Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் இங்கு சுகம் நீ அங்கு?

Featured Replies

“காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்” சயிக்கிளில் முன்னால் பாரில் இருந்து எம்ஜிஆர் பாடிக்கொண்டு வாறார், நான் முக்கி முக்கி கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி றோட்டில சயிக்கிளை உழக்குகின்றன்.

“டேய் கடைசி மேடு வரேக்கையாவது டபிள் பரல் போடடா “

“சொறி மச்சான், அதை கேட்டுவாங்கிப் போனால் அந்த கன்னி என்னவானாள்” எம்சியின் பாட்டு தொடருது.

லண்டன் சிட்டியை தாண்டி TRAIN READING நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. எம்சியை பத்துவருடங்களுக்கு பின் சந்திக்க போய்கொண்டிருக்கின்றேன். எம்சிக்கு என்ன நடந்தது?.

ஊரில என்னோட திரிந்தவர்களுக்குள் நேர்மை ,நீதி என்று எப்பவும் நிப்பவன் எம்சிதான்.வலிய வம்பிற்கு போக மாட்டன் வந்தால் விடமாட்டான்.இதனால் ஆனந்தன் என்ற அவனது பெயர் ஊரில் எம்ஜிஆர் ஆகிவிட்ட்டிருந்தது .பின்னர் நண்பர் வட்டத்திற்குள் இன்னும் சுருங்கி எம்சி ஆகி விட்டிருந்தது.

அவனுக்கு நாலு அண்ணன்மார்கள்,ஒரு அக்கா. அண்ணன்கள்,அக்கா எல்லோரும் எழுபதுகளிலேயே லண்டன் அவுஸ்திரேலியா என்று போய்விட்டார்கள் . தகப்பனில்லாத எம்சி அம்மாவின் செல்லம்.காசு அந்த மாதிரி கையில பிழங்கும் ஆனால் அள்ளி அள்ளி எல்லோருக்கும் கொடுத்துவிடுவான்.வெளிநாட்டு உடுப்புகள் வகை தொகையாக வைத்திருக்கும் எம்சி எல்லாத்தையும் தானம் கொடுத்துவிட்டு தான் ஒரு டெனிம் பான்சும், லெய்டன் கார்மண்ட்ஸ் வெள்ளை ரீ சேர்ட்டுடனும் தான் திரிவான்.

ஒரு சனிகிழமை காலை முத்துகுமாரசாமியிடம் ஆங்கில டியுசன் முடிய நானும் எம்சியும் வெளியில் வருகின்றோம் எங்களை விட வயது கூடிய மூன்று பெடியங்கள் ஒழுங்கை முடிவில் நிற்கின்றார்கள்.அதில் ஒருவரை எனக்கு தெரியும்,அவர் அப்போது மத்திய கல்லூரியில் கிரிகெட் டீம் கப்டின்.மற்றவர்கள் அவர் நண்பர்களாக இருக்க வேண்டும்,எம்சி வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டு பெட்டையை சுழட்டவந்த இடத்தில் எம்சி விட்ட நக்கல் தாங்க இயலாமல் இப்ப எம்சியை அடிக்கவந்து நிக்கினம் .

“உனக்கு ஒன்றும் தெரியாத மாதிரி சயிக்கிளை விடு.கொப்பியையும் நீ பிடி”

எம்சி ஏதோ பிளான் போட்டுவிட்டான்று எனக்கு விளங்கிவிட்டது.என்னை மாட்டிவிட்டு ஒருநாளும் ஓடமாட்டான் என்பதும் எனக்கு தெரியும். நாங்கள் அவர்கள் அருகில் போக கப்டன் தான் வந்து சயிக்கில் கான்டிலை பிடித்து நிற்பாட்டினார்.மற்ற இருவரும் அருகில் வேறு வருகின்றார்கள்.எம்சி ஒரு பதட்டமில்லாமல் இறங்கி “என்ன ஏதும் பிரச்சனையோ?” என்று கேட்க,கப்டன் எம்சியாரின் சேட்டைபிடித்து “உங்கட ஊரென்றால் சண்டித்தனமோ” எண்டார்.

