Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா..அப்பாவின் துயரில் கலங்கி நிற்கும் உங்கள் துயர்த்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்..அப்பாவின் ஆதமா சந்தியடையட்டும்...

  • Replies 116
  • Views 11.9k
  • Created
  • Last Reply

முரளியின் தந்தையின் மரண அறிவித்தல் முகப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரங்களையும் அதில் தெரிந்து கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து தவிக்கும் முரளிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

இப்போதுதான் இந்த அறிவித்தலைப் பார்த்தேன்.  முரளிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நிச்சயம் அவரது இறுதி வணக்க நிகழ்விற்குச் செல்வேன்.

அனைவரினதும் அன்பான, பிரியமான ஆறுதல் வார்த்தைகளிற்கு மிக்க நன்றி.


பொது வைத்தியசாலையில் எனது தந்தை வைத்தியர்கள், தாதியினரால் கையாளப்பட்ட விதத்தில் எனக்குள் கடுமையான விமர்சனங்கள் விளங்கினாலும், அவர் தனது ஆயுட்காலத்தில் பரிபூரணமான அழகியதோர் வாழ்வை வாழ்ந்து சென்றுள்ளார் என்பதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

 

அப்பா தனது சாவிலும், சாவு மூலம் எமக்கோர் புதிய வாழ்வை, வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தி சென்றுள்ளதாகவே உணர்கின்றேன். நாம் ஐந்து பிள்ளைகளும் 1985ம் ஆண்டின் பின் முதன்முதலாக ஒன்றாக ஒரேவீட்டில் கூடியுள்ளோம். எமது தந்தைக்கு எம்மால் முடியுமான அளவில் சிறந்ததோர் பிரியாவிடையை,  இறுதி நிகழ்வில் வழங்கி அவரை கெளரவிப்பதே எங்கள் நோக்கம் ஆகும்.


எனது தந்தையின் வாழ்வை இப்போது நான் தொடர்கின்றேன். அவர் பயன்படுத்திய பொருட்கள், உடைகள் இப்போது எனது பயன்பாட்டில் அவரை என்னுள் உணர்த்துகின்றன. எனது வாழ்வில், என்னில் எனது தந்தையை காண்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றேன்.

 

துயர் பகிர்வோம் பகுதியில் அப்பாவின் இழப்பு பற்றிய தகவலை உடனடியாய் வெளிக்கொணர்ந்த சகாறா அக்காவிற்கும், மரண அறிவித்தலை யாழ் முகப்பில் அழகாக பிரசுரம் செய்த நிர்வாகத்திற்கும், இக்கட்டான நேரத்தில் புத்தூக்கம் வழங்குகின்ற அனைவரிற்கும் எமது குடும்பத்தின் சார்பிலும், தனிப்படவும் நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றேன்.


எனது தந்தை பற்றிய எந்தன் உணர்வுகள், பல்வேறு சூழ்நிலைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள், சமூக விழிப்புணர்வுகள், இதர விடயங்கள் சம்மந்தமான கருத்துக்களை சந்தர்ப்பம் வாய்க்கும்போது உங்களுடன் பின்னர் விரிவாக பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
கலைஞன் அப்பாவோடு நீங்கள் இருக்கும் புகைப்பட‌த்தைப் பார்த்தேன்...நீங்கள் சரியாக உங்கள் அப்பா மாதிரியே இருக்கிறீர்கள்...சீக்கிர‌மே உங்கள் மனதிற்கு பிடித்த பெண்ணாக பார்த்து திருமணம் செய்யுங்கள்...உங்கள் அப்பாவுக்கும் அது தான் பிடிக்கும்...உங்கள் அப்பாவின் உட‌னான ஞாபக பதிவுகளை ஒரு நாள் எழுத்தில் வடியுங்கள்    


கலைஞனின் துயரத்தை நானும் பகிந்து கொள்ளுகின்றேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கிறேன்.

கலைஞனின் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

தந்தையின் இழப்பால் பரிதவிக்கும் கலைஞனுக்கும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.அப்பாவின் ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

 

கலைஞனின்  அப்பாவின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் மூலம் எனக்கு அறிமுகமான தம்பி கலைஞனின் கவலையில் நானும்
பங்குகொண்டு என் அனுதாபத்தை அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்
தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரி சகாறா இந்தச்செய்தியை அவருக்கு அறிவிக்க
முடிந்தால் நன்றி.

