Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யா(பா)ழ்ப்பாணம்....!!!

Featured Replies

314875_251892594942882_1166209224_n.jpg

 

 

தம்பி பாத்து மெதுவா ஆடு- உன்
காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம்.

 

நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே
கனடாவில் குளிரிலும் பனியிலும்
நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன்
அண்ணனின் வியர்வை இருக்கிறது.

 

சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!!

கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை...

அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!!

 

“கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்”
பண்ணி நீ காற்று வாங்கு...

 

உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!!

என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன்
அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு..


நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும்.
அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும்.
கூட்டுகளோடு சேர்ந்து “கும்மாளம்” வரும்.

 

பாக்கும் போது சந்தோசமாத்தான் இருக்கு..
எப்படி இருந்த நாங்கள் இப்படியும் இருக்கலாம் எண்டு.

ஆனால் கூடவே பயமும் வருகுது.


அடையாளங்களை தொலைத்துவிட்டு
அம்மணமாக வாழ்வது இழிவு
அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு
வாழ்வது உயர்வு...

 

போடாங்.. கொய்யாலே உனக்கு பேச என்ன தகுதி
என்று நீ கேட்பது நியாயம் - ஆனால்
நீ போட்டிருக்கும் அரைக்காச்சட்டையில் உன்
அண்ணனின் வேர்வை நாற்றம் இருப்பதை மறந்தது அநியாயம்.


உங்கே நீங்கள் போடாத ஆட்டமோ ? என்று கேட்பதும்
நியாயம்- ஆனால்
உன் காலடிக்கு கீழே இருப்பது “தாய்மண்” என்பதை
உணராதது அநியாயம்.

 

உன் வயதை நீ மறந்தது அவமானம்.

 

குண்டு மழையிலும் குருதிச்சகதியிலும்
கந்தக வாசத்திலும் கைவிடாத “கல்வி”
இன்று கவனிப்பாரற்று அனாதையாய் கிடக்குது.


கொஞ்சாமவது சிந்தியுங்கோடா
தம்பியவை படியுங்கோடா...
அதனால எண்டாலும் சிங்களவனை அடியுங்கோடா...


தம்பி பாத்து ஆடு- உன்
காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி”
புதைக்கப்பட்டிருக்கலாம்

 

 



--முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான உண்மையான  கவிதை......

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதையை... எழுதியவருக்கு பாராட்டுக்கள்.

படிப்பு ஒன்றுதான் நம் மூலதனம், படித்த சமுதாயம் உருவாகனும். உணர்வார்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளுக்கும், உணர்வுகளுககும் மதிப்புகள் கிடைப்பது இல்லை என்பது இங்கு அப்பட்டமாக வெளிப்படுகின்றது...!!!!

இணைத்ததற்கு நன்றி!!!

  • தொடங்கியவர்

 

உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!!
என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன்
அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு..

 

 

நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும்.
அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும்.
கூட்டுகளோடு சேர்ந்து “கும்மாளம்” வரும்.

 

 

பாவம் அண்ணா  :(

 

 

சிங்களம் இதைத்தானே ஆசைப் படுது அதான் நம்மடையல் செய்யுது 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய படம், இதை வைத்து மீண்டும் மீண்டும் பல கவிதைகள், ஒவ்வொரு இடத்திலும் ஒருப்படாத கூட்டமிருக்கு, அதேதான் இதுவும்

இணைப்புக்கு மிக்க நன்றி அகூதா. :)

உறைக்கும் இந்தக் கவிதையை எழுதிய தமிழ்ப்பொடியனுக்கு பாராட்டுக்கள்.

வெறும் காழ்ப்பு கவிதை ,

அவரவரை அந்த அந்த வயதில் சந்தோசமாக இருக்க விடுங்கள் .இப்படி இளவயதில் அனுபவிப்பவர்கள் தான் பொறுப்பு வர தங்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுபவர்கள்.எதையும் அனுபவிக்காமல் இருப்பவர்கள் தான் ஐம்பது வயதிற்கு பின்பும் அலைகின்றார்கள் .

