Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள கிரிக்கெட் - 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இதோ நுணாவின் கொடுப்புச் சிரிப்பு.. :lol:

 

Cool_face.jpg

 

அடப்பாவிகளா

நுணாவிலான் மீது நான் வைத்திருந்த அத்தனையும்  சுக்குநூறாகிவிட்டது.......... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.. கொண்டோடி வந்த.. பெப்சியை பறித்து மடமடெவென்று.. குடித்த நிழலி.. ஆரம்பத்தில்.. நிதானமாக நின்றாலும்.. தலை கிறுகிறுக்கத் தொடங்குவது போல உணர்ந்தார். அதற்கிடையில்... கிருபன்.. 7up ஐ வாங்கி குடிக்க மூக்குக் கிட்ட.. ச்சா.. வாய்க்குக் கிட்ட கொண்டு.. வந்ததுமே.. அவரின் அபிமான... குடிபான வாசனை தூக்கலாக இருப்பதை உணர்ந்ததும்... அதனைக் குடிப்பதை நிறுதி.. சுண்டலைப் பார்த்து.. ஒரு முறாய்ப்பு முறாய்த்துவிட்டு 7up ஐ சுண்டலின் கையில் திணித்துவிட்டார். சுண்டலும் வேறு வழியில்லாமல்.... பற்கள் 32 ம் தெரிய.. பெரிசாய்ச் சிரிச்சபடியே நிழலியின் பக்கம் திரும்பியும் பார்க்காமல்.. ஆடுகளத்தை.. விட்டு நைசாக.. வெளியேறினார்..!

 

ஆனால் நிழலியோ நாழிகை ஆக.. ஆக.. சொந்தக் காலில் நிற்க முடியாது தவழும் நிலைக்கு ஆளானார்.

 

இதனை அவதானித்த லெக் அம்பையர் சோழியன் அண்ணா நிழலியை அணுகி.. என்னடா தம்பி செய்யுது என்றார்.

 

தலை கிறுகிறுக்குது அண்ணை.. எழும்பி நிற்கவே முடியல்ல.. என்றார் நிழலி பதிலுக்கு.

 

ஏன்ராப்பா நிழலி.... ஒரே யாழில தான் மிணக்கடுறது.. வீட்டைக்.. குடும்பத்தைக் கவனிக்கிறதில்ல என்று.. வீட்டில மனிசி பிள்ளைகளோட ஏதேனும்.. சண்டையே. பிரசர் கிரசர் கூடிப்போச்சோ என்னவோ...

 

அப்படி ஒன்றும் இல்லை அண்ணை.. எல்லாம்  நல்லாத் தான் போய்க்கிட்டு இருந்தது. உவன் சுண்டல் கொண்டு வந்த பெப்சியை குடிச்சன். அதுக்குப் பிறகுதான்.. இந்த நிலை.. ஒரே தள்ளாட்டமா இருக்குது...

 

அப்படியே விசயம்..  எங்க.. அந்த பெப்சி பொட்டிலை தாங்கோ பார்ப்பம்.. என்று கேட்டு அதனை வாங்கி மணந்து பார்த்த சோழியன் அண்ணா.. நிழலி.. சுண்டல் வைச்சுட்டாண்டி உனக்கு ஆப்பு.. என்றார்.

 

என்னண்ணை சொல்லுறீங்க.. பெப்சிக்க.. றோ.. ஜக் டானியலை கலந்து தந்திருக்கிறான் சுண்டல்...

 

அடப்பாவிப் பயலே.. உன்னை சின்னப் பொடியன் என்று நம்பி.. கூட வைச்சிருந்த குற்றத்திற்கு.... என்கிட்டைய்யே..காட்டிட்டியேடா உன்ர திருவிளையாடல... இருடி இரு... அதுதான் அவன் என்னோட ஒன்றுமே பேசாமல்.. பெப்சியை தந்திட்டு.. நைசா இங்க இருந்து நழுவிட்டான்..

