Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கோமகன். உங்களின் பயணக் கட்டுரையை இன்றுதான் வாசித்தேன். நானும் சேர்ந்து பயணமாவதுபொல் ஒரு பிரமை. பணி தொடரட்டும். அழைத்துச் செல்லுங்கள். நன்றி.

உங்கள் வாழ்த்துக்களே என்னை நகரவைக்கும் அச்சாணி . தொடர்ந்து தொடருடன் இருங்கள் . வருகைக்கு நன்றிகள் .

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புராதன நீஸ் நகரம்

640px-Vue_du_Vieux-Nice.jpg

நாங்கள் நீசியாவின் புராதனமான நீசுவா க்கள் வாழ்ந்த நகருக்குள் நுளைந்து கொண்டிருந்தோம் . எனக்கு ஏறத்தாள 3 கிலோமீற்றர் நடந்து கால் வலித்தாலும் இந்த நகரில் என்னதான் இருக்கின்றது என்ற ஆவல் கால்வலியை சிறிது மறக்கச் செய்தது . நாங்கள் நுளைந்தவேளை நன்றாக இருட்டியிருந்ததால் வீதியெங்கும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது . நாங்கள் நகரில் நுளைந்தபொழுது வெளியே வெக்கையாக இருந்த இடம் நகரின் உட்புறம் குளிர்மையாகவும் காற்று சிலசிலவென்று வீசியது . நகரின் வீதிகள் யாவுமே மிகவும் ஒடுங்கிய வாகனங்களே நுளையமுடியத அளவிற்கு ஒழுங்கைகளாக இருந்தன . எனக்கு அவைகள் யாழ்பாணத்து மூத்திர ஒழுங்கையையே நினைனைவுபடுத்தின . இருபுறமும் நீசுவா நாட்டினரது பாரம்பரிய உணவகங்களும் பல சிறப்புக் கடைகளும் காணப்பட்டு மக்கள் வெள்ளம் அலைமோதியது . நாங்களும் மக்களுடன் மக்களாக நீந்தினோம் . நீசுவா நாட்டின் பழையநகரம் அதற்கேஉரிய தனச்சிறப்பான கட்டிடக்கலையுடன் இருந்தது என்னை நிறையவே கவர்ந்தது . குறிப்பாக கட்டிடங்களின் ஜன்னல்கள் நான் பிரான்சில் எங்குமே கண்டிராத வகைகையில் இருந்தன . ஜன்னல்கள் உட்புறம் கண்ணாடிக் கதவுகளையும் வெளிப்புறத்தே மேலும் கீழும் திறக்கக் கூடியவகையில் மரத்தில் ஓட்டைகள் செய்யப்பட்ட வினோதமான ஜன்னல்கள் காணப்பட்டன . மத்தியதரைக்கடல் பகுதியின் இயற்கையான வெக்கையை தணிக்கும் வகையிலேயே இப்படிக் கட்டியிருக்கின்றார்கள் என்று என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது . என்னால் நகரின் அத்தனை வீடுகளிலும் இந்தவகையான ஜன்னல்களையே காணக்கூடியதாக இருந்தது .

