Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

523676_10151926600115752_346295186_n.jpg

இளையராஜா ஊடக பேட்டிக்கு வருகின்றார் .ஒருபக்கம் டிரினிட்டி எவன்ஸ் உரிமையாளர் மறுபக்கம் போட்டோ பாஸ்ட் சில்வெஸ்டர் .இவர்கள் தான் இந்த நிகழ்சியை நடாத்துபவர்கள்

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துபவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளே. மாவீரர் மாதத்தை களங்கப் படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சியை கார்த்திகை மாதத்தில் நடத்த ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சிங்கள அரசின் சதித் திட்டமே.////

அவர்கள் இலங்கையின் கைக்கூலிகள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா? எடுத்தவுடனே உடனே அவர்கள் மீது குற்றச்சாட்டு செய்ய எவ்வாறு இந்த மாதிரி முடிகின்றது?? முதலில் இவ்வாறு கைக்கூலிப்பட்டம் சொல்லுகின்ற தகுதி உங்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சென்ற வருடம் மாவீரர் தினத்தை இரண்டாக அடிபட்டு, குத்துப்பட்டுச் செய்ய முயன்ற செயல் மாவீரர் தினத்தைக் களங்கப்படுத்தவில்லையா? அதுவும் சிங்கள அரசின் சதித்திட்டங்களில் அடங்கவில்லையா? அப்போது இந்த வன்னி புஸ்பா என்ன **** என அறியலாமா?

தூயவன் இது புதிய விடயம் இல்லை

காலங்காலமாக இப்படியான அணுகு முறைகளை தன்னறிமானமாக நடத்தி முடித்த ஆதிக்கத் திமிரை நாங்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அப்பொழுதெல்லாம் மிக குமுறலோடு தாயகத்திற்குப் பேசும்போது என்னை அங்கிருந்து சமாதானப்படுத்திய காலமும் உண்டு. ஒன்றாக நின்று இங்கு இயங்கிக் கொண்டிருக்கும்போதே அதிக காலங்கள்... எங்களுக்காக நீங்கள் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ளுங்கள் என்ற அவர்களின் வேண்டுகோள்கள் பல சமயங்களில் என்னைக் கட்டிப் போட்டதுண்டு. அவர்கள் எதிர்பார்த்ததுபோன் இவர்கள் இங்கு விடுதலை சார்ந்த எதனையும் 2009 இற்கு முன்பாக முன்னெடுக்கவில்லை என்பதை கடந்தகாலங்கள் கதை சொல்லும் சாட்சிகளாக இருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான பயங்கரவாத முத்திரை குத்தலை தகர்க்க எவரும் எதையும் வெட்டிப்புடுங்கவில்லை. தாயகத்தில் இருந்து அதனை அகற்றும்படியாகவே இருந்தது போராளிகளின் முழுமையான வேண்டுகோள். ஒரு நாள் உரிமைப்போர் நிகழ்வை நடாத்திவிட்டு இன்று வரை அந்தப்பயங்கரவாத முத்திரையைக்கிழித்தெறிய பாரிய செயற்பாடுகளாய் அல்லது தொடர் போராட்டங்களாய் எவரும் முன்னிற்று செய்ய நினைக்கவில்லை. வெறும் பணத்தை மட்டுமே அங்கு அனுப்பினால் போதும் என்னும் குறிக்கோளைத் தவிர ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனத்திற்கு புலம் பெயர்ந்த தேசங்களில் எவ்வகையில் அங்கிருந்து வந்த மக்கள் செயற்படவேண்டும் என்பதை மக்களுக்கும் எவரும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆக பொங்கல் விழா(கிட்டு), முத்தமிழ்விழா(அன்னை பூபதி), கறுப்ப யூலை, தியாக தீபம் (திலீபன் )தமிழீழப்பெண்கள் நாள்( மாலதி), மாவீரர் வாரம், இவை மட்டுமே விடுதலை நோக்கிய மக்களின் செயப்பாடுகளாக வருடாவருடம் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு உள்ளாக இந்த நிகழ்வுகளுக்கூடாக இன்னும் பல மாவீரர்கள் இணைக்கப்பட்டு நினைவு கூறல் என்ற பெயரால் விழா எடுக்கப்பட்டது. இங்கு ஏன் விழா எடுக்கப்ட்டது என்று கூறுகின்றேன் என்றால் அந்த நிகழ்வுகள் அனைத்திலும் முழுக்க முழுக்க நடனமாகத்தான் இருக்கும். எந்த மாவீரருக்காக விழா எடுக்கப்படுகிறதோ அந்த மாவீர்பற்றி பேசுவதற்கு ஆளில்லாத நிலை. ஆக அந்த மாவீரின் படத்தின் முன் மலர் வணக்கம் செய்வதோடு அந்த மாவீரரின் போராட்டவரலாறு அந்த இடத்திற்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கும் இப்படித்தான் ஒரு குறுகிய வெளியில் விடுதலை வீச்சை அதிகரிக்காமல் நினைவு வணக்கங்களோடு இங்கிருக்கும் மக்கள் பேணப்பட்டார்கள். இவைதான் புலம் பெயர்ந்தோர் பணியாக வரையறை பட்டிருந்தது. கடந்த காலங்களின் பெருந்தவறு மீள முடியாத முள்ளவாய்க்கால் சோகத்துடன் இன்னும் தொடர்கதையாக இருக்கிறது. நிற்க

இன்று மேலே தூயவனால் குறிப்பிடப்பட்ட பெண்மணி.... ஒட்டாவாவில் நடைபெற இருந்த இளையோர் போராட்டத்தைக் குழப்பி அடித்தவர்களில் ஒருவர் என்பதை பலரும் அறிவர். இளையோர் திட்டமிட்டு மேற்கொண்டிருந்த போராட்டங்கள் பல பற்பல இடங்களில் இப்படியான இரண்டுங்கெட்டான்களால் தோல்வியடைந்தது அல்லது வீரியம் குறைக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இளையோர் போராட்டங்கள் 2009 ஆண்டளவில் வலுவிழந்து போனதற்கு இன்று அரசியல் பற்றி ஊடகப்பேச்சாளர்களாக இருக்கும் 70 வீதமானவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். சில சமயங்களில் நாங்கள் கூட இளையோர் போராட்டம் உச்சம் எட்டாத வகைக்கு அல்லது அவர்கள் வெறுத்து ஒதுங்கும் அளவுக்கு ஒழுங்கமைப்பாளர்களால் நடாத்தப்பட்டிருக்கிறோம். காலம் கடந்து சிந்திக்கும்போது வேதனை மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

இப்போது கூட முகநூல்களிலும் பிரச்சார மையங்களிலும் முதன்மையாக நிற்போரைப்பார்த்தால் இரத்தம் கொதிக்கிறது. 2009 இன் மே மாதம் 10ந் திகதி நாளாந்தம் நூறுகளைக் கடந்து ஆயிரமாக மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்களெல்லாம் இரவுபகலாக தெருவில் சின்னஞ்சிறியவர்களுடன் கிடந்து உழன்று கொண்டிருந்த தருணத்தில் சலங்கை கட்டிச் சிங்காரித்து அரங்கம் அமைத்து ஆட்டம் போட்டவர்கள்..... இப்போது மாவீரர் மாதம் என்று இசைஞானியின் நிகழ்வுக்கு எதிராக கூக்குரலிடுகிறார்கள். இன்னும் விடுதலையின் பெயரால் தம்மை வளர்ப்பதிலேயே குறியாகத் திரியும் கூட்டம் இதுவல்ல இன்னும் தங்கள் பிரபலத்திற்காக எதுவும் செய்யும் என்பது காலவெளிகளில் நான் கண்ட உண்மை. இவர்களால் எங்கள் இனத்திற்கு நன்மை ஏற்பட எந்தவிதச் சாத்தியமும் கிடையாது.

