Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Blue label whisky உம் நானும்

Featured Replies

எனது ஊரைச்சார்ந்தவர்கள் அதிகமாக இங்குள்ளதால்

அநேகமாக அழைத்தால் போவேன்.

சும்மா போய் சாப்பிட்டுவிட்டுவரமுடியாது தானே.....???

ஓமோம்.போகேக்கை பெரிய சாக்குப்பை ஒண்டு எடுத்துக்கொண்டுபோங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விசேடமான நிகழ்வுகளுக்கு முக்கியமான உறவுக்காரரையும்

நண்பர்களையும் அழைப்பதில் தவறில்லை.

ஆனால் இப்போது ஒருமுறை வீதியில் சந்திப்பவர்களையும்

போட்டிக்கு ஆட்கள் சேர்ப்பது மாதிரி அழைத்து

திருவிழாக் கொண்டாடுவது வழமையாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.போகேக்கை பெரிய சாக்குப்பை ஒண்டு எடுத்துக்கொண்டுபோங்கோ.

எங்கேயப்பா போயிருந்தீர்???

முக்கியமான விசேடமான நிகழ்வுகளுக்கு முக்கியமான உறவுக்காரரையும்

நண்பர்களையும் அழைப்பதில் தவறில்லை.

ஆனால் இப்போது ஒருமுறை வீதியில் சந்திப்பவர்களையும்

போட்டிக்கு ஆட்கள் சேர்ப்பது மாதிரி அழைத்து

திருவிழாக் கொண்டாடுவது வழமையாகி விட்டது.

உண்மைதான் வாத்தியார்

ஆனால் அழைக்காது விட்டால் அடுத்த நாள் வழியில் காணும்போது அவர்கள் காட்டும் படம் இருக்கே......???

எங்கேயப்பா போயிருந்தீர்???

உப்பிடி நீங்கள் போறமாதிரி ஒரு நல்லதுகெட்டதுக்குதான் ஊருக்குப் போயிருந்தன்.அங்கையே திண்டிட்டு திரும்பிவாற திக்கற்ரை துலைச்சுப்போட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

மொய்யை பெரிதாக எழுதியிருந்தால்

உடனே வெளியே விட்டிருப்பாங்கள் அல்லோ :lol::D :D

மொய்யை பெரிதாக எழுதியிருந்தால்

உடனே வெளியே விட்டிருப்பாங்கள் அல்லோ :lol::D :D

அட மொய் எழுதின மைய்கூடக் காயக்கிடையிலை ரகசியம் எப்பிடி பிரான்ஸ்வரை வந்திச்சு. :( எந்தப் பிக்காளிப்பயலோ போட்டுக்குடுத்திட்டான். :D

  • கருத்துக்கள உறவுகள்

அரிவாளுக்கு

கனக்க வேலை இருக்கு

தொடர்ந்து இருங்கள் யாழில்...........???? :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் கொஞ்சம் தள்ளியே இருக்கிறன்.. :unsure: ஆனால் அதுக்கும் ஆப்பு வந்திட்டிது.. :blink:

என்ரை... இசையை,(dangku)

"புளூ லேபிள்" காட்டி, ரொறொன்ரோ ஆட்கள் பழுதாக்கிப் போடுவினமோ... என்று பயமாக உள்ளது.

இந்த பகட்டு ஆடம்பர 12000 / 20000 டொலர் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. உழைப்புக்கு அதிகமாக செலவு செய்வதிலும் உடன்பாடு இல்லை. எனக்கு நான் இருக்கும் இடத்தில் நெருங்கிய சொந்த பந்தம் இல்லாததால் இப்படியான நிகழ்வுகளுக்கு அழைப்பு கிடைப்பதில்லை. அத்துடன் தமிழ் ஆட்களும் அதிகம் இல்லை.

இரண்டு வேலை செய்வதை நீங்கள் நக்கலாக சொன்னீர்களா அல்லது ......

எனக்கு ஒன்ராரியோ வாழ்க்கை பற்றி தெரியாது. ஆனால் ரொறன்ரோ போன்ற பெரிய நகரங்களில் வாழ்க்கை செலவு அதிகம் இருக்கும்.

செய்யும் வேலையை பொறுத்து தானே வருமானம். சாதாரணமாக அடிப்படை சம்பளத்தில் வேலைசெய்தால் சில நேரம் ஒரு வேலையில் கிடைக்கும் சம்பளம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இருக்காதில்லையா. அதனால் இன்னுமொரு வேலைசெய்ய வேண்டிய நிலைக்கு சிலர் உள்ளகிறனர்.

ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு/செலவு செய்து இரண்டு வேலை செய்கிறனர்.

அதற்காக உங்கள் உறவினர் என்ன வேலை செய்கிறார் என்று கேட்கிறார் என நினைத்துவிடாதீர்கள்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல ...... குமாரசாமி அண்ணா, நிழலி எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது அவரை நான் கற்பனையில் ஒரு தோற்றத்தை எண்ணி உள்ளேன் அது சரியோ என்று ஆட்டத்தைப்பார்த்து தெரிந்து கொள்வதற்குத்தான் . :D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நிழலி;

உம்மடை பிரச்சனை என்ன?

௧. பார்ட்டி வைத்தது பிழையா?

௨. அப்படி என்றால் வைத்த முறை பிழையா- 20000 சிலவளித்து?

௩. ப்ளூ லேபல் விஸ்கி பிழையா?

௪. கடைசியா உங்களை கூப்பிட்டது பிழையா?

பகிடிக்குத்தான் எழுதினது...

நானும் ஒரு <2000 பார்ட்டி வைத்து போட்டு சுழண்டு கொண்டு திரிகிறேன்...

ஒவ்வொருக்க போடர் கடக்கும் போதும் ஒருக்கா சுத்தி சுத்தி பார்த்துப்போட்டு பழையபடி கறுப்பில் முடியும்.

மற்றது - சொந்தகாரர் வீட்டில் ஹிட் லிஸ்ட் இருக்கிறது பற்றி- நண்பேண்ட

நானும் வந்த புதிசில ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு, வராது வந்த மாணிக்கம மாதிரி மனைவியின் நண்பி வீட்டுக்கு பார்ட்டி போனேன்.4 -5 குடும்பம்...பிள்ளைகளின் பர்த்டே தொடங்க முன் ஆள் ஆள் குடிக்க தொடக்கிவிட்டார்கள்..

நானும் அட இது அல்லவே கனடா...நாலுவருசம் முந்தி வந்திருந்தால் ஒரு பெரிய குடிமகனாய் இருந்திருக்கலாம் என்று நினைத்து போட்டு, ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்கிற மாதிரி ஒரு "பீர்" போத்தல் எடுத்தேன்..கன காலத்துக்கு பிறகு எடுத்தளால கனகனப்பாய் இருந்தது- 6 மாதம் எண்டால் கணக்கு போட்டு பாருங்கோவன்-

சரி எல்லாம் முடிந்து லைப்ரரியில் இருக்கிறேன், -அடுத்தநாள்- மனைவின் சகோதரி- கோல் பண்ணுகிற- "நீங்கள் இந்த இடத்த ட்ரிங்க்ஸ் பாவிச்சநீன்களோ" என்று. இப்படி மனைவின் நண்பி இப்ப கோல் பண்ணி சொன்னவா...நானும் சிவனே ஒன்று ஓம் ஒண்டு சொன்னான்..அது குடும்பமே குழம்பிபோட்டுது..அவர்கள் ஒருவர், யார் என்று மறந்து போட்டன்- இது என்ற மனைவிக்கு தெரியாமல் நடக்காது, அவளும் சேர்ந்து ஒழித்து போட்டாள்"

கடவுளே..விவாகரத்துக்கு போகாத குறையாக இழுபட்டுது..

குறிப்பு- அவர்களுக்குத்தான் நான் இப்ப போடர் குறஸ் பண்ணும் போது கருப்பு லேபில் வாங்குறது..

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை தோசை அப்பளம் வடை :lol: :lol:

இல்ல ...... குமாரசாமி அண்ணா,

நிழலி எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது அவரை நான் கற்பனையில் ஒரு தோற்றத்தை எண்ணி உள்ளேன் அது சரியோ என்று ஆட்டத்தைப்பார்த்து தெரிந்து கொள்வதற்குத்தான் . :D:icon_idea:

நிழலி,

உங்கள் இணைப்பும் அது முன்வைக்கும் ஆதங்கமும் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் மனதில் பட்ட சிலவற்றைச் சொல்லத் தோன்றுகின்றது.

உலகத்தை விட்டுவிட்டு வெறுமனே தமிழர் எங்களைப் பற்றி மட்டும் பேசின், எம்மவர் மத்தியில் கல்வி கற்பது என்பது வெறுமனே ஒரு அங்கீகாரத் தேடலாகவெ பெரும்பாலும் உள்ளது. ஏன் இந்த அங்கீகாரம் தேவைப்படுகிறது? அங்கீகாரம் அதிகரிக்க அதிகரிக் எமது வாழ்வு மேம்படும் என்றோ அல்லது வாழ்வது இலகுவாகும் என்றோ எமக்குத் தோன்றுகின்றது. அதில் தவறில்லை. ஆனால் கற்றல் மற்றும் சோதனையில் தேறி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் என்று வரும்போது, சில மாணவர்கள் கற்பூரம் போலக் கப்பென்று விடயங்களை விளங்கிக்கொண்டு சில மணிநேரங்களை மட்டும் ஒரு நாளில் படிப்பதற்கு ஒதுக்கித் தேறிவிடுவார்கள். வேறு சில மாணவர்களிற்குக் கற்பது அத்தனை இலகுவில் கைப்பட்டுவிடுவதில்லை, செமஸ்ற்றர் முழவதும் புத்தகமே கதியென்று கட்டியழுது மனப்பாடம் பண்ணி மட்டுமட்டாகப் பாசாவார்கள். ஆனால் அங்கீகாரத்தேடலில் சான்றிதழ் என்பது சான்றிதழ் தான் என்ற வகையில், செமஸ்ற்றர் பூராப் புத்தகத்தை மனப்பாடம் பண்ணும் மாணவரை எவரும் படிக்காதே என்று அட்வைஸ் பண்ணுவதில்லை. அதாவது, வாழ்க்கையில் ரசிப்பதற்கும் செய்பதற்கும் எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது, மட்டமான மண்டையை வச்சுக்கொண்டு, அங்கீகாம் என்ற தழைக்குக் கட்டுப்பட்டு அடிமையாகி கஸ்றமான படிப்போடு உழன்று படிச்சுத் தான் முடிப்பன் என்று புத்தகத்தோட கிடக்கிறானே என்று எவரும் மட்டமான மாணவனைப் பார்த்துக் குறிப்பிடுவதில்லை. ஆனால் கடைநிலைத்தொழிலாளி அங்கீகாரம் தேடும் போது எமது பார்வை மாறிவிடுகிறது.

அதாவது மட்டமான மாணவன் முக்கிமுக்கிப் படிக்கும் போது, 'புத்தியுள்ளவன் படிக்கிறான் இவன் ஏன் கிடந்து உழலுறான்' என்று சொல்லத்தோன்றாத சமூகத்திற்கு, கடைநிலைத்தொழிலாளி பாட்டி வச்சால் மட்டும் உடனே 'வசதியிருக்கிறவன் செய்யிறான் ஆனால் இவன் செய்யிறது ரெண்டுவெலை அதுக்குள்ள புளுலேபல் பாட்டிவேற என்று உடனே சொல்லத் தோன்றிவிடுகிறது. அதுவும் அந்தத் தொழிலாளி தான் அங்கீகாரம் வேண்டித் தான் இந்தப் பாட்டியினைச் செய்தேன் என்று தானே ஒத்துக்கொண்டு செய்தாலும் கூட, அவர் எம்மிடமும் அங்கீகாரம் கேட்கிறார் அதற்காகத் தான் எம்iமையும் அழைத்துள்ளார் என்று தெரிந்தும் கூட, அவரிற்கு நாம் அங்கீகாரம் கொடுக்கமாட்டோம் என்று கூறுவது மட்டுமன்றி எவரும் அவரிற்கு அங்கீகாரம் கொடுத்துவிடக்கூடாது என்ற ரீதியில் அறிந்தோ அறியாதோ பதிவுபோட்டு விடுகிறோம்.

இப்போ நீங்கள் குறிப்பிடும் 12000 பாட்டி நபரை எடுத்துக் கொண்டால், அவர் எந்த ஒழிவுமறைவுமின்றி நேரடியாக உங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் 'இப்பிடிச் செய்தால் தான் இனசனம் மதிக்கும் என்று'. இதை நீங்களே பதிசெய்துள்ளீர்கள் என்பதோடு இனசனம் என்ற வகைக்குள் அவர் உங்களையும் உள்ளடக்கி உங்கள் அங்கீகாரத்திற்காகவும் தான் இந்த 12000த்தைச் செலவழித்துள்ளார். இந்த இனசனம் மதிக்கும் என்ற விடயத்தை அவர் தனதும் தனக்கு இப்போது பிறந்துள்ள அந்தக் குழந்தையினதும் வாழ்வு மேம்பாட்டிற்கான அவசியமாகப் பார்க்கிறார். எவர் தான் தமதும் தமது குழந்தைகளினதும் வாழ்வினை மேம்படுத்திவிடச் சதா முனையவில்லை?

இல்லை அவர் உடலை வருத்தி வேலை செய்பவர் அங்கீகாரம் என்ற தழைக்கு அடிமைப்பட்டு வாழ்வின் மகிழ்ச்சிகளைத் தொலைத்து உழல்வதைத் தடுப்பதற்காகத் தான் அவரை விமர்சிக்கிறோம் என்றால், அவருடன் நேரே கதைக்கும் வசதி உடையவர்கள் என்ற வகையில், அவரிடம் நேரே சென்று, கோஸ்ற் எபக்ற்றிவாக எவ்வாறு அங்கீகாரம் தேடுவது என்று விளங்கப்படுத்தி, பணம் வட்டிவீதம் முதலியவற்றின் தார்ப்பரியங்களைத் தொடர்ந்து புரியவவைத்து அவர் தனது உழைப்பின் மணித்தியாலங்களைக் குறைப்பதற்கு எம்மாலானதை நாம் உதவ முடியின் அது அந்தத் தனிமனிதனிற்கு மட்டுமன்றி எமது சமூகத்தின் உயர்விற்கும் உதவும். ஆனால் அதை விடுத்து நாம் நையாண்டிப் பதிவிடுவது எமது அங்கீகாரம் சார்ந்து எமக்குள் உணரப்படும் எமது பயமோ என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

இதை உங்கள் மீது குற்றங்கண்டு பிடிப்பதற்காக நான் கூறவில்லை, நானும் இதுபோன்று நிறையவே முன்னர் பேசியதுண்டு ஆனால் இப்போதெல்லாம் மற்றையவனின் மடமைகள் பற்றித் தூக்கிப் பேச நினைக்கின்ற போதெல்லாம் எனது மடமைகள் பற்றிய மீள் பரிசீலனை அவசியப் படுகிறது. அந்தவகையில் இந்தச் சின்னப் பின்னூட்டம். தனிமடல் போடாது வெளிப்படையாகப் பேசுவதன் நோக்கமே இது உங்களை பற்றியது மட்டுமல்ல எம்மைப் பற்றியது என்பதற்காகவே. அதுபோல நீங்களும் தனியாக அந்த மனிதரோடு பேசாது வெளிப்படையாகப் பதிவு போட்டதும் கூட இது அவர் மட்டுமல்ல அவரைப் போல பலர் இவ்hவறு உழல்கிறார்கள் எனவே பரந்த அளவில் இது பேசப்படவேண்டும் என்பதற்காகவும் என்று கூட ஒரு கோணம் இருப்பதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அக்கறையுடையவர்கள் பொதுவெளியில் மட்டும் பேசுபது போதாது, தனித்தனியாகவும் சம்பந்தப்பட்டவர்களுடன் முனையவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அத்தோடு பொதுவெளியில் பேசப்படும் பதிவுகளும் மேலோட்டமாக புத்திகெட்ட சனம் இப்பிடிச் செய்யிது என்றிலாமல் விடயத்தின் அடிப்படைகள் சார்ந்து அமையவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

அர்யுன் பலதரப்பட்டவர்களும் புலம்பெயர்ந்ததால் எல்லாத்தையும் பார்த்துத் தான் போகவேண்டியுள்ளது என்று எழுதியுள்ளீர்கள். இவ்வாறு எழுதுவதால் நிச்சயமாக இநதப் பலதரங்களைப் பெறுமதி சார்;ந்து வரிசைப் படுத்தின் அதன் மேல்மட்டத்தில் நீங்கள் இருப்பதாக நீங்கள் கருதுவதாகத் தோன்றுகின்றது. எனது தாழ்மையான அபிப்பிராயம் என்னவெனில் நாங்கள் எங்கள் பெறுமதியில் இழிவாகத் தெரிபவர்களை நாங்கள் பார்க்கும் கோணத்தில் மட்டும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது எங்களிற்கு ஏதுவானதாகப் படினும் உலகின் ஒட்டுமொத்தப் பார்வையும் எப்போதும் எங்கள் பார்வை போன்று தான் இருக்கும் என்று கூறிவிடமுடியாது.

