Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெஞ்சலும் கொஞ்சலும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

alone-sad-boy-bench-lack.jpg

 

சாரி டார்லிங் கொஞ்சம் லேட்டாயிட்டு..... அவன் கெஞ்சிக் கொண்டே நின்றான்.

 

டிலோ.. பார்க்கின் பெஞ்சில்.. கோபத்தின் உச்சியில் இருந்து கொண்டிருந்தாள்.

 

என்ன.. வழமையா டார்லிங் என்றாள் கூலாகி குலாவுவாளே.. இன்றைக்கு என்ன காறாரா இருக்கிறாள்... என்று நினைத்த நிலோசன்..

 

அவளை நெருங்கி.. என்ர செல்லமெல்லே.. பப்புச்சுக்குட்டியில்ல.... என் கூட என்னம்மா கோவம்.. என்று வானத்தை அங்கலாய்த்திருந்தவளின் முகத்தை தொட்டு.. தன்னை நோக்கி திருப்ப முயல.. கோபத்தில் அவன் கையை தட்டிவிட்டாள் டிலோ.

 

என்ன பண்ணுறது.. இன்றைக்கென்று கடுப்பேத்திறாளே.. ம்ம்.. கொஞ்சம் மெளனமா இருப்பம். அடங்கிடுவாள். வீட்டில அம்மா அப்பா முன்னாடி நான் தான் ராஜா.. இவ முன்னாடி இப்படி ஜீரோவா இருக்க வேண்டி இருக்கே.. என்று தன்னைத் தானே நொந்து கொண்ட நிலோசன்.. பொறுமைக்கு இடமில்லாம..

 

டார்லிங்.. டிலோ.... பிளீஸ்.. பேசு டார்லிங்.. அப்படி என்னதான் தப்பு பண்ணினேன்.. உனக்கு..! சொன்னாத் தானே தெரியும்.. இப்படியே உம் என்றுகிட்டு இருந்தா ஒண்ணும் ஆகப்போறதில்ல.. என்று கொண்டே அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவளின் சட்டையில்... முகத்தை துடைக்க முனைந்த போது...

 

அதனை சற்றும் விரும்பாத டிலோ.. கெட் அப்.. கெட் லொஸ்ட்... என்று திட்டிக் கொண்டு எழுந்து எதிர் முனையில் நடக்க ஆரம்பித்தாள். நிலோசன் அவளைப் பின் தொடர்ந்து.. டிலோ.. வட் இஸ் திஸ்.. வட் கப்பின் ரு யு.. என்று கெஞ்சல்களோடு அவளைப் பின் தொடர்ந்தான்.

 

எனி.. என்ன நடக்க இருக்குது.. ஒண்ணுமே இல்ல. நீங்க இங்க இருந்து..போயிடுங்க. எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக்கத் தெரியும்... என்றாள் டிலோ காட்டமாக.

 

என்ன டிலோ இப்படிச் சொல்லுறா. நேற்று நல்லாத் தானே இருந்தா. அதுக்குள்ள என்னாச்சுது. உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சது முதல்.. உன்னை சந்தோசமாத்தானே வைச்சிருக்கிறன்.. என்ன குறை வைச்சன்... வை திஸ் கொலைவெறி... பிளீஸ் டிலோ...

 

அதுதான் சொல்லிட்டீங்களில்ல.. சந்தோசமா வைச்சிருந்தீங்கன்னு. குறையே வைக்கல்லைன்னு. இது தான் நீங்க எனக்கு அளிக்கிற சந்தோசமன்னா.. அது எனக்குச் சரிப்பட்டு வராது. சோ.. நீங்க போயிடுங்க. நான் என் வழியில போயிடுறன்.

 

வாட்.. என்ன பிரேக் அப் முடிவோட வந்திருக்கிறீர் போல டிலோ.

 

ஓம் அப்படி என்று தான் வைச்சுக் கொள்ளுங்களேன். என்னால.. உங்களோட சந்தோசமா வாழ முடியுமுன்னு நினைக்க முடில்ல...அவ்வளவு தான்.

 

ஏன் எதுக்கு அப்படிச் சொல்லுறீர் டிலோ...

 

உங்க ஆம்பிளையளிட புத்தி இருக்கே.. அது சுயநலம் பிடிச்சது. நீங்க நினைக்கிறது தான் எங்களுக்கு சந்தோசம்.. என்ற கற்பனை உங்க ஆம்பிளையளுக்க நிறைஞ்சு போய் கிடக்குது. எங்கட சந்தோசம் என்னென்னு.. உங்களுக்கு அறிய அக்கறையும் இல்லை.. நேரமும் இல்லை. அப்படி இருக்கிறப்போ.. பிரேக் அப்.. எவ்வளவோ மேல். பிளீஸ்.. லீவ் மீ... எல்லாம் போதும்... என்றாள் கண்டிப்பான குரலில்.

 

என்ன டிலோ சொல்லுறீர். கட்டினா உங்களைத்தான் கட்டுவன். உங்களோட மட்டும் தான் வாழுவன்.. நீங்கள் தான் எனக்கு எல்லாம்.. எண்டீர். இப்ப என்னடான்னா.. திடீர் என்று ஆம்பிளை.. பொம்பிளை என்றீர்.. என்னாச்சுது உமக்கு...

 

எனக்கு இப்ப தான்.. ஆம்பிளையளைப் புரிய முடிஞ்சிருக்குது. அது தான். இவ்வளவு நாளும் அது முடியல்ல.. அதால உங்களை லவ் பண்ணித் தொலைச்சிட்டன். எனி அந்த தப்பைச் செய்யமாட்டன்.

 

அவள்... இப்படித் திட்டிக்கொண்டிருக்க.. நிலோசனின்.. ஐபோன் சிணுங்கியது.. அந்தச் சூடான சூழலிலும்... அழைப்பை ஏற்று..காதில் வைத்தவன்.. எதