Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அருமையான ஆனித்தரமான கருத்துக்களுக்கு நன்றி வாத்தியார்.

காலைச் சூரியனின் ஒளி தேகத்தில் படும்போது

ஏற்படும் புத்துணர்ச்சியை அவர்கள் அறிவார்களா நடுவர்களே

எம் சொந்த மண்ணில் ஆழ மர  நிழலிலோ அல்லது ஆற்றங்கரையிலோ

அல்லது கேணிக்கட்டுகளிலோ அமர்ந்து நண்பர்கள் அடிக்கும் அரட்டை யின் 

சுகம் தெரியுமா எதிரணியினருக்கு நடுவர்களே

அருமை அருமை அந்தப் பழைய இனிய அனுபவத்துக்கே அழத்துச் சென்றுவிட்டீர்கள்.

Edited by காவாலி

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காவாலியின் நாய்க் கதை சூப்பர். :)

வாத்தியாரின்.. பதிலடி.. தைரியலஷ்சுமி குழுவினரை கொஞ்சம் ஆட்டம் காணவே செய்துள்ளது..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் கருத்துக்கள் அருமை! :D

தூய காற்றும், காலைச் சூரியனும் தான் வாழ்க்கையெனின், உலகத்தின் பெரிய பாலைவனங்களின் ஓரங்களில், இவை நிறையக் கிடைக்குமே வாத்தியார்? :D

கேணிக்கட்டில் தானா வாழ்க்கையின் சுகம் இருக்கின்றது?

நாயகரா நீர்வீழ்ச்சியின் அருகில் அமர்ந்து (ஆகக் கிட்டப் போயிராதீங்க, வாத்தியார் :wub: )  அதன் சங்கீதத்தைக் கொஞ்சநேரம் கேட்டுப்பாருங்கள் வாத்தியார்!

சல்வீனியா படர்ந்த உங்கள் கேணி எங்கே? சங்கீதம் பாடும் அந்த 'நீரருவி' எங்கே என்று தெரியும்!

வளருங்கள், வாத்தியார்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
பட்டிமன்ற வாசலில் சந்தித்துக்கொள்ளும் அலையும் சுமோவும் நிகழ்த்திய அரட்டை சுண்டலின் மொபைலில் ரெக்கோர்ட் ஆகி இருக்கு..அதன் ஒரு பகுதி இங்கே..
 
அலை - என்ன சுமோ தனிய நிக்கிறீர்? அத்தான் வரேல்லையோ
 
சுமோ - என்ன விசர்க்கதை கதைக்கிறீர் அலை..? அத்தான் வந்தால் சுமோ தனிய நிக்குமோ? அடுப்படிக்கை எல்லோ நிக்கும்..
 
அலை - அப்ப பட்டிமன்றம்?
 
சுமோ - பட்டிமன்றமாவது பாட்டு மன்றமாவது..முதலில் கிச்சனில் அத்தானின் பசி மன்றம்..அதுக்கு பிறகுதான் பட்டி மன்றமோ எருமை மன்றமோ..
 
அலை - சரி சுமோ சும்மா கோவிக்காமல் சொல்லும்..உண்ணாண உமக்கு வெறும் பிரிவுகளின் கவலையோ..?சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையோ..? உண்மையை சொல்லுமாப்பா..
 
சுமோ - உண்மையிலை எனக்கு அலை உது ரண்டுக்கும் ஊட்டாலை போய் வேற ஒரு கவலையப்பா..
 
அலை - அதென்ன கவலையப்பா..? ஏதாவது புது சாப்பாட்டு அயிற்ரமோ..? சொன்னால் நானும் அத்தாரிட்ட சொல்லி வாங்குவனெல்லோ..
 
சுமோ - அலை உமக்கு என்னோட எந்த நேரமும் சும்மாபகிடி என்ன..எனக்கு உதெல்லாத்தையும் விட வேற கவலையப்பா..
 
