Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies


 

அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன்.



“அண்ணை நான் இங்கு பீட்டர்”



“பீட்டர் “



“அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “



“டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?”



“ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில்
வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில்
இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம்  கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான்
.பிள்ளைகள் இருக்கா அண்ணை?”



“ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு”



“போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை
கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்கடை கதையும் வந்தது
,அவன்தான் போன் நம்பரும் தந்தவன்”



“கலியாணம் கட்டியாச்சா”



“இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கினம்,அடுத்த முறை டொராண்டோ வரும்போது கட்டாயம்
உங்கட வீட்டிற்கு வருகின்றேன் ,நீங்களும் அமேரிக்கா பக்கம் வந்தால் டெக்சாசிற்கும்
வாருங்கோ ,என்னோடேயே நிக்கலாம்.உங்க கனக்க கொம்பனி ஆட்கள் இருக்கினம். ஒட்டாவாவில்
படிப்புடன் இருந்ததில் பெரிதாக எவருடனும் தொடர்பு ஏற்படவில்லை ,நந்தனுடன்
மாத்திரம் தான் அடிக்கடி கதைப்பேன் ,அவன்தான் நான் படிக்கவும் உதவிசெய்தவன் வேறென்ன
பிறகு சந்திப்பம்.நான் இப்பவும் அந்த கறுப்பு பெட்சீட்டை நினைத்து சிரிக்கின்றனான்,
மறந்து போனிங்களோ. “



“எல்லாவற்றையும் அடிக்கடி நினைக்க சிரிப்பும் வரும் அழுகையும் வரும் ,அந்த
கறுப்பு பெட்சீட் தேவனும் இங்குதான் இருக்கின்றான் ,சரி பிறகு கதைக்கின்றன். BYE.” .



போனை வைத்துவிட்டு  பீட்டர் சொன்ன கறுப்பு
பெட்சீட்டை நினைத்து பார்க்கின்றேன்.



சென்னையில் கே கே.நகரில் நாங்கள் இருந்த வீட்டின் மொட்டைமாடி அந்த ஏரியாவிலேயே
மிக உயரமானது. சுற்ற வர தென்னை ,மா மரங்கள் என்று சூழப்பட்டு ஆனி.ஆடி என்று அள்ளும்
வெக்கையிலும் எங்கள் மொட்டை மாடி குளிர்மையாக இருக்கும் .அதைவிட குளிர்மை அதிலிருந்து
காலையில் அயலில்  கோலம்போடும் கன்னிகைகள்
தொடங்கி பின்னர் அழகான யூனிபோமுடன் வலம்வரும் ஊர்சிவசிகள் , மாலையில் சயிக்கிளில்
டுயுசன் என்று பவனி வரும் ரம்பைகளின் தரிசனம்.  நாங்களும் பாடசாலை? என்ற ஒன்றில் படித்துக்கொண்டு
இருந்ததால் எங்களுக்கும் படிக்கின்ற பெடியங்கள் என்ற நினைப்பு .



அந்த மொட்டைமாடியுடன் கூடிய  முழு வீட்டில்
பதினெட்டு பெயர்கள் இருந்து படித்துக்கொண்டு இருந்தோம்.இந்த பதினெட்டு பெயர்களும்
முழு முகாம்களிலும் இருந்து முதல் படிப்பு முடித்து அடுத்த நிலைக்கு தெரிவு
செய்யபட்டவர்கள்.அனைத்து பிரதேசங்களிலும்(STANDARDIZATION?) இருந்து மாணவர்களை தெரிவு செய்ய
வேண்டும் என்ற நிலைப்பாட்டால் தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் இருந்தும்  வந்திருந்தார்கள் .



பாடசாலையின் பெயர் –தமிழிழ சமூக கல்லூரி( TAMILEELAM SCHOOL OF SOCIAL SCIENCE) .அதை சுருக்கி T3S
என்று அழைப்போம்.



அதிபர் –இப்போ
லண்டனில் இருக்கின்றார் . அவர் அங்கு தங்குவதில்லை .