எம்சி சயிக்கிளால் குதித்து இறங்கி ஒரு உள்மூச்சு வாங்கி கையை ஓங்கி பின்புறம் இழுத்து ஒரு வேகம்எடுத்து கப்டனின் முகத்தில் ஒரு குத்து, மூக்கு உடைந்து இரத்தம் ஒழுகுது.கப்டன் கையில் இரத்தத்தை வாங்கியபடி “ஐயோ இரத்தம்” என்கின்றார்.மற்ற இருவரும் சிலுப்பர்களையும் கழட்டிவிட்டு ஓட்டமெடுக்கின்றார்கள் டியுசன் வாத்தி முத்துகுமாரசாமி அதற்குள் யாரோ நாங்கள் அடிபடும் சேதி சொல்லி அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.கப்டன் தன்ரை சொந்தக்காரன் என்று வாத்தி எம்சியை பேசுகின்றார்.”அப்ப வீட்டை கூட்டிக்கொண்டு போய் பாண்டேஜ் போட்டு விடுங்கோ” என்றபடி சயிக்கிளில் எம்சி ஏறி உட்காந்து “எடு நாங்கள் போவம்” என்றான்.அதன் பிறகு நான் எம் ஜி ஆரின் படங்கள் பார்க்கும் போது தான் தெரிந்தது அந்த குத்து எங்கிருந்து வந்தது என்று.

எம்சியின் ஒரு அண்ணர் லண்டனில் இருந்து வந்து அவருக்கு கல்யாணம் விமர்சையாக நடைபெற்று நாலாம் சடங்கு கொட்டடியில் பொம்பிளை வீட்டில் நடைபெற்றது.நாங்கள் எல்லோரும் சுப்பிமணியபுரம் பட நாயகர்கள் ஸ்டைலில் தலையிழுப்பும்,கீழுக்கு 22,24,26 இஞ்சியில் ஆழுக்கு ஆள் போட்டியாக பெல்பொட்டம். எம்சி வழக்கம் போல் டெனிம் பான்ஸ், மேலுக்கு வழக்கத்திற்கு மாறாக ஒரு சிவப்பு சேட்,அண்ணர் லண்டனால் கொண்டுவந்த சன்கிளாசை வேறு இரவென்றும் பாராமல் அணிந்திருந்தான் .பொம்பிளைக்கு இரண்டு மூன்று தங்கைமார்கள் அதைவிட அவர்கள் நண்பிகள் பலர் வேறு வந்திருந்தார்கள்.எல்லாம் யாழ் கொன்வென்டில் படிப்பவர்கள்.எங்களை விட கொஞ்சம் மொடேர்ணாக வேறு இருந்தார்கள்.நாங்கள் எல்லோருமே தமிழ் பட கதாநாயர்களாகி ஆளாளுக்கு ஆள் தெரிந்த ஆங்கிலத்தை இடைக்கிடை கலந்து லில்லியும் தொம்சனும் இப்படி போலிங்கை போட்டும் ஆஸியால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டதே,விலங்கியலில் ஜெனடிக்ஸ் சரியான சுகம் ,அபாவின் மம்மா மியா சுப்பர்பாட்டு ,சாள்ஸ் புரோன்சன் ஒரு ரெட் இந்தியன் என்று தெரிந்ததுகளை எல்லாம் அள்ளிவிட தொடங்கிவிட்டோம்.இதற்குள் எம்சியின் அண்ணர் வந்து ஒரு வெளிநாட்டு போத்தலை வேறு நீட்டிவிட்டு போய்விட்டார்.ஒரு பெக் உள்ளுக்குள் போனதும் எம்சி “மாசிலா உண்மை காதலே” என தொடங்கிவிட்டான் நாங்களும் நினைத்தாலே இனிக்கும் கமல் ரஜனி லேவலிலை ஆட்டம் போட தொடங்கிவிட்டோம் .எம்சி உண்மையில் மிக நன்றாக பாடுவான்.அன்று புதிய பழைய பாடல்கள் சிறினிவாசின் “நிலவே என்னிடம்” ,A.M ராஜாவின்”காலையும் நீயே மாலையும் நீயே” ஜெயராமனின் “விண்ணோடும் முகிலோடும்” டி எம் எஸ் இன் “அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை “ஜேசுதாசின் “தங்க தோணியிலே” என்று பாடித்தள்ளி கீரோவாகிவிட்டிருந்தான்.

அடுத்த நாள் ஞாயிறு விடிய நாங்கள் அன்று பின்னேரம் ஆடப்போகும் கிரிக்கெட் மாட்ச்ற்கு ஆட்களுக்கு சொல்லிக்கொண்டு வருகின்றோம் எம்சி சொல்லுகின்றான் தான் கொட்டடிக்கு அண்ணரிடம் போகவேண்டுமாம் இன்று மட்சிற்கு வரமாட்டன் என்கின்றான் எமக்கு தெரியும் இவன் அண்ணனை சாட்டி நீ என்னத்துக்கோ தான் போகின்றான் என்று. .அண்ணரும் அண்ணியும் லண்டன் போன பின்பும் சன்கிளாசும் சிவப்பு சேட்டுடனும் எம்சி கொட்டடி போவது நிற்கவில்லை.

எம்சிக்கு மச்சாளுடன் காதல். எங்கள் ஒருவரையும் வைத்து ஒருநாளும் சயிக்கில் உழக்காத எம்சி இப்ப ஆள்மாறி ஆள்மாறி வைத்து கொன்வென்டிற்கு சயிக்கிளை உழக்கி கொண்டு போய் சிவப்பு ரையுடனும் வெள்ளை யூனிபோமுடனும் வரும் நிம்பியை (நிர்மலா) பார்த்து கதைத்துவிட்டு வாறான்.

A/L முடிய எல்லோரும் போல் பல்கலைக்கழகம் போகாத எங்கட செற்றும் வெளிநாடு போக தயாரானது. லண்டன் போவது எண்பதுகளின் தொடக்கத்தில் மிக இறுக்கமாக இருந்தது .எம்சி யின் லண்டனுக்கான விசா இரண்டுதரம் நிராகரித்துவிட்டார்கள்.எனது நண்பர்கள் .எல்லோரும் ஜெர்மனி வெளிக்கிட எம்சியும் ஜெர்மன் போய் சேர்ந்துவிட்டான்.லண்டனில் இருந்து பிரான்ஸ் ஊடாக லண்டன் கொண்டு போக வந்த எம்சியின் அண்ணரின் முயற்சியும் தோல்வியில் முடிந்ததாக அறிந்தேன்.

பின்னர் எம்சியின் காதலி நிம்மி கனடாவிற்கு கல்யாணம் செய்து போய்விட்டதாக அறிந்தேன்.எம்சியின் அண்ணர் ,அண்ணி இருவருக்கும் அந்த கலியாணத்தில் விருப்பமில்லை என்று எம்சி சொல்லி மனவருதப்பட்டான் .நிம்மி கூட எம்சியை உண்மையில் காதலித்ததாக எம்சி சொல்லித்திரிந்தான் ஒழிய உண்மை நிலை தெரியாது.மச்சான் என்று மாத்திரம் கதைக்க எம்சி காதல் என்று படம் காட்டியிருக்கலாம்.

