Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தநாள் ஞாபகங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

கள்ளமாகக் கள்ளுக் குடித்தல்

http://ta.wikipedia....sh&bubbling.jpg

Toddy_fresh%26bubbling.jpg

பல கள்ளு முட்டிகளுக்கு கல் எறிந்து உடைத்த அந்த நாள் ஞாபகங்கள் இன்றும் மனதில்.

  • Replies 68
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மாட்டு வண்டில் சவாரி

28032011parampariyamL.jpg

ஒவ்வொரு வருடமும் தவற விடாது வட்டக்கச்சிக்கு சென்று இந்த மாட்டு வண்டி சவாரியை பார்த்த ஞாபகம் :D

நுங்கு குடித்தல் .

nungku.JPG

http://umarikadu-nad...anai-maram.html

வட்டகச்சியில்

நுங்கு குடித்தது

கள்ளு குடித்தது

மீன் பிடித்தது

முயல் அடித்தது என இன்னும் எத்தனையே அந்த நாள் ஞாபகங்கள்.

நன்றி கோமகன் உங்கள் இணைப்பிற்கு.

கோழிச்சண்டை தீபாவளியில சூடுபறக்கும்.

http://www.google.fr...r:20,s:36,i:252

kaakavalluvarpedu.jpg

  • தொடங்கியவர்

பெடியள் சேர்ந்து களவாக கோழி கறி காச்சி பாணுடன் சாப்பிட்டது அதைவிட சிறியவயசில் கள்ளன் போலிஸ் விளையாடினது கிட்டி பொல்லு விளையாட்டில் பெல்லி நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டு பின்னர் அம்மாவிடம் பூவரசம் தடியால் அடிவாங்கியது அதைவிட சிறிய வயசில் மாங்காய் களவெடுத்து சாப்பிடுவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . :D:lol:

பெடியள் செட் சோ்ந்தாலே சொல்லவா வேனும் தமிழரசு :D அதுவும் மாங்காய களவெடுத்து அதை மதிலிலோ அல்லது களவெடுத்த மரத்திலோ குத்தி உடைச்சு சாப்பிடுறது அது ஒரு தனி டேஸ்ட் தான். :D

  • தொடங்கியவர்

make-simple-sling-shot-800x800.jpg

சிறு வயதிலே கொலைகாரன் என்ற பெயரை எமக்கு வாங்கி தந்த பெருமை இந்த கெட்டப்பொல்லுக்கு உண்டு.

553299_330971420299851_686627242_n.jpg

[size=5]அண்ணை வடியோடதான் நிக்கிறார் ,[/size][size=5] :icon_idea:[/size]

Toddy_fresh%26bubbling.jpg

Edited by sudalai maadan

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் படங்களுக்குப், படத்தின்ர பேரப் பாக்காம ' வயது வந்தவர்களுக்கு' மட்டும், எண்டு எழுதியிருக்கிறத மட்டும், அவசரத்தில பாத்திட்டுத் தியேட்டருக்குள்ள, நண்பர்களோட இருட்டில ஓடிப் போய் இருக்கிறது!

பிறகு, ஒண்டையும் காணாம, மூட்டை கடியும் தாங்க ஏலாமல், விரக்தியுடன் திரும்பி வருவது! :huh:

கிளித்தட்டு

Game_Kittip-pullu.jpg

http://upload.wikime...ittip-pullu.jpg

தாச்சி மறித்தல்

sarana13.jpg

http://mankavuchi.bl...01_archive.html

இந்த திரி பல சிறுவயது விளையாட்டுகளை நினைவுக்கு கொண்டுவருகிறது.

கிளி தட்டு/ தாச்சி மறித்தல் இரண்டும் ஒன்றில்லையா.

நீங்கள் கிளிதட்டு என்று போட்டிருப்பது கிட்டி புள்ளு/ பொல்லு

நுங்கு குடித்தல் .

nungku.JPG

http://umarikadu-nad...anai-maram.html

கோமகன் உங்களில் பிழை பிடிக்கவில்லை. மேலே நீங்கள் இணைத்திருக்கும் வலைப்பதிவுக்கு உரியவர் நான் 2007 ஆம் ஆண்டு எழுதிய பனைமரம் பற்றிய பதிவை தனது பதிவாக வரிக்குவரி பிரசுரித்துள்ளார் :o

இது தான் எனது மூல பதிவு

http://viriyumsirakukal.blogspot.ca/2007/05/blog-post_02.html

இந்த திரி பல சிறுவயது விளையாட்டுகளை நினைவுக்கு கொண்டுவருகிறது.

