Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள வாழ்த்துப்பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எடிட்டிங் க்கு சாத்ஸ் அண்ணாவா பிடிங்க தமிழ் அண்ணா :D

முன்னரேயே தமிழ் சூரியனின் பாடல் ஒன்றிற்கு காட்சிகளை வடிவமைத்த சுபேஸ் நன்றாக செய்திருந்தார் அதன்போது என்னிடம் ஆலோசனை கேட்ட பொழுது நான் சொன்ன விடயம் சாந்தியின் மகன் இதனை தொழில் கல்வியாக கற்று வருபவன் யெர்மன் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிலும் பகுதிநேரமாக வேலை செய்கிறவன் அவனிடம் கேட்டுத்தான் நானும் பல விடயங்களை பழகியிருக்கிறன் நான் பல மணி நேரமாக நோண்டுற எடிட்டிங்கை அவன் ஒரு நிமிசம் மாமா எண்டிட்டு செய்வான் அவனிடம் கேட்கலாமென்று கூறியிருந்தேன். இப்ப நீங்கள் செய்ய சொல்லி என்னட்டை தந்தாலும் அவனிட்டை கேட்டுத்தான் நானும் செய்து தருவன். ஆனால் முதல் சுபேஸ் செய்த காட்சி அமைப்பை பிறகு நம்ம டுல்சி வந்து கேள்வி கேட்ட மாதிரி என்னையும் கேட்டால் பிறகு என்ன செய்யிறதாம். ?? :lol:

  • Replies 87
  • Views 7.7k
  • Created
  • Last Reply

ஆனால் முதல் சுபேஸ் செய்த காட்சி அமைப்பை பிறகு நம்ம டுல்சி வந்து கேள்வி கேட்ட மாதிரி என்னையும் கேட்டால் பிறகு என்ன செய்யிறதாம். ?? :lol:

என்னை இழுக்காமல் கருத்து கூற மாட்டீர்களா சாத்து அண்ணா? :lol:

அது தமிழ்சூரியன் அண்ணா மற்றவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தன்னுடைய பாடல்களை இனி யாழில் போடுவதில்லை என்று எனக்கு கூறிய பின்னர், சுபேஸ் அண்ணா தமிழ்சூரியன் அண்ணாவின் அனுமதி இல்லாமல் யாழில் போட்டதால் தான் நான் அவரை கேள்வி கேட்டேன். :D

இப்ப தமிழ்சூரியன் அண்ணாவே பாடல்களை இணைக்கிறார். அதன் பின் இந்த விடயத்திலிருந்து நான் ஒதுங்கி கன காலம். :D

அதோட யாழ்கள பாடல் விடயத்தில் நான் ஏன் தலையிட போறன்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் கேக்க மாட்டங்க சோ முழு பாடலையும் எடிட்டிங் செய்து விழா அன்று போட வேண்டியது உங்கள் பொறுப்பு தமிழ் சூரியன் அண்ணா விரைவில் உங்களை தொடர்பு கொள்ளுவார்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக உள்ளது!

முழுமைப் படுத்தும்போது, யாழ் களத்திற்குத் தனித்துவம் மிக்க ஒரு பாடலாக இது அமையப் போகின்றது!

எங்கள் வளங்கள் வன்னியிலும், வாகரையிலும், எமைச் சூழ இருக்கும் கடலிலும் தான் சிதறிக்கிடக்கின்றன என்பது, எனது தாழ்மையான கருத்து!

அனைத்தையும் உள்ளே கொண்டு வாருங்கள்!!!

ஈழத் தமிழர்களை, மட்டுமன்றி, உலகத் தமிழர்களையும் இந்தப் பாடல், அணைத்துச் செல்ல வேண்டும்!

எம்மை ஒருங்கே இணைக்கும் பாலமாகத் தமிழ் அமையட்டும்!