 

சரி.. நிழலி.. எனி என்ன செய்யுறது.. வெறி தெளியவிட்டு வந்து விளையாடும்.. இப்ப கைத்தாங்கலா பவிலியனுக்க கொண்டு போய் விடுறன் என்று சோழியன் அண்ணா நிழலியைக் கைத்தாங்கலாக ஆடுகளைத்தை விட்டு பவினியனுக்கு நகர்த்திக் கொண்டு வர..

 

பவினியனில்.. சுண்டல் அடுத்த சுற்றுச் சூழ்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். மைதானத்தில் நடப்பதை நியானிக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி.. ஒரு அறிவிப்பை.. யாழ் கள கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தரச் சொல்ல.... நியானியும் நடப்பதன் நன்மை தீமை அறியாமல்.... ரிவி திரையில் தோன்றி.. யாழ் திண்ணை அணித்தலைவர் குடிபோதையில் எழுந்து நிற்க முடியாது இருப்பதால்... ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று அறிவிக்க...

 

சீ.. தூ.. சீ தூ... இவனும் ஒரு மனிசனே.. இவனைப் போய் பெரியாளுன்னு மதிச்சு... போயும் போயும் இவனுக்கு.. நாங்கள் விசிறி விசுக்க வந்தமே.. என்று திண்ணை அணி.. சியேர்ஸ் ஆன்ரிங்க.. திட்டிக்கொண்டு செருப்பும் கையுமாக பவிலியன் வாசலில் கூடிவிட்டருந்தனர்...

 

சுண்டலோ.. முடிந்த வரை.. எல்லாம் சுபமே முடிந்தது.. என்று.. இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்து.. தனது ஐபோனில்.. யுரிப்பில்.. இந்தப் பாடலைக் கேட்டு லயித்துக் கொண்டிருந்தார்..

 

http://youtu.be/d4B21WonJ6o

 

அதன் பிறகு...

 

( கைலைட்டில கொஞ்சம் கிறுக்கல் விழுந்திட்டுது.. சரி செய்திட்டு போடுறம் பொறுங்கப்பா...)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியைக் கைத்தாங்கலாக பவிலியனுக்கு.. அழைத்துக் கொண்டு வந்த சோழியான் அண்ணா.. சியேர்ஸ் ஆன்ரிகள்.. பவிலியன் வாசலில் செருப்புகளோட ஆக்குரோசமாக நிற்பதைக் கண்டிட்டு.. இவன் பாவியோடு சேர்ந்து.. நானும் வேண்டிக் கட்டப் போறன் போலக் கிடக்கு என்றிட்டு... நிழலியைப் பார்த்து.... தம்பி உனக்கு.... சுண்டல் ஜஸ்ட்.. ஆப்புத்தான் வைச்சான் என்றால்.... பயபுள்ள நியானி அவசரப்பட்டு..எல்லாத்தையும் கெடுத்திட்டானே.. வாசலைத் தாண்டி உள்ள போறதே றிஸ்கான மற்றரா மாறிக்கிடக்கு.. என்று சொல்ல..

 

நிழலியோ.. செய்வதறியாது.. பரிதாபமாக சோழியண்ணாவைப் பார்த்து.... அண்ண நீங்க தான் ஏதாச்சும் செய்து.. என்னையும்.. என் இமேஜையும் காப்பாத்தனும் என்று கெஞ்சாத குறையாக மண்றாடினார்...

