Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடதமிழீழத்தில் சிங்களக் கைக்கூலிகள் மூவர் கொலை! அதிர்ச்சியில் சிங்கள இராணுவம்!

Featured Replies

யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் சிங்களப் படைகளுடன் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.08.2012) இரவு இடம்பெற்ற இச்சம்பவங்களில் பலியான மூவரும் கிளிநொச்சி வட்டக்கச்சி, முல்லைத்தீவு விசுவமடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.

இவர்களில் வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த சிவராசா (45) என்பவர் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் வைத்து கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது உடலம், எரிந்து சாம்பராகிய நிலையில் காணப்பட்ட இவரது வீட்டிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேபோன்று விசுவமடு ரெட்பாணா பகுதியில் வேலு விஜயகுமார் (33) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட இவரது உடலின் கழுத்துப் பகுதியில் நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று தடவைகள் திருமணம் புரிந்த இவர், சிங்களப் படைகளுடன் இணைந்து பெண்களுடன் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.

இதேபாணியில் விசுவமடு நெத்தலியாறு பகுதியில் அருணாசலம் இராமநாதன் (73) என்பவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்ப் பெண்களை பாலியல் தொழிலாளிகளாக சிங்களப் படைகளுக்கு ஏற்பாடு செய்துகொடுக்கும் முகவராக இவர் இயங்கி வந்துள்ளார்.

ஒரே நாளில், ஒரே பாணியில் இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டமை சிங்களப் படைகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

http://thaaitamil.com/?p=28191

வேறு எங்கும் இந்த செய்தியை காணவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா Arjun அண்ணா இலங்கைக்கு போற நேரம் பாது போட்டு தள்ளுராங்கனு அண்ணா பயந்திட்டார் அண்ணா யு don't வொர்ரி நான் சித்து மாமாட்ட சொல்லி நீங்க பாதுகாப்போட போயிட்டு வர ஏற்பாடு செய்யுறன்

இஞ்சை வேலை செய்கின்ற உங்கள மாதிரி ஓடிவந்த புலியோன்று உந்த செய்தியை இரவு C.M.R கேட்டு புலி திரும்ப வந்துவிட்டது என துள்ளி குதித்து விட்டு .

இப்ப உறுதியாகவில்லை என்று மண்டையை போட்டுக்கொண்டு நிக்கின்றார் .அவற்றை அலுப்பு தாங்காமல் தான் அதை எழுதினேன் .

அடுத்து புலிகள் இருக்கும் போதே பஸ்சில் ஊர் போய்வந்த எனக்கு அவர்கள் இல்லாத போது பாதுகாப்பு எதற்கு ?

சித்து மாமாவுடன் அரசியல் கடந்து லண்டன் சிநேகிதம் இன்னமும் தொடர்கின்றது.

[size=4]சமூக விரோதிகளை கொல்லுவதற்கு சமூக போக்குள்ளவர்கள் எந்த சமூகத்திலும் இருப்பார்கள்.[/size]

[size=4]அவர்கள் புலிகளாக இருப்பார்கள் என்பது உப்பில்லாத வாதம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா Arjun அண்ணா இலங்கைக்கு போற நேரம் பாது போட்டு தள்ளுராங்கனு அண்ணா பயந்திட்டார் அண்ணா யு don't வொர்ரி நான் சித்து மாமாட்ட சொல்லி நீங்க பாதுகாப்போட போயிட்டு வர ஏற்பாடு செய்யுறன்

ஏனப்பா இந்த அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்ற விளையாட்டு???

அந்தாளே செய்தியைக்கேட்டதும் காலைத்தூக்கிக்கொண்டு திரிகிறார்.

பாவம்

கொஞ்சநாள் நிம்மதியாக தூங்கியவர்.

[size=4]சமூக விரோதிகளை கொல்லுவதற்கு சமூக போக்குள்ளவர்கள் எந்த சமூகத்திலும் இருப்பார்கள்.[/size]

[size=4]அவர்கள் புலிகளாக இருப்பார்கள் என்பது உப்பில்லாத வாதம். [/size]

புலிக்காய்ச்சலில் எழுதினாலும்

புலியால்தான் இவை முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதை நினைத்து எனக்கு சந்தோசம்.

