Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே களத்தில்.. பிபாகரனான.. தேசிய தலைவர் தொடங்கி.. போராளிகள் உள்ளடங்க.. சமீபத்தில்.. நாடு கடந்த தமிழீழ அரசு வரை.. நக்கலடிக்கப் படேக்க.. தோழமைகளின் நிமித்தம் அவற்றை வேடிக்கை பார்த்த.. தாங்கள்.. பல புலம்பெயர் ஈழத்தமிழனின் நிஜ முகத்தை காட்டும்.. தமிழ் ஆன்ரிகளின்.. உடற்பருமனும்.. உடல் நலக் கேடும்.. சம்பந்தப்பட்ட இந்தத் தலைப்பில் மட்டும் மனமுடைஞ்சு போவது ஆச்சரியமளிக்கிறது. இருந்தாலும்.. உங்கள் மன உளைச்சலுக்கு மனம் வருந்துகிறோம்..! அதற்காக எம் மத்தியில் உள்ள நிஜத்தை இன்னும் இன்னும் மூடி மறைக்க நாம் விரும்பவில்லை..! :):icon_idea:

யார் அந்த தாங்கள்? நான் குமாரசாமி இது எனது சொந்தப்பெயர்.

முள்ளிவாய்க்காலின் பின்பு என்ன நடக்கின்றது? என்ன நடந்தது?இனி என்ன நடக்கும்? என்று உங்களில் யாரவது சொன்னார்களா? அதுசரி? உங்கள் பதிவு நலமோடு நாம் வாழ பகுதியில் இருந்ததை கவனிக்க தவறிவிட்டேன் மன்னிக்கவும். :icon_idea::lol:

Edited by குமாரசாமி

  • Replies 116
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1984 .ஈழவிடுதலை எங்களால்

மட்டுமே சாத்தியம் என

ஒவ்வொரு அமைப்பும்

பாடசாலைகளில்

மந்திரம் ஓத உருக்கொண்ட மனிதராய்

நானும் சிலரும் கவரப்பட்ட

திசைகள் நாடிநடந்தோம்.

காலம் தியாகிகளையும் துரோகிகளையும்

உருவாக்கும் நேரம் வர நான் துரோகியானேன்.

1989 .நம்பிக்கையின் எச்சமாய் உயிர் மட்டுமிருக்க

காணிவித்தும் (அம்மாவின்)தாலிவித்தும்ஐரோப்பாவில் அடைக்கலம் தேடினேன்.சொசுசான வாழ்க்கை?

தாயக விடியலை பின்போட்டு.

குடும்மவிடியலைமுன்வைத்து?

ஊரில் படித்த காலங்கள்குறைவு.அதற்கான காரணங்கள் நிறைய

வேலைதேடினேன்.கிடைத்த வேலை உணவு விடுதியில் கழுவும் வேலை.

(சொகுசான ஒரு வாழ்க்கைதேடி )

இலக்கு நோக்கி நகரும் பொது திசைகள் மாறியதுயாரின் தவறு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.கோவிலுக்கு சேர்ந்த கிடாய்களாய்இருபது வயதுக்கனவுகள் புதைத்து இருபதத்தொன்றில் திருமணம் செய்து படுக்கையை பகிர்ந்து பிள்ளையை சுமந்து எல்லாம் சுமந்து சுதந்திர நாட்டில் அடிமைகளாக இருபத்தைந்து வயதில் ஆன்டிகளாகஇருக்கும் (அல்லது ஆக்கப்பட்ட)அனைவருக்கும்முப்பது வயது தம்பியின் வணக்கம்

Edited by anni lingam

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான எந்தவொரு பெண்ணும், தனது கணவனுக்கு முன், அழகாகத் தன்னைக் காட்டிக்கொள்ளவே விரும்புவாள்! எமது பெரும்பாலான திருமணங்கள் தான் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதில்லையே! இந்தச் 'சீதனம்' என்கின்ற விலையில் விற்கப் பட்ட பொருள், வாங்கப் பட்ட உடனேயே, அது தனது உத்தரவாதத்தை இழந்து விடுகின்றது! பெண்களுக்கும், தாங்கள் விற்கப் பட்டது, தாங்கள் ஒரு விலைப் பொருளானது, மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும்! ஒரு பழிவாங்கும் விதமாக, இதை அவர்கள், ஆரம்பத்தில் இதைச் செய்யக் கூடும்! பின்பு, தங்கள், தவறை உணர்ந்த பின்பு, மீண்டும் பழைய நிலைக்குப் போவதும், கடினம்! இது அனேகமாக, இந்தியப் பெண்களிடமும், வேலைக்குப் போகாத, எங்கள் உறவுகளிடமும், நான் அவதானித்திருக்கின்றேன்! நெடுக்கர், தாய்மை அடைதலையும், கருத்தில் கொள்ளுங்கள். உடல் பருமன் கூடுவதும், அவர்களால் தவிர்க்க முடியாமல் இருக்கலாம்!

