Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்காலம் சிதைந்த தேசத்தின் தெருவழியே......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேர்களை நினைந்தழுதபடியே

தூங்கிப்போன

நீண்ட ஒரு துயரநாளின்

நடு நிசியில்

தூக்கம்களுக்கிடையே

கனவுகளின் வீதியில்

கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த

ஊரை எரிக்கும்

நினைவுகளை பின்தொடர்ந்தேன்...

கழுகளுக்கஞ்சிய

கண்களில் மிரட்சியுடன்

சேதி சொல்லி அழைத்துச்சென்ற

நினைவுகளின் கரங்கள்

எல்லாவற்றிலும்

தழும்புகள் நிறைந்து கிடந்தன...

ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும்

சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள்

வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன...

உற்றுப்பார்க்கிறேன்..

ஈழத்து இதிகாசங்களில்

எழுத்தப்பட்ட பெயர்கள்

எச்சங்களைத் தேடியவாறு..

முகவரி கொடுத்தவர்களின்

எச்சங்களின் முகங்கள் எல்லாம்

வறுமைக் குழிகளுக்குள்

அடித்த சுழிகளுக்கிடையே

செத்தழிந்துகொண்டிருந்தன..

தெருக்களில் பெருகியோடும்

கண்ணீர்த்துளிகளுக்கிடையேயும்

வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்

நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும்

நாட்களுக்குள் புதையுண்டும்

இனத்தின் அடையாளங்கள்

எல்லாமே தொலைந்துபோய்

இனங்காண முடியாதபடி..

ஈழத்துக் கருவறைகளின்

பாடல்களை எல்லாம்

காலம் அடித்துக்கொண்டுபோக

வறட்சிகளின் ஆடைபோர்த்தி

வற்றிக் கிடக்கின்றன

தாலாட்டுக்கள்...

காலப்பாடல்களுக்கெல்லாம்

பாட்டெழுதிய மண்ணை இப்போ

கண்ணீர் எரிப்பதால்

கவிதை வற்ற

ஈழம் அகாலத்தில்

இழவுக்காடாகி

நிழல் சிதைய தனித்து

நெருப்பில் கிடக்கிறது

ஊரின் முகப்பிலே

ஒளியேறி இருந்தாலும்

ஊமையாய் இருக்கும்

உட்காயம்

ஊதி ஊதிப் பெரிதாகிறது..

ஊழ் விளையாடிய

ஈழமுற்றத்தில்

உதிர்ந்து கிடக்கின்றன சருகுகள்

இத்துப்போனாலும்

ஈழமண்ணுக்கே உரமாவோமென்று....

தலைமுறிந்த ஒற்றைப்பனைகளின்

தனிமைகளுடன் குந்தியிருக்கின்றன

இடித்தழிக்கப்பட்ட

கல்லறைகளில் இருந்து

துயருடன் இடம்பெயர்ந்த

ஆன்மாக்கள்..

பூக்கள் தொலைத்த மரங்களையும்

முற்றங்கள் தொலைத்த வீடுகளையும்

தேற்றியபடி வீசும் காற்றிடமிருந்து

தென்றல் தொலைந்து

காலங்கள் ஆண்டுகளாய்

கரைந்து போகிறது....

கரைகளில் நின்றுபார்க்கிறேன்

ஈழ நிலவாடிய கடலொடிந்து

தாழம்பூக்களிடையே

தன் முகம்புதைத்துக் கிடக்கிறது...

நீலம்பரவிய அதன் முற்றத்தில்

நிறமிழந்து

முன்பொருகாலம் பெருகி இசைபொழிந்த

பாடல் இழந்து

தலைமுறைகள்

அலைகளின்மேல் விளையாடிய

தடமிழந்து

தன் கோலமழிந்துகிடக்கிறது..