அது வரைக்கும், இதைத் தொகுத்தளித்த, அணைத்துச் சொந்தங்களுக்கும், வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.இன்னும் மேன்மேலும் வளரவேண்டும்.புதியபரிமாணங்களுடன் யாழ்களம் தளைத்தோங்க வேண்டும்.ஒற்றுமை வளர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த அதிர்ச்சி.. :D பல திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்த ஒரு களமாக யாழ்களம் விளங்குவதில் முக்கிய பங்கு மோகன் அண்ணாவையும், மட்டுறுத்துனர்களையும் சாரும்.. அவர்களையும் நினைவில் கொள்வோம்..!!

தமிழ்சூரியன்.. உங்கள் இசைப் புலமை பிரமிக்க வைக்கிறது.. பாடிய நாதன் அவர்கள் தேனிசை செல்லப்பாவின் குரலை ஞாபகப் படுத்துகிறார்.. பாடலை எழுதிய கந்தகப் புலவர் வலவை அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..! :D

அடுத்ததாக, பழைய பொ இசை மாதிரி ஒரு பாடலைப் படையுங்களேன்.. :rolleyes:

பொப் இசை என்று சொல்ல வந்தன்.. :D

உண்மையிலேயே மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள் அனைவரிற்கும்.

பாராட்டுக்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு. பாராட்டுக்கள்

வித்தியாசமான முயற்சி. விளையாட்டாகத் தொடங்கி திறமையாகச் செய்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையில் மிக முக்கியமாக என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்பவர்கள் கீழ் வருவோர்.....

ஒரு வாழ்த்துப்பாடலை யாழ் களத்திற்கு அமைக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது உடனடியாக நினைவிற்கு வந்தவர் தமிழ் சூரியன் அண்ணா.... தனிமடலில் நாம் தொடர்பு கொண்டு கேட்கின்றோம்......

அண்ணா நாங்கள் நடத்தும் இந்த விழாவிலே யாழ் களத்திற்கு என்று ஒரு பாடல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்....இசை அமைத்து தர முடியுமா என்று மிகவும் தயக்கத்துடன் தான் கேட்டோம் காரணம் எல்லாருக்கும் இருக்கும் நேர பிரச்னை அவருக்கும் இருக்கும் என்று.....

மடல் அணுப்பி அடுத்த நிமிடமே எமக்கு வந்த பதில் எங்களுக்கு எல்லாம் உறவு பாலமாக இருக்கின்ற இந்த யாழுக்கு நிச்சம் செய்து தருவேன் என்று உடனடியாக கவிதையை அனுப்ப சொல்லி........

சரி இசை அமைப்பு பக்கம் ஓகே ஆகிடிச்சு அடுத்து கவிதைக்கு எங்கே போவது இல்லை யாரை கேட்பது என்று கையை பிசைந்து கொண்டு இருந்த பொழுது யாழ் களத்தில் ஏற்கனவே வந்திருந்த்த யாழை பற்றிய கவிதைகள் நினைவிற்கு வர.....அதை யாரை பிடித்தால் உடனடியாக தேடித்தருவார்கள் என்று நினைத்த பொழுது எமது நினைவுகளில் வந்துதித்தவர் கள உறவு தமிழினி அவர்கள்.... கேட்ட ஐந்தாவது நிமிடத்தில் அத்தனை கவிதைகளையும் எடுத்து தந்தார்.........

இவளவு கவிதைகளில் ஒரு கவிதையை மட்டும் இசை அமைக்க ஏற்றவாறு தெரிவு செய்ய வேண்டும் இது எங்கள் முன் வந்த அடுத்த பிரச்னை.....

உடனடியாக skype இல் நின்ற சுபெஷை தொடர்ப்பு கொண்டு ஒரு கவிதைய தெரிவு செய்தது தர முடியுமா என்று கேட்ட பொழுது வந்த பதில்.....

தொடரும்.....