நானும் பின்னர் எனது அலுவலகளில் பிசியாக ஜெர்மன் நண்பர்களுடனான தொடர்புகள் எப்போதைக்கு ஒருக்கா என்றாகிவிட்டது. 83 கலவரம் பின்னர் இயக்கம், இந்தியா என்று அவர்களுடன் முழு தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

நான் லண்டன் திரும்ப வந்ததும் பழைய ஜெர்மன் நண்பர்கள் மூன்று பேர்கள் எம்சி, ராஜு, குலேன் லண்டனுக்கு வந்துவிட்டதாக அறிந்தேன். அடுத்தநாளே வெளிக்கிட்டு ஈஸ்ட்காமிற்கு ராஜுவிடம் போனேன்.எம்சி வசதியாகவும் கஷ்டம் தெரியாமல் வளர்ந்ததாலும் வேலைக்கு ஒருகாலமும் போகாமல் சோசல் பணத்தில் இருந்தும் தாயிடம் படிப்தாக பொய் சொல்லி அடிக்கடி ஊரில் இருந்து காசும் எடுத்து ஜெர்மனில் நகரம் நகரமாக சுற்றி அடித்ததாகவும் அதைவிட காதலும் கைவிட்டதேன்று அனைத்து கேட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகி சினிமா பாட்டும், அதைவிட போதை அதிகம் ஏற யாரென்று பார்க்காமல் கை வேறு வைக்க தொடங்கியதால் ஒவ்வொருவராக அனைவரும் எம்சியை வெறுக்க தொடங்கிவிட்டார்களாம்.

இதனால் தனித்து ஒதுங்கியிருந்த எம்சியை இலங்கை கலவரத்துடன் லண்டனில் இருந்து அண்ணர் வந்து இலகுவாக லண்டன் கூட்டி சென்றுவிட்டார்.ஆனால் எம்சி பின்னரும் மாறவில்லை.மார்க்கூசில் இருந்து நண்பர்களுடன் கிரிகெட் பார்க்க போன எம்சி அங்கு வந்த ஒருவரின் (பின்னர் இந்தியா போய் இரு தமிழ்படங்கள் எடுத்தவர்) கதை பிடிக்கவில்லை என்று தம்பி இரத்தத்தை கப்பில அள்ளும் என்று மூஞ்சையை பெயர்த்துவிட்டதாம். அன்றுடன் நண்பர்கள் எம்சிக்கு குட் பை சொல்லிவிட்டார்கள்.

இப்போ எம்சி வேறொரு அண்ணனுடன் இருப்பதாக ராஜு சொன்னான் .எவருடனும் ஒருவருடத்திற்கு மேல் தொடர்பு இல்லையாம். நான் ஒருவாறு அந்த அண்ணனின் தொலைபேசி நம்பர் எடுத்து தொடர்புகொண்டு கேட்டத்தற்கு அவன் இப்ப என்னோடு இல்லை என்றார் .தொலைபேசி இலக்கம் கேட்டேன் அதுவும் தன்னிடம் இல்லை என்றுவிட்டு பின்னர் ஒரு விலாசம் தந்தார்.அது லண்டனுக்கு வெளியே READING இல் இருக்கும் ஒரு YMCA யின் விலாசம். நான் அங்குதான் இப்போ ரெயினில் போய்க்கொண்டிருக்கின்றேன்.

(தொடருவோமல்ல))

குறிப்பு--மன அழுத்தைதை பற்றி வாசித்தால் வந்த அழுத்தம் இது.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

(தொடருவோமல்ல))

வாசிப்போமல்ல :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றாக உள்ளது.விரைவில் தொடருங்கள் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாப் போல, எப்பவாவது இருந்திட்டு,ஏதாவது எழுதுவீங்கள்!

அப்படியே, யதார்த்தமாக இருக்கும்! தொடருங்கள்!!!

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜுன்.

  • கருத்துக்கள உறவுகள்

(தொடருவோமல்ல))

நாங்களும் வாசிப்போமில்லலலலலலலலலலலலல......