கிருசாந்தியின் நினைவு இருந்திருந்தால்  இவர் முதல் கனடா ஓடியிருக்க மாட்டார்

 

வெளிநாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் எந்தவிதமான உல்லாசமும் இல்லாமல் வெறுமனே குளிரிலும் பனியிலும் கிடந்து மாடாக உழைப்பது மாதிரி போலித்தனமான கவிதை. summer காலங்களில் இங்கு அடிக்கும் கூத்து காணாது என்று ஊருக்கும் போய் இன்னும் கூத்து காட்டுவதில் எங்கள் சனம் விண்ணர்கள்.

 

உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் ஊரில் இருக்கும் போது அடித்த கூத்துகள் என்னவென்று. போருக்கு முந்திய காலத்திலும் கசூரினா கடற்கரை இப்படித்தான் இருந்தது என்று சொல்லுவினம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
பாடசாலைக்கு போய் வரும் மாணவனிடம் பொக்கற்றில் பணம் இல்லை என்றால் பாடசாலையும் வீடுமாக இருந்திருப்பார்கள்.இதுவே ஒரு ஆயிரம் ரூபா பொக்கட்டில் இருந்திருந்தால் நாலு நண்பர்களுடன் கூத்தடிக்க தான் சொல்லும்.
 
யாழ் பல்கலைகளகத்துக்கு அருகில் சில மாணவர்கள் வாடகைக்கு இருத்தார்கள். விடுமுறைக்கு சென்ற பின் வீட்டுக்காரர் வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதோடு வீட்டையும் சுற்றம் செய்யலாம் (அர்ஜுனின் நண்பர் தான் வீட்டுக்காரர்) ஒரு அறை நிறைய காலியான விஸ்கி போத்தல் குவியலாக காணப்பட்டன.இவர்களுக்கு படிப்பதை தவிர மேலதிக பணம் இல்லாவிட்டால் இந்த அளவுக்கு நடந்திருக்குமா??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் காழ்ப்பு கவிதை ,

அவரவரை அந்த அந்த வயதில் சந்தோசமாக இருக்க விடுங்கள் .இப்படி இளவயதில் அனுபவிப்பவர்கள் தான் பொறுப்பு வர தங்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுபவர்கள்.எதையும் அனுபவிக்காமல் இருப்பவர்கள் தான் ஐம்பது வயதிற்கு பின்பும் அலைகின்றார்கள் .

கிருசாந்தியின் நினைவு இருந்திருந்தால்  இவர் முதல் கனடா ஓடியிருக்க மாட்டார்

 

144147600.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தனி  மனித ஆசைகளுக்கு தடை போடுவது சரியல்ல.

 

அவரவருக்கு தெரியும் தத்தமது   பொறுப்புக்கள்  கடமைகள்.

இன்று ஒரு தேர்தல் வைத்தாலும் அந்த மக்கள் அதை செவ்வனே பாவிப்பர்.

காசு  தருகின்றோம் என்பதற்காக கட்டுப்படு என்பது அழகல்ல. :(

  • தொடங்கியவர்

எதிர்மறை கருத்துக்களை உருவாக்கியது மூலம் தமிழ்பொடியன் சிந்திக்க வைத்துள்ளான்.

 

ஒன்றிற்கு இரண்டு வேலை செய்து கடினப்பட்டு உழைப்பவனின் கடினம் பலருக்கும் தாயகத்தில் தெரிவதில்லை, காரணம் உறவுகள் அதை கூறுவதில்லை. காரணம் உதவிகளை வேண்டாம் எனக்கூறி விடுவார்கள் என்ற காரணமும் உள்ளது.


சிறுவயதில் 'அனுபவித்தவன்' எல்லோரும் அலைபவன் இல்லை. கிழட்டு வயதில் அலைபவன் எல்லோரும் சிறுவயதில் அனுபவித்தனும் அல்ல.