அலை - அதென்ன கவலையப்பா..? சொல்லித்துலைக்க வேண்டியதுதானா? உம்மளிட்ட கதை கேக்கிற அளவிலை போட்டு வந்த மேக் அப் எல்லாம் கலைஞ்சுபோம் போல கிடக்கு..(என்றபடி தனது கைக்குட்டையை எடுத்து அருகே இருந்த காரின் கண்ணாடிய பார்த்து தனது மேக் அப்பை சரி செய்கிறார் அலைமகள்..அப்போது கேய் கேய் என்று கத்தியவாறு காரின் உரிமையாளன் வெள்ளை ஒருவன் இவர்களை நோக்கி விரைந்து வருகிறான்..இதைபார்த்த சுமோரியர் தனக்கும் அலைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மெதுவாக இரண்டு அடி பின்னோக்கி போய் நிக்கிற்ர்..அலை அசட்டு சிரிப்பை சிரித்துவிட்டு அசடுவழிந்தபடி அவ்விடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சற்று தள்ளிப்போய் நின்றுகொண்டு....அலையும் சுமேரியரும் தமது அலட்டலை தொடர்கிறார்கள்..)
 
சுமோ - அலை..என்ன விசர் வேலை பார்த்தனிர்? அவன் வெள்ளை தூசணத்தால் ஏசினால் என்ற இமேஜ் என்ன ஆகிறது..? நீர் கனடாவுக்கை குளிருக்கை தீக்கோளி தலையை மண்ணுக்க தாக்குறமாதிரி வீட்டுக்குள்ள பூந்திருப்பியல்..நான் லண்டனில நாலு இடம்போறேல்லையோ..?(என்று கோபத்துடன் அலையைப்பார்த்து கேட்கிறார்) 
 
அலை- என்னப்பா செய்ய..ஊரிலை பக்கத்துவீட்டை எட்டிப்பாத்துப் பாத்து பழகிப்போச்சு..நான் என்ன செய்ய..(என்று வலு கூலாக சுமோவுக்கு பதில் அளிக்கிறார்)
 
இதனால் எரிச்சலைடைந்த சுமோ மெதுவாக நேரத்தைப்பார்க்கிறார்.பின் மனதுக்குள் அறுவாங்கள் இடைவேளை விடுறம் எண்டிட்டு வந்திருக்கிற பெட்டையளைபாத்து ஜொள்ளுவிடப்போட்டாங்கள்..நான் இஞ்சை தெருவில நிக்கிறன் என்று பல்லை நெருமுகிறார்..
 
அலை- என்னப்பா சுமோ..உதெல்லாம் இருக்கட்டும்..உமக்கென்ன கவலை எண்டு இன்னும் சொல்லேல்லையே ..? (எண்டு அலை இழுக்குறார்..)
 
சுமோ - எனக்கப்பா ஊரிலை இருந்திருந்தால் கலியாணவீடு,சாமத்தியவீடு,காதுக்குத்து,கருமாரி,பிறந்தநாள்,எட்டு அந்திரட்டி,முப்பந்தொண்டு, நாப்பந்தொண்டு, எண்டு எல்லாத்துக்க்கும் நகையை அடுக்கிகொண்டு நல்ல விலைகூடின சாறியைக்கட்டி சரக்கு சரக்கு என்டு சத்தம்கேட்க நடந்துபோகலாம் தெருவாலை..இஞ்சை எந்தக்காப்புலி எப்ப கழுத்தை காதை அறுத்துக்கொண்டு ஓடிடுவான் எண்டு பயந்து பயந்து சீவிக்க வேண்டி இருக்கு..என்ன வாழ்க்கையப்பா..இதுதானப்ப எனக்கு இஞ்சை பெருங்கவலை..(என்று பெருமூச்சு விடுகிறார்)
 
அப்பொழுது இசைக்கலைஞன்...பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்..சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்...மனைவியை நினைத்தால் எல்லாம் மறந்தே போகுதே.. :D என்று பாடியவாறு அவ்விடத்தை வந்தடைகிறார்..
 
