Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களை பெரும் அதிர்சிக்கும் பரபரப்புக்கும் உள்ளாக்கியுள்ள பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பரிதி என அழைக்கப்படும் நடராஐா மதீந்திரன் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்படத்தி குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்துமாறு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை மனிதவுரிமைகள்,அரசியல் சனநாயக உரிமைகளைப் பேணும் ஜரோப்பிய நாடொன்றில் தனிமனிதப் பாதுகாப்பிற்கு உத்தவாதமின்மை,பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வினை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாக இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரென்சு அரசுத்தலைவர் தலைமை அமைச்சர் உள்துறை அமைச்சர் வெளிவிவாரத்துறை அமைச்சர் உட்பட பிரென்சு உயர்நீதித்துறையினை நோக்கி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

உத்தியோகபூர்வமாகன முறையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு பல பிரென்சு அரசியல் பிரதிநிதிகளிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த படுகொலைச் சம்பவத்தினை மையப்படுத்தி பல்வேறு பிரென்சு ஊடகங்களுகம் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில் தமிழர் தரப்பின் இக்கோரிக்கை தொடர்பில் அவ்வூடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு மோதல் பிரச்சினைகளுக்குள் குறித்த படுகொலைச் சம்பவத்தினை பிரென்சு காவல்துறையினர் உள்ளடக்கி விடாதிருக்கும் பொருட்டு, சட்ட வல்லுனர்களை அமர்த்துவதன் மூலம் முறையான சட்ட நடவடிக்கைகளின் வழியே குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவதனை உறுதி செய்யும் விதத்தில் இதற்கான தொடர் நடவடிக்கைகளை நா.த.அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் முன்னெடுப்பார் என நா.த.அரசாங்கத்தின் அமைச்சரவைக் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பரிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவருக்கு மதிப்பளிக்கும் பொருட்டு வேறு விடயங்கள் எதுவும் பேசப்படாது நிறைந்வடைந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இணைந்து பயணிப்போம்

இலட்சியம் நோக்கி.................

  • கருத்துக்கள உறவுகள்

முடிவின்றி தொடரும் எம் விடுதலைப் போராட்டப் பாதையில் ஆயுதப்போராட்ட வழியைக் கடந்து அரசியல் சனனாயகமுறைமைகளின் கீழ் தமிழின விடுதலைக்காக ஓய்வற்று ஒளிர்ந்த பருதியென்ற சுடரொன்று கயவர்களால் அணைக்கப்பட்டுள்ளது. அவருக்காக ஏற்றிய ஒளியில் அவரது பணிதொடர ஆயிரமாயிரமாய் தமிழர்கள் செயற்களம் புகுந்து அவர் பணி தொடர்வர். அதுவே அவரது ஆத்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். ஒரு விடுதலை வீரரனின் சாவு காலத்தைக் கடந்து வாழும் சாகாவரம் கொண்டது. வீரனே தலைசாய்த்து வணங்குகிறோம்.

வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு காவல்த்துறையை தவிர மற்ற எல்லா தமிழ் அமைப்புக்களும் புத்திசாலியாத்தான் இருக்கிறார்கள். பிறெஞ்சு காரர் சரியான மொக்கனுகள்.

Edited by sathiri

பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் போலீஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரீயவருகிறது. DCRI (Direction Centrale du Renseignement Intérieur) என்பது பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு ஆகும்.DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் André Beauchamp, ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார் .அத்துடன், தற்போது TCCயை சேர்ந்த மூவர் தமக்கு உயிராபத்து உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் அறியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படுகொலை தொடர்பான அனைத்து விடயங்களும் வெளியே வரவேண்டும்.

இந்தப்படுகொலை தொடர்பான அனைத்து விடயங்களும் வெளியே வரவேண்டும்.

தாயக மீட்பிற்கு பணம் சேர்த்தது ,,,,,,,,,,,,,,,,,தாயக மீட்பிற்காய் உண்மையாய் ,உணர்வாய் செயல்பட்டால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்டு சிறையில் இடும் செய்திகள் மட்டும் விரைவாய் இவர்களால் புலனாய்வு செய்யமுடியும் .......ஆனால் இப்படியான படுகொலைகள் சம்பந்தமாக இவர்களால் முழுமையாக புலனாய்வு செய்ய முடியாது ...............இது ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும் ..........

வைகோ கண்டனம்.

http://news.vikatan.com/?nid=11170

சென்னை:பிரான்ஸில் விடுதலைப்புலி தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நவம்பர் 8-ம் தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஓர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம், தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்திரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது 8-ம் தேதி இரவில் கொலைகார நயவஞ்சகர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.

நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளகர்த்தர்களுள் பரிதியும் ஒருவர் ஆவார். 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் வன்னிக் காடுகளில் இடைவிடாத இந்திய- சிங்கள ராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே வான்வெளிக் குண்டு வீச்சுக்கும், பீரங்கி தாக்குதல்களுக்கும் ஊடே நான் எனது உயிரினும் மேலாக போற்றுகின்ற மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த என் வாழ்வின் பொன்னான அந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் கடந்த ஆண்டு மே 30-ம் தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின்போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போது மனம் பாறையாக கனக்கிறது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த ஆண்டு ஜுன் 1-ம் தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்ற நான், மே 30-ம் தேதி பாரீஸ் நகரத்துக்கு சென்றேன்.அங்குதான் ஈழத்தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அந்த சந்திப்பு நடந்தது.பரிதியின் துணைவியாரையும், மகனையும், மகளையும் கண்டு உரையாடினேன்.

ஈழத்தில் நான் தலைவரோடு தங்கியிருந்தபோது வன்னிக் காட்டின் வேறொரு பகுதியில் பரிதி செயல்பட்டார். 1990-ம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்க முடியாத நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.

பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டபின் பரிதி கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில் கொடி யோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.

இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில் கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலக்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமாக கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்துவிட்டது.

பரிதியின் துணைவியாரையும்,அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில் தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது.அந்த வீரத் திருமகனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.

தலைமைக்கும்,இயக்கத்துக்கும் தமிழ்ஈழ விடுதலை லட்சியத்திற்கும், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன் பரிதி,எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ்ஈழ லட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படிக் கொலைகளைக் செய்பவர்கள் ஏதோ ஒருவகையில் சிறிலங்கா அரச பின்ணனியைக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்கள் எந்த அமைப்பாக இருப்பினும்இ அவர்களுடைய செயற்பாட்டில் சிறிலங்கா அரசின் செயற்திட்டம் இருக்கின்றது. அதனால் உங்களால் குற்றவாளிகளை இனம் கண்டு பிடிக்க முடிந்தால் காவற்துறைக்கு அறிவியுங்கள்... இல்லை எனில் சிறிலங்கா அரசினைக் குற்றம்சாட்டுங்கள்... அதில் எந்தவித தவறும் கிடையாது... தாங்கள் ஏதோ புலனாய்வுக்காரர் போன்று பீத்துகின்ற வேலைகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.

-----------------------------

உங்களுக்கு யாருக்காவது இப்படி ஏதும் உயிர் ஆபத்து இருப்பதாக நம்பினால்இ நிச்சயம் காவற்துறையிடம் சென்றுஇ சிறிலங்கா அரசிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகப் புகார் தெரிவியுங்கள். ஆதாரத்துக்கு கொழும்பின் பொதுத் தொலைபேசியில் இருந்து 4, 5 அழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்...

எதிர்வரும் காலத்தில் உங்களை யாராவது காயப்படுத்தினான், அல்லது ஏதும் பாரதுாரமான செயலில் உங்கள் மீது ஈடுபட்டால் நிச்சயம் அது சிறிலங்கா அரசு மீதான புகாராகத் தான் பதியும். வாழும்போது தான் எம்மால் சிறிலங்கா அரசைத் தோற்கடிக்க முடியவில்லை...

இது ஒருவகையில் சிறிலங்கா அரசு சம்பந்தப்பட்ட நபர்களால், அல்லது வேறு நபர்களால் வரும் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பினைக் கொடுக்கும்...

ஆனாலும் நீங்கள் இப்படிப் புகார் கொடுக்கும்போது உங்கள் கை சுத்தமானது என்பதையும் உங்கள் நாட்டு அரசுக்குக் காட்டிக் கொள்ளதல் அவசியம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தாயம் என்பதுபோல் எமக்குள் இருக்கக்கூடிய பிரிவினைகளை மிக இலகுவாகப் பயன்படுத்திய ஈனச்செயலாகவே இருக்கிறது. எவர் இதனை செய்தார் என்பதை அறியாமலே எமக்குள் ஒருவரை ஒருவர் சந்தேகிப்பது மிகவும் ஆபத்தானது. எவர் இதனைச் செய்திருந்தாலும் உரிய தண்டனை கிடைக்க அங்குள்ளவர்கள் பாடுபடவேண்டும். எவரையும் எவரும் போட்டுத்தள்ளலாம் என்று நமக்குள் நாமே வதந்திகளைப்பரப்ப அனுமதி அளிக்கக்கூடாது. எமக்குள் இருக்கக்கூடிய இவ்வகையான குண இயல்புகளால் குற்றவாளி தப்பிப்பதற்கு நாமே வழிவகுத்துவிடக்கூடாது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தாயம் என்பதுபோல் எமக்குள் இருக்கக்கூடிய பிரிவினைகளை மிக இலகுவாகப் பயன்படுத்திய ஈனச்செயலாகவே இருக்கிறது. எவர் இதனை செய்தார் என்பதை அறியாமலே எமக்குள் ஒருவரை ஒருவர் சந்தேகிப்பது மிகவும் ஆபத்தானது. எவர் இதனைச் செய்திருந்தாலும் உரிய தண்டனை கிடைக்க அங்குள்ளவர்கள் பாடுபடவேண்டும். எவரையும் எவரும் போட்டுத்தள்ளலாம் என்று நமக்குள் நாமே வதந்திகளைப்பரப்ப அனுமதி அளிக்கக்கூடாது. எமக்குள் இருக்கக்கூடிய இவ்வகையான குண இயல்புகளால் குற்றவாளி தப்பிப்பதற்கு நாமே வழிவகுத்துவிடக்கூடாது.

உண்மை அக்கா ,,,,,,,,,,,,யதார்த்தமான கருத்து ......முதலில் நாம் எமக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவோம் .............அதன் பின் ஓர் குரலாய் நிற்போம் ......................ஆனால் இன்று ...........................................................

  • கருத்துக்கள உறவுகள்

பரிதி அண்ணாவை கொலை செய்தவர் தான்... இவர் என்று, மற்றவர்கள்... பழி வாங்க நினைத்தால்...

தொடரும்... படு கொலைகளை, நிறுத்த... எந்தக் கொம்பனாலும்... முடியாது.

கேணல் பரிதி அண்ணாவின் சாவு, புலம் பெயர் தேசத்தில்... இறுதிச் சாவாக இருக்கட்டும்.

[size=8]கேணல் பரிதி அண்ணாவின் சாவு, புலம் பெயர் தேசத்தில்... இறுதிச் சாவாக இருக்கட்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாய்ந்தடித்து சிங்கள அடிவருடி இணையங்கள் எழுதுகின்ற புனைகதைகளைப் படிக்கின்றபோது, இதன் பின்ணனியில் சிங்கள அரசு பின்ணனியில் இருப்பது தொடர்பான சந்தேகங்கள் மேலும்மேலும் வலுக்கின்றது.