பழைய நீஸ் ரவுணின் ஜன்னல்கள்

nicevisit2012232.jpg

1860 கள் வரை 3ஆம் நெப்போலியனுடைய அனுசரனையடன் ரோமர்களின் கட்டுப்பாட்டிலேயே நீசியாவும் அதன் தலைநகரும் இருந்தன . பின்பு 15 16 ஏப்பிறல் 1860ல் நடைபெற்ற பொதுஜனவாக்கெடுப்பில் நீசியா என்றநாடு பிரான்ஸ்சின் நீஸ் என்ற புதுப்பெயருடன் அல்ப்ஸ்மறைற்றும் மானிலத்துடன் நிர்வாகப்பகுதியாக சேர்க்கப்பட்டது . அதற்கு முன்பு இருந்த நீசுவா மொழி நீசுவாஸ் நாட்டினரால் பேசுவதற்கு பிரான்சினால் தடைசெய்யப்பட்டது . பிரென்ஜ் மொழியே பேசவேண்டும் என்று நீசுவாநாட்டினர் கட்டாயப்படுத்தப்படனர் . காலப்போக்கில் நீசுவா மொழி பிரான்சில் இல்லாமல் போய்விட்டது . ஆனால் நீசின் பழய நகரில் உள்ள வீதிகளது பெயர்கள் யாவுமே முதல் பிறென்ஜ் மொழியிலும் இரண்டாவதாக நீசுவா மொழியிலும் பிரான்ஸ் வைத்து நீசுவா மொழியை அழகு பார்க்கின்றது . இதிலிருந்து நான் ஒரு வலியான செய்தியைப் பெற்றுக்கொண்டேன் . அதாவது " எந்த ஒரு சிறுபான்மை இனமும் , அதன் மொழியும் காலப்போக்கில் பெரும்பான்மை இனத்தால் அழிக்கப்பட்டுவிடும் " என்பதே . என்னால் எமது நிலையையும் எண்ணிப்பார்க்க எனது மனது கனத்தது . நாங்கள் மூவரும் பழைய நகரின் நடுப்பகுதியை அடைந்தோம் . அங்கே ஒரு நீசுவா நாட்டின் பாரம்பரிய உணவகத்தை கண்டோம் . அங்கு ஒரு பெரிய இரும்புத் தட்டில் தோசைமாதிரி சுட்டுவைத்திருந்தார்கள் . அது ஏறத்தாள 2 செமீ தடிப்பு உள்ளதாக இருந்தது . அதை துண்டு துண்டாக வெட்டி வித்துக் கொண்டிருந்தார்கள் . ஒன்றை வாங்கி சுவைத்துப்பார்த்தேன் . ஒரு தினுசான சுவையாக இருந்தது . உணவகமும் அவர்களது பாரம்பரிய வடிவமைப்பில் இருந்தது . நேரம் 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . மக்கள் வெள்ளம் அலைமோதியது உணவுகளை உண்பதற்காக . குறுகலான தெருவில் இருபுறமும் உணவுக்காக இருக்கைகள் மக்களால் நிறைந்து வழிந்தன . கட்டிடங்களின் அமைப்பினால் வெக்கையைப் போக்க இதமான காற்று சில்லென்று வீசியது . நாங்கள் கறிபால்டி சதுக்கத்தை அடைந்தோம் . அங்கு நெப்போலியனின் பிரதான தளபதிகளில் ஒருவரான மேஜர் கறிபால்டி சிலையாக நின்றுகொண்டிருந்தார் . இவர் நீசில் பிறந்த பல போர்களில் பங்கெடுத்த நெப்போலியனின் வீரத்தளபதிகளில் ஒருவர் . சதுக்கத்தின் அருகே மக்கள்கூட்டம் தெமி , கஃபே குடிப்பதிலும் , உற்சாகமாகக் கதைப்பதிலும் மூழ்கி இருந்தார்கள் . நாங்கள் உயர்நீதிமன்றம் வளகம் , மாநகரசபை வளாகம் என்று சுற்றி அடித்து விட்டு வீடு நோக்கிச் செல்ல மீண்டும் பொறமனாட் டேஸ் ஆங்கிலேய்ஸ் ஐ அடைந்தோம் . நீஸ் மாநகரசபை சோசலிசக் கட்சியின் ஜாக் கோத்தா குடும்பத்தின் பிடியில் 1945 ல் இருந்து 1990 வரை நீண்டகாலமாக இருந்தது என்று ஒரு கொசுறு தகவலை சாத்தர் எங்களுக்கு வழங்கினார்.

நீசுவா நாட்டின் தெரு ஒன்று

nicevisit2012224.jpg

நீசுவா மொழியும் ஃபிறென்ஜ் மொழியும் உள்ள றோட்

nicevisit2012221.jpg

நீசுவா நாட்டினது பாரம்பரிய உணவு

nicevisit2012222.jpg

பாரம்பரிய உணவகம்

nicevisit2012223.jpg

விற்பனைக்காக இருந்த வாசனைத் திரவியங்கள்

nicevisit2012228.jpg

உயர் நீதிமன்றம்

nicevisit2012237.jpg

மேஜர் கறிபால்டி

nicevisit2012218.jpg

எனக்கு சாத்தர் சொன்னது ஒண்டும் ஏறேல . அவற்றை முகத்தை முறிக்க கூடாது எண்டதுக்காக சீ ........... அப்பிடியே ....... :lol: எண்டு கொண்டு வந்தன் . கால் நோ பின்னி எடுத்து மெல்லமாய் அன்ன நடை போட்டன் . சாத்தர் என்னை திரும்பி பாத்து

"என்ன கோ பக்கிள் அடிக்கிறியள். எங்களை முன்னுக்கை விட்டுபோட்டு பின்னாலை பெட்டயளை பாக்கிற நோக்கமோ :o ? விடமாட்டன் "

எண்டு மனுசிக்கு போட்டுக்கொடுத்தார் . நான் அப்பதான் றோட்டில திரும்பி பாத்தன் . வண்ணம் வண்ணமாய் வகைவகைய பெட்டையள் ஹான்ட்பாக்கோடை ரெண்டு பக்கமும் நிண்டினம் :icon_idea: . நானும் மனிசியும் வலுகலாதியா அவையளை பிராக்கு பாத்து கொண்டு வந்தம் . அவையள பாத்ததால என்ரை கால் நோ எனக்கு மறந்து போச்சுது . சாத்தருக்கு கவலை தான் கொளுத்தின வெடி நமுத்துப் போச்சுதே எண்டு :D . நாங்கள் முக்கித்தக்கி அவற்றை வீட்டு முடக்குக்கு கிட்ட வந்தம் . அங்கையும் நாலு பெட்டையள் மதிலிலை சாஞ்சு கொண்டு நிண்டாளவை . அப்பதான் சாத்தர் தன்ரை பெருங்கவலையை போட்டு உடைச்சார்.