ஜஸ்ரின், 'நல்லகாலம் நான் கனடாவில் வாழவில்ல்லை இருந்திருந்தால் பாட்டிக்குப் போகவில்லை என்று பலரது குறை கேட்கவேண்டி வந்திருக்கும்' என்று எழுதியுள்ளீர்கள். ஒருவேளை நீங்கள் எழுதியதை நான் தவறாகப் புரிந்து கொள்வதாக இருக்கலாம் ஆனால் நான் புரிந்துகொண்டவரை எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. அதாவது, டாம்பீகச் செலவுகளும் அர்த்தமற்ற வாழ்க்கையும் வாழும் அர்ப்பப்பதர்கள் என்று ஒரு பக்கத்தில் கருதப்படுகின்ற உறவினர்கள், அவர்கள் அற்பப் பதர்கள் என்றபோதும் எம்மைக் குறைவிளங்கிக் கொள்ளாதவகை எம்மீது கோபப்பட்டுவிடாதபடி நாம் வாழ்ந்துவிடவேண்டும் என்ற தன்னிலை சார்ந்த அவதானம் 'நல்ல காலம் நான் கனடாவில் வாழவில்லை' என்ற கூற்றில் வெளிப்படுகிறது. எனது கேள்வியென்னவென்னில், நான் துச்சமாக மதிக்கும் பதர்களைத் தொடர்ந்தும் கட்டியாளவேண்டும் என்ற அவதானம் ஏன் எழுகிறது?. கனடாவில் இருந்தபடி கூட, உங்கள் கூத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை, நான் வரப்போவதில்லை கோபித்தால் கோபித்துக்கொள்ளுங்கள் என்று எதனால் கூறமுடியாதிருக்கிறது?

முடிக்குமுன்னர் மீண்டும் ஒருமுறை, இப்பின்னூட்டத்தை எவரையும் குற்றம் கண்டுபிடிப்பதற்காக நான் எழுதவில்லை. நானும் இவ்வாறு பலதடவை பேசியுள்ளேன். இருப்பினும் இப்போதெல்லாம் ஏனோ அந்தச் சிந்தனையில் எங்கோ ஒரு பொய்மை பொதிந்து கிடப்பதாக, அதாவது எனக்கு நானே சொல்லுகின்ற என்னைப் பற்றிய பொய் கிடப்பதாகப் படுகிறது. அந்தவகையில் உங்கள் அபிப்பிரயாங்களையும் அறிந்து கொள்வதற்காகவே இந்தப் பின்னூட்டம்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இப்படியான பார்ட்டிகள் கொண்டாடுகின்றார்களோ தெரியாது.. ஆனால் புலம்பெயர் நாடுகளில் நிறையப் பார்ட்டிகள் ஏதோ ஒரு காரணத்தை சாட்டாக வைத்து நடாத்தப்படுகின்றன. இப்படிப் பார்ட்டிகளில்தான் நண்பர்கள் உறவினர்களைக் காணக்கூடிய நிலைவேறு இருக்கின்றது. எனவே எவன் எவ்வளவு பணத்தைச் செலவழித்துப் பார்ட்டி வைக்கின்றான் என்று பார்ட்டியில் போயிருந்து யோசிக்காமல் (அல்லது பார்ட்டியால் வந்து யோசிக்காமல்) இயலுமானவரை குடித்து கும்மாளமடித்து பார்ட்டி வைத்தவர்களை குஷிப்படுத்துவது நல்லது என்பது எனது அபிப்பிராயம்..

அழைப்புக் கிடைக்காதவர்கள், அழைப்புக் கிடைத்தாலும் தூரம், நேரம் காரணமாக வரமுடியாதவர்கள் சொல்லும் நொட்டை/நொடிகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் சந்தோஷம் வராது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மாப்பு!

  • தொடங்கியவர்

கஸ்டப்பட்டு 2 வேலை செய்து ஓர் இரவில் காசை 12000 செலவளித்து மதிப்பு வந்திருக்கும் என அவர் நினைத்தாலும் வந்தவர்கள் நிச்சயமாக என்ன சொல்லி இருப்பார்கள்/நினைத்து இருப்பார்கள் என்பது செலவளித்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை.அத்தோடு 12000 உழைக்க 3 ஆவது வேலையை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை party முடிந்த அடுத்த நாள் உணர்ந்து இருப்பார்.

வேலை விடயத்தில் தீயாக வேலை செய்யக்கூடியவர் இவர். சில நாட்களில் வெறும் 3 மணி நேரமே நித்திரை கொண்டு விட்டு பின் மற்ற வேலைக்கு செல்வார்.

ஆகா ... 195 .95 euro

இன்னும் இல்லை இதற்கு பிறகாவது குடித்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை .

முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி நிழலி :D :D :icon_idea:

சொந்தக் காசில் வாங்கிக் குடிப்பது என்னை பொறுத்தவரைக்கும் வீண் வேலை. எதை அடித்தாலும் வரும் போதை ஒன்றுதான் (இது மது போதை விடயத்தில் மட்டும்தான்)

கனடாவில் நாம் வாழ வேண்டிய நிலை ஏற்படாததையிட்டு நானும் மனைவியும் மிகவும் நிம்மதி அடைகிறோம். வாராந்தப் பார்ட்டி, அந்தப் பார்ட்டி இந்தப் பார்ட்டி, அதுக்குப் போகாட்டிக் குற்றம் இந்தச் சில்லெடுப்பு எதுவும் இன்றி நிம்மதியாக இருக்கிறோம். முகநூலில் ஒரு 10 வயதுப் பையனுக்குச் செய்த கிறிஸ்தவ மதச் சடங்கொன்றின் படங்கள் பார்த்தேன். "படாடோபம்" என்பதன் வரைவிலக்கணம் புரிந்தது!

