Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலிச் சாமியார் நித்தியின் இரு புகைப்படங்கள்

Featured Replies

இலங்கையிலும் நாம் வாழும் அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் போலிச் சாமியார் நித்தியானந்தாவின் பல அமைப்புகளும் தியானம் பழக்கும் (என்ற போர்வையில்) மண்டபங்களும் இருக்கின்றன.

இவர்கள் விசக் காளான்கள். குடும்பத்தில் ஒருவர் இவரது பக்தராக இருந்தாலும் பீடித்து செல்லும் புற்று நோய் போன்று வளர்ந்து முழுக் குடும்பத்தையே நிர்மூலமாக்க வாய்ப்புகள் இருக்கு; கவனம்

p12.jpg

p19c.jpg

படங்களின் மூலம் : ஜூனியர் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

உவர்தான் இப்ப மதுரை ஆதீனமாம்....எங்க போய் முட்ட

மேலதிக விபரங்களுக்கு வினவு .கொம் நன்றிகள்vinavu

நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா

இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா. மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்? மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு சாதாரண பக்தர்களைவிட, மற்ற பிற ஆதீனங்களும், மடங்களும், இந்து மதத்தின் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் வானரப் படைகளும்தான் அதிர்ந்து நிற்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை, தனிப்பட்ட ஓட்டுக்கட்சிகள், அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடாகக் குறுக்கிக்காட்டி, ‘ஆயினும் ஜனநாயகம் புனிதமானதே’ என்று முதலாளித்துவக் கும்பல் மக்களை ஏய்த்து வருவதைப் போலவே, ஆன்மீகச் சீரழிவான நித்தியானந்தா விவகாரத்தை, மதுரை ஆதீனத்தின் புத்தி சுவாதீனமற்ற செயலாகக் காட்டுவதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் இந்து மதக் காவலர்கள். ஆனால், தற்போதைய மதுரை ஆதீனமான அருணகிரி, “தான் நித்தியானந்தாவைத் தேர்ந்தெடுத்தது சிவபெருமானின் ஆணை” எனக் கூறி, சிவபெருமானையும்சாட்சிக் கையெழுத்துப் போட வைக்கிறார்.

பெங்களூருக்கு அருகேயுள்ள பிடதி கிராமத்தில் தனி மடம் நடத்திவரும் நித்தியானந்தா சித்தர் மரபைப் பின்பற்றுபவர்; அவருக்குச் சைவ மரபுகள் ஒத்து வராது என மென்மையான கண்டனம் தொடங்கி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை மதுரை ஆதீனமாகப் பட்டம் சூட்டக் கூடாது என்பதுவரை நித்தியானந்தாவின் தேர்வுக்கு எதிராகப் பல்வேறுவிதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு நடுவே, ‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக் கொண்டு திரியும் இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாகத் தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.

‘‘இந்த நியமனம் தவறு என்று நாம் ஆரம்பித்தோமானால், ஒரு மடத்தின் ஒரு நியமனம் பற்றிப் பேசுவதோடு நாம் நின்றுவிடுவோமா? அல்லது ஒவ்வொரு மடத்திலும் எப்படிபட்ட ஆதீனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்குள்ள தகுதிகள் என்ன என்றெல்லாம் ஆராயத் தொடங்குவோமா? அதன் பிறகு மடங்கள், முனிசிபாலிட்டிகள் மாதிரி விமர்சனத்துக்கு உள்ளாகுமே தவிர, மத ரீதியான அமைப்புகளாக மதிக்கப்படாது” எனக் கூறி, நித்தியானந்தா விவகாரத்தை ஜீரணித்துக் கொள்ள வேண்டுமென பக்தர்களுக்கும், பிற ஆதீனங்களுக்கும் அறிவுரை வழங்குகிறார், துக்ளக் சோ.