கேணல். பருதி அவர்களுக்கு நோர்வேயில் TTC அலுலகத்தில் செய்யட்டபளர்கள் வீரவணக்கம்.

68422_412451115494933_1329233619_n.jpg

308800_412451162161595_1082772370_n.jpg

525481_412451198828258_961214286_n.jpg

22297_412451292161582_233700246_n.jpg

[size=5]TAMIL CENTRE FOR HUMAN RIGHTS - TCHR/CTDH[/size]

[size=5]CENTRE TAMOUL POUR LES DROITS DE L'HOMME[/size]

[size=5](Established in 1990)[/size]

[size=5](UN accredited NGO to the World Summit on Information Society and the Warsaw Conference)[/size]

[size=5]www.tchr.net[/size]

[size=5]Ref : HT21/PR/2012 10 November 2012[/size]

[size=6]Sri Lankan state terrorism spreads to Paris, France[/size]

[size=5]“Assassination makes only martyrs, not converts”[/size]

[size=5]Alphonse de Lamartine, French writer, poet and politician 21 October 179028 February 1869[/size]

[size=5]With deep sadness and grief we, TCHR, publish this press release on the assassination carried out by the Sri Lankan military intelligence on a Tamil activist, a French citizen in Paris, France - Nadarajah Mathinthiran alias Parithi, nom de guerre Regan.[/size]

[size=5]There is no doubt that this assassination was carried out by the Sri Lankan military intelligence which is directly under the Sri Lanka President Mahinda Rajapaksa and his brother Gotabaya Rajapaksa, the Defence Secretary.[/size]

[size=5]Last Thursday, 8 November 2012, Parithi left his office located at 341 rue de Pyrenees in the 20th arrondissement of Paris, at 9.00 pm (21.00 hrs). The assassin, who must have known Parithi’s daily movements precisely, was waiting outside his office. He cold-bloodedly opened fire on Parithi, killing him on the spot. Parithi’s colleagues who were with him were stunned at what they witnessed.[/size]

[size=5]Parithi joined the Liberation Tigers of Tamil Eelam – LTTE in 1983. He was injured in battle in 1988 and left the LTTE. Being an LTTE combatant he had participated in many battles against the Sri Lankan security forces.[/size]

[size=5]He sought political asylum in France in 1990 and worked as an accounts clerk, living with his wife and daughter. In 2004, he became a full time activist and was in charge of the Tamil Coordinating Committee - TCC in Paris. He consistently supported the struggle for the right to self-determination of the Tamil people.[/size]

[size=5]In 2004, during the so-called “peace time”, Parithi went to Sri Lanka. He was threatened and followed by the Sri Lanka intelligence service on his arrival at Colombo Airport until he went to the French embassy in Colombo and made a complaint. The French embassy in Colombo is well aware of this incident.[/size]

[size=5]However, in April 2007, due to strong anti-LTTE lobbying, Parithi and thirteen other members of the TCC, were brought to justice by the French authorities. As a result, Parithi served a prison sentence until 2010. His re-appeal is still pending in the courts.[/size]

[size=5]On leaving prison, he saw the devastated Tamil diaspora, shocked and grieved by the Mullivaighzhal massacres of May 2009. Parithi continued to serve the Tamil cause.[/size]

[size=5]Last year, in October, there was an assassination attempt on him by a few mercenaries working with the Sri Lanka military intelligence. This attack took place a few yards away from where Parithi was assassinated last Thursday. During that incident, the attackers used batons and swords, but Parithi being an expert in martial arts, escaped this attempted assassination with a few injuries. During this incident two other colleagues of his were also injured.[/size]

[size=5]The way last Thursday’s assassination took place proves that killings carried out by the military intelligence in Sri Lanka, have now moved to European capitals as well.[/size]

[size=5]In the recent past, the Sri Lankan government transferred a few Sri Lankan military intelligence officials to European countries. Located outside Sri Lankan embassies, they maintain surveillance on Tamil activists who are working round the clock in foreign countries. It is believed that Pakistani military intelligence officials assist them.[/size]

[size=5]We have personally seen in Paris, especially in the La Chapelle/Gare du Nord area, many Urdu-speaking men in gangs following Tamil activists and observing the movements of Tamils who go shopping there.[/size]

[size=5]One of the electronic media has said of Parithi that, Two weeks ago, the French legal proceedings sanctioned him a 10 months probation period that would have put him under close monitoring with restricted movement, including electronic monitoring. This term was to commence on Friday, and had it commenced, it would have been difficult for anyone to assassinate him, the legal sources further said. (Excerpt) [/size]

[size=5]http://www.tamilnet.com/art.html?catid=13&artid=3573[/size]

[size=5]If this is the case, this could be one of the clues to who the assassin is and how he knew about impending electronic monitoring of Parithi, due to start on the following day?[/size]

[size=5]At the same time, geopolitics also plays a major role in this assassination. We cannot ignore the fact that, in the UN UPR review on 1 November 2012, 100 recommendations were rejected by Sri Lanka. One of the strongest of these (129.63), was made by France, and recommended that Sri Lanka:[/size]

[size=5]“Create a reliable investigation commission consisting of professional and independent investigators to identify, arrest and prosecute the perpetrators of the Muttur murders – France.” (Excerpt from the draft report of the Working Group on the Universal Periodic Review - A/HRC/WG.6/14/L.14 –)[/size]

[size=5]Also one cannot ignore the speech of Minister Mahinda Samarasinghe in the same UPR process in which he said: “...At the same time, we were not complacent but tried our utmost to prevent and forestall acts of destabilization from within and outside the country. There are still some elements that support the LTTE’s cause of dismemberment and separation of our island nation. We are aware of these initiatives and will defeat them by our ongoing strategy of re democratization, reconciliation, reconstruction and development.” (Excerpt from Sri Lanka Minister, Mahinda Samarasinghe speech in the UN UPR session on 1 November 2012)[/size]