மிகுதி ரெக்காடிங் தொடரும்.. :D 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருக்கு வாத்தியார் அண்ணா...கலர்,கலரா எழுதுறதை அனைவரும் குறைச்சால் நன்றாக இருக்கும்..

புங்கை அண்ணா நீங்கள் நயகராவின் சங்கீதத்தைத் தினமும் அனுபவிக்க முடியுமா?ஒருநாளில் ஒருசில மணித்தியாலங்கள் மட்டுமே அந்த சுகம். ஊரில் எங்கள் கேணிகளின் கட்டுக்களில் தினமும் பலமணி நேரம் மயங்கிக் கிடக்கலாம். எங்கள் கேணிகளுக்கு எல்லாம் நயகராவின் சங்கீதம் பாடத் தெரியாதுதான், ஆனால் எங்களின் உயிர்துடிக்கும் ஓசை அவற்றிற்குக் கேட்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மதலைவர் காவாலியும் வாத்தியாரும் பின்னியெடுத்திட்டினம்......அங்காலை அஞ்சாறுபேர் நிண்டு முளுசீனம்... :lol:

யப்பா, ஊரிலை வாத்திமார் பாடங்கள் நடத்திய மாதிரித்தான் வாத்தியாரின் வாதமும் இருக்கிறது. ஒன்னுமே புரியலை.   :lol:  :lol: :lol:  

மிகவும் நன்றாக இருக்கு வாத்தியார் அண்ணா...கலர்,கலரா எழுதுறதை அனைவரும் குறைச்சால் நன்றாக இருக்கும்..

யாயினி, அவை அணிகளுக்கான நிறங்கள்.  எமதணி பச்சையாகவும் எதிரணி நீலநிறத்திலும் எழுதுவார்கள்.  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா நீங்கள் நயகராவின் சங்கீதத்தைத் தினமும் அனுபவிக்க முடியுமா?ஒருநாளில் ஒருசில மணித்தியாலங்கள் மட்டுமே அந்த சுகம். ஊரில் எங்கள் கேணிகளின் கட்டுக்களில் தினமும் பலமணி நேரம் மயங்கிக் கிடக்கலாம். எங்கள் கேணிகளுக்கு எல்லாம் நயகராவின் சங்கீதம் பாடத் தெரியாதுதான், ஆனால் எங்களின் உயிர்துடிக்கும் ஓசை அவற்றிற்குக் கேட்கும்.

காவாலி, இந்தப் பட்டிமன்றம், முடியிறவரைக்கும் 'நயாகரா' சங்கீதம் தான் பாடும்! :icon_idea:

ஆனால் பட்டிமன்றம் முடிஞ்சாப் பிறகும் கூட எங்கள் கேணிகளுக்கு எங்கள் உயிர்துடிக்கும் ஓசை கேட்குமே! :D

புங்கை அண்ணா நீங்கள் நயகராவின் சங்கீதத்தைத் தினமும் அனுபவிக்க முடியுமா?ஒருநாளில் ஒருசில மணித்தியாலங்கள் மட்டுமே அந்த சுகம். ஊரில் எங்கள் கேணிகளின் கட்டுக்களில் தினமும் பலமணி நேரம் மயங்கிக் கிடக்கலாம். எங்கள் கேணிகளுக்கு எல்லாம் நயகராவின் சங்கீதம் பாடத் தெரியாதுதான், ஆனால் எங்களின் உயிர்துடிக்கும் ஓசை அவற்றிற்குக் கேட்கும்.