தான் சில நேரம் காறில வேலையால வந்தால் முடக்கில நிக்கிற இவளவையள் கையை காட்டினமாம் . தான் ஸ்கூட்டியில வந்தால் கையைக் காட்டாமல் முகத்தை திருப்பி கொண்டு நிப்பினமாம் . நான் சொன்னன் "அவளவை உங்களில செரியான குளப்பம் நீங்கள் முதலாளியோ வேலைசெய்யறவரோ" எண்டு.

நாங்கள் வீட்டுக்குள்ள போகேக்கை கோதம்ப மா புட்டு வாசம் மூக்கை துளைச்சிது . சாத்தற்றை மனிசி அருமையான மனிசி. எங்களுக்கு ஆட்டுறைச்சி கறியும் , கோழிக்கால் பொரியலும் சமைச்சு வைச்சிருந்தா :) . எனக்கு பெரிய அந்தரமாய் போட்டுது, எங்களுக்காய் இப்பிடி கஸ்ரப்படுப்போனாவே எண்டு . நான் சாத்தற்றை தோட்டத்தில இருந்து காத்து வாங்கி கொண்டு சிகறட் ஒண்டை எடுத்துப்பதினன் . சாத்தர் தனக்கு சீரகத்தண்ணியும் என்ரை மனிசிக்கு றோஸ் வைனும் எடுத்துக் கொண்டு வந்தார்.

சாத்தற்றை சீரகத்தண்ணி

016005.jpg

6934322569_c09b7904e3_z.jpg

நாங்கள் பம்பல அடிச்சு கொண்டிருக்கேக்கை சாத்தருக்கு ஒரு போன் வந்திது. சாத்தர் ஆற்றா இவன் இந்த நேரத்தில எண்டு புறுபுறுத்துக் கொண்ட்டு எடுத்தார் . நான் சாத்தற்ரை முகத்தை பாத்தன் . அது ஒண்டுமில்ல கோ சுவிசில இருந்து "ஆறாத காயம் " :lol: தான் நாளைக்கு பின்னேரம் தானாம் வாறதாம் . எங்களை ஏயாப்போட்டில நிக்கட்டாம் எண்டு சொன்னர். இந்த நேரத்தில போன் எடுத் இவருக்கு நாளைக்கு இருக்கு வேலை எண்டு தனக்குத்தனே புறுபுறுத்தார் சாத்தர். நாங்கள் நாலுபேரும் பம்பலடிச்சு சாப்பிட்டு முடிக்க இரவு ஒரு மணியாப் போச்சுது . எங்களை சாத்தரும் மனிசியும் நாங்கள் இருந்த கொட்டலில காறில கொண்டு வந்து இறக்கி விட்டினம். அடுத்தநாள் காலமை மொனாக்கோ போக பிளான் பண்ணினம். நான் சாத்தற்றை மனிசியையும் வரச்சொன்னன்.

நாங்கள் கொட்டலுக்குள்ளை போய் களைப்பு போக நல்லா குளிச்சு போட்டு படுக்கையில விழுந்தம். எனக்கு விடியகாத்தாலையே முழிப்பு வந்திட்டிது. நான் மனுசியை எழுப்பாமல் மெதுவாய் எழும்பி நேரத்தை பாத்தன். மணிக்கூடு ஏழுமணியை காட்டீச்சிது. நான் பாத்துறூமுக்கை போய் ஒரு நல்ல குளிப்பொண்டு அடிச்சன். நான் வெளிக்கிட்டு மனிசியை எழும்பி வெளிக்கிட சொல்லிப்போட்டு காலமை சாப்பாடு எடுக்க கீழை வந்தன். வளக்கமாய் நான் மற்றவையை வரவேற்று இருத்தி காலமை சாப்பாடு குடுக்கிறனான். இந்தமுறை எனக்கு மாறி நடந்திது. எனக்கு இதாலை கொஞ்சம் மிதப்பாயும் இருந்திது. கபேயும் குறசோணும் சூடாய் என்ரை தொண்டைக்குள்ள இறங்கீச்சுது.