Edited by விசுகு

[size=4]கலாசாரச் சீரழிவு, மாணவர்களின் ஒழுக்கமின்மை, குடும்ப வன்முறைகள், வீட்டுக்குள்ளான பெண் கொடுமைகள் போன்ற தலைப்புக்களில் எழுதுவோரெல்லாமே தெரிந்தும் தெரியாமல் போட்டுவிடுகின்ற பிள்ளையார் சுழி "தமிழீழ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்'' என்பதுதானே!
[/size]

[size=4]ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் "அவை', வாய்ப்புக் கிடைக்கும் போது தன் குரூர முகத்தை காட்டிச் சிரிக்கின்றன. பிரத்தியேக வகுப்பு வாத்தி, பத்தாம் வகுப்புப் பிள்ளையை இழுத்துக்கொண்டோடுவதும், காக்கிச் சட்டை சீருடைப் பட்டாளத்தான் பாடசாலை மாணவியை பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கு "பார்ட்டி எப்ப சேர்?'' என்று சந்தோஷம் கொண்டாடும் அதே ஊர் இளவல்களும் ,வாங்கிக்கொள்வது வேறு வேறாயினும், விற்றது "சுயமரியாதை' என்கின்ற ஒன்றைத்தானே!
[/size]

[size=4]

[size=4]தன்னையும், போராளிகளையும் ஒழுக்கம் மிகுந்தவர்களாக வளர்த்து வைத்திருப்பதில் பிரபாகரனின் ஓர்மம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது''பொய்கலவாத வார்த்தைகளில் மெய் சொன்னவர், பாசறைகள் வரை பழகித் திரும்பும் பாக்கியம் வாய்ந்த இந்தியப் பெண் பத்திரிகையாளர் "அனிதா பிரதாப்'.
[/size][/size]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=106098[/size]

தமிழ் சமூகத்தில் எவரெவர் சமூக விரோதிகளை தண்டிக்க முயல்கின்றார்களோ (மரண தண்டனை தான் சரி என்பதில் எனக்கு முரண்பாடுகள் உள்ளதென்றாலும்), அவர்களை புலிகளாக கருதுவதில் தான் புலிகளின் வெற்றி தங்கி இருக்கு

அதுதான் வடிவாக எழுதிருந்தேன் ஓடிவந்த புலி ஒன்று என்று .இல்லாவிட்டால் ஒரு தமிழன் என்று எழுதியிருப்பேன் .

தமக்கு துணை வராதவர்களை சமூக விரோதிகளாக்கி மண்டையில் போடுவதில் புலிகளும் அவர்தம் ஆதரவாளர்களும் கண்ட சுகங்கள் சொல்லி மாளாது .அந்த ருசியிலேயே இன்னமும் வாயூறி வாழ்கின்றார்கள் ,ஏதாவது அப்படி நடக்குமா என்று .ஆனால் அது எக்காலமும் இலங்கையில் இனி நடக்க போவதில்லை .

அதில் கூட இறுதிவரையில் அவர்கள் வெற்றிபெறவில்லை ஆனால் அதை வைத்து புலிகளை பயங்கரவாதிகளாக்கி சிங்கள அரசு வெற்றி கண்டுவிட்டது .

மழைக்காவது கொஞ்சம் அங்கனேக்க ஒதுங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

மழைக்காவது கொஞ்சம் அங்கனேக்க ஒதுங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது .

என்ன இருந்தாலும்

[size=5]ஒரு நாளைக்கு ஒரு தரமாவது தன்னை சுயவிமர்சனம்[/size]

செய்யும் Arjun அண்ணாவின் இந்தக்குணம் போற்றுதற்குரியது.

எவருக்கும் இல்லாத அவரிடம் மட்டுமே உள்ள சிறப்பு இது.

யாழில் ஊர்ப்புதினத்தில் இணைக்கப்படும் செய்திகளை நம்பி பதில்கருத்து இடமுடியவில்லை. கவர்ச்சிகரமான தலைப்புக்கள், அவசரமான விபரணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் மொட்டையாக தாம் நேரடியாக சம்பவங்களை பார்த்ததுபோன்ற விபரிப்புக்கள்.

பின்னர் செய்தியுடன் சம்மந்தம் இல்லாமல் ஆளாளுக்கு புடுங்குப்பாடுகள்.