தன்னையும் நித்தியானந்தாவையும் இணைத்துப் பேசிய காஞ்சி மட சங்கரனை ஏற்கெனவே கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார், நடிகை ரஞ்சிதா. தண்டத்தை மடத்திலேயே போட்டுவிட்டு, ஒரு பெண்ணுடன் தலைக்காவிரிக்கு ஓடிப்போன ஓடுகாலி சங்கராச்சாரிக்கு ஒரு நீதி, நித்தியானந்தாவுக்கு ஒரு நீதியா என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. நித்தியானந்தாவை வம்புக்கு இழுத்தால், பார்ப்பன மடங்களின் யோக்கியதையும் சந்திக்கு வந்து விடும்; அதற்கும் மேலாக இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதால்தான் இவ்விவாகாரத்தில் இந்து முன்னணிக் கும்பல் அடக்கி வாசிக்கிறது.

அதேசமயம், திருவாடுதுறை, தருமபுரம், குன்னக்குடி உள்ளிட்ட பிற ஆதீனங்கள், காங்கிரசு பெருச்சாளியான நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி, தேவர் தேசியப் பேரவை உள்ளிட்ட கும்பல் அமைத்துள்ள மதுரை ஆதீன மீட்புக் குழு நித்தியானந்தாவின் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. மதுரை ஆதீன மடத்தில் ஏற்பட்டுவிட்ட ஒழுக்கக்கேட்டை எதிர்ப்பது போல இவர்கள் காட்டிக் கொண்டாலும், இக்கும்பலின் எதிர்ப்பின் பின்னே சைவ வேளாள சாதி வெறியும், சொத்து கைநழுவிப் போகிறதே என்ற ஆத்திரமும்தான் உண்மையில் அடங்கியுள்ளது.

மதுரை ஆதீன மடம் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது; 1,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்று கூறப்படுவதற்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, அம்மடத்தின் வசம் ஏறத்தாழ 1,500 ஏக்கர் அளவிற்கு வளமான விளைநிலங்கள் உள்ளன; மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் மடத்திற்குச் சொந்தமான 80 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடை வாடகை, நிலம், மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் வருமானம் என ஆதீனத்தின் சொத்துக் கணக்கு 1,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன.

ஆதீனத்தின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தி அனுபவித்து வரும் ஒரு ஏழு பேரிடமிருந்து அச்சொத்துக்களை மீட்கப் போவதாக நித்தியானந்தா சவால் விட்டிருப்பது; அவரது பட்டமேற்புக்குப் பிறகு மடத்திற்குள் எழுந்துள்ள பூசல்கள்; மடத்திற்குள் நடந்த வருமான வரிச் சோதனை; ஆதீனத்திற்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துக்களைக் கையாளவோ, அவைகளில் தலையிடவோ நித்தியானந்தாவிற்குத் தடை விதித்து அளிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு என இவை அனைத்தும் ஆதீனம் அருணகிரிக்கு நெருக்கமாக இருந்த பழைய கும்பலுக்கும் புதிதாக மடத்திற்குள் புகுந்துள்ள நித்தியானந்தா கும்பலுக்கும் இடையே சொத்துத் தகராறு தொடங்கிவிட்டதையே காட்டுகின்றன.

ஆலயத்திற்குள் சாதி தீண்டாமை பாராட்டக் கூடாது; அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துவரும் 21ஆம் நூற்றாண்டில், தருமபுரம், திருவாடுதுறை உள்ளிட்ட ஆதீனங்களும், சைவப் பிள்ளைமார் சாதி வெறியர்களும், குறிப்பாக அச்சாதியைச் சேர்ந்த பிற்போக்கு நில உடைமைக் கும்பலும், “சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் ஆதீனமாக வரமுடியும்; நித்தியானந்தா முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அதனால் அவரை ஆதீனமாக ஏற்க முடியாது” என வெளிப்படையாகவே சாதிவெறியைக் கக்குகிறார்கள். இச்சாதிவெறியை மரபு என்று கூறி நியாயப்படுத்துகிறார்கள். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்வதற்காகவே இந்த ஆதீன மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகப் பீற்றி, இச்சாதி ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.