பாடசாலைக்கும் அந்த பதினெட்டு
பேருக்கும் பொறுப்பு நான்தான் .



 



பாடசாலை –வீட்டிற்கு
அடுத்து இருக்கும் பாவனையில் இல்லாத சத்துஉணவு கூட மண்டபம்  ,இதன் முன் பெரிய மைதானம் இருக்கு .கே கே நகர்
இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் .நாங்களும் இடைக்கிடை விளையாடுவோம்



படிப்பு -முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். இதனால் பலர் பட்ட பாடு சொல்லிமாளாது .ஒரு
சின்ன குட்டி கதை. இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கின்றேன் ,அருகில் ஏழு எட்டு
பேருக்கு ஒருவர் (எனது மனைவியின் தம்பி) ஆங்கிலம் படிப்பிக்கின்றார் .புத்தகம் WREN AND MARTIN
GRAMMER  BOOK , IDIOMS  விளங்கபடுத்திக்கொண்டு
இருக்கின்றார் .CARRY COALS TO
NEWCASTLE  . புதுமாளிகை என்றால்  அங்கு எல்லா சாமான்களும்  இருக்கும் அங்கு போய் நிலக்கரி வேண்டுமா என்று
கேட்டால் யார் வாங்குவார்கள்? நான் மெல்ல திரும்பி நல்லா இருக்கு
விளக்கம்.இங்கிலாந்தில் NEWCASTLE என்ற இடம் இருக்கு அங்கு தான் பெரும் நிலக்கரி எடுப்பார்கள்
அதானால் தான் அந்த பழமொழி வந்தது என்று சொல்ல இரண்டும் ஒன்றுதான் என்று
சமாளித்துவிட்டான்.)



ஆங்கிலம் –ஒரு இந்திய பெண் ஆசிரியை .மிக கண்டிப்பானவர் ,எவரும் தமிழில் ஒரு
வார்த்தை பேசக்ககூடாது.



இரண்டாம் பாடம் - மார்க்சிசம் ,கொம்னியுசம் பற்றி இந்திய கொம்னியூசிற்
கட்சியில் இருந்து மூன்று பெயர்கள் மாறி மாறி வருவார்கள்.த .பாண்டியனும் ஒருவர்.



மதிய இடைவேளை-சாப்பாடு,சிலர் குட்டித்தூக்கம் .



மூன்றாம் பாடம் –உலக அரசியல் ,சர்வதேச உறவுகள்,அரசியல் விஞ்ஞானம்,சமூக
விஞ்ஞானம்,மனோ தத்துவ இயல் –சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,பத்திரிக்கை
ஆசிரியர்கள்.சூரிய நாராயணா ,மனோகரன் இன்னும் சிலர் .



சனி -சிலவேளை காலை ஆங்கில வகுப்பு இருக்கும் ,சனி மாலையும் ஞாயிறும் விடுதலை .



பெரிய வீடு ,மொட்டை மாடி ,முன்னுக்கு அழகிய மைதானம்.ஆங்கிலத்தில் படிக்கும்
பெடியங்கள் (போராளிகள்?). இதனால் உமா, அனைத்து முக்கிய உறுப்பினார்களும்
அடிக்கடி விஜயம் செய்வார்கள்.,ஞாயிறு காலைகளில் மத்திய குழு கூட்டங்களும் இங்கு
நடக்கும் .