நிலவும் பரிதியும்

மறைந்தொழிந்து விளையாடிய

ஈழ வானம்

தன் எல்லைகள் தொலைந்ததால்

ஈழக்குழந்தைகளின் கண்ணீரில்

கருக்கொண்ட

துயரமுகில்களின் பின்னே

முகம்புதைத்து

மெளனமாய் அழுகிறது...

பிதாமகர்கள்,பீஷ்மர்கள்

கதநாயகர்கள்,கண்ணகிகள் எனக்

கெளரவிக்கப்பட்ட வாய்களால்

துரியோதனர்கள் எனத்

துகிலுரியப்பட்டுக் கிடக்கிறது

கர்ணர்களாய்க் கடைசிவரை

களமாடிய சந்ததி..

இற்றுப்போகிறது ஈழத்தின்

நிமிடங்கள் சொட்டுச்சொட்டாய்..

இனி ஒரு விதி செய்வோமென்று

குற்றுயிராய்க் கிடக்கும்

எம் குழந்தைகளை தூக்கிவிட

நீண்ட கைகளை சில

ஒற்றைகளுக்குள் எழுதிவிடலாம்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க

வெறுமனே

போலித்தேரில் ஈழம்பூட்டி

வெளிநாடுகளில் பவனிவருகிறது

செத்துப்போனவர்களின் குருதி குடித்து

மெத்தப் பெருத்த

சுயநலப் புரவி...

இழவு வீடான

ஈழம் பார்த்து

தலைகுனிந்து

இந்த இரவு

இனி விடியாமலே போகட்டுமென

சாபமிட்டபடி விழித்துப்பார்க்கிறேன்....

ஈழத்தை

மீளமுடியா இருள் வெளிக்குள்

தள்ளிவிட்டு

நன்றாகத்தான் விடிந்திருக்கிறது

எதிர்காலம் எங்களுக்கு

பெரு வெளிச்சத்துடன்...

Edited by சுபேஸ்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க

வெறுமனே

போலித்தேரில் ஈழம்பூட்டி

வெளிநாடுகளில் பவனிவருகிறது

செத்துப்போனவர்களின் குருதி குடித்து

மெத்தப் பெருத்த

சுயநலப் புரவி...

உண்மை .................... ஏறுக்கொள்ளுமா ?? தொடர்ந்து அடியுங்கள் புலத்து மனச்சாட்சியை . பகிர்வுக்கு நன்றிகள் சுபேஸ் .

சுபேஸ் கண்களில் நீர் சொரிய எழுதுகிறேன் .............இளவட்டமாகிய உங்களைப்போன்றவர்களுடைய பார்வையை நினைத்து நெஞ்சம் பெருமை கொள்கிறது ...............இரும்பல்ல இளைஞ்சர் உள்ளம் துரும்பல்ல தூக்கிஎறிய என்ற அந்த கவி என் மனதுக்குள் வருகிறது.................தொடருங்கள் ...........உங்கள் கவிதைபணியை ......மாவீரர் பற்றி ஒரு பாடல் எழுதி எனக்கு அனுப்புங்கள் ,,,,,,,,,,என் இசையில் அதை படைப்பாக்க விரும்புகிறேன்..............இது சுபேசுக்கு மட்டும் கூறவில்லை இனிய உறவாகிய கோ அண்ணா, சாஸ்திரி அண்ணா உட்பட அனைத்து கவிகளுக்கும் உரித்தாகட்டும் ....நன்றி............

பாராட்டுக்கள் சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றைக் கீறியவர்கள்,

வறுமைக் கோட்டின் கீழிருக்க,

வரலாற்றின் சவப்பெட்டிக்கு,

வடிவாக மூடி இறுக்கியவர்கள்,

வெளி நாடுகளில்,

வெள்ளை வேட்டி கட்டும்,

விடுதலைப் போராளிகளாய்,

வீதிவலம் வரும் காலமிது!

மனதைத் தொட்டு விட்ட, கவிதை சுபேஸ்!!!