இந்த கவிதையில் உள்ள பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. :wub:

அங்குள்ள மக்களை உணர்வுள்ளவர்களாக இருக்க சொல்லலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் இங்கு (அவர்களை விட கொஞ்சம் குறைவாக என்றாலும்) உணர்வாக இருக்க வேண்டும். :rolleyes:

உண்மையில் அங்குள்ளவர்களுக்கு இங்கு மற்றவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்ற விடயம் தெரியாது எனும் போது அவர்களை குற்றம் சொல்ல முடியாது. இங்கு வேலை செய்பவர்கள் தமது பிரச்சனைகளை சொன்னால் வீட்டிலுள்ளோர் கவலைப்படுவார்கள் என்று நினைத்து தமது நிலை பற்றி எடுத்து சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அவ்வாறு உருவாக்கி வைத்ததும் புலம்பெயர் தமிழர்கள் தான். (சில குடும்பங்கள் மட்டும் வெளிநாட்டில் உள்ளவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டவர்களாக உள்ளார்கள்)

அங்குள்ளவர்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தால் படிப்பு செலவுக்கு மட்டும் அளவாக பணம் அனுப்ப வேண்டும். (அதையும் பெற்றோரிடம் அனுப்புவது நல்லது.) அளவுக்கதிகமாக அனுப்பினால் அவர்கள் இல்லாத பழக்கங்களையும் உருவாக்கி கொள்வார்கள். கண்டபடி செலவழிப்பார்கள். காசு அனுப்பாமல் விட்டால் கூட முன்னேற வேண்டும் என்று நினைத்து அங்குள்ளவர்கள் படிப்பார்கள். காசு அனுப்புவதால் தான் பலரின் படிப்பு குழம்புகிறது. :wub:  வெளிநாட்டு காசு வரும் தானே என்ற எண்ணமும் உருவாகிறது. :rolleyes:

"கலோ" சொன்னவுடன் காசு அனுப்புவது அண்ணனின் பிழை. அண்ணன் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணம் தான் பிரச்சினை என்றால் அந்த அண்ணன் பணத்தை அனுப்பாமல் விட்டால் பிரச்சினை முடிந்து விட்டது. :wub:

Edited by துளசி

  • தொடங்கியவர்

சொகுசான வாழ்க்கை, மோட்டார் சைக்கிள் சவாரி என்ற இலவசக்கிடைப்பனவுகளின் விளைவு தான் இவை. என்ன செய்வது! இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் எங்கள் இளைஞர்கள் உழைக்க வழி தெரியாது தவிப்பர். அப்போது மேசன் தொழி லாளி முதல் வயறிங் வேலையாளர் வரை எல்லா வற்றிலும் சிங்கள இளைஞர்களே கோலோச்சு வர். அவர்களின் வேலைப்பக்குவம் வடபகுதி யில் நல்ல உழைப்பு என்பதாக அவர்களுக்கு இருக்கும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116091

இங்க கனபேற்ற கருத்தில மாற்றங்கள் தெரியுது. :rolleyes:

மூண்டு நாலு வருஷத்திலயே இந்த முன்னேற்றம் எண்டால்,  போகப்போக இன்னும் நல்லா இருக்கும்.

வாழ்க எம் எதிர்காலம். :lol:

 


யாழ்ப்பாணத்தில் இப்ப நடக்கிற கூத்துகளின்ர  கால்வாசியக்கூட இந்தக் கவிதை சொல்லவில்லை. ஆனால் அதைச் சொன்னதுக்கே பலபேருக்கு ஒத்துக்கொள்ளவில்லை.      :o  :unsure:       :rolleyes:          

இங்க கனபேற்ற கருத்தில மாற்றங்கள் தெரியுது. :rolleyes:

மூண்டு நாலு வருஷத்திலயே இந்த முன்னேற்றம் எண்டால்,  போகப்போக இன்னும் நல்லா இருக்கும்.