ஏற்கனவே அவனை நடுவராக நியமித்து பாரிய பொறுப்பை வழங்கி இருந்தோம்....இதையும் கேட்டு அவனை தொல்லை படுத்துவாத அவன் என்ன சொல்லுவான் என்ற கேள்விகளுடனே அவனை நாடி இருந்தோம்....கேட்டவுடன் skype இல் வந்தது அவனுடைய முகத்தை பிரதிபலிக்கும் அந்த smiley முகக்குறி........ அதன் பிறகு வந்தது உடன linka அணுப்பு மச்சான் என்று.......எல்லா கவிதைகளையும் வாசித்து விட்டு மச்சி இதில எல்லாமே நல்லா இருக்கு எத தெரிவு செய்றது என்று தெரியல்ல....ஒரு நாள் டைம் தா என்று.......

பின்பு ஒருவாறு வல்வை அக்கா எழுதிய அந்த கவிதைய தெரிவு செய்து....இதை இசை அமைக்கவும் கொஞ்சம் சுலபமா இருக்கும் பாடலுக்கு ஏற்ற வரிகள் என்று சொல்லி அந்த கவிதையை தெரிவு செய்து கொடுத்தான்........

2009 ஆம் ஆண்டு எங்களுடைய யாழ் கள அன்பு உறவு கலைஞன் அவர்கள் நடத்தி இருந்த யாழ் பற்றிய கவிதைகள் போட்டியில் இருந்து சுபேஷ் தெரிவு செய்த அந்த கவிதை இது தான்

[size=5]உறவுக்கான வாழ்த்து மரபைத் தேடாதீர்கள்.

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ் வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஈழக்குயிலினம் தாளயதியுடன்

எண்திக்கிருந்தும் கையிணைக்க,

ஆளும் பலமிக்க ஆய்வுத்துறைகளும்

கால முழுவதும் கோலமிட,

நாளும் வளந்தரு நல்லன பலவும்

மேலும் மேலும் படை நூறுசெய்ய

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வெள்ளை மனங்கொண்ட பிள்ளைக்கூட்டங்கள்

வேடிக்கைக் கதைகள் பேசப்பேச,

கள்ளச்சிரிப்புடன் கன்னித்தமிழும்

துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள,

வல்ல செயலாலே நல்ல உறவுகள்

பொல்லாத பொய்யதை வெல்ல வெல்ல

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

தகவலும், தொழிலும் தளராத நுட்பமும்

தாயக மீட்புக்கு வளமூட்ட,

அகவல் பலதோன்றும் ஆதிப்பொருளாகி

அணைத்து வழி சொல்லும் பெருந்தளமாய்,

முகங்கள் பலசூடும் மேன்மை மாந்தர்கள்

மீட்டும் விரல்கட்கு யாழ்நரம்பாய்

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ்வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே![/size]

நன்றிகள் கூறும் பாடல் பிறந்த கதை இன்னும் வளரும்..........

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதுவரை யாழ் களத்தில் இல்லாத ஒரு சிறப்பு. :icon_idea: [/size]

[size=4]பாடல் நன்றாக இருக்கு பாராட்டுக்கள். [/size]

[size=1][size=4]இதற்காக் ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்கள்.[/size][/size]

[size=1][size=4]தமிழ் உள்ளவரை யாழ் வாழணும்.[/size][/size]

[size=1][size=4]நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.[/size][/size]

[size=1][size=4]இங்குள்ள பல உறவுகளின் எதிர்கால சுபீட்சம் தெரியுது இங்கே.... :icon_idea: [/size][/size]

[size=1][size=4]தொடரட்டும் தங்கள் பணி.[/size][/size]

வாழ்த்துகள் இப்பாடலில் உழைத்த உங்கள் அனைவருக்கும்.

மென்மேலும் வளர்ந்து மேலும் சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்...இந்தப் பாடலை யாழின் முகப்பில் போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..காட்சிகளை வித்தியாசப்படுத்துக் கொள்ளுங்கள்...