உங்கட கதையைப் பார்த்தா, வெளிநாடுகளில் ஆறு, ஏரி எதுவும் இல்லாத மாதிரியும், ஊரிலை மட்டும்தான் கேணி இருக்கிற மாதிரியெல்லோ தெரியுது.  அங்கு கேணிகள் மட்டும்தான் இருக்கிறது.  இங்கு கேணிகளோடு (Swimming Pools), ஆறுகள், ஏரிகளும் குவிந்திருக்கின்றன.  அடுத்த முறை கனடாவுக்கு வரும்போது சொல்லுங்கள்.  அழைத்துச் சென்று காட்டுகிறேன்.  :wub:  :wub:

உண்மையில் ஒரு மாதம் தொடர்ந்து பதின்மூன்று மணித்தியாலங்க எப்படி வேலை செய்ய போகின்றேன் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன் .யாழை திறந்து வைத்துக்கொண்டு  ஒவ்வொரு நிமிடமும் எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவேயில்லை .

கடைக்கு இன்னம் கொஞ்சம் EARLY ஆக வந்து LATE ஆக பூட்டுவமா என்பது போலவும் இருக்கும்  .

யாழ் நிர்வாகத்திற்கு ஒரு கோடி நன்றிகள் .

உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் நன்றிகள் .

திண்ணைக்கும் ,பட்டி மன்றத்திற்கும் ஓராயிரம் நன்றிகள் .

இனி பட்டி மன்றம் பற்றி-

தமிழச்சி  ஆணித்தரமாக ஆனால் சீரியஸ் ஆக கருத்துக்களை அள்ளி தெளித்திருக்கின்றார் அவரை யாழ் சார்பில் யூ.என் பிரதிநிதியாக்க வேண்டுகின்றேன் . .

காவாலி -சிம்பிளாக வலு சுவீட்டாக சொல்ல வந்தை சொல்லி கை தட்டுக்களை அள்ளிக்கொண்டு போய்விட்டார் .வடிவேலுவின் இடம் காலியாக இருப்பதை அவருக்கு நினைவு படுத்த தலைமயிர் கோ மன்னிக்கவும்  தலைமை கடமைபட்டுள்ளது .

வாத்தியார் - உலக சுற்று புற சூழலிலுக்கும்,இயற்கையான சுகாதார உணவிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து  தனது உரையை ஒரு சர்வதேச மட்டத்திற்கு உயர்தியதாற்காக முன்னாள் அமெரிக்க உப ஜனாதிபதி அல்கோருக்கு கொடுத்த நோபல் பரிசை பறித்து வாத்தியாருக்கு கொடுக்குமாறு சுமேயிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டிமன்ற வாசலில் சந்தித்துக்கொள்ளும் அலையும் சுமோவும் நிகழ்த்திய அரட்டை சுண்டலின் மொபைலில் ரெக்கோர்ட் ஆகி இருக்கு..அதன் ஒரு பகுதி இங்கே..
 
அலை - என்ன சுமோ தனிய நிக்கிறீர்? அத்தான் வரேல்லையோ
 
சுமோ - என்ன விசர்க்கதை கதைக்கிறீர் அலை..? அத்தான் வந்தால் சுமோ தனிய நிக்குமோ? அடுப்படிக்கை எல்லோ நிக்கும்..
 
அலை - அப்ப பட்டிமன்றம்?
 
சுமோ - பட்டிமன்றமாவது பாட்டு மன்றமாவது..முதலில் கிச்சனில் அத்தானின் பசி மன்றம்..அதுக்கு பிறகுதான் பட்டி மன்றமோ எருமை மன்றமோ..
 
அலை - சரி சுமோ சும்மா கோவிக்காமல் சொல்லும்..உண்ணாண உமக்கு வெறும் பிரிவுகளின் கவலையோ..?சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையோ..? உண்மையை சொல்லுமாப்பா..
 
சுமோ - உண்மையிலை எனக்கு அலை உது ரண்டுக்கும் ஊட்டாலை போய் வேற ஒரு கவலையப்பா..
 
அலை - அதென்ன கவலையப்பா..? ஏதாவது புது சாப்பாட்டு அயிற்ரமோ..? சொன்னால் நானும் அத்தாரிட்ட சொல்லி வாங்குவனெல்லோ..
 
சுமோ - அலை உமக்கு என்னோட எந்த நேரமும் சும்மாபகிடி என்ன..எனக்கு உதெல்லாத்தையும் விட வேற கவலையப்பா..
 
அலை - அதென்ன கவலையப்பா..? சொல்லித்துலைக்க வேண்டியதுதானா? உம்மளிட்ட கதை கேக்கிற அளவிலை போட்டு வந்த மேக் அப் எல்லாம் கலைஞ்சுபோம் போல கிடக்கு..(என்றபடி தனது கைக்குட்டையை எடுத்து அருகே இருந்த காரின் கண்ணாடிய பார்த்து தனது மேக் அப்பை சரி செய்கிறார் அலைமகள்..அப்போது கேய் கேய் என்று கத்தியவாறு காரின் உரிமையாளன் வெள்ளை ஒருவன் இவர்களை நோக்கி விரைந்து வருகிறான்..இதைபார்த்த சுமோரியர் தனக்கும் அலைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மெதுவாக இரண்டு அடி பின்னோக்கி போய் நிக்கிற்ர்..அலை அசட்டு சிரிப்பை சிரித்துவிட்டு அசடுவழிந்தபடி அவ்விடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சற்று தள்ளிப்போய் நின்றுகொண்டு....அலையும் சுமேரியரும் தமது அலட்டலை தொடர்கிறார்கள்..)
 
சுமோ - அலை..என்ன விசர் வேலை பார்த்தனிர்? அவன் வெள்ளை தூசணத்தால் ஏசினால் என்ற இமேஜ் என்ன ஆகிறது..? நீர் கனடாவுக்கை குளிருக்கை தீக்கோளி தலையை மண்ணுக்க தாக்குறமாதிரி வீட்டுக்குள்ள பூந்திருப்பியல்..நான் லண்டனில நாலு இடம்போறேல்லையோ..?(என்று கோபத்துடன் அலையைப்பார்த்து கேட்கிறார்) 
 
அலை- என்னப்பா செய்ய..ஊரிலை பக்கத்துவீட்டை எட்டிப்பாத்துப் பாத்து பழகிப்போச்சு..நான் என்ன செய்ய..(என்று வலு கூலாக சுமோவுக்கு பதில் அளிக்கிறார்)
 
இதனால் எரிச்சலைடைந்த சுமோ மெதுவாக நேரத்தைப்பார்க்கிறார்.பின் மனதுக்குள் அறுவாங்கள் இடைவேளை விடுறம் எண்டிட்டு வந்திருக்கிற பெட்டையளைபாத்து ஜொள்ளுவிடப்போட்டாங்கள்..நான் இஞ்சை தெருவில நிக்கிறன் என்று பல்லை நெருமுகிறார்..
 
அலை- என்னப்பா சுமோ..உதெல்லாம் இருக்கட்டும்..உமக்கென்ன கவலை எண்டு இன்னும் சொல்லேல்லையே ..? (எண்டு அலை இழுக்குறார்..)
 
சுமோ - எனக்கப்பா ஊரிலை இருந்திருந்தால் கலியாணவீடு,சாமத்தியவீடு,காதுக்குத்து,கருமாரி,பிறந்தநாள்,எட்டு அந்திரட்டி,முப்பந்தொண்டு, நாப்பந்தொண்டு, எண்டு எல்லாத்துக்க்கும் நகையை அடுக்கிகொண்டு நல்ல விலைகூடின சாறியைக்கட்டி சரக்கு சரக்கு என்டு சத்தம்கேட்க நடந்துபோகலாம் தெருவாலை..இஞ்சை எந்தக்காப்புலி எப்ப கழுத்தை காதை அறுத்துக்கொண்டு ஓடிடுவான் எண்டு பயந்து பயந்து சீவிக்க வேண்டி இருக்கு..என்ன வாழ்க்கையப்பா..இதுதானப்ப எனக்கு இஞ்சை பெருங்கவலை..(என்று பெருமூச்சு விடுகிறார்)
 
அப்பொழுது இசைக்கலைஞன்...பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்..சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்...மனைவியை நினைத்தால் எல்லாம் மறந்தே போகுதே.. :D என்று பாடியவாறு அவ்விடத்தை வந்தடைகிறார்..
 