.நாங்கள் எல்லோருமே தமிழ் பட கதாநாயர்களாகி ஆளாளுக்கு ஆள்

தெரிந்த ஆங்கிலத்தை இடைக்கிடை கலந்து லில்லியும் தொம்சனும் இப்படி போலிங்கை போட்டும் ஆஸியால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டதே,விலங்கியலில் ஜெனடிக்ஸ் சரியான சுகம் ,அபாவின் மம்மா மியா சுப்பர்பாட்டு ,சாள்ஸ் புரோன்சன் ஒரு ரெட் இந்தியன் என்று தெரிந்ததுகளை எல்லாம் அள்ளிவிட தொடங்கிவிட்டோம்.

நீங்களும் அப்படியே மாறாமல் இருக்கின்றீர்கள்.......... :D:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாசிச்சனான்......புள்ளி கிள்ளி ஒண்டும் குத்தேல்லை....ஏனெண்டால் அது உங்களுக்கு பிடிக்காதவிசயம்.....

எனக்கு இந்த அர்ஜுனைத்தான் பிடிக்கும் . கதையை கதைமாதிரியல்லோ எழுதிறியள் . தொடருங்கோ நானும் தொடருறன் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்குது அண்ணா தொடருங்கோ...உங்கட செட் நண்பர்கள் அநேகமானோர் நல்ல வசதியான ஆட்கள் போல இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

.உங்கட செட் நண்பர்கள் அநேகமானோர் நல்ல வசதியான ஆட்கள் போல இருக்குது

எல்லொரும் நல்லாய் படிச்ச செட் அதுதான் அப்படி.. :D....என்னதான் சொன்னாலும் தமிழன் அதுவும் யாழ்ப்பாணத்தான் அவனின் மூலதனமே கல்விதானே

  • தொடங்கியவர்

பின்னூட்டம் விட்ட உறவுகளுக்கு நன்றிகள் .

கு.சா அண்ணை ,பச்சை புள்ளி ஒருவரை ஊக்கிவிற்பதற்கு நிச்சயம் உதவும் ஒரு விடயம். ஆனால் எனக்கு பல விடயங்களில் அது பாதகமாகபட்டதால் நம்பிக்கையை இழந்துவிட்டேன். சமூக சாரளத்தில் முடிந்தால் அது பற்றி எழுதுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு அர்ஜுன் அண்ணா...தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் நடை புரிய நிமிடமெடுத்தாலும், மலரும் நினைவுகள் ரொம்ப நல்லா இருக்கு ஏனெனில் அக்கால இளமைப் பருவம் எம்முடைய கிராமிய வாழ்கையை ஏறக்குறைய ஒத்திருக்கிறது.

'கொட்டடி' எனபது யாழில் ஒரு இடமா? ஏனெனில் கிட்டடி, கொட்டடி, சின்னனன் போன்ற சொற்பதங்கள் எம் பாவனைக்கு புதுசு.

நன்றி.

'கொட்டடி' எனபது யாழில் ஒரு இடமா? ஏனெனில் கிட்டடி, கொட்டடி, சின்னனன் போன்ற சொற்பதங்கள் எம் பாவனைக்கு புதுசு.

நன்றி.

கிட்டடி - அண்மையில்

கொட்டடி - யாழில் ஒரு இடம் (தமிழ் சிறி போன்ற ஆட்களிடம் அர்த்தம் கேட்டீர்கள் என்றால் தொலைந்தீர்கள் :D )

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிச்சம்??????

அதுதானே .தொருரட்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடி - அண்மையில்

கொட்டடி - யாழில் ஒரு இடம் (தமிழ் சிறி போன்ற ஆட்களிடம் அர்த்தம் கேட்டீர்கள் என்றால் தொலைந்தீர்கள் :D )

:lol:  :lol:

 

 

சின்னனன் போன்ற சொற்பதங்கள் எம் பாவனைக்கு புதுசு .

 

சின்னன் என நினைக்கிறேன். சிறியது என்று அர்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.