[size=5]Tres bien :D[/size][size=5] [/size][size=5] [/size]

[size=5]மிகவும் நம்பிக்கை தரும் வரிகள் ![/size]

[size=5]அடிக்கடி எழுதுங்கள். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இழவு வீடான[/size]

[size=4]ஈழம் பார்த்து[/size]

[size=4]தலைகுனிந்து[/size]

[size=4]இந்த இரவு[/size]

[size=4]இனி விடியாமலே போகட்டுமென[/size]

[size=4]சாபமிட்டபடி விழித்துப்பார்க்கிறேன்....[/size]

[size=4]ஈழத்தை[/size]

[size=4]மீளமுடியா இருள் வெளிக்குள்[/size]

[size=4]தள்ளிவிட்டு[/size]

[size=4]நன்றாகத்தான் விடிந்திருக்கிறது[/size]

[size=4]எதிர்காலம் எங்களுக்கு[/size]

[size=4]பெரு வெளிச்சத்துடன்...[/size]

ஏழைகளாகிவிட்டோம்.

வணக்கம் சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் அவலம் சொல்லி சென்ற கவிதைக்கு நன்றிகள் பல சுபேஸ்..

தாகம் ! தண்ணி எடுக்க கிணறு தோண்டுகின்றீர்கள். ஆழமாக தோண்டுகின்றீர்கள். தண்ணிக்குப் பதிலாக ரத்தம்தான் வருகின்றது. கண்காணிகள் பலர். கரையில் இருந்து இடித்துவிடுபவர்கள் பலர். தோண்டித்தோண்டியே குழிக்குள் மாண்டுபோகும் சோகக் கதையை சொல்கின்றீர்கள் ! என்னும் ஆழமாகத் தோண்டுங்கள் தண்ணி வந்தால் மட்டும் நிச்சயம் வருவோம்.

என்ன கனதியான கவிதை ஒன்று....!!

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க

வெறுமனே

போலித்தேரில் ஈழம்பூட்டி

வெளிநாடுகளில் பவனிவருகிறது

செத்துப்போனவர்களின் குருதி குடித்து

மெத்தப் பெருத்த

சுயநலப் புரவி..

இந்த புரவிகளின் தேரடிக் குளம்புகளில் சிக்கித்தான் செத்துப் போனது எம் விடுதலை. இன்னும் செத்த உடலங்களில் இருந்து வெளிப்படும் புழுக்களில் தான் இவர்களின் இருப்பு நிலைக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

----

முகவரி கொடுத்தவர்களின்

எச்சங்களின் முகங்கள் எல்லாம்

வறுமைக் குழிகளுக்குள்

அடித்த சுழிகளுக்கிடையே

செத்தழிந்துகொண்டிருந்தன..

-----

போராட்டத்துக்கென சேர்த்த பணத்தை, முகவரி கொடுத்தவர்களின்... ஏழ்மையை போக்க உத‌வியிருக்கலாம்.

கவிதை மனதை தொட்டுவிட்டது, சுபேஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க

வெறுமனே

போலித்தேரில் ஈழம்பூட்டி

வெளிநாடுகளில் பவனிவருகிறது

செத்துப்போனவர்களின் குருதி குடித்து

மெத்தப் பெருத்த

சுயநலப் புரவி...

உண்மை .................... ஏறுக்கொள்ளுமா ?? தொடர்ந்து அடியுங்கள் புலத்து மனச்சாட்சியை . பகிர்வுக்கு நன்றிகள் சுபேஸ் .

நன்றிகள் கோமகன் அண்ணா...