எல்லாவற்றையும் தவிர்க்க ஒரு வழியுண்டு!

திருமணம் என்பது, ஆயிரம் காலத்துப் பயிராக எம்மால் கருதப் பட்டாலும், அதை இருவரினதும் விருப்பத்தில், ஏழு வருடங்களுக்கு ஒருமுறை,மீளவும் புதுப்பிக்கப் படக் கூடிய ஒப்பந்தமாக வடிவமைப்பின், ஆணும் பெண்ணும் தங்கள், உடலின் தோற்றத்தில் அதிக கவனமெடுப்பார்கள்! இது 'சீதனம்' வாங்கிச் செய்யும் திருமணங்களுக்கு மட்டுமே! குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும், இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப் படலாம்!

எனது கவலை, புலத்தில் வளரும் இரண்டாம் தலை முறை பற்றியதே!

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில், தாய் தகப்பனுடன் சேர்ந்து சீரியல் பார்ப்பதும், கணனியில் விளையாடுவதும் தான், இந்தக் குழந்தைகள் செய்வது!

பெற்றோருக்கும் பெருமை!

பிள்ளைகள், தமிழ் படிக்கிறார்களாம்!

  • கருத்துக்கள உறவுகள்

எனது கவலை, புலத்தில் வளரும் இரண்டாம் தலை முறை பற்றியதே!

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில், தாய் தகப்பனுடன் சேர்ந்து சீரியல் பார்ப்பதும், கணனியில் விளையாடுவதும் தான், இந்தக் குழந்தைகள் செய்வது!

பெற்றோருக்கும் பெருமை!

பிள்ளைகள், தமிழ் படிக்கிறார்களாம்!

இரண்டாம் தலைமுறையினறில் சோத்து ஆன்ரிமார் வரவிடாமல் நாம் என்ன செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் தலைமுறையினறில் சோத்து ஆன்ரிமார் வரவிடாமல் நாம் என்ன செய்யலாம் ?

எனக்குத் தெரிந்த மட்டில், கணனியில் ஒரு 'Filter' ஒன்று போட்டு அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் உபோகிக்க விடலாம்!

தாயும், தகப்பனும் பிள்ளைகள் இல்லாத நேரங்களில், சீரியல்கள் பார்க்கலாம்! அல்லது தங்கள் அறையில் மட்டும், வீடியோ பிளேயரை, வைத்திருக்கலாம்!

சீரியலில் குழந்தைகள், தமிழ் படிப்பதில்லை!

ஆனால் எவ்வாறு 'பழிக்குப் பழி' வாங்குவது என்று படிப்பார்கள்!

பழிக்குப் பழி, இல்லாத ஒரு சீரியல், சொல்லுங்கள் புத்தன்!

எங்க பார்த்தாலும், மாமி மருமகளைப் பழிவாங்குவதும், காதலி பழைய காதலனைப் பழி வாங்குவதும், ஒரு பெண்ணை ஏமாற்றுவதும், பின்பு கை விடுவதும் தானே, நடக்குது! இதிலிருந்து எமது, குழந்தைகள் படிப்பது என்ன என்று நினைக்கின்றீர்கள்!

நெடுக்கர் ஒரு பதிவில் சொன்னது போல, திருமணத்தின் முன்பு கருவாகி, அல்லது யாரோ ஒருவனால், காதலிக்கப் படுவதாக நம்ப வைக்கப் பட்டுப் பின்பு, அவனால் கை விடப்பட்டு, அதையும் பெருமையுடன் வெளியில் சொல்வது?

தாயும், தகப்பனும் தலையில் கை வைத்த படி, யாராவது ஒரு ஏமாளியை, ஈழத்திலிருந்து வரவழைத்துக் கட்டி வைப்பது!

