Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் கொள்ளை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thief2.jpg

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை.

மானிப்பாயில் 15 பவுண் நகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கத்தியைக் காட்டி அபகரிப்பு நாவாந்துறை, யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன.

இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன் , தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பேசியே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். பணம், நகை ௭ன்பவற்றை மிரட்டி பறிக்கும் இவர்கள் அவற்றை முறையாக வழங்காதுபோனால் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விடுவோம் ௭னவும் ௭ச்சரிக்கின்றனராம்.

இதேவேளை மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் தங்க நகைகளும் 150,000 ரூபா பணம் ௭ன்பனவும் நேற்று அதிகாலை ஆயுதமுனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 70வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது மகன் சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் காலைக்கடன்களை கழிப்பதற்கு வெளியில் சென்ற சமயம் வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைகளைப் பின்னால் இறுக்கிப் பிடித்தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சுறுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச் சீட்டைக் கிழித்து ௭றிந்து விடுவோம் ௭ன மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ், சிங்கள மொழிகளில் உரையாடியதாகப் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களைக் கைது செய்ய மதவாச்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படவுள்ள மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் இராணுவ முகாம், பொலிஸ்நிலையம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் ஏர்லயன்ஸ் நாளாந்தம் புலம்பெயர்ந்த தமிழர்களினால் நிரம்பி வளியுதாமே ..... !

வாழ்க தமிழீழ தாகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரவேண்டும்...யாராயிருந்தாலும் இனத்துக்கு நல்ல விடயம் செய்கிறார்கள்...

அரசியல் தீர்வு எமக்கு எள்ளளவும் கிடைக்கவில்லை .அது நூறு வீ தம் உண்மை .

ஆனால் நாட்டிற்கு போய் வருபவர்கள் சொல்வது அங்கு எது வித கெடுபிடியுமில்லை என்பதுவும் நூறு வீதம் உண்மை .

.

ஆனால் நாட்டிற்கு போய் வருபவர்கள் சொல்வது அங்கு எது வித கெடுபிடியுமில்லை என்பதுவும் நூறு வீதம் உண்மை .

புலிகளை /புலிகளின் அச்சுறுத்தலை காரணம் காட்டி அகதி அந்தஸ்து பெற்றவர்களை இப்போது புலிகள் இல்லை அவர்களின் அச்சுறுத்தல்களும் இல்லை என கூறி திருப்பி அனுப்பனும் அப்போதும் பாலாறும் தேனாறும் தான் ஓடுகிறது என்று சொல்லி திரும்பி போவார்களா என்று பார்க்கணும் என்று எனக்கு ஒரு ஆசை <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதுக்குள்ளும் ஒரு இனத்துரோகி ஒளிந்துகொண்டிருக்கிறான்.

சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவன் வெளியே வருவான், காரியமாற்றுவான்.

சுயநலம், செல்வம், குடும்பம் என்று வரும்போது அந்த துரோகி நண்பனைக் காட்டிக் கொடுப்பான்,

எதிரி போடும் எலும்புக்கு ஏங்குவான் தன் தாய்நாட்டையே விற்பான்.

எனது தம்பி முப்பது வருடங்களுக்கு பின் நாட்டிற்கு போய் இரண்டு மாதங்கள் நின்று விட்டு திரும்பிவந்தார் .வெளிநாடுகளில் இருந்துவிட்டு நாட்டில் போய் தங்கிவிட்ட எமது ஆறு நண்பர்கள் அங்கு இப்போது உள்ளார்கள்.ஒரு மோட்டார் சயிக்கிளின் உதவியுடன் முழு இடங்களும் சுற்றியடித்ததாக சொன்னார்.

எங்கும் இராணுவ பிரசன்னம் என்பது உண்மை ஆனால் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்கள் அத்தனையும் செய்ய தொடங்கிவிட்டார்கள் .கோவில் திருவிழாக்கள் காலை ஐந்து மணிக்கே லவுட் ஸ்பீக்கர் பாட்டுக்களுடன் தொடங்கி விடுவதாக சொன்னார் .கள்ளுக்கு நன்றி சொல்லி முகப்புத்தகத்தில் பனையுடன் நின்று படம் எடுத்து போட்டிருக்கின்றார் .