கோவின்ரை காலமை சாப்பாடு

mercure009.jpg

நான் சிகறட் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளீல வந்து முன்னுக்கு இருந்த பனை வடலியோட இருந்த குந்தில இருந்தன். காலமையே வெய்யில் சுள்ளெண்டு சுட்டிது. பக்கத்தில கடல் நீலநிறமாய் விரிஞ்சு கிடந்திது. றோட்டில சனமெல்லாம் ஓடிக் கொண்டும் , நடந்து கொண்டும் இருந்திதுகள் . கடலுக்கை கொஞ்சப்பேர் பரசூட்டில பறந்து கொண்டும், தண்ணியில ஒடிற ஸ்கூட்டியில ஓடிக்கொண்டிருந்தது நல்ல வடிவாய் தெரிஞ்சிது. உண்மையில அந்தக்காலமை நேரம் எனக்கு பெரிய புழுகத்தை தந்திது. நான் சிகரட்டை எடுத்து பத்த வைச்சு இதுகளை பிராக்கு பாத்துக் கொண்டு இருக்க மனிசியும் வெளிக்கிட்டு கொண்டு வந்தா. நாங்கள் ரெண்டுபேரும் அதில இருந்து பம்பல் அடிச்சுக் கொண்டு இருக்க சாத்தர் அந்த வெள்ளனவே மனிசியோட காறில வந்தார். நாங்கள் நாலு பேரும் மொனாக்கோ போக வெளிக்கிட்டம்.

நாங்கள் நிண்ட மேர்க்கியூர் கொட்டேல்

nicevisit2012126.jpg

தொடரும்

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நல்ல, சூப்பராய்.... இருக்குது. தொடருங்கோ......

நன்றி சிறியர் தொடர்ந்து இருங்கோ . உங்கடை நம்பிக்கை வீண்போகாது :) .

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி கோமகன். தங்கள் எழுத்து நடையும் [size=4]முன்னேற்றம் [/size] எழுத்து பிழை யும் குறைந்துள்ளது.மிகவும் நன்று. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள். பொறுமையோடு தட்டெழுதுவது ஒரு கலை .

Edited by நிலாமதி

நீஸ் நகரின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இன்னமும் போனதில்லை. உங்கள் கட்டுரை அந்த ஆவலைத் தூண்டிவிட்டது.

வரலாற்றையும் சேர்த்து தருவது நன்றாக உள்ளது.

வேலைப் பழுவுக்கு மத்தியில் இந்தளவு எழுதுவதே பெரிய காரியம். தொடருங்கள். நெருஞ்சி மூலமாக எம்மைக் குத்திவிட்டீர்கள். (நல்ல விதமாகத் தான்). :lol: எனவே தவறாது வாசிப்பேன்.

[size=4]கால் நோவா? கவலை வேண்டாம். அனுபவரீதியாகக் கண்டது.

தொடர்புக்கு கோமகன்.[/size]

வண்ணம் வண்ணமாய் வகைவகைய பெட்டையள் ஹான்ட்பாக்கோடை ரெண்டு பக்கமும் நிண்டினம் :icon_idea: . நானும் மனிசியும் வலுகலாதியா அவையளை பிராக்கு பாத்து கொண்டு வந்தம் . அவையள பாத்ததால என்ரை கால் நோ எனக்கு மறந்து போச்சுது

தங்கள் பகிர்வுக்கு நன்றி கோமகன்

  • தொடங்கியவர்

மிக்க நன்றி கோமகன். தங்கள் எழுத்து நடையும் முன்னேற்றம் எழுத்து பிழை யும் குறைந்துள்ளது.மிகவும் நன்று. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள். பொறுமையோடு தட்டெழுதுவது ஒரு கலை .

உண்மையான விமர்சனத்தை தந்த நிலாமதி அக்காவுக்கு நான் என்றுமே கடமைப்பட்டவன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தொடருங்கோ[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது கோ எனக்கும் நீஸ்சுக்கு போக வேண்டும் என்ட‌ ஆவலை தூண்டி விட்டது...அந்த குரோச‌னைப் பார்த்தால் சாப்பிடோனும் போல இருக்குது :D

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் கோம்ஸ்.. :D அதுசரி.. பிள்ளைகளை விட்டிட்டோ போனனியள்? :wub:

இடங்களின் பின்னணிக் கதையையும் சேர்த்து எழுதுகிறீர்கள். நன்றாக உள்ளது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் .. கோ மகன் என்ரை வீட்டுக்கு திரும்புற முடக்கிலை நிண்ட நாலு பெட்டையளிலை ஒண்டை கன நாளாய் காணேல்லை எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி....... :o :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோமகன்? அடிக்கடி தம் அடிக்கிறியள் போலை கிடக்கு.......தண்ணியை விட கெட்ட சாமான் எல்லோ :D ......சரி அதை விடுவம்......மனதிலை இருக்கிறதை....பார்த்ததை அப்பிடியே எழுதுறியள் நல்ல விடயம்....வாழ்த்துக்கள்.