கிளி தட்டு/ தாச்சி மறித்தல் இரண்டும் ஒன்றில்லையா.

நீங்கள் கிளிதட்டு என்று போட்டிருப்பது கிட்டி புள்ளு/ பொல்லு

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிகள் குளக்காட்டான் . திருத்தம் செய்துள்ளேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சின்னல்லை பரிமளத்தோடை சேர்ந்து குரும்பட்டியிலை தேர்செய்து இழுத்தஞாபகம் இப்பவும் கண்ணுக்கு முன்னாலை நிக்குது...அதோடை களிமண்ணிலை புக்கைபொங்கி சிரட்டையுக்கை பரிமாறினதும் கண்ணை கலங்க வைக்குது.......எல்லாத்தையும் விட சும்மா பகிடிக்கு அப்பாஅம்மா விளையாட்டு விளையாட வெளிக்கிட பரிமளத்தின்ரை தாய்க்காரி என்ரை சொத்தையிலை இரண்டு தந்ததும் மறக்கேலாது.

கோமகன் உங்களில் பிழை பிடிக்கவில்லை. மேலே நீங்கள் இணைத்திருக்கும் வலைப்பதிவுக்கு உரியவர் நான் 2007 ஆம் ஆண்டு எழுதிய பனைமரம் பற்றிய பதிவை தனது பதிவாக வரிக்குவரி பிரசுரித்துள்ளார் :o

இது தான் எனது மூல பதிவு

http://viriyumsiraku...og-post_02.html

இப்படி எனக்கும் சிலமுறை எனது வலைப்பூவில் இருந்து களவு போகுது . கணணி மென்பொருள் வித்துவானுகளிட்டை கேட்டன் அவை வழி சொல்லியிருக்கினம் . ஒரு நண்பனிட்டை தான் கேட்டிருக்கிறன் இனி என்ரை வலைப்பூவிலை களவு போகாது நீங்களும் முயற்சி செய்யுங்கோ .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91984

இது தான் நான் கேட்ட லிங் இதுலையும் போய் பாருங்கோ .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*பனையோலை பீப்பீ

பனையோலையை(வடலி) உடையாத பருவத்தில் காயவைத்து சுத்தி முடிவை முள்ளால் குத்தி பனையோலையில் நாக்கு செய்து பீப்பீயின் வாயில் செருகி ஊதுவது.

*ஊமல் கொட்டை காத்தாடி

ஊமல்க்கொட்ட்டையில் நடுவில் துவாரம் வைத்து அதில் தடியை சொருகி(அச்சு) தடியின் மேல் அளவாக சீவி எடுத்த பனம் மட்டையை போட்டு ஊமல் கொட்டையின் பக்கவாட்டில் ஒரு துவாரம் வைத்து அதனூடு நூலை திணித்தி அச்சு தடியுடன் கட்டி இழுக்கும் போது காத்தாடி சுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மூரில் நட்சத்திரம் எனும் ஒருவர் இருந்தார்.

மிகப் பெரும் எம்ஜிஆர் அபிமானி.

எம்ஜிஆர் மேல் யாரேனும் குறை சொன்னால் சண்டைக்கு வந்து விடுவார்.

அவர் சைக்கிளில் வரும் நேரம் எமக்கு கொண்டாட்டம்.

'எம்ஜிஆர் வீழ்க' என சிறுவர்கள் மறைந்து இருந்து Turn எடுத்து கத்துவார்கள்.

சைக்கிளில் இருந்து வேகமாக இறங்கி 'நடக்காது, வாழ்க எம்ஜிஆர் ' என்பார்.

மீண்டும் சைக்கிள் ஏறும் வரை காத்திருந்து அடுத்த சிறுவன் தொடர்வான். உடனே இறங்கி அவரும் கத்துவார்.

அவரும் விடார். சிறுவர்களும் விடார்.

கடைசி சிறுவன் போதுமடா, ஆளைப் போக விடு என்று சொல்லும் வரை அவ்விடம் விட்டு நகரார் அவர்.

அது ஒரு காலம்.

Edited by Nathamuni

.

பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் ஊருக்குப் போவோம். ஊரென்றாலே சந்தோசம் தான்.

கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மண் எடுத்த இடங்களை குண்டு என்பார்கள். கடல் பெருகி வற்றும் பொழுது இந்தக் குண்டுகளில் தங்கும் கடல் நீரில் சிறிய மீன்கள் மாட்டுப் பட்டு நிற்கும். நாங்கள் மா அரிக்கும் அரிக்கன் தட்டு, சிறிய கடகம் போன்றவற்றால் இவற்றை பிடிக்க நாள் முழுக்க முயற்சி செய்வோம். அம்பிட்டால் ஜாம் போத்தலில் பிடித்த மீன்குஞ்சைக் வீட்டுக்கு கொண்டு வருவோம். பெரிய சாதனை!!

ஈச்சம் பற்றைகளுக்கிக் கிட்டப் போகப் பயம். பாம்புகள்!! யாராவது ஈச்சங்காய் குலை வெட்டித்தருவார்கள். உப்பில் ஊறவிட்டு கறுக்கப் பழுத்ததும் சாப்பிடுவோம்.

நுங்குக்கும் பஞ்சமில்லை. பனம் பழம் நெருப்பில சுட்டும் உருக உருக‌ சாப்பிடுவோம். மாரியில அம்மம்மா வீட்டில பனம் பாத்தி போடுவார்கள். பனங்கிழங்கு அவிச்சு மிளகு வெங்காயம் பச்சமிளகாய் எல்லாம் போட்டு இடிச்சு உருட்டித் தருவார்கள்.

ஊரில சுற்றி வர உள்ள குறிச்சி முழுக்க உறவினர்கள். பின் விறாந்தைக்குப் பின்னால மணலில் வாங்குகள் கதிரைகளப் போட்டு இரவிரா கதைதான். பெரிய பானையில கூலும் காய்ச்சுப்படும்.

அம்மம்மாவின் தமக்கை வீட்டில ஒரு பெரிய வேப்பமரம். அதில உயரமான கொப்பொன்றில ஊஞ்சல் கட்டியிருந்தார்கள். அம்மாவும், அவட ஒன்றவிட்ட சகோதரியும் வலிப்பார்கள். நாங்கள் ஊஞ்சலில உயிரக் கையிலபிடிச்சுக்கொண்டு இருப்போம். ஊஞ்சல் பக்கத்தில் உள்ள தேமா மரத்தின் உச்சி அளவிற்கு போய் வரும்.

கசுரினா கடலில் குளிக்கிறத்தும் அடிக்கடி நடக்கிற ஒன்று. வண்டிலில் போவோம். நாங்களும் நீண்ட நேரம் குளித்து, வண்டில் நாம்பன் மாடுகளையும் குளிப்பாட்டுவோம். கடல் உப்பு நீரில் குளிப்பாட்டினால் மாடுகளுக்கு இலயான் தொல்லை குறைவு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னிலை ஒழிச்சு பிடிச்சு விழையாடுறது எனக்கு நல்ல விருப்பம். ஏனெண்டால் எப்பவும் நான் ஒழிக்க போகேக்குள்ளை என்ரை ஒரு மச்சளையும் இழுத்தக்கொண்டு போய்தான் ஒழிக்கிறனான். கடைசி வரைக்கும் எங்களை கண்டு பிடிக்கவே ஏலாது ஏணென்டால் நான் ஒழிக்கிற எல்லை தாண்டி எங்கையாவது போய் ஒழிச்சிடுவன். அந்த மச்சாள் இப்ப லண்டனிலை இருக்கிறாள். இப்பவும் ஒழிச்சு பிடிச்சு விழையாடினது ஞாபகம் இருக்கோ எண்டு கேட்டால் சீ போடா சனியன் எண்டு வெக்கத்தோடை திட்டுவாள் அததான் ஏனெண்டு தெரியேல்லை :( :( :(

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சின்னிலை ஒழிச்சு பிடிச்சு விழையாடுறது எனக்கு நல்ல விருப்பம். ஏனெண்டால் எப்பவும் நான் ஒழிக்க போகேக்குள்ளை என்ரை ஒரு மச்சளையும் இழுத்தக்கொண்டு போய்தான் ஒழிக்கிறனான். கடைசி வரைக்கும் எங்களை கண்டு பிடிக்கவே ஏலாது ஏணென்டால் நான் ஒழிக்கிற எல்லை தாண்டி எங்கையாவது போய் ஒழிச்சிடுவன். அந்த மச்சாள் இப்ப லண்டனிலை இருக்கிறாள். இப்பவும் ஒழிச்சு பிடிச்சு விழையாடினது ஞாபகம் இருக்கோ எண்டு கேட்டால் சீ போடா சனியன் எண்டு வெக்கத்தோடை திட்டுவாள் அததான் ஏனெண்டு தெரியேல்லை :( :( :(

சாத்திரியார்...