இவர்களில் எவர் எமது விடுதலை நோக்கிய நம்பிக்கையை தம்மிடம் தேக்கி வைத்திருக்கிறார்கள். தயவு செய்து அடையாளங்காட்டுங்கள் என்போன்றவர்கள் அவர்களுக்கு கட்டுப்படுகிறோம்

எந்தவித நேர்மையும் இல்லாமல் கூப்பாடு போடுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும் .

Edited by வல்வை சகாறா

மற்றவர்கள் மீது விரலைச் சுட்டிக் காட்டும்போது, நான்கு விரல்கள் எம்மை நோக்கித்தான் இருக்கின்றன. அந்த நான்கு விரல்கள் உங்களுக்கும் இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்தவைகள் இன்னும் மறக்கப்படவில்லை.

மற்றவர்கள் மீது விரலைச் சுட்டிக் காட்டும்போது, நான்கு விரல்கள் எம்மை நோக்கித்தான் இருக்கின்றன. அந்த நான்கு விரல்கள் உங்களுக்கும் இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்தவைகள் இன்னும் மறக்கப்படவில்லை.

வல்வை அக்கா ஊரை தாக்கி முடிக்கிறா. ஒருவசனம் ஏன் இளையராஜா இந்த நிகழ்சியை நடத்தவேண்டும் என்று கூறவில்லை.

இப்படியான விவாதங்களை முன் வைப்பதனால்தான் கருத்தை முன் வைக்கும் தடுப்பு குழு முன்னால் போகிறது. வெகு விரைவில் முன்னுக்கு போய் இரண்டு மாதங்களாக ஒழுங்குகமைக்கப்பட்ட நிகழ்சியை தடுத்துவிடுமா என்று சந்தேகமாக இருக்கிறது.

சீமான்-வைகோதான் புலிகள் இந்தியாவில் தன்னும் பயங்கரவாத இயக்கம் இல்லை என்று வாதாடுபவர்கள். இங்கே கருத்துதில்லாமல் இணையதளத்தில் கொடுக்கு கட்டுவதில் மட்டும் வீரமாக நிற்பவர்கள், வாதாட்டத்தை நீட்டி இதை தமிழ் நாட்டுக்கும் அனுப்பியும் வைக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் தீப்பிடித்தால் நான் கறன்ரி பண்ணுகிறன் இளையராஜாவும் வரமாட்டார். சீமான், வைகோ யார் என்று இளையராஜா அறிந்துதான் வைத்திருப்பார். இன்று முறிந்துபோவிட்ட டெசோ ஊன்று கோலாகா கருணாநிதியை தூக்க வைத்தவர்கள்.

பாரதிராஜா வரமாட்டார்.

பாரதிராஜா சொல்லியிருப்பது தனக்கு நம்பிக்கை ஊட்டத்தக்கதாக அரச ஊடுருவல் இருப்பத்தாக விள்ங்க வைக்கப்பட்டிருக்கிறது என்று. இதை வைத்து இரண்டு முடிவுக்குதான் வரலாம். ஒன்று இவ்வளவு பெரிய ஆயத்தத்தை புதிய குழு ஒன்று செய்கிறதாயின் அதின் பினவழத்தில் பக்கத்துணை ஒன்று இருக்கலாம். குழு தன்னைத்தான் மக்கள் முன்னால் நல்லவர்களாகாட்டுவதால் மட்டுமே மக்களின் எதிர்ப்பு குறையும். அவர்கள் கொடுக்கு கட்டி வீரம் காட்டினால் இது ஓவர்.

மற்றயது இதில், கூட்டமைப்பு எதிர்ப்பாளர்கள், புலம்பெயர் இயகங்களை எதிர்ப்பவர்கள், வெளிப்படையாக அரசுக்காக வாதிடுபவர்கள் தங்களை தாங்கள் உள் நுளைத்து பெயர் எடுக்க முயல்வதாகும். சாதாரண நேரத்தில் இவர்கள் தங்களுக்கு கலைஞ்ஞர்களிடம் இருக்கும் அறிமுகத்தை பாவிக்கலாம். ஆனால் இப்படியான நேரங்களில் இவர்களை கலைஞ்ஞர்கள் நம்பிக்கையான மூலமாக கொள்ள மாட்டார்கள். இது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாள்பாள் என்று கலைஞ்ஞர்களை ஓடவைக்கும் முயற்சியாகத்தான் எனக்குப்படுகிறது.

நிச்சயமாக வல்லவை அக்கா எழுதியிருப்பதை இளையராஜாவிடம் காட்டி நிகழ்சியை ரத்து செய்ய வேண்டாம் என்று கேட்கத்தக்க சந்தர்ப்பம் ஒன்று இல்லை.

இதில் கருத்திருந்தால் எழுதலாம். ஊரை மட்டும் குறை சொல்லி சொல்லி விவாதத்ததை நீட்டுவதால் எல்லாவற்றையும் கெடுக்கிறார்கள்போல்த்தான் படுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அக்கா ஊரை தாக்கி முடிக்கிறா. ஒருவசனம் ஏன் இளையராஜா இந்த நிகழ்சியை நடத்தவேண்டும் என்று கூறவில்லை.

இப்படியான விவாதங்களை முன் வைப்பதனால்தான் கருத்தை முன் வைக்கும் தடுப்பு குழு முன்னால் போகிறது. வெகு விரைவில் முன்னுக்கு போய் இரண்டு மாதங்களாக ஒழுங்குகமைக்கப்பட்ட நிகழ்சியை தடுத்துவிடுமா என்று சந்தேகமாக இருக்கிறது.

சீமான்-வைகோதான் புலிகள் இந்தியாவில் தன்னும் பயங்கரவாத இயக்கம் இல்லை என்று வாதாடுபவர்கள். இங்கே கருத்துதில்லாமல் இணையதளத்தில் கொடுக்கு கட்டுவதில் மட்டும் வீரமாக நிற்பவர்கள், வாதாட்டத்தை நீட்டி இதை தமிழ் நாட்டுக்கும் அனுப்பியும் வைக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் தீப்பிடித்தால் நான் கறன்ரி பண்ணுகிறன் இளையராஜாவும் வரமாட்டார். சீமான், வைகோ யார் என்று இளையராஜா அறிந்துதான் வைத்திருப்பார். இன்று முறிந்துபோவிட்ட டெசோ ஊன்று கோலாகா கருணாநிதிய தூக்க வைத்தவர்கள்.

பாரதிராஜா வரமாட்டார்.

பாரதிராஜா சொல்லியிருப்பது தனக்கு நம்பிக்கை ஊட்டத்தக்கதாக அரச ஊடுருவல் இருப்பத்தாக விள்ங்க வைக்கபட்டிருக்கிறது என்று. இதை வைத்து இரண்டு முடிவுக்குதான் வரலாம். ஒன்று இவ்வளவு பெரிய ஆயத்தத்தை புதிய குழு ஒன்று செய்கிறதாயின் அதின் பினவழத்தில் பக்கத்துணை ஒன்று இருக்கலாம். குழு தன்னைத்தான் மக்கள் முனால் நல்லவர்களாகாட்டுவதால் மட்டுமே மக்களின் எதிர்ப்பு குறையும்டவர்கள் கொடுக்கு காடி வீரம் காட்டினால் இது ஓவர்.