இந்த T3S இல் தான் அஜீவனை நான் சந்தித்தது.அஜீவன்
வீடியோ படங்களும் எடுத்துக்கொண்டிருந்ததால் அவர் வெளியில் போய் வர அனுமதியுண்டு .மற்றவர்கள்
அயலில் உள்ள கடைகளுக்கு சாமான்கள் வாங்க அதுவும் கொப்பியில் பதிந்து விட்டு
போகலாமே ஒழிய மற்றப்படி வேறெங்கும் போகமுடியாது .இந்த சமயத்தில் அதிபர் உமாவிடம்
கதைத்து  ஞாயிறுகளில் இவர்கள் படிப்பு
சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கு (பகிடியாக FACTS  எடுக்க
போகின்றது என்போம் ) கன்னிமாரா நூலகத்திற்கு  செல்ல அனுமதி பெற்றிருந்தார் .அதன் பின் எல்லோரும்
எப்ப ஞாயிற்றுகிழமை வரும் என்று காவல் இருப்பார்கள் .அனுமதியும் பஸ்ஸில் போக பணமும்
நான் தான் கொடுப்பது ஆக கூடியது நான்கு மணித்தியாலங்கள் தான் அனுமதி. ஞாயிறு காலை கன்னிமாரா
நூலகதிற்குள் போகும் போது  சிரிப்பாக
இருக்கும் ஆழுக்கொரு கொப்பியுடன் ஏதேதோ புத்தகங்களை புரட்டிக்கொண்டு சீரியசாக
இருப்பார்கள் .பயந்த பெடிகள் நூலகம் முடிய வீடு திரும்பிவிடுவார்கள். ஆனால் பலர் ஒரு பத்துநிமிடம்
கன்னிமாராவில் இருந்துவிட்டு அவனவன் படம் பார்க்க ,உறவினர்கள் வீடு என்று போக
தொடங்கிவிட்டார்கள் .எனக்கு எல்லோரும் இருட்ட முதல் வந்தால் காணும் என்று கண்டும்
காணாமல் விட்டுவிடுவேன் ,இதனால் பலர் சிகரெட் பத்தவும் தொடங்கியிருந்தார்கள்
இன்னமும் இரண்டு மாதத்தில் முகாம்களுக்கு திரும்ப போகின்றார்கள் என்ற எண்ணம்
அவர்களை எதுவும் கேட்டாமல் தடுத்துவிட்டது .



இந்த காலகட்டத்தில் தான் பெசன்ட்நகரில் பாலசிங்ககத்தின்  வீடு  குண்டுவைக்கப்பட்டது
,பொலிஸ் எமது வீட்டிற்கு வந்து இதில் எங்களுக்கு தொடர்பு இருக்கு என்று மூன்று
பேரை காவல் நிலையம் கொண்டுபோகபோவதாக சொன்னார்கள்.செயலதிபரின் அனுமதியிலாமல் யாரும்
வர முடியாது என்று ஒரே அடியாக மறுத்து அவர்களுடன் பெரிய வாய்த்தர்க்கபட்டு பின்னர்
ஒருவர் அருகில் இருக்கும் கடைக்கு போய் உமாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உமா
அவர்களை தான் ஒரு இடத்தில் சந்திப்பதாக சொல்ல அதை வந்து போலீசிடம் சொல்லி அவர்களை
அனுப்பிவைத்தோம் .( உமா போலீசிடம் உங்களது மேலிடம் தான் வைத்தது அவர்களிடம் போய்
விசாரியுங்கள் என்று சொன்னதாக அறிந்தேன்)



ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய
இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த
நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்
பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி
வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .



அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .



(தொடரும் ) 

எழுத்து சிறிதாக இருந்ததால் எடிற் பண்ணினேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .

யாழ்ப்பாணத்தில் இருந்த தேநீர்க்கடைகளில் ' தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்' என்று பெரிதாக ஒரு பலகையில் எழுதித் தூக்கியிருப்பார்கள்!

 

ஆனாலும் அதற்காக ஒருவரும் விவாதங்களை நிறுத்துவதில்லை.

 

ஒருவேளை இது எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியோ எனப் பல தடவைகள் சிந்தித்ததுண்டு!

 

உங்கள் கதை தொடரட்டும்!  :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன்)

.இன விடுதலையுடன் கூடிய வர்க்க போரை ஈழத்துக்கு வெளியே அழகாக நடத்திய போராளிகள்.அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்றவர்கள்.ஈழ தமிழ் மக்களின் அனுமதியின்றி மாலைதீவின் விடுதலைக்காய் போராடியவர்கள்.இவர்கள் சிந்திய குருதியின் ஈரம் தமிழகத்தின் சவுக்கம் காடுகளிலும் மாலைத்தீவின் கடற்கரையோரங்களிலும் பெண் போராளிகளின் குருதி மணியன் தோட்டத்தின் புதைகுளிககளிலும் இன்னும் காயாமல் உள்ளது.

