Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரில் நான் - பயணம் தொடர்கிறது

Featured Replies

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து சொந்த ஊரான குரும்பசிட்டியில் என்னுடைய பாதம் படுகிறது. அது ஒரு பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பான நிகழ்வு.

வீடுகளும், தெருக்களும், கோவில்களும், கடைகளும், மனிதர்களும் இன்னபிறவும் நிறைந்த அந்த அழகிய கிராமம் அழிவுண்டு போய் கிடந்தது. இருபது ஆண்டுகளாக குரும்பசிட்டி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. மனிதர்களின் நடமாட்டமே இல்லாத பேய்களின் ஊராக அது இருந்தது.

குரும்பசிட்டிக்கு திரும்புவது அந்த கிராமத்து மக்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று. இந்தக் கனவு ஈடேறாமலேயே இறந்து போனவர்கள் பலர்.

எனக்கும் அந்தக் கனவு என்றைக்கும் இருந்தது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவை கைப்பற்றிய பின்புதான் அந்தக் கனவு கைகூடும் என்று உறுதியாக நம்பியிருந்தேன். பலாலி வீழ்ந்தால் அதன் அயற் கிராமமான குரும்பசிட்டியும் தானாகவே விடுவிக்கப்படும்.

………..

அப்பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் என்னுடைய ஊரை சேர்ந்த நண்பனுடன் இது பற்றி நான் நடத்திய உரையாடல் நன்றாக நினைவிருக்கிறது.

„முகமாலையில் நிற்கின்ற புலிகள் கிளாலியை உடைத்து, பின் சாவகச்சேரியை பிடித்து, பின்பு யாழ்ப்பாணத்தில் புகுந்து, இப்படியே பலாலி வரை வந்து குரும்பசிட்டியை மீட்பது என்றால் இலகுவான காரியமா? இதெல்லாம் இப்போதைக்கு நடக்காது“ என்றான் என் நண்பன்

குரும்பசிட்டியில் இருந்த பேருந்தில் முகமாலைக்கு போகின்ற வழியை கணக்கில் கொண்டு அவன் கேட்டான். „இல்லை, அப்படி நடக்காது, புலிகள் வல்வெட்டித்துறையில் அதிரடியாக தரையிறங்கி, சதுப்பு நிலங்களையும் , வெளிகளையும் கடந்து பலாலியை கிழக்குப் பக்கம் இருந்து தாக்குவார்கள், அப்படியே அனைத்தும் விடுவிக்கப்படும்“ என்று ஒரு வரைபடத்தை அவன் முன் விரித்து வைத்து விளங்கப்படுத்தினேன்.

பின்பு ஒரு நாள,; சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட அடுத்த நாள், வல்வெட்டித்துறைக் கடற்கரையில் புலிகளின் சில படகுகள் தென்பட்டன. புலிகள் தரையிறங்கி விட்டார்கள் என்ற செய்தி கூட சில மட்டங்களில் பரவியது. படையினர் தாங்கிகளை எல்லாம் கடற்கரைக்கு கொண்டு வந்து தாக்குதல் நடத்தினார்கள். எறிகணைகள் அகோரமாக வீழ்ந்தன.

என்னுடைய நண்பன் எனக்கு தொலைபேசி எடுத்தான். „நீ சொன்னது சரி போல்தான் இருக்கிறது“ என்றான். நான் „தெரியவில்லை, பார்ப்போம்“ என்றேன். அதற்கு முன்பு நடந்த சண்டைகள் சில பாடங்களை எனக்கு சொல்லித் தந்திருந்தன.

………..

இப்பொழுது ஓமந்தையில் இராணுவத்திடம் படிவம் நிரப்பிக் கொடுத்து அவர்களின் அனுமதியோடு என்னுடைய ஊருக்கு வந்து நிற்கிறேன். ஊரின் ஒரு பதினைந்து வீதமான பகுதியைத்தான் விடுவித்திருந்தார்கள். அதைப் பார்ப்பதற்காகத்தான் வந்து நிற்கிறேன்.