 

- கே.எஸ்,பாலச்சந்திரன்

 

முகநூல் மூலம் இக்கருத்தைப்பகிர்ந்து கொண்டார். சிலசமயங்களில் நான் மறந்தாலும் மறக்காமல் தெரிவித்துக் கொள்ள இங்கு இணைத்துள்ளேன்.

எனது தந்தையின் இறுதிக்கிரியைகள் நேற்று நண்பகல் முடிவுற்றது. எதிர்பாராதவகையில் நான்கு கிழமைகளில் மிக விரைவாக இவ்வளவு பெரிய விடயங்கள் நடந்து முடியும் என நான் முன்பு கற்பனை செய்தும் பார்க்கவில்லை.

 

ஓர் ஞாயிறு சமநிலை தவறி விழுந்து வலது தோள்பட்டையில் நோவு ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது ஞாயிறு உடல்நலம் தேறிவந்தார். மூன்றாவது ஞாயிறு உயிர் நீத்தார், நான்காவது ஞாயிறு நேற்று அவரது உடல் தீயில் சங்கமித்தது.

 

மரணம் அனைவருக்கும் வஞ்சகமில்லாமல் உண்டு. இது எமது வாழ்க்கையில் மாற்றப்படமுடியாத விதி. ஆயினும், எனது தந்தைக்கு மரணம் பற்றிய பயமோ அல்லது Negative Thoughts ஏற்படக்கூடாது, அவர் எம்முடன் நீண்டகாலம் வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை நான் நீண்டகாலமாக மேற்கொண்டேன். கடைசி பதின்நான்கு நாட்களும்கூட அவரது காதுகளில் தன்னம்பிக்கை, துணிவு, உயிர்ப்பு ஏற்படும்வகையில் சொற்பதங்களை கூறினேன். நான் "துணிவே" என்று கூறும்போது அவர் "துணை" என்று கூறுவார் அல்லது வாய்களை குவித்து உச்சரிப்பார். கடைசிவரை சுயநினைவுடன் இருந்தார். அவர் இறப்பதற்கு தயாராக இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன். அவர் கடைசி பதின்நான்கு நாட்களும் வைத்தியசாலை படுக்கையில் மேற்கொண்ட செயற்பாடுகளை அவர் வாழ்வதற்கு மேற்கொண்ட போராட்டமாகவே பார்க்கின்றேன்.

 

பல்வேறு வகைகளில் தமது அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் தனிப்படவும், எனது குடும்பத்தின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

rkow82.jpg

 

தந்தை ஓர் ஞாயிறு இரவு பதினொன்று அரைக்கு மரணம் அடைந்ததும் உடனடியாகவே அவரது உடலை பார்த்தேன். பின்னர் சிறிது நேரம் எம்மை ICUக்கு வெளியில் காத்திருக்குமாறு கூறினார்கள். அப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவர்களுக்கு கைத்தொலைபேசியூடாக தந்தையின் மரணத்தை அறிவிக்கலாம் என்று நினைத்து எழுந்தமானமாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டேன். நிழலிக்கு அழைத்தபோது அவரது தொலைபேசி வேலைசெய்யவில்லை, பின்னர் சகாறா அக்காவுக்கு அழைப்பை மேற்கொண்டேன். 

 

j0zekk.jpg

 

யாழில் அப்பாவின் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து உரையாடலை ஆரம்பித்தும், அப்பாவின் உடல் பார்வைக்காக வைக்கப்பட்டபோது நேரில் வருகைதந்தும், தொலைபேசியூடாகவும், பல்வேறு வகைகளில் ஆறுதல் தெரிவித்த சகாறா அக்காவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்றி.

 

அப்பாவின் மறைவை அறிந்து பல்வேறு வகைகளில் ஆறுதல் கூறும்வகையில் எமது வீட்டிற்கு வருகை தந்தும், அப்பாவின் உடலை நேரில் வந்து பார்வையிட்டும், தொலைபேசியூடாக ஆறுதல்களை தெரிவித்தும், யாழிலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி.