பீற்றிக் கொள்ளப்படும் சைவ மரபு என்பது பார்ப்பனியத்துக்கு வால்பிடிப்பது தவிர வேறென்ன? தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது; பார்ப்பானைத் தவிர, வேறு சாதியைச் சேர்ந்த எவனும் மணியாட்ட மட்டுமல்ல, மடப்பள்ளிக்குள்ளும் வரக்கூடாது; கருவறைக்குள் தமிழ் நுழையக் கூடாது என்ற ஆகம விதிகள் அனைத்தும் நித்தியானந்தாவின் லீலைகளுக்கு இணையாக அருவெறுக்கத்தக்கவை.

சிதம்பரத்தின் சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிக்க வேண்டும் எனக் கோரி சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவோடு போராடிக் கொண்டிருந்தபொழுது, இந்த ஆதீனங்களுள் ஒருவர்கூடத் தமிழுக்காகக் குரல் கொடுக்கவில்லை. சிதம்பரம் கோயில் சொத்துக்களைத் தீட்சிதர் கும்பல் சுரண்டிக் கொள்ளையடித்து வந்ததைத் தட்டிக் கேட்க இந்த ஆதீனங்களோ, சைவப் பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளோ துணிந்ததில்லை. மாறாக, இவர்கள் சைவத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் பிழைப்பு நடத்தி வந்தார்கள்; திருட்டு தீட்சிதர் கும்பலுடன் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.

சைவ மடங்களின் பெயரில் இருந்து வரும் பொதுச்சொத்துக்களைத் காலம்காலமாகத் தின்று கொழுத்து வரும் இந்தக் கூட்டத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். நித்தியானந்தா மக்கள் முன் அம்பலப்பட்டுப் போன கயவன், அவரது நியமனத்தை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களும், ஆதீனங்களுக்கு நெருக்கமான சைவப் பிள்ளைமார் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும் அம்பலமாகாத கயவர்கள்! ஆதீன மடங்களுக்குள் நுழைய முடியாமல் வீடியோ காமெராக்களை தடுத்து நிறுத்தியிருப்பதனால்தான், இந்த உருத்திராட்சப் பூனைகளின் புனிதம் இதுவரை பாதுகாப்பாக இருந்து வருகிறது.

காஞ்சி சங்கர மடம், மதுரை ஆதீனம் போன்ற பழைய மடங்களோ, நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்ற நவீன குருமார்கள் உருவாக்கியுள்ள புதிய கார்ப்பரேட் மடங்களோ எதுவும் அவர்களே கூறிக்கொள்ளும் ஆன்மீக நெறியை வளர்ப்பதற்காக நடத்தப்படவில்லை. இவர்கள் பக்தி, ஆன்மீகம் போன்றவற்றை மூலதனமாக்கி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல வியாபாரங்களை நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள். சாய்பாபா மடத்தில் நடந்த கொலைகள், சங்கராச்சாரிகள் மீதான பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு, நித்தியானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு, திருவாடுதுறை ஆதீனத்தில் நடந்த கொலை முயற்சி என ஆன்மீக மடங்கள் இந்தியாவெங்கும் கிரிமினல் கூடாரங்களாகச் சந்தி சிரிக்கின்றன.

கொலைக் குற்றவாளியான சங்கராச்சாரி இன்றும் லோக குருவாக வலம் வருகிறார்; நித்தியானந்தா மதுரை ஆதீனமாக முடி சூட்டப்படுகிறார். ஊடகங்களுக்கு இது ஒரு விற்பனைச் சரக்கு. மதுரை ஆதீன மட விவகாரத்தில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி, கஸ்தூரி ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதை வைத்து, இந்த விவகாரத்தை ஒரு கிளுகிளுப்பான செய்தியாகத்தான் பத்திரிகைகள் தந்துள்ளன.

மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்

தாங்கள் போற்றிக் கொண்டாடும் மரபு, புனிதம் ஆகியவை புழுத்து நாறியபோதும், இந்நிகழ்வுகளை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஜடங்களாகவே பக்தர்கள் நடந்து கொள்கின்றனர். பக்தி என்பதே ஆண்டவனுடன் நடத்தும் பேரமாகவும், மதம் என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு சொல்லும் ஆன்மீக கன்சல்டன்சியாகவும் மாறியுள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட அசிங்கங்களோடு சமாதான சகவாழ்வு நடத்துவதை பக்தர்கள் அறம் சார்ந்த பிரச்சினையாகவே கருதுவதில்லை போலும்.

அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தக் கூத்துகளைப் பற்றித் தமிழக அரசோ அறநிலையத்துறை அமைச்சரோ வாய்திறக்கவில்லை. தனக்கு அம்மாவின் ஆசி இருப்பதாக நித்தியானந்தா கூறியிருப்பதை வெறும் வாய்ச்சவடால் என்று ஒதுக்கவும் முடியவில்லை. மத உரிமை, மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை ஆகிய அரசியல் சட்ட உரிமைகளின் கீழ் தங்களுடைய சொத்துக்களின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை மடங்களும் ஆதீனங்களும் பெற்றிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்தின் காரணமாகத்தான் தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏறுவதற்கும், தீட்சிதர்களின் இடுப்பிலிருந்து கோவில் சாவியை இறக்குவதற்கும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, இந்து மத உரிமையின் பெயரால்தான் அனைத்து சாதியினரும் அரச்சகராகும் உரிமை இதுவரையிலும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

நல்லொழுக்கத்தின் நாட்டாமைகளாக ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் இந்த மதபீடங்கள், தமது சொந்த நடவடிக்கைகள் மூலமாகத் தாமே அம்பலப்பட்டு நாறிய பின்னரும் ஆளும் வர்க்கங்கள் இவர்களைக் கைவிடுவதில்லை. தங்கள் கைவசம் இருக்கும் பல்லாயிரம் கோடி சொத்துகள் மூலமும், ஆளும் வர்க்கங்கள் மற்றும் சாதி ஆதிக்க சக்திகளுடன் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணியின் மூலமும் தங்களுடைய இழந்த செல்வாக்கை இவர்கள் மீட்டுக் கொள்கின்றனர். சங்கராச்சாரி காலையில் கொலை கேஸ் வாய்தாவுக்குப் போய்விட்டு வந்து மாலையில் அருளாசி வழங்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோல நித்தியானந்தாவைப் பொருத்தவரை நேற்று படுக்கையறைக் காட்சி! இன்று பட்டாபிஷேகம்!

இந்நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. மத உரிமை என்ற பெயிரில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும். மன்னர்களால் இந்த மடாதிபதிகளுக்குப் பிடுங்கித் தரப்பட்ட மக்கள் சொத்துகளான நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் உடைமையாக்கப்படவேண்டும். மடாதிபதிகள் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் சாதி சார்ந்த மரபுகள் கிரிமினல் குற்றமாக்கப்பட்டுத் தடை செய்யப்படவேண்டும். நித்தியானந்தா, சங்கராச்சாரி, ஆதீனங்கள் உள்ளிட்ட கும்பல்கள் ஒழிக்கப்பட்டால்தான் சமூகத்தின் ஒழுக்கம் மேம்படும் என்பதை நாம் மக்களுக்குப் புரியவைக்கவேண்டும்

_______________________________________________

ஒரு மனிதன் தன்னை சாமி என்று சொன்னாலே, அவன் போலிதான். இதில் தனியாக நல்ல சாமியார், போலிச் சாமியார் என்று ஒன்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி ஒரு பகுத்தறிவு வாதி. மக்களை சரியாக பகுத்தறிந்து அவர்களைக் கவர காவி வேடம் (சாமியார் வேடம்) போடும் அதேவேளை.. உடலிச்சையோடு அலையும் பெண்களைக் கவர்ந்து ஆடை களைகிறார்..! அதாவது தனது பகுத்தறிவை சரிவர பாவிக்கிறார்.

நித்தியை சுற்றி வைச்சது போல.. கருணாநிதி.. பெரியார் என்று ஒரு நாலு கமராவை வைச்சுப் பாருங்க.. நித்திக்காவது ஒரு ரஞ்சிதா தான்.. கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்க எத்தனை நடிகைகள் போய் வந்திருப்பினம்... ஏன் இப்பவும் தான் போய் வருகினம்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வையும் குடையப் போனா நிறைய வரும். அதில் இவன் உசத்தி அவன் உசத்தி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் நித்தியா ஊருக்குப் பயந்து செய்வதை பலர் பயப்பிடாமல் செய்கிறார்கள்.. அதற்கு பகுத்தறிவு என்றும் பெயரிட்டுக் கொள்கின்றனர். ஒரு பெண் கொஞ்சம் வித்தியாசமா எழுதினாலே அவளை.. படுக்கைக்கு அழைக்கும் இணையப் பகுத்தறிவுவாதிகளோடு ஒப்பிடும் போது நித்தியானந்தா எவ்வளவோ மேல்.