விசயத்தோடை தான்... ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியிருக்கிறார். :D :D :lol: :lol:

நீங்கள் (ஒரு) பேப்பரிலை... போட்டுடுவியள் எண்ட பயமாய் இருக்கலாம். :icon_mrgreen::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

BritishSet1.jpg

பல தரப்பட்ட ரவைகள்.. ரவைக்கூடுகளுடன். மற்றும் சன்னங்கள்

556%20ammo%20belt%20Large.jpg

ரவைத் தொகுதி: செயின்

defused-mortar-shell.jpg

ஷெல் வால் பகுதியில் பா(f)னுடன்.

1987 இல் இந்தியப் படைகளின் வருகையோடு.. சிறீலங்கா இராணுவம்.. யாழ் தொலைத்தொடர்பு கோபுரப் பகுதியில் இருந்து பின் வாங்கி யாழ்ப்பாணக் கோட்டைக்குள் முடங்கிக் கொண்டது. அந்த வேளையில்.. நண்பர்களின் வீடு பார்க்கப் போறது என்று நண்பர்களோடு.. போய்... மிதிவெடிகள் இருக்கும் என்ற பயத்தில்.. மரங்கள்.. வேலிகளூடு ஏறி விழுந்து... சென்ரி பொயிற் இருந்த இடங்களில் காணப்பட்ட சப்பாத்து அடையாளம் வைத்து நாங்களும் நடந்து.. வெற்று ரவைகளும்.. ரவைக் கூடுகளும் லிங்குகளும் பொறுக்கி.. செயின் செய்வது தான் எங்கள் பொழுது போக்கு.

GRENADE%204%5C%27%5C%27.%202178.jpg

JR கையெறி குண்டு. கிளிப்புடன்.

அத்தோடு ஜே ஆர் கைக்குண்டுக் கிளிப்புகள்.... அரைகுறையாக வெடிக்காத ஷெல்.. வெடித்த ஷெல்லின் பா(f)ன்.. பொறுக்கிறதும் எங்கள் தொழில். நாங்கள் இவற்றை விற்பதில்லை. மாறாக வீட்டில் சேமித்து வைத்திருந்தோம்.

பின்னர் இந்தியப் படை.. அதே ஆண்டு ஒக்டோபரில்.. தனது வெறியாட்டை ஆரம்பித்ததும்.. வீட்டில வைக்கிற பயத்தில வெட்டித் தாட்டது தான் ஞாபகம்.

Konus-Army-Binocular-10-x-50-2172.jpg

யாழ் கொட்டடி காவலரண் பகுதியில் ஒரு இராணுவ பைனர்குலரும் மீட்டிருந்தோம்..! மிக நல்ல நிலையில் இருந்தது. அதையும்.. மண்ணில் தாட்டது தான். இப்பவும் இருக்கும். ஆனால்..... எடுக்க முடியாதே...!

10319038.jpg

நண்பர்களோடு போட்டி போட்டுக் கொண்டு.. இவற்றை சேகரித்ததும்.. யாருடைய செயின் நீட்டு என்று அளந்து திரிந்ததும்.. யாரட்ட கனக்க விதம் விதமான ஷெல் பான் இருக்கு.. என்று பேரம் பேசித் திரிந்ததும்.. டபிள்ஸ் வைச்சிருந்தா மட்டும்... அவற்றை இல்லாதவைக்கு விற்று காசாக்கினதும்...

M2_machine_gun.jpg

50 கலிபர் துப்பாக்கி.

cheechak05x600.jpg

பிப்ரி கலிபர் (50 கலிபர் விமான எதிர்ப்பு துப்பாக்கி) ரவைகளைக் கொடுத்து.. கட்டை மணியத்திடம்.. (யாழ் நாவலர் வீதியில் இருந்தவர்.. அவர் உயரம் கம்மி.. அதோடு சொப்பர் சைக்கிளில் தான் ஓடித் திரிவார்.. ஆனால் நடுத்தர வயதானவர்..)... வளர்க்கிற மீன் வாங்கினதும் இன்றும் பசுமையான நினைவுகளாய். :):icon_idea:

3219297908_d432ce34f6.jpg

வளர்க்கிற மீன்களில் ஒரு வகை..! (கோல்ட் பிஸ் வகை)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Indian+parrot+wallpaper+1.jpg

நான் வளர்த்த பச்சைக்கிளி

azukuvannaathi(myna).jpg

நான் வளர்த்த மைனா

நினைவுகள் தொடரும் ......