தனக்கும் தன் இனத்திற்கும் இடுக்கண் வந்தால் அதற்கு காரணமானவன் எந்தக்கொம்பனாய் இருந்தாலும் அடித்து [கொல்பவன்] சுக்குநூறாக்குபவன் தாண்டா தமிழன் .............ஏனனில் அவன் புலிக்கு சமனாய் வாழ்பவன் ..............அப்படி அவன் இல்லையென்றால் அவன் தமிழனின் வித்தாய் இருக்க மாட்டாண்டா............

நான் டா போட்டது யாரையும் குறிப்பிட்டு இல்லை ...........இந்த வசனத்திற்கு அப்படி போடாவிட்டால் ..........அது கருத்தாகமாட்டாது ........... :D

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே இப்ப மழைக்காக அங்க ஒதுங்கின நீங்கள் எல்லாம் சேர்ந்து தமிழனுக்கு ஒரு தீர்வ வாங்கி தாறது?

உண்மை என்னன்னா இலங்கைல வரி புலி இருக்கேக்க இருந்த கொஞ்ச மரியாதையும் இப்ப வெள்ளை வேட்டி கட்டின சம்மந்தனுக்கும் இல்லை கறுப்பு கோர்ட் போட்ட சுமந்திரனுக்கும் இல்லை ஏன் சொல்ல போனால் அவங்கல மதிக்கவே மாட்டேன்குறாங்க...... சோ உங்க புலி காச்சல விட்டுட்டு உருப்படியா மழைக்கு ஒதுங்கின நீங்களும் உங்க groupum சேர்ந்து எதாச்சும் ஒரு தீர்வ வாங்கி கொடுங்க.... அதுக்கு வக்கில்லனா இழுத்து போத்திட்டு படுங்க

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுதுது

சுண்டல்................. :icon_idea: :icon_idea: :icon_idea:

அது தானே இப்ப மழைக்காக அங்க ஒதுங்கின நீங்கள் எல்லாம் சேர்ந்து தமிழனுக்கு ஒரு தீர்வ வாங்கி தாறது?

உண்மை என்னன்னா இலங்கைல வரி புலி இருக்கேக்க இருந்த கொஞ்ச மரியாதையும் இப்ப வெள்ளை வேட்டி கட்டின சம்மந்தனுக்கும் இல்லை கறுப்பு கோர்ட் போட்ட சுமந்திரனுக்கும் இல்லை ஏன் சொல்ல போனால் அவங்கல மதிக்கவே மாட்டேன்குறாங்க...... சோ உங்க புலி காச்சல விட்டுட்டு உருப்படியா மழைக்கு ஒதுங்கின நீங்களும் உங்க groupum சேர்ந்து எதாச்சும் ஒரு தீர்வ வாங்கி கொடுங்க.... அதுக்கு வக்கில்லனா இழுத்து போத்திட்டு படுங்க

[size=4]அது அது அது சுண்டல் ..........................அது எச்சரிக்கையில்லை .....கட்டளை..............[/size]

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்காம விடமாட்டீங்களே , இப்படி போடுறதா இருந்ததா ஊருக்கு 10 வது போடணும் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண் சித்துவைக் கண்டால், என்னுடைய தம்பியை எதுவித சம்பந்தமுமில்லாது எதுக்கு அடித்துக் கொன்றீர்கள் எனக் கேட்கமுடியுமா?

முன்று தமிழ் இன துரோகிகள் ஒரே நாளில் வெட்டி கொலை

பதிவேற்றம் August 8, 2012 | பதிவேற்றியவர் donson

விஸ்வமடு மற்றும் வட்டக்கச்சியை சேர்ந்த முவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்.

இவ் முவரும் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று வன்னி செய்திகள் தெரிவிக்கின்றன.

வட்டகசியை சேர்ந்த சிவராசா சமிப காலமாய் ஊறலு பகுதியில் வேலை நிமித்தம் வாழ்ந்துவந்தார் .இவர் கடந்த ஞாயிற்று கிழமை அன்று கோடரியால் வெட்டி கொலை செய்யபட்டார் .இவரது உடலம், எரிந்து சாம்பராகிய நிலையில் காணப்பட்ட இவரது வீட்டிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

33 அகவை கொண்ட வேலு விஜகுமார் விஸ்வமடு ரெட்பானா பகுதியை சேர்ந்தவர் இவர் முன்று திருமணம் முடித்தவர் . முன்னாள் பெண் போராளிகளை இராணுவத்துடன் இணைந்து பாலியல் துன்புறுத்தல்கள் புரிந்தார் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன .

மற்றையவர் (71) அகவையை கொண்ட அருணாசலம் ராமநாதன்விஸ்வமடுவை சேர்ந்தவர் என்றும் பகிரங்கமாக இராணுவத்துடன் இணைந்துமுன்னாள் பெண் போராளிகளை பலரை காட்டிகொடுத்து பாலியல் ரீதியாக அவர்களை துன்புருத்தபட்டதட்கு இவர் ஓர் முக்கியமான நபர் ஆவார் என்றும் மேலும் வன்னி தகவல்கள் தெரிவிகின்றன.

www.irruppu.com

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த புலிகளினால் மட்டும்தான் முடிந்தது அதனால்தான் புலிகள் மேல் சமூகநலன் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் அவர்களிற்கு மாபெரும் ஆதரவை வழங்கினார்கள் என்பதினை யாரும் அவ்வளவு விரைவாக மறந்திருக்கமாட்டார்கள்

இப்போது சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க புலிகள் போன்றோர் வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள் எவர் இதை செய்திருந்தாலும் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்த புலிகள்தான் இந்த தண்டனையை கொடுத்ததாக மக்கள் கருதுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெங்கு அநியாயங்கள் நடக்கின்றதோ,

அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்!

-கிருஷ்ண பரமாத்மா.

[size=2]'[/size][size=2]ஆயுதப்[/size][size=2] [/size][size=2]போராட்டத்திற்கான[/size][size=2] [/size][size=2]எண்ணக்[/size][size=2] [/size][size=2]கருவை[/size][size=2] [/size][size=2]எமது[/size][size=2] [/size][size=2]சமூகத்தில்[/size][size=2] [/size][size=2]விதைத்த[/size][size=2] [/size][size=2]முன்னோடிகளில்[/size][size=2] [/size][size=2]ஒருத்தி[/size][size=2] [/size][size=2]என்றவகையில்[/size][size=2] [/size][size=2]நான்[/size][size=2] [/size][size=2]உங்கள்[/size][size=2] [/size][size=2]முன்[/size][size=2] [/size][size=2]வெட்கித்து[/size][size=2] [/size][size=2]நிற்கின்றேன்[/size][size=2]. [/size][size=2]ஆயுதப்[/size][size=2] [/size][size=2]போராட்டத்தில்[/size][size=2] [/size][size=2]நல்ல[/size][size=2] [/size][size=2]போராட்டம்[/size][size=2], [/size][size=2]மோசமான[/size][size=2] [/size][size=2]போராட்டம்[/size][size=2] [/size][size=2]என்று[/size][size=2] [/size][size=2]எதுவுமே[/size][size=2] [/size][size=2]கிடையாது[/size][size=2]. [/size][size=2]ஆயுதம்[/size][size=2] [/size][size=2]மோசமானது[/size][size=2] [/size][size=2]மட்டுமே[/size][size=2]. [/size][size=2]அது[/size][size=2] [/size][size=2]எவர்[/size][size=2] [/size][size=2]கையிலிருந்தாலும்[/size][size=2] [/size][size=2]அழிவைத்[/size][size=2] [/size][size=2]தவிர[/size][size=2] [/size][size=2]வேறொன்றிற்கும்[/size][size=2] [/size][size=2]அது[/size][size=2] [/size][size=2]பயன்படாது[/size][size=2]'.-- அகாலம் நூலில் புஸ்பராணி எழுதியது .[/size]

[size=2]எழுஞாயிறு இதைதான் என்னால் எழுத முடியும் .நாம் கனவு கண்ட போராட்டம் வேறு ,நாட்டில் நடந்தது வேறு .[/size]

[size=2]சித்தரிடம் இது பற்றி என்னால் கேட்க முடியாது ஏனெனில் நாங்கள் இந்தியாவில் இருக்கும் போதே அவர் அப்படித்தான் இருந்தார் .அவருக்கு என்ன நடக்கின்றது ,ஏது நடக்கின்றது என்பதில் எதுவித அக்கறையுமில்லை .தனக்கென்ன இடம் என்பதுதான் அவர் சிந்தனை .அவரால் எவருடனும் வாதிடவோ நியாயம் கேட்கவோ முடியாது .ஓடு மீன் ஓட அதில் உறுமீன் பார்த்திருப்பவர் அவர் . [/size]

[size=2]இயக்கம் உடையது ,பிழை நடக்கின்றது என்று நான் அவருடன் கதைக்கும் போது அவர் எனக்கு சொல்வது அரசியல் என்றால் இதுதான் என்று ,உணர்ச்சி வசப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை என்பார் .[/size]அதை விட அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் திராணியும் அவருக்கு இல்லை

[size=2]அப்படி எங்களால் இருக்கமுடியாது என்றதால் தான் இயக்கமே உடைந்தது .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெங்கு அநியாயங்கள் நடக்கின்றதோ,

அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்!