மற்றயது இதில், கூட்டமைப்பு எதிர்ப்பாளர்கள், வெளிநாட்டு இயகங்களை எதிர்ப்பவர்கள், வெளிப்படையாக அரசுக்காக வாதிடுபவர்கள் தங்களை தாங்கள் உள் நுளைத்து பெயர் எடுக்க முயல்வதாகும். சாதாரண நேரத்தில் இவர்கள் தங்களுக்கு கலைஞ்ஞர்களிடம் இருக்கும் அறிமுகத்தை பாவிக்கலாம். ஆனால் இப்படியான நேரங்களில் இவர்களை கலைஞ்ஞர்கள் நம்பிக்ககையான மூலமாக கொள்ள மாட்டார்கள். இது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாள்பாள் என்று கலைஞ்ஞர்களை ஓடவைக்கும் முயற்சியாகத்தான் எனக்கு படுகிறது.

நிச்சயமாக வல்லவை அக்கா எழுதியிருப்பதை இளையராஜாவிடம் காட்டி நிகழ்சியை ரத்து செய்ய வேண்டாம் என்று கேட்கத்தக்க சந்தர்ப்பம் ஒன்று இல்லை.

இதில் கருத்திருந்தால் எழுதலாம். ஊரை மட்டும் குறை சொல்லி சொல்லி விவாதத்ததை நீட்டுவதால் எல்லாவற்றையும் கெடுக்கிறார்கள்போல்த்தான் படுகிறது.

மல்லையூரான் இங்கு பொதுவாக எல்லாவற்றையும் தொட்டு எழுதியிருக்கிறீர்கள் அதனால் உடனடியாக விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கிறது.

மற்றையது என்னை நோக்கிய கேள்விகளுக்கும் சுட்டிக்காட்டலுக்கும் மட்டும் பதில் தர முயற்சிக்கிறேன்.

மல்லை பொதுவாக இதுவரை கடந்த என் அனுபவங்களின் வழியேதான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். இன்று இசைஞானி அவர்கள் இந்த நிகழ்வை நவம்பர் மாதம் நிகழ்த்தக்கூடாது என்று முழக்கமிடக்கூடியவர்கள் முகநூலில் எழுதுகிறார்கள் இவர் தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு பெருந்தொகை பணத்தைக் கொடுத்தால் இந்நிகழ்வை நடாத்தலாம் என்பதாக, இன்னொரு சாரார் எல்லா இசைக்கலைஞர்களும் எமது தாயகப்பாடலைப் பாடியிருக்கிறார்கள் இவர் இன்னும் எமக்காகப் பாடவில்லை, இவர் இவ்வளவு காலமும் எமக்காக குரல் கொடுக்கவில்லை இப்படி எழுதித்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்..... இப்படியான தகவல்கள் முகநூலில் ஆளாளுக்கு கனெடியத் தமிழ் சமூகத்தின் சார்பில் தங்கள் எண்ணங்களுக்கு வந்தவற்றை விசமத்தனமாக ஒரு கலைஞனுக்கு எதிராக பரப்பும்போது அவர்களின் அசைக்க முடியாத பிடிமானமாக மாவீரர்களை கையிலெடுத்திருக்கிறார்கள்.

எனக்கு வசனக்கோர்ப்புகளாகவோ பந்தி பந்தியாகவோ தமிழை பிழையற எழுதத் தெரியாது என்னால் முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன். இதுவரை காலமும் நாங்கள் மாவீரர் மாதம் என்று ஒரு நீண்ட கால அவகாசத்தை மாவீரர்களுக்காக கடைப்பிடிக்கவில்லை ஒரு வார காலமே உச்சமாக கடைப்பிடிக்கப்படும் மாவீரர் வாரமாகும் அந்த ஒரு வாரம் உணர்வுகள் நெருப்பாய் எல்லா மனங்களிலும் வீற்றிருக்கும் அதனைத்தான் தாயகத்திலும் கடைப்பிடித்தார்கள். அந்த ஒரு வாரத்திற்கு இருக்கும் வேகம் இப்படியான கால நீட்டிப்புகளை செய்வதால் மழுக்கடிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இப்போது புதிதாக மாவீரர் மாதம் என்பதைக் கிளப்பி இசைஞானிக்கு எதிரான ஒரு வடிவத்தை தான்தோன்றித்தனமாக தோற்றுவித்திருக்கிறார்கள் இதற்கு தமிழகத்து கலைஞர்களும் உண்மை நிலை புரியாமல் பலியாகியுள்ளார்கள். சீர் தூக்கிப்பார்த்தால் அரசியலில் ஈடுபாட்டைக்காட்டாத ஒரு இசைஞனிடமிருந்து எமக்கான எந்தவொரு அரசியல் பக்கமும் உருவாக வாய்ப்பில்லை. இசைஞானி எங்களுக்காக பாடவில்லை என்று குற்றஞ்சாட்டி எதிர்ப்பதைக்காட்டிலும் அவருடைய இசையும் குரலும் எங்களுக்காக ஒலிக்கவைக்க நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது. இதற்கு கடந்த காலங்களை சுட்டிக்காட்டலாம் இது சிலருக்கு திகட்டாததாக இருக்கலாம். எமக்குப் பேரவலம் ஏற்பட்ட முள்ளிவாய்க்காலின் பின் இப்போது அனேக விடயங்கள் அறிந்திருப்பார் அவரிடம் மாற்றங்கள் உருவாகியிருக்கும்...அல்லது அம்மாற்றத்தை உருவாக்க நாம் குழுமமோதல் தவிர்த்து ஏன் முயற்சிக்கக்கூடாது? அண்மையில் நான் எங்களுடைய உணர்ச்சிக் கவிஞருடன் தொடர்பு கொண்டு பேசியபோது மிகவும் கவலைப்பட்டார். தன்னை புலம்பெயர்ந்த தமிழர்கள் அழைத்தால் யார் எப்படியாக எங்கு நிற்கிறார் என்று தெரியாமல் திண்டாட்டமாக இருக்கிறது என்று அவர் கூறும்போது இந்த இசைஞானியின் நிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். நிற்க