[size=5]During the UPR process on Sri Lanka, delegates were surprised to hear the Minister, Mahinda Samarasinghe pass the Sri Lankan military off as saints.[/size]

[size=5]He said during the aforementioned speech, “From May 2009 to October 2012, the Army has constructed 4,652 permanent new houses; 6,171 semi-permanent houses and has renovated 7,454 houses, through their initiative and efforts. It has constructed 73 schools, renovated nearly 500 old school buildings and has constructed 23 school playgrounds...”[/size]

[size=5]Now we understand why Sri Lanka is portraying the military as saviour and saints! It is so obvious that they are trying to disguise their real intentions, on the one hand, their colonisation programme on the island and on the other hand their international programme of repression.[/size]

[size=5]All these indicators are enough to prove that Sri Lankan State terrorism has spread to a European capital, Paris and there are fears of impending similar incidents in other European countries. The assassination of Nadarajah Mathinthiran alias Parithi/Regan was organised and carried out by the Sri Lankan military intelligence probably with the help of Pakistan’s intelligence. We understand that Pakistan’s official who worked in Colombo has been posted to Paris, France in the recent past.[/size]

[size=5]The international community has grappled with finding solutions to state terrorism in Iraq, Afghanistan, Tunisia, Egypt and Libya. These countries also had elections, but democracy and rule of law never prevailed.[/size]

[size=5]Today it is the same with Sri Lanka. What is the response of the International Community, when it clearly sees Sri Lankan state terrorism is on its door step?[/size]

[size=5]We take this opportunity to convey our heartfelt condolences to Parithi’s wife, daughter, parents and others. [/size]

[size=5]“Those grieving Parithi can consider his assassination to be [/size]

[size=5] a step forward towards Tamils’ destiny”[/size]

[size=5]HEAD OFFICE: [/size]

[size=5]Tamil Centre for Human Rights - TCHR/CTDH[/size]

[size=5]9, rue des Peupliers - 95140 Garge les Gonesse - FRANCE[/size]

[size=5]Contact person : S. V. Kirubaharan – General Secretary[/size]

[size=5]Tel/Fax: + 33 1 42 67 54 36 - Email: tchrgs@hotmail.com / tchgs@tchr.net[/size]

[size=5]TCHR-UK [/size]

[size=5]Tamil Centre for Human Rights - TCHR/CTDH[/size]

[size=5]PO Box 182, Manchester M16 8ED, UNITED KINGDOM[/size]

[size=5]Contact person : Deirdre McConnell – Director International Programme[/size]

[size=5]Fax: + 44 161 860 4609 - Email: tchrdip@hotmail.com / tchrdip@tchr.net[/size]

[size=5]TCHR-SWITZERLAND[/size]

[size=5]Tamilen Zentrum fur Mensenrechten - TCHR[/size]

[size=5]P. o. Box : 319[/size]

[size=5]8172 – Niederglatt, SWITZERLAND[/size]

[size=5]Contact person : Thambirajah Genegatharan[/size]

[size=5]Email : tchrswitzerland@hotmail.com[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பருதியென்ற காற்று ஓய்ந்து போனதே...பாடல்....

http://youtu.be/S2mZu8Fh0Ms

[size=5]அன்பு உறவுகளே[/size]

[size=5] இங்கிருந்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாது எந்த கொம்பனாயிருந்தாலும் கொலைகாரனை கண்டு பிடிப்பதற்கு காவல் துறைக்கு உதவியாயிருங்கள். நாட்டை மீட்க உதவாத ஆயுதம் இனி எதற்குதவும்.சொந்த நாட்டுக்கே ஒரு விதத்தில் நாம் துரோகிகள் தான்,அடைக்கலம் தந்த நாட்டுக்காவது உண்மையாக உழைப்போம்.இனிமேல் இந்த ஆயுதக்கலாச்சாரமே வேண்டாம் என்று யாழ் உறவுகளாகிய நாம் உறுதி எடுத்துகொண்டு துரோகிகளை ஒழிப்போம் காவல் துறைக்கு ஒத்துழைப்போம்[/size]

பாரிஸில் சிங்களப் புலனாய்வாளர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்கள் தமது வீர வணக்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ தேசியத்தை நேசித்து தலைவரின் வழியில் பயணித்த இந்த மாவீரனின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். இந்த மாவீரனின் விடுதலை வேட்கையையும் அவரின் தளராத மனத் துணிவையும் நாம் மதிக்கிறோம். இந்த மறத் தமிழனின் வீர மரணம் எங்களைப் பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பரிதி அவர்களைக் கொலை செய்ததன் மூலம் புலம்பெயர் தேசத்தில் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை மழுங்கடிக்க முடியுமென்று சிங்களம் கனவு காணுமாயின் அது அவர்களின் பகல் கனவாகவே இருக்குமென்றும் குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

பரிதி அவர்களின் வீர மரணம் தொடர்பாக யாழ். குடாநாட்டு மக்கள் நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ தேசியத் தலைவரின் பாதையில் அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வழியில் தனது பாதம் பதித்த பரிதி அவர்கள் தனது போராட்ட காலத்தில் தாயகத்தில் பல கள முனைகளில் எதிரியைக் கலங்கடித்தவர்.

தனது திறமைகள் காரணமாக அவர் தலைவர் மனதில் நிலையான இடம் பிடித்தவர். இதனால் பிரான்ஸில் பணியாற்றுமாறு தலைவரால் பணிக்கப்பட்டிருந்தார். புலம்பெயர் தமிழ் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற பரிதி அவர்கள் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை பிரான்ஸ் வாழ் மக்களிடையே நிலைநிறுத்துவதில் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழ் மக்களிடையே மட்டுமன்றி பிரான்ஸின் தேசிய குடிமக்களிடையேயும் அங்குள்ள அரசியல் தலைவர்களிடையேயும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் போராட்டத்தின் பரிமாணங்களையும் எடுத்தியம்பி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தப் பெரும் பங்களிப்புச் செய்தவர்.