வாழ்க எம் எதிர்காலம். :lol:

 

யாழ்ப்பாணத்தில் இப்ப நடக்கிற கூத்துகளின்ர  கால்வாசியக்கூட இந்தக் கவிதை சொல்லவில்லை. ஆனால் அதைச் சொன்னதுக்கே பலபேருக்கு ஒத்துக்கொள்ளவில்லை.      :o  :unsure:       :rolleyes:          

 

யாழ்ப்பாணத்தில் நடக்கிற கூத்துகளை சொல்லலாம்.

ஆனால் அதை வெளிநாட்டிலுள்ள அண்ணனுடனோ கிருசாந்தி புதைக்கப்பட்ட மண் என்பதுடனோ சம்பந்தப்படுத்தாமல் கூறியிருந்திருக்கலாம். அத்துடன் புலம்பெயர் மக்களின் கூத்துகளையும் உள்ளடக்கி சொல்லியிருக்கலாம்.

எனவே கவிதை எழுதப்பட்ட முறை பிழை. அதற்கெதிராக தான் பலருடைய விமர்சனங்களும் உள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் நடக்கிற கூத்துகளை சொல்லலாம்.

ஆனால் அதை வெளிநாட்டிலுள்ள அண்ணனுடனோ கிருசாந்தி புதைக்கப்பட்ட மண் என்பதுடனோ சம்பந்தப்படுத்தாமல் கூறியிருந்திருக்கலாம். அத்துடன் புலம்பெயர் மக்களின் கூத்துகளையும் உள்ளடக்கி சொல்லியிருக்கலாம்.

எனவே கவிதை எழுதப்பட்ட முறை பிழை. அதற்கெதிராக தான் பலருடைய விமர்சனங்களும் உள்ளது.

 

துளசி.... அது கிருஷாந்தி புதைக்கப்பட்ட மண் மட்டுமல்ல எத்தனையோ மாவீரச் செல்வங்களை சுமக்கும்  மண். அந்த  மண்ணுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கு. அங்கு வாழும் இனத்துக்கென்று ஒரு வரையறை கலாச்சாரம் இருக்கு.

 

அதன் எல்லையை மீறும்போது... அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் சுட்டிக்காட்டலாம். தப்பே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படம் தென்னிலங்கை சிங்களச் சுற்றுலா பயணிகள் வந்த போது எடுத்ததாக முன்னர் இணையத்தில் படித்த ஞாபகம்.

 

மேலும்.. அர்ஜீன் அண்ணாவின் கருத்திலும் உடன்பாடில்லை.

 

இளைஞர்கள் என்றால் குடிக்கனும்.. கூத்தாடனுன்னு அவசியம் இல்லை. அதுதான் அவர்களிற்கான மகிழ்ச்சிகரமான வாழ்வு என்றும் இல்லை. இளைஞர்கள் என்பவர்கள் ஒரு மனித சமூகத்தின் முக்கிய ஆக்கல் வலு. அதனை குடியிலும் மதுவிலும் மாதுவிலும் தள்ளிவிட்டு சீரழிப்பதை அர்ஜீன் போன்றவர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். ஏனென்றால் அப்போ தானே தாங்கள் படித்தவர்கள்.. என்று சொல்லிக்கொண்டு போய் அந்தப் பேதைகள் முன் விலாசம் காட்டலாம். தம்மால் அடைய முடியாததை எவரும் அடையக் கூடாது என்ற நினைப்பை நிறைவேற்றச் செய்யலாம்.

 

எமது தாயக.. சமூகத்தை இரண்டு முக்கிய காரணிகள் சீரழிக்கின்றன. ஒன்று.. உள்ளிருக்கும் இன அழிப்பு சிங்கள.. அரசும்.. அதன் கைக்கூலிகளும் (இதில் இந்தியாவும் சில வெளிநாடுகளும் அடங்கும்). இரண்டும் கண்மூடித்தனமாக வெளிநாட்டு மோகம் கொண்டு வாழும் புலம்பெயர் மக்கள் கூட்டம் (எல்லோரும் அல்ல.. கண்மூடித்தனமாக வாழ்பவர்களும் விசமிகளும் இதில் அடக்கம்.)..!