யோ .கர்ணனையும் சந்தித்ததாக சொன்னார் .

யாழுக்கு வந்து முட்டி மோதிய மீராபாரதி இலங்கை முழுக்க திரிந்து பல கூட்டங்கள் வைத்துவிட்டு திரும்புகின்றார் .கிளிநொச்சியில் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் அவர்கள் மன அழுத்தத்தை போக்க ஒரு தியான பட்டறையே வைத்தார் .அவரின் முக புத்தகத்தில் போய் படங்களை பார்வை இடலாம் .பார்க்க மிக சந்தோசமாக இருக்கின்றது .நாங்கள் எதுவும் செய்யாமல் இங்கிருந்து படம் மட்டும் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

அங்கிருக்கும் மக்களுக்கு முடிந்த அளவிற்கு அனைத்து விதத்திலும் உதவுவதுதான் நல்லது ,அதைவிட்டு நாட்டில் பிரச்சனை இருக்கு என்று காட்ட விலகி இருப்பது எந்தவிதத்திலும் எமக்கு உதவபோவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புரியுது

கோயில் மணியை காலையில் அடித்தால்

மோட்டார் சைக்கிளில் ஊர் சுத்தினால்

கள்ளடித்து படம் எடுத்து முகநூலில் போட்டால்

முக்கியமாக யோ. கர்ணனைச்சந்தித்தால்

நாட்டில் அமைதி வந்து விட்டது என்று அர்த்தம்.

எவ்வளவு பெரிய தத்துவம்.

நன்றி ஐயா.

எனது தம்பி முப்பது வருடங்களுக்கு பின் நாட்டிற்கு போய் இரண்டு மாதங்கள் நின்று விட்டு திரும்பிவந்தார் .வெளிநாடுகளில் இருந்துவிட்டு நாட்டில் போய் தங்கிவிட்ட எமது ஆறு நண்பர்கள் அங்கு இப்போது உள்ளார்கள்.ஒரு மோட்டார் சயிக்கிளின் உதவியுடன் முழு இடங்களும் சுற்றியடித்ததாக சொன்னார்.

எங்கும் இராணுவ பிரசன்னம் என்பது உண்மை ஆனால் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்கள் அத்தனையும் செய்ய தொடங்கிவிட்டார்கள் .கோவில் திருவிழாக்கள் காலை ஐந்து மணிக்கே லவுட் ஸ்பீக்கர் பாட்டுக்களுடன் தொடங்கி விடுவதாக சொன்னார் .கள்ளுக்கு நன்றி சொல்லி முகப்புத்தகத்தில் பனையுடன் நின்று படம் எடுத்து போட்டிருக்கின்றார் .

யோ .கர்ணனையும் சந்தித்ததாக சொன்னார் .

யாழுக்கு வந்து முட்டி மோதிய மீராபாரதி இலங்கை முழுக்க திரிந்து பல கூட்டங்கள் வைத்துவிட்டு திரும்புகின்றார் .கிளிநொச்சியில் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் அவர்கள் மன அழுத்தத்தை போக்க ஒரு தியான பட்டறையே வைத்தார் .அவரின் முக புத்தகத்தில் போய் படங்களை பார்வை இடலாம் .பார்க்க மிக சந்தோசமாக இருக்கின்றது .நாங்கள் எதுவும் செய்யாமல் இங்கிருந்து படம் மட்டும் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

அங்கிருக்கும் மக்களுக்கு முடிந்த அளவிற்கு அனைத்து விதத்திலும் உதவுவதுதான் நல்லது ,அதைவிட்டு நாட்டில் பிரச்சனை இருக்கு என்று காட்ட விலகி இருப்பது எந்தவிதத்திலும் எமக்கு உதவபோவதில்லை

ஆமாம்....... இந்தப்பிரச்சனைகளுக்காகத்தான்,அல்லது இந்தப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான் நாம் போராடினோம்.....போராடுகின்றோம்......???????? :icon_mrgreen:

எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக அங்கு இருக்கும் உண்மை நிலையை பொய்யாக்க முடியாது .