சுபேஸ் கண்களில் நீர் சொரிய எழுதுகிறேன் .............இளவட்டமாகிய உங்களைப்போன்றவர்களுடைய பார்வையை நினைத்து நெஞ்சம் பெருமை கொள்கிறது ...............இரும்பல்ல இளைஞ்சர் உள்ளம் துரும்பல்ல தூக்கிஎறிய என்ற அந்த கவி என் மனதுக்குள் வருகிறது.................தொடருங்கள் ...........உங்கள் கவிதைபணியை ......மாவீரர் பற்றி ஒரு பாடல் எழுதி எனக்கு அனுப்புங்கள் ,,,,,,,,,,என் இசையில் அதை படைப்பாக்க விரும்புகிறேன்..............இது சுபேசுக்கு மட்டும் கூறவில்லை இனிய உறவாகிய கோ அண்ணா, சாஸ்திரி அண்ணா உட்பட அனைத்து கவிகளுக்கும் உரித்தாகட்டும் ....நன்றி............

நன்றிகள் தமிழ்சூரியன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்...எழுதி அனுப்புகிறேன்...

பாராட்டுக்கள் சுபேஸ்.

நன்றிகள் தமிழீழன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றைக் கீறியவர்கள்,

வறுமைக் கோட்டின் கீழிருக்க,

வரலாற்றின் சவப்பெட்டிக்கு,

வடிவாக மூடி இறுக்கியவர்கள்,

வெளி நாடுகளில்,

வெள்ளை வேட்டி கட்டும்,

விடுதலைப் போராளிகளாய்,

வீதிவலம் வரும் காலமிது!

மனதைத் தொட்டு விட்ட, கவிதை சுபேஸ்!!!

உண்மை உண்மை புங்கை அண்ணா..உங்களைப்போலவே இந்தக் கவிதையை வாசித்துவிட்டு வெறுமனே கடந்துபோகமுடியாமல் தம் உள்ளக்கிடக்கைகளை கொட்டிய உறவுகள் எல்லாம் பொய்மைகளின் ஆட்டம்கண்டு மனதுக்குள் பொங்கிக்கொண்டிருப்பவர்கள்...வெந்தது எம் தேசம் அந்த வெக்கையில் குளிர்காயும் குதிரைகள் எத்தினை...நன்றி அண்ணா கருத்துக்கு...

[size=5]Tres bien :D[/size]

[size=5]மிகவும் நம்பிக்கை தரும் வரிகள் ![/size]

[size=5]அடிக்கடி எழுதுங்கள். [/size]

:D ...நன்றி அகூதா அண்ணா....

ஏழைகளாகிவிட்டோம்.

வணக்கம் சுபேஸ்.

நன்றிகள் அண்ணா....வஞ்சகர்கள் சூழ்ந்த எம்மவர் வாழ்வை நினைக்கையில் வெந்தனலாய் கவிதைகள் வருகிறதே அண்ணா.... :( கொடுத்துக் கை சிவந்தே இன்று வறுமையில் வாடும் உங்களைப்போல வெள்ளை உள்ளங்களை குறிவைத்தல இந்தக்கவிதை...

ஈழத்தின் அவலம் சொல்லி சென்ற கவிதைக்கு நன்றிகள் பல சுபேஸ்..

மிக்க மகிழ்ச்சிகள் அக்கா இங்கு கருத்திட்ட உங்கள் எல்லோரது உணர்வோடும் என் கவிதை கலந்தது..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாகம் ! தண்ணி எடுக்க கிணறு தோண்டுகின்றீர்கள். ஆழமாக தோண்டுகின்றீர்கள். தண்ணிக்குப் பதிலாக ரத்தம்தான் வருகின்றது. கண்காணிகள் பலர். கரையில் இருந்து இடித்துவிடுபவர்கள் பலர். தோண்டித்தோண்டியே குழிக்குள் மாண்டுபோகும் சோகக் கதையை சொல்கின்றீர்கள் ! என்னும் ஆழமாகத் தோண்டுங்கள் தண்ணி வந்தால் மட்டும் நிச்சயம் வருவோம்.