பணம் தான் இருக்கின்றதே, புலத்தில் எங்களுக்கு!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் காத்து தாங்க வருது.... என்ற கணக்கா.. ஒன்னையும் காணேல்லையே... கருத்துச் சொல்லவும்..அவ்வளவு பயமா... ராஜவன்னியன்..! :lol::icon_idea:

கருத்து சொல்ல பயமில்லீங்க..!

"தொப்பி அளவான ஆக்கள் எல்லாம் லைன் கட்டி வரவும்" என்று ஒருவர் கூவினார்...

ம்..சரி, ஒருவேளை நம்மைத்தான் அழைக்கிறாரோ என அமைதியாக வந்தேன்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த தாங்கள்? நான் குமாரசாமி இது எனது சொந்தப்பெயர்.

முள்ளிவாய்க்காலின் பின்பு என்ன நடக்கின்றது? என்ன நடந்தது?இனி என்ன நடக்கும்? என்று உங்களில் யாரவது சொன்னார்களா? அதுசரி? உங்கள் பதிவு நலமோடு நாம் வாழ பகுதியில் இருந்ததை கவனிக்க தவறிவிட்டேன் மன்னிக்கவும். :icon_idea::lol:

இதையெல்லாம் சொன்னாப் போல.. முள்ளிவாய்க்காலில் மாண்டு மக்களை உயிர் எழுப்பிப் போடுவீங்களாக்கும்..???! :unsure::(

சோத்து ஆன்ரிகளுக்குள்ள அங்கிள்களுக்குள்ள இருக்கும்.. கொழுப்பு.. மாதிரித்தான்.. இந்தத் தலைப்புக்குள்ள இருந்து உடல் நலம். அதைப் புரிஞ்சுக்க முடியாதது.. நம்ம தப்பில்ல..! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரை குறிவைத்து அடிக்கடி சோத்து அன்ரிங்க பார்க்கும் படங்கள்

[media=]

தப்பித்தவறி, ஆந்திராப் பக்கம்... தலை வைச்சும் படுக்கக் கூடாது. :D

எல்லா பெண்களும்.. அடி பின்னி எடுக்கிறாங்கள் :o .

டிஸ்கி:இந்த வீடியோக்களை பார்த்து... ஈழப் பெண்களும், வன்முறை வழிக்கு தாவ சந்தர்ப்பம் உள்ளதால்....

எமது நன்மை கருதி, இந்த ஒளிப்பதிவுகளை நீக்கி விடுங்கள் நீலப்பறவை. :lol::icon_idea:

சோத்து ஆன்ரிகளினால் நடக்கும் இன்னொரு விசயம்...

புலம் பெயர் தேசங்களில் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சாதி என்ற விடயத்தை தொடர்ந்தும் கிளறிக் கிளறிக் கொண்டிருப்பது... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோத்து ஆன்ரிகளினால் நடக்கும் இன்னொரு விசயம்...

புலம் பெயர் தேசங்களில் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சாதி என்ற விடயத்தை தொடர்ந்தும் கிளறிக் கிளறிக் கொண்டிருப்பது... :(

குறிப்பாக லண்டனில உள்ள சோத்து ஆன்ரிங்க.. இந்த விடயத்தில் ரெம்பக் கராரா இருக்கினம். இந்த ஆன்ரிகளின் தொல்லை காரணமாகவே.. பிடிச்ச போய் பிரண்டை.. கேர்ள் பிரண்டை கைவிட்ட இளசுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகுது...! :icon_idea:

சோத்து ஆன்ரிங்க.. நாங்க நினைக்கிற மாதிரி.. உடம்பில மட்டும் கொழுப்போட அலையல்ல... நாக்கிலும் கொழுப்பு அதிகம் அவர்களுக்கு..! வெட்டி பெருமைகள் வேற...! :):lol:

Edited by nedukkalapoovan

[media=]