நாட்டு நடப்பு வேறு அரசியல் வேறு ,ஏதோ நீங்களெல்லாம் நாட்டை நினைத்து சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுமாதிரி கிடக்கு உங்கள் எழுத்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சொல்கிறார்.. மாணவர்கள் கல்வி வீழ்ச்சிக்கு புலிகள் இல்லாமை காரணம் என்று. அவருக்குக் கூட தெரியல்ல.. யாழில் இயல்பு நிலை திரும்பிட்டு என்று...!

யாழ் வைத்தியசாலை பொறுப்பாளர் ஒருவர் சொல்கிறார்.. யாழ் குடா நாட்டு நிலைமை.. மோசமாக உள்ளது. கருக்கலைப்புக்களும் இளையோர் கர்ப்பமும்.. திருமணத்திற்கு முன்னான கர்ப்பமும் அதிகம் என்று...!

யாழ் ஆண்டகை (1995 இல் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை வரவேற்றவர்களில் ஒருவர்) சொல்கிறார்.. மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத வண்ணம்.. இராணுவப் பிரச்சன்னம் உள்ளது என்று..!

ஆனால்.. அர்ஜீனுக்கும் அவரது நண்பர்களுக்கும் அரசியல் பிரச்சனை தவிர வேற ஒன்றும் அங்க இல்லை. சித்தார்த்தனுக்கு கூட... இப்ப 1987 இல இருந்து இந்த நிலை தான். ஏன்னா அவர் இருக்கிற இடம் அப்படி...! கொழும்பில.. வவுனியாவில.. திருமலைல.. மட்டக்களப்பில.. யாழ்ப்பாணத்தில.. ஆமிக்காரனோட.. காட்டிக் கொடுத்துக் கொண்டு.. அவனோட ஜீப்பில.. பஜீரோவில.. ரோவரில.. . போய் வாறவங்ககிட்ட.. சாதாரண மக்கள் படும் அவதை குறித்து கேள்வி கேட்பதே தப்பு..!

சிவில் அதிகாரிகள் சொல்வதை ஓரளவு.. நம்பலாம்...! முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழு ஆக்கள் சொல்வதை நம்புறதும்.. அதற்கு மதிப்பளிப்பதும்.. எவ்வளவு தூரம் உபயோகமுன்னு தெரியல்ல..! அது ஆபத்து மட்டுமே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

[size=4]இங்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விடயம், போர் ஓய்வுக்கு பின்னரான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், அவர்களது எதிர்காலம் குறித்த கேள்வியே அவர்களை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது வாழ்நிலையை இரு பகுதியினரோடு ஒப்பிட்டு நோக்கும் நிலையில் இருக்கின்றனர். [/size]

[size=4]ஒன்று, தங்களுக்கு அருகாமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாதிக்கப்படாத மக்களின் வாழ்நிலைமையுடன் தங்களை அவர்கள் ஒப்பிட்டு நோக்குகின்றனர். அடுத்தது, ஐரோப்பிய வாழ்வில் சங்கமித்துவிட்டு போருக்கு பின்னர் உல்லாசப்பயணிகளாக வந்துபோகும் புலம்பெயர்ந்த முன்னைநாள் அயலவர்களுடன் தங்களை ஒப்பிட்டு நோக்குகின்றனர். இலங்கையே கெதியென்று வாழ்ந்து, இறுதியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு மேற்படி இரு பகுதியினரும் எட்ட முடியாத உயரத்திலேயே இருக்கின்றனர். அவர்களை தாங்களும் தொடுவதற்கு என்ன வழி?

இந்த விடயத்தை தமிழர் அரசியல் தலைமை சரியாக விளங்கிக் கொள்ளாத வரை, இது போன்ற விடயங்கள் தொடரவே செய்யும். பயணம் செய்வதற்கு ஆட்கள் தயாராக இருக்கும் போது, பணம் வசூலிப்போரும், படகோட்டிகளும் இருக்கவே செய்வர். அதில் சில சிங்கள படகோட்டிகளும் இருக்கலாம். [/size]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=105676[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனது தம்பி முப்பது வருடங்களுக்கு பின் நாட்டிற்கு போய் இரண்டு மாதங்கள் நின்று விட்டு திரும்பிவந்தார் .வெளிநாடுகளில் இருந்துவிட்டு நாட்டில் போய் தங்கிவிட்ட எமது ஆறு நண்பர்கள் அங்கு இப்போது உள்ளார்கள்.ஒரு மோட்டார் சயிக்கிளின் உதவியுடன் முழு இடங்களும் சுற்றியடித்ததாக சொன்னார்.