சிந்தனைகளால் கவர்ந்த அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுகன் அண்ணாவை மீண்டும் கண்டது மனம் நிறைவாக இருக்கிறது...சிந்திக்க சிந்திக்கத்தான் நாம் இதுவரை எங்கிருந்தோம் என்பது புரிகிறது..என் தாய் தேசமும் விளிப்புறும் என்ற நம்பிக்கையோடு எம்போன்றவர்களின் பேனாக்கள் எழுதும் உங்களை,நிழலி அண்னாவை,இன்னுமொருவனை,கிருபன் அண்ணாவை போன்ற நிறைந்த சிந்தனையாளர்கள் என்னை சூழ்ந்திருக்கும்வரை...

என்ன கனதியான கவிதை ஒன்று....!!

இந்த புரவிகளின் தேரடிக் குளம்புகளில் சிக்கித்தான் செத்துப் போனது எம் விடுதலை. இன்னும் செத்த உடலங்களில் இருந்து வெளிப்படும் புழுக்களில் தான் இவர்களின் இருப்பு நிலைக்கின்றது

நிழலி அண்ணா....உள்ளிருந்து வருபவை உங்கள் போன்றவர்களிடம் இருந்து தொற்றிய உணர்வுகள் அல்லவா...கனதியாகத்தான் இருக்கும்..நன்றி அண்ணா..

போராட்டத்துக்கென சேர்த்த பணத்தை, முகவரி கொடுத்தவர்களின்... ஏழ்மையை போக்க உத‌வியிருக்கலாம்.

கவிதை மனதை தொட்டுவிட்டது, சுபேஸ்.

நன்றி அண்ணா...எப்பொழுதும் உங்கள் கருத்துக்கள் எனக்கு நிறைவாக இருக்கும்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்வதென்று தெரியவில்லை நண்பா.. :(

இதே கோவம்,எண்ணம் தான் என் மனதிலும் அதனால் தான் வியாரிகள் என்று கவிதையும் எழுதினேன்.

நிழலி அண்ணா சொன்னது போல இத்துப்போன உடல்களிலிருந்து வரும் வெத்துப்புளுக்களைக்கூட விட்டுவைக்காத ஜென்மங்கள். :wub:

ஆடிக்கொருக்கா, அமாவாசைக்கு ஒருக்கா எழுதாமல் தொடர்ந்து எழுதுங்கோ.. :)

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க

வெறுமனே

போலித்தேரில் ஈழம்பூட்டி

வெளிநாடுகளில் பவனிவருகிறது

செத்துப்போனவர்களின் குருதி குடித்து

மெத்தப் பெருத்த

சுயநலப் புரவி...

இழவு வீடான

ஈழம் பார்த்து

தலைகுனிந்து

இந்த இரவு

இனி விடியாமலே போகட்டுமென

சாபமிட்டபடி விழித்துப்பார்க்கிறேன்....

ஈழத்தை

மீளமுடியா இருள் வெளிக்குள்

தள்ளிவிட்டு

நன்றாகத்தான் விடிந்திருக்கிறது

எதிர்காலம் எங்களுக்கு

பெரு வெளிச்சத்துடன்...

அழகான, அழமான கவிவரிகள். பாராட்டுகள். படைப்புகள் தொடரட்டும்.

இன்றைய அவலத்தோடு விடுதலையை விலைபேசுவோரையும் விளாசியுள்ளீர்கள். விளங்கிக் கொள்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையின் வலி புரிகிறது

ஆனால் புலம்பிக்கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

வழி சொல்லணும்

வழி அமைக்கணும்

அதுவே சரி

அதுவே இன்றைய தேவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையின் வலி புரிகிறது

நன்றிகள் அண்ணா...