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் தேசத்தில் அரசியல் பணி செய்துகொண்டிருந்த தளபதியொருவரை சிங்கள தேசம் படுகொலை செய்திருக்கிறது. ஆயுதத்தை ஆயுதத்தாலும் அரசியலை அரசியலாலும் எதிர்கொள்ள முடியாத சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள் காததூரம் சென்று தமிழ்ப் புலியொருவரைப் படுகொலை செய்திருக்கிறார்கள்.

சுய உணர்வுள்ள எந்தவொரு இராணுவமும் இத்தகைய இழிவான செயலை மேற்கொள்ளத் துணியாது. தனது தேசம் விட்டு புலம்பெயர் தேசம் சென்று இந்த ஈனச் செயலைச் செய்ததன் மூலம் சிங்கள இராணுவம் மீண்டும் தனது கோர முகத்தை சர்வதேச அரங்கிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த முப்பது வருடமாக இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரெதிர் மோதி வெற்றியடைய முடியாத சிங்கள இராணுவமும் சிறிலங்கா அரசாங்கமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆயுத, ஆட்பல உதவிகளைப் பெற்று எமது விடுதலைப் போராட்டத்தை அழிப்பதென்ற பெயரில் இலட்சோபலட்சம் மக்களைக் கொன்றொழித்துள்ளது.

இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் கொலைவெறியாட்டத்திற்கு அஞ்சி புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை நோக்கியும் இன்று சிங்களம் வலை விரித்துள்ளதையே கேணல் பரிதி அவர்களின் படுகொலை எடுத்துக்காட்டுகிறது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத சிங்கள இராணுவம் அரசியல் பணியாற்றும் போராளிகளையும் குறிவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

இதேபோன்றே கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும் எமது பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களையும் சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. அரசியல் பணியாற்றுபவர்களைக் குறிவைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் படலம் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே கேணல் பரிதி அவர்களின் படுகொலை தெளிவுபடுத்துகின்றது.

இந்த விடயங்கள் தொடருமாயின் தமிழ் மக்கள் தமது விடுதலையைப் பெற்றெடுக்க மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தையே தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகள் ஒரு தீhக்கமான முடிவெடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அந்தந்த நாடுகளின் கடமையாகும். அதேபோல் அந்தந்த நாடுகளில் ஜனநாயக ரீதியில் அரசியல் பணியாற்றும் போராளிகளையும் பாதுகாக்க வேண்டியது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமையாகும்.

எனவே, கேணல் பரிதி அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயலை எந்தவித வேறுபாடுகளுமின்றி சர்வதேச அரசாங்கங்கள் கண்டிக்க வேண்டுமென்று யாழ். குடாநாட்டு மக்களாகிய நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்துடன் பரிதி அவர்களின் படுகொலை தொடர்பாக பிரான்ஸ் காவல்துறையினர் பூரண விசாரணை நடத்த வேண்டும். பரிதி அவர்கள் பிரான்ஸில் ஆயுதத்துடன் நடமாடவில்லை. சாதாரணமாகவே அவர் தனது அரசியல் பணியை முன்னெடுத்தார். அவரைக் கொலை செய்தவர்கள் பாரிஸை விட்டுத் தப்பிச் சென்றிருக்க முடியாது. எனவே பிரான்ஸ் காவல்துறையினர் மிக விரைவாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தாயகத்தின் விடுதலைக்காக புலம்பெயர் மண்ணில் அரும்பணியாற்றிய மாவீரன் கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு எமது நரம்புகளை முறுக்கேற்றிவிட்டிருக்கிறது. எத்தகைய இழப்புகள் வந்தாலும் நாம் எமது விடுதலை நோக்கிய பாதையில் பயணிப்போம் என்று நாம் சபதமெடுப்பதற்கான துணிவைத் தந்திருக்கிறது. தர்மம் என்றும் தோற்றதில்லை. அதர்மம் என்றும் வென்றதில்லை.

நாம் வெல்வோம். எமது இலட்சியம் வெல்லும். மாவீரன் பரிதி அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் நாம் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் தாயகத்திலிருந்தவாறு நாம் அவருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை. விடுதலைப் புலிகள் தோற்பதுமில்லை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

யாழ். குடாநாட்டு மக்கள்.

நன்றி

தமிழ்க்கதிர் இணையம்

http://www.tamilkathir.com/news/9154/58//d,full_art.aspx

Edited by நியானி

வீர வணக்கம் அண்ணா..

[size=3]Prithi11-300x195.jpg[/size]

[size=3]தமிழ்த் தேசியப் பற்றாளரும் நீண்ட காலமாகப் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாக அயராது தமிழ் மண்ணின் விடுதலைக்காகச் செயற்பட்டுவந்த “பரிதி” என்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட திரு நடராஜா மதீந்திரன் அவர்கள் நவம்பர் 8ம் நாள் 2012 வியாழக்கிழமையன்று சிறிலங்காவின் நயவஞ்சகர்களால்; சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.[/size]

[size=3]தமிழ்த் தேசியப் பற்றாளர் ‘பரிதி’ திரு நடராஜா மதீந்திரன் அவர்களுக்கு[/size]

[size=3]வீர வணக்க நிகழ்வு[/size]

[size=3]காலம்: 11-11-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணி[/size]

[size=3]இடம்: கனடா சிறி ஜயப்பன் ஆலையம்[/size]

