Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

முதலில் பெயர் பதியும் போது நான் இணைவதாக சொல்லியிருந்தேன் ,பின்னர் போட்டி ஆரம்பிக்கும் போது எனது பெயரை காணோம். பங்கு பற்றும் பலர் இளையோர்களாக இருந்ததால் அதுவும் நல்லதுக்குத்தான் என இருந்துவிட்டேன் .

இன்று காலை கோமகன் திண்ணையில் பங்கு பற்ற முடியுமோ என கேட்டார் .ஓமென்று சொன்னேன் .

நேரம் தான் கொஞ்சம் இடிக்கும் முடிந்தவரை முயற்சிக்கின்றேன் (ஒரு மாதம் ஈ அடித்துக்கொண்டு இருந்தேன் ).

 

அர்ஜுன் அண்ணா உங்கள இளம் பெடியள் காங்கில சேர்த்து வச்சிருக்கிறம் :unsure: , நீங்கள் என்னெண்டா இப்பிடி கேசை மாத்திப் போட்டியளே :rolleyes:

 

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிரணி சார்பில் வாதிட வந்திருக்கும் அர்யுன் அண்ணாவை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். :)

என்னை வரவேற்ற எமது அணியினருக்கும், நடுவர்களிற்கும், ஒழுங்கமைப்பாளர்களிற்கும் நன்றிகூறும் அதேநேரம், எதிரணித்தலைவர் பூமிக்கே ஓட்டை போடும் நிபுணர், சில வருடங்களின் முன் கனடாவிலிருந்து சென்று ஐரோப்பாவில் எரிமலையை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவரை நினைக்கத்தான் அச்சமாய் உள்ளது. பட்டிமன்றவிதிமுறையில் உள்ள ஓட்டைகளை நன்கு இனங்கண்டுள்ள இவர் தனது ஓட்டைகள் பற்றிய நீண்டகால பொறியல் அறிவை பயன்படுத்தி எம்மை திசை திருப்பாது இருப்பதற்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டியுள்ளது.

 

பட்டிமன்றத்து ரசிகர் பெருமக்களிடம் எனது வேண்டுகோள் என்ன என்றால்.. இதுதனிநபர் வாதம் இல்லை, குழுநிலை வாதம். எனவே, எனது வாதத்தில் அதிகளவு எதிர்பார்ப்பை வைத்து ஏமாறாதீர்கள் என்று முன்கூட்டியே கேட்டுக்கொள்கின்றேன்.

 

சாத்திரியின் புலனாய் தனது நடவடிக்கைகளை செவ்வனே செய்து இன்னும் வீடு திரும்பாதபடியால் எமது அணியினர் மந்திராலோசனையில் முடிவுகள் எடுப்பதற்கு சற்று காலதாமதம் ஏற்படலாம் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா யாழ் வாணன்....... பாஸ் வோர்ட் ஆ மறந்திட்டாரா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையப்பா யாழ் வாணன்....... பாஸ் வோர்ட் ஆ மறந்திட்டாரா? :D

இன்றே எதிர் பாருங்கள் - தமிழில் தட்டச்சு செய்யும் செய்யும் சிரமங்களையும் தாண்டி வருகிறது யாழ்வாணனின் வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றே எதிர் பாருங்கள் - தமிழில் தட்டச்சு செய்யும் செய்யும் சிரமங்களையும் தாண்டி வருகிறது யாழ்வாணனின் வாதம்.

 

முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் யாழ்வாணன். :)

  • கருத்துக்கள உறவுகள்
நான் கலைஞன் தான் யாழ்வாணன் என்று நினைத்திருந்தேன் :D
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் யாழ் வாணன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் :D

விறு விறுப்பாக சென்று கொண்டு பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கும்.... யாழ் கள பட்டி மன்றில் இன்று தன்னுடைய ஆளுமை மிக்க வாதத்தை எதிர் அணியின் வாதங்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் வண்ணம் யாழ் வாணன் அவர்கள் வாதாட இருகின்றார் ஆவலோடு காத்திருங்கள்

  • தொடங்கியவர்

வாசகர்களே!!  கள உறவுகளே !!

 

பட்டி மன்றப்பட்டியலில் கரும்பு யாழ்வாலியின் அணிக்காகவும் , அர்ஜுன் இஞைக்கலைஞனுடைய அணிக்காகவும் சேர்க்கப்படுளார்கள் என்பதனையும் , குமாரசாமி ஐயாவின் வீட்டில் நடைபெற்ற துயரமான சூழ்நிலையால் , குமாரசாமி ஐயா இறுதிப் பேச்சாளராகக் கலந்து கொள்வார் என்பதனை அறியத்தருகின்றோம்.

 

நடுவர்கள்

 

மொசப்பொத்தேமியா சுமேரியர் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம யாழ் வாணன் அண்ணா தன்னுடைய வாதத்தை தத்தி தத்தி type அடிக்கும் வரை பார்வையாளர்களை சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்

ஒரு சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்...

கடைக்காரர் சொன்னார்....

சூடான பொருளை சூடாகவும் ....

குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்.....

அப்படியா என்று கூறிவிட்டு ...