ஆனால் புலம்பிக்கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

உங்கள் நம்பிக்கைகளில் நான் குறுக்கிடவில்லை..இங்கு பதிவிட்ட உங்கள் நம்பிக்கைக்கும் இங்கு பதிவிட்ட என் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை...எனது பதிவுகள் அந்த நேர என் மனதின் உணர்வுகள்..அதை நான் எழுத்தில் பதிவு செய்துகொண்டு பயணிக்கிறேன்......எழுத்துலகம் இயங்கிக்கொண்டே இருக்கும்..ஒரு சமூகத்தின் சிந்தனையை தூண்டிவிடுவது எழுத்துலகம்....யாருடைய நம்பிக்கைக்காகவும் நின்றுவிடுவதில்லை..போர்க்களங்களில் செயல்களுடன் இலக்கியமும் பயணித்துக்கொண்டே இருந்தது...மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாட்டங்களுடன் இலக்கியமும் வளர்ந்தது..புலம்பல்களுடனும் அதுவளரும்..எங்கும் எதிலும் எல்லாக்காலம்களிலும் இலக்கியம் மனிதனின் உணர்வுகளோடு கலந்திருக்கும்..தீபச்செல்வன் தொட்டு தற்போதைய ஈழத்துக்கவிஞர்கள் எல்லோரும் வலிகளைப் பதிவு செய்கிறார்கள்...

வழி சொல்லணும்

வழி அமைக்கணும்

என் கவிதையின் கீழ் எழுதப்பட்டதால் இது என் நோக்கியது,என் கவிதையை நோக்கியது..இப்படி எழுதிவிட்டு செல்லும் நீங்கள் எதைச்செய்தீர்கள் என்று எழுதி விட்டா எழுதுகிறீர்கள்..? இல்லைதானே..அதேபோல்தான் எழுத்தாளனும் தான் செய்வதைவதை எல்லாம் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வலியையும் பதிவு செய்யவேண்டு என்ற அவசியம் இல்லை..எதைச் செய்து விட்டு இந்தக்கருத்து உங்களால் எழுதமுடிகிறதோ..அதே தற்துணிபு எனக்கும் இந்தக் கவிதை எழுத உண்டு...எழுத்தில் என் வலிகளை நான்பதிவு செய்கிறேன்..வெளியே என் தேசத்துக்காக நான் இயங்கிக்கொண்டே இருக்கிறன்...இவை இரண்டையும் போட்டு நான் குளப்பிக்கொள்வதில்லை...

வழி சொல்லணும்

வழி அமைக்கணும்

அதுவே சரி

அதுவே இன்றைய தேவை.

இலக்கியம் படைப்பது தவறென்பதை மறைமுகமாக சொல்கிறீர்கள்.....மனித உணர்வோடு பின்னிப் பினைந்தது மொழி,இலக்கியம்...எம்போரும் எம்மொழியைக் காக்கவே எப்போதும்...அதை படைக்காதே என்று நீங்கள் கூறுவது விந்தையாக இருக்கு...

இன்றைய தேவைக்குள் இலக்கியம்படைப்பதை ஏன் கொண்டுவருகிறீர்கள்..?கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள்..அந்த நேர உணர்வுகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன்வழியில் பதிவு செய்து விட்டு சென்றுகொண்டிருப்பான்...இன்றைய தேவைக்காக இலக்கியம் படைக்கப் படுவதில்லை..இன்றையதேவையை சொல்ல இலக்கியம் படைக்கப் படலாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்வதென்று தெரியவில்லை நண்பா.. :(

இதே கோவம்,எண்ணம் தான் என் மனதிலும் அதனால் தான் வியாரிகள் என்று கவிதையும் எழுதினேன்.

நிழலி அண்ணா சொன்னது போல இத்துப்போன உடல்களிலிருந்து வரும் வெத்துப்புளுக்களைக்கூட விட்டுவைக்காத ஜென்மங்கள். :wub:

ஆடிக்கொருக்கா, அமாவாசைக்கு ஒருக்கா எழுதாமல் தொடர்ந்து எழுதுங்கோ.. :)

உன் உணர்வுகள் எனக்குதெரியும்...நன்றிடா...