வீரவணக்கங்கள்.

அர்ஜுன் அண்ணா,

 

மனப்பாரங்களை குறைக்கவும், நாங்கள் அறியாதவற்றை அறியவும், நாங்கள் செய்தவற்றை நாங்களே நினைவு மீட்டி பார்க்கவும், மற்றவர்களுக்கு அவர்களின் ஞாபகங்களை திருப்பி கொடுக்கவும் நீங்கள் எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் உங்கள் அனுபவத்தின் வடிவங்களாக அழகாக மிளிர்கின்றன.

 

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளும் எங்களுக்கு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
எழுதுங்கள் அண்ணா தெரியாத பல விச‌யங்களை உங்கள் கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!

காலத்தின் தேவை இது.


 

அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .


(தொடரும் )

 

இறுதியாக ராசவள்ளிக்கிழங்கு கதை எழுதியதாக ஞாபகம் . நீண்ட இடைவெளியின்பின்பு எழுதுகின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் அர்ஜுன் . கறுப்பு பெட்சீட் கதையை நானும் கேட்க ஆவலாக இருக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனின் சிவப்பு கரை போட்ட கருப்பு பெட்சீட்டா அதுக்கு பின்னலை பல கதைகள் நினைவுக்கு வருகின்றது. தொடருங்கள்

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.


 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.

 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

 

அர்ஜீன் அண்ணா தண்ணீ போட்டு எழுதத் தொடங்கிட்டு பிறகு மறந்திருப்பார் :lol:

  • தொடங்கியவர்

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .



155770_125970757462996_3643705_n.jpg

சத்துணவு கூடத்திற்கு முன் இருக்கும் மைதானம் ,இறுதிநாள் பிரதம விருந்தினராக வரும் கம்னியூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் .



76903_125970574129681_5051053_n.jpg

இதுதான் அந்த மொட்டைமாடி .கட்டம் போட்ட சேட்டுடன் இருப்பது உமா ,நாடியில் கை வைத்திருப்பது சித்தார்த்தன் ,திரும்பி பார்ப்பது வாசு .



150008_125970924129646_7442915_n.jpg

அது ஒரு கனா காலம் .தாடியுடன் நடுவில் நிற்பவர்தான் அதிபர் .

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி பார்ப்பது மட்டு வாசுவா?? வாசு தேவா

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .

 

 

தொடருங்கள்... இதில ஒருவரைப்பற்றி எழுதலாம்....

  • தொடங்கியவர்

பின்னூட்டம் விட்ட அனைவருக்கும் நன்றி ,

தப்பிலி அந்த கதை மிச்சம் எழுதிவிட்டு பின்னர் ஏதோ நினைவில் விட்டுவிட்டேன் .

ரதி போத்தல் உடைப்பதுதான் ஆனால் போத்தலே வாழ்க்கை இல்லை ,

சாத்திரி அது பரமதேவாவின் அண்ணை வாசுதான் .மனைவி இங்கு இருக்கின்றார் .

வந்தி  நீங்கள் அறிந்ததை நானும் அறிய ஆவல் .

  • கருத்துக்கள உறவுகள்

 

பரமதேவாவின் அண்ணை வாசுதான்

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

அது வாமதேவன் என்று நினைக்கிறேன்

 

வாமதேவன் மிகவும் திறமையான ஒரு வாகனசாரதி என்றும், ஆரம்ப காலங்களில் நடந்த வங்கிகொள்ளைகளுக்கு இவர் தான் கார் சாரதியாக இருந்ததாகவும் நண்பர்கள் சொல்லி

கேள்விபட்டுள்ளேன்.

Edited by நவீனன்

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

 

நவீனன் கூறியது மாதிரி தந்தை செல்வாவின் சாரதி வாமதேவன். அவர் அதிகம் பம்பாயில்தான் இருந்தார். வக்கீலுடன் சேர்ந்து இயங்கி இருந்தார் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்


 

மிகவும் உரத்த  குரலில்
கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்த அவனை நான் அணுகி



“சத்தம் போடாதை ,என்ன பிரச்சனை” என்று கேட்டேன் .



“தனியாக இருக்கின்ற பொம்பிளை வீட்டிற்குள் உங்கட ஆள் ஒருவன் நேற்றிரவு
பாய்ந்துவிட்டான்,ஆளை இப்ப அனுப்பு “என்றான் .



“சும்மா நீ நினைத்தபடிக்கு ஒன்றும் செய்ய முடியாது,இங்கிருப்பவர்கள்
அப்படியானவர்களும் இல்லை,என்ன நடந்தது என எனக்கு தெரியாது ,ஏதும் நடந்திருந்தால்
ஆளை பிடித்து தண்டனை கொடுக்கலாம் ,எதற்கும் நாளை வா ,விசாரித்துவைக்கின்றேன்
“என்றேன் .



அவன் குடித்து வேறு இருந்தான் ,சயிக்கிளை உருட்டிக்கொண்டு ‘ நாளைக்கு வாறான்
அவன் வேணும்” என்று கொண்டு போய்விட்டான்.



பெடியங்கள் எல்லாம் என்ன ? என்ற மாதிரி பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .ஏதோ
இசக்கு பிசக்காக நடந்துவிட்டது என்பதை விளங்கிவிட்டார்கள் .



“இரவு கள்வன் யாரோ அடுத்தவீட்டிற்குள் எங்கட மொட்டை மாடியால் தான் வந்தவனாம்
,எங்களில் யாரையோ சந்தேகப்படுகின்றான்.அவனுக்கு வெறி  இருந்தாலும் எல்லாரையும் விசாரிக்கின்றேன் என
அனுப்பிவிட்டேன்.நாளை திரும்ப வருவான் ” என்று 
பெடியங்களிடம் சொன்னேன் .



அடுத்த சனி நடக்க இருக்கும் கூட்டத்தில் தங்களது ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டுமேன்பதில்
எல்லோரும் ஆர்வமாக இருந்ததில் கலைந்துவிட்டார்கள். படித்த அந்த மூன்று மாதத்திலும்
ஒவ்வொரு மாதம் முடியவும் ஒவ்வொரு குரூப்பும் (மொத்தம் நாலு குரூப்) ஒரு
தலையங்கத்தின் கீழ் ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டும்.சனி மாலை மூன்று பேர்கள்
தலைமையில் இது நடக்கும் ,பார்வையாளர்கள் பலர் (இயக்க ஆட்கள் ) கலந்து கொள்வார்கள்
.குரூப்பின் தலைவர் பார்வையாளர்கள்  மத்தியில் தங்களது கட்டுரையை வாசித்து அவர்கள்
கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அழிக்கவேண்டும் இதனால் எல்லோரும் குரூப் குரூப்பாக
இருந்து ஒரே  படிப்பு .



கட்டுரைக்கான தலையங்கங்கள்  



தமிழிழத்தின் வெளிநாட்டு கொள்கை  (இதுதான்
எனது குரூப்பிற்கு தந்தது)



போராட்டத்தில் மகளிர் பங்களிப்பு.



எமது போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்



ஐக்கியமும் போராட்டமும் (மாற்று இயக்கங்கள் ,இனங்கள் )



வழக்கம் போல் இரவு சாப்பாடு எல்லோரும் கூடி இருந்து சாப்பிட்டுவிட்டு (காலை –இட்டலி
அல்லது தோசை எடுப்பு சாப்பாடு ,மதியம் சமையல் நாங்களே செய்து சாப்பிடுவோம், இரவு
பாணும் சம்பலும் ) மொட்டைமாடிக்கு படுக்க போகின்றோம்.



ஒரு 4x8 கோரை பாய் ,கருப்பில் சிவப்பு கோடு போட்ட பெட்சீட் ,ஒரு
அலுமினிய பிளேட் ,ஒரு ரம்ளர் இதுதான் ஒவ்வொருவரினதும் சொத்து ,அதைவிட உடுப்புகள்
இரண்டோ மூன்றோ சோடிகள் ஒரு பையில் வைத்திருப்பார்கள் .



ஆளுக்கு ஆள் பாயையும்
பெட்சீட்டையும் தூக்கிக்கொண்டு மொட்டைமாடிக்கு  போனாலும் ஒருபாயிலேயே பத்து பேர் மரவள்ளி கிழங்கு
அடுக்கிய மாதிரி படுத்துக்கிடந்து பல கதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஒருவன் எந்த
நாளும் “வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே” என தனது பழைய காதலியை நினைத்து
பாடாமல் படுக்கமாட்டான் .நான் எப்பவும் தனியாகத்தான் .பொறுப்பாளர் என்பதாலோ
மற்றவர்களை கொஞ்சம் எட்ட வைக்கும் எனது சுபாவத்தினாலோ அல்லது பயிற்சி ஒன்றாக
எடுக்காத காரணத்தினாலோ என்னவோ எப்பவும் நான் சற்று அந்நியம் தான் ,இருந்தாலும்
அவர்களின் கதைகள் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பேன் .



இன்று மொட்டைமாடிக்கு
வந்து நாலு பக்கமும் சுற்றி பார்க்கின்றேன் .முன்பக்கம் வீதியுடன் வாசல் ,இடதுபக்கம்
இருக்கும் வீடு எமது வானொலிகாரர் குடும்பத்துடன் இருக்கின்றார் (இப்போ பிரான்சில்
இருந்து இடைக்கிடை யாழில் எட்டி பார்ப்பவர்) வலது பக்கம் சத்துணவு கூடம் சற்று
இடைவெளி விட்டு தள்ளி இருக்கின்றது .பின்பக்கம் உமாவின் பெற்றோர்,சகோதரி,புருஷன்
,இரண்டு சிறு பிள்ளைகள் .இவர்கள் இருக்கும் வீட்டு மொட்டைமாடியில் ஒரு இளம்
பெண்ணும்  ஒரு குழந்தையும்
இருக்கின்றார்கள் .இந்த பெண்ணின் வீட்டிற்கு தான் எமது பெடியன் ஒருவன் பாய்ந்ததாக
ஒருவன் வந்து கத்திவிட்டு நாளை வருவதாக போய்விட்டான்.



அவர்கள் வீட்டு
மொட்டைமாடிக்கும் எமது வீட்டு மொட்டைமாடிக்கும் இடையில் ஒரு ஆறு அடிகள் இடைவெளி இருக்கும்
.அந்த இடைவெளிக்குள் நேரே கீழே அந்த வீட்டு ஒரு கிணறு இருக்கு . அந்த இடைவெளியை
கீழே பார்க்கவே பயமாக இருக்கும் அதை விட உமாவின் பெற்றோர் அங்கு இருந்ததால் சற்று
அடக்கியே வாசிப்போம் .



அந்த மொட்டை
மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்.



நாம் எல்லோரும்
சும்மா சில நேரம் அவாவின் சேட்டைகள்  பற்றி
சிலாகிப்பதுடன் அந்த பெண் நினைவு மறைந்துவிடும்.எங்களுக்கு  அதில் ஈடுபாடு இல்லை என்பது இல்லை. முகாமில்
மரக்கறி வாங்க போன தோழர் ஒருவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து பயிற்சியில்
இருந்த அனைவருக்கும்  முன்  வைத்து அவர் மாதக்கணக்கில் வாங்கிய அடி பற்றி
திரும்ப திரும்ப கதைப்பார்கள் .அதனால் அந்த நினைப்பே எவருக்கும் வருவதே இல்லை
,தனிய அங்க லட்சணங்கள் பற்றி அங்கலாய்ப்பதுடன் முடிந்து விடும் அனைவரின் கனவும் .



பின்னிரவாக மொட்டைமாடி
மெல்ல அமைதியாகி அனைவரும் தூங்கிபோகின்றார்கள் .நாளைக்கு அவன் வந்தால் நான் என்ன
செய்வது? உண்மையில் யாரும் பாய்ந்திருப்பார்களா? முறைப்படி தலைமைக்கு அறிவித்தால்
கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை
அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்? நித்திரை வருகுதில்லை. மொட்டை
மாடி எங்கும்  கறுப்பு பெட்சீட்டால்
போர்த்தியபடி தூங்குகின்றார்கள்.



