பு “ என்று அவனையும் கூட்டிக்கொண்டு நாங்கள் மோகனிடம் போக அந்த இரு போலீஸ்காரர்களும் “Are you alright mait” என்ற படி எங்களை கடந்து போகின்றார்கள். நாங்கள் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தோம்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்பவர்களுக்கு இன அடையாளம் பூசாதீர்கள், அர்ஜுன்!

அவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கின்றார்கள்!

உங்கள் கதையின் எழுத்தோட்டம் மிகவும், அழகு!

தொடந்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா.. இப்பத்தான் படித்தேன்.. :D நல்ல எழுத்து நடை..

சூழ்நிலைக்கு ஏற்பட்டால், வாயை மூடிக்கொண்டு இருக்க வேணும் என்கிறதுக்கு உங்கள் நண்பர் நல்ல உதாரணம் ஆயிட்டார்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைக்கு ஏற்பட்டால், வாயை மூடிக்கொண்டு இருக்க வேணும் என்கிறதுக்கு

உங்கள் நண்பர் நல்ல உதாரணம் ஆயிட்டார்.. :lol:

என்ன இசை

இவ்வளவு நாளும் யாழில் எழுதுவதை வைத்தே அது யார் என ஊகிக்கவில்லையா?

அது நம்ம அர்ஜுன் அண்ணாவே தான்

பெயரை மாத்திப்போட்டாலும குணம் காட்டிக்கொடுத்திடும் அல்லோ..............??? :lol::D :D

  • 4 weeks later...

அர்யூனை ஆஸ்பத்திரி வரை கொண்டு சேர்த்த "மார்க்கூஸ் ஒப் கிரான்பி"

marquis.jpg

குறிப்பு: இது அர்யூனை வெறுப்பேத்துவதற்காகா பஸ்ஸை மறிச்சு இறங்கி நிண்டு எடுத்த படம். அன்றி வேறு யாரையும் இப்படம் புண்படுத்தியிருந்தால் மார்க்கூஸ் அன் கிரான்பி பப் ஓனர் சார்பாக நான் மன்னிப்புக் கேக்கிறேன்.

அப்ப நாங்கள் நன்றி வணக்கம் சொல்லுவமே!

  • தொடங்கியவர்

அர்யூனை ஆஸ்பத்திரி வரை கொண்டு சேர்த்த "மார்க்கூஸ் ஒப் கிரான்பி"

marquis.jpg

குறிப்பு: இது அர்யூனை வெறுப்பேத்துவதற்காகா பஸ்ஸை மறிச்சு இறங்கி நிண்டு எடுத்த படம். அன்றி வேறு யாரையும் இப்படம் புண்படுத்தியிருந்தால் மார்க்கூஸ் அன் கிரான்பி பப் ஓனர் சார்பாக நான் மன்னிப்புக் கேக்கிறேன்.

அப்ப நாங்கள் நன்றி வணக்கம் சொல்லுவமே!

நன்றி சனியன் பழைய பல நினைவுகளை கிளறியதற்கு.முன்னர் ஒரு கருப்புபச்சையில் பொன்னிற எழுத்துக்கள் பதித்திருந்தது போலிருக்கு .இன்று லண்டனில் எங்களுடன் இருந்து இலங்கையில் போய் குடியிருக்கும் நண்பர் கனடா வந்திருக்கின்றார் அவரை போய் சந்தித்தேன்.நேரம் இருக்கும் போது அவர் நிலைப்பாட்டையும் பதிகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.