எங்கும் இராணுவ பிரசன்னம் என்பது உண்மை ஆனால் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்கள் அத்தனையும் செய்ய தொடங்கிவிட்டார்கள் .கோவில் திருவிழாக்கள் காலை ஐந்து மணிக்கே லவுட் ஸ்பீக்கர் பாட்டுக்களுடன் தொடங்கி விடுவதாக சொன்னார் .கள்ளுக்கு நன்றி சொல்லி முகப்புத்தகத்தில் பனையுடன் நின்று படம் எடுத்து போட்டிருக்கின்றார் .

யோ .கர்ணனையும் சந்தித்ததாக சொன்னார் .

யாழுக்கு வந்து முட்டி மோதிய மீராபாரதி இலங்கை முழுக்க திரிந்து பல கூட்டங்கள் வைத்துவிட்டு திரும்புகின்றார் .கிளிநொச்சியில் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் அவர்கள் மன அழுத்தத்தை போக்க ஒரு தியான பட்டறையே வைத்தார் .அவரின் முக புத்தகத்தில் போய் படங்களை பார்வை இடலாம் .பார்க்க மிக சந்தோசமாக இருக்கின்றது .நாங்கள் எதுவும் செய்யாமல் இங்கிருந்து படம் மட்டும் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

அங்கிருக்கும் மக்களுக்கு முடிந்த அளவிற்கு அனைத்து விதத்திலும் உதவுவதுதான் நல்லது ,அதைவிட்டு நாட்டில் பிரச்சனை இருக்கு என்று காட்ட விலகி இருப்பது எந்தவிதத்திலும் எமக்கு உதவபோவதில்லை

அர்ஜுன்,எனது நண்பர் ஒருவர் நெல்லியடியில் வசிப்பவர் எல்லா இடமும் சுத்தியடித்துக்கொண்டு தான் வந்துள்ளார்.இளையவர்களை பார்த்த போது தான் விம்மி அழுததாக கூறினார்.காரணம் நெல்லியடி சந்தியில் இரவில் போதையில் இளையர்கள் போதையில் காட்டுக்கத்து கத்துவதாகவும் அவர்களுக்கே அவர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியாமல் இருக்கிறார்கள் என்பதையும் இதன காரணமாக கல்வியில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் இன்று கடைசியில் இருபதற்கு காரணமுமாகும்.இவ்விளையவர்களுக்கு இராணுவம் தான் போதைபொருட்களை வழங்குவதாகவும் நண்பர் சொன்னார்.

அரசு தனது வெளிநாட்டு அந்நிய செலவாணியை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்தே பெறுகிறது.எனவே தமிழ் மக்கள் தமது பணத்தை செலவு செய்ய அரசு தந்திரமாக விடுகிறது.அரசின் பொருளாதார சரிவை தமிழ் மக்களே ஒரளவு நிவர்த்தி செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக அங்கு இருக்கும் உண்மை நிலையை பொய்யாக்க முடியாது .

நாட்டு நடப்பு வேறு அரசியல் வேறு ,ஏதோ நீங்களெல்லாம் நாட்டை நினைத்து சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுமாதிரி கிடக்கு உங்கள் எழுத்துக்கள் .

மீண்டும் மீண்டும் சுதந்திரத்தை சாப்பாட்டோடு ஒப்பிட உங்கள் ஒருவரால்தான் முடியும். :(

இருந்த இடத்தின் தாக்கமோ???? :( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை அர்ஜுனுக்கு அரசியல் தீர்வை விடுவோம்.புலிகளை வேன்றாச்சு 'அல்லது கொன்றாச்சு.புலிகளால் யாருக்கும் எதுவும் இல்லை என்றானபின் எதற்காக எங்கள்கிராமங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை.பலாலியை சூழ உள்ள கிராமத்து மனிதர்கள் எங்கே உள்ளார்கள்.தெரியுமா?