ஏனோ தெரியவில்லை. அப்பொழுதும் விடுவிப்பார்கள் என்றுதான் நம்பினேன். இப்பொழுதும் விடுவிக்கப்பட்டிருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.

வீடுகளும் வீதிகளும் தகர்க்கப்பட்டு, மிஞ்சிய வீடுகளுக்கு நடுவால் மரங்களும் முளைத்து நிற்க, அடையாளம் அழிக்கப்பட்டிருந்த அந்த கிராமத்தில் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய என்னுடைய சுவடுகளை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகவே இருந்தது.

நாங்கள் வசித்த வீடு வேறு இன்னும் விடுவிக்கப்படாத பகுதிக்குள்ளேயே இருந்தது.

நான் நின்ற இடத்தில் இருந்து ஒரு இருபது மீட்டர்கள் தள்ளி இராணுவத்தின் தடுப்பணை இருந்தது. அதற்குப் பின்னால் நான் படித்த பாடசாலையின் சேதமடைந்த கட்டிடங்கள் தெரிந்தன. எப்படியாவது அந்தப் பாடசாலைக்குள் சென்று பார்த்து விட வேண்டும் என்று மனம் துடித்தது.

தடுப்பணையில் இருந்த காவலரணில் நின்ற படையினனிடம் போனேன். அவனும் மிக இள வயதினனாக, ஒரு சிறுவனைப் போன்ற தோற்றத்துடனேயே இருந்தான். „அந்தப் பாடசாலையில் நான் முன்பு படித்திருக்கிறேன், போய்ப் பார்க்க விரும்புகிறேன், முடியுமா?“ என்று ஆங்கிலத்தில் அவனிடம் கேட்டேன். அவன் எதுவும் விளங்காது முழுpத்தான். மிக இலகுவான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி மீண்டும் கேட்டேன். அவனுக்கு அதுவும் விளங்கவில்லை.

நான் படையினனுடன் ஏதோ உரையாடிக் கொண்டிருப்பதை கவனித்த எங்களின் வாகன ஓட்டுனர் அங்கே வந்தார். நான் சொன்னதை சிங்களத்தில் சொன்னார். அவன் „எங்கே பாடசாலை இருக்கிறது“ என்று திருப்பிக் கேட்டான். அவனுக்கு பின்னால் இருந்த பாடசாலையை நான் காட்டினேன். அப்பொழுதுதான் அவனுக்கு அது ஒரு பாடசாலை என்பது தெரிந்தது.

„அங்கே கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படவில்லை, அதனால் போக முடியாது“ என்று அவன் சொன்னான். அவன் பொய் சொல்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் என்னுடைய விருப்பத்தை ஒரு ஆண்டு ஒத்திப் போட்டேன்.

ஆயினும் எனக்கு இரண்டு சந்தேகங்கள் வந்தன. ஒரு ஆங்கிலச் சொல் கூடத் தெரியாமல் ஒரு படையினன் இருப்பானா என்பது ஒன்று. „தெற்கில் இளநீர் வெட்டிக் கொண்டிருந்தவர்களை படையில் சேர்த்தால் அப்படித்தான் இருப்பார்கள்“ என்று வாகன ஓட்டுனர் நக்கலாகச் சொன்னார்.

அடுத்த சந்தேகம் முக்கியமானது. தனக்குப் பின்னால் இருப்பது ஒரு பாடசாலை என்று தெரியாமலா இத்தனை காலமும் இங்கே இருக்கிறான் என்பது. இந்தச் சந்தேகத்தை ஊரவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

………..

ஊரவர்கள் கோயில் கட்டுகின்ற பணிக்கான ஆரம்ப வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். குரும்பசிட்டி அம்மன் கோயில் பிரபல்யமான ஒரு கோயில். முதலாம் ஈழப் போரின் போது 1986இல் அந்தக் கோயில் படையினரால் முற்று முழுதாக தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. பின்பு இந்தியப் படையினரின் காலத்தில் புதிதாக கட்டும் வேலைகள் ஆரம்பமாகின. கட்டி முடிப்பதற்குள் ஈழப் போர் இரண்டில் மீண்டும் இடித்து அழிக்கப்பட்டது.