இதுக்கு சொல் விளக்கம் தேவையில்லை

:o

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

என்னுடன் வேலை செய்யும் பெண்கள் வாரத்தில் ஒரு நாள்தான் சோறு சாப்பிடுவதாகச் சொல்கிறார்கள் மற்றைய நாட்களில் வேறு உணவு வகைகளைத் தெரிவு செய்து உண்கிறார்கள் ...நான் நாளாந்தம் சோறு உண்கிறேன்.... இங்குதான் எனது முதல் கேள்வி சோறு உண்ணாத அவர்களுக்கு வயிறு என்னைவிட இருமடங்காக இருக்கிறது... உங்களுடைய சோத்து அன்ரீ பதம் அவர்களுக்குப் பொருந்தவில்லையே..... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒருவேளை சாப்பிடும் சோறு நீங்கள் 3 வேளை சாப்பிடும் சோறுக்கு அதிகமாகக் கூட இருக்கலாம். அல்லது அவர்கள் சோற்றைக் குறைத்து இதர உணவுகளை.. (கொழுப்பு.. மற்றும் மற்ற மாப்பொருட்களை.. ஏன் புரதத்தை) அதிகம் சாப்பிடுவதால்.. அவையும் கொழுப்பாக சேமிக்கப்படும் வாய்ப்புள்ளது..! அதனால் தான் நிறை உணவு உண்ணுக்கோ என்கிறம். கடின வேலை செய்யுங்கோ எங்கிறம்..! குந்தி இருந்து குதர்க்கம் பேசி.. கடின உடல் உழைப்பின்றி சொகுசு வேலை செய்வதை குறைத்து உண்டது எரிய.. வேலை செய்யுங்கோ.. உடற்பயிற்சி செய்யுங்கோ.. என்கிறம்..! :):lol:

Balanced-Diet%25281%2529.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சோறு எனும் பதம் பொதுவாக தமிழர்களைக் குறிக்கும்.. எனவே நெடுக்ஸும் ஒரு சோறுதான்!

உடல் பருமனாவது மேற்குநாடுகளில் வாழும் மக்களுக்கு உள்ள பிரச்சினை. தனிய தமிழர்களுக்கு மட்டுமல்ல.

Obesity and lifestyle

  • What is obesity? It is normally defined as a Body Mass Index (BMI) over 30
  • Use the BMI calculator to check your BMI, from your weight in kilograms divided by your height in metres squared
  • According to figures from 2009, almost a quarter of UK adults are obese (22% of men and 24% of women)

ஆங்கிலத்தில் இருக்கும் சிறு குறிப்பை பிபிசியில் காணலாம்.

http://www.bbc.co.uk/news/health-18393391

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ஒரு பீங்கான் சோறுக்கு 4 கால்/ அரை அகப்பை கறி போட்டால் சரிவாராது. ஒரு அகப்பை சோறும், 4 அகப்பை கறியும் ???- (கணக்குகள் சரியோ தெரியாது ) சாப்பிடால் ஒரு குறையும் இல்லை.

வண்டியோ குண்டியோ முதலில் வருவது என்ன சாப்பிட்டதால் என்று அல்ல, எவ்வளவு என்பதாலேயே- முக்கியமாக அதில் உள்ள கலோரியின் அளவை பொறுத்தே வரும். அரிசி மிக நல்லது அளவாய் சாப்பிடும் மட்டும்.

Edited by Volcano

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பீங்கான் சோறுக்கு 4 கால்/ அரை அகப்பை கறி போட்டால் சரிவாராது. ஒரு அகப்பை சோறும், 4 அகப்பை கறியும் ???- (கணக்குகள் சரியோ தெரியாது ) சாப்பிடால் ஒரு குறையும் இல்லை.

வண்டியோ குண்டியோ முதலில் வருவது என்ன சாப்பிட்டதால் என்று அல்ல, எவ்வளவு என்பதாலேயே- முக்கியமாக அதில் உள்ள கலோரியின் அளவை பொறுத்தே வரும். அரிசி மிக நல்லது அளவாய் சாப்பிடும் மட்டும்.

இதுதான் உண்மை...சோற்றின் அளவை குறைத்து கறியின் அளவை கூட்டுங்கள்...பிரச்சினை முடிந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க 10 வகையான உணவு வகைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

1. தயிர்

தயிரிலிருந்து செய்யப்படும் Yogurt மிகவும் ஊட்டசத்து நிறைந்த உணவாகும். உடலை மெலிதாகவும், உணவு செரிமாணத்திற்கும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

health_002.w540.jpg

health_003.w540.jpg

2. தானிய உணவு

தானியத்திருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, அரிசி கலந்த உணவு வகைகள் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டை தருகின்றது. உடலை சோர்விலிருந்து பாதுகாக்கின்றது.

health_004.w540.jpg

health_005.w540.jpg

3. பச்சை வண்ணக் காய்கறிகள்

பச்சை வண்ணக் காய்கறிகளான broccoli, Brussels sprouts, asparagus, peppers, and yellow beans ஆகியன நமது உடலுக்கு தேவையான பீட்டா காரோட்டீன், கால்சியம், மெக்னீசியம் A,C,K ஆகியவற்றை கொடுக்கின்றது.

