Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் உங்கள் குடும்பத்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார் ஒடும் போதோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்ய முதலும் ( கட்டில் காலையும் சரி பார்க்கவும் :lol: ) சார்ளியை நினைத்துப் பார்க்கவும்.

வேலை சொய்ய முதல் நீங்கள் செய்யப் போகும் வேலைகேற்ற பாதுகாப்பு அங்கிகள் அணிந்து செய்யவும் உறவுகளே

மன்னிக்கவும் வீடியோவை இணைக்க முடியவில்லை முழுவதும்

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாதுகாப்பு உங்களில்தான் தொடங்கிறது, உங்களையும் மற்றவர்களையும் பார்க்க வேண்டியது உங்கள் கடமை,

வீட்டில் மின்னியல் & கஸ் உபகரணங்களை மிகவும் கவனமாக பாவிக்கவும்,

உயரமான இடங்களில் ஏறுவதற்கு அதற்கேற்ற ஏணிகளை பாவிக்கவும் (மேல் / கடைசி படியில் நிற்பதை தவிர்க்கவும்),

கனமான் பொருட்களை தூக்கும் போதோ இடமாற்றும் போதோ மிக்க கவனம் சொலுத்தவும், எனக்கு தெரிந்து பலர் மாற்றமுடியா நாரி, இடுப்பு பிடிப்பில் உள்ளார்கள்.

புது உபகரணங்கள் வாங்கினால் பாதுகாப்பு முறைகளை கட்டாயம் வாசிக்க வேண்டும், என் பிள்ளைகள் இதில் மிக கவனம்,

புல் வேண்டும் போதோ or சத்தமிக்க வேலைகள் செய்யும் போதோ காதிற்கு பாதுகாப்பு கவசம் அணிவது மிக மிக முக்கியம், வயது போகப் போக பாதிப்படையும் வீதம் கூட,

காரில் பயணிக்கும் போது வீதி ஓழுங்குகளை கடைப்பிடித்தல் எப்போதும், சாப்பாடுகள் கொறிப்பதோ or குடிப்பதோ இல்லை, றேடியோவை தொடுவது குறைவு, வேலை தளங்களில் நடக்கும் விபத்துகளை விட வெளியில் தான் கூட, றோட்டில் மட்டும் பல

உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு முறைகளை பகிருங்கள், பாதுகாப்பு கவசம் அணியாமல் நீங்கள் சந்தித்த விபத்துக்கள்?

ட்ரில் மெஷின் & கயிற்றினால் காரை கட்டி இழுக்கும் போது பல விபத்துக்கள் நடத்திருக்கு, பார்த்திருக்கிறேன்

பிகு: என்னால் சார்ளியின் வீடியோ முழுமையையும் இணைக்க முடியவில்லை, நல்லதொரு வீடியோ, கடந்த 5 வருடங்களில் பாதுகாப்பு வகுப்புகளுக்கு மட்டும் 50மணித்தியாலங்களுக்குமேல் சொன்றிருக்கிறேன் (கம்பணி செலவில்) நேற்றுதான் சார்ளியின் வீடியோ பார்த்தேன், உதை உங்களிடமும் பகிர நினைத்து youtube இல் தேடினால் கிடைக்கவில்லை ஆங்கிலத்தில்.

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு உடையார்.

# என்ன வேலை செய்யும் போதும்.... கால் சட்டை பொக்கற்றுக்குள், ஸ்குறூ ட்றைவர், கத்தி, கத்தரிக்கோல் போன்ற ஆயுதங்கள் வைத்திருக்கப் படாது.

ஒரு முறை தோட்டத்தில் உள்ள மரத்தை... வெட்ட ஏணியில், உச்சிக்கு போய் வெட்டிக் கொண்டிருந்த போது... ஏணி சரிந்து, விழுந்தது ரோசா முள்ளுக்கு மேல். உடம்பு முழுக்க முள்ளுக் குத்தின வலி ஒரு புறம், பொக்கற்றில் வைத்திருந்த கத்திரிக்கோல் அடிவயிற்றில் குத்தி இரத்தம், ஒழுகத் தொடங்கி விட்டது.