யோவ் .. கோ மகன் என்ரை வீட்டுக்கு திரும்புற முடக்கிலை நிண்ட நாலு பெட்டையளிலை ஒண்டை கன நாளாய் காணேல்லை எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி....... :o :o

கோ அவளை அடப் பண்ணீட்டார்!!

  • கருத்துக்கள உறவுகள்

நீசுக்கு, எங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு போகின்றீர்கள், கோமகன்!

தொடருங்கள்!!!

அலுவல் அந்த மாதிரி போகுது ,

பாரிசிற்கு வந்து ரூம் வழிய இருந்து தண்ணி அடிச்ச நேரம் (வயசு பிரச்சனை ) இப்பிடி எத்தனை இடத்தை பார்த்திருக்காலம் .

சுப்பர்ராக இருக்கு எல்லாம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பவும் தனிய போகலாம் தானே. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் - கோமகன் நீஸில் கழித்த அதே காலத்தில் நானும் அங்கிருந்தேன். தனியாக ஏதும் எழுதாமல் - அக்காலத்தில் கோமகனுடனான சந்திப்புப்புகளை - இங்கே பதிவு செய்யலாம் என நினைத்தேன். பதிந்தேன். நன்றி

****************************

விமானம் கடலுக்குள் இறங்குவதைப் போலிருந்தது. ஏற்கனவே கூகுள் மேப்பில் பார்த்திருந்தேன். நீஸ் விமான நிலையம் கடலுக்குள் தன்னை நீட்டிக் கொண்டிருந்தது. மேலிருந்து பார்த்தபோதே அழகான வளைவுகளில் கடற்கரைகள் தெரிந்தன. வெண்ணிறமும் நீலமும் சேருகிற வளைவுகள் BAY ஆங்காங்கே தெரிந்தன. கடல் என்றாலே மனது தொபுக்கடீர் எனிறு அந்தரத்தில் குதித்து நீந்தத் தொடங்கி விடுகிறது. சுவிற்சர்லாந்து கடல் சூழும் வரமற்றதொரு நாடு. அங்கேயிருக்கிற கரை தெரியும் அலையற்ற ஏரிகள் ஒருபோதும் கடலின் பிரமாண்டத்தையும் அதில் உடல் நனையும் குதுாகலத்தையும் தந்துவிடுவதில்லை. ஒரு மூலைக்குள் அமைதியாய் உட்காரும் குழந்தையாய் ஏரிகள் மனதில் பதிய, கடலோ ஒரு குழப்படிக்கார குழந்தையை நினைவு படுத்துகிறது.

IMG_3184_zps8e46b521.jpg

நானே எடுத்தது :)

விமானம் தரையிறங்கி ஓடி ஓய்ந்து நின்றது. ஷெங்கன் நாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு சோதனையேதும் இல்லையாதலால் இறங்கி பயணப்பைகளை எடுக்குமிடத்திற்கு வந்தோம். அவற்றுக்காக தள்ளுவண்டியொன்றை எடுத்துவரப் போனேன். ஒரு யூரோ நாணயக்குற்றியை செலுத்தியே அதனை வெளியே எடுக்க முடியுமாம். சே.. ஒரு அரசு முதலில் சனங்களை நம்ப வேண்டும். :) லண்டனில் பாரீஸில் ரயில் நிலையங்களில் நுழைய சலுான்களில் இருப்பதைப்போன்ற கதவுகள் உண்டு. ரிக்கெற்றை அவற்றின் முன்னால் துாக்கிக் காட்டினாலேயே அவை குகையின் கதவுகளைப் போல திறக்கின்றன. சுவிற்சர்லாந்தின் புகையிரத நிலையங்களுக்குள் திறந்த வீட்டிற்குள் நாயைப்போல நுழைந்து ஏறி உட்கார்ந்து கொள்ள முடியும். எந்த வழியடைப்புக்களும் இல்லை. அதே நேரம் ரிக்கெற் இன்றிய பயண முறைகேடுகளும் மிகக் குறைவானவை. நம்பிக்கைக்குப் பதிலான நன்றி.- நாயைப் போல..