நேரம் கிடைத்தால் தொடர்ந்து எழுதலாம்..இல்லையென்றால் கடினம்தானே...

அழகான, அழமான கவிவரிகள். பாராட்டுகள். படைப்புகள் தொடரட்டும்.

இன்றைய அவலத்தோடு விடுதலையை விலைபேசுவோரையும் விளாசியுள்ளீர்கள். விளங்கிக் கொள்வார்களா?

நன்றிகள் அண்ணா..

விளங்கிக்கொள்ளமாட்டார்கள் இந்த புலத்துப் பூசாரிகள்..ஆனால் மக்கள் விளித்துக்கொள்வார்கள் ஒவ்வொரு ஈழத்தைபற்றிய இலக்கிய உலகின் கண்ணீர்த்துளிகளுக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இப்பொழுது தான் பார்த்தேன் அசத்திட்டாய் நண்பா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா...

உங்கள் நம்பிக்கைகளில் நான் குறுக்கிடவில்லை..இங்கு பதிவிட்ட உங்கள் நம்பிக்கைக்கும் இங்கு பதிவிட்ட என் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை...எனது பதிவுகள் அந்த நேர என் மனதின் உணர்வுகள்..அதை நான் எழுத்தில் பதிவு செய்துகொண்டு பயணிக்கிறேன்......எழுத்துலகம் இயங்கிக்கொண்டே இருக்கும்..ஒரு சமூகத்தின் சிந்தனையை தூண்டிவிடுவது எழுத்துலகம்....யாருடைய நம்பிக்கைக்காகவும் நின்றுவிடுவதில்லை..போர்க்களங்களில் செயல்களுடன் இலக்கியமும் பயணித்துக்கொண்டே இருந்தது...மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாட்டங்களுடன் இலக்கியமும் வளர்ந்தது..புலம்பல்களுடனும் அதுவளரும்..எங்கும் எதிலும் எல்லாக்காலம்களிலும் இலக்கியம் மனிதனின் உணர்வுகளோடு கலந்திருக்கும்..தீபச்செல்வன் தொட்டு தற்போதைய ஈழத்துக்கவிஞர்கள் எல்லோரும் வலிகளைப் பதிவு செய்கிறார்கள்...

என் கவிதையின் கீழ் எழுதப்பட்டதால் இது என் நோக்கியது,என் கவிதையை நோக்கியது..இப்படி எழுதிவிட்டு செல்லும் நீங்கள் எதைச்செய்தீர்கள் என்று எழுதி விட்டா எழுதுகிறீர்கள்..? இல்லைதானே..அதேபோல்தான் எழுத்தாளனும் தான் செய்வதைவதை எல்லாம் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வலியையும் பதிவு செய்யவேண்டு என்ற அவசியம் இல்லை..எதைச் செய்து விட்டு இந்தக்கருத்து உங்களால் எழுதமுடிகிறதோ..அதே தற்துணிபு எனக்கும் இந்தக் கவிதை எழுத உண்டு...எழுத்தில் என் வலிகளை நான்பதிவு செய்கிறேன்..வெளியே என் தேசத்துக்காக நான் இயங்கிக்கொண்டே இருக்கிறன்...இவை இரண்டையும் போட்டு நான் குளப்பிக்கொள்வதில்லை...

இலக்கியம் படைப்பது தவறென்பதை மறைமுகமாக சொல்கிறீர்கள்.....மனித உணர்வோடு பின்னிப் பினைந்தது மொழி,இலக்கியம்...எம்போரும் எம்மொழியைக் காக்கவே எப்போதும்...அதை படைக்காதே என்று நீங்கள் கூறுவது விந்தையாக இருக்கு...

இன்றைய தேவைக்குள் இலக்கியம்படைப்பதை ஏன் கொண்டுவருகிறீர்கள்..?கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள்..அந்த நேர உணர்வுகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன்வழியில் பதிவு செய்து விட்டு சென்றுகொண்டிருப்பான்...இன்றைய தேவைக்காக இலக்கியம் படைக்கப் படுவதில்லை..இன்றையதேவையை சொல்ல இலக்கியம் படைக்கப் படலாம்....