இயல்புநிலை வந்தால் மக்களின் ஆர்பாட்டங்கள் எதற்கு?அல்லது ராணுவத் தாக்குதல்கள் எதற்கு .

மற்றும் நீங்கள்சொல்லும் உண்மைநிலை என்ன?அல்லது மற்றவர்கள் சொல்லும் பொய் நிலை என்ன? எதுவுமே அற்ற ஒரு வெறுமைக்குள் மாட்டிவிட்டோம் என்பது மட்டுமே எனக்கு தெரிகிறது.

இப்போது எம் மக்களின் தலைவிதி உங்களைப் போன்ற மாற்றுக் கருத்து

அறிவாளிகளின் கைகளிலே தான் உள்ளது.எந்த இடைஊறுகளும் இன்றி அரசியல் செய்யலாம்.முடிந்தால் படை கூடநடத்தலாம்.இங்கிருந்து மயிர் கூட பிடுங்க முடியவில்லை எங்களால்.தயவுசெய்து நீங்கள் ஏதாவது பிடுங்கிப்போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கேட்டு களைத்த விடயம்

உங்களுக்காவது பதில் வருகிறதா பார்க்கலாம்

அல்லது

பழையபடி

சர்வதேச தலைவர்களுடன் நின்று எடுத்த படம் வருமா பார்க்கலாம்.

மீண்டும் மீண்டும் சுதந்திரத்தை சாப்பாட்டோடு ஒப்பிட உங்கள் ஒருவரால்தான் முடியும். :(

இருந்த இடத்தின் தாக்கமோ???? :( :( :(

நான் எதை யோசித்தேனோ அதை எழுதி விட்டீர்கள்...உண்மை,நன்றி பசைப்புள்ளி முடிந்து விட்டது நாளை தேடி வந்து போடுவேன் வி அண்ணா..................

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,எனது நண்பர் ஒருவர் நெல்லியடியில் வசிப்பவர் எல்லா இடமும் சுத்தியடித்துக்கொண்டு தான் வந்துள்ளார்.இளையவர்களை பார்த்த போது தான் விம்மி அழுததாக கூறினார்.காரணம் நெல்லியடி சந்தியில் இரவில் போதையில் இளையர்கள் போதையில் காட்டுக்கத்து கத்துவதாகவும் அவர்களுக்கே அவர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியாமல் இருக்கிறார்கள் என்பதையும் இதன காரணமாக கல்வியில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் இன்று கடைசியில் இருபதற்கு காரணமுமாகும்.இவ்விளையவர்களுக்கு இராணுவம் தான் போதைபொருட்களை வழங்குவதாகவும் நண்பர் சொன்னார்.

அரசு தனது வெளிநாட்டு அந்நிய செலவாணியை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்தே பெறுகிறது.எனவே தமிழ் மக்கள் தமது பணத்தை செலவு செய்ய அரசு தந்திரமாக விடுகிறது.அரசின் பொருளாதார சரிவை தமிழ் மக்களே ஒரளவு நிவர்த்தி செய்கிறார்கள்.

இன்று யாழ்ப்பாண காலச்சார வீழ்ச்சிக்கும் கல்வி வீழ்ச்சிக்கும் இராணுவம் ஒரு காரணம் என்றால் மறு காரணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்குள்ள இளைஞர்களுக்கு கேட்டு கேள்வி இன்றி அனுப்பும் பணம்....

அண்ணை அர்ஜுனுக்கு அரசியல் தீர்வை விடுவோம்.புலிகளை வேன்றாச்சு 'அல்லது கொன்றாச்சு.புலிகளால் யாருக்கும் எதுவும் இல்லை என்றானபின் எதற்காக எங்கள்கிராமங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை.பலாலியை சூழ உள்ள கிராமத்து மனிதர்கள் எங்கே உள்ளார்கள்.தெரியுமா?

இயல்புநிலை வந்தால் மக்களின் ஆர்பாட்டங்கள் எதற்கு?அல்லது ராணுவத் தாக்குதல்கள் எதற்கு .

மற்றும் நீங்கள்சொல்லும் உண்மைநிலை என்ன?அல்லது மற்றவர்கள் சொல்லும் பொய் நிலை என்ன? எதுவுமே அற்ற ஒரு வெறுமைக்குள் மாட்டிவிட்டோம் என்பது மட்டுமே எனக்கு தெரிகிறது.

இப்போது எம் மக்களின் தலைவிதி உங்களைப் போன்ற மாற்றுக் கருத்து

அறிவாளிகளின் கைகளிலே தான் உள்ளது.எந்த இடைஊறுகளும் இன்றி அரசியல் செய்யலாம்.முடிந்தால் படை கூடநடத்தலாம்.இங்கிருந்து மயிர் கூட பிடுங்க முடியவில்லை எங்களால்.தயவுசெய்து நீங்கள் ஏதாவது பிடுங்கிப்போடுங்கள்.

முதலில் தலையங்கத்தை வாசியுங்கள் .அதற்கு நான் முதல் இட்ட பதிவையும் வாசியுங்கள் .

பலமுறை எழுதியதுமாதிரி இங்கிருக்கும் பலருக்கு அடிப்படை விளக்கமே அந்தமாதிரித்தான் (அவர்கள் எதில் சார்ந்திருந்தவர்கள் என்பதில் இருந்தே அறியலாம் ).

சிங்கள குடியேற்றம்,உயர் பாதுகாப்பு வலயம்,மீள் குடியேற்றம் இன்னும் பல அரசியல் விடயங்கள் எள்ளளவும் அசையவில்லை ,அது உலகறிந்த உண்மை .

அதற்காக இங்கு நல்ல வாட்டசாட்டமாக வள்ளிசாக வாழ்ந்துகொண்டு தேசியம் என்ற போர்வையில் ஊதிபெருக்குகின்ற வேலை செய்பவர்கள் தான் பலர் .முள்ளிவாய்கால் அழிவின் போது உலகம் எங்களை கண்டும் காணாமல் விட்டதற்கும் இப்படியானவர்களும் ஒரு காரணம் .பச்சை பொய்யை சொல்லியே அரைவாசி பிரச்சாரம் நடந்தது அதனால் எதுவும் எடுபடவில்லை இன்றும் அந்த கள்ள கோஷ்டிகள் மாறினதாக தெரியவில்லை .அங்கு போகும் வெளிநாட்டவர்களுக்கு உண்மை நிலை இவர்களை விட தெரியும் அதைவிட இவர்கள் கூறுவது போல் மிக மோசமான நிலை இருந்தால் இவ்வளவு சனமும் வெளிநாட்டில் இருந்து அள்ளுப்பட்டு போகாது .

பிழைப்புப்பிற்கு இனத்தை விற்பவர்கள் தொழிலே இதுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ, ஊருக்கு போய் வந்த அத்தனை சனமும் ஊர் அந்தமாதிரி இருக்குது என்று சொல்லுதுகள். :(

காசிருந்தால் அந்தமாதிரி என்யாய் பண்ணிட்டு,ஜாலியா இருக்கலாம் எண்டுதுகள்.

சனத்துக்கு என்ன தேவை என்று இன்னும் புரியவில்லை டிஸ்கோ,பார்,கசினோ,சிவப்புவிளக்கு,நல்ல சாப்பாடு இருந்தால் போதும் என்று நினைக்கிற சனத்துக்காக போராடப்போனவர்களில் தான் தப்பு.

அதுகளுக்கு தேவை இது தான்,சுதந்திரம் என்றாலே என்ன என்று தெரியாததுகளுக்கு போய் எவ்வளவு கத்தினாலும் புரியாது. எப்படியாச்சும் போகட்டும் என்று விட்டுத்தொலைப்பது தான் சிறந்தது. :wub:

பார்வை என்பது எமது அரசியல் சார்ந்ததாக இருக்கும்போதே சிக்கல் வருகிறது

இங்கு நீங்கள் காட்டும் உதாரணங்கள் எதுவுமே தனி நபர்கள் சார்ந்தவை.

உலகத்துக்கு எல்லாம் தெரியும் என எழுதும் தங்கள் கைகள்தான் அதற்கு உதாரணமாக வெளியிலிருந்து போவோரை எடுத்துக்காட்டுகின்றன. அதே கைகள் தமிழன் பயந்தபடி வாழ்வது உலகத்துக்கு தெரியாது என்றும் சொல்கின்றன.