# வீட்டை விட்டு வெளியேறும் போதும், தொலை பேசி கதைக்கும் போதும்... அடுப்பு நிற்பாட்டப் பட்டுள்ளதா, என்பதை... உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

# வெளியார் வீட்டு மணியை... அடிக்கும் போது, அவர் யார்... என்று உறுதிப் படுத்திய... பின்பே கதவை திறக்க வேண்டும்.

தெரியாத ஆள் என்றால்... யன்னலால், என்ன விசயம் என்று கேட்டு, அலுவலை முடித்து விட வேண்டும்.

தொடரும்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அத்தியாவசியாமான பதிவு, உடையார்!

அண்மையில் எனது நண்பரொருவரின் வீட்டுக்குப் போன போது, அவரது வரவேற்பு அறையிலிருந்த அத்தனை சாதனங்களும் (மின்சார அறை வெப்பமாக்கி, கணனிகள் ) உட்பட, இரண்டு பிளக்குகளில் மட்டும், கொழுவப் பட்டிருந்தன!

அவருக்கு, அப்படிச் செய்வது பாதுகாப்பில்லை என்று எவ்வளவு எடுத்துக் கூற முயன்றும், தாங்கள் ஊரில், ஒரு தெருவுக்கே ஒரு பிளக்கிலிருந்து மின்சாரம் கொடுத்ததாகவும், ஒரு பிரச்ச்சனையும் வரவில்லை என்றும் கூறினார்!

நானும், உங்களுக்காகவல்ல இதைச் சொல்வது!

உங்கள் குழந்தைகளுக்காக, என்று கூறினேன்!

அதன் பின்பு, மேலதிக, பிளக்குகளை இப்போது அவர் போட்டுள்ளார்!

அத்துடன், நீச்சல் குளங்கள் வீட்டில் வைத்திருப்பவர்கள், அதற்குரிய பாதுகாப்பு வழிமுறைகளையும், கட்டாயம் நடை முறைப்படுத்த வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு உடையார் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் என்னுடன் வேலை செய்த ஒருவர் ஆறடி உயர ஏணியில் இருந்து விழுந்தே மரணமடைந்துவிட்டார்.. விழும்போது பலகையில் தலை மோதியதால் மரணம்.. :blink:

நாங்கள் சின்ன வயதில் மாமரத்தில் இருந்து விழுந்தாலும் பிறகு ஆ நெக்ஸ்டு எண்டிட்டுப் போன ஆக்கள்.. :D

நோர்வேயில் சில காலத்துக்கு முதலில், குப்பைகளை அரைக்கும் எந்திரத்தின் தொழிற்பாட்டு முறையை, புதிய ஒருவருக்கு விளங்கபடுத்திய தமிழர் ஒருவர், எந்திரத்துக்கான பிரதான ஆழியை நிற்பாட்ட மறந்துவிட்டார்.

எந்திரத்துக்குள்ளே இறங்கி தொழிற்பாட்டு முறையை காட்டிவிட்டு ஏறும்போது, யாரோ தவறுதலாக ஆழியை போட்டமையால் அரைபட்டு போனார்.

இவருடைய தவறு என்பதால் தொழில் நிலைய காப்புறுதியும் இவரது குடும்பத்தை காக்கவில்லை. இவர் தனக்கு கூட ஆயுள் காப்புறுதி எடுக்காமையால் அதுவும் இவரின் குடும்பத்தை காக்கவில்லை. நல்லா வாழ்ந்த குடும்பம் நடுத்தெருவில்.