 

எமது வீட்டிற்கு வருகை தந்தும், அப்பாவின் உடல் பார்வைக்காக வைக்கப்பட்டபோது நேரில் வருகைதந்தும் ஆறுதல் தெரிவித்த தமிழச்சிக்கு நன்றி.

 

21mapeo.jpg

 

அப்பாவின் உடல் பார்வைக்காக வைக்கப்பட்டபோது நேரில் வருகை தந்து அனுதாபம் தெரிவித்த அகூதா, மணிவாசகன், கண்மணி அக்கா ஆகியோருக்கு நன்றி.

 

மோகன், ஈழப்பிரியன் அண்ணா, நிலாமதி அக்கா, சபேஸ், வல்வை அண்ணா, தமிழ்தங்கை, மணிவாசகன் ஆகியோர் தொலைபேசியூடாக அனுதாபங்களை தெரிவித்தார்கள். நன்றி.

 

யாழ் முகப்பில் அப்பாவின் மரண அறிவித்தலை பிரசுரம் செய்த யாழ் நிர்வாகத்திற்கும், குறிப்பாக அழகாக அதன் வடிவமைப்பை உருவாக்கிய இணையவனுக்கும், அறிவித்தலில் ஏற்பட்ட தவறு ஒன்றை உடனடியாகவே திருத்தம் செய்துதந்த நிழலிக்கும் நன்றி.

 

34tejpk.jpg

 

யாழ் இணையம் சார்பாக அப்பாவின் உடல் பார்வைக்காக வைக்கப்பட்டபோது மலர்வலையம் சாத்தியும் யாழ் கருத்துக்களத்திலும், தனிமடல் ஊடாகவும் அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

 

qojbtg.jpg

 

அப்பாவின் உடலை நேரில் வந்து பார்வையிடவும், அனுதாபம் தெரிவிக்கவும் முயற்சித்த அனைவருக்கும் நன்றி.

 

ஏதாவது வகையில் எனது தந்தையின் மரணச்செய்தி கேட்டு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்த, உதவிகளை செய்த அனைவருக்கும் தனிப்படவும், எனது குடும்பத்தின் சார்பிலும் மீண்டும் நன்றியை தெரிவிக்கின்றேன்.

 

2uqylns.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சாந்தி  சாந்தி  சாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வினை பகிர்ந்து கொண்டதில் நாமும் துயரில் பகிர்ந்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது.

கலைஞனின்  அப்பாவின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன். 

கலைஞனின்  அப்பாவின் ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன். 


 

நடைபெற்றவையை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலைஞன் அண்ணா. இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதவை. எனினும் விரைவில் நீங்கள் மீண்டு வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின்ட குடும்பத்தில 3 பேர் அப்பா மாதிரி 2 பேர் அம்மா மாதிரி இருக்கினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞனின் அப்பாவின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அத்துடன் அவரின் ஆத்த்மா சாந்தியடைய இறைவனையும் பிரார்த்திக்கிறேன்....

அனைவருக்கும் மீண்டும் ஓர் தடவை நன்றி.

 

அப்பா தான் பிறந்தது ஓர் திகதி என்றும் பதிந்தது இன்னோர் திகதி என்றும் கூறிவந்தார். நாம் வழமையில் மார்ச் 13ம் திகதியே அவரது பிறந்தநாள் என்று நினைத்தோம். ஆனால், அப்பாவின் சகோதரர் ஒருவர் அப்பா பிறந்தது மார்ச் ஒன்று எனவும், அவர் பதிவு செய்யப்பட்டது மார்ச் 13 என்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் உள்ள திகதி உண்மையான பிறந்த திகதி இல்லை எனவும் கூறினார்.

 

இன்று மார்ச் ஒன்று அப்பாவின் 85வது பிறந்தநாள், அத்துடன் எனது மூத்த சகோதரி நாளை மீண்டும் அவுஸ்திரேலியா பயணம் செல்வதால் தன்னை அப்பா தனது இறுதி நேரத்தை கழித்த வைத்தியசாலையை கூட்டிக்கொண்டு சென்று காட்டும்படியும் கேட்டதால், நானும் அவரும் இன்று அப்பா தனது இறுதி நேரத்தை கழித்த வைத்தியசாலைக்கு பூச்செண்டுடன் சென்றோம்.

 

அப்பா சத்திரசிகிச்சையின் முன்னும், பின்னும் தங்கிய அறையில் சிறிதுநேரம் நின்று பிரார்த்தனை செய்தோம். பின்னர் அப்பா இறுதிநேரத்தை கழித்த அறைக்கு சென்று பிரார்த்தனை செய்தோம். அத்துடன் அப்பா உயிர்நீத்தபோது தனது இறுதி மூச்சை விட்ட ICU பிரத்தியேக அறையிற்கு சென்றும் கண்ணை மூடித்தியானித்து பிரார்த்தனை செய்தோம். வைத்தியசாலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் தங்கி அப்பாவிற்காக பிரார்த்தனை செய்தது மிகவும் திருப்தியை அளித்தது.

 

அப்பாவின் மரணத்தை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. எல்லாம் ஓர் கனவுபோல் உள்ளது. நான் ஏற்கனவே கூறியதுபோல் அவரது நினைவுகளுடன் வாழ்வதே நான் இனிச்செய்யக்கூடிய நடைமுறைச்சாத்தியமான விடயம்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, நீங்கள் கனக்க யோசிக்கப் படாது. உங்கள் அப்பா, உங்கள் உயிரில் கலந்து விட்டார். அவர் நினைவுடன்... நீங்கள் விரும்பும் ஒரு பெண்ணை, திருமணம் செய்யுங்கள், இரண்டாம் வருடத்தில் சின்ன அப்பா வந்து, உங்களை சந்தோசப் படுத்துவார். அம்மாவுக்கும்... சந்தோசமாய் இருக்கும்.

நன்றி தமிழ்சிறி உங்கள் பரிவான வார்த்தைகளிற்கும், அக்கறையிற்கும். நான் (மூஞ்சூறு) போகவே வழியை காணவில்லை, இந்தநிலையில் துடைப்பங்கட்டையையும் (பெண்டாட்டி) தூக்கிக்கொண்டு போகமுடியுமா என்றுதான் யோசிக்கின்றேன். நீங்கள் எழுதிய கருத்தை வாசித்தபோது முன்பு ஒருமுறை யாழில் நான் "கலியாணம் கட்டுவதற்கு மூளை தேவையா?" எனும் பொருளில் ஆரம்பித்து உரையாடல் செய்த கருத்தாடல் நினைவிற்கு வருகின்றது. அண்ணாவிற்கு இரண்டு பெடியங்கள் உண்டு. கடைசியிற்கு இப்போது இரண்டு வயது ஆகின்றது. அப்பாவின் இழப்புடன் இப்போது அந்த குட்டி அப்பாவில் அன்பை பொழிவது சற்று ஆறுதலாக உள்ளது. மிகுதி காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஒரு திருமணம் செய்வதற்கே நான் இவ்வளவு யோசிக்கின்றேன். அப்பா எப்படி ஐந்து பிள்ளைகளை பெற்று, வளர்த்து ஆளாக்கினார், எமக்காக எவ்வளவு தியாகங்களை செய்து இருப்பார், எமக்காக எவ்வளவு துயரங்களை சுமந்து இருப்பார் என்று நினைத்து விம்முகின்றேன். அப்பா இல்லாத வீடு சூனியமாகவே உள்ளது. அப்பாவின் நினைவுகளை வீடு எங்கனும் தேடுகின்றேன். இன்று வெளியில் சென்றுவந்தபோது அப்பா சாகும்போது தலையில் அணிந்திருந்த குல்லாவை அணிந்து சென்றேன். அதை தலையில் வைத்தபோது எனக்குள் மெய்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது. இனி செய்யக்கூடியது அப்பாவின் நினைவுகளில் வாழ்வது ஒன்றுதான். யாழில் நான் முன்பு பல தடவைகள் பல உறவுகளின் பெற்றோரின் இறப்பு ஏற்பட்டபோது இரண்டு வரிகளில் அனுதாபங்களை/இரங்கல்களை தெரிவித்து சென்றேன். இப்போது எனது சுற்று வந்துள்ள நிலையில் அதன் வலி எவ்வளவு கொடியது என்று உணர்கின்றேன்.

 

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்


என்னுடைய அப்பா இறந்த போது இலங்கையில் போரின் உச்சக்  கட்டம்.