நிலைமை மாறத்தொடங்கியுள்ளது.

எல்லாம் இழந்து அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் மெல்ல மெல்ல அக்கிரம அதிகரிப்பால் தன்னை விடுவிக்க முயற்சிகளை தொடங்கியிருப்பதும் உலகத்துக்கு தெரியத்தொடங்கியிருக்கிறது.

அந்தவகையில்தான் எழுத்தாளர்கள் சமய பெரியோர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள ஏன் வெளியேற்றப்பட்ட சாதாரணமக்கள் கூடஎதிப்புக்களை நேரடியாகவே காட்டத்தொடங்கியுள்ளனர். இது வெளிப்படை.

போன கிழமை

எனது அண்ணர் ஒருவர் நல்லூரில் இராணுவத்துக்கு நேரேயே சொல்லியுள்ளார்.

பிரபாகரன் வருவான். கணக்கு முடிப்போம் என.

இது ஆவேசத்தால் வந்ததாக இருந்தாலும் அநீதியைப்பொறுக்கமுடியாது வரும் வார்த்தைகள்.

அதைக்கேட்டும் ஒன்றும் செய்யமுடியாது இராணுவம் நிற்பதும் புலம் பெயர் சமூகம் செய்யும் பரப்புரைகளால்தான்.

புலம்பெயர் சமூகம் ஒன்றும் புடுங்கவில்லை என்பது தங்களை வைத்து மற்றவரைக்கணக்குப்போடுவதால் வரும் தவறு. நீங்கள் திருந்துங்கள் என்பதே வழி.

எது எப்படியோ, ஊருக்கு போய் வந்த அத்தனை சனமும் ஊர் அந்தமாதிரி இருக்குது என்று சொல்லுதுகள். :(

காசிருந்தால் அந்தமாதிரி என்யாய் பண்ணிட்டு,ஜாலியா இருக்கலாம் எண்டுதுகள்.

சனத்துக்கு என்ன தேவை என்று இன்னும் புரியவில்லை டிஸ்கோ,பார்,கசினோ,சிவப்புவிளக்கு,நல்ல சாப்பாடு இருந்தால் போதும் என்று நினைக்கிற சனத்துக்காக போராடப்போனவர்களில் தான் தப்பு.

அதுகளுக்கு தேவை இது தான்,சுதந்திரம் என்றாலே என்ன என்று தெரியாததுகளுக்கு போய் எவ்வளவு கத்தினாலும் புரியாது. எப்படியாச்சும் போகட்டும் என்று விட்டுத்தொலைப்பது தான் சிறந்தது. :wub:

[size=4]நேர்மையாக ஒரு இனத்தை விரும்புவன் ஒருநாளும் 'எப்படியானாலும் போ' என விட்டுவிடமாட்டான், தாயகமும் தாயைப்போன்றது தான்.[/size]

[size=4]இன்று கொள்ளைகள், ஒரு சில கொலைகள், கடத்தல்கள் நடக்கின்றன. நாளை பாலியல் வன்புணர்வுகளும் நடக்கும். எனவே [/size]

[size=4]அங்கு போய் 'நல்லாயிருக்கு' எனக்கூறுபவர்கள் யாருமே அங்கு வாழமாட்டார்கள். தனது மனைவியோ இல்லை மகளோ மானபங்கப்படுத்தப்படலாம், தனது மகனோ தானோ கடத்தப்படலாம் என்பதே உண்மை. அதை வெளிப்படையாக 'விசிட்' அடிப்பவர்கள் ஏற்கமாட்டார்கள்.[/size]

[size=4]கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு படகுகளில் தாயக தமிழர்கள் ஏதிலிகளாக அவுசுக்கு வர முயற்சித்துள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் பொருளாதார கடினமா? இல்லை வாழ முடியாத நிலையா?[/size]

[size=4]2187707346.jpg?x=292&sig=4wHbXLMWZyJgrzlBPrJBKA--[/size]

[size=4]http://au.news.yahoo.com/thewest/a/-/breaking/14433385/fears-asylum-seekers-will-come-to-grief-on-cocos/[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.