 

எம் மண்ணில் மதுபானம் கட்டுப்பாடின்றி விற்பனையாகிறது. போதைப் பொருட்களை பல்வேறு வர்த்தகர்களும் கடத்தி வருகின்றனர். குறிப்பாக முஸ்லீம், சிங்கள..வர்த்தகர்கள். அண்மையில் கூட மன்னாரில் முஸ்லீம் வர்த்தகர்களிடம் இருந்து பெருமளவு போதைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு கைபெற்றப்பட்ட செய்தி ஊடகங்களில் வந்திருந்தன.

 

இதற்கு மேலும்.. விபச்சாரம்.. பாடசாலைக் கல்வியை இடை நிறுத்தல்.. பள்ளி நேரத்தில்.. காதல்.. கண்றாவி என்று மாணவர்களும் ஆசிரியர்களும் அலைதல்.. என்று ஒரு அடிப்படை சமூக நிர்வாக அமைப்பே இன்றி எமது சமூகம் வாழ விடப்பட்டுள்ளது.

 

உலகில் எந்த ஒரு முறையான சிவில் நிர்வாகம் உள்ள நாட்டிலும் இப்படி இல்லை. இங்கிலாந்தில் கூட ஒரு மணித்தியாலம் லேட்டா பாடசாலைக்குப் போனால் கூட பெற்றோருக்கு போன் கோல் வந்திடும். ஆனால் ஊரில் பாடசாலையை கைவிட்டு விட்டே மாணவர்கள் வீதிக்கு வந்துவிடுகின்றனர். இதனையே.. அந்த வயதில் என்ஜோய் பண்ண விடுதலாக அர்ஜீன் தன் பிள்ளைகளுக்கு அளிப்பாரா..???!

 

புலம்பெயர் நாடுகளில் சீரழியும் எம்மவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அது குறித்து அந்தந்த நாடுகள் தான் கவலைப்பட வேண்டும். மேலும் இறுக்கமான சட்ட ஒழுங்குகள் நிச்சயம் வெளிநாடுகளில் எம்மவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு எல்லை இடும். ஆனால் தாயகச் சீரழிவுகள் என்பது ஒரு இன அழிப்பின் அங்கமாக ஊக்குவிக்கப்படுகிறது.

 

அங்கு இளைஞர்கள் யுவதிகள் சமூகச் சீரழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்படுதல்.. என்ஜோய்மென்ற் அல்ல. என்ஜோய்மென்ற் என்ற வடிவில் ஒரு இனத்தின் ஆக்கல் வலு சீரழிக்கப்படுகிறது. இது பல்வேறு வழிகளில் இன அழிப்பாளனுக்கு உதவும்..!

 

எமது இளைஞர்களுக்கும் நிச்சயம் என்ஜோய்மென்ற் அவசியம் தான். அதற்கு அவனை அவன் சார்ந்த சமூகத்தை பலவீனப்படுத்தக் கூடிய என்ஜோய்மென்றை தான் அளிக்க வேண்டும் என்றில்லை. அதற்கு மாறாக.. ஒரு ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு குறுகிய கால.. நீண்ட கால.. பயனுள்ள வகையில்.. அதனை வழங்கலாம்.

 