Edited by யாயினி

வணக்கம் உறவுகளே எமது கலைச்சொத்துக்களில் ஒன்றான இந்த யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலை இசையாக்கி உறவுகளாகிய உங்களின் சார்பில் இதை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமையும் ,மகிழ்ச்சியும் கொள்கிறேன். சிறக்கும் வகையில் வரிகளை தந்து இந்தப்பாடலை சிறப்புற செய்த மதிப்புக்குரிய சகாறா அக்காவிற்கும் ,தெளிந்த மனத்துடன் ஒருங்கிணைப்பு செய்த சகோதரன் சுண்டலுக்கும் ,பரந்த மனத்துடன் சிந்தனை ஆக்கம் செய்த அண்ணா தமிழ்சிறிக்கும் ,அழகான குரலில் பாடலை பாடி சிறப்புற செய்த என் உடன்பிறவா அண்ணன் நாதன் அவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்

இந்தப்பாடலின் ஒரு பகுதி மட்டுமே இங்கே இப்போ காண்பிக்கப்படும் .......பரிசளிப்பு விழா அன்று முழுமையாக வெளியிடப்படும் .....மீண்டும் நன்றிகள்

பின்னணி குரல் ,படக்கலவை ..............நாதன்

வரிகள் .........................................................வல்வை சகாறா

ஒருங்கிணைப்பு .........................................சுண்டல்

சிந்தனை ,ஆக்கம் .....................................தமிழ்சிறி

இசை .............................................................தமிழ்சூரியன் .

மிக அழகாக உள்ளது, பங்கெடுத்துக் கொண்ட அணைத்து கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!

வணக்கம் உறவுகளே ...................இதுவரை கருத்துக்கூறி எங்களை ஊக்குவித்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த குழுமம் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் இந்த வேளையில் ஓர் மகிழ்ச்சியான செய்தியையும் உங்களுக்கு கூறவிரும்புகிறேன் ...........இந்தப்பாடலை இந்தக்களத்தின் மூத்த உறுப்பினராகிய எங்கள் சாஸ்த்திரி அண்ணா விடியோ வடிவம் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார் ..... விழா அன்று இன்னும் புதுப்பொலிவுடன் இந்தப்பாடல் முழுமையாக உங்கள் கண்முன் காட்சிப்படுத்தப்படும் என்பதை பணிவுடனும் ,மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம் ........நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை அனுப்பி இரண்டுநாட்களில் தமிழ் சூரியன் அண்ணாவிடம் இருந்து வந்த பதில் பாடல் ரெடி கேட்கின்றிர்களா என்று......ஒரு பக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம் அதிர்ச்சி பாடலை கேட்க வேண்டும் என்ற ஆவல் எல்லாம் ஓன்று சேரவே.....பாடலை கேட்கின்றோம்.......அழகான குரல் இனிமையான இசை என்று அமைந்த அந்த பாடல் கேட்க்க கேட்க்க இனிமையாக இருந்தது..... முழு நேர வேலை முழு நேர குடும்ப பொறுப்புகள் என்று தலைக்கு மேல் பொறுப்புகளுடன் இருக்கும் ஒருவர் முன் வந்து இசை அமைத்து பாடலாக்கி தந்ததை எப்பிடி பாராட்டினாலும் தகும்.......

பாடலை பாடிய அன்பு உறவு நாதன் அவர்கள் சுமார் நூற்றி ஐயம்பது கிலோ மீட்டர்கள் பயணம் செய்து அந்த பாடலை பாடிக்கொடுத்தார் நன்றிகள் நாதன் அண்ணா.....

இவற்றை எல்லாம் பின்நின்று மூத்த கள உறவாக வழி நடத்தி ஒருங்கமைத்த.... யாழ் களத்தின்.....

நகைச்சுவை நாயகன் தமிழ் சிறி அண்ணாவிற்கும் நன்றி........

மற்றும் இந்த பாடலுக்காக உழைத்த......

துளசி......

மற்றும் யாழ் களத்தின் இளைய தளபதி ஜீவா அவர்களுக்கும் நன்றி......

இவர்களுடன் பாடல் எடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும்எங்கள் யாழ் களத்தின் மூத்த தளபதி சாத்ஸ் அண்ணாவிற்கும் நன்றிகள்.......

இவற்றை எல்லாம் விட யாழ் களத்தின்........நிர்வகதிர்க்கும் எங்கள் சிரம் தாழ்த்திய நன்றிகள்....

தொடர்ந்து உங்கள் ஆதரவை தந்து உற்சாக படுத்திய கள உறவுகளுக்கு என்றென்றும் நன்றிகள் பல.......:D

எங்கள் அகூதா அண்ணாவிற்கும் எமது நன்றிகள் பல

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடகர்கள் எல்லாம் ஐரோப்பாவிலதான் இருக்கினம்போலை.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கலைஞர்களை அழைத்து நிகழ்சிகள் நடத்தும் அதே நேரம் இப்பிடியான உறவுகளையும் வேறு நாடுகளுக்கு அழைத்து நிகழ்சிகள் நடத்தாலாம் ..... அதற்க்கு முத்த படியாக யாழ் அன்பு அவர்கள் தமிழ் சூரியன் அண்ணாவை swisskku அழைத்திருக்கின்றார் அவர்களுடன் இசை நிகழ்ச்சி வழங்க :D

டிசம்பர் மற்றும் ஜனவரியில் சுவிஸ் இல் நடை பெற உள்ள மாபெரும் இசை நிகழ்வில் கலந்து கொள்ளவே இந்த அழைப்பு விட பட்டிருக்கு......

நாடு விட்டு நாடு வந்த இந்த அழைப்பிற்கு காரணம் www.yarl.com

Edited by SUNDHAL

பாடல் நன்றாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் இன்று தான் இப் பாட‌லைக் கேட்கும் மனநிலை இருந்தது...இதில் பங்கு பற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை சொல்லிக் கொள்கிறேன்

உங்கள் முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள்:

தமிழ்சூரியன், நாதன், சுண்டல், தமிழ்சிறி, துளசி மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும்.

பாடல் பற்றி:

கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஒரு சில இடங்களில் பாடலின் அசைவை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். அச்சொட்டாக இயக்கப்பாடலின் பாணியில் உள்ளது. சாத்திரி கூறியதுபோல் பாடலுக்கான காணொலி யாழ் இணையம் பற்றிய தவறான விம்பத்தை காண்பிக்கிறது போல் தென்படுகின்றது. யாழ் இணையம் யாழ்ப்பாணத்துடன் சம்மந்தப்பட்டது இல்லை, அத்துடன் இங்கு உள்ளவர்கள் த.வி.பும் இல்லை. பல்வேறு விதமான வேறுபட்ட பார்வைகளை உள்ளவர்கள் இங்கு கருத்தாடல் செய்கின்றார்கள். வெவ்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள்; குறிப்பாக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இணையத்தளத்தினூடாக தினமும் ஒருவருடன் ஒருவர் நட்புறவாக (பெரும்பாலான சமயங்களில்) தமது எண்ணங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதே யாழ் இணையத்தின் சிறப்பு.

துளசி தனிமடல் மூலம் இப்பாடலிற்கு காணொலி செய்யுமாறு என்னிடம் கேட்டார். உண்மையில் எனக்கு நேரம் இல்லை. அனிதா அல்லது வலைஞனை கேட்குமாறு சொன்னேன். சாத்திரி தனது பாணியில் சுவாரசியமான ஒரு காணொலியை இந்தப்பாடலிற்கு செய்வார் என்று நினைக்கின்றேன்.

