Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வித்தியாசமான மீன் பொரியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான மீன் பொரியல்

நேற்று மனிசிக்கு சுகமில்லை, வேலைக்கும் ஆள் போகவில்லை. நான் அலுவலகத்தால வந்து பார்த்தா பூனை மாதிரி சுருண்டு படுத்திருந்தாள். எனக்கு வேற நல்ல பசி. இண்டைக்கு கிச்சன் டிபாட்மன்ட் என்ட கையில தான் எண்ட வெறியுடன் பிரிஜை கிண்டினேன். இலகுவாக அம்பிட்டது கீழே உள்ள விஷயம்.

IMAG0222.jpg

Dori மீன் fillets

உடனேயே மீன் பொரியல் செய்வது என முடிவு செய்தேன்.

தேவையான பொருட்கள்

டோரி மீன் fillets - 1kg

முட்டை - 3

தேசிக்காய் - 2

உப்பு, மிளகு, தூள், மஞ்சள் தூள், bread crumbs (இதுக்கு என்ன தான் தமிழ்) , கோதுமை மா, பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

சுடு நீரில் மீனை நன்கு கழுவவும். (மீன் fillets என்பதால் முள்ளு, தோல் ஒன்றுமே இருக்காது இலகுவாக சுத்தம் செய்யலாம்) பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு தேசிக்காய்களையும் வெட்டி சாறை பிழிந்து அதனுள் மீனை பதினைந்து நிமிடம் ஊற விடவும். முட்டையை தேவையான அளவு உப்பு மிளகு போட்டு நன்கு அடிக்கவும். மீன் நன்கு ஊறிய பின்னர் (நன்கு ஊறாவிட்டால் மீன் மணம் அடிக்கும்) தேசிப்புளியை வடித்து அகற்றிவிட்டு மீனுக்கு தேவையான அளவு மிளகாய்த் தூள், மிளகு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டவும். இதனை ஒரு பத்து நிமிடம் வரை வைக்கவும். பொரிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெயை சூடாக்கி பின்னர் மீனை கோதுமை மாவிலே பிரட்டி, முட்டை கலவையிலே தோய்த்து bread crumbs இலே நன்கு பிரட்டி கொதிக்கும் எண்ணெயிலே இட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

IMAG0219.jpg

bread crumbs பிரட்டிய நிலையில் பொரிக்க முன்பு

IMAG0220.jpg

பொரித்த பின்பு

மனிசிக்கு பிடிக்கும் என்பதால நான் இரண்டு மீன் துண்டுகளை grill பண்ணியும் பார்த்தேன்.

IMAG0211.jpg

IMAG0214.jpg

Grill பண்ணிய பின்னர்

பரிமாறும் முறை

சும்மா அப்பிடியே கடிச்சும் தின்னலாம், நான் சோறு, இறால் குழம்பு, பருப்புக் கறியுடன் கலந்து சாப்பிட்டேன்.

மீன் பொரியலைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மெழுகுதிரி கொழுத்தி வைச்சுப் படம் எடுத்தது வடிவாய் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மீன் பொரியலைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மெழுகுதிரி கொழுத்தி வைச்சுப் படம் எடுத்தது வடிவாய் உள்ளது.

அலை, அது மின்விளக்கு!

நன்றிகள்! தும்பளையான்!

Costco பக்கத்தில தான்!

செய்து பார்த்து விட்டுச் சொல்கிறேன்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலை, அது மின்விளக்கு!

நன்றிகள்! தும்பளையான்!

Costco பக்கத்தில தான்!

செய்து பார்த்து விட்டுச் சொல்கிறேன்! :D

கருத்துக்கு நன்றி அண்ணா. அது மின் விளக்கு இல்லை, மெழுகு திரி தான். வெள்ளையாக இருப்பது oil burner நீங்கள் லிட்கம் பக்கமோ? நான் அங்க இல்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி அண்ணா. அது மின் விளக்கு இல்லை, மெழுகு திரி தான். வெள்ளையாக இருப்பது oil burner நீங்கள் லிட்கம் பக்கமோ? நான் அங்க இல்லை :rolleyes:

ஓமோம்! லிட்கோம் தான்! Costco மட்டும் தான் அந்த பிராண்ட் விக்கிறது, என நினைத்தேன்!