health_006.w540.jpg

health_007.w540.jpg

4. ஆலிவ் எண்ணைய்

இவை நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க மற்றும் கலோரியை அதிகரிக்க உதவுகின்றது.

health_008.w540.jpg

health_021.w540.jpg

5. ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் வினிகரை தொடர்ந்து 12 வாரங்கள் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், தேவையான புரதசத்தையும் தருகின்றது.

health_010.w540.jpg

health_011.w540.jpg

6. தேயிலை டீ

நமது உடலை சுறுசுறுப்புடன் வைப்பதுடன் மேனி பளபளப்பிற்கும் உதவுகின்றது, புத்துணர்ச்சிய தருகின்றது.

health_012.w540.jpg

health_013.w540.jpg

7. ஆப்பிள்

மிகவும் சுவை நிறைந்த பழங்களில் ஒன்றாக ஆப்பிள் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வைக்கின்றது. மிகச்சிறந்த சிற்றுண்டியாகும்.

health_014.w540.jpg

health_015.w540.jpg

8. முட்டை

புரத சத்து நிறைந்த முட்டை மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகின்றது. பசியை குறைத்து தேவையான ஆரோக்கியத்தை தருகின்றது.

health_016.w540.jpg

health_017.w540.jpg

9. பாதாம்

மெக்னீசியம் அதிகம் கொண்ட இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.

health_018.w540.jpg

10. சல்மான்(Salmon)

இந்த வகை மீன் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்தை தருகின்றது. மேலும் வளர்ச்சியை மேம்படுத்தவும் உடலுக்கு தேவையான குளுக்கோசின் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றது.

health_019.w540.jpg

health_020.w540.jpg

thanks FB

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உண்மை...சோற்றின் அளவை குறைத்து கறியின் அளவை கூட்டுங்கள்...பிரச்சினை முடிந்தது....

எந்தக் கறியை உருளைக்கிழங்குப் பிரட்டலையா..???! எம்மவர்கள் சோறோடு.. சாப்பிடும் கறிகளிலும் அதிக மாப்பொருள் உண்டு. உருளைக்கிழக்கு குழம்பு.. மரவள்ளிக்கிழங்கு.. பால்கறி... இப்படி.. வாழைக்காய் பொரியல்.. இப்படியே சாப்பிட்டா என்னாவது..???!

அதற்கு மேலதிகமாக.. மற்றைய வேளைகளில்.. புட்டு.. இடியப்பம்.. அப்பம்.. தோசை.. இட்லி.. கொத்துரொட்டி.. பராட்டா.. பூரி... இவற்றிற்கும் உருளைக்கிழங்கு.. அல்லது சாம்பார்.. கறி..! இப்படி உண்டால்.. உள்ளெடுக்கும் மாப்பொருளின் அளவு என்னாகும்..????! :icon_idea::D

சோறு எனும் பதம் பொதுவாக தமிழர்களைக் குறிக்கும்.. எனவே நெடுக்ஸும் ஒரு சோறுதான்!

உடல் பருமனாவது மேற்குநாடுகளில் வாழும் மக்களுக்கு உள்ள பிரச்சினை. தனிய தமிழர்களுக்கு மட்டுமல்ல.

Obesity and lifestyle

  • What is obesity?It is normally defined as a Body Mass Index (BMI) over 30
  • Use the BMI calculator to check your BMI, from your weight in kilograms divided by your height in metres squared
  • According to figures from 2009, almost a quarter of UK adults are obese (22% of men and 24% of women)

ஆங்கிலத்தில் இருக்கும் சிறு குறிப்பை பிபிசியில் காணலாம்.

http://www.bbc.co.uk...health-18393391

தமிழர்கள் எல்லோரும் சோறு கிடையாது. சோறு சாப்பிடுற தமிழர்கள் தான் சோறு. :lol:

மேலும்.. ஆம் obesity உலகளாவிய பிரச்சனை தான். ஆனால் அதன் விளைவாக தோன்றும் பல்வேறு நோய்களில்.. உபாதைகளில்.. எம்மவர் மத்தியில் தோன்றும்.. நீரிழிவு என்பது எம்மில் (தெற்காசியர்களில்) அதிக நிகழ்வு வாய்ப்பை பெறுகிறது..! இதுவே ஆக்கத்திலும் தொனிக்கச் செய்யப்பட்டுள்ளது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும்,

முந்திய பதிவில் இருந்த பல பகுதிகளை எடுத்து விட்டேன்..தகவல்களை சரிபாக்க வேண்டி இருப்பதால்..அதை அப்படியே விடுவது சரியென தெரியவில்லை. நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கென்ன?உனக்கென்ன?