இந்தப் பண்பு இப்ப வளர்ந்து வரும் புதிய தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்

^_^போனமா விஸ்கியை குடிச்சமா என்று வர வேண்டாமா :lol:

குடிக்கவில்லை....குளித்து விட்டு வந்தேன். :lol:

அந்தக் குத்தாட்டம் தானாம்....

FB யிலை, ஹாட் டாப்பிக்காம்.

அங்கை... என்ன, எங்கடை நிழலியைப்பற்றி கதைக்கிறார்கள் என்று... யாராவது சொன்னால், நல்லாயிருக்கும். :D

ஹி ஹி....இதால தான் யாழ் கள உறவுகளில் ஒரு சிலரைத் தவிர வேறு எவரையும் இது வரை என் சொந்த பெயரில் இருக்கும் FB இல் இணைத்ததில்லை

எல்லாத்துக்கும் மேல அவர் உங்களின் மனைவியின் சொந்த மச்சான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அவர் தன் சொந்த மச்சாளுக்கு பந்தா காட்ட 12,000 Canadian dollars செலவு செய்து உங்களை விட தான் பெறுமதியானவர் என காட்ட முயன்றுள்ளார் . :D:lol:

அடடா... இப்படி ஒரு அரசியலும் இதில இருக்கிறது எனக்கு முதலில் விளங்கவில்லையே !!

கனகாலமாக நல்ல குத்தாட்டம் பார்க்கவில்லை , எனக்கு உங்களின் குத்தாட்டத்தை பார்க்க ஆவலாகவுள்ளது படமிருந்தால் இணைத்து விடவும் . :D

ஏன் இந்த கொலை வெறி?

இரண்டு வேலை செய்வதை நீங்கள் நக்கலாக சொன்னீர்களா அல்லது ......

எனக்கு ஒன்ராரியோ வாழ்க்கை பற்றி தெரியாது. ஆனால் ரொறன்ரோ போன்ற பெரிய நகரங்களில் வாழ்க்கை செலவு அதிகம் இருக்கும்.

செய்யும் வேலையை பொறுத்து தானே வருமானம். சாதாரணமாக அடிப்படை சம்பளத்தில் வேலைசெய்தால் சில நேரம் ஒரு வேலையில் கிடைக்கும் சம்பளம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இருக்காதில்லையா. அதனால் இன்னுமொரு வேலைசெய்ய வேண்டிய நிலைக்கு சிலர் உள்ளகிறனர்.

அதற்காக உங்கள் உறவினர் என்ன வேலை செய்கிறார் என்று கேட்கிறார் என நினைத்துவிடாதீர்கள்.

நானும் இரு வேலைகள் தான் செய்கின்றேன். இரண்டும் வார நாட்களில் மட்டுமே. அத்துடன் ஒரு project எடுத்து தனியவும் செய்கின்றேன். இரு வேலைகளும் மென்பொருள் உற்பத்தி மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான தொழில்கள். ஒரு வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் என் செலவுகளை கட்டுப்படுத்த தேவையான அளவுக்கு இல்லை என்பதால் தான் இரு வேலைகள். எனவே இரு வேலைகள் செய்வதை நக்கல் அடிக்கவில்லை. ஆனால் இரு வேலைகள் செய்து உழைக்கும் பணத்தில் இன்று வரை ஆடம்பரமாக எதனையும் செய்ததில்லை.

மிகவும் லேட்டாக வெளிநாடு வந்தவர்களில் ஒருவன் நான். அதுவும் வரும் போதே குடும்பமாக வந்தவன் நான். எனவே ஒவ்வொரு டொலரும் எனக்கு மிகப் பெறுமதியானது (விஸ்கிக்கும் பிரண்டிக்கும் கொடுக்கும் காசு உட்பட)

  • தொடங்கியவர்

உலகத்தை விட்டுவிட்டு வெறுமனே தமிழர் எங்களைப் பற்றி மட்டும் பேசின், எம்மவர் மத்தியில் கல்வி கற்பது என்பது வெறுமனே ஒரு அங்கீகாரத் தேடலாகவெ பெரும்பாலும் உள்ளது. ஏன் இந்த அங்கீகாரம் தேவைப்படுகிறது? அங்கீகாரம் அதிகரிக்க அதிகரிக் எமது வாழ்வு மேம்படும் என்றோ அல்லது வாழ்வது இலகுவாகும் என்றோ எமக்குத் தோன்றுகின்றது. அதில் தவறில்லை. ஆனால் கற்றல் மற்றும் சோதனையில் தேறி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் என்று வரும்போது, சில மாணவர்கள் கற்பூரம் போலக் கப்பென்று விடயங்களை விளங்கிக்கொண்டு சில மணிநேரங்களை மட்டும் ஒரு நாளில் படிப்பதற்கு ஒதுக்கித் தேறிவிடுவார்கள். வேறு சில மாணவர்களிற்குக் கற்பது அத்தனை இலகுவில் கைப்பட்டுவிடுவதில்லை, செமஸ்ற்றர் முழவதும் புத்தகமே கதியென்று கட்டியழுது மனப்பாடம் பண்ணி மட்டுமட்டாகப் பாசாவார்கள். ஆனால் அங்கீகாரத்தேடலில் சான்றிதழ் என்பது சான்றிதழ் தான் என்ற வகையில், செமஸ்ற்றர் பூராப் புத்தகத்தை மனப்பாடம் பண்ணும் மாணவரை எவரும் படிக்காதே என்று அட்வைஸ் பண்ணுவதில்லை. அதாவது, வாழ்க்கையில் ரசிப்பதற்கும் செய்பதற்கும் எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது, மட்டமான மண்டையை வச்சுக்கொண்டு, அங்கீகாம் என்ற தழைக்குக் கட்டுப்பட்டு அடிமையாகி கஸ்றமான படிப்போடு உழன்று படிச்சுத் தான் முடிப்பன் என்று புத்தகத்தோட கிடக்கிறானே என்று எவரும் மட்டமான மாணவனைப் பார்த்துக் குறிப்பிடுவதில்லை. ஆனால் கடைநிலைத்தொழிலாளி அங்கீகாரம் தேடும் போது எமது பார்வை மாறிவிடுகிறது.