 

நானே என்னைக் காப்பாத்திக்க வழி தெரியாமத் திண்டாடுறன்... அதுக்குள்ள இவன் தன்னைக் காப்பாத்தட்டாம்.. என்று மனசுக்குள் நினைச்சுக் கொண்ட சோழியான் அண்ணா.. காவடியை எடுத்திட்டம்.... எப்படியோ ஆடி முடிப்பம்.. பின்விளைவுகளை அப்புறம் பாப்பம் என்றிட்டு.. பவிலியன் வாசலை நெருங்கி.. பெருத்த குரலில்.. பொண்டு பிள்ளையள்.. செருப்புக்களை முதலில.. உங்க பிஞ்சுக்.. காலுகளில போடுங்கோ.. ஆனா ஊனான்னா எதுக்கும் உந்தச் செருப்பைத் தூக்கிறதே உங்களுக்கு வாடிக்கையாப் போச்சுது..காலில... கல்லுமுள்ளு குத்தப் போகுது.. கொஞ்சம் என்றாலும் காலத்துக்கு ஏற்றாப் போல.. மாத்தி யோசிக்கப் பழகுங்கோ.. அதுபோக.. எல்லாரும்... கொஞ்சம் அமைதியா இருங்கோ.. நான் சொல்லுறதைக் கேளுங்கோ... நிழலிக்கு வெறியோ கிறியோ இல்ல.. சாதாரண பித்த மயக்கம் தான்.. அது கொஞ்ச நேரத்தில சரியாகி நிழலி ஒரு செஞ்சரி போடத்தான் போகுது..  தேட் அம்பையர் தானும் குழம்பி.. உங்களையும் குழப்பிப் போட்டார்.. என்று ஆன்ரிகள் கூட்டத்தை தான் விட்ட சவுண்டால... சமாளிச்சுக் கொண்டே.. நிழலியை பவிலியனில் சேர்த்துவிட்டார் சோழியன் அண்ணா.. கெட்டித்தனமாக. எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கல்ல.

 

3666229060_90bfea9e47_o.jpg

 

(மைதானத்திற்கு வந்திருந்த சியேர்ஸ் ஆன்ரிகளில் ஒருவர் போட்டிருந்த.. மொடேன்.. சூ...ஊரில.. பனை மரத்தில.. கள்ளிறக்கிற தொழிலாளர்கள்.. காலில..போடுறது மாதிரி இல்ல..) :lol:

 

அப்புறம்.. பவிலியனை அடைந்த நிழலி.. வெறி மயக்கத்தில்.. இருக்கையில் குப்புறக் கிடக்க.. சோழியன் அண்ணா அவரை அப்படியே போட்டுவிட்டு.. ஆடுகளத்தை அடைந்தார். நிழலிக்கு பிரதியீடாக.. சுண்டல்.. தன் அபிமான நண்பர்.. தமிழ்சிறியை ஆடுகளத்துக்கு அனுப்பினார்.

 

தமிழ்சிறி.. மட்டைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு.. சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் திரும்பி.. புன்னகை பூத்துக் கொண்டு.. லெக்கிங்ஸும் ரீசேட்டுமா கிறங்கடிக்கிறாளவையப்பா.. போன உடன... கிருபனை பிச்சை விட்டு.. வெளிக்கிடுத்திட்டு.. கு.சாவை உள்ள இறக்கிட்டம் என்றால்.. மச்சும் பிச்சும் ஜோரா இருக்குமில்ல.. என்று நினைச்சுக் கொண்டே கிறீஸுக்கு விரைந்தார்.

 

 

மீண்டும்... ஒளிபரப்பு.. நிலையக் கலையகத்தை அண்டி.... பனிப்பொழிவு குறையத் தொடங்க.. தொடங்கும்.. தாமதத்திற்கு வருந்துகிறோம்..

