Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?

Featured Replies

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் தர்மகார்த்த சபைக்கு பிடிக்காதவரை கோவிலுக்குள் வர முயற்சிக்க தள்ளுமுள்ளுபட்டதில் ஆளை outக்கி விட்டார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல் ஜேர்மனியிலும் ஒரு கோவிலில் பட்டிக்காட்டு நாடகம் நடந்தது நேரமும்,மனமும் இடங்கொடுத்தால் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா உன் பெயரில் இவ்வளவு அட்டுழியமா?

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுகுள்ளேயும் விட்டு வைக்க மாட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மிகவும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்.

இப்படிப் பட்ட அற்ப பிறவிகள், கோயில் பக்கம் போய்... மற்றவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடாது.

சிலருக்கு, பதவி வந்தவுடன் அற்பத்தனமாக நடப்பது, தமிழனில் அதிகம். அதிலும் கோவில்களில், மினக்கெடுபவர்களின் அட்டகாசம்.... புலம்பெயர் தேசமெங்கும்.... பரவலாக நடைபெறுவது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோயில் அண்மையில் ஆமிக்கு கணணி வாங்க நிதியுதவி செய்தவையாம் என்று கேள்விப்பட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு கேட்டு போன இடத்தில் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புவது எவ்வளவு அனாகரீகமற்ற செயல்..இதில் இருந்து நம்மவர்களை வேற்று இனத்தவர்கள் என்ன நினைச்சு இருப்பார்கள்..ஆதரவாக இருப்பவர்கள் கூட இப்படியான செயல்பாடுகளால் தான் இன்னுமொரு சந்தர்பத்தில் நம்மைக் கண்டால் ஒதுங்கிப் போகவோ இல்லை, தாங்கள் ஒதுங்கவோ செய்கிறார்கள்,செய்வார்கள்..

கோவிலுக்குள்ளே வேறின மக்களும் பூசைகளில் கலந்து அன்னதானத்திலும் கலந்து கொள்வதுதான் வழமை.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட உண்மைகளை விசாரித்து அறிந்து எழுதுங்கள்.

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

http://ammanealing.com/

நன்றி தகவலுக்கு.

மற்றவரை மெல்லுவதே எம் பாரம்பரியம்

செயல்

அல்லது கொடை

சீ...

அதுக்கும் எமக்கும் வெகுதூரம்.

யாழிலும் தற்போது இது ஒரு நோய் போல் தொற்றியபடியுள்ளது. பாதிக்கப்படப்போவது மேலும் மேலும் அந்த தாயக மக்களே........ :( :( :(

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தேர் திருவிழா அன்று அன்னதானம் வழங்கியவர்கள் கோவில் நிருவாகத்தினர் அல்ல. சில வியாபார நிறுவனத்தினரும் வெளியர்களுமே அன்னதானம் வழங்கினர்.

நான் சார்ந்த பகுதியினர் (தமிழ் சமுக நிலையம் ) தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தோம்.

கோவிலில் அன்று சேர்ந்த (அருச்சினை தட்டு விற்பனைமூலம்) £24,000௦௦௦ வன்னியிலுள்ள கணவனை இழந்த குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கப் படவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

http://ammanealing.com/

சும்மா எல்லாம்.. சைபரை அடிச்சு விடக் கூடாது. 35 மில்லியன் பேர் தேருக்கு வரவும் இல்லை.. அந்த குட்டி பொதுமக்கள் ஓய்விட பூங்காவில்.. இத்தனை பேரை கொள்ளவும் மாட்டுது..! :lol::icon_idea:

தேர் திருவிழா அன்று அன்னதானம் வழங்கியவர்கள் கோவில் நிருவாகத்தினர் அல்ல. சில வியாபார நிறுவனத்தினரும் வெளியர்களுமே அன்னதானம் வழங்கினர்.

நான் சார்ந்த பகுதியினர் (தமிழ் சமுக நிலையம் ) தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தோம்.

கோவிலில் அன்று சேர்ந்த (அருச்சினை தட்டு விற்பனைமூலம்) £24,000௦௦௦ வன்னியிலுள்ள கணவனை இழந்த குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கப் படவுள்ளது.

24 மில்லியன் அர்ச்சனை தட்டு மூலம் கிடைச்சதா..???! :lol:

பூங்காவில் அமைத்த அங்காடிகளில் அங்காடிக்கு என்று பொதுவாக 200 பவுனில் இருந்து அறவிட்டார்களே. கிட்டத்தட்ட 25 அங்காடிகளுக்கு மேல் வந்திருக்கும் என்று நினைக்கிறன்.

ஊருக்குப் போகுது என்றினம்.. ஊருக்கு போனது பற்றியும்.. அங்கு செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகள்.. நலத்திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு ஏன் பகிரங்கப்படுத்தக் கூடாது..???!

ஊருக்குப் போகுது என்று சொல்லிச் சொல்லி வாங்கித் தான் உங்க நிறையப் பேர் பணக்காரர் ஆகி இருக்கினம்..! அம்மனின் பெயரால் அது செய்யப்படமாட்டாது என்று நம்புவோமாக..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இன்று வெயில் கடுமையாக உள்ளது. எனவே நிறைய தண்ணீர் குடித்துவிட்டு கூலாக வாசியுங்கள். பின்னர் கருத்திடுவது பற்றி யோசிக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

வழமையா கோவிலில் சாப்பாடு உண்ணும் ஒருவர் (அவர் தமிழர். அசைலம் அடிச்சு.. விசா கிடைக்காதவராம். இதனால் மன நிலை சரியில்லாதவராம். பிள்ளைகளும் கைவிட இதே கோவிலில் தானாம் தினமும் உணவு.) சம்பவ தினத்தன்று உணவு கேட்டு கோவிலுக்குச் சென்றுள்ளார்.