[size=3] 635 Middlefield Road[/size]

[size=3] Scarborough[/size]

[size=3]கனடியத்தமிழ் சமூகம்[/size]

[size=3]கனடியத்தமிழ் மாணவர் சமூகம்[/size]

[size=3]தொடர்புகளுக்கு:647 367 0719[/size]

Edited by BLUE BIRD

[size=4][size=2][size=4]விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை!- கருணாநிதி இரங்கல்[/size][/size]

[size=2][size=4][ ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012, 12:09.54 AM GMT ][/size][/size]

[size=2][size=4]karunaanithi.jpg[/size][size=4]விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பரிதி (நடராஜா மாதேந்திரன்) பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2][size=4]அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-[/size]

[size=4]விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, நேற்றிரவு பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.[/size]

[size=4]இவர் பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஆவார்.[/size]

[size=4]1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக களப்பணி ஆற்றியவர் பரிதி.[/size]

[size=4]1990-ம் ஆண்டில் காயமடைந்த நிலையில் சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பினார்.[/size]

[size=4]ஈழத்திலும், பிரான்ஸ் நாட்டிலும் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் பரிதி.[/size]

[size=4]அவருடைய இந்த அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.[/size]

[size=4]tamilvin[/size][/size]

பிரான்சில் சுடப்பட்ட புலிகளின் மூத்த தளபதி றேகன்: புலனாய்வுத் தகவல் சில கசிந்துள்ளது!NOVEMBER 9, 2012

parithY.jpg

தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினர் பரிதி பிரான்சில் சுடப்பட்டமை தொடர்பாக சில தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கிலமோ இல்லை சிங்களமோ தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு கோத்தபாயவின் சிறப்பு பணிப்பின் பெயரில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, முதன் முதலாக சிங்கள ஊடகம் ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது.

தமிழ் ஊடகங்கள் சில இச் செய்தியைப் பிரசுரித்தாலும், அதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தமிழ் இளைஞர்கள் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் பாவிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9mm என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இலகுரக ஆயுதங்களைப் பாவிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அச் சிங்கள ஊடகம் மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, நேற்றைய தினம் இரவு பிரான்சில் புலிகளின் முன்னாள் தளபதி நடு வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியும் தமிழர்களை உலுக்கியுள்ளது.

மாபியா கும்பல் பாணியில் இப்படுகொலை நடந்தேறியுள்ளது. பரிதி என்று அழைக்கப்படும் றேகன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 80 பதுகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அக்காலப் பகுதியில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பயிற்சியினை வழங்கி வந்தது.

அணி…. அணியாக இந்தியா சென்று பயிற்சி எடுத்து நாடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள் விடுதலைப் புலிகள். அக்காலப் பகுதியில் 2 வது அணியில் சென்று ஆயுதப் பயிற்சி எடுத்தவர் றேகன் ஆவார். பின்னர் அவர் 1990 ஆண்டு முதல் பிரான்ஸ் வந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இன்றுவரை செயற்பட்டு வந்தவர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக புலத்தில் போராடிய போராளி! இன்று நடுத்தெருவில் வைத்து சுடப்பட்டுள்ளார் என்பது தமிழர்களை உலுக்கும் செய்தியாக மட்டும் அமையவில்லை. மாறாக ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்.

கொல்லப்பட்ட விதத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் என்ன?

நேற்றைய தினம், பிரான்சின் புறநகர் பகுதியில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்த றேகன், பஸ் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகாமையில் செல்லும்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் சுடப்பட்டுள்ளார். கறுப்பு நிற தலைக் கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் றேகனை நோக்கி 2 தடவைகள் சுட்டுள்ளார்.

உடனே நிலத்தில் விழ்ந்த றேகனுக்கு அருகாமையில் வந்து, மீண்டும் அவர் மீது 2 தடவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். கொலையாளி பாவித்தது இலகுரக கையடக்க துப்பாக்கி ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

பலர் நடமாடும் இடத்தில், இவ்வாறு றேகனைச் சுட்டுவிட்டு, பின்னர் அவர் உயிர் பிழைக்கக்கூடாது என்று அருகில் சென்று மீண்டு அவர் மார்பு மீது சுடும் அளவுக்கு கொலையாளி தைரியமாக இருந்திருக்கிறார். தான் தப்பிச் செல்வது குறித்து, யோசிப்பதை விடுத்து, றேகன் உயிரிழக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது.

இதில் இலங்கைப் புலனாய்வின் பங்கு என்ன?

சமீபகாலமாக றேகன் அவர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் புதிதாக முளைத்த சில குழுக்கள் இவரை அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக றேகன் சுடப்பட 2 நாட்களுக்கு முன்னதாகக் கூட, அவரை அழைத்து ஒரு குழு மிரட்டியுள்ளது. இந் நிலையில் றேகனை சுடவேண்டும் என்ற அவசியம் ஏன் வந்தது என்று அனைவரும் கேட்க்கலாம். இதில் நாம் சில விடையங்களை தெரிந்துகொள்வது நல்லது.

பிரித்தானியா, ஜேர்மன், நோர்வே போன்று நாடுகளில் ஒருவர் மீது இவ்வளவு இலகுவாக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது. காரணம் அங்குள்ள கடும் சட்டதிட்டங்கள் ஆகும். மற்றும் அந் நாட்டுப் பொலிசார், குற்றச்செயல்களைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகள். இலகுவில் குற்றவாளி தப்பிக்க முடியாது. ஆனால் பிரான்ஸ் நாடு அப்படியல்ல. மாதம் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெறும் ஒரு நாடாக அமைந்துள்ளது.