  • தொழில் நிலையங்களில் அவதானமாக இருங்கள்
  • காப்புறுதிகளை எடுத்து வைத்திருங்கள்

நீங்கள் இறந்த பின்னரும் உங்கள் குடும்பம் உங்களை திட்டாமல் இருக்க உதவும்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன வருடம் என்னுடன் வேலை செய்த ஒருவர் ஆறடி உயர ஏணியில் இருந்து விழுந்தே மரணமடைந்துவிட்டார்.. விழும்போது பலகையில் தலை மோதியதால் மரணம்.. :blink:

நாங்கள் சின்ன வயதில் மாமரத்தில் இருந்து விழுந்தாலும் பிறகு ஆ நெக்ஸ்டு எண்டிட்டுப் போன ஆக்கள்.. :D

நானும் இதே மாதிரி ஒரு நிகழ்வு பார்த்திருக்கிறேன், வின்ரர் நேரம், ஏணி வைத்து கூரை துப்பரவாக்கினவர், கிழே இருந்த கல்லில் அடிபட்டு தலை கூலம் பாணியாக போய்விட்டது, அதற்ற்குரிய அங்கில சொல்லையும் அன்றுதான் அறிந்தேன்- இப்ப மறந்து போய்விட்டது- அவர் நான் இருக்கிற இடத்தின் பிரதேச சபை உறுப்பினர் / வர்த்தக சங்க உறுப்பினர்...

அதே pola ஒன்று இலங்கைல் பார்த்தனான், குன்னஸ் பால்ஸ் விழுந்து தலை அடிபட்டவர் - பள்ளிகுட பெடியன் என்று நினைக்கிறேன்...

நல்லதொரு திரியை ஆரம்பித்த உடையார் அண்ணாவிற்கு நன்றிகள். நிச்சயம் பலருக்கு பயனுடையதாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட & அனுபவத்தையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள், இன்னும் சில முக்கியமான விபத்துக்களை சந்தித்திருக்கிறேன், பிறகு பகிர்த்துகொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததேன்னா கல்யாணம் கட்டினத தானே சொல்ல போறிங்க சொலுங்க சொல்லுங்க

:D

நல்லா இருக்கு தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததேன்னா கல்யாணம் கட்டினத தானே சொல்ல போறிங்க சொலுங்க சொல்லுங்க

:D

நல்லா இருக்கு தொடருங்கள்

:lol::D இப்போதைக்கு இல்லை நீங்கள் கட்டும்வரை

எனக்கு தெரிந்த நண்பரின் மனைவி வைத்தியரிடம் போவதற்காக பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டு வெளிக் கதவை இழுத்து மூடியுள்ளார் பிள்ளை மற்றப்பக்க இடைவெளிக்குள் கையால் பிடித்திருப்பதை தெரியாமல், பிள்ளையின் மூன்று விரல்களும் நசுக்கிவிட்டது, அதில் ஒரு விரலில் நிகத்துடன் சதையும் போய்விட்டது. அவர்களின் வேதனையை வார்த்தையில் சொல்ல முடியாது.

அதனால் வீட்டுக் கதவுகள் அல்லது கார் கதவுகளோ மூடும் போது மிகக் கவனமாக இருங்கள், என் பிள்ளைகள் ஓடி விளையாடும் போது கதவை சாத்தி ஒளித்து விளையாட விடுவதில்லை, எல்லோரும் காரினுள் ஏறி இருக்கை பட்டிகளை போட்டபின்தான் எடுப்பது வழக்கம்

இன்னும் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

நல்லதொரு பதிவு

பிள்ளைகளில் தொடங்கியது

எப்பொழுதும் கதவை மூடும் முன் அதன் மூடும் விழிம்பை பார்த்தபின்பே கதவை சாத்துவேன்.

கார்க்கதவும் அவ்வாறே.

நான் வீட்டில் செய்யும் எச்சரிக்கைகள்

முழுகிவிட்டு தலையை உலர்த்தும் இயந்திரத்தை குளியலறையில் வைப்பதில்லை.