கோவில் நிர்வாகத்தினர் 10 பேர் அளவில் அங்கு நின்றுள்ளனராம். அவர்கள் அந்த அடியாருக்கு உணவு வழங்க மறுக்கவே.. அடியார் கோபத்தில் திட்டி தீர்த்திருக்கிறார். உடனே நிர்வாகிகள்.. தங்கள் வீர தீரச் செயலை காட்டி இருக்கின்றனர். அந்த அடியாரை அடியோ அடி என்று அடித்து விட்டு ரோட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கண்ணுற்ற அயலவர் காவல்துறைக்கு அறிவிக்க.. பரா மெடிக்சும்.. காவல்துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. அடியாரின் ஆபத்தான நிலை கருதி.. எயார் அம்புலன்ஸும் அழைக்கப்பட்டுள்ளதாம்.

இப்போது அந்த அடியார் மருத்துவமனையில் தேறி வருகிறாராம்.

இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறை கோவிலுக்கு சீல் வைத்திருக்கிறது. பின்னர் கோவில் அறக்கட்டளையினர் பேச்சு நடத்தி கோவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

ஆனால் கோவில் நிர்வாகமோ.. பல்வேறு கட்டுக்கதைகளை கட்டி வருவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்..!

ஒரு அனாதை அடியாருக்கு.. கோவில் இயங்கும் இடத்தில் உணவு வழங்க முடியாதவர்கள் எப்படி தாயகத்துக்கு உதவுவார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்..!

இதற்கிடையே சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரை கோவில் அறக்கட்டளை விலக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

நன்றி.

http://ammanealing.com/

அப்ப நீங்கள் எதுவும் செய்யலாமா?

எதற்கும் கொஞ்சம் மனிததன்மை ஆகவும் நடப்பது நல்லது.

Edited by navenan

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் நிருவாகமும் ஜயரும் சேர்ந்தே சம்பந்த பட்டவரை அடித்திருந்தார்கள். கோயில் நிருவாகத்தினரை காவல்த்துறையினர் கைது செய்து ஒரு நாள் காவலில் வைத்திருந்து வழக்கு பதிவு செய்துவிட்டு விடுவித்துள்ளனர். இது பற்றி வேல் தர்மா அவர்களது பதிவு இங்கு இணைத்துள்ளேன்

http://veltharma.blo...4.html?spref=fb

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லா சப்பலில்

சிலர் இது போன்று குடும்பம் எதுவுமில்லாது திரிகிறார்கள். இதைப்பார்த்த உணவு விடுதி வைத்திருக்கும் எனது நண்பர் தனது உணவு விடுதியில் 3 நேர சாப்பாடும் தங்களுக்கு தரச்சொல்கின்றேன். இன்ன இன்ன நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என பல நாளாக கொடுத்து வந்தார். ஆனால் அவர்கள் தாங்கள் நினைத்த நேரங்களில் வருவதும் வந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னர் தங்களுக்கு தரவேண்டும் என்று சத்தம் போடுவதுடன் வேலையாட்களை தூசணத்தில் பேசவும் செய்தனர். இதனைக்கண்ட அவரது பங்காளி இதில் ஒருவருக்கு சாத்தி அனுப்பிவிட்டார்.

இதனைப்பாத்தவர்களுக்கும் அந்த கோயிலில் நடந்தது போல்தான் கதைக்கத்தோன்றும்.

ஆனால் உண்மை வேறு...........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இரண்டு சம்பவங்களுமே நியாயப்படுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை.

இந்த நினைச்சபடிக்கு சாத்துறது.. ஊரில சரி வரலாம். புலம்பெயர் நாடுகளில் அவை தண்டனைக்குரிய குற்றங்கள்.

உணவை வழங்கிறவை.. அதற்குரிய சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர தனிமனிதர்களை தாக்கி துன்புறுத்த எவருக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.

பிரான்ஸில் செய்யப்பட்டதும் குற்றம்.. ஈலிங்கில் நடந்ததும் குற்றமே..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைகளை புலம்பெயர் தேசம்வரை காவிவரச்செய்தது,அவற்றுக்கு இங்கும் இடம்கொடுப்பது எங்களின் பிற்போக்குதனமான சமூகக்கட்டமைப்புக்கள் என்பதற்க்கு இதுவும் இங்கு எழுதப்பட சில கருத்துக்களும் சாட்சி..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில காலம் செல்ல கோயில்களில் மல்யுத்தம் குத்துச்சண்டை வாள்வீச்சு எல்லாம்

நடக்கும். நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது :)

குடித்துவிட்டு கோவிலில் வந்து கலாட்டா செய்தவரை கட்டிபிடித்து முத்தம் குடுக்கவில்லை என்பது பெரிய பிழை தான்,

மன்னித்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரில கடவுளையே தும்புத்தடியால் அடித்த ஜயரே இருக்கும்போது . இதையெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

குடித்துவிட்டு கோவிலில் வந்து கலாட்டா செய்தவரை கட்டிபிடித்து முத்தம் குடுக்கவில்லை என்பது பெரிய பிழை தான்,

மன்னித்து விடுங்கள்.

காவற்துறை கோவிலுக்கு மிக அருகாமையிலேயே இருந்திருக்கும்.ஒரு தொலைபேசி அழைப்புடன் காவற்துறை வந்து குடித்துவிட்டு கலாட்டா செய்திருந்தால் அவரைஅங்கிருந்து அகற்றியிருப்பார்கள்.இதற்கெல்லாம் முத்தம் கொடுக்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.