எனது சகோதரர்கள் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தும் என்னால் எனது 

அப்பாவின் இறுதிச் சடங்க்கில் கலந்து கொள்ளமுடியவில்லை.

அந்த ரணம் என் மனதில் இன்னும் மாறாமல் இருக்கின்றது.


அன்பு காட்டி அரவணைத்து அறிவைக் கொடுத்த என் தந்தையைக் கடைசி

நேரத்தில் காண முடியவில்லை என்பதை விட அவரின் இறப்பில்

இயற்கையுடன் ஒத்துப் போக வேண்டும் என்றுதான் என் மனம் கூறுகின்றது.


காரணம் அவர் எங்களைவிட்டுப் பிரியும் போது அவருக்கு 86 வயது.

முதுமை அவரை முழுதாகத் தன பக்கம் இழுத்துவிட்டது.


படுத்த படுக்கையில் மற்றவர்களிடம் உதவிக்காக ஏங்கி நிற்காமல்

அவர் தன்  வேலைகளைத் தானே இறுதிவரை செய்து வந்தார்.

 

சிலவேளைகளில் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் மற்றவர்களின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.


இதை ஏன்  இங்கு எழுதுகின்றேன் என்றால்

உங்கள் தந்தையார் மனையாளுடனும் மக்களுடனும்

தனது இறுதிக் காலம்வரை சந்தோசமாக வாழ்ந்திருப்பார்.

அவரை நீங்கள் முடிந்தளவில் சந்தோசமாக வாழ வைத்திருப்பீர்கள்


அப்படியான நிலையில் நீங்கள் அவருடைய இறுதி நிமிடங்கள் வரை அவருடன் வாழ்ந்திருக்கின்றீர்கள்.

ஒரு மகன் தனது தந்தைக்குச் செய்ய வேண்டிய சகலத்தையும் நீங்கள் செய்திருப்பீர்கள் 

 

இப்படியான சந்தர்ப்பம் கிடைக்காமல் என்னைப்போல 

பலர் இன்னும் ஊனமாக அழுது கொண்டிருக்கின்றார்கள்.


வாழ்க்கையில் தாய்  தந்தையின் இழப்பு என்பது  ஈடு செய்ய முடியாத ஒன்று.

ஆனாலும் யாராலும் இயற்கையை வெல்ல முடியாது.

 

உங்கள் தந்தைக்கு நீங்கள் செய்த அனைத்து நல்ல காரியங்களையும் ஒருமுறை 

மனதில் முன்னிறுத்தி ஆறுதல் அடையுங்கள் 

மனம் அமைதிகொள்ளும் . உங்கள் தந்தை என்றும் உங்களை ஆசீர்வதிப்பார். 

  • 2 weeks later...

வாத்தியார், உங்கள் ஆறுதல் வார்த்தைகளிற்கு நன்றி. நான் எனக்கு மரணம் ஏற்படும்போது அதை எதிர்கொள்ளுதல், மற்றும் எனது மரணம் சம்மந்தமாக ஏற்கனவே நீண்டகால தயார்ப்படுத்தலில் இருக்கின்றேன். யாழ் கருத்துக்களத்திலும் பல்வேறு தடவைகள் அவ்விடயத்தினை பகிர்ந்துள்ளேன். ஆனால், எனது தந்தையின் மரணம் சம்மந்தமாக, அவ்வாறான நீண்டகால தயார்ப்படுத்தல்களில் நான் ஈடுபடவில்லை. அப்பா என்னுடன் தொடர்ந்து இருக்கப்போவது இல்லை என்று தெரிந்தமையால் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு கொடுக்கக்கூடிய அன்பை, பாசத்தை செலுத்தியுள்ளேன். ஆனாலும்... அவரது மரணத்தின் பின் நான் எப்படி வாழ்வது என்பதில் முன்கூட்டிய திட்டமிடல் இருக்கவில்லை. வாழ்க்கையை நிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றேன்.

 

அப்பாவின் நினைவுகள், சம்பவங்கள் தொடர்பான பல விடயங்களை எதிர்காலத்தில் பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

கலைஞன், இன்றுதான் இந்த செய்தியை பார்த்தேன்... உங்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.