மீன் பொரியலைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மெழுகுதிரி கொழுத்தி வைச்சுப் படம் எடுத்தது வடிவாய் உள்ளது.

அலை, மன்னிக்கவும்!

அது மெழுகுதிரி தானாம்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேற நல்ல பசி. இண்டைக்கு கிச்சன் டிபாட்மன்ட் என்ட கையில தான் எண்ட வெறியுடன் பிரிஜை கிண்டினேன். இலகுவாக அம்பிட்டது கீழே உள்ள விஷயம்.

-------

பரிமாறும் முறை

சும்மா அப்பிடியே கடிச்சும் தின்னலாம், நான் சோறு, இறால் குழம்பு, பருப்புக் கறியுடன் கலந்து சாப்பிட்டேன்.

இறால் குழம்பு, பருப்புக் கறி எல்லாம் இருக்க....

மீன் பொரியல் செய்து, நாவுக்கு ருசியாக சாப்பிட்ட தும்பளையானின் சமையல் குறிப்புக்கு நன்றி. :D

Bread crumbs - ரஸ்க் தூள். :lol:

Edited by தமிழ் சிறி

.

லிட்கத்தில இருக்கிற.... பூங்கையூர்...ம்ம்... கெதியில எங்கட ராடர்ல சிக்குப்படப் போறீங்க.. :D

தும்பளை,

வெங்காயம் போட்டுப் பொறிச்ச மீன் பொரியல் மட்டும் வேணாமப்பு. :D

அதால ஒருத்தர் பாடி பூரா ரணகளமாக்கீட்டு நிக்கிறார். :D

நன்றி தும்பளையான்.

அடுத்த முறை Costco விற்குப் போகும் போது வாங்க வேண்டும். இந்த Dori ' மீன் இங்கு கிடைக்குமோ தெரியாது.

வருத்தமாக உள்ள மனைவிக்கு மீன் கிரில் பண்ணி, candlelight dinner இற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறீர்கள். கணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். :D

சூப்பர் அண்ணா , ஆனால் நோர்மல் மீனை பொரிச்சு குழம்பு வைச்சால் இன்னும் ஒரு பிளேட் புட்டு கூட சாப்பிடலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி தும்பளையான். :)

  • கருத்துக்கள உறவுகள்

68075011_H.jpg?identifier=6e1ea8c2b90f9655373e732ea4445676

இப்படி இங்கு சுப்பர் மாக்கற்றில் கிடைக்கும் உடனேயே பொரித்து அல்லது கிறில் செய்து சாப்பிடலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ............மெழுதிரி எரிந்தால் மீன் வாடையை அகற்றுமாம்............கொடுத்து வைத்த மனைவி. கிறில் பண்ணுவது .எண்ணெய் அற்றது ஆரோக்கியமானது ......தும்பளையனுக்கு ஒரு பாராட்டு

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான மீன் பொரியல்

நேற்று மனிசிக்கு சுகமில்லை, வேலைக்கும் ஆள் போகவில்லை. நான் அலுவலகத்தால வந்து பார்த்தா பூனை மாதிரி சுருண்டு படுத்திருந்தாள். எனக்கு வேற நல்ல பசி. இண்டைக்கு கிச்சன் டிபாட்மன்ட் என்ட கையில தான் எண்ட வெறியுடன் பிரிஜை கிண்டினேன். இலகுவாக அம்பிட்டது கீழே உள்ள விஷயம்.

மினக்கெட்டு சாப்பாடு செய்ததுமில்லாமல்.......படம் எடுத்து செய்முறையையும் யாழிலை இணைச்சிருக்கிறியள்....நல்லவிசயம்snap1dl1.gif...இருந்தாலும் ஒரு செலுட்டுக்கேள்வி...நீங்கள் எங்களைமாதிரி கிழமைக்கொருக்கால் சமைக்கிறதில்லையோ?டெய்லி சமைக்க வெளிக்கிட்டால் கிச்சின் கெதியாய் பழுதாய்ப்போகும்...தண்ணிச்செலவு,கரண்ட்செலவு,காஸ்செலவு எண்டு எக்கச்சக்கமாய் வருமெல்லேlol2.gif

அலை, மன்னிக்கவும்!

ஆ.............. இதுக்கெல்லாம் மன்னிப்பா.....................