மேற்குநாட்டுக்கு ஓடினான் அதில் உனக்கு இழவென்ன?இழவென்ன?

காணி விற்று ஓடினான் அது உன் காணியா?இல்லை உன் அப்பன் பூட்டன் பாட்டன் காணியா?

தாலி விற்று ஓடினான் அது உன் தாரத்தின் தாலியா?

தாயகவிடியலை மறந்து படிதாண்டியவர் எவரோ?

தாயகவிடியலை மறந்து யூனியில் காலம்கடத்துபவர் இவரோ?

அங்கே பீப்பாய் குண்டுகள் விழவிழ

இங்கே மீற்ரிங்குகளும் வளர வளர

தவணை தவறாமல் அள்ளியள்ளி கொடுத்தார் யாரோ?

அள்ளியவர் யாரோ?

அழிந்தவர் யாரோ?

உனக்கென்ன?உனக்கென்ன?

ஓடிப்போனவனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தால் உனக்கென்ன?

உள்ளூர்மாப்பிளை வெளியூர் மாப்பிளையானால் உனக்கென்ன?

கழுத்தும் கையும் மின்னினால் உனக்கென்ன?

அதிரடிக்கலியாணத்தில் அண்ணி வெளிநாடு வர...

தம்பியர் அடுத்தவன் காலைப்பிடிச்சு லண்டன்யூனி வர...

உனக்கென்ன?உனக்கென்ன?

அண்ணர் சேவையில் அண்ணி வயிறுதள்ள எரிச்சல் உனக்கென்ன?

குட்டி போட்ட அண்ணி உருப்பெருத்தால் உனக்கென்ன?உனக்கென்ன?

உன் வீட்டு சொத்தா? உன் அப்பன் வீட்டு சொத்தா?

உனக்கென்ன? உனக்கென்ன?

கக்கூஸ் கழுவி நாலுகுடும்பம் நல்லாய் வாழ்ந்தால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை வேலை எண்டு சொன்னால் உனக்கென்ன?

கழுவித்துடைக்கிறதை கேம் எண்டு சொன்னால் உனக்கென்ன?

உனக்கென்ன? உனக்கென்ன?

ஆன்ரிக்கு நீரழிவு வந்தால் உனக்கென்ன?

ஆன்ரிக்கு பேரழிவுவந்தால் உனக்கென்ன?

ஆன்ரி பசுமதியும் கிழங்கும் உள்ள தள்ளினால் உனக்கென்ன உனக்கென்ன?

ஆன்ரி அரச பணத்தில் சொகுசாயிருந்தால் உனக்கென்ன?

அரசுக்கே இல்லாத கவலை உனக்கேன்?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, குமாரசாமியண்ணை!

இதுதான் எனது பார்வையும்!

ஆனாலும், தனிப்பட்ட முறையில், சில ஆடம்பரங்கள், அனாவசியமான களியாட்டங்கள், அலங்கோலமான கோவில் திருவிழாக்கள்,எனது மனத்தில் ஒரு விரக்தியைத் தோற்றுவிக்கின்றன என்பது உண்மையே!

ஏனோ, தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு, இதில் ஒரு பகுதியையாவது கொடுத்து உதவலாமே என்று நினைக்கின்றேன்!

அவ்வளவு தான்!

உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது!

ஏனெனில் அது உங்கள் உள்ளுணர்வின் வெளிப்பாடு!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணோய் நீங்கள் சொல்ல வந்த விஷயம் சரி எண்டாலும் சொன்ன விதம் ஏற்க முடியவில்லை. அவுசிலே நான் கண்ட வரைக்கும் எம்மவர்கள் குண்டாக இல்லை. வயது வந்தவர்களில இருந்து பலரும் நல்ல உடலமைப்புடன் தான் இருக்கிறார்கள்.