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
.. பனிப்பொழிவு குறையத் தொடங்க..
எப்ப பனி பொழிவு குறையுமாம்? எப்ப மட்ச் தொடங்கும்?
  • கருத்துக்கள உறவுகள்

ஆறை(6)தூக்கி அடித்த சுன்டலுக்கு எமது கடை சார்பாக ஒரு மூடை மஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி.. ஸ்ரைக்கர் எண்டுக்கு...பளபளக்கும் புதிய பற்றோடு.. பந்தாட வந்ததும்.. நுணா தனது சுழல்பந்து வீச்சின் தீரத்தைக் காட்ட மைதானத்தில்.... உடலை வளைத்து.. நெளித்து.. நிமிர்த்தி.. தன்னை.. தயாராக்கிக் கொண்டிருந்தார். தமிழ்சிறியோ.... அது எதனையும் அசட்டை செய்யாமல்.. சியேர்ஸ் ஆன்ரிகள் பக்கம் திரும்பி.. பற்றை தூக்கிக் காட்டி.. பந்தை எதிர்கொள்ளத் தயாரான போது.. சியேர்ஸ் ஆன்ரிகள் அவருக்காக விசிலடித்து ஆரவாரித்துக் கொண்டிருந்தனர்.

 

எதிர்முனையில்.. கிருபன் அண்ணாவோ.. மனசுக்குள்.. கண்றாவி கண்றாவி.. கலியாணம் கட்டியும் அடங்கிறாங்கள் இல்லையே.. என்று திட்டிக்கொண்டு.. அவர் ஒருத்தர் வந்த வரத்தில... ஆன்ரிகளின் பிகருகளுக்கு சோ காட்ட... தூக்கி போடப் போய் வந்த வேகத்திலையே திரும்பிப் போய்ட்டார்.. இவர் என்ன புடுங்கப் போறாரோ.. இந்தச் சியேர்ஸ் ஆன்ரிகளை இங்க இருந்து.. அடிச்சிக் கலைச்சால் தான் மச் ஒழுங்கா நடந்து முடியும் போலக் கிடக்கு என்று நினைத்துக் கொண்டு.. மெயின் அம்பையர் மோகன் அண்ணாவை திரும்பிப் பார்த்தார்...

 

அப்போது.. இவர்களின் இந்தக் கூத்தைக் கண்டு பொறுக்க முடியவில்லையோ என்னவோ... வானில் அதிக கார்முகில்கள்.. படையெடுத்து வந்து கொண்டிருந்தன. மோகன் அண்ணா லைட் இன்ரன்சிற்றியை அளக்கும் கருவியை எடுத்து அளந்துவிட்டு சோழியான் அண்ணாவோடு.. கலந்து பேசிக் கொண்டிருந்தார்.

 

அதன் பின் அம்பையர்கள் இருவரும்.. வோக்கியில் தேட் அம்பையர் நியானிக்கு ஏதோ சொல்ல.. தேட் அம்பையர் ரிவி திரைகளில் தோன்றி.. ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.

 

இந்த அறிவிப்பைக் கேட்டதும்.. கிருபண்ணாவுக்கு உள்ளூர செம மகிழ்ச்சி. இதுகளோட சேர்ந்து விளையாடி தோக்கிறதைக் காட்டிலும்.. இது ரெம்ப உசத்தி என்று நினைச்சுக் கொண்டிருக்க.. தமிழ்சிறியோ.. இது சரியான அளாப்பல்... விளையாட்டு. நான் வந்து ஒரு பந்து கூட அடிக்கல்ல.. உடன லைட் காணாது என்று மச்சை நிற்பாட்டினம். நான் சொன்னனா லைட் காணாது என்று. எனக்கு இங்க இருந்து பார்க்க சியேர்ஸ் ஆன்ரிகளே வடிவாத் தெரியினம்... அப்படிப்பட்ட எனக்கு.. ஏன் பந்து தெரியாது..என்று பிச்சின் நடுவில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.