சுண்டல் இந்தப்பாடல் எவ்வாறு உருவாகியது என்று சிறு விளக்கம் கொடுத்திருந்தார். 2007ம் ஆண்டு யாழ் இணையத்தின் எட்டாவது அகவை என்று நினைக்கின்றேன், அதை நினைவுகூறுமுகமாக சில சுவாரசியமான விடயங்களை செய்யமுடியுமா என்று யாழ்பிரியா (முன்னாள் மட்டறுத்துனர்) என்னிடம் கேட்டார். நானும் ஓம் என்று கூறி வெவ்வேறு கருத்தாடல்களை அப்போது ஆரம்பித்தேன். அது அமோக வரவேற்பை பெற்றது. அதில் ஒன்றே வல்வை சகாறாவும் ஆர்வத்துடன் பங்குபற்றி படைத்த இந்தப்பாடல்.

2007 ஆகஸ்டில் "யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 தனது 200,000 ஆவது பதிவை தாண்டியமைக்கான வாழ்த்துப் பாடல் (காணொளி/வீடியோ)!!" என நோர்வேஜியன் எழுதிய பாடலையும், எனது வரிகளையும் கலந்து ஓர் பாடலை டென்மார்க்கில் நின்றபோது இசையமைத்து, பாடி செய்தேன். அதற்கு அனிதா அருமையானதோர் காணொலியை செய்து தந்தார். சில காரணங்களுக்கான ஓர் வருடத்தின் பின் என்று நினைக்கின்றேன். அந்தக்காணொலியையும் அவற்றுடன் சேர்ந்த யாழ் எனது ஒலி, ஒளி படைப்புக்களையும் அகற்றிவிட்டேன். எவரிடமாவது அந்த காணொலி இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள். contact@karumpu.com

மீளவும் யாழில் இசை முயற்சிகள் எனக்கும் மீண்டும் இசை படைப்புக்களில் ஈடுபடும் ஆர்வத்தை தருகின்றது. யாழில் மினக்கடுவதற்கு முன்புபோல் நேரம் இல்லை. ஆனால், நேரம் கிடைக்கும்போது நானும் சங்கமிக்கின்றேன்.

வாழ்த்துகள்! வணக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா அழகான விமர்சனத்துக்கு......

அதே போல் உங்கள் படைப்பில் மீண்டும் ஒரு நகைச்சுவை திரைக்காவியம் உருவாக வேண்டும் :D

யாழ் இணையத்தின் வாழ்த்துப்பாடல் உருவாகுவதற்கு துணைநின்ற அனைத்து கள உறவுகளுக்கும் மனதார வாழ்த்துகின்றேன் .

உங்கள் முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள்:

தமிழ்சூரியன், நாதன், சுண்டல், தமிழ்சிறி, துளசி மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும்.

பாடல் பற்றி:

கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஒரு சில இடங்களில் பாடலின் அசைவை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். அச்சொட்டாக இயக்கப்பாடலின் பாணியில் உள்ளது. சாத்திரி கூறியதுபோல் பாடலுக்கான காணொலி யாழ் இணையம் பற்றிய தவறான விம்பத்தை காண்பிக்கிறது போல் தென்படுகின்றது. யாழ் இணையம் யாழ்ப்பாணத்துடன் சம்மந்தப்பட்டது இல்லை, அத்துடன் இங்கு உள்ளவர்கள் த.வி.பும் இல்லை. பல்வேறு விதமான வேறுபட்ட பார்வைகளை உள்ளவர்கள் இங்கு கருத்தாடல் செய்கின்றார்கள். வெவ்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள்; குறிப்பாக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இணையத்தளத்தினூடாக தினமும் ஒருவருடன் ஒருவர் நட்புறவாக (பெரும்பாலான சமயங்களில்) தமது எண்ணங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதே யாழ் இணையத்தின் சிறப்பு.