இதில் யாராக
இருக்கும் பாய்ந்தது?  



இவன் சிவா தான்
தாக்குதலுக்கு போய் செத்தாலும் அதற்கு முதல் இந்த இரண்டு வருட வெப்புசாரத்தை
தீர்க்க  நாலு சிங்களத்திகளுக்கு அலுவல்
பார்க்காமல் விடமாட்டன் என்று சொல்லுகின்றவன்



குளிக்கேக்கை எந்த
வித உடுப்பும் இல்லாமல் ஆளுக்கு ஆள் தண்ணி எத்தி நிர்வாணாமாக எங்கும் அலைந்து
திரியும் சைமன்,நேதாஜி,ரவி,வில்லியம் .



அமுசடைக்கையாக என்ன
செய்கின்றான் என்றே தெரியாமல் இருக்கும் பவன்



ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
இன் டுயுவல் படத்தில் யார் அந்த டிரைவர் என்று எல்லோரையும் ஐமிச்ச படுவதுபோல்
நானும் அனைவரையும் பற்றி யோசிக்கின்றேன்.



சாட்சிக்காரன் காலில்
விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று முடிவெடுத்து நாளை விடிய அந்த
பெண்ணிடமே என்ன நடந்தது என்று கேட்க முடிவெடுத்துவிட்டு தூங்கிவிடுகின்றேன் .



(தொடரும் )



 



  

Edited by arjun

Quote: " முறைப்படி தலைமைக்கு அறிவித்தால் கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்"

 

உள்ளுக்குளேயே ஒற்றுமையில்லை

 

 

Quote: "மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்."

 

அவ என்ன செய்கின்றா என்று எந்தநேரமும் புலனாய்வு செய்திருந்தால் எப்படி பெடியளை கவனிச்சனீங்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

 

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

 

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

 

அவர் எழுதும் பாணி மிக வித்தியாசமானது.

 

ஓரளவு எழுத்துக் கூட்டி அம்புலிமாமா வாசிக்க ஆரம்பித்ததுமே,  தீவீர இலக்கியத் தேடலில் ஜமேலா / பட்லி / பெண் அடிமை / கறுப்பு  ராஜா வாசித்து இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டோம். :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

நடந்தவை,தெரிந்தவற்றை எந்த விருப்பு,வெறுப்புக்களும் இன்றி உண்மையாய் எழுதுங்கள், தனிப்பட்ட சொந்த அனுபவங்களை எழுதுவது வேறு இப்படி ஒரு இனத்தின் விடுதலையை உண்மையாய் எழுதும் போது அது சரி,பிழைகளுக்கு அப்பால் சரியான தகவல்களை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்லும்.

 

உண்மையான,சரியான தகவல்கள் தெரியாமல் யாரும்,யாரையும் விமர்சனம் செய்வது என்பது ஏளனத்திற்குரியது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எல்லாம் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை அப்படி இருக்க,வாசித்ததும் செவிவழி செய்திகளையும் வைத்து முடிவெடுப்பதென்பது எவ்வளவு தூரம் நம்பிக்கையானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் அடுத்த சந்ததிக்காக உங்களுக்கு தெரிந்த ஆரம்பகாலப் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுதுங்கள்.

 

புலிகள்,புளொட்,ரெலோ என்று எல்லா அமைப்பிலும் சில தலைசிறந்த வீரர்கள் இருந்ததும், தலைமைகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்துக்காக போரடப்போய் வீரத்தின் விளைநிலங்களாய் ஆனதும்,

வழிமாறிப்போனதும் கண்முனே நடந்த ஒன்று, அந்தப்பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.

 

(இது ஆலோசனை அல்ல, உங்களுக்கு சொல்லுமளவுக்கு வயதும்,அனுபவமும் இல்லை ஆனால் வரலாறுகள் திரிக்கப்படக்கூடது என்ற ஒரே நோக்கத்தில் தான்)

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.