(குளியலறையில் எப்பொழுதும் ஈரமிருக்கும். நாமும் நனைந்திருப்போம். எனவே ஆபத்தானது. அத்துடன் ஒரு பிள்ளை குளித்து முடிய தலைக்கு கீற்றர்பிடிப்பார். அதேநேரம் மற்றவர் குளிக்கத்தொடங்குவார். ஒருமுறை இப்படி குளித்துக்கொண்டிருந்த பிள்ளையின் தொட்டிக்குள் மசின் விழுந்து இருவரும் இறந்ததாக படித்த ஞாபகம்)

அயன் செய்யும் இயந்திரத்தை கட்டில் மெத்தை மற்றும் உடுப்புக்கள் இருக்கும் இடத்திலிருந்து தள்ளி வைத்திருப்பது. நாம் அதைப்பவித்து முடித்து வெளியே போய்விட்டாலும் அதிலிருக்கும் சூடு மூலம் ஆபத்து இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வயதுவரை அடுப்பைத்தொடக்கூடாது என்பது கடுமையான உத்தரவு.

மெலிய ஆனால் கடுமையான தன்மைகொண்ட நூல்கள் கயிறுகள் மற்றும் கம்பிகளை வாங்குவதில்லை. வீட்டில் வைத்திருப்பதில்லை.

கூரான ஆயுதங்கள் மற்றும் கத்திகளை கையில் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு.

மேசைகள் மற்றும் அதையொத்த உயரமான பொருட்களை வாங்கும்போது அது பிள்ளைகளின் கண்ணுக்கு அளவான உயரமாக இருந்தால் அவற்றிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்..........

நேரம் கிடைக்கும்போது தொடர்கின்றேன்........

நல்ல பதிவு உடையார்.

விளையாடும் பொழுது ஒரு பிள்ளை கதவை வேகமாகச் சாத்தியதால், எனது நண்பரின் மகளுக்கு விரலின் ஒரு பகுதி போயிற்று.

ஒருமுறை நண்பர்களுடன் நடைபாதையால் கதைத்துக் கொண்டு வரும் பொழுது, நடைபாதைக்கும் கட்டிடம் ஒன்றையும் பிரிக்கும் குட்டையான அகலமான 'கொங்கிரீட்' தூணை (Bollards) கவனிக்கவில்லை. ஒரு தூணில் தடக்கி மற்றைய தூணை நோக்கி முகம் அடிபட விழும் பொழுது, தெய்வாதீனமாக இரு கைகளையும் அந்தத் தூணில் ஊன்றி பக்கவாட்டில் விழுந்ததால் தப்பித்தேன். அல்லது முகமும் மண்டையும் சிதைந்திருக்கும். கஷ்டகாலத்திற்கு இரு தூண்களின் இடைவெளி சரியாக எனது உயரத்திற்கு இருந்தது.

அதே அளவையொத்த தூணின் படம்.

post-7051-0-72606400-1347616846_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

பழைய அலுவலகத்தில் வேலை செய்த ஒருவர் கார் கதவில் இருந்து கையை எடுக்கும் முன்னம் மனைவி கதவைச் சாத்திவிட்டார்.. கைமுறிவு ஏற்பட்டுவிட்டது.. :blink:

பிறகு மனைவியின் ஆலோசனைப்படி மனைவியின் சொந்த ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்கள் குடும்பமாக.. :rolleyes: திட்டமிட்ட சதியாக இருக்குமோ??!! :D

நேற்று மழைக்குள்ள குடையைப் பிடிச்சுக்கொண்டு கார் பார்க்கின் பாதசாரிகள் நுழையும் பகுதியால் போகாம ஏதோ யோசனையில் ஒரு காரின் பின்னால் நுழைந்தேன். "டாங் " தலையில் ஒரு இரும்பு ஒன்று வந்து அடிச்சுது. BOOM GATE !!

Perth-Bollards_135420_image.jpg

காரப் போக விட்டிட்டு அது கீழ இறங்கியிருக்கிது. குடைபிடித்திருந்த படியால் எனக்குத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் பொறிகலங்கிச்சு. கவுரவப் பிரச்சனை என்ற படியால் சுற்றும் முற்றும் யாரும் பார்க்கினமோ என்று பார்த்தன். நல்ல காலத்துக்கு ஒருத்தரும் பார்க்கேல்ல.