இப்படி பல அழிவுகளை சந்தித்த அந்தக் கோயிலை மீண்டும் கட்ட வேண்டும் என்பதில் ஊரவர்கள் உறுதியாக நின்றார்கள். ஆனால் அந்த கோயில் வளாகத்தில் ஒரு சிறு பகுதியே அன்றைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

கருவறையில் இருந்த அம்மன் சிலை பழுதடையாமல் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இதை ஒரு தெய்வாதீனமான செயல் என்றே அங்கே பலர் நம்பினார்கள். விடுவிக்கப்பட்ட கோயில் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு மடத்தில் அந்தச் சிலையை வைத்து, அதைக் கோயிலாக்கி வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன.

விரைவில் கோயில் இருந்த முழப் பகுதியும் விடுவிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் கோயிலுக்கான நிதி சேகரித்தல்கள் ஆரம்பமாகி இருந்தன.

நல்ல வேளையாக என்னிடம் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் மறுத்திருக்க மாட்டேன்.

அந்த ஊரின் மிகுதிப் பகுதியையும் விடுவிக்க வேண்டும் என்றால், இப்பொழுது விடுவிக்கப்பட் பகுதிகளில் மக்கள் குடியமர வேண்டும். அதைக் கொண்டுதான் மற்றயை பகுதிகளையும் கேட்க வேண்டும். ஆனால் மக்கள் ஊரைப் பார்த்துச் சென்றார்களே தவிர, அங்கேயே இருப்பதற்கு தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கோயில் இருப்பதன் ஊடாகவும், அதற்கு தொடர்ந்தும் மக்கள் வந்து செல்வதன் ஊடாகவுமே, அப்பகுதி மக்கள் நடமாட்டம் உள்ளதாக மாறும், அத்துடன் மக்களும் அங்கே வந்து தங்குவர், அப்படியே மிகுதி இடத்தையும் கேட்கலாம் என்றுதான் என்னுடைய பகுத்தறிவு மூளை கணக்குப் போட்டது.

………..

ஊரவர்களோடு பேசிக் கொண்டிருந்த பொழுது தனக்குப் பின்னால் ஒரு பாடசாலை இருக்கிறது என்பதை அறியாமல் நின்றிருந்த படையினன் பற்றி விசாரித்தேன். ஒரு காரணத்தோடு புதிதாக அனுப்பப்பட்ட படையினர்களில் ஒருவன் அவன் என்பதை அவர்கள் விளக்கினார்கள்.

அதுவரை யாழ்ப்பாணத்தில் நின்ற படையினர்களில் பெரும்பாலானவர்கள் மக்களோடு நீண்ட காலமாக பழகி விட்டிருந்தார்கள். தமிழையும் ஓரளவு பேசுவதற்கு பழகியிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா அரசு இவர்களை எல்லாம் வேறு இடங்களுக்கு அனுப்பி விட்டு, புதிய தமிழ் தெரியாத படையினரைக் கொண்டு வந்து இறக்கியிருந்தது.

இந்தப் புதிய படையினரின் உதவியோடு யாழ் குடாவுக்குள்ளும் கிறீஸ் பூதம் வரப் போகிறது என்கின்ற செய்தியை அந்த ஊரவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

தொடருவேன்…

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோயில் இருப்பதன் ஊடாகவும், அதற்கு தொடர்ந்தும் மக்கள் வந்து செல்வதன் ஊடாகவுமே, அப்பகுதி மக்கள் நடமாட்டம் உள்ளதாக மாறும், அத்துடன் மக்களும் அங்கே வந்து தங்குவர், அப்படியே மிகுதி இடத்தையும் கேட்கலாம் என்றுதான் என்னுடைய பகுத்தறிவு மூளை கணக்குப் போட்டது.

பகுத்தறிவு மூளைக்கு கணக்குப் போட பகுத்தறிவுக்கு எட்டாத சாமியும் அது சார்ந்த கோவிலும் தேவைப்படுகுது..!