இப்படி எனக்கும் சிலமுறை எனது வலைப்பூவில் இருந்து களவு போகுது . கணணி மென்பொருள் வித்துவானுகளிட்டை கேட்டன் அவை வழி சொல்லியிருக்கினம் . ஒரு நண்பனிட்டை தான் கேட்டிருக்கிறன் இனி என்ரை வலைப்பூவிலை களவு போகாது நீங்களும் முயற்சி செய்யுங்கோ .

http://www.yarl.com/...showtopic=91984

இது தான் நான் கேட்ட லிங் இதுலையும் போய் பாருங்கோ .

நன்றி கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் கனகநாயகம் எனும் ஒரு உப அதிபர் இருந்தார். வகுப்பு monitor யாரையாவது முறைப் பாட்டுடன் கூட்டிப் போனால் முதல் சாத்து, பிறகு விசாரணை. செய்த குளப்படிக்கு போட்டது போதுமா என பிறகு ஒரு யோசனை. போதும் என்றால் 'ஓடு நாயே'. போதாவிட்டால், வேற என்ன மீண்டும் சாத்துப்படி.

சும்மா சொல்லக் கூடாது, சொல்லி செய்வித்த, விதம் விதமான பிரம்புகள் வைத்திருப்பார். சோடாப் புட்டி கண்ணாடியால் பார்த்தாலே வயித்த கலக்கும். பட்டம் வைப்பதில் திறமை வாய்ந்த யாழ் இந்து மாணவர்கள் வைத்த பட்டம்: 'மர-நாய்'.

வாரத்தில் ஒரு நாள் வகுப்பு இரண்டாகப் பிரிந்து அரைவாசி ஓவிய வகுப்புக்கும், அரைவாசி சங்கீத வகுப்புக்கும் செல்ல வேண்டும். Lunch பின்னால் வரும் மூன்று பாடங்களில் முதல் இரண்டும் ஸ்ரீதரர் எனும் ஓவிய வாத்தியார் வகுப்பு. அவரது அறைக்குப் போக வேண்டும்.

நண்பன் ஒரு மாயாவி கொமிக்ஸ் புக் வைத்திருந்தான். இரவல் தர முடியாத நிலை. மச்சான் லஞ்ச் டைம் வாசித்துப் போட்டுத் தா என சொல்லி இருந்தான். சாப்பாட்டினை மறந்து மேசையில் இடது கையினை வைத்தபடி, அதில் தலை வைத்து மடியில் புத்தகத்தினை வைத்து வாசித்துக் கொண்டிருந்த எனக்கு லஞ்ச் டைம் முடிந்தது தெரிய வில்லை.

மைதானத்தில் Lunch time விளையாடி நேராக ஓவிய, சங்கீத வகுப்புகளுக்கு எல்லோரும் போனதால் ஒருவரும் alert பண்ணவில்லை.

வகுப்பு monitor ஆக இருந்தவன் மூக்கு அடைப்பு உள்ளவன், பேசும் போது புதியவர்களுக்கு புரியாது. இதனை வைத்தே அவனுக்கும் ஒரு பட்டம் கொடுக்கப் பட்டு இருந்தது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து சீனாவிடம் கைமாறிய ஒரு சிறு நாட்டின் பேரே அந்த பட்டம்.

கழிவறை செல்ல வந்த நாதாரி என்னை கண்டு விட்டான். 'டோய், வகுப்புக்கு வராமல் புத்தகமா வாசிக்கிறாய் எண்டு பக்கத்தில் வந்து தட்டிய போது தான், அதிர்ந்து போனேன்.

'Art வாத்தி சாத்துவான் மச்சான், சொல்லாத மச்சான் நான் இப்படியே வீட்ட போறான். காச்சல் எண்டு நாளைக்கு சொல்லுவேன்' என்று அவனுடன் போட்ட deal எதுக்குமே அவன் மசிய வில்லை.