நல்ல திரி உடையார்.

ம்ம்ம்

நல்லதொரு பதிவு

பிள்ளைகளில் தொடங்கியது

எப்பொழுதும் கதவை மூடும் முன் அதன் மூடும் விழிம்பை பார்த்தபின்பே கதவை சாத்துவேன்.

கார்க்கதவும் அவ்வாறே.

நான் வீட்டில் செய்யும் எச்சரிக்கைகள்

முழுகிவிட்டு தலையை உலர்த்தும் இயந்திரத்தை குளியலறையில் வைப்பதில்லை.

(குளியலறையில் எப்பொழுதும் ஈரமிருக்கும். நாமும் நனைந்திருப்போம். எனவே ஆபத்தானது. அத்துடன் ஒரு பிள்ளை குளித்து முடிய தலைக்கு கீற்றர்பிடிப்பார். அதேநேரம் மற்றவர் குளிக்கத்தொடங்குவார். ஒருமுறை இப்படி குளித்துக்கொண்டிருந்த பிள்ளையின் தொட்டிக்குள் மசின் விழுந்து இருவரும் இறந்ததாக படித்த ஞாபகம்)

அயன் செய்யும் இயந்திரத்தை கட்டில் மெத்தை மற்றும் உடுப்புக்கள் இருக்கும் இடத்திலிருந்து தள்ளி வைத்திருப்பது. நாம் அதைப்பவித்து முடித்து வெளியே போய்விட்டாலும் அதிலிருக்கும் சூடு மூலம் ஆபத்து இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வயதுவரை அடுப்பைத்தொடக்கூடாது என்பது கடுமையான உத்தரவு.

மெலிய ஆனால் கடுமையான தன்மைகொண்ட நூல்கள் கயிறுகள் மற்றும் கம்பிகளை வாங்குவதில்லை. வீட்டில் வைத்திருப்பதில்லை.

கூரான ஆயுதங்கள் மற்றும் கத்திகளை கையில் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு.

மேசைகள் மற்றும் அதையொத்த உயரமான பொருட்களை வாங்கும்போது அது பிள்ளைகளின் கண்ணுக்கு அளவான உயரமாக இருந்தால் அவற்றிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்..........

நேரம் கிடைக்கும்போது தொடர்கின்றேன்........

ம் ...................... belt ஆல் பிள்ளைகளை அடிக்கும் பொழுது அவர்களை comforter ஆல் பாதுகாப்புக்காகச் சுற்றிப் போட்டா அடிக்கின்றனீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம் ...................... belt ஆல் பிள்ளைகளை அடிக்கும் பொழுது அவர்களை comforter ஆல் பாதுகாப்புக்காகச் சுற்றிப் போட்டா அடிக்கின்றனீர்கள் :lol:

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol:

பெல்ற் என்பது ஒரு குறியீடு

அதனால் அடித்துக்கொண்டு இருப்பது அல்லது உறுட்டி உறுட்டி அடிப்பது என்பதல்ல அதன் அர்த்தம். அதை நோக்கி சிந்திக்க வைப்பது.

அதன்படி பெல்ற்றின் நோக்கம் உங்களுக்கு சரியாக ஏறியிருக்கிறது. :lol:

அந்தவகையில் வெற்றி :D :D :D

நன்றி

(திரியை திசை ிருப்ப விரும்பவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்திற்கு பெல்டும் வீடுகளில் இருக்கத் தான் வேணும்..என்ன பிரச்சனை என்றால் இருவரை நினைக்கும் போது பெயர் நினைவு வருகுது இல்லை பெல்ட் தான் நினைவுக்கு வருது...உங்கட பெல்ட பிரச்சனையால அன்பாக பழகுற அண்ணாக்களை கண்டால் கூட பயமாக இருக்கு..குட் பாய். :lol::lol:

:lol: :lol:

இது அண்மையில் நடந்த சம்பவம், நண்பர்களின் குடுபங்களுடன் ஒரு நாள் பயணமாக கடற்கரை/குளக்கரைக்கு போனோம். இங்கு இப்படியான இடங்களில் மது பானம் அருந்துவது தடைசெய்யப்பட்டது. ஆனால் எனது நண்பர் ஒருவர் மது அருந்த வேண்டும் என மது கொண்டு வந்து அளவுக்கு அதிகமாக குடித்து போதை அதிகமாகி அதிகம் கதைக்க தொடங்கிவிட்டார். அவருக்கு ஒரு வயதுக்குட்பட்ட பிள்ளை ஒன்று, மனைவிக்கு கார் அவரது ஓட்ட தெரியாது. அவருக்கு இது இப்படி அதிகம் மது அருந்துவது கூடாது, அதுக்கும் சிறிய பிள்ளை, மனைவி இருவரையும் கொண்டு கார் ஓட்ட போகிறீர்கள் என்ற பொது அவர் சொன்ன பழமொழி "மந்தி கொப்பிழக்க பாயாது" என்பதாக இருந்தது. அதன் பின் அவருக்கு எந்த அறிவுரையும் சொல்வதில் என தீர்மானித்து கொண்டேன்.

Edited by KULAKADDAN

'மழைக்கால இருள் என்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது' பார்டிகளில் அடிக்கடி கேட்கும் வீரமிகு வசனம்.

பிறகு 'சாரதிப் புள்ளி' இழப்புப் பற்றி கவலையாகச் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ற் என்பது ஒரு குறியீடு

அதனால் அடித்துக்கொண்டு இருப்பது அல்லது உறுட்டி உறுட்டி அடிப்பது என்பதல்ல அதன் அர்த்தம். அதை நோக்கி சிந்திக்க வைப்பது.

அதன்படி பெல்ற்றின் நோக்கம் உங்களுக்கு சரியாக ஏறியிருக்கிறது. :lol:

அந்தவகையில் வெற்றி :D :D :D

நன்றி

(திரியை திசை திருப்ப விரும்பவில்லை)

பெல்ற் அடி என்பதை... பலர் தவறாக விளங்கிக் கொண்டு கருத்து எழுதுகிறார்கள் என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு பெல்ற் இருக்க வேணும்.

அதை...(எம்.ஜீ.ஆர், விஜய், விஜயகாந்த், ரஜனி, ஜெனொலியா... பாணியில்) சுழட்டிக் காட்டி... வெருட்ட வேணும்.

இந்த, வெருட்டலை... பத்து வயசுக்குள்ளை, இருக்கிற பிள்ளையளுக்கு செய்தால்... நல்ல பலன் கிடைக்கும்.

அதுக்கு, மேற்பட்டவர்களுக்கு... செய்தால்... தகப்பன், கம்பி எண்ண‌ வேண்டி வரலாம். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்திற்கு பெல்டும் வீடுகளில் இருக்கத் தான் வேணும்..என்ன பிரச்சனை என்றால் இருவரை நினைக்கும் போது பெயர் நினைவு வருகுது இல்லை பெல்ட் தான் நினைவுக்கு வருது...உங்கட பெல்ட பிரச்சனையால அன்பாக பழகுற அண்ணாக்களை கண்டால் கூட பயமாக இருக்கு..குட் பாய். :lol: :lol:

உங்களுக்கு, இப்ப.. ஞாபக மறதி கூடப் போலை... யாயினி. :D

நீங்கள், யாரைச் சொல்கிறீர்கள் என்று, ஊகித்து விட்டேன் :) .

பிள்ளைக்கு, அம்மா செல்லம் கொடுத்தால்....

அப்பா தனது, மனதை கஸ்ரப் படுத்திக் கொண்டு... இறுக்கமாக, இருக்க வேணும்.

பிள்ளையின், நன்மைக்கே... இது எல்லாம். இது பயப்படும் படியான விடயம் அல்ல. :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.