இதேவேளை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தை இணைக்கும் எல்லைப் பகுதியில், இலகுரக ஆயுதங்களை குறைந்த பணத்திற்கு வாங்க முடியும். அங்கே பல அறிவிக்கப்படாத ஆயுதக் கடத்தல் காரர்கள் இருக்கிறார்கள். இவர்களூடாகவே ஆயுதங்கள் பிரான்ஸ் எல்லையை அடைகிறது. சுமார் 300 யூரோக்களுக்கு கைத்துப்பாக்கி வாங்க முடியும் என சில பிரெஞ்சுப் பத்திரிகைகள் முன்னர் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களை மிரட்டவும், மாவீரர் தினத்தை குழப்பவும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, பல திட்டங்களை தீட்டியுள்ளது என அறியப்படுகிறது. ஏற்கனவே மாவீரர் தினத்தை இரண்டாக உடைக்க தமது ஆட்களை அவர்கள் அனுப்பி புலத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் நடைபெற்ற மாவீரர் தினங்களுக்கும் மக்கள் சென்றார்கள்.

மக்கள் மாவீர்களை மதிப்பதால், அந் நிகழ்வு தடையின்றி நடைபெறுகிறது. இந் நிலையில் இதனை உடைக்க வேறு வழிகளில், திட்டம் தீட்டிய இலங்கைப் புலனாய்வுத் துறை, குற்றங்கள் இலகுவாக நடைபெறும் பிரான்ஸ் நாட்டை தனது களமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

இலங்கை அரசின் பின் புலத்தில், அவர்களுடன் இணைந்து செயல்படும், குழு ஒன்றின் ஆதரவுடனேயே இப் படுகொலை நடந்தேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இரு நபர்கள் உள்ளபோதும், கொலையாளி தலைக் கவசம் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காணுவதில் சிரமங்கள் இருக்கிறது.

கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வீதியில் ஏற்படுத்திய டயர் கீறல் அடையாளம், மற்றும் வீதியோர CCTV கமராக்கள் போன்றவற்றை வைத்து பொலிசார் தமது புலனாய்வு விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

eelamranjan@hotmail.com[/size]



[size=1]BLUE BIRD[/size]

Edited by BLUE BIRD

பரிதியின் கொலையில் பிரான்ஸ் காவல்துறையினருக்கு எழுந்துள்ள சந்தேகங்கள்

[size=2]Published on November 10, 2012-10:41 am · No Comments[/size][size=3]

barithi-photo-150x150.jpgபிரான்ஸ் தலைநகர் பரிஸில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதிந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பரிஸ் காவல்துறையினர் மூன்று கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.[/size][size=3]

ஒன்று சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் இக்கொலையை செய்திருக்கலாம்.[/size][size=3]

இரண்டு மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதில் குழுக்களுக்கிடையில் எழுந்துள்ள போட்டிகள்[/size][size=3]

மூன்று உள்முரண்பாடுகளால் இக்கொலை நடந்திருக்கலாம்.[/size][size=3]

பரிதியுடன் தொடர்புடையவர்கள் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.[/size][size=3]

இச்சம்பவம் நடந்த போது பரிதியின் மனைவியும் பிள்ளையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலேயே இருந்துள்ளனர். அவர் மனைவி பிள்ளைகளை அலுவலகத்தில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்க முடியாது. அவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் போது சுட்டுக்கொல்லப்பட்டார் என கூறுப்படுவதை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.[/size][size=3]

அவரை யாரோ அழைத்திருக்கிறார்கள். அவரை சந்திப்பதற்காகவே பரிதி அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி சென்றுள்ளார். பரிதியை சந்திக்க வந்த நபர் யார், யாரின் அழைப்பின் பேரில் பரிதி அலுவலகத்தை விட்டு வெளியில் சென்றார் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.[/size][size=3]

பரிதி சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இடத்தில் வாகனம் தரித்து நிற்க முடியாது. பரிதி அலுவலகத்தை விட்டு கீழே இறங்கி வருகிறார் என்ற தகவலை சரியாக அறிந்தவர்களே அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்பது புலனாகிறது.[/size][size=3]

அவர் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்கிறார் என்பதை அலுவலகத்திலிருந்து யாராவது கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தனரா அல்லது பரிதியை வெளியே அழைத்து யாராவது இக்கொலையை செய்தனரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.[/size][size=3]

இன்னொரு சந்தேகமும் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சிறிலங்கா அரசாங்க புலனாய்வு பிரிவினருடன் நெருங்கி செயற்படும் ஒருவரும் அண்மையில் பரிசிற்கு வந்திருப்பதாகவும் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.[/size][size=3]

அரசியல்வாதி ஒருவரும் பரிசிற்கு வந்துள்ளார். இவர் மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்ள வந்ததாக கூறப்பட்டாலும் மாவீரர்நாள் நடைபெறுவதற்கு 20நாட்களுக்கு முதல் ஏன் வந்தார், சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரின் ஆதரவு இல்லாமல் இலங்கையிலிருந்து வந்து மாவீரர் தின நிகழ்வில் ஒருவர் கலந்து கொள்ள முடியுமா என்றும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக பிரான்ஸில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.[/size][size=3]

இவர் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கும் தகவல்களை வழங்கிக்கொண்டு விடுதலைப்புலிகளுடனும் தொடர்பை பேணி வருகிறாரா, இவர்தான் பரிதியின் நடமாட்டம் பற்றிய தகவல்களை வழங்கினாரா என்றும் பிரான்ஸ் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.[/size][size=3]

இந்த விசாரணைகளில் பிரான்ஸ் காவல்துறையினருக்கு சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தவதற்கான தீவிர விசாரணைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரான்ஸில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.[/size][size=3]

http://www.thinakkathir.com/?p=43304[/size]

தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்கின்றது பரிதியின் சாவு சொல்லும் செய்தி-காசியானந்தன்.