அதாவது மட்டமான மாணவன் முக்கிமுக்கிப் படிக்கும் போது, 'புத்தியுள்ளவன் படிக்கிறான் இவன் ஏன் கிடந்து உழலுறான்' என்று சொல்லத்தோன்றாத சமூகத்திற்கு, கடைநிலைத்தொழிலாளி பாட்டி வச்சால் மட்டும் உடனே 'வசதியிருக்கிறவன் செய்யிறான் ஆனால் இவன் செய்யிறது ரெண்டுவெலை அதுக்குள்ள புளுலேபல் பாட்டிவேற என்று உடனே சொல்லத் தோன்றிவிடுகிறது. அதுவும் அந்தத் தொழிலாளி தான் அங்கீகாரம் வேண்டித் தான் இந்தப் பாட்டியினைச் செய்தேன் என்று தானே ஒத்துக்கொண்டு செய்தாலும் கூட, அவர் எம்மிடமும் அங்கீகாரம் கேட்கிறார் அதற்காகத் தான் எம்iமையும் அழைத்துள்ளார் என்று தெரிந்தும் கூட, அவரிற்கு நாம் அங்கீகாரம் கொடுக்கமாட்டோம் என்று கூறுவது மட்டுமன்றி எவரும் அவரிற்கு அங்கீகாரம் கொடுத்துவிடக்கூடாது என்ற ரீதியில் அறிந்தோ அறியாதோ பதிவுபோட்டு விடுகிறோம்.

எனக்கு இந்த இலகுவில் புரிந்து கற்பவனுக்கும், முக்கி முக்கி படிப்பவனுக்கும் இடையிலான வேறுபாடு அங்கீகாரத் தேடல் மட்டும் தான் என்பதில் முற்றிலும் உடன்பாடு இல்லை. கல்வி ஒன்றே முன்னேற்றும் என்ற சமூகத்தில் வந்தவர்கள் நாம் அத்துடன் இலங்கை கல்வி முறையும் கல்வி என்பதை குறைந்த பட்ச தேவையாக நிறுவி விட்ட பின் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் பிறக்க முதலே எம் முதுகில் ஏற்றி விடப்படுவதால் இந்த உவமானம் எனக்கு முற்றிலும் ஏற்புடையதாகவில்லை. பள்ளி பெறுபேறுகளின் அடிப்படையில் வாழ்க்கையின் முன்னேற்றம் அமைவதில்லை என்ற உண்மை பள்ளிக் காலங்களை தாண்டி உணரப்படும் போது இந்த எடுகோள் முற்றாக செயலிழக்கின்றது.

ஆனால் இந்த உவமானத்தினூடாக நீங்கள் சொல்ல வருகின்ற விடயத்தை புரியவும், அதனை ஏற்கவும் முடிகின்றது. அதாவது சுலபமாக வெற்றி பெறப்போறவன் என்ற அங்கீகாரத்தை அல்லது வெற்று பெற்றவன் என்ற அங்கீகாரத்தினை அடைந்தவனின் செயல்களைப் பற்றி நாம் கவனம் செலுத்துவதில்லை, மாறாக அப்படி அங்கீகாரம் அடையாதவரது செயல்கள் பற்றித் தான் அக்கறை கொண்டு விமர்சிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றீர்கள் என நினைக்கின்றேன். இது அநேகமான நேரங்களில் சரியாகத்தான் இருக்கின்றது.

ஆனால் நான் இந்த பார்ட்டி வைத்தவரின் செயலை இப்படியான பார்வையினூடாக அணுகவில்லை. ஒரு போலி பிம்பம் ஒன்றினூடாக தன்னை நிலை நிறுத்த முற்படும் செயல் அவரை ஒரு நாளைக்கு மீள முடியாத சிக்கலில் கொண்டு சென்று மாற்றி விடும் என்றவிதத்தில் என் பார்வை அணுகுகின்றது. இவர் இங்கு ஒரு குறியீடு தான், இவர் பின்னால் நான் கனடாக்கு வந்த இந்த 5 வருடங்களில் இவரைப் போன்ற செயல்களைச் செய்தவர்களின் அணிவகுப்பு இருக்கின்றது

இப்போ நீங்கள் குறிப்பிடும் 12000 பாட்டி நபரை எடுத்துக் கொண்டால், அவர் எந்த ஒழிவுமறைவுமின்றி நேரடியாக உங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் 'இப்பிடிச் செய்தால் தான் இனசனம் மதிக்கும் என்று'. இதை நீங்களே பதிசெய்துள்ளீர்கள் என்பதோடு இனசனம் என்ற வகைக்குள் அவர் உங்களையும் உள்ளடக்கி உங்கள் அங்கீகாரத்திற்காகவும் தான் இந்த 12000த்தைச் செலவழித்துள்ளார். இந்த இனசனம் மதிக்கும் என்ற விடயத்தை அவர் தனதும் தனக்கு இப்போது பிறந்துள்ள அந்தக் குழந்தையினதும் வாழ்வு மேம்பாட்டிற்கான அவசியமாகப் பார்க்கிறார். எவர் தான் தமதும் தமது குழந்தைகளினதும் வாழ்வினை மேம்படுத்திவிடச் சதா முனையவில்லை?