இப்போது மிகப்பெரிய ஒழுங்கமைப்பைச் செய்து இசைஞானியுடன் நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்களும் தாயர் நிலைக்கு பயிற்றுவிக்கப்பட்டு இங்கு நிகழ்வை நடாத்த அவர் வந்திருக்கும் இத்தருணத்தில் இதுவரை நாங்கள் நினைவேந்திய மாவீரர் வாரத்தை நீட்டித்து மாவீரர் மாதம் என்று முழங்கி அறிக்கைப்போர் நடாத்தி ஒரு கலைஞனை மட்டுமல்ல பல கலைஞர்களை விழிபிதுங்க வைத்துள்ளார்கள். இலங்கை அரசின் சதி என்கிறார்கள். இலங்கை அரசு சதி செய்து அழிப்பதற்கு இப்போது எங்களிடம் ஏதுமில்லை அப்படியே இலங்கை அரசு குறிவைக்கக்கூடியவர்கள் இந்த அறிக்கைப் போருக்குள் குத்துமல்லுப்பட்டுக்கொண்டு நிற்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் கைக்கூலிகள் இதனை ஒழுங்கமைத்துள்ளார்கள் என்ற கூற்று சற்று என்னை பின்னோக்கி பார்க்க வைக்கிறது 2010 இல் நான் தாயகம் சென்று திரும்பிய தருணத்தில் இதுவரை காலமும் நான் ஈடுபட்டிருந்த மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் முதற்கொண்டு பலரும் என்னைத் துரோகிப்பட்டியலில் போட்டு என்னுடைய நண்பர்களிடமே என்னுடன் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை வழங்கியவர்கள்தானே அத்தோடு படிப்படியாக என்னை எல்லா நிலைகளிலிருந்தும் விலக்கி கொண்ட நிலைகள் அவர்களின் முட்டாள்த்தனத்திற்கு மிகப்பெரிய சான்று என்பதை அனுபவரீதியாக அறிந்திருக்கிறேன் அப்படியானவர்கள் தொடர்ந்து பலரின்மேல் முத்திரை குத்தல்களையும் ஒதுக்கல்களையும் மேற்கொள்வதை பார்த்தும் ஒதுங்கிக் கொள்வோம் என்று விலகிக் கொண்டவள்தான் இப்போது இவர்கள் பொதுப்படையாக வைக்கும் குற்றச்சாட்டு எத்தகைய ஆதாரத்தைக் கொண்டது என்று இவர்களால் நிரூபிக்கமுடியுமா? ஆக இவர்கள் விரும்பும் நேரத்தில் தங்களுக்கு ஒவ்வாத ஏதேனும் இருந்தால் உடனடியாக கண்ணை மூடிக்கொண்டு குற்றஞ்சாட்டுவார்கள். அதை இவர்களின் பொன்வாக்காக ஏற்று மக்களும் புறக்கணிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம்.

இந்தப் பொல்லாப்புக் கதைகளை விட்டுவிட்டு அந்தக் கலைஞனை ஆதிக்கத்தனத்தோடு அணுகாமல் அன்பாக நெருங்கிப்பாருங்களேன். இதற்குப் பதில் வரும் ஏற்பாட்டாளர்கள் நெருங்க விடுகிறார்கள் இல்லை என்று....அதற்குக் காரணம் ஒவ்வொருவருடைய கடந்தகாலங்களே...எப்போதுமே அதிக்கத்தால் சாதிக்க முற்பட்டு எதிரிகளை உருவாக்கியது மட்டுமல்ல வெற்றி கண்ட இடங்களில் பெறக்கூடிய பலவற்றை மழுங்கடித்ததுதான் வரலாறு. இப்போதுகூட ஒன்றும் குறையவில்லை இசைஞானியிடம் ஒரு மாவீரர் கானத்தை எழுதி இசை அமைத்துத் தரும்படி கேளுங்களேன் இந்த மண்ணின் நாங்கள் கடந்த இத்தனை துயரங்களுக்கு அப்பாலும் அந்தக் கலைஞனை நாங்கள் மதிக்கிறோம் என்று உணரும் தருணத்தை அந்தக்கலைஞனுக்கு ஏற்படுத்த முயற்சியுங்கள். ஒருவேளை நியாயமற்ற முறையில் ஆதிக்கத்தனத்தால் நிகழ்ச்சி நாள் மாற்றப்படும் பட்சத்தில் அந்தக்கலைஞனும் அவரோடு சேர்ந்து பயணிக்க இருந்த அத்தனை கலைஞர்களும் ஈழத்தமிழர்களால் பாரிய அவமானத்தை சந்தித்ததாக எண்ணிக் கொள்வார்கள். அதே கணம் இன்று புதுவைக்கவிஞனை யாரேனும் அவமானப்படுத்தினால் அவரை நேசிக்கும் எங்களால் எவ்வளவுக்குத் தாங்க முடியாதோ அவ்வளவுக்கு அவருக்கும் இலட்சக்கணக்கான இரசிகர்கள் உலகம் பூராவும் பரந்து அவர் இசையால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் நிச்சயம் அதனை இசைஞானிக்குக் கிடைத்த பெரிய அவமானமாகக் கருதுவார்கள் மட்டுமல்ல அவரே அதனை மறந்து எங்களோடு உறவாடினாலும் காலம் முழுக்க தமிழகத்தில் எமது விடுதலைக்கு எதிரானவைகள் எல்லாம் இவற்றைப்புதுப்பித்து புதுப்பித்து அவரையும் ரணமாக்கி எங்களையும் புண்ணாக்கி மகிழும். ஆக இந்த விடயம் சுமூகமாகக் கையாளும் பக்குவம் உள்ளவர்கள் இந்த விடயத்தில் ஈடுபட்டு யாரும் காயப்படாமல் இருக்க உதவவேண்டும்.

மல்லை இசைஞானியின் நிகழ்வு ஏன் நடக்கக்கூடாது என்று அறிக்கைகள் முன்வைக்கும் காரணங்களை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இலங்கை அரசு சதி செய்ததோ இல்லையோ அதன் விருப்புக்கு ஏற்றாற்போலவே தமிழர்களுக்குள் சிதைவு வந்துகொண்டிருக்கிறது... தொடர்ந்து வரும் நாட்களில் இது பாரிய காட்டுத்தீயாகும் வாய்ப்புத்தான் புலப்படுகிறது இதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அலோ இளையராஜா இசை நிகழ்வை கட்டாயம் நடத்துவார்.. தேதி முன்கூட்டியே கொடுத்தத்தற்புறம் என்ன தகறாரு உங்களுக்கு..? மாவீரர் மாதம் (மாவீரர் வாரம் அல்ல) என்று தெரிந்த பிறகும் அது இரண்டு மாதத்திற்கு முன்பே அனவுன்ஸ் பண்னிட்டார்கள்.. அப்ப எல்லாம் என்னோ குச்சி மிட்டாய் சப்பிட்டு இருந்த மாறி.. அதில் கனடா வாழ் தமிழக தமிழர்கள் கலந்து கொள்வார்கள்.. இப்ப என்னவோ.. கனடா உங்களுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்த மாறி பீல் பண்ணுகிறீர்கள்.. வேற மலேசியா தமிழன அண்டார்டிக்கா தமிழன் வேற யாருமே அங்கிட்டு கிடையாதா..? நீங்கள் மட்டுமே தமிழர்களா அங்கிட்டு...?மத்தவன் எவனும் தமிழ் இனத்தில் பிறக்கவே இல்லை..?வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தாலும் அவர்களை எல்லாம் என்ன தெருவில் பெத்த் போட்டு போய்விட்டார்களா..? இஸ்டம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் போய்கிட்டே இருங்கள் அப்புறம் என்ன..? இதெல்லாம் சத்தியமாக ரொம்ப ஓவரு...

டிஸ்கி:

ஆனால் ஒன்று எனக்கு நன்றாக தெரியும் .. அவரு கொஞ்சம் தலைகனம் மிக்கவர்.. இது யாராலும் மறுக்க முடியாது.. கல்யாணத்திற்கு வரசொன்னா பிள்ளை பேற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் என்ன ..? நீங்க முன்னாடியே அதை சொல்லி இருக்கணம்.. இப்ப வந்து கும்மாங்குத்து குத்து வது சரியில்லை..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள இருக்கிற அரசியல் பற்றி விடுவோம்.

ஆனால், ஒரு உவமைக்காக, 'அல்லா' வருஷம் முழுக்கத் தானே, இருக்கிறார்!

அதென்ன, 'ரமடான்' மாதத்தில் மட்டும் நோன்பு?