இதையே தான் இங்கு பக்கம் பக்கமாக எழுதிய போது விதண்டாவாதம் பெரியாரிசும் போதித்தவர்களுக்கு.. ஊர் போய் வந்ததும்.. ஞானோதயம் பிறந்திருக்கிறது போலும்..!

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது கடவுள் நம்பிக்கையில் அல்ல.. சமூக அக்கறையில் என்ற எண்ணத்தையாவது இவர்கள் இப்போ புரிந்து கொண்டிருப்பார்கள்..! :):icon_idea::lol:

உங்கள் பயணக்கதை மீண்டும் ஆரம்பமாகியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் சபேசன் . தொடுருங்கள் ருசிக்க நாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

"நல்ல வேளையாக என்னிடம் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் மறுத்திருக்க மாட்டேன்"

அதாவது இங்கே நீங்க சொல்ல வருவது?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றாக உள்ளது.தொடருங்கள்.[/size]

  • தொடங்கியவர்

எனக்கு கோயில் தேவையில்லை. ஆனால் அங்கே உள்ள மக்கள் கோயில் கட்டிய பின்புதான் ஊரில் குடியேறவே வருகிறார்கள். எனக்கு இது மூடத்தனமாக தெரிந்தாலும், கடவுள் கோயில் மறுப்பு பிரச்சாரம் செய்வதற்கு இது ஏற்ற நேரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். பகுத்தறிவு என்பது இதுதான்.

கோயில் மறுப்பா, கோயில் மூலமான நிலமீட்பா என்றால் ஒரு பகுத்தறிவுவாதி எதை முடிவு செய்வான்? பகுத்தறிவு என்பது ஒரு மதநூல் அல்ல. எழுதி வைத்து அதன்படி நடப்பதற்கு. இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றபடி பகுத்தறிந்து மக்களுக்கு தேவையானதையே நாம் செய்வோம்.

கோயில் கட்டி முடித்து சனமும் குடியேறி ஒரு நிலை ஏற்பட்டதன் பின்பு நிச்சயமாக "ஆலயங்களில் தமிழில் வழிபாடு" செய் என்று ஆரம்பிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கோயில் தேவையில்லை. ஆனால் அங்கே உள்ள மக்கள் கோயில் கட்டிய பின்புதான் ஊரில் குடியேறவே வருகிறார்கள். எனக்கு இது மூடத்தனமாக தெரிந்தாலும், கடவுள் கோயில் மறுப்பு பிரச்சாரம் செய்வதற்கு இது ஏற்ற நேரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். பகுத்தறிவு என்பது இதுதான்.

கோயில் மறுப்பா, கோயில் மூலமான நிலமீட்பா என்றால் ஒரு பகுத்தறிவுவாதி எதை முடிவு செய்வான்? பகுத்தறிவு என்பது ஒரு மதநூல் அல்ல. எழுதி வைத்து அதன்படி நடப்பதற்கு. இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றபடி பகுத்தறிந்து மக்களுக்கு தேவையானதையே நாம் செய்வோம்.

கோயில் கட்டி முடித்து சனமும் குடியேறி ஒரு நிலை ஏற்பட்டதன் பின்பு நிச்சயமாக "ஆலயங்களில் தமிழில் வழிபாடு" செய் என்று ஆரம்பிப்போம்.

நல்ல முன்னேற்றம். ஆலயங்களே வேண்டாம் என்ற "பகுத்தறிவு" இப்போது மக்கள் குடியேற ஆலயங்கள் வேண்டும் என்று உணர்கிறது. நாளை அது தமிழில் பூசை செய்யவும் கோரும்..! அந்த வகையில் "பகுத்தறிவு"க்குத் தெரிகிறது ஆலயங்கள் என்பது கடவுள் மறுப்புக்கு அப்பால் மக்களை கட்டிப்போடுகின்ற சமூகக் காரணிகள் என்று. இதைத்தான் நாங்களும் மனிதர்களாக மனிதர்களுக்கே இயல்பான பகுத்தறிவோடு சொன்னோம்.. சொல்கிறோம்..!