எனது பதிலுக்கு காத்திராமல் நேர ஓடிப்போய் Art வாத்தி இடம் கருமமே கண்ணாக வத்தி வைக்க, இருவருமே நான் இருந்த வகுப்பு அறைக்கு, நடுங்கிக் கொண்டிருந்த என்னிடம் வந்தனர்.

Art வாத்தி அண்டைக்கு சாத்தும் மூடில் இல்லை. அதனை 'out source' பண்ண யோசித்தார் போல. ஒரு பார்வை பார்த்து விட்டு, இவனை vice principal இடம் கொண்டு போ என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

கழிவறை போக வேண்டியதனையும் மறந்து என்னை வெகு சிரத்தையாக பலி ஆடு ஒன்றாய் மர-நாய் இடம் கொண்டு போனான் 'Monitor'.

அறைக்குள் போன உடன், பாய்ந்து எழும்பிய மர-நாய், என்னடா செய்தனி என்று கேட்டுக் கொண்டே பிரம்பை எடுக்க, monitor நாதாரி வாயை திறக்க, மர-நாய் ஒன்றும் புரியாமல் என்னை பார்த்து என்னடா பிரச்சனை என்றார்.

Art class போகாமல் கதைப் புத்தகம்... சொல்லி முடிப்பதற்குள் சாத்துப் படி தொடங்கியது. எனக்கு இல்லை, நம்ம மொனிட்டருக்கு.

'நான் இல்லை சேர்', 'நான் இல்லை....

அடோய், வாயை மூடுடா, பள்ளிக்கூடம் வந்தா படி, கதைப் புத்தகம் வாசிக் கிறதெண்டா வீட்டை ஒடு நாயே'

ஒன்னுக்கு போக வேண்டிய தேவை இல்லாமல் அங்கேயே நாறப் பண்ணும் அளவுக்கு பேச்சாத்து.

'ஓடடா நாயே' கத்திய படியே, என்னை பார்த்து இவன் எதாவது இந்த மாதிரி குழப்படி திருப்பியும் விட்டால் இங்க கொண்டு வா' என்றார்.

பிரச்சனை தனது மூக்கடைப்பில் என புரிந்து அப்பவாவது சும்மா இருந்திருக்கலாம். திரும்பவும் 'அது... நான் .... என தொடங்க, நாயே உன்னை எல்லா வாய் திறக்கக் கூடாது எண்டு சொன்னனான்'. என மேலும் இரண்டொன்று போட, வாங்கிக் கொண்டு வெளியே வந்து 'மச்சான் ஒருத்தருக்கும் சொல்லாத என்டு வடிவேலு ஸ்டைல போட்டான் பாருங்க ஒரு deal.

உங்களுக்கு சொல்லிப் போட்டன் எண்டு அவனுக்கு சொல்லாதீங்க.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, நால்லாய்க் கிட்ட வந்திட்டியள் போல கிடக்கு!

அந்த ஆர் வாத்தி, சோமசுந்தரம் மாஸ்டர் தானே! :D

  • கருத்துக்கள உறவுகள்

மூண்டாவது பந்தியில் பேர் இருக்குதே..

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, நால்லாய்க் கிட்ட வந்திட்டியள் போல கிடக்கு!

அந்த ஆர் வாத்தி, சோமசுந்தரம் மாஸ்டர் தானே! :D

நான் அது அவற்றை பட்டமாக்கும் என நினைத்துவிட்டேன்!

அந்தக் காலங்கள்ல, சொந்தப் பேர் பாவிச்சது குறைவு தானே! :D

  • கருத்துக்கள உறவுகள்

சில பட்டங்கள்

மொங்குஸ் - பரமநாதன் - கணக்கு வாத்தி

சொதி - பரமநாதன் - தமிழ் வாத்தி

சக்கரை அம்மான் - பரமநாதன் - சமூகக் கல்வி வாத்தி

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போர்க்கால சந்ததி. எமக்கு எதிரியான சிங்களவனும்.. இந்தியப் படையினரும்.. கற்றுத் தந்த பாடங்கள் முக்கியமானவை. அதில் முக்கியமானது மின்சாரத் தடை.. எரிவாயுத் தடை.. எரிவாயுச் சிலிண்டர் தடை.. எரிபொருள் கட்டுப்பாடு..மண்ணெண்ணை மட்டுமே அளவோடு விநியோகிக்கப்பட்டது.. பெற்றோலுக்கு முற்றாகத் தடை.. டீசலுக்கும் தடை.. மருந்துக்குத் தடை.. சீமெந்துக்குத் தடை... உலோகக் கம்பிகள்.. உரவகைகளுக்குத் தடை... ஏன் சீனி (சக்கரை).. சாப்பாட்டுக்குக் கூடத் தடை. இதைப் பற்றி எல்லாம் வெளி உலகம் பெரிதாக அலட்டிக் கொண்டதும் இல்லை..! புலிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தியோர்.. சிறீலங்கா சிங்கள அரசு தமிழ் பிராந்தியங்கள் மீது திணித்த இந்தப் பொருண்மியத் தடைகளை கண்டும் காணாமலும்.. அன்றும் வாழாதிருந்தனர்.