அவர் சொன்ன இனசனம் மதிப்பு என்பது பற்றிய எனது அபிப்பிராயம் தான் இங்கு இந்த பதிவை எழுதத் தூண்டியது. அன்று வந்தவர்களில் அநேகரது அபிப்பிராயம் நிச்சயம் எனது அபிப்பிராயத்தில் இருந்து மாறுபட்டதாகவே இருப்பதை அறிய முடிகின்றது. இவரது இந்த செயலை ஒத்த செயலை செய்தர்கள் அதிகமாக நிரம்பிய எம் சமூகத்தில் இவரது செயல் போற்றுதலுக்குரியதாகவே அமையும். எனவே அவரது மதிப்பீடு மிகச் சரி. நீங்கள் சொல்வது மாதிரி தம் குழந்தையின் வாழ்வினை சமூக அங்கீகாரம் என்றதனூடாக மேம்படுத்த முனையும் அவரது செயலை நியாயப்படுத்தும் விதமாகத்தான் எம் சமூகத்தின் செயல்பாடுகள் அமைகின்றன. இந்த போலி பிம்ப உருவாக்கல் எம் சமூகத்தில் இருக்கும் ஒரு சமூக நோய். வெறும் ஆடம்பர செயல்களின் தனக்கு கிடைக்காத அங்கீகாரத்தை வலிந்து / கடன் பட்டு அடையும் செய்யும் தவறான அணுகு முறை என்ற என் அபிப்பிராயத்தினை மறுக்கின்றவர்களையே பார்க்க முடிகின்றது என்னால்

இல்லை அவர் உடலை வருத்தி வேலை செய்பவர் அங்கீகாரம் என்ற தழைக்கு அடிமைப்பட்டு வாழ்வின் மகிழ்ச்சிகளைத் தொலைத்து உழல்வதைத் தடுப்பதற்காகத் தான் அவரை விமர்சிக்கிறோம் என்றால், அவருடன் நேரே கதைக்கும் வசதி உடையவர்கள் என்ற வகையில், அவரிடம் நேரே சென்று, கோஸ்ற் எபக்ற்றிவாக எவ்வாறு அங்கீகாரம் தேடுவது என்று விளங்கப்படுத்தி, பணம் வட்டிவீதம் முதலியவற்றின் தார்ப்பரியங்களைத் தொடர்ந்து புரியவவைத்து அவர் தனது உழைப்பின் மணித்தியாலங்களைக் குறைப்பதற்கு எம்மாலானதை நாம் உதவ முடியின் அது அந்தத் தனிமனிதனிற்கு மட்டுமன்றி எமது சமூகத்தின் உயர்விற்கும் உதவும். ஆனால் அதை விடுத்து நாம் நையாண்டிப் பதிவிடுவது எமது அங்கீகாரம் சார்ந்து எமக்குள் உணரப்படும் எமது பயமோ என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல எந்த சமூகத்திலும் இலவச அறிவுரைகளை யாரும் விரும்புவதில்லை என்பதுடன், அப்படி சொன்னால்/ சரியான வழிகாட்டினால் கூட ஏற்றுக்கொள்ள எவரும் முனைவதில்லை. அத்துடன் ஒருவருக்கு இது தான் சரியான வழி என்று விளங்கப்படுத்தும் அளவுக்கு தகுதியும் எனக்கு இல்லை. அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு இந்தப் பணத்தை வைப்பிலிட்டால் அல்லது எதிர்கால கல்வி தேவைக்காக வங்கியில் போட்டால் மிகுந்த பயன் அளிக்கும் என்று நானும், என் மனைவியும் தொலைபேசியில் இரு முறை கூறியதுக்கு மேல் நாம் அவரை அணுகி வேறு ஒன்றும் செய்யவில்ல. இதுக்கு மேலாக சென்று அவரை அணுகுவது நாகரீகமாகவும் இருக்காது

இதை உங்கள் மீது குற்றங்கண்டு பிடிப்பதற்காக நான் கூறவில்லை, நானும் இதுபோன்று நிறையவே முன்னர் பேசியதுண்டு ஆனால் இப்போதெல்லாம் மற்றையவனின் மடமைகள் பற்றித் தூக்கிப் பேச நினைக்கின்ற போதெல்லாம் எனது மடமைகள் பற்றிய மீள் பரிசீலனை அவசியப் படுகிறது. அந்தவகையில் இந்தச் சின்னப் பின்னூட்டம். தனிமடல் போடாது வெளிப்படையாகப் பேசுவதன் நோக்கமே இது உங்களை பற்றியது மட்டுமல்ல எம்மைப் பற்றியது என்பதற்காகவே. அதுபோல நீங்களும் தனியாக அந்த மனிதரோடு பேசாது வெளிப்படையாகப் பதிவு போட்டதும் கூட இது அவர் மட்டுமல்ல அவரைப் போல பலர் இவ்hவறு உழல்கிறார்கள் எனவே பரந்த அளவில் இது பேசப்படவேண்டும் என்பதற்காகவும் என்று கூட ஒரு கோணம் இருப்பதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அக்கறையுடையவர்கள் பொதுவெளியில் மட்டும் பேசுபது போதாது, தனித்தனியாகவும் சம்பந்தப்பட்டவர்களுடன் முனையவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அத்தோடு பொதுவெளியில் பேசப்படும் பதிவுகளும் மேலோட்டமாக புத்திகெட்ட சனம் இப்பிடிச் செய்யிது என்றிலாமல் விடயத்தின் அடிப்படைகள் சார்ந்து அமையவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

ஓரளவுக்கு உடன்பட முடிகின்றது. ஒருவரின் மடமையை பேச முனைவதன் அடிப்படையான காரணம் எம் மடமைகளை கொஞ்சமேனும் பூசி மொழுகத்தான் என்று கூறுவது உளவியல் சார்ந்து சரியான விடயம்.