 

இதனை அவதானித்த சோழியன் அண்ணா.. இவன் வேற.. எனி இவனை எப்படிச் சமாளிக்கிறது என்ற.. யோசனையோடு..தமிழ்சிறியை அணுகி.. தம்பி தமிழ்சிறி உம்மடை ஆத்திரம் ஆதங்கம் எங்களுக்குப் புரியுது. அங்க பாரும்.. கார்முகில் படைபடையா வருகுது. வெதர் அப்டேட்டிலும் தொடர் மழையும்.. பனியும் என்று அப்டேட் செய்திருக்கிறாங்கள். இது எதிர்பாராதது. அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய ஏலாது. இந்தளவு லைட் இல்லாட்டி மச் விளையாடுறது ஆபத்து என்றதால தான் பாட் லைட் என்று மச்சை நிற்பாட்டிறதே தவிர.. உமக்குப் பார்வைக் கோளாறு என்றோ.. அல்லது.. உம்மை விளையாட விடக்கூடாது என்றோ இல்லை. சோ.. அடுத்த ஆண்டு இதே போல மச் நடத்தும் போது நல்லா விளையாடி.. உம்மட திறமைகளைக் காட்டும்... அதை நாங்கள் தடுக்கமாட்டம் என்று சொல்ல தமிழ்சிறி.. அரைமனதோடு... ஏதோ உங்களுக்கு ஏத்தாப் போல எதையாவது சொல்லித் தொலையுங்கோ என்று.. மனசுக்க நினைச்சுக் கொண்டு.. கோபத்தோடு.. மைதானத்தை விட்டு நகர ஆரம்பித்தார்.

 

கிருபண்ணாவோ.. கூலாக.. அம்பையர்களோடும்.. யாழ் கள அணியினரோடும் கைலுக்கிக் கொண்டிருந்தார்.

 

அதற்கிடையில் தேட் அம்பையர்.. இப்போட்டி.. இரு அணியினருக்கும் இடையில் சமநிலையில் நிறைவுறுவதாக இறுதி அறிவைப்பைச் செய்ய.. மைதானமே சப்பென்று போயிருந்தது. யார் மூஞ்சியிலும்.. ஒரு கிரிக்கெட் களையே இருக்கவில்லை..!

 

அத்தோடு எங்கள் வீடியோ சாதனங்களை நாங்களும்.. கறுப்புத்துணியால் மூடிக்கட்டிக் கொண்டு மைதானத்தை விட்டு பெருத்த.. ஏமாற்றத்தோடு விடைபெற ஆயத்தமானோம்.

 

சியேர்ஸ் ஆன்ரிகளும் மழை வந்து தங்கட பிழைப்பிலும் மண்ணள்ளிப் போட்டிட்டுதே என்று சோகமாகி மெளனித்துவிட்டிருந்தனர். சிலர் கார் பார்க்குக்கு போட்ட.. காசும் வராது போல இருக்கே என்று நினைச்சுக் கொண்டு.. சுமிங் பூலில்.. ஸ்ரியூசனில்.. சைள்ட் கெயர் சென்ரர்களில்.. விட்டிட்டு வந்திருந்த தங்கட கடைக்குட்டிகளை பிக் அப் பண்ணப் போக.. கார் பார்க்கை நோக்கி.. நடையைக் கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் பிகருகள்.. மட்டும்.. அங்க வந்திருந்த பையன்களிடம்.. பேஸ்புக்.. ஸ்கைப்.. வட்ஸ் அப் (whatsapp).. ஐமெசேஜ்.. ஐடி வாங்குவதில் கலகலப்பாகிக் கொண்டிருந்தனர்.

 

இத்தோடு இந்த கைலைட் முடிவடைகிறது. இருந்தாலும்.. மச் சப்பென்று முடிந்த சோகம் உங்களுக்கு இருக்கும். அதைத் தேற்ற உங்களுக்கு ஒரு நல்ல குத்துப்பாட்டு தருகிறோம். நல்லா குடிச்சு..கூத்தடிச்சு.. சோகத்தை தொலைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு யாழ் கள கிரிக்கெட் ஆட்டம் நடந்தால் அப்போது சந்திப்போம். அதுவரை கைலைட்டை பார்த்து ரசித்த ரசிகர்கள் அனைவருக்கும்.. நன்றி கலந்த வணக்கம்.

 

இந்தப் பாடலில் பெரும்பாலான வரிகளும் காட்சிகளும் தனக்காகவே அமைக்கப்பட்டதாக தமிழ்சிறி அண்ணா.. ஆட்டம் தொடங்க முன்னர்.. அவரிடம் பேட்டி கண்ட எம்மிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. :)

 

http://youtu.be/OSiZtv1eFlY

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்ஸ் இப்படி முடித்துவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாட்ச் சூப்பர் பாராட்டுக்கள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கிரிக்கெட் போட்டி காலநிலை சரியில்லாமல் கைவிடப்பட்டு.. சமனிலையில் முடிந்ததனால்.. இரு அணித் (யாழ் திண்ணை மற்றும் யாழ் கள) தலைவர்களாலும்  யாழ் கள சிசிசிசிசி சின்னப்பு ஞாபகார்த்த கிரிக்கெட் கப் பகிரப்பட்ட போது எடுக்கப்பட்டு சர்வதேச ஊடகங்களில்..வெளியான படத்தையே இப்போ எமது ஒளிபரப்புத் திரையில்.. காண்கிறீர்கள்...

 

yarl-crick.jpg

 

இத்துடன் இந்த ஒளிபரப்பு நிறைவடைகிறது. மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். நன்றி நன்றி நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்ன நெடுக்ஸ் இப்படி முடித்துவிட்டீர்கள்.

 

நேரப் பிரச்சனை தான் அக்கா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மாட்ச் சூப்பர் பாராட்டுக்கள் :D

 

இந்த மச்சில் சுண்டல்... தான் சைனிங்க் ஸ்ரார்..! :lol:

 

அதுவும்.. என்னம்மா கண்ணு.. ஜோர்.

 

இதோ என்னம்மா கண்ணு.. மீண்டும்.. இன்னொரு வடிவில்

 

http://youtu.be/7qnLflx_f-U

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும்... சிக்ஸர், ஃபோர், சென்சுரி அடிக்க..., ஆன்ரிமார் மேலாடையை... கழட்டி விட்டு, மைதானத்துக்குள் ஒடி வரும் அழகைப் பார்ப்பதற்கிடையில்.... மட்சை நிற்பாட்டியது கவலையாக இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த ஆண்டு யாழ் கள கிரிக்கெட் ஆட்டம் நடந்தால் அப்போது சந்திப்போம். அதுவரை கைலைட்டை பார்த்து ரசித்த ரசிகர்கள் அனைவருக்கும்.. நன்றி கலந்த வணக்கம்.
அடுத்த ஆண்டு மட்ச்சை பனி,மழை பொழியாத இடத்தில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்......
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த ஆண்டு மட்ச்சை பனி,மழை பொழியாத இடத்தில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்......

 

சிட்னியில் கோடை காலம் என்பதால்.. சிட்னி முருகன் கோயில் முற்றத்தில் வெளியாடுவதே.. சிறப்பு என்று நினைச்சிருக்கினமாம். பிள்ளை குட்டிகளோடு வந்து ஒரு கலக்குக் கலக்குங்கோ புத்து. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நல்லா போன தொடர், தீடிரென நிற்பாட்டிவிட்டீர்கள், நன்றி, அடுத்த தொடரில் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

Twenty20 ஆக விறுவிறுப்பாக ஆரம்பித்த போட்டி One-day international  மாதிரி வந்து, Test போட்டியாகி மாறி கடையில் கைவிடப்பட்டுள்ளது.. போட்டி முடிந்த பின்னர் மைதானத்திற்கு வந்திருக்கின்றேன் போலுள்ளது (என்றாலும் சியேர்ஸ் கேர்ள்ஸ் இல்லாமல் ஆன்ரிகளை விட்டதற்கு நெடுக்ஸைக் கண்டிக்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்
ஆறை(6)தூக்கி அடித்த சுன்டலுக்கு எமது கடை சார்பாக ஒரு மூடை மஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது :D