ஒரு யூரோ இருக்கவில்லை. ஆதலால் பையை உருட்டியவாறு வெளியேறினோம். வெளியே சாத்திரியும் கோமகனும் அரைக்காற்சட்டைகளுடன் நின்றனர். சாத்திரியை நான்கு வருடங்களுக்கு முன்னரேயே சுவிற்சர்லாந்தில் சந்தித்திருக்கிறேன். அப்போதிருந்தே இணைய ஸ்கைப் வழியான நட்பு தொடர்ந்தது. சுவிஸில் அவரைச் சந்தித்த நாளில் அன்றைய மாலையில் ஏழு மணியோடு கடைகளைப் பூட்டியிருந்தார்கள். ஆனால் நண்பர்களுக்கோ கடுமையான தாகம். தவித்த வாய்க்குத் தண்ணி தராத சுவிஸ் கடைகளைத் திட்டிக்கொண்டு பக்கமாக இருக்கிற ஜெர்மனிக்கு போய் குடம் ஏந்திவர முடிவு செய்தோம். எனது நினைவு சரியானால் சாத்திரிதான் காரோடினார். அப்பொழுது சுவிஸ் ஷெங்கன் நாடுகளில் சேரவில்லை. ஆதலால் ஜெர்மனிக்குள் நுழைய எனக்கு விசா தேவைப்பட்டது. என்னிடம் அது இருக்கவில்லை. ஆனாலும் பரவாயில்லை, போவோம். வழியில் மறித்தால் ”ஓ.. இதுதான் ஜெர்மனியா..” என்று அப்பாவிகளாகக் கேட்டுவிட்டுத் திரும்பலாம் என்று பயணித்தோம். அந்தப் பயணத்தில் சபேசனும் இருந்தார்.

பொலிஸார் ஏறெடுத்தும் பார்க்காத காரணத்தால் சட்டவிரோத ”குடி”யேற்றம் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்தது. இப்படியாக சாத்திரியுடனான அறிமுகம் போதை முறிந்தபின்னரும் தொடர்ந்தது. நீஸ் போவதற்கு முடிவெடுத்த உடன் சாத்திரிக்கு அறிவித்தேன். அறிந்தவர் ஒருவர் அருகிலிருப்பதனால் ஒரு உற்சாகக் களை வந்துவிடுகிறது. அதிலும் 2 வயது நிரம்பிய மகளுடனான பயணம் என்பதனால் - அவசர நேரங்களில் ஓர் உதவி என்கிற நம்பிக்கையும் கிடைக்கிறது. சாத்திரி, நீஸின் அருமை பெருமைகளைச் சொன்னதோடு நான் வருகிற காலப்பகுதியில் இருவர் ப்றம் யாழ் - வருகிறார்கள் என்றார். அவர்களில் ஒருவரே கோமகன். சாத்திரியின் அறிமுகத்தில் கோமகன் எனக்கு பெரும் உதவியொன்று செய்தார்.

கோமகனோடு அதற்கு முன்னதாக பேசியிருக்கவில்லை. யாழில் படித்திருக்கிறேன். இருப்பினும் கடந்த 2 வருடங்களாக தலைக்கனம் மிகுந்திருப்பதால் அவரைப் பாராட்டியுமிருக்கவில்லை. :D

இருப்பினும் யாழின் மெயில் பெட்டிக்குள்ளால் அவர் எனக்கொரு கடிதத்தினை முன்னர் எழுதியிருந்தார். அதற்குரிய பதில்களை அவருக்க உடனடியாகவே எழுதிய பிறகு ஒன்றிரண்டு நாட்களாக அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஒருவாரமானது. பின்னர் மாதமானது. இருப்பினும், எனது பதில்களில் ஏதாவது கசப்புணர்வு தோன்றியிருக்குமோ என்ற நினைப்பு தோன்றியபடியே இருந்தது. விமான நிலையத்தின் வெளியே அவரைக் கண்டபோது கைலாகு கொடுத்து நான் கேட்ட கேள்வி அதுவாகத்தான் இருந்தது. “நான் பதில் போட்டனான். நீங்கள் அது குறித்து ஒண்டும் எழுதவில்லையே... எனக்கு”

கோமகன் சிரித்தார். பிறகு சொன்னார். ”வீடே இல்லையாம். தபாற்பெட்டி மட்டும் இருக்குமோ..” - அந்தக் காலப்பகுதியில்தான் கோமகனை யாழிலிருந்து ”துாக்கி”யிருந்தார்கள். மெயில் பெட்டியும் துாக்கப்பட்டிருக்கும் தானே.. அல்லாது விடினும் அவரால் படித்திருக்க முடியாதும் தானே..

சாத்திரியின் வண்டியில் ஏறினோம். எங்களுக்கான விடுதிக்கு கோமகனும் வந்தேயாக வேண்டியிருந்தது. ஏனெனில் நமக்கான விடுதியை அவர்தான் தனது பெயரில் பதிவு செய்திருந்தார். அவரது பணி காரணமாக அவருக்கு இருக்கிற விசேட தள்ளுபடி விலையில் - சரியாக அரைவாசிக் காசு - Hotel Novotel இல் அறையை பதிவு செய்திருந்தார். எனக்கொரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. கோமகன் தனது பெயரில் பதிவு செய்த அறையில் எங்களைத் தங்க விடுவார்களா என்பதே அது. ஒன்றிரண்டு தடவைகள் சாத்திரியிடம் கேட்டுமிருக்கிறேன்.

ஹோட்டலில் செக்கின் முடித்து - அறைக் கதவு திறக்கிற காந்த அட்டையை கோமகன் என்னிடம் தந்தார். அறைக்குள் நுழைந்தோம். குளித்து முடித்து ரெடியாக இருங்கள். இரவு 8 மணியவில் வந்து அழைக்கிறேன் என்ற சாத்திரி விடைபெற்ற போது நான் தயங்கித் தயங்கிக் கேட்டேன். “அண்ணை, இரவு படுக்கேக்கை.. கதவைத் தட்டியெழுப்பி, உண்மையைச் சொல்லு நீதான் கோமகனா என்று கேட்கமாட்டாங்கள் தானே..”

சாத்திரி சிரித்துப் போட்டுச் சொன்னார். ”இதென்ன கொழும்பு லொட்ஜே... ?”

- இன்னொரு முறையோடு முடியும் -

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது...தொடர் நன்றாக இருக்கு...

..நானும் நீஸ் பக்கம் ஒருக்காவாவது போக வேண்டும்....

கோமகனோடு அதற்கு முன்னதாக பேசியிருக்கவில்லை. யாழில் படித்திருக்கிறேன். இருப்பினும் கடந்த 2 வருடங்களாக தலைக்கனம் மிகுந்திருப்பதால் அவரைப் பாராட்டியுமிருக்கவில்லை. :D

:rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் வந்த விமானம் இறங்கி விட்டிருந்ததை தகவல் பலகையில் பார்த்து உறுதிசெய்திருந்தேன். சூறிச்சில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய அனைவருமே கிட்டத்தட்ட வெளியேறி விட்டிருந்த நிலையில் சயந்தனை மட்டும் காணவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் பாத்திட்டு பயணிகள் பெயர் பட்டியலை பாக்கலாமெண்டு நினைச்சிருந்தன். சில நெரம் பெடியன் பழக்க தோசத்திலை பாஸ்போட்டை கிழிச்சுப்போட்டு நீசிலை அசேலம் அடிச்சிட்டானொ தெரியேல்லையெண்டு கோமகனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பயணபொதியை தள்ளியபடி வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். வண்டிலுக்கு ஒரு யுரோ இல்லாததாலை வந்த வினை என்று பிறகுதான் தெரிந்தது. இந்த நடைமுறை இப்பதான் புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள் சுப்பர் மாக்கற்றுக்கள் (சந்தைகள்) இதே நடைமுறைதான் இல்லாவிட்டால் சனங்கள் வண்டில்களை அதற்குரிய இடத்தில் விடாமல் கண்ட இடங்களில் தள்ளிவிட்டு போய்விடுவார்கள். நான்கு வருடங்களிற்கு முன்னர் சயந்தனை சுவிசில் நேராக சந்தித்திருந்தேன் அது சரியானதொரு கிரமப் பகுதி இரவு 7 மணிக்கு பிறகு ஊரே அடங்கிவிடும். நாங்கள் தாக சாந்தி செய்ய கடை தேடி கடைசியாக யேர்மனிக்குள் நான் காரை ஓடியபோதுதான் சயந்தன் தனக்கு யெரமனிக்குள்ளை வர அனுமதியில்லையெண்டார்.பொலிஸ் பிடிச்சால் என்ன செய்யிறதெண்டார். பொலிஸ் பிடிச்சால் ஓ இதுதானா யெர்மனி தெரியாமல் வந்திட்டம் எண்டு சொல்லிட்டு திரும்பலாம் எண்டு சொல்லியிருந்தேன். ஆனால் உண்மையில் சயந்தனை யெர்மன் பொலிசிட்டை அடைவு வைச்சாவது தண்ணி வாங்காமல் திரும்பிறேல்லையெண்டுதான் முடிவெடுத்திருந்தனான். இப்பதான உண்மையை சொல்லுறன். :lol: ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அல்டியொண்டு (கடையின் பெயர்) கண்ணில் பட்டது அள்ளிக்கொண்டு சுவிஸ் திரும்பியிருந்தோம்.

சுவிஸ் பாசல். இரயில் நிலைய படியில் 4 வருடங்களிற்கு முன்னர் எடுத்த படம்.