வருசத்தில எந்த மாதமும், நோன்பு இருக்கலாம் தானே, என்று நாங்கள் கேட்பதில்லை?

எங்கள் ஒற்றுமையை, உடைக்கும் ஒரே நோக்கத்தோடு, எங்களால் இலகுவில் நிராகரிக்க முடியாத, எமது பலவீனங்களை நோக்கிய, ஒரு முன்னெடுப்பாகவே இது எனக்குத் தோன்றுகின்றது!

மணப்பெண் அருகில் இல்லாவிட்டால், 'வாழைமரத்தைப் பெண்ணாகப் பாவித்துத், தாலி கட்டித் திருமணம் செய்யும், இனமெல்லவா, எமது இனம்?

எல்லாவற்றுக்கும், விதிவிலக்குத் தேடினால், இறுதியில் விலக்குவதற்கு, எதுவும் மிஞ்சப் போவதில்லை, என்பது எனது, தாழ்மையான கருத்து!

எனக்குத் தான் எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன் புலிகள் இருக்கும் போதே[2009க்கு முன்] நவம்பர் 27ம் திகதியை மட்டும் தான் மாவீரர் தினமாக கடைப்பிடித்தார்கள் அப்போதே ஈழத்திலும் சரி,புலத்திலும் சரி நவம்பர் மாதத்தில் விழாக்களும்,பண்டிகைகளும் கொண்டாடினார்கள் அப்போதெல்லாம் அப்படி கொண்டாட வேண்டாம் என்று புலிகள் தடை விதித்ததாக எனக்குத் தெரியவில்லை எப்போதில் இருந்து மாவீரர் தினம் மாவீரர் மாதமாய் போனது என சொல்ல முடியுமா?...பொங்கலோ,நத்தாரோ வருடத்தில் ஒரு நாள் வந்தால் தான் அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கும் மாதம் பூரா அதைக் கொண்டாடினால் சீ என்று போய் விடும்...இப்போது சரியான ஒரு தலைமை இல்லாத படியால் ஆளாளுக்கு தங்களை பெரிதாக காட்ட‌ எங்கட‌ போராட்ட‌ம் தான் கிடைத்திருக்குது...தமிழனுக்கு நாடு வேண்டும் என்டால் முதலில் தன்ட‌ நலத்தை விட‌ நாட்டின்ட‌ நலத்தை பெரிதாய் யோசிக்க வேண்டும் ஆனால் அப்படி தமிழன் யோசிக்க மாட்டான் ஒரு சிலரைத் தவிர‌ ^_^ ...நீங்கள் சொன்ன‌ படி பார்த்தாலும் எந்த நேர‌மும்,எல்லோரையும்,எல்லாத்திக்கும் குற்றம் பிடிக்கிறதை விட்டாலே அவனுக்கு விடிவு கிடைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிஸ்கி:

ஆனால் ஒன்று எனக்கு நன்றாக தெரியும் .. அவரு கொஞ்சம் தலைகனம் மிக்கவர்.. இது யாராலும் மறுக்க முடியாது.. ..

இதில கருத்து எழுதுகிறவை, எதையும் சொல்லுங்கோ, அனால் அவர் கோவிச்சு போடுவார் என்று மாத்திரம் எழுதாதிர்கள்..அவர் இங்கே புலத்தில் கலை நிகழ்வு நடத்த வருகிற இன்னுமொருவர் என்கிற பார்வையில் பார்த்தால் சரி..., அதுதான் நான் சொல்லாம்.. உந்த வியாதியால் தான் சனம் காசை கொட்டி இந்த கோமாளிகளை-பொதுவில் சொல்லுகிறேன்- எல்லாம் இங்கே கூட்டிக்கொண்டுவந்து பார்குதுகள். நான் நினைக்கிறன் 39, 59/69, 100 டொலர் டிக்கெட் வாங்கி பார்த்து என்ன காணப்போதுகளோ தெரியவில்லை. இது முடிய இன்னும் 10 வருடம் கழித்து ரகுமான் வருவர், அப்ப அந்த 100 டொலர் 1000 ஆக மாறும்.

இதை நிறுத்த வேண்டும் அல்லது பார்க்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லாமல் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலோ இளையராஜா இசை நிகழ்வை கட்டாயம் நடத்துவார்.. தேதி முன்கூட்டியே கொடுத்தத்தற்புறம் என்ன தகறாரு உங்களுக்கு..? மாவீரர் மாதம் (மாவீரர் வாரம் அல்ல) என்று தெரிந்த பிறகும் அது இரண்டு மாதத்திற்கு முன்பே அனவுன்ஸ் பண்னிட்டார்கள்.. அப்ப எல்லாம் என்னோ குச்சி மிட்டாய் சப்பிட்டு இருந்த மாறி.. அதில் கனடா வாழ் தமிழக தமிழர்கள் கலந்து கொள்வார்கள்.. இப்ப என்னவோ.. கனடா உங்களுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்த மாறி பீல் பண்ணுகிறீர்கள்.. வேற மலேசியா தமிழன அண்டார்டிக்கா தமிழன் வேற யாருமே அங்கிட்டு கிடையாதா..? நீங்கள் மட்டுமே தமிழர்களா அங்கிட்டு...?மத்தவன் எவனும் தமிழ் இனத்தில் பிறக்கவே இல்லை..?வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தாலும் அவர்களை எல்லாம் என்ன தெருவில் பெத்த் போட்டு போய்விட்டார்களா..? இஸ்டம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் போய்கிட்டே இருங்கள் அப்புறம் என்ன..? இதெல்லாம் சத்தியமாக ரொம்ப ஓவரு...

டிஸ்கி:

ஆனால் ஒன்று எனக்கு நன்றாக தெரியும் .. அவரு கொஞ்சம் தலைகனம் மிக்கவர்.. இது யாராலும் மறுக்க முடியாது.. கல்யாணத்திற்கு வரசொன்னா பிள்ளை பேற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் என்ன ..? நீங்க முன்னாடியே அதை சொல்லி இருக்கணம்.. இப்ப வந்து கும்மாங்குத்து குத்து வது சரியில்லை..

வணக்கம் புரட்சியர்! ஒரு மனிதன் தன் கருத்தை சொல்வதற்கு கூட உரிமையில்லையா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விவாதித்து முடிக்கேலாது, ஆனால் எனக்கு பட்டத்தை சொன்னேன், அது பிழை என்றால் அதை எடுத்து விடுகிறேன். ஆனால் ஒன்று, அவரை ஒரு உதாரண புருஷர் என்று காட்ட வெளிக்கிட , எல்லாவற்றிலும் பிழை பிடிக்கலாம். தொடர்பு பட்ட செய்தி ஒன்றில், ஜெயபாலன், தனக்கு தெரிந்த வகையில் தலையங்களும் போட்டு, உள்ளடக்கமும் போட்டு இருக்கிறார், இன்னுமொருவர், அந்தக் காலத்தில் மனிசி ஓடு கூட இருக்க மாட்டிய என்றும் கேள்வி கேட்டிருக்கிறார்...நான், எங்களுக்கு பிடித்த, அல்லது சரியானது என்கிற கருத்தை- கருத்து களந்தில் நிருவுவதர்ற்கு தன்னுமே, எவ்வளவு தூரமும் கீழ் இறங்க தயாராக இருக்கிறோம். அந்த வகையில்; நான் சொல்லவந்ததை நீங்கள் எப்படியும் எடுக்கலாம்.