ஆறுமுகநாவலர் போன்றவர்கள் இதேபோன்ற ஒரு நெருக்கடி காலத்தில் தான் சைவத்தினூடு தமிழ் வளர்த்து அவை தமிழர் நிலங்களில் தழைத்தோங்க உதவினார்கள். அங்கு சமூக நோக்கமே அதிகம் முன்னிருந்தது. அதை பக்கம் பக்கமாக இங்கு எழுதிய போதெல்லாம்.. அதை மறுத்தவர்கள் இன்று ஆறுமுக நாவலரின் அதே பாணியில்.. பகுத்தறிவைக் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது.. முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒரு விடயம்..!

கடவுள்.. ஆலயங்கள்.. இவை பகுத்தாய்வுக்கு அப்பால் சமூக நலனுக்காக பயன்படுத்தக் கூடிய நிலையில் அவற்றைப் பயன்படுத்துவது கூட புத்திசாலித்தனமே என்று நாங்கள் உரைத்தபோது ஏற்க மறுத்தவர்கள்.. சிலைகளை செருப்பால் அடிப்பதும்.. ஆலயங்களை உடைப்பதுமே பகுத்தறிவு என்று வாதிட்டவர்கள்.. இன்று சமூகத்தின் நலனோடு ஒட்டியதாக இனங்காட்டிக் கொண்டாவது இந்த மனநிலை மாற்றம் கண்டிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது தான்.

நல்ல மாற்றம்..! இதை தக்க வைத்துக் கொள்ளுங்கள்..! பிற்காலத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யவும் இது உதவும்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தலையைச்சுத்துது.

ஊருக்கு போய் விட்டு ஒருவர் எழுதினால் புளிக்குது

அதையே நான் எழுதினால்

எனது நண்பர் எழுதினால் இனிக்குது...... :(

  • தொடங்கியவர்

விசுகு, யாரை எதற்கு என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.

நெடுக்காலபோவான் என்னை அவசரப்பட்டு பாராட்ட வேண்டாம். தமிழர்களையே அசுரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றது என்று நாம் சொன்ன பொழுது மறுத்தவர், பின்பு இராவணன் ஒரு தமிழன் என்று ஒரு பதிவை இங்கே இணைத்த பொழுது, அவரை பாராட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. என்றாலும் அதை அடக்கிக் கொண்டு பொறுத்திருந்து பார்க்க தீர்மானித்திருந்தேன்.

அப்படி அவரும் பொறுப்பது நல்லது.

நாங்கள் கடவுள் சிலைகளுக்கு செருப்பாலும் அடித்திருக்கிறோம். அதே வேளை கோயிலுக்குள் அனைவரும் போகும் உரிமைக்காகவும் போராடி இருக்கிறோம். சிவனை தமிழில் பாடு என்றும் அடம்பிடித்திருக்கிறோம். எங்கு எதைச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறோம்.

  • தொடங்கியவர்

இந்த ஆண்டு கொயில் வளாகத்தின் முழுப் பகுதியும் விடுவிக்கப்பட்டு, பாடாசாலையோடு மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. கோயில் கட்டும் வேலைகள் வெகு வேகமாக நடைபெறுகின்றன. தற்பொழுது ஏறக்குறைய நாற்பது குடும்பங்கள் அங்கே வசிக்கத் தொடங்கியுள்ளன.

சில படங்களை இணைக்கலாம் என்று நினைத்தேன். எப்படி இணைப்பது என்று மறந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடவுள் சிலைகளுக்கு செருப்பாலும் அடித்திருக்கிறோம். அதே வேளை கோயிலுக்குள் அனைவரும் போகும் உரிமைக்காகவும் போராடி இருக்கிறோம். சிவனை தமிழில் பாடு என்றும் அடம்பிடித்திருக்கிறோம். எங்கு எதைச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறோம்.