ஓக்கே ஓக்கே மன்னிக்கிறன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மீன் பொரியல் பார்க்க நன்றாகத் தான் இருக்குது :) வாரத்திற்கொரு முறை தான் வீட்டில் சமையல் போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிறேற் தும்பளையான்.....பொண்டாட்டி குடுத்துவைச்சவா....கவனம் இனி அடிக்கடி ஏலாதெண்டு கிடக்கப்போறா.... :D அவுஸ்த்திறேலியாவில் வீடுகெளெல்லாம் நல்ல நீள அகலமாய் இருக்கும்...இஞ்சையும் இருக்கே...மனிசர் குனிய நிமிர ஏலாமல் பக்கத்தில பக்கத்தில ஒட்டிக்கொண்டு வீடுகள்... :(

இன்று இதே செய்முறையை சமன் (salmon )மீனில் செய்து அதை bake பண்ணினேன் (bake பண்ணுவதால் bread crumbs இல் தடவவில்லை)...மிக மிக சுவையாக இருந்தது. வீட்டில் பிள்ளைகள், மனிசி, நான் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டம்.

நன்றி தும்பளையான் !!

சாப்பாட்டு ராமன்... :lol:

சாப்பாட்டு விடயத்தில் நீங்கள் கொடுக்கும் அக்கறை எனக்கு நிழலியை பிடிக்கும், :D

புதிய சமையல் குறிப்புக்களைப்பார்த்து அதை வீட்டில் செய்து சுவைத்து ரசித்து கருத்து எழுதுவது அப்படி எழுதும்பொழுது அதை இணைத்தவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அதற்காக தும்பளையான் சார்பில் நன்றிகள் நிழலி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்பாட்டு ராமன்... :lol:

நானும் சாப்பாட்டு விசயத்திலை கரவுவஞ்சகம் பாக்கிறேல்லை. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளை நல்ல ரசனைமிக்க ஆள்..! :D

புலனாய்வுத்துறையின் ரகசிய அறிக்கை 2: :rolleyes:

http://maps.google.c...ved=0CA8Q8gEwAA

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி உறவுகளே. மனிசிக்குத் தெரியும், எனக்கும் கொஞ்சம் சமைக்கத் தெரியும் எண்டு. நானும் இடைக்கிடை கார சாரமாய் ஏதாவது செய்து ஆளை சப்றைஸ் பண்ணுவது தான் :wub:

இன்று இதே செய்முறையை சமன் (salmon )மீனில் செய்து அதை bake பண்ணினேன் (bake பண்ணுவதால் bread crumbs இல் தடவவில்லை)...மிக மிக சுவையாக இருந்தது. வீட்டில் பிள்ளைகள், மனிசி, நான் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டம்.

நன்றி தும்பளையான் !!

நானும் முன்பு bake பண்ணியிருக்கிறேன். Bake பண்ணுவது ஆரோக்கியமானது. நீங்கள் சமைச்சு சாப்பிட்டது எனக்கும் மகிழ்ச்சியே.

தும்பளை நல்ல ரசனைமிக்க ஆள்..! :D

புலனாய்வுத்துறையின் ரகசிய அறிக்கை 2: :rolleyes:

http://maps.google.c...ved=0CA8Q8gEwAA

:lol:

உங்கட புலனாய்வுத் துறையிண்ட அறிக்கை பிழை பொஸ். நாங்கள் சிட்னிப் பக்கமே இல்லையே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட புலனாய்வுத் துறையிண்ட அறிக்கை பிழை பொஸ். நாங்கள் சிட்னிப் பக்கமே இல்லையே. :lol:

அது உங்களுக்கில்லை.. நம்மட புங்கையூரானுக்கு.. :D

உங்கட புலனாய்வுத் துறையிண்ட அறிக்கை பிழை பொஸ். நாங்கள் சிட்னிப் பக்கமே இல்லையே. :lol:

போற போற இடமெல்லாம் நாலைஞ்சு மெழுகுதிரி விளக்கோட திரிகிடபடியால் தும்பளையான் அவுசில் கரண்ட் இல்லாத இடத்தில்தான் வாழுகிறார் போலக் கிடக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான மீன்பொரியல் தந்த தும்பளையானுக்கு நன்றிகள்

மீன் உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆயுள் அதிகமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.