எனது குடும்பத்திலுள்ள பல வயது வந்த ஆண்டி வகைக்குள் அடங்கக் கூடியவர்கள் நடைப் பயிற்சி, வீட்டுத் தோட்டம், சைக்கிளோட்டம் எண்டு உடலை வலு கட்டுக் கோப்பாகத் தான் வச்சிருக்கிறார்கள். அங்கிள் வகைகள் கூட கிரிகெட், மற்றும் நிறுவன ஜிம் (corporate gym) எண்டு போய் உடலை அந்த மாதிரி வைத்திருக்கிறார்கள். ஒரு சித்தப்பா ஒவ்வொரு வருசமும் சிட்னியில் நடக்கும் city to surf எனும் 14km ஓட்டத்தை ஓடி முடிப்பவர், மற்றவர் சனி ஞாயிறுகளில் கிரிக்கெட் பையுடன் வெளிக்கிட்டு விடுவார். பெண்கள் உடற் பயிற்சிக்கு போக ஊக்கம் (motivation) முக்கியம். எமது பல கணவர்கள் தமது மனிசி மாரை ஊக்கப் படுத்துவது குறைவு. இருவரும் இணைந்து நல்ல ஒரு உடற் பயிட்சிக் கூடத்துக்கு செல்லலாம். உடலுக்கும் நல்லது, உறவும் இறுக்கமாகும்.

நானும் மனிசியும் அப்பிடித்தான். இருவரும் gym போனால் நான் weights, crunchs ல மினக்கெட அவள் cardio, abs எண்டு தண்ட பாட்டில ஏதாவது செய்வா. சாப்பாட்டு விசயத்திலயும் ஆள் வலு கவனம். இரவிலே சோறு உண்பது குறைவு, ஏன் காபோவைதரேற்று சாப்பாடு இரவு ஆறுமணிக்கு பிறகு சாப்பிடுவது குறைவு. அப்பிடி சாப்பிட்டாலும் அளவு கணக்கோடு தான். Gym போய் வந்தால் steak, சில இலை, குழைகள் பச்சை மரக்கறிகளுடன் சாப்பாடு. ஒரு பண்ணையில இருந்து நல்ல தேன் வாங்கி வச்சிருக்கிறோம். விடிய எழும்பின உடனேயே கொஞ்சம் சூடான தண்ணியில ஒரு கரண்டி தேன் கலந்து குடிப்போம். எனக்கு பச்சை தேநீர் (green tea) மிகவும் பிடிக்கும் என்பதால ஒருநாளைக்கு இரண்டு தரமாவது குடிப்பேன். இதனால் எனது மனிசியின் வயசு ரிவேசில போற மாதிரி எனக்கு ஒரு பீலிங் :wub: . அதோட வண்டி தொந்தி எண்ட பேச்சுக்கே இடமில்லை. என்னை பொறுத்த வரைக்கும் எனது மனிசி இளமையாக அழகாக இருந்தால் ஆரோக்கியத்துடன் யாராச்சும் "மச்சான், நல்ல செலக்சன்", "உண்ட மூஞ்சிக்கு இதெல்லாம் எப்பிடியடா..." எண்டு கேட்டால் பெருமையாகவும் இருக்கும்.

Edited by Thumpalayan

உனக்கென்ன என்று இதை விட முடியாது .அதுதான் என் ஆதங்கம் .

நான் வேலை செய்த இடத்தில் பிசியாகும் நேரத்தில் மட்டும் எஜென்சியால் ஆட்களை எடுப்பார்கள் .அப்போ வருவது அரைவாசிப்பேருக்கு மேல் எம்மவர்களே .அதில் ஆண்கள் பாதி பெண்கள் பாதி இருக்கும் .அதில் வரும் ஆண்களை பற்றி நான் அக்கறை படுவதில்லை ஆனால் இந்த சோத்து ஆன்டிகளை யாரும் என்னவும் சொல்லி விடக்கூடாது என்ற அக்கறையில் முதலே போய் அனைத்தையும் தமிழில் விளங்க படுத்திவிடுவேன்..ஆனால் அவர்கள் போடும் உடுப்பும் நடைமுறைகளும் பல நேரம் என்னை வெட்கத்தில் உள்ளாக்கிவிடும் .