-கிருஷ்ண பரமாத்மா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கும் போது கிருஸ்ண பரமாத்மா கோபியர்களுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தரா?

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கும் போது கிருஸ்ண பரமாத்மா கோபியர்களுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தரா?

நியாயமான கேள்வி?

விசாரித்துச் சொல்கிறேன்! :o

[size=4]வன்னிப் பகுதியில் தமிழ்ப் பெண்கள் மீதான படையினரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உடந்தையாக இருந்து செயற்பட்டுவந்த மூன்று தமிழர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலைகள் இராணுவ மட்டத்தில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட மூவரும் வன்னியிலுள்ள விஸ்வமடுப் பகுதியிலும், யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழுவிலும் ஒரே வேளையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவே இவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வட்டக்கச்சி மற்றும் அதனையடுத்துள்ள விஸ்வமடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளையில் கொல்லப்பட்டவர்களை அவர்கள் தங்கியிருந்த வீட்டுடன் சேர்த்து எரித்துவிடுவதற்கும் கொலையாளிகள் முயற்சித்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]இச்சம்பவங்களையடுத்து படையினர் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள்.

ஊரெழுவில் வசித்து வந்த 45 வயதான சிவராசா என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கின்றார். விஸ்வமடு, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த இவர் ஊரெழுவில் அண்மைக்காலமாக வசித்து வந்துள்ளார். [/size]

[size=4]சிவராசாவின் வீடும் கொலையாளிகளால் தீவைத்துக் கொழுத்தப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கொல்லப்பட்ட சிவராசாவின் உடல் தீக்குள் அகப்படவில்லை. எவ்வாறு கொலை இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்வதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே வீடு எரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றார்கள்.

இதேவேளையில், விஸ்வமடு றெட்பானா கிராமத்தில் 33 வயதான வேலு விஜயகுமார் என்பவரின் உடல் எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது. இவர் களுத்து நெரித்துக் கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் எரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜயகுமார் மூன்று தடவை திருமணம் புரிந்தவர். வன்னியிலுள்ள விதவைப் பெண்களையும், முன்னாள் பெண் போராளிகளையும் சிறிலங்கா இராணுவம் துஷ்பிரயோகம் செய்வதற்கு இவர் பெருமளவுக்கு உடந்தையாக இருந்தவர் எனக் கூறப்படுகின்றது. [/size]

[size=4]இதேவேளையில், 73 வயதான அருணாசலம் இராமநாதன் என்பவரும் விஸ்வமடு பகுதியில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். அதேபகுதியைச் சேர்ந்த இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. இவர் சிறிலங்காப் படையினரும் வெளிப்படையாகவே இணைந்து செயற்பட்டதை வன்னி மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ்ப் பெண்கள் பலரை படையினரின் துஷ்பிரயோகத்துக்காக இவர் அடையாளங்காட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [/size]

[size=4]போரின்போது தமது கணவன்மாரை இழந்த மற்றும் முன்னாள் போராளிகள் பலர் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இராணுவத்தினரால் பலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், அப்பகுதியிலுள்ள சிலரும் அதற்கு உதவிவருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையிலேயே இவ்வாறு படையினருக்கு உடைந்தயயாக இருந்த மூவர் ஒரே நேரத்தில் ஒரே பாணியில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.[/size]

http://tamilleader.com/mukiaya/5414-2012-08-09-06-32-08.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

உளவாளிகள் எஜமானர்களாலேயா தான் கொல்லப்பட்டிருப்பார்கள். சிங்களப் படை இருப்புக்கு இந்தக் கொலைகள் அவசியம். சிங்களப் படை இருப்பு.. ஒட்டுக்குழுக்களுக்கு அவசியம். ஆக மொத்தத்தில் அழிந்தது.. அழிவது.. தமிழன்..! நலன் பெறுவது சிங்களவனும்.. அவனோடு ஒட்டி வாழும் ஒட்டுக்குழுக்களும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.