இங்கே இருக்கிறவர்களில் பலம், பலவீனம் என்பது ஒரு தெரியாத விடயம். அகவே இவர்களை வைத்துகொண்டு என்ன செய்யலாம், செய்ய முடியாது என்பது கடினமான அனுமானம். நானும் நீங்கள் யாழில் கருத்து எழுதுதுவதை விட கடினம்.

உண்மையிலேயே, அவர் நீங்கள் சொல்லுவது போல கோவித்து, ஏதும் முப்புரங்களும் எரிந்தால் நான் அதுக்கு பொறுப்பில்லை.

சுபம் நன்றி வணக்கம்.

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே, அவர் நீங்கள் சொல்லுவது போல கோவித்து, ஏதும் முப்புரங்களும் எரிந்தால் நான் அதுக்கு பொறுப்பில்லை.

சுபம் நன்றி வணக்கம்.

இதெல்லாம் முன்பே எப்போது அழைக்க வேண்டும் என யோசித்திருக்க வேண்டும்.. அவர் உங்கள் ரியல் அண்ணன் தம்பி கிடையாது... இன ரீதியில் கொஞ்சம் உணர்வு இருக்கலாம்.. ஆனால் கூப்பிட்டு அவமானபடுத்துவது யாருக்கும் பிடிக்காது...அவர் தடுக்கப்பட்டால் இங்கிட்டு தினமலம் உள்ளிட்ட ஊடகங்களில் இனி வரும் செய்தியையும் ஆலோசிக்க வேண்டும்.

நீங்க என்ன அனில் அம்பானியா . உங்க இஸ்டரத்திற்கு வந்து கூத்தாடிட்டு போற கோஸ்ரிய இவர்கள்..?

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது .. தமிழனுக்கு எதிரி யாரும் கிடையாது.. ம்ம்ம்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தான் எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன் புலிகள் இருக்கும் போதே[2009க்கு முன்] நவம்பர் 27ம் திகதியை மட்டும் தான் மாவீரர் தினமாக கடைப்பிடித்தார்கள் அப்போதே ஈழத்திலும் சரி,புலத்திலும் சரி நவம்பர் மாதத்தில் விழாக்களும்,பண்டிகைகளும் கொண்டாடினார்கள் அப்போதெல்லாம் அப்படி கொண்டாட வேண்டாம் என்று புலிகள் தடை விதித்ததாக எனக்குத் தெரியவில்லை எப்போதில் இருந்து மாவீரர் தினம் மாவீரர் மாதமாய் போனது என சொல்ல முடியுமா?...பொங்கலோ,நத்தாரோ வருடத்தில் ஒரு நாள் வந்தால் தான் அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கும் மாதம் பூரா அதைக் கொண்டாடினால் சீ என்று போய் விடும்...இப்போது சரியான ஒரு தலைமை இல்லாத படியால் ஆளாளுக்கு தங்களை பெரிதாக காட்ட‌ எங்கட‌ போராட்ட‌ம் தான் கிடைத்திருக்குது...தமிழனுக்கு நாடு வேண்டும் என்டால் முதலில் தன்ட‌ நலத்தை விட‌ நாட்டின்ட‌ நலத்தை பெரிதாய் யோசிக்க வேண்டும் ஆனால் அப்படி தமிழன் யோசிக்க மாட்டான் ஒரு சிலரைத் தவிர‌ ^_^ ...நீங்கள் சொன்ன‌ படி பார்த்தாலும் எந்த நேர‌மும்,எல்லோரையும்,எல்லாத்திக்கும் குற்றம் பிடிக்கிறதை விட்டாலே அவனுக்கு விடிவு கிடைக்கும்

உங்களுக்காக என்று எழுதவில்லை, ரதி! பொதுவாகத் தான் எழுதினேன்!

தனிப் பட்ட முறையில், இப்படியான நிகழ்சிகளில் கலந்து கொள்வதை எனது மனம், ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால், இந்த நிகழ்சிகளால் சேர்க்கப் படும் பணத்தால், ஈழத்தில் உள்ள உறவுகளுக்குப் பிரயோசனம் ஏற்படுமென்பதால், நுழைவுச் சீட்டுக்களை வாங்கிக் கொள்வேன்!

அண்மையில் நீங்கள் இலங்கைக்குப் போனீர்களோ தெரியாது.

யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின், முன்பு, இருபதே வயதான ஒரு இளம்பெண்ணொருவர், தனது மருத்துவச் செலவுக்காக, என்னிடம் பணம் கேட்டார். அவர் வேறு எவரிடமும் கேட்கவில்லை.என்னை, வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததாக,எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டாரோ என்றும் எனக்குத் தெரியாது. தெரியாத ஒருவரிடம் பணம் கேட்க வேண்டி வந்து விட்டதே, என்ற அவமானம், அவரது முகத்தில் எழுதியிருந்தது.

பக்கத்தில், எனது மனைவியும் மகளும், நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்தேன்,

உன்னிட்ட இருக்கிற, ருபீஸ் எல்லாத்தையும் கொடு, என்று எனது மனைவி கூறினாள்.கொடுத்த தொகையை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

இந்தச் சூழ்நிலையில், எங்களுக்கு, இத்தகைய விழாக்கள் தேவை தானா?

இத்தகைய எடுப்புகளால் தானே, ராஜ ராஜ சோழனின்,சாம்ராச்சியம் அழிந்து போனது?

நவம்பர் மாதத்தில் மட்டுமல்ல , எந்த மாதத்திலும் இவை வேண்டாம் என்பது தான் எனது கருத்தாகும்.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்! என்றான் பாரதி.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், உடை கிடைக்கும் வரை, கதர் மட்டும் தான் அணிவேன் என்றார் காந்தி.

இவை நடக்கக் கூடிய காரியங்களல்ல தான்.

ஆனாலும், இன்னொரு மனிதனை, இவை சிந்திக்க வைக்குமெனில், அது அந்தப் பெரியவர்களுக்கு இது வெற்றி தானே, ரதி?

தங்கள் கருத்துக்கு நன்றிகள், ரதி.

உங்கள் கருத்துக்கு ஒரு பச்சை. என்னால் உங்களளவு இருக்க முடியாவிட்டாலும் முடிந்தளவு தவிர்த்து வருகிறேன்.

[size=5]இன்று தான் இப்படி ஒன்று இருக்கு எண்டு கண்டேன். இவ்வளவையும் வாசிக்கப் பொறுமையில்லை.என்னப்பா பிரச்சணை? வாறவர் வந்து பாடீட்டுப் போகட்டுமே. காசிருந்தால் போங்கோ, இல்லாட்டால் பேசாமல் இருங்கோ. மாவீரர் மாதம் என்று விட்டு குத்தாட்டம் போடாமலா இருக்கின்றீர்கள்? மாவீரர் வாரம் தான் முக்கியமானது!!!!!![/size] [size=6] நவம்பர் 21- 27[/size].

Edited by அலைமகள்

யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின், முன்பு, இருபதே வயதான ஒரு இளம்பெண்ணொருவர், தனது மருத்துவச் செலவுக்காக, என்னிடம் பணம் கேட்டார். அவர் வேறு எவரிடமும் கேட்கவில்லை.என்னை, வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததாக,எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டாரோ என்றும் எனக்குத் தெரியாது. தெரியாத ஒருவரிடம் பணம் கேட்க வேண்டி வந்து விட்டதே, என்ற அவமானம், அவரது முகத்தில் எழுதியிருந்தது.