ஒன்று வாங்கிய சத்தாஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.

அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்கசர்தார்ஜி சொன்னார்.....

இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்

............................................................................

தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு சர்தார்ஜி கையில்......

ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார்....

ஏன் .......................?

என்று கேட்க டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்..

:( :( :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா: டே! அவகிட்ட நீ I love you சொன்னியா?

பையன்: சொன்னேன். ஆனா அவ வேற ரெண்டு பேர லவ் பண்றாளாம்

அப்பா: என்ன சொன்னா?

பையன்: i love you 2 னு சொல்றா

அப்பா: இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன். இங்லீஸ் பேசற பொண்ணுங்களையே நம்ப கூடாதுன்னு..

:D

  • தொடங்கியவர்

யாழ்வாணன் எதிரணியைப் பார்த்து கேட்கும் சிற்றுவேசன் சோங் :lol: :lol: :D :D :icon_idea: .

 

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் : உங்களுக்கு வந்துருக்க வியாதிக்கு நீங்க உப்பு ,உரப்பு ,புளிப்பு ,இல்லாம பத்தியக்கஞ்சி சாப்பிடனும்

நோயாளி : கல்யாணமான நாள்ல இருந்து அப்பிடித்தான் சார் சாப்பிடுறேன்

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாணன் எதிரணியைப் பார்த்து கேட்கும் சிற்றுவேசன் சோங் :lol: :lol: :D :D :icon_idea: .

 

நன்றி தலைவா இதோ என் சிற;றுவேசன் சோங்

 

யாழ்வாணன், தாமதமாக வந்தாலும் காரியத்தில் கண்ணாய் இருந்திருக்கிறார்.  வாழ்த்துக்கள் யாழ்வாணன். :)  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணன்.. அசத்தியேவிட்டீர்கள்..! :D பாவம் வாத்தியார்.. முதலில் பேசிய குற்றத்திற்காக நார் நாராக கிழிபடுறார்.. :lol:

 

நடுவர்களே.. யாழ்வாணனின் இந்த ஆணித்தரமான வாதத்திற்குப்பின் இன்னமும் பட்டிமன்றத்தை நடத்தப்போகிறீங்களா.. :wub:  அல்லது எங்கட பக்கம் தீர்ப்பைச் சொல்லிட்டு அப்பிடியே போகப்போறீங்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வாவ் யாழ் வாணன் அண்ணாவின் வாதம் இருக்கே மண்டபமே அதிர்ந்து போய் நிக்குது.....

என்ன ஒரு அழகு தமிழ் கவி நடை....

யாழ் வாலி அண்ணாவின் அணி காலி போல :D

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணியினரைப் பார்த்துக் கேட்கின்றேன். திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைக்காமல், ஏதாவது புதிதாகச் சொல்லுங்கப்பா! :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாணனுக்கு பாராட்டுக்கள் .

புலம் பெயர்ந்தாருக்கு மனநோயா அல்லது சுயநலாமா?

இன்னொரு வரிகளில் வீட்டைப் பிரிந்த கவலையா அல்லது உண்மையாக எதையாவது இழந்தார்களா?

" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

தலைப்பு புலம் பெயர் மக்களுக்கு ஊர் பற்றிக்கவலை இருக்கு என்று அடித்து சொல்கிறது.(மறுக்கக் கூடாது) அப்படி இருக்கும் கவலை பிரிவுக் கவலை அல்லது வாழக்கை வசதிக்கவலையாக மட்டும்தான் இருக்க முடியும் என்று செயற்கையாக முடிக்கிறது. கவலைஇல்லாத மனிதனைபற்றி கவலைப்பட மறுக்கிறது. இந்த சந்திர பாபு”ஒருனாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே” என்று பாடும் இந்த மனிதன் புலம் பெயர் நாடுகளில் வந்து இரவு பகலாக கவலைபட்டுக்கொண்டிருக்கிறான். கவலைக்குரிய விடயம்தான்.

இதனால் இந்த பட்டிமன்றம்.

சங்கத்தில் தொடக்கம் திண்ணைவரைக்கும் விவாதிப்பது தமிழர் தொழில். அது அவர்களின் பொழுது போக்கு.

இதனால் ஆரம்பமானது இந்த விவாதம்.

வலிந்த கருத்துக்கள். இது விவாதிகளின் ஆற்றலை மட்டும்தான் காட்டுகிறது. உண்மைகளை மறைக்கிறன. பலரின் கருத்துக்கள் வெறும் செயற்கையானவை. தாம் சந்தோசமாகத்தான் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்றதை மறைக்கிறார்கள் அல்லது அப்படிக்காட்ட நடிக்கிறார்கள். மன் திறந்து பேசவில்லை. இல்லை என்றால் தம் உறவுகளை எல்லாம் நாம் பட்ட கஸ்டம் படுக என்றா இங்கே அழைக்கிறார்கள். அல்லது எதனை பேர் தங்கள் உற்வுகளை அழைக்கத்தயாரக உள்ளார்கள்.

விவாதம் பல தடவைகளில் எந்தக் கவலை சரியானது என்று சொல்லாமல் வெளிநாடு வந்தது நனமையா அல்லது தீமையா என்று ஆராயப் பார்க்கிறது.