மிகுதி ரெக்காடிங் தொடரும்.. :D 

சுபேஸ் தொடர்ந்து ரெக்கார்ட் பண்ணுங்கோ உவயள விட்டியள் எண்டால் சிட்டாப் பறந்திடுவினம் குறிப்பா உந்த சுமோவை வீடியோ ரெக்கார்ட் பண்ணுங்கோ, சாறிக் கனவிலயும் நகைக் கனவிலயும் ஊருக்குப் போறன் எண்டிட்டு கனடா வந்து இறங்கினாலும் இறங்கிடுவா சாறியும் நகையும், வாங்கிறதுக்கு, இங்க கனடாவில எங்கட சனத்திட எண்ணிக்கையை விட சந்திக்குச் சந்தி இருக்கிற சாறிக் கடையின்ரயும் நகைக் கடையின்ரயும் எண்ணிக்கை தான் எக்கச் சக்கம்.

அவ இங்க வந்து செலவழிச்சிட்டுப் போனா எண்டா அதுக்குப் பிறகு இங்க உள்ள ஆம்பிளையள் எல்லாம் ஒண்டுக்கு நாலு உத்தியோகம் பார்க்க வேணும் பெண்சாதிமாருக்கு நகையும் சாறியும் வாங்கிறதுக்கு, கடைக்காரங்களும் இது தான் சாட்டென்று விலையள ஏத்தீடுவாங்க.

 சுபேஸ் உங்களக் கெஞ்சிக் கேக்கிறன் உந்த மத்திய தரைக்கடல் மாமியிற்ற இருந்து எங்களக் காப்பாற்றுங்கோ, அவ உங்க இருந்து கொண்டு கொத்தாருக்கு புட்டு அவிக்கிறது தான் எங்களுக்கு நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவாலி! அடக்கி வாசியப்பா? உவங்கள் உசுப்பேத்தி...உசுப்பேத்தி பொயின்ட் எடுக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையைப் பார்த்தா, வெளிநாடுகளில் ஆறு, ஏரி எதுவும் இல்லாத மாதிரியும், ஊரிலை மட்டும்தான் கேணி இருக்கிற மாதிரியெல்லோ தெரியுது.  அங்கு கேணிகள் மட்டும்தான் இருக்கிறது.  இங்கு கேணிகளோடு (Swimming Pools), ஆறுகள், ஏரிகளும் குவிந்திருக்கின்றன.  அடுத்த முறை கனடாவுக்கு வரும்போது சொல்லுங்கள்.  அழைத்துச் சென்று காட்டுகிறேன்.  :wub:  :wub:

தமிழ் உங்கு எல்லாமே இருக்கிது ஒத்துக்கொள்கிறேன். ஆண்டின் எல்லாக் காலங்களிலும் போகமுடியுமா? நாங்கள் ஊரில் கேணிகள் குளங்கள் வயல்கள் வரம்புகள் எண்டு தேடிப்  போறது இல்லை. அவை எங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்கு குவிந்துள்ள ஆறுகளும் ஏரிகளும் உங்கள் அன்றாட வாழ்வில் இணைந்திருக்கா? எங்கள் கேணிகளும் குளங்களும் வயல்களும் வரம்புகளும் ஆயிரம் ஆயிரம் காதல் கதைகளைச் சொல்லும்.

Edited by காவாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஒரு மாதம் தொடர்ந்து பதின்மூன்று மணித்தியாலங்க எப்படி வேலை செய்ய போகின்றேன் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன் .யாழை திறந்து வைத்துக்கொண்டு  ஒவ்வொரு நிமிடமும் எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவேயில்லை .