[size=2] NOVEMBER 11, 2012 AT 08:30[/size]

[size=4]முள்ளிவாய்க்கால் முடிவு அல்ல என்பதை நிறுவி பரிதி தன்சாவினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியை பதிவு செய்து நிமிர்ந்து நிக்கின்றான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாறு தொடர்கின்றது என்று அவனது சாவினால் ஓங்கி முரசொலிக்கின்றான் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். (ஒலிவடிவம்)

பரிதி பிரான்சில் மாவீரராக வரலாற்றில் நிமிர்ந்து நிக்கிறான் இதுஒரு துயரமான நாளாக நாங்கள் நினைத்தாலும் தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இதுஒரு நிமிர்ந்த நாள் வரலாற்று ஏட்டில் என்றும் மறக்கமுடியாத வலிமைபெற்ற நாள் என்றுதான் நான் சொல்லுவேன் ஏன் என்றால் ஒரு மாபெரும் வீரன் தமிழீழவிடுதலை போராட்ட வரலாற்றை பதிவு செய்துவிட்டு கண்களை மூடியுள்ளான்அவனை படுகொலை செய்தவர்கள் இன்று தமிழீழ மக்களிடையே குறிப்பாக புலம்பெயர் தளங்களிலும் கொழுந்துவிட்டு எரியும் உணர்ச்சிகளை பார்த்தால் அவர்கள் சோர்ந்துபோவார்கள் சுறுண்டுபோவார்கள்.

நாம் திட்டமிட்டு செய்த இந்த படுகொலை ஒருபேரியக்கத்தின்வளர்ச்சியாக ஒரு மாபெரும் வரலாற்று வீரனின் தலை நிமிர்வாக ஆகிவிட்டதே என்று தலைகுனிந்து நிற்பார்கள்.

உண்மையில் பரிதியின் மறைவு விடுதலைப்போராட்ட வரலாற்றில் மாபெரும் மறைவு. முள்ளிவாய்க்கால் முடிவு அல்ல என்பதை நிறுவி பரிதி தன்சாவினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியை பதிவு செய்து நிமிர்கின்றான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாறு தொடர்கின்றது என்று அவனது சாவினால் ஓங்கி முரசொலிக்கின்றான்.

நாற்பதாயிரம் விடுதலைப்புலிகைள கடந்த அறுபத்திரெண்டு ஆண்டுகால விடுதலைப்போராட்ட வரலாற்றில் கொண்டு குவித்த சிங்கள அரசு எல்லாம் முடிந்து விட்டது என்று கனவு கண்ட சிங்கள அரசு கதிகலங்கி போகின்ற அளவிற்கு நாற்பதாயிரத்து ஓராவது வீரனாக பரிதி நிமிர்கிறானே அவன் நிமிர்கின்ற எழுச்சிக்கோலத்தை இன்று சிங்கள ஆட்சியாளர்கள் பாக்கின்றார்கள் அவர்கள் தங்ளுடைய கொடிய நெருப்பின் நாக்குகளை இரத்ப்பசியுடன் ஈழத்திற்கு வெளியிலும் பாயவிட்டிருக்கின்றார்கள். சிங்கள இனவெறியின் கைக்கூலிகள் தமிழீழத்திற்கு வெளியில் உள்ள பிரான்சில் பரிதினை சாகடித்திருக்கின்றார்கள்.

முன்னர் நாதன் கஜன் என்ற வீரர்களை பாரிசில் சுட்டார்கள் இன்றும் அதே மண்ணில் பரிதியினை கொன்றார்கள்.பரிதி தமிழீழ விடுதலைப்பேராட்ட களத்தில் நெருப்பின் நடுவில் நின்ற போராளி அவன் சந்தித்த மிகப்பெரிய வரலாற்று களங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம் தலைவர் அவர்களின் பிள்ளையாக தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவன் இந்த பரிதியின் இழப்பு ஈழத்தமிழ் மக்களை எல்லாம் எழுச்சிகொள்ள வைக்கும் என்று நான் நம்புகின்றேன் எல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பெய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு பரிதி ஓய்ந்து போயுள்ளான் களத்தில் நிக்கின்ற வீரர்கள் இன்றும் இருக்கின்றார்கள் போராளிகள் இருக்கின்றார்கள் மாவீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறுபடியும் பரிதி பதிவு செய்திருக்கின்றான்.

புலம்பெயர் மக்கள் பரிதியின் இழப்பினால் துடிதுடிப்பதாக நான் அறிகின்றேன் பரிதியின் சாவு ஒரு எழுச்சியின் சாவு உயிர் ஊட்டுகின்ற சாவு அப்படியான ஒரு சாவினைத்தான் வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் வீரர்கள் எவ்வாறு எங்களை வழிகாட்டினார்களோ அவ்வாறு பரிதியும் வளிகாட்டியுள்ளான்.

பரிதியின் வீரவரலாறு உறுதியாக நாளை இன்னும் வலிமையான வரலாறாக மாறும் தமிழீழம் அடைவது உறுதி என்று நாம் சொல்லுவோம் அந்த தமிழீழத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்று முழக்கமிடுவோம்,பரிதி மேல் ஆணையேற்போம்,பரிதியின் உயிர்மேல் ஆணைஏற்போம்,பரிதி கடைசிவரை ஒருவிடுதலைப்புலியாக வாழ்ந்து உலகத்தில் படைத்திருக்கின்ற வீர வரலாற்றின் மேல் உறுதி ஏற்பேம் தமிழீழம் மலரும் அந்த காலத்தை விரைவில் உருவாக்கும் வோம் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் பரிதியின் மறைவோடு நாம் இணைவோம் நாம் எழுவோம் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=38103[/size]

Edited by BLUE BIRD

சர்வதேச அங்கீகாரம் என்று இன்றும் யாழில் பலர் இதைதான் நினைக்கின்றார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.