எங்கு நீங்கள் எதைச் செய்தாலும்.. பகுத்தறிவு என்ற சுயபுராணத்திற்கு முன்னிலை கொடுக்காமல்.. சமூகத்திற்கு.. சமூக நலனிற்கு முன்னிலை கொடுக்கப் பழகி இருப்பது அவசியம். அந்த வகையில் தான் இந்த மனநிலை மாற்றத்திற்கு ஒரு பாராட்டு. நாங்களும் ஒரே அடியா இதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கப் போவதும் இல்லை. தம்மைத் தாமே பகுத்தறிவாளர்கள் என்போர் அடிக்கடி.. தாவும் மனநிலையிலும் கைதேர்ந்தோர் ஆவர் என்பதையும் நாம் அறிவோம்..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அழிந்த ஊர் கோயில் மூலம்தான் புதுப்பிக்கப்படுகின்றது, பாடசாலை மூலம் அல்ல என்பது கவனிக்கப்படவேண்டும். மக்கள் மீளவும் ஊர் திரும்பினால்தானே முன்னேற்றம் வரும்.

மஹாஜனக் கல்லூரியில் பல வானுயர்ந்த கட்டடங்கள் தோன்றியுள்ளனவாம். ஆனால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாம். எனவே மாணவர்கள் இல்லாத பாடசாலை கட்டுவதைவிட கோயில் கட்டி மக்களைத் திருப்பினால் தவறில்லைத்தானே.

  • தொடங்கியவர்

குரும்பசிட்டியில் தற்பொழுது பாடசாலையும் நடக்கின்றது. ஊர் மக்களே ஒரு பேருந்தை ஒழுங்கு செய்து வேறு இடங்களில் இருந்த பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள்.

பிள்ளைகளை ஏற்றி வருகின்ற பேருந்தை எதிர்பார்த்து ஆசிரியர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள். அன்றைக்கு பேருந்து வந்தால்தான் பாடசாலை நடக்கும். பலத்த சிரமங்களுக்கு மத்தியில் பேருந்தும் வந்து போகிறது. பாடசாலையும் நடக்கிறது.

ஒரு தபால் அலுவலகத்தையும் திறக்கச் செய்திருக்கிறார்கள். யாரும் கடிதம் எழுதுவது இல்லை. ஆயினும் மீண்டும் இடங்களை கையைகப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக வைத்தியசாலை, கலாச்சார மண்டபம் என்று அவசரம் அவசரமாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் செய்தாலும் கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து முடித்து விட்டால், மேலும் பலர் அங்கே குடியேறி விடுவார்கள். அங்கே உள்ள பிள்ளைகளே பாடசாலை நடத்தப் போதுமானதாக இருக்கும்.

இன்னமும் குரும்பசிட்டிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை பகுத்தறிவு ஒண்டையும் காணேல்லை......ஒற்றைறோட்டுத்தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய சபேஷன் அண்ணா ஒரு நாத்திக வாதியாக இருந்து இப்பொழுதாவது ஒரு ஆத்மீக வாதியாவது ஒரு நல்ல சகுனமாவே நான் பாக்கிறன் எல்லாம் அண்ணாவின் மனைவிக்கு தான் நன்றி சொல்லணும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உங்கடை கதையை வாசிக்கிறேன்..

தொடருங்கோ

ஆனால் ஒரே ஒரு டவுட்;

ஏன் உங்கடை ஊரை குரும்பசிட்டி என்று சொல்லுகிறவை...அது ஒரு சிட்டிஓ விலேச்சோ என்று சொல்ல முடியுமே? :rolleyes:

பஸ் ஏற்றி படிப்பிக்கிரத்தை முன் உதரணாமாக கொண்டு மற்ற இடங்களிலும் அதை செய்ய வேண்டும். உண்மையிலேயே நல்ல முயற்சி...மற்றைய மற்ற ஊர் சங்கங்களும் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து சொந்த ஊரான குரும்பசிட்டியில் என்னுடைய பாதம் படுகிறது. அது ஒரு பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பான நிகழ்வு.