கடைக்கு இன்னம் கொஞ்சம் EARLY ஆக வந்து LATE ஆக பூட்டுவமா என்பது போலவும் இருக்கும்  .

யாழ் நிர்வாகத்திற்கு ஒரு கோடி நன்றிகள் .

உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் நன்றிகள் .

திண்ணைக்கும் ,பட்டி மன்றத்திற்கும் ஓராயிரம் நன்றிகள் .

இனி பட்டி மன்றம் பற்றி-

தமிழச்சி  ஆணித்தரமாக ஆனால் சீரியஸ் ஆக கருத்துக்களை அள்ளி தெளித்திருக்கின்றார் அவரை யாழ் சார்பில் யூ.என் பிரதிநிதியாக்க வேண்டுகின்றேன் . .

காவாலி -சிம்பிளாக வலு சுவீட்டாக சொல்ல வந்தை சொல்லி கை தட்டுக்களை அள்ளிக்கொண்டு போய்விட்டார் .வடிவேலுவின் இடம் காலியாக இருப்பதை அவருக்கு நினைவு படுத்த தலைமயிர் கோ மன்னிக்கவும்  தலைமை கடமைபட்டுள்ளது .

வாத்தியார் - உலக சுற்று புற சூழலிலுக்கும்,இயற்கையான சுகாதார உணவிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து  தனது உரையை ஒரு சர்வதேச மட்டத்திற்கு உயர்தியதாற்காக முன்னாள் அமெரிக்க உப ஜனாதிபதி அல்கோருக்கு கொடுத்த நோபல் பரிசை பறித்து வாத்தியாருக்கு கொடுக்குமாறு சுமேயிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

அண்ணை! உங்கடை கடையிலை ஒரு றாத்தல் அரிசி என்ன விலை?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ...அப்படியா தமிழச்சி..சரி நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...ஏன் நிறம்,நிறமாக எழுதுவதை குறைக்க சொன்னேன் என்றால்,சில நிறங்களைப் பார்க்கும் போது ரொம்ப கண்ணுக்கை குத்துறமாதிரி இருக்கு...எழுதி இருக்கும் விடையங்களை வாசிக்க ஆவலாக இருந்தாலும் தொடர்ந்து வாசிக்க கஸ்ரமாக இருந்தது அதனால் சொன்னேன்..

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி -சிம்பிளாக வலு சுவீட்டாக சொல்ல வந்தை சொல்லி கை தட்டுக்களை அள்ளிக்கொண்டு போய்விட்டார் .வடிவேலுவின் இடம் காலியாக இருப்பதை அவருக்கு நினைவு படுத்த தலைமயிர் கோ மன்னிக்கவும்  தலைமை கடமைபட்டுள்ளது .

நன்றி அண்ணா உங்களைப் போறவர்களின் பாராட்டு எங்களை மேலும் மெருகூட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அணித்தலைவர் காவாலி, வாத்தியார் இருவரினதும் வாதங்கள் அருமை. ஆணித்தரமான
கருத்துக்கள். காசும், படிப்பும் காரும், வீடும் தான் எல்லாம் என்று இங்கு
பலர் நினைக்கிறார்கள் இவர்களுக்கு நீங்கள் இருவரும் கொடுத்தது நெத்தியடி.

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே.. வாத்தியார் அவர்கள் உரையாற்றியதால் எனக்கு சிறிது தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது.. பயத்தில்.. :D

எங்கள் அணியின் சார்பாக அடுத்ததாக.. :rolleyes:  சீறும் சிங்கம்.. புலம்பெயர் காளை.. ஜீவா அவர்கள் தனது வாதத்தை முன்வைக்கத் தயாராக உள்ளார்..! :D

உங்கள் அனுமதியின் பின் அவரது உரை இடம்பெறும்.. ஏழுநாட்கள் எமது அணி உறுப்பினருக்கு கால அவகாசம் உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.. :huh: ஆனால் முன்னர் அவசரப்படுத்தியதுபோல் இந்தமுறையும் அவசரப்படுத்தினால் காளை உங்கள் வயிற்றை நோக்கிப் பாய்ந்துவிடும் அபாயம் உண்டு.. :lol:

வயித்தில ஒரு குத்து.. கூப்பிட இருக்கா கெத்து?! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

-----

நான்கு சுவர்களுக்கே முடங்கி  நாட்கள் செல்வதையே அறியாமல்

நாசமாகிப் போகின்றது புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்க்கை.