12853_1077130788259_5634408_n_zps8cf59443.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் உண்மையில் சயந்தனை யெர்மன் பொலிசிட்டை அடைவு வைச்சாவது தண்ணி வாங்காமல் திரும்பிறேல்லையெண்டுதான் முடிவெடுத்திருந்தனான்

எனக்கு அப்பவே ஒரு டவுட் இருந்தது. இவங்கள் என்னை பொலிசிட்டை பிணை வைச்சிட்டு போனாலும் போயிடுவாங்கள் என்று.. நல்ல வேளை..

சாத்திரி , நான் ஆறத காயத்தை பிக்கப் பண்ணிறதில போட்ட மாஸ்ரர் பிளானுகள் எல்லாம் அடுத்த தொடரில விலாவாரியா சொல்லிறன் :lol::D . நான் நினைக்கிறன் இதில " ஆறாத காயம்" சீரக தண்ணியில ஐஸ் கியூப்பை தான் போட்டிருக்கிறார் எண்டு :lol: .ஆனாலும் சீரகத்தண்ணியில ஒரு குணம் மெல்ல மெல்ல உறுதியாய் ஏத்தும் :icon_idea: . அனேகமாய் சயந்தன் அப்பிடித்தான் செய்வர் எண்டு நினைக்கிறன் . மீண்டும் அடுத்த தொடரில் .....................

Edited by கோமகன்

சயந்தன் வந்த விமானம் இறங்கி விட்டிருந்ததை தகவல் பலகையில் பார்த்து உறுதிசெய்திருந்தேன். சூறிச்சில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய அனைவருமே கிட்டத்தட்ட வெளியேறி விட்டிருந்த நிலையில் சயந்தனை மட்டும் காணவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் பாத்திட்டு பயணிகள் பெயர் பட்டியலை பாக்கலாமெண்டு நினைச்சிருந்தன். சில நெரம் பெடியன் பழக்க தோசத்திலை பாஸ்போட்டை கிழிச்சுப்போட்டு நீசிலை அசேலம் அடிச்சிட்டானொ தெரியேல்லையெண்டு கோமகனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பயணபொதியை தள்ளியபடி வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். வண்டிலுக்கு ஒரு யுரோ இல்லாததாலை வந்த வினை என்று பிறகுதான் தெரிந்தது. இந்த நடைமுறை இப்பதான் புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள் சுப்பர் மாக்கற்றுக்கள் (சந்தைகள்) இதே நடைமுறைதான் இல்லாவிட்டால் சனங்கள் வண்டில்களை அதற்குரிய இடத்தில் விடாமல் கண்ட இடங்களில் தள்ளிவிட்டு போய்விடுவார்கள். நான்கு வருடங்களிற்கு முன்னர் சயந்தனை சுவிசில் நேராக சந்தித்திருந்தேன் அது சரியானதொரு கிரமப் பகுதி இரவு 7 மணிக்கு பிறகு ஊரே அடங்கிவிடும். நாங்கள் தாக சாந்தி செய்ய கடை தேடி கடைசியாக யேர்மனிக்குள் நான் காரை ஓடியபோதுதான் சயந்தன் தனக்கு யெரமனிக்குள்ளை வர அனுமதியில்லையெண்டார்.பொலிஸ் பிடிச்சால் என்ன செய்யிறதெண்டார். பொலிஸ் பிடிச்சால் ஓ இதுதானா யெர்மனி தெரியாமல் வந்திட்டம் எண்டு சொல்லிட்டு திரும்பலாம் எண்டு சொல்லியிருந்தேன். ஆனால் உண்மையில் சயந்தனை யெர்மன் பொலிசிட்டை அடைவு வைச்சாவது தண்ணி வாங்காமல் திரும்பிறேல்லையெண்டுதான் முடிவெடுத்திருந்தனான். இப்பதான உண்மையை சொல்லுறன். :lol: ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அல்டியொண்டு (கடையின் பெயர்) கண்ணில் பட்டது அள்ளிக்கொண்டு சுவிஸ் திரும்பியிருந்தோம்.

சுவிஸ் பாசல். இரயில் நிலைய படியில் 4 வருடங்களிற்கு முன்னர் எடுத்த படம்.

12853_1077130788259_5634408_n_zps8cf59443.jpg

இதிலை யார் தலைக்கனம் பிடித்த ஆறாத காயம் சாத்?

"நிறை குடம் தளம்பாது" எண்டது தான் ஏதோ நினைவில வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இடமிருந்து நாலாவது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடமிருந்து நாலாவது

நோ.. வலமிருந்து முதலாவது :)

Edited by sayanthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.