பக்கத்தில், எனது மனைவியும் மகளும், நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்தேன்,

உன்னிட்ட இருக்கிற, ருபீஸ் எல்லாத்தையும் கொடு, என்று எனது மனைவி கூறினாள்.கொடுத்த தொகையை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

[size=5]இந்தச் சூழ்நிலையில், எங்களுக்கு, இத்தகைய விழாக்கள் தேவை தானா?[/size]

இத்தகைய எடுப்புகளால் தானே, ராஜ ராஜ சோழனின்,சாம்ராச்சியம் அழிந்து போனது?

மற்றவர்கள் மீது விரலைச் சுட்டிக் காட்டும்போது, நான்கு விரல்கள் எம்மை நோக்கித்தான் இருக்கின்றன. அந்த நான்கு விரல்கள் உங்களுக்கும் இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்தவைகள் இன்னும் மறக்கப்படவில்லை.

சகாறா அக்காவின் நான்கு விரல்களும் கூறுபவை எவை என்று எனக்கும் சொல்லுங்கோ, அறிந்துகொள்ள விரும்புகின்றேன். குற்றச்சாட்டுக்கள் எவை என்று தெரிந்தால்தானே அறிந்துகொள்ளமுடியும்.

சகாறா அக்காவின் நான்கு விரல்களும் கூறுபவை எவை என்று எனக்கும் சொல்லுங்கோ, அறிந்துகொள்ள விரும்புகின்றேன். குற்றச்சாட்டுக்கள் எவை என்று தெரிந்தால்தானே அறிந்துகொள்ளமுடியும்.

அது அவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். மற்றவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அப்படித் தெரிய வேண்டுமானால் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல் சீண்டுபவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து நான் இந்தத் திரியில் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசித்து விட்டு இங்கு கருத்திடுங்கள். யாரோ ஏதோ வந்து எழுதினால் என்னில் ஏன் பழியைப் போட முனைகிறீர்கள்? முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.

இதென்ன கரைச்சலாய் இருக்கிது. உங்களைச்சீண்டி நான் என்னத்தை காண்பது? நான் எல்லாவற்றையும் வாசித்தபின்னரே இதைக்கேட்கின்றேன்.

சகாறா அக்கா இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு எதிராக அறிக்கை விட்ட ஒருவர் 2009 காலத்தில் இளையோர் போராட்டத்திற்கு இடையூறாக இருந்ததாக கூறினார். நீங்கள் சகாறா அக்காவும் ஏதோ தவறு செய்ததுபோல் கூறுகின்றீர்கள். அப்படியாயின் அது என்ன என்று கூறுங்கள்.

தனிப் பட்ட முறையில், இப்படியான நிகழ்சிகளில் கலந்து கொள்வதை எனது மனம், ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால், இந்த நிகழ்சிகளால் சேர்க்கப் படும் பணத்தால், ஈழத்தில் உள்ள உறவுகளுக்குப் பிரயோசனம் ஏற்படுமென்பதால், நுழைவுச் சீட்டுக்களை வாங்கிக் கொள்வேன்!

அண்மையில் நீங்கள் இலங்கைக்குப் போனீர்களோ தெரியாது.

யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின், முன்பு, இருபதே வயதான ஒரு இளம்பெண்ணொருவர், தனது மருத்துவச் செலவுக்காக, என்னிடம் பணம் கேட்டார். அவர் வேறு எவரிடமும் கேட்கவில்லை.என்னை, வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததாக,எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டாரோ என்றும் எனக்குத் தெரியாது. தெரியாத ஒருவரிடம் பணம் கேட்க வேண்டி வந்து விட்டதே, என்ற அவமானம், அவரது முகத்தில் எழுதியிருந்தது.

பக்கத்தில், எனது மனைவியும் மகளும், நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்தேன்,

உன்னிட்ட இருக்கிற, ருபீஸ் எல்லாத்தையும் கொடு, என்று எனது மனைவி கூறினாள்.கொடுத்த தொகையை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

இந்தச் சூழ்நிலையில், எங்களுக்கு, இத்தகைய விழாக்கள் தேவை தானா?

இத்தகைய எடுப்புகளால் தானே, ராஜ ராஜ சோழனின்,சாம்ராச்சியம் அழிந்து போனது?

நவம்பர் மாதத்தில் மட்டுமல்ல , எந்த மாதத்திலும் இவை வேண்டாம் என்பது தான் எனது கருத்தாகும்.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்! என்றான் பாரதி.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், உடை கிடைக்கும் வரை, கதர் மட்டும் தான் அணிவேன் என்றார் காந்தி.

இவை நடக்கக் கூடிய காரியங்களல்ல தான்.

ஆனாலும், இன்னொரு மனிதனை, இவை சிந்திக்க வைக்குமெனில், அது அந்தப் பெரியவர்களுக்கு இது வெற்றி தானே.

புங்கையூரன் அண்ணா, இந்த திரியில் கருத்து எழுத கூடாதென்று இருந்தேன். உங்களுடைய இந்த கருத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இது தான் எனது நிலையும். இன்னொரு திரியில் ஏற்கனவே என் முடிவை குறிப்பிட்டு விட்டேன். உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது. :)

பச்சை முடிந்து விட்டது. இரு கருத்துகளுக்கும் போட பின்னர் வருகிறேன். :)

என்னால் உங்களளவு இருக்க முடியாவிட்டாலும் முடிந்தளவு தவிர்த்து வருகிறேன்.

இந்த விடயம் தொடர்பாக உங்களுக்கும் என் பாராட்டுகள். :)

Edited by துளசி

523676_10151926600115752_346295186_n.jpg

இளையராஜா ஊடக பேட்டிக்கு வருகின்றார் .ஒருபக்கம் டிரினிட்டி எவன்ஸ் உரிமையாளர் மறுபக்கம் போட்டோ பாஸ்ட் சில்வெஸ்டர் .இவர்கள் தான் இந்த நிகழ்சியை நடாத்துபவர்கள்.

இளையராஜாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. ஏன் இதற்குள் மாட்டினேன் என்பதை நிச்சயமாக பீல் பண்ணுகிறார்.

வீடியோவை பார்த்தால் மாலையை களுத்தில் படவும் விடவில்லை. பொன்னாடையை தன்னும் விரும்பவில்லை. இதையெல்லாம் வரவேற்பாக கண்டு ரசிக்கவில்லை சுத்த "ராகிங்"காகவே பார்க்கிறார். ஓடிசனை பார்த்தால் ஒரே போர் அடிக்கும் முகத்துடன் காணப்படுகிறர். (அதற்கபவரிடம் காட்டிய கலைஞ்ஞர்களின் தரம் காணாது இருந்திருக்கவும் சந்தர்ப்பம்) சின்னமேளத்தை மேடையில் ஏற்றி ஆட்டுவோர் போலத்தான் தன்னை மேடையில் வைத்து தங்கள் அலுவல்களை கொண்டு போவதாக கணக்கு பண்ணுகிறார் போலிருக்கு.

அழைத்து செல்வோர் பொடிகாட்டுகள் போல முகத்தை வைத்திருக்கிறாகள்.

இவர்களின் Weakness தங்களுக்கு தாங்கள் அழைத்த கலைஞ்ஞர்களிடம் செல்வாக்கு இல்லாதது. அரச புரோகிதர்கள் உள்ப்புந்து கலைஞ்ஞர்கள் வரை பேச இடம் கொடுத்துவிட்டார்கள். இல்லையேல் பாரதிராஜா வெளிப்படையாக அரச ஊடுருவல் இருப்பது தனக்கு விளங்கப்படுத்த பட்டதாக கூறியிருக்க மாட்டார். இளையராஜாவின் முகத்தில் நம்பிக்கையை எள்ளவும் காணவில்லை.

இனி இவர்கள் ஒரு நிகழ்சிக்கு கூப்பிடும் போது இரண்டுமுறை செக் பண்ணிக்கொள்ளுவர் போல முகத்தில் கணப்படுகிறது.

நிகழ்சியை ரத்து செய்ய நேர்ந்தால் இளையரஜா பெருது படுத்தமாட்டர் என்று நினக்கிறேன். அரசு ஆயிரம் பொய்களை சொல்லி தமிழ்நாடு கலைஞ்ஞர்களை அழைப்பதால் அவர்களில் சிலர் கொழும்புவரை போய்விட்டு திரும்பியிருக்கிறார்கள். உன்னி நிகழ்சி முடிந்த பின்னர் அவமானத்தை மூடி மறைக்க மன்னிப்பு கேட்டவர். இளையராஜா, இவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தன்னை மகாராஜாவாகவே கருதுவார்.

Edited by மல்லையூரான்

இதென்ன கரைச்சலாய் இருக்கிது. உங்களைச்சீண்டி நான் என்னத்தை காண்பது? நான் எல்லாவற்றையும் வாசித்தபின்னரே இதைக்கேட்கின்றேன்.

சகாறா அக்கா இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு எதிராக அறிக்கை விட்ட ஒருவர் 2009 காலத்தில் இளையோர் போராட்டத்திற்கு இடையூறாக இருந்ததாக கூறினார். நீங்கள் சகாறா அக்காவும் ஏதோ தவறு செய்ததுபோல் கூறுகின்றீர்கள். அப்படியாயின் அது என்ன என்று கூறுங்கள்.

அதற்கு அவரின் அனுமதிதான் வேண்டுமே தவிர உங்களின் அனுமதி அல்ல. வேண்டுமானால் அவரின் அனுமதியைப் பெற்றுத் தாருங்கள் அல்லது அவரிடம் எனக்கு அனுமதியைக் கொடுக்குமாறு தெரிவித்து விடுங்கள். அவரின் அனுமதி கிடைத்தால் நான் எனக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதுகிறேன்.

தமிழச்சி,

கருத்தாடல் தளத்திற்கு வந்தபிறகு ஒரு கருத்தை முன்வைத்தபின்னர் அதனை இன்னொருவர் விளக்கம் கேட்குமிடத்து அதற்கு விளக்கம் கொடுப்பதில் தவறில்லை. தனி மனித வாழ்க்கைக்கப்பால் உங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். அத்தோடு இந்தத் திரிக்கும் நீங்கள் என்மீது வைக்கப்போகும் குற்றச்சாட்டுகளுக்கும் இருக்கக்கூடிய சம்பந்தத்தையும் தெளிவு படுத்துங்கள். அதற்கு முழுமையான அனுமதியை நான் இந்த இடத்தில் தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:(

இறைவா எனக்கு கண், காது, வாய் ஆகிய முப்புலன்களையும் அடக்கிவிடு. :icon_mrgreen:

இப்படி நடத்தால் முதலில் சந்தோஷப்படுவது உங்கள் கணவராகதான் இருக்கும் :lol::D

அதற்கு அவரின் அனுமதிதான் வேண்டுமே தவிர உங்களின் அனுமதி அல்ல. வேண்டுமானால் அவரின் அனுமதியைப் பெற்றுத் தாருங்கள் அல்லது அவரிடம் எனக்கு அனுமதியைக் கொடுக்குமாறு தெரிவித்து விடுங்கள். அவரின் அனுமதி கிடைத்தால் நான் எனக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதுகிறேன்.

தமிழச்சி,

கருத்தாடல் தளத்திற்கு வந்தபிறகு ஒரு கருத்தை முன்வைத்தபின்னர் அதனை இன்னொருவர் விளக்கம் கேட்குமிடத்து அதற்கு விளக்கம் கொடுப்பதில் தவறில்லை. தனி மனித வாழ்க்கைக்கப்பால் உங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். அத்தோடு இந்தத் திரிக்கும் நீங்கள் என்மீது வைக்கப்போகும் குற்றச்சாட்டுகளுக்கும் இருக்கக்கூடிய சம்பந்தத்தையும் தெளிவு படுத்துங்கள். அதற்கு முழுமையான அனுமதியை நான் இந்த இடத்தில் தருகின்றேன்.

இந்த திரியின் நோக்கம் தவிர்த்து திரிக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத விடயங்கள் எழுதுவது சரியா என ஆராய்வது நல்லது.

நன்றி

எவ்வளவு நாளாக இந்த விடயம் பற்றி பேசப்படுகிறது. அப்போதெல்லாம் இதைப்பற்றி யாரும் எதிர்க்கவுமில்லை பேசவுமில்லை. நேற்றையதினம் இசைஞானி ரொரன்டோ வந்ததன் பிற்பாடு இப்படி ஒரு விடயம் முகநூலில் பரவலாக பரிமாறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இருக்கும் விடுதலை வீச்சைக் குறைக்கும் என்று நினைப்பதற்கு இடமில்லை. அந்தக்கலைஞனுடைய நிகழ்வு நவம்பர் 3ந்தேதிதான் இடம்பெறுகிறது. முக்கியமான மாவீரர் வாரத்தில் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எம்மக்கள் மீதான அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஆர். கே. செல்வமணி இந்த அறிக்கையை விட்டிருப்பது மனதிற்கு இதமாகத்தான் இருக்கிறது நாங்கள் தனித்தவர்கள் இல்லை என்பதை இந்த அறிக்கைகள் உணர்த்தத்தான் செய்கின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுக்கு அரசியல் பின்னணி இருக்குமென்றால் அதனை ஆதாரத்துடன் தருவதே நன்று. இன்று முகநூலில் நடமாடும் இந்த அறிக்கையானது ஒரு மாபெரும் கலைஞரை கொச்சைப்படுத்துவதற்கும் அதே நேரம் அவருடைய இரசிகர்களாக இருக்கும் பல ஈழத்தமிழர்களையும் காயப்படுத்துவதற்கும் பயன்படப்போகிறது என்பதை நிச்சயமாக ஆர்.கே . செல்வமணி நினைத்திருக்கமாட்டார். ஏற்கனவே ஈழவர்களுக்குள் 2009 இற்கு பிற்பாடு தோன்றியுள்ள குழும அரசியல் சேறடிப்புகளால் விடுதலை வேணாவாக் கொண்ட மாபெரும் மக்கள் சக்தி மழுங்கிப்போய்விட்டது. இப்போது இந்த இசைஞானியின் நிகழ்வை ஏளனப்படுத்துவதன் மூலம் இன்னும் வெறுப்படையும் சூழலை உருவாக்க எத்தனிப்போர் இதனால் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?

ஈழவர் வாழ்வில் மாவீரர் பற்றிய நினைவை துதிப்பை எந்தக் கொம்பனும் வந்து சாய்த்துவிட முடியாது..... சாய்ந்து விடும் என்று நம்புவதற்கு அவ்வளவு பலவீனமாகவா எங்களை எங்கள் மாவீரச் செல்வங்கள் விட்டு சென்றிருக்கிறார்கள்? விடுதலையை விரும்புவது அவ்வளவு பலவீனமாகப் போய்விட்டதா?

நவம்பர்3 றோவின் கைவரிசை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.