சுற்றமே  இல்லாமல் தனிமரங்களாக இரண்டு வசனங்கள்

சொந்த மொழியில் பேச ஆளில்லாமல் சோகமாகப் போகின்றது

புலம்பெயர்ந்தவனின்  வாழ்க்கை.

--------

பணம் மட்டும் தான் வாழ்க்கையின் குறியாக  நினைத்து வாழும்

இந்த பாழாகிப் போன புலம்பெயர்ந்தவனின் வாழக்கை செயற்கையின்

ஆழுமைக்கு அடிமையாகி தேடிவரும் வியாதிகளுக்கே அந்தப்

பணத்தைத் தாரை வார்ப்பதை என்னவென்பது நடுவர்களே

குழந்தைப் பருவத்தில் கூடி விளையாட யாருமற்ற நிலையில்

கணணியில் அனாதையாகி எங்கள் குழந்தைகளின் குருதியோட்டம்

கேள்விக்குறியாகின்றது  நடுவர்களே  

--------

அருமையான.... வாதங்களை முன் வைத்த வாத்தியாருக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

இரு அணியினரும் விட்டுக்கொடுக்க மாட்டினம் போல இருக்கு. :) இரு அணியினருக்கும் சேர்த்து விசில் அடிக்க நாங்கள் தயார்.ஆனால் என்ன கொஞ்ச கொத்து ரொட்டி பாசல் செலவாகும்.எப்படி டீல் ஓகேயா  :D

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் விவாதத்தை முன்வைத்த தமிழிச்சிக்கு நன்றிகள்.

இதையெல்லாம் கண்டு அஞ்சுவதற்கு நாங்கள் ஒண்டும் நரிகள் அல்ல நாங்கள் ......

இதற்கான சரியான பதிலடி எழும்ப இயலாத நெத்தியடி உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தம்பி ஏனப்பு வில்லண்ட வீராப்பு. புலனாய் வந்து கடிச்சு வைக்கப்போகுது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா நடுவர்கள காணேல்ல.....

நடுவர்களே உறுப்பினர்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால் என்ன ?

அடுத்து இடை வெளியை நிரப்ப

தமிழ் சிறி அண்ணா குழுவினர் வழங்கும் குத்தாட்டம் இடம் பெரும் .....

http://m.youtube.com/watch?v=efo6X4NbNuU

onnu rendu moonu naalu

sonna thaana aadum en kaalu

anju aaru ezhu ettu

intha aatam eppodhum hit-u

body ah tight aakkikko

shoulder ah loose aakkikko

nakka mattum nalla madichikko

ippo kai rendayum sethukko

kaaththaadi vuttukko

avlo thaanda kuthu dance po

eh dappankuthu aada va

aadavaa dappankuthu

eh enn aasai maithiliye

evandi unna pethan pethan

pethan pethan pethan

evandi unna pethan pethan

pottu thaakku dandanakka

vadi pondatti kalaasala

eh loosu penne loosu penne loosu penne

yammaadi aathaadi aadalama

yamma yamma yamma yamma yamma yamma yamma

i am a kuthu dancer

eh i am a kuthu dancer

i am a kuthu dancer

eh i am a kuthu dancer

eh i am a kuthu dancer]

i am a kuthu dancer

i am a kuthu kuthu kuthu dancer

kuthu kuthu kuthu dancer

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.