உ+ம் திலகவதியார் துறவியாக வாழ்ந்தது நன்மையா தீமையா எனறால், அவர் துறவியாக வாழ்ந்ததினால் அல்லவா அவருக்கு திருநாவுக்கரசரை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருந்தது. மீட்டெடுக்க ஆர்வம் இருந்தது மீட்டெடுக்க வலிமை வந்து கிடைத்தது. ஆனால் அது கவலையா இல்லை என்றால் பதில் வேறு. மிக இளம் வயதில் திருமணமான அந்த சிறுமி சாத்தீ வரைக்கும் போய் தம்பிக்காக வாழ்க்கையை தொடர்ந்து அவனையும் இழந்தாள் இலையா? நிச்சயமாக கவலையானது. எனவே விவாதங்களில் நன்மை தீமைகளை கவலை எந்தக்கவலை என்ற காட்ட பயன் படுத்துவது பொருத்தமில்லாதது.

பலதடவைகளில் நடுவர்கள் ஒப்புக்கு கதை பேசுகிறார்கள். ஒரு கருத்தை ஆவணங்களில் இருந்து நீக்கவோ குறை கூறவோ இல்லை. ஒருவேளை விவாதிகளின் விவாத திறமையாகவும் இருக்கும்.

தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறைகூறுவது புலம் பெயர்ந்த தமிழருக்கு மட்டும்தானா இருக்க முடியும்? மேற்குநாடுகளின் தொழில் நுட்ப முன்னேற்றம் அவர்களின் நாடுகளில் இலங்கையில் இந்தியாவில் போன்றதல்லாத நேர்த்தியான வாழ்க்கையை கொண்டுவந்திருக்கு என்பதற்கு புள்ளி விபரம் தேவையா? தொழில்நுட்பத்தை குறையாக காண்போர் ஈழம் மலர்ந்தால் அங்கு முன்னேற்றம் வேண்டாம் என்கிறார்களா?


அகதிகளாக வருமுன்னர் வெளிநாடுகளுக்கு படிக்க வந்தோர் எல்லோருமே வெளிநாடுகளில் தங்க விரும்பினார்கள். ஓட்டிக் கலைத்தாலும் போக மறுத்தார்கள். திரும்பவேண்டி நேர்ந்தால் கவலையுடன் திரும்பினார்கள். இது சமுதாயத்துடன் இலகுவில் எடுபடத்தக்கதான தொழில்கள் கிடைத்ததினால் அவர்கள் கவலைப்படாமல் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பினார்களாக்கும். இன்று கோப்பை அடிப்பது மட்டும் கிடைப்பதாலா வெறுக்கிறார்கள்.

நமது பெற்றோர் தமிழர் என்ற பண்பாட்டை காத்ததினால் நாம் இங்கே வரவேண்டி நேர்ந்தது இளைய சமுதாயம் நமது பெற்றொர் காத்ததை காக்குமா? அப்போது அந்த புலம் பெயர் தமிழருக்கும் கவலை இருக்குமா?

தப்பிக்க வந்தோர் என்ன மனநிலையில் இருந்தாலும் தம்மை துரத்தப்பட்டோராக கருத்துபவர்கள் கவலைப்படுவார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால், 'யாழ்வாணன்' என்று வருகின்றது!

 

அழகிய முறையில் விவாதத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்!

 

ஆனால் ஒரே ஒரு குறை!

 

தனக்குப் பின்னால் பேச வரப் போகின்றவர்களுக்கென,அவர் எதையுமே மிச்சம் வைக்கவில்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய முறையில் விவாதத்தை நகர்த்திச் சென்ற  யாழ்வாணனுக்கு பாராட்டுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாத மன்னறத்தின் கருத்துக்களை மட்டும் தான் இது வரை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.இரு பகுதி கருத்துக்களை வாசிக்க இன்னும் நேரம் ஒத்துளைக்க வில்லை.முழுக்க வாசித்து விட்டு நானம் உங்களுடன் வாறன்.சுன்டலினதும் த.சிறியினதும் விளம்மபற இடை வேளையும் தூக்கல்.சிறிக்கும் சுன்னடலுக்கும் இடை எந்றால் சொல்வவா வேனும். :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணன்.. அசத்தியேவிட்டீர்கள்..! :D பாவம் வாத்தியார்.. முதலில் பேசிய குற்றத்திற்காக நார் நாராக கிழிபடுறார்.. :lol:

 

நடுவர்களே.. யாழ்வாணனின் இந்த ஆணித்தரமான வாதத்திற்குப்பின் இன்னமும் பட்டிமன்றத்தை நடத்தப்போகிறீங்களா.. :wub:  அல்லது எங்கட பக்கம் தீர்ப்பைச் சொல்லிட்டு அப்பிடியே போகப்போறீங்களா? :lol:

 

ஏன் நீங்கள் வாதம் செய்ய வராமல் ஓடும் எண்ணமா??? விடமாட்டோம். :lol: :lol:

 

நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? இந்த அணியினர் பொய் சொல்லினம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.