நல்ல கல்வி.. கல்வி மற்றும் விளையாட்டுக்களை ஊக்குவித்தல். பொருண்மிய விடயங்களில்.. கண்காட்சிகளில் இளைஞர்களின் ஆக்கற் திறனை கொண்டு வருதல்.. உள்நாட்டின் தேவைக்கு ஏற்ப கண்டறிதல்கள் ஆய்வுகளில் ஈடுபடச் செய்தல். தொழில்பட்டறைகளில் பயிற்சி வழங்குதல்... மாவட்ட.. தேசிய மட்டம் விளையாட்டுகளில் போட்டியிட உள்ளூர் கழகங்களை உருவாக்கி விளையாட அனுமதித்தல். இசை.. கலை.. திரை துறைகளில் பயிற்சியும் பங்களிப்பும் அளிக்க ஊக்குவித்தல். முதியோர் பராமரிப்பு.. சாரணர் இயக்கம்.... லியோ.. லயன்ஸ்.. பத்திரிகை.. ஊடகவியலாளர் பயிற்சிகள்.. கைத்தொழில் துறையில் ஈடுபடுத்தல்.. ஓய்வு நேர.. இலத்திரனியல்.. துறையில் ஈடுபடுத்தல்.. விவசாயம்.. விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தல்.. கணனி உலகம் பற்றி அறிவூட்டல். கணனி மொழிகளைக் கற்றலும்.. உருவாக்குதலும்...என்று எத்தனையோ.. சமூக நலன் சார் பொருண்மியம் சார்.. அறிவியல் சார் தொழில்நுட்பம் சார்.. விடயங்களை கற்றுக் கொடுக்கலாம்.. கொண்டு நடத்தலாம். இவற்றின் மூலமும் என்ஜோய் பண்ணக் கற்றுக் கொடுக்கலாம்.

 

கட்டுப்பாடான முறையிலும் சமூக நலன் சார்ந்தும்.. கார்னிவேல்.. இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

 

மற்ற வகை.. என்ரெயிண்மெண்டுக்கு குடிக்கிறதுக்கு வயதெல்லை.. அளவு என்பது அவசியமாக்கப்பட வேண்டும். பொது இடத்தில் குடித்தல்.. புகைத்தல்.. தவறாக நடந்து கொள்ளுதல் தடுக்கப்படுதல் வேண்டும். பெண்களுக்கு ஆண்களும் ஆண்களுக்கு பெண்களும் சம மதிப்பும்.. மரியாதையும் அளித்து வாழப் பழக்குதல்..!

 

போதைப் பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வு அவசியமாக்கப்படுவதோடு.. போதைப்பொருள் பாவனையில் இருந்து மீள ஊக்கப்படுத்த வேண்டும். பாலியல் கல்வி மற்றும் பால்வினை நோய்களின் தடுப்பு.. குடும்பக் கட்டுப்பாடு பற்றிய அறிவூட்டலை செய்ய வேண்டும்.

 

எமது தேசத்தின் இன்றைய அரசியல் நிலையை இளைஞர்களும் யுவதிகளும் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் சக்தி மிக்க அரசியல் தலைவர்களாக உருவாக பயிற்சிகளை வழங்கலாம்.. நல்ல அரசியல் வழிகாட்டுதல்களை வழங்கலாம். இளையோர் பாராளுமன்றங்களை.. உள்ளூர் கிராமிய மட்டத்தில் அமைத்து அவர்களுக்கு அரசியல் ஜனநாயக விடயங்களைக் கற்பிக்கலாம்.

 

இப்படி எத்தனையோ செய்யலாம்... வெறுமனவே குடிக்கிறதும்.. புகைக்கிறதும்.. போதையில மிதக்கிறதும்.. பெட்டையோட பொடியும்.. பொடியோட பெட்டையும் அலையுறது தானா என் ஜோய்மென்ற். எவன் சொன்னான் அது தான் என்ஜோய்மென்ற் என்று. அர்ஜீன் போன்றவர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி செல்ல அனுமதிப்பார்களா...??! ஆனால் மற்றவன் பிள்ளைகளைச் சீரழித்து அதில் குளிர்காய அவர்கள் பின்னிற்கமாட்டார்கள். அவரைப் போன்றவர்களே இன்று தாயகத்திலும் நிறையத் தொடங்கி உள்ளனர்.

 

இது வெறுமனவே என்ஜோய்மென்ற் அல்ல. இப்படியான என்ஜோய்மென்ற் எம்மைப் பலவீனப்படுத்துமே அன்றி பலமாக்காது. இது.. இன அழிப்பு எதிரி எமக்கு பரிசளித்திருக்கும் இன அழிப்பின் ஒரு தாக்கம். இதனை சரியாகக் கையாள வேண்டிய கடமை.. புலம்பெயர்.. தாயக சமூகவியலாளர்களைச் சார்ந்தது. அந்த வகையில்.. இந்தக் கவிதை முற்றிலுமாக இல்லாவிட்டாலும்.. பகுதியாகவேனும்.. எம்மவர்கள் எதிர்காலத்தில் எம் நிலம் நோக்கி செய்ய வேண்டிய செயற்பாடுகளின் தேவை குறித்து தீர்மானிக்க உதவும்..! இது வெறுமனவே ஒரு காழ்புக் கவிதை அல்ல..! முற்றிலுமாக இல்லாவிட்டாலும்.. நிஜத்தின் பிரதிபலிப்புகளை கொண்ட ஒரு கவிதை..! :icon_idea:

 

வெளிநாடுகளில் இருந்து கடனட்டையிலும் அரச பணத்தில் மிச்சம் பிடித்தும் நாளுக்கு 14/ 16  மணித்தியாலங்கள் என்று உடலை வருத்தி உழைத்தும்.. பெறப்படும் பணமே.. ஊருக்குப் போகும் பணத்தில் அதிகம். அதன் வலியை அர்ஜீன் அறியமாட்டார். ஏனென்றால் அவர் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவ சங்கம் என்று சொல்லி ஆக்களிடம்.. ****** (சுய தணிக்கை.. நீங்களே போட்டு நிரப்பிக்குங்க..) அவர் அதில் குடிப்பார் கும்மாளம் அடிப்பார். அது அவரைப் பொறுத்த வரை என்ஜோய்மென்ற். சமூகவியலைப் பொறுத்தவரை அது ஒரு வகை.. பொறுக்கித்தனம். :D:lol:

Edited by nedukkalapoovan

துளசி.... அது கிருஷாந்தி புதைக்கப்பட்ட மண் மட்டுமல்ல எத்தனையோ மாவீரச் செல்வங்களை சுமக்கும்  மண். அந்த  மண்ணுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கு. அங்கு வாழும் இனத்துக்கென்று ஒரு வரையறை கலாச்சாரம் இருக்கு.

 

அதன் எல்லையை மீறும்போது... அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் சுட்டிக்காட்டலாம். தப்பே இல்லை!

நிச்சயமாக அந்த மண்ணின் மகிமை எனக்கும் தெரியும். ஆனால் அங்குள்ளவர்கள் அந்த மண்ணை பற்றி யோசித்து நடக்க வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த நாமும் அந்த மண்ணிலிருந்து வந்தவர்கள் என்ற ரீதியில் எமக்கும் அதே கடமை உள்ளது தானே. வேறு மண்ணை மிதித்து விட்டால் நாம் வேறு அவர்கள் வேறு என்று அர்த்தமில்லை.

ஆனால் வெளிநாடு வந்ததும் தமக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்ததும் அந்த மக்களை மறந்து இங்குள்ளவர்களில் பலர் குடித்து கும்மாளமடிக்கிறார்கள்.

 

தாயகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு தான் குடித்து கும்மாளம் போட்டாலும் உயிராபத்து என்பது அவர்களுக்கு எந்நேரமும் வரலாம். நாம் இங்கு வேலை செய்து கஷ்டப்பட்டாலோ மன அழுத்தங்களுக்கு உட்பட்டாலோ கூட உயிர் பயமில்லாமல் வாழும் நிலைமை உள்ளது. எனவே அவர்களுக்கு விடிவு வரும் வரை தம்மை தாம் கட்டுப்படுத்த வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கும் உள்ளது.

 

அத்துடன் வெளிநாட்டு பணத்தை அளவுக்கதிகமாக அங்கு அனுப்புவதன் மூலம் அங்குள்ளவர்கள் படிப்பு குழம்புவதற்கோ அல்லது அவர்கள் தவறான வழியில் செல்வதற்கோ காரணமாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள். தனது சகோதரன் பணத்தை தவறாக பயன்படுத்துகிறான் என்று தெரிந்தால் பணம் அனுப்புவதை நிறுத்த வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் சரியான பாதையில் செல்வார்கள். தாமாக யோசித்து படிப்பார்கள்.

எனவே புலம்பெயர் தமிழர்களின் பிழைகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கலாம். அது இப்படி விமர்சனத்துக்கு உள்ளாகியிராது... :rolleyes: உங்களால் முடிந்தால் இதுவிடயமாக நீங்கள் ஒரு கவிதை எழுதுங்கள். :D

Edited by துளசி

இது இன அழிப்பு எதிர் எமக்கு பரிசளித்திருக்கும் இன அழிப்பின் ஒரு தாக்கம். இதனை சரியாகக் கையாள வேண்டிய கடமை.. புலம்பெயர்.. தாயக சமூகவியலாளர்களைச் சார்ந்தது. அந்த வகையில்.. இந்தக் கவிதை முற்றிலுமாக இல்லாவிட்டாலும்.. பகுதியாகவேனும்.. எம்மவர்கள் எதிர்காலத்தில் எம் நிலம் நோக்கி செய்ய வேண்டிய செயற்பாடுகளின் தேவை குறித்து தீர்மானிக்க உதவும்..! இது வெறுமனவே ஒரு காழ்புக் கவிதை அல்ல..! முற்றிலுமாக இல்லாவிட்டாலும்.. நிஜத்தின் பிரதிபலிப்புகளை கொண்ட ஒரு கவிதை..! :icon_idea:

 

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

அருமையான கவிதையைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோ. 

எனது சந்ததியைப் பற்றி வேதனைப்பட வைக்கும் வரிகள்... 

பலருடைய எதிரான கருத்துக்கள் கூட வேதனை தருகிறது... படிக்கும் வயதில் குடியும் கும்மாளமுமாக இருப்பது தான் அந்த வயதின் மகிழ்ச்சி என்று சொல்வது எமது தலைமுறையினரை தவராக வழி நடத்தும்...  குடிக்காத இளைஞர்கள் எல்லாம் சந்தோசமாக இல்லையா என்று கேட்கத் தோன்றுது...

பண்பாடு, கலாச்சாரம் தான் எம் மண்ணிற்கு பெருமை சேர்ப்பது... அதை காக்க வேண்டியதும், தறும் போது சுட்டிக் காட்ட வேண்டியதும் ஒவ்வொரு தமிழனுடையதும் கடமை... புலம் பெயர்ந்த தமிழர்களின் கடின உழைப்பை இந்தக் கவிதை சுட்டிக் காட்டியதில் தவறென்ன இருக்கு... கனடாவில் இருக்கும் அண்ணனின் துன்பத்தை அறியாத தம்பிக்கு சொல்லிப் புரிய வைப்பதில் தவறொன்றும் இல்லையே...

எங்கள் போராட்டத்தை மதித்த, எனக்கு தெரிந்த ஒரு சிங்கள மனிதர் வன்னிக்குள் நுழையும் போது காலில் செருப்பு கூட போட மாட்டார்... அது இரத்தம் சிந்திய மண் என்று... ஒரு சிங்களவனுக்கே இந்த மன நிலை இருக்குமென்றால், கிருசாந்தியும் இன்னும் எத்தனையோ முகமறியா உறவுகளும், மாவீரச் செல்வங்களும் புதைந்த எமது தாயகம் பற்றி எமக்கு எந்தளவு உணர்வு இருக்க வேண்டும்... அப்படியிருக்க இந்தக் கவிதையில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களைத் தூற்றுவது மிகவும் வருத்தமளிக்கிறது... :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதுக்கு, கவலைப் படாதேங்கோ....
இந்தக் களத்திலை, அமாவசைக்குப் பிறந்த ஒட்டுக்குழுக்களுக்கும்... கருத்து எழுத சுதந்திரம் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.