நித்தியானந்தாவே தமிழகம் என்ற கணக்கா மக்கள் நலன் பற்றிய செய்திகள் இன்றி.. அவரையே பிந்தொடர்ந்து கொண்டிருக்கும்.. நக்கீரனும்..இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நாங்கள் நித்தியானந்தாவின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல அர்த்தம். நித்தியானந்தாக்கள்.. பல வேடங்களில் உலகில் உள்ளனர். அதில் பகுத்தறிவு வேடதாரிகளும் அடங்குவர்..! சாமியார் வேடம் மட்டுமே தவறு செய்வது என்ற எண்ணப்பாடு தவறாகும். சாமியார் வேடம் மறைச்சுச் செய்வதை பகுத்தறிவு வேடம்.. புரட்சி என்று செய்து. அவ்வளவும் தான். அடிப்படையில் இரண்டும் ஒரே குட்டையில் ஊறினதுகள் தான்..! இவர்கள் இருதரப்பு மீதும்.. சட்டம் சரியாக தன் கடமையை செய்ய வேண்டும்.

இடையில் பாவம்.. பண்பாடு.. கலாசாரம்.. விழுமியம்.. ஒழுக்கம்.. என்று.. ஒழுங்கா வாழும் மக்கள் இந்தத் தரப்புக்களின் கருத்துக்களில் சிக்கி சின்னாபின்னமாவது தான் பரிதாபம்..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

நித்தி தான் ரஞ்சியோடு உறவு கொண்டுது உண்மைதான் என்று தைரியமாக நின்றிருந்தால், அந்த இளைஞனை நான் மதித்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்.. தான்.. மணியம்மையை.. "அது" க்குத்தான் கலியாணம் செய்தனான் என்று ஏற்றுக் கொண்டிருந்தால்.. நானும் அந்தக் கிழவரை மதித்திருப்பேன். உதவிக்கு வைச்சுக்க என்று சொல்லி.. ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை ஒரு 75 வயசு கிழவன் நாசம் பண்ணினதை.. விடவா.. நித்தி அதிகம் செய்திட்டார்..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கந்த[size=5]சாமி[/size] நானும் போலியா??? :D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்ததெல்லாம் சாமி என்ற பெயர் உள்ளவர்கள் பிரச்சனையானவர்கள்தான் உ;ம் :சுப்பிரமணிம்சாமி :D

பெரியார்.. தான்.. மணியம்மையை.. "அது" க்குத்தான் கலியாணம் செய்தனான் என்று ஏற்றுக் கொண்டிருந்தால்.. நானும் அந்தக் கிழவரை மதித்திருப்பேன். உதவிக்கு வைச்சுக்க என்று சொல்லி.. ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை ஒரு 75 வயசு கிழவன் நாசம் பண்ணினதை.. விடவா.. நித்தி அதிகம் செய்திட்டார்..???! :lol::D

[size=4]என் மனதில் பல நாட்களாக அடங்கியிருந்த வார்த்தைகள் இவை . [/size]

நித்தி ஒரு பகுத்தறிவு வாதி. மக்களை சரியாக பகுத்தறிந்து அவர்களைக் கவர காவி வேடம் (சாமியார் வேடம்) போடும் அதேவேளை.. உடலிச்சையோடு அலையும் பெண்களைக் கவர்ந்து ஆடை களைகிறார்..! அதாவது தனது பகுத்தறிவை சரிவர பாவிக்கிறார்.