உங்கள் அனுபவப் பயணத்தில், அரசியலையும், ஆமிக்காரரையும், ஒரு பக்கத்திற்குத் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது, எங்கள் மண்ணின் மீது, எமக்கிருக்கும் அன்பும், எமது தாகங்களும், ஏக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன!

நானும் சிறுவனாக இருந்த காலத்தில், பள்ளிக்கூடம் போகும்போது, வீதியில் இருந்த ஒரு குறிப்பிட்ட கல்லொன்று, நான் எவ்வளவு கவனமாக இருந்தாலும், எனது பெருவிரலை, இலக்கு வைத்து, அடிக்கும்! (பாதிக் கல், நிலத்தின் கீழ் புதைந்திருந்ததால், தூக்கி எறிய முடியவில்லை)

எனக்கும் அந்தக் கல்லை ஒரு தடவை, மீண்டும் பார்த்து விட வேண்டும் என்று, ஒரு ஆசை!

நம்பினால் நம்புங்கள்!

சுற்றியிருந்த வீடுகள், மதில்கள், எல்லாம் போய் விட்ட பின்பும், அந்தக் கல் மட்டும், அதே இடத்தில் பத்திரமாக இருக்கின்றது!

பயணத்தைத் தொடருங்கள்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

வொல்கானோ,

குரும்பசிட்டி என்பது ஒரு கலவையான கிராமம்தான். அங்கே மாடிவீடுகளும் இருந்தன, குடிசைகளும் இருந்தன. வெளிநாட்டில் வசிக்கும் குரும்பசிட்டியை சேர்ந்தவர்களால், அதனுடைய நிறம் இனி மாறக் கூடும். இது பற்றி எனக்குக் கவலையே. நிலம் மீண்டும் கிடைத்தாலும் முன்பு கண்ட ஊரை இனிக் காண முடியாது.

குறும்பர்கள் என்னும் ஒரு மக்கள் கூட்டம் வாழ்ந்ததால் குறும்பரிட்டி என்னும் பெயர் வந்து, பின்பு குரும்பசிட்டி என்று திரிந்ததாக பெயர்க் காரணம் கூறுவர். இது பற்றி வேறு விளக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

புங்கையூரான்,

உங்கள் ஊருக்கும் போனேன். அது பற்றியும் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குரும்பசிட்டியைப்பற்றி தெரியாது ஆனால் தம்பசிட்டியை கொப்ப்பி பண்ணி அமெரிக்காவில் Tampa city இருப்பது தெரியும்.. :lol:

குரும்பசிட்டியைப்பற்றி தெரியாது ஆனால் தம்பசிட்டியை கொப்ப்பி பண்ணி அமெரிக்காவில் Tampa city இருப்பது தெரியும்.. :lol:

ஆஹா.............. சிக்கீட்டுதே விலாங்குமீன் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.............. சிக்கீட்டுதே விலாங்குமீன் :lol::D:icon_idea: .

இணையத்தில் கேள்விப்பட்டதுதான்.. :D :D :D

  • தொடங்கியவர்

அரட்டை அடிக்கத் தொடங்கி விட்டார்கள். விரைவில் அடுத்த பகுதியை எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டை அடிக்கத் தொடங்கி விட்டார்கள். விரைவில் அடுத்த பகுதியை எழுத வேண்டும்.

ஆ.. அந்தப்பயம் இருக்க வேணும்.. :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Kurumbasiddy_Bus.jpg

upload photo

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடசாலை க்கு தனியாக பஸ் இருப்பது ஆடம்பரமா ?

எமது புலம்பெயர் உறவுகளும் தாய்நாட்டில் வாழும் உறவுகளும் தங்களது ஆடம்பரச் செலவினங்களைக் குறைத்து வடக்கு கிழக்கில் பல்வேறு காப்பகங்களில் தமது எதிர்காலக் கனவுகளைச் சுமந்து வாழும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வரவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.    வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் ஏற்பட்டுள்ள நீர்ப்பிரச்சினை தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினரின் கனவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அவரது வேண்டுகோளில் பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் ஞாபகார்த்தமாக அவரது நினைவு நாளில் ஆழ் குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தி கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.