உதாரணமாக ஒரு கறுப்பு இன பெண் வேலைக்கு வந்தால் சுயமாக தானே அனைத்தையும் செய்துவிட்டு போய்விடுவார் .நம்மடை ஆட்கள் தடித்த தாலிக்கொடியும் நாலு சோடி பவுண் காப்பும் போட்டு ஐந்து டொலர் உடுப்பும் வெள்ளை சொக்ஸ்சும் கறுப்பு டேனி சூசும் பார்க்க சகிக்காது .காசை கொண்டுபோய் வட்டிக்கு கொடுக்கின்ற கதையும் ,மொட்கேஜ் கதையும் தான் இவர்கள் கதைப்பது .மற்றவர்கள் அன்றாடம் காச்சிகள் இவர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் ,ஆனால் ஆட்களை பார்த்தால் நேர் எதிர் .(காப்பிலி சாப்பிட வழியில்லாவிட்டலும் உடுப்பும் லிப் ஸ்டிக்கும் அந்த மாதிரி இருக்கும் ).

இவர்களை எல்லாம் கோல்ப் வண்டியில் சுத்தியடித்து இது jurraasic park ,beethoovan,lord of the rings என்று அலைந்த காலமது .

வென்றது சோத்து ஆன்ட்டிகள் தான். கிழிந்த வெள்ளை சொக்சுடன் வைர தோட்டுடன் திரிக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்ன என்று இதை விட முடியாது .அதுதான் என் ஆதங்கம் .

நான் வேலை செய்த இடத்தில் பிசியாகும் நேரத்தில் மட்டும் எஜென்சியால் ஆட்களை எடுப்பார்கள் .அப்போ வருவது அரைவாசிப்பேருக்கு மேல் எம்மவர்களே .அதில் ஆண்கள் பாதி பெண்கள் பாதி இருக்கும் .அதில் வரும் ஆண்களை பற்றி நான் அக்கறை படுவதில்லை ஆனால் இந்த சோத்து ஆன்டிகளை யாரும் என்னவும் சொல்லி விடக்கூடாது என்ற அக்கறையில் முதலே போய் அனைத்தையும் தமிழில் விளங்க படுத்திவிடுவேன்..ஆனால் அவர்கள் போடும் உடுப்பும் நடைமுறைகளும் பல நேரம் என்னை வெட்கத்தில் உள்ளாக்கிவிடும் .

உதாரணமாக ஒரு கறுப்பு இன பெண் வேலைக்கு வந்தால் சுயமாக தானே அனைத்தையும் செய்துவிட்டு போய்விடுவார் .நம்மடை ஆட்கள் தடித்த தாலிக்கொடியும் நாலு சோடி பவுண் காப்பும் போட்டு ஐந்து டொலர் உடுப்பும் வெள்ளை சொக்ஸ்சும் கறுப்பு டேனி சூசும் பார்க்க சகிக்காது .காசை கொண்டுபோய் வட்டிக்கு கொடுக்கின்ற கதையும் ,மொட்கேஜ் கதையும் தான் இவர்கள் கதைப்பது .மற்றவர்கள் அன்றாடம் காச்சிகள் இவர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் ,ஆனால் ஆட்களை பார்த்தால் நேர் எதிர் .(காப்பிலி சாப்பிட வழியில்லாவிட்டலும் உடுப்பும் லிப் ஸ்டிக்கும் அந்த மாதிரி இருக்கும் ).

இவர்களை எல்லாம் கோல்ப் வண்டியில் சுத்தியடித்து இது jurraasic park ,beethoovan,lord of the rings என்று அலைந்த காலமது .

வென்றது சோத்து ஆன்ட்டிகள் தான். கிழிந்த வெள்ளை சொக்சுடன் வைர தோட்டுடன் திரிக்கின்றார்கள் .

வைரத்தைக் கொண்டா போகப்போகிறோம், அர்ஜுன்?

நீங்கள் சொன்னது,மிகவும் உண்மை!

காப்பிலி, பாத் ரூம் செருப்போட கூட, ஒரு நாளும் வெளியே போகாது!

எங்கடை ஒண்டு, விடியக்காலமை நேரத்தில, சாரத்தோட ' Flemington Market' என்று ஒரு பெரிய சந்தைக்கு வெளிக்கிட்டு, அரைவாசியில, ஒரு நாற்சந்தியில கார், கையை விட, சாரத்தோட வெளியால இறங்கி நின்ட படி, போற, வாற காரை மறிச்ச அழகு, இண்டைக்கும் மறக்க முடியாது! காருக்கு NRMA ( London AA மாதிரி) யும் இல்லை. சிக்கனமாம்!

தவிர்க்க முடியாமல், காரை நிற்பாட்டி, அவரை ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டேன்!

ஆனால், அவருக்கு மூன்று Flats சொந்தமாக இருக்காம்!

நிச்சயமாக, வயிறெரியவில்லை! :(

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.