நித்தியை சுற்றி வைச்சது போல.. கருணாநிதி.. பெரியார் என்று ஒரு நாலு கமராவை வைச்சுப் பாருங்க.. நித்திக்காவது ஒரு ரஞ்சிதா தான்.. கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்க எத்தனை நடிகைகள் போய் வந்திருப்பினம்... ஏன் இப்பவும் தான் போய் வருகினம்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வையும் குடையப் போனா நிறைய வரும். அதில் இவன் உசத்தி அவன் உசத்தி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் நித்தியா ஊருக்குப் பயந்து செய்வதை பலர் பயப்பிடாமல் செய்கிறார்கள்.. அதற்கு பகுத்தறிவு என்றும் பெயரிட்டுக் கொள்கின்றனர். ஒரு பெண் கொஞ்சம் வித்தியாசமா எழுதினாலே அவளை.. படுக்கைக்கு அழைக்கும் இணையப் பகுத்தறிவுவாதிகளோடு ஒப்பிடும் போது நித்தியானந்தா எவ்வளவோ மேல்.

நித்தியானந்தாவே தமிழகம் என்ற கணக்கா மக்கள் நலன் பற்றிய செய்திகள் இன்றி.. அவரையே பிந்தொடர்ந்து கொண்டிருக்கும்.. நக்கீரனும்..இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நாங்கள் நித்தியானந்தாவின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல அர்த்தம். நித்தியானந்தாக்கள்.. பல வேடங்களில் உலகில் உள்ளனர். அதில் பகுத்தறிவு வேடதாரிகளும் அடங்குவர்..! சாமியார் வேடம் மட்டுமே தவறு செய்வது என்ற எண்ணப்பாடு தவறாகும். சாமியார் வேடம் மறைச்சுச் செய்வதை பகுத்தறிவு வேடம்.. புரட்சி என்று செய்து. அவ்வளவும் தான். அடிப்படையில் இரண்டும் ஒரே குட்டையில் ஊறினதுகள் தான்..! இவர்கள் இருதரப்பு மீதும்.. சட்டம் சரியாக தன் கடமையை செய்ய வேண்டும்.

இடையில் பாவம்.. பண்பாடு.. கலாசாரம்.. விழுமியம்.. ஒழுக்கம்.. என்று.. ஒழுங்கா வாழும் மக்கள் இந்தத் தரப்புக்களின் கருத்துக்களில் சிக்கி சின்னாபின்னமாவது தான் பரிதாபம்..! :icon_idea::lol:

[size=4]என் மனதில் பல நாட்களாக அடங்கியிருந்த வார்த்தைகள் இவை . [/size]

  • தொடங்கியவர்

அப்ப கந்தசாமி நானும் போலியா??? :D

ஆயிரத்தில் ஒரு கேள்வி...!! வாசித்தவுடன் வந்த சிரிப்பை தாங்க முடியவில்லை !!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கந்த[size=5]சாமி[/size] நானும் போலியா??? :D

யாழில் ஏற்கனவே ஒரு பெயரில் இருந்து கொண்டு கருத்து கந்தசாமி என்ட இன்னொரு பெயரில் வருவதால் நீங்களும் போலி தான் :lol:

அப்ப கந்த[size=5]சாமி[/size] நானும் போலியா??? :D

காவி உடுத்து நாலு சீடரும் இருந்தால் உங்களுக்கும் விதிவிலக்கில்லை

  • கருத்துக்கள உறவுகள்

p12.jpg

படத்தை எடுத்து விடுங்களப்பா

எனக்கே மூக்கு வேர்க்குது

அது தொடர்ந்தால்

விசுகுவும்

விசுவாமித்திரா ஆவது தடுக்கமுடியாதது... :wub::D :D

இனிமேல் சாமியார் ஆகிறவங்க எல்லாருக்கும் நலமடிக்கிற சட்டம் கொண்டுவரவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா இங்கு எங்கே தப்புப் பண்ணியிருக்கிறார்? அமெரிக்க இந்தியப்பெண்ணை அவரது விருப்பத்துடன் உறவுகொண்டிருக்கிறார் ரஞ்சிதாவுடனும் அப்படியே. படித்த முட்டாள்கள் அனைவரும் இவரது இலக்கு, யாராவது ஏழைப் பொதுசனம் எப்போதாவது இவரைக் குறைகூறியுள்ளதா? படிச்ச திமிர், அப்பன் ஆத்தையினதும் உழைப்பினால்வந்த பணத்திமிர் இவைகளும் உடல் தினவும் சாமியார்களைதேடிப்போய் தங்களது சேட்டைக் குணங்களைக் காட்டிவிட்டு, எதைத் தின்றால் செமிக்கும் என சும்மாவே உமியை மெல்லும் பத்திரிகைகளுக்கு மெல்ல அரிசிபோட்டகதை தவிர இதில் எதுவுமில்லை. பணம் சம்பாதிக்க இந்தியாவில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன தவிர இச்சாமியார் இந்தியாவில் எதுவித சட்டமுரணான விடையங்களையும் அவ்வூர் அரசியல் நாதாரிகளைப்போல் செய்யவில்லை. யாரோ ஒரு ஏழைகுடிமகனால் குடிசைத்தொழிலாகத் தயாரிக்கப்பட்ட மாலை கட்ற்கரையில் சேகரிக்கப்பட்ட சங்கு சிப்பிகள் எப்போ அழிந்துவிடும் என இருக்கும் கைவினத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட வெங்கலச் சிலைகள் இவைகளை வெளிநாடுகளில் வித்து இந்தியாவுக்கு பணத்தினைக் கொண்டுவந்து தனது ஆச்சிரமத்தில் குவித்தார் அன்றேல் பதுக்கி வைத்தார் இவைகளை கர்நாடக, தமிழக பார்ப்பன வர்க்கத்திற்கும் அரசியல் சாக்கடைகட்கும் அதிகாரவர்க்கத்திற்கும் அபகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது, அதற்கான நடவடிக்கையே இவை. காஞ்சிபுரத்தில இருந்துகொண்டு நடிகை சுவர்ணமால்யாவுடன் அந்தரங்க கலவி செய்ததை கண்ணால் கண்டதால் சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய காஞ்சிக்கயவர்களைவிட இவர் என்னத்தைச் செய்துவிட்டார். மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான தமிழகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை ஆட்டைபோட்டவர்கள், நித்தியின் வருகையால், அது எங்கே கைநளுவிப்போய்விடுமோ என்பதால் வந்த வழக்குகளாகவும் இருக்கலாம். ஒருசில ஆயிரம் இருக்கும் புலம்பெயர் தேசத்துக் கோவிகளிலேயே செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் சுண்டல் கடலை திண்டுவிட்டு உண்டியலில் எதுவுமே போடாது வீடு துரும்ம்புவோர் மத்தியிலும் எத்தனை லட்சங்கள் தேறுகுது? இந்தத் தினவில்தானே கோவில் நிர்வாகி இரண்டுக்கு மேற்பட்ட பொண்டாடிகளை வைத்திருக்கிறார்கள். அப்படியெண்றால் இரண்டாயிரம் வருடங்களுக்குமேல் பழைமையான மதுரை ஆதீனத்தின் சொத்துகள், அதன் நிர்வாகதில் உள்ள கோவிகள் ஆகியனவது வருமானங்களை சிறிது எண்ணிப்பாருங்கள். கதவைத் திறவுங்கள் காத்துவரும்.

p12.jpg

ஜவ்லி லவ்லி,

பம்பைத் திற, பரவசம் பரவட்டும்.

தப்பிலியானந்தா

ஜவ்லி லவ்லி,

பம்பைத் திற, பரவசம் பரவட்டும்.

தப்பிலியானந்தா

சிரி(சிறி) அண்ணா ஓடி வாங்கோ கனடாவுக்கு,இங்கு வடக்காலே போனால் கைவிட்ட வீடுகள் பெரிய காணிகளுடன் உண்டு.சந்தர்பத்தை பயன்படுத்தி நாங்களும் ஆசீர்வாதம் வழங்குவோம்

ஜவ்லி லவ்லி,

பம்பைத் திற, பரவசம் பரவட்டும்.

தப்பிலியானந்தா

சுவாமி தப்பிலியானந்தா! தங்கள் ஆசிரமபாசை அடியவனுக்கு புரியவில்லை.

சுவாமி தப்பிலியானந்தா! தங்கள் ஆசிரமபாசை அடியவனுக்கு புரியவில்லை.