 

மஞ்சளா?? ஏன் போட்டுக் குளிக்கவா???   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரி ஆரம்பித்தபோது இருந்த சுவார்சியம் மத்திமத்திற்குப் பின்னர் குறைந்து தளர்ந்து தவழ்ந்து கிடப்பில் விழுந்துவிட்டது..... என்ன காரணமாக இருக்கும்? சரியான பதிலை சொல்பவர்கள் யாரென்று பார்க்கலாம். :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
இத்திரி ஆரம்பித்தபோது இருந்த சுவார்சியம் மத்திமத்திற்குப் பின்னர் குறைந்து தளர்ந்து தவழ்ந்து கிடப்பில் விழுந்துவிட்டது..... என்ன காரணமாக இருக்கும்? சரியான பதிலை சொல்பவர்கள் யாரென்று பார்க்கலாம். :lol::icon_mrgreen:

 

நெடுக்ஸ் கிரிக்கட் போட்டியை விட மற்ற விடயங்களைத்தான் அதிகம் தெரிந்துவைத்திருக்கின்றார்..

 

பலருக்கு கிரிக்கெட் பார்க்கும் வயதுகூடத் தாண்டிவிட்டது போலுள்ளது!!

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரி ஆரம்பித்தபோது இருந்த சுவார்சியம் மத்திமத்திற்குப் பின்னர் குறைந்து தளர்ந்து தவழ்ந்து கிடப்பில் விழுந்துவிட்டது..... என்ன காரணமாக இருக்கும்? சரியான பதிலை சொல்பவர்கள் யாரென்று பார்க்கலாம். :lol::icon_mrgreen:

தனிநபர் தாக்குதல் என நிர்வாகத்திற்கு யாராவது போட்டு கொடுத்திருக்களாம்....முக்கியமாக "அ...கோஸ்டி,ஆ....கோஸ்டி":D

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டதெற்கெல்லாம் தடை வந்தால், மொட்டாக்கு போட்டுக் கொண்டு... கிரிக்கெட் ஆடலாம் என்று தீர்ப்பு வந்திட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா கற்பனைக் குதிரையை தட்டி விடாதேங்கோ. இந்தத் திரிக்கு எதிர்மறை விளைவை.. யாருமே தெரிவிச்சதா நிர்வாகமோ.. கள உறவுகளோ.. முறையிடல்ல. நிர்வாகத்திற்கு அவர்களின் விதிமுறைக்குள் இது வரல்லையின்னா.. மூடவோ.. நகர்த்தவோ ஆரம்பத்திலேயே சொல்லிட்டம்.

 

இதை 6 ஓவர் மாட்சா போட்டதே குறுகிய வடிவத்தில் எழுதி முடிக்கத்தான். இருந்தாலும்.. இன்னும் கொஞ்சம் நீண்டிச் செல்ல ஆரம்பத்தில் விரும்பினேன். நேரப் பற்றாக்குறை வந்து குறுக்கிட்டு விட்டதால்.. இதில்.. commit பண்ண முடியல்ல. மற்றும்படி போட்டி மழை காரணமாக கைவிடப்பட.. வேறு.. எந்தக் காரணமும் இல்லை. எங்களிடம் உட்கட்சி அரசியல் கிடையாது. எல்லாம் வெளிப்படை உண்மை தான். ஆதரவும் ஊக்கமும்.. கருத்துக்களும் நல்கிய உறவுகளுக்கு நன்றிகள். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை வரவேற்கின்றோம்.


 

இருந்தாலும் நேரம் கிடைத்தால் பாகம் இரண்டு எனத் தொடருங்கள்


 

ரசிக்க ஆவலாக  உள்ளோம் நெடுக்ஸ் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.