இந்தத் தடைகள் சிறீலங்காவில் 1990 களில்.. குறிப்பாக ரணசிங்க பிரேமதாச என்ற... ஐக்கிய தேசியக் கட்சி என்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான கட்சியை பிரதிநிதிப்படுத்திய..ஜனாதிபதியின் காலத்தில்.. அறிமுகமான தடைகளில் முக்கியமானவை.பிரேமதாச 1993 மே 1 இல் குண்டு வெடிப்பில் கொல்லப்பட... டிங்கிரி பண்டா விஜதுங்கா என்ற இன்னொரு ஐக்கிய தேசியக் கட்சி இனவாதி.. ஜனாதிபதியாகி.. இத்தடைகளைத் தொடர்ந்தார்.

அத்தோடு அவர் ஒரு கண்டுபிடிப்பையும் செய்தார். தமிழ் மக்கள்.. சிங்கள மக்கள் என்ற பெருவிருட்சத்தை சுற்றிப் படர்ந்து வாழும் கொடிகள் என்றார். அதனையே பின்னர் சந்திரிக்கா.. ராஜபக்ச போன்றவர்கள் மெய்ப்பித்தும் காட்டினர்... காட்டி வருகின்றனர்.

இந்த தடைகள் எம்மை கிட்டத்தட்ட இரண்டு.. மூன்று.. தலைமுறைகள் பின்னோக்கிச் சென்று வாழ வைத்தன. குறிப்பாக மின்சாரத் தடையும் எரிபொருள் கட்டுப்பாடும்.. உணவுத் தட்டுப்பாடும்.. எம்மை எம் மூதாதையோரின் வாழ்வியல் நோக்கி... போர் சூழலில் இருந்தும்.. பொருண்மியத் தடைகளில் இருந்தும்.. தப்பிப் பிழைத்து.. வாழ உந்தித் தள்ளின.

அதன் பயனாக மீண்டும் பாவனைக்கு வந்தன... கீழ் வருவன. குறிப்பாக மின்சாரத் தடை.. எரிபொருள் தடை மற்றும் கட்டுப்பாடுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தால்.. மக்கள் பரண்களில் கட்டி வைத்திருந்தவற்றை.. தூசி தட்டி எடுத்தும்.. மற்றும்.. உள்ளூரில் தயாரிக்கப்பட்டு விற்றவற்றை.. வாங்கியும் பாவித்தனர்..!

8-Kerosene-Hurricane-Camp-Lantern-Light-lamp-Storm-Yellow-balck-blue-red.jpg

லாந்தர் விளக்குகள்...

Kerosene_Lamps.jpg

மேசை இலாம்பு.. அல்லது சிமினி விளக்கு

1213388180.jpg

போத்தல் விளக்கு

757454393_4b6fd355a8_o.jpg

குப்பி விளக்கு

candle_2.JPG

மெழுகுதிரி வகைகள்

oil+lamp.jpg

பெற்றோல்மக்ஸ்

lightcap-200-solar-powered-water-bottle-lamp.jpg

உப்பு + மண்ணெண்ணை + தேங்காண்ணெய் விளக்கு

2222209584_5666a16803.jpg

தேங்காய் எண்ணெய் போத்தல் விளக்கு

oil-lamp.jpg

சி(சு)ட்டி விளக்கு

grenade1.jpg

கிரனேட் விளக்கு

www.jpg

குத்து விளக்கு

NR44_Kerosene_Stove.jpg

138_Kerosene_Stoves.jpg

Enders-alcohol-stove.jpg

மண்ணெண்ணை அடுப்புகள்

aTuppu_4.JPG

கல் அடுப்பு

aTuppu_3.JPG

வீட்டடுப்பு

Aduppu5.jpg

மண் அடுப்பு

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.