நீலப்பறவை

லண்டன் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகில் எமது கொள்ளைகளைப் பரப்ப சிறு குடில்கள் திறந்துள்ளோம். இங்கு எமது பனி தொடர்கின்றது.

கனடாவிலிலும் பணிகளை ஆரம்பிக்க, தங்கள் பெயரில் உள்ள 'நீலம்' ஒன்றே போதும்.

'ஆ' சிரம பரிபாசைகளை விளக்க கனடாவிலும் சிறு 'work shop ' நடத்துவோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜவ்லி லவ்லி,

பம்பைத் திற, பரவசம் பரவட்டும்.

தப்பிலியானந்தா

யாரோ ஒரு ஹாடப் கேஸ் வந்து நித்தியைக் கட்டிப்பிடித்தால் நித்தி என்ன செய்யும். இளவயது. ஒரு அளவுக்குத்தான் கட்டுப்பாட்டோட இருக்கலாம். இந்தமாதிரிப் பெண்கள்தான் சாமிமாரைக் கெடுக்கிறார்கள். கடைசியில் தாங்கள் தப்பிக் கொள்கிறார்கள். பாவம் சாமிமார் மாட்டிக் கொள்கிறார்கள். என்னமாயிருந்த மனிசன். என்னமாப் போயிற்றுது;. கதவைத் திறக்கக் காற்று மட்டுமல்ல கண்டதெல்லாம் உள் நுழைந்துவிட்டன.

...

p12.jpg

...

[size=3]சாமியாராக இருந்து கொண்டு சிசியன்/ பக்கதனுக்கு அருள்வாக்குக் கொடுக்காமல் விட்டால் அது தெய்வ குற்றம் ஆகாதா??? ^_^[/size][size=3] :lol:[/size][size=3] :D[/size][size=3] :icon_mrgreen:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]சாமியாராக இருந்து கொண்டு சிசியன்/ பக்கதனுக்கு அருள்வாக்குக் கொடுக்காமல் விட்டால் அது தெய்வ குற்றம் ஆகாதா??? ^_^[/size][size=3] :lol:[/size][size=3] :D[/size][size=3] :icon_mrgreen:[/size]

பக்தனுக்கு ஒகே!

பக்தைக்கு என்று வரும்போது தான் பிரச்சனையே வருகின்றது, குட்டி!

இந்த விதத்தில், பக்தைகள், நித்தியிடம் போகும் முன்பு, மொட்டையடித்துச் சந்தனம் பூச வேண்டும் என்று முன் நிபந்தனை போட்டால், இந்தத் தொல்லை குறையலாம்!

ஏனெனில், உண்மையான பக்தி மொட்டையடிக்கத் தயங்க மாட்டாள்!

article-2153691-136a5fd0000005dc-909_306x423.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நித்திக்கு மற்றவர்களை Mind Control செய்யும் வித்தை தெரிந்திருக்கிறது.. :rolleyes:

பக்தனுக்கு ஒகே!

பக்திக்கு என்று வரும்போது தான் பிரச்சனையே வருகின்றது, குட்டி!

இந்த விதத்தில், பக்தைகள், நித்தியிடம் போகும் முன்பு, மொட்டையடித்துச் சந்தனம் பூச வேண்டும் என்று முன் நிபந்தனை போட்டால், இந்தத் தொல்லை குறையலாம்!

ஏனெனில், உண்மையான பக்தி மொட்டையடிக்கத் தயங்க மாட்டாள்!

அது சரி... :rolleyes: இப்படியானதுகள் எல்லாம் மொட்டை அடிக்கத் தயங்குங்கள் என்றா நினைக்கிறீங்கள் புங்கையூரன்?

நித்திக்கு மற்றவர்களை Mind Control செய்யும் வித்தை தெரிந்திருக்கிறது.. :rolleyes:

[size=4]அதைச் சாதித்த வெற்றிக் களிப்பில் தான் தனது பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறாராக்கும்..[/size] ^_^

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

p12.jpg

நித்தி மட்டுமல்ல.. பின்னால் அவரது சீடரும் புகுந்து விளையாடுறார்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.