ஆனால் மேலே ஏற்கனவே நான் எழுதியுள்ளது போல இதில் இவர் ஒரு குறியீடுதான். இந்த சம்பவ விபரிப்பில் கூட இருவரது செயல்களை ஒன்றாக்கித் தான் எழுதியுள்ளேன். இவர்களின் பின்னால் ஆயிரக்கணக்கானவர்களின் முகங்கள் இருக்கு. அதில் எனதும் ஒன்றாக இருக்கலாம்

முடிக்குமுன்னர் மீண்டும் ஒருமுறை, இப்பின்னூட்டத்தை எவரையும் குற்றம் கண்டுபிடிப்பதற்காக நான் எழுதவில்லை. நானும் இவ்வாறு பலதடவை பேசியுள்ளேன். இருப்பினும் இப்போதெல்லாம் ஏனோ அந்தச் சிந்தனையில் எங்கோ ஒரு பொய்மை பொதிந்து கிடப்பதாக, அதாவது எனக்கு நானே சொல்லுகின்ற என்னைப் பற்றிய பொய் கிடப்பதாகப் படுகிறது. அந்தவகையில் உங்கள் அபிப்பிரயாங்களையும் அறிந்து கொள்வதற்காகவே இந்தப் பின்னூட்டம்.

ஒரு பதிவை எமக்குள்ளே வைத்திருக்காமல் வெளியில் வந்து போடுவதே ஒரு அது பற்றிய மற்றவர்களின் கருத்துகளை பின்னூட்டங்கள் மூலம் பார்ப்பதற்குத் தானே...ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் மிகவும் மாறுபட்ட பார்வைகளை வைத்திருக்கும் உங்கள் பதிவை வாசிப்பது பல தடவைகள் எனக்கு அந்த பதிவு தொடர்பான பல புதிய கதவுகளை திறந்து விட்டு இருக்கு............. தொடர்ந்து எழுதுங்கள் !!

நேற்று இன்னுமொருவனின் பதிவை வாசித்தேன். பல்கோணங்களில் அலசி அருமையாக தனது எண்ணங்களை கோர்த்து எழுதினார்.

நிழலியின் இந்தப்பதிவு பற்றிய சிறிய விடயம் ஒன்றை மட்டுமே முன்பு கூற விரும்பினேன். அதாவது...

கொண்டாட்டம் வைத்த அந்த நண்பர் தற்செயலாக தனது தனிப்பட்ட வைபவம் பற்றி விமர்சித்து இப்படியோர் பதிவு பொதுஇடத்தில் பகிரப்பட்டது சம்மந்தமாக அறிந்தால் ஒன்றும் நினைக்கமாட்டாரா?

300 பேரை கூப்பிட்டு வைக்கும் ஒரு கொண்டாட்டம் தனிப்பட்ட ஒருவரின் நிகழ்வாக கொள்வது சரியாக இருக்காது

அத்துடன், இந்தப் பதிவை அவர் வாசித்தாலும் தான் வைத்த பார்ட்டி பற்றித்தான் எழுதுகின்றோம் என அவரால் ஊகிக்க முடியாது. அத்துடன் பார்ட்டி படங்கள் facebook எங்கும் நிறைந்து இருப்பதால் பொது வெளிக்கு வந்துவிட்டது விபரம்

எல்லாவற்றையும் விட எவரது தனிப்பட்ட விபரங்களும் இதில் இல்லை (என்னைப் பற்றி எழுதி இருப்பதை தவிர).

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிழலி

ஒருவரை இப்படி மதிப்பு பேபாடுகிறீர்கள்

மனைவியின் மைத்துணர்

பிறந்த நாள்

செலவு இவ்வளவு

இத்தனை வேலை செய்பவர்

என்னைப்பிடிக்காது

பாவிக்கப்பட்ட மதுபானம்

இவ்வளவும் தந்துவிட்டு அவர் வாசித்தாலும் அவருக்கு புரியாது என்பது??????????? :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லேபிள் 'சரக்கு'களை துபை வானூர்தி நிலைய வரி விலக்கப்பட்ட கடைகளில் பார்த்துள்ளேன்... நம்மவர்கள் அள்ளிச் செல்லும்பொழுது, இதிலென்ன அப்படியொரு விசேடம்? என சிறிதே நகைத்துவிட்டு, விலகிச் செல்வதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=ZvzX_5IhM9M&feature=related

இந்த லேபிள் 'சரக்கு'களை துபை வானூர்தி நிலைய வரி விலக்கப்பட்ட கடைகளில் பார்த்துள்ளேன்... நம்மவர்கள் அள்ளிச் செல்லும்பொழுது, இதிலென்ன அப்படியொரு விசேடம்? என சிறிதே நகைத்துவிட்டு, விலகிச் செல்வதுண்டு.

கேட்க போனால்.............

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று எமைதான் நோவார்கள். எல்லாம் எமக்கும் தெரிந்த மாதிரி அடக்கி கொண்டு இருந்துவிட வேண்டும்.

கள்தொடா உத்தமர் சங்கத்தையும் மூடியுள் முகர்வோர் சங்கத்தையும் இப்படியான விழாக்களுக்கு அழைப்பது எப்படியானே கேடு என்று அந்தநபருக்கு புரிந்தால் சரி. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.