தாயக மக்களின் தேவைகள் தொடர்பாக மேலும் மேலும் எதிர்பார்ப்பதாலேயே வரவேற்பதுடன் தேவையையும் வலியுறுத்துவது எனது வழி.

அது தங்களை கோபப்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் சொல்வது போல் ஒரு இலக்கியவாதி அல்லது கவிஞன் அல்லது ஒரு படைப்பாளியையயும் ஒரு கருத்தக்களத்தில் அவருக்கு விமர்சனம் வைப்போரையும் ஒரே தட்டில் போடமுடியாது.

எப்படியோ

ஆமாம் போடுவது நல்ல விமர்சனம் ஆகாது. என்னைப்பொறுத்தவரை.

நன்றி தங்கள் நேரத்திற்கு.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களின் தேவைகள் தொடர்பாக மேலும் மேலும் எதிர்பார்ப்பதாலேயே வரவேற்பதுடன் தேவையையும் வலியுறுத்துவது எனது வழி.

நன்றி அண்ணா...மிகத்தேவையான விடயம்..எம்மக்களிற்கு இப்போது மிகவும் தேவையானது...தொடருங்கள்..

அது தங்களை கோபப்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.

அண்ணை நான் கோபப்பட்டவில்லை..உண்மையில் கருத்தெழுதும்போது உங்களை நினைக்ககூடவில்லை..அங்கு எழுதியிருப்பவற்றுக்கே பதில் அளித்தேன்...

நீங்கள் சொல்வது போல் ஒரு இலக்கியவாதி அல்லது கவிஞன் அல்லது ஒரு படைப்பாளியையயும் ஒரு கருத்தக்களத்தில் அவருக்கு விமர்சனம் வைப்போரையும் ஒரே தட்டில் போடமுடியாது.

நான் அப்படி நினைக்கவில்லை..ஏன் இந்த ஏற்றதாழ்வுகள்..? முதலில் நான் ஒரு வாசகன்..அதன் பின்புதான் எழுதுபவன்..ஒரு மிகச்சிறநத வாசகனாலேயே மிகச்சிறந்த படைப்புக்களை தரமுடியும்...நல்ல ஒருவாசகனே எழுத்தாளனைவிட சிறந்தவன்.

ஆமாம் போடுவது நல்ல விமர்சனம் ஆகாது. என்னைப்பொறுத்தவரை.

நன்றி தங்கள் நேரத்திற்கு.

நிச்சயமாக..தொடர்ந்து விமர்சியுங்கள்...உங்கள் கருத்துக்களை யாழில் எப்போதும் எழுதுங்கள்...ஆனால் முன்னர் நான் எழுதியது அந்த இடத்தில் உங்கள் கருத்துக்களுக்கு எனதுவிளக்கமே...ஒருபோதும் நான் உங்களை விமர்சிக்காதீர்கள் என்றுகூரவில்லை..தவறாக புரிந்துவிட்டீர்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா இப்பொழுது தான் பார்த்தேன் அசத்திட்டாய் நண்பா

நன்றிகள்டா...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்

இப்ப என்ன பிரச்சனை சுபேஸ்.

ஒண்டு தண்ட இனவிடுதலைக்கு மொக்குத்தனமா சண்டை பிடிக்கப் போன கூட்டம்.

மற்றது அதுகள அழிக்கத் திரிந்த கூட்டம்.

இடையில ஒன்டுமில்லாம எந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து புலம் பெயர்ந்து வயிறு வளர்க்கும் கூட்டம்.

'நாய்ப் பாவக்காய் விளயாடக்கையும் தனக்கு ரெண்டு பாவக்கா' எண்டு விளையாட வேணும்' .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.