துளசி தனிமடல் மூலம் இப்பாடலிற்கு காணொலி செய்யுமாறு என்னிடம் கேட்டார். உண்மையில் எனக்கு நேரம் இல்லை. அனிதா அல்லது வலைஞனை கேட்குமாறு சொன்னேன். சாத்திரி தனது பாணியில் சுவாரசியமான ஒரு காணொலியை இந்தப்பாடலிற்கு செய்வார் என்று நினைக்கின்றேன்.

சுண்டல் இந்தப்பாடல் எவ்வாறு உருவாகியது என்று சிறு விளக்கம் கொடுத்திருந்தார். 2007ம் ஆண்டு யாழ் இணையத்தின் எட்டாவது அகவை என்று நினைக்கின்றேன், அதை நினைவுகூறுமுகமாக சில சுவாரசியமான விடயங்களை செய்யமுடியுமா என்று யாழ்பிரியா (முன்னாள் மட்டறுத்துனர்) என்னிடம் கேட்டார். நானும் ஓம் என்று கூறி வெவ்வேறு கருத்தாடல்களை அப்போது ஆரம்பித்தேன். அது அமோக வரவேற்பை பெற்றது. அதில் ஒன்றே வல்வை சகாறாவும் ஆர்வத்துடன் பங்குபற்றி படைத்த இந்தப்பாடல்.

2007 ஆகஸ்டில் "யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 தனது 200,000 ஆவது பதிவை தாண்டியமைக்கான வாழ்த்துப் பாடல் (காணொளி/வீடியோ)!!" என நோர்வேஜியன் எழுதிய பாடலையும், எனது வரிகளையும் கலந்து ஓர் பாடலை டென்மார்க்கில் நின்றபோது இசையமைத்து, பாடி செய்தேன். அதற்கு அனிதா அருமையானதோர் காணொலியை செய்து தந்தார். சில காரணங்களுக்கான ஓர் வருடத்தின் பின் என்று நினைக்கின்றேன். அந்தக்காணொலியையும் அவற்றுடன் சேர்ந்த யாழ் எனது ஒலி, ஒளி படைப்புக்களையும் அகற்றிவிட்டேன். எவரிடமாவது அந்த காணொலி இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள். contact@karumpu.com

மீளவும் யாழில் இசை முயற்சிகள் எனக்கும் மீண்டும் இசை படைப்புக்களில் ஈடுபடும் ஆர்வத்தை தருகின்றது. யாழில் மினக்கடுவதற்கு முன்புபோல் நேரம் இல்லை. ஆனால், நேரம் கிடைக்கும்போது நானும் சங்கமிக்கின்றேன்.

வாழ்த்துகள்! வணக்கம்!

நன்றி உங்கள் யதார்த்தமான விமர்சனத்திற்கு ...............உண்மையில் இந்த விமர்சனங்கள் மூலமாக எம் படைப்புக்களின் தரத்தை இன்னும் பல படிகள் உயர்த்த செய்யலாம் .............நீங்கள் குறிப்பிட்டபடி தவறான விம்பம் நிச்சயம் சாஸ்திரி அண்ணாவால் மாற்றி அமைக்கப்படும் என்பதை நான் எதிர் பார்க்கிறேன் ............அவருடன் நான் நேரடி தொடர்பில் [skype ] இருக்கிறேன் ..............நாம் அனைவரும் ஒன்றிணைந்து குறைபாடுகளை களையும் பொது எம் கலை படைப்புக்களை நிச்சயம் தரமானதாக வழங்கமுடியும் .......பாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல் அந்த அசைவுகளை கொடுப்பதற்கு என்னால் ஆனா முழு முயற்சியையும் செய்கிறேன் .............மீண்டும் மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும் அக்கறைக்கும் ...............எம் இசையையும்,கலையையும் மேலும் மேலும் வளர்த்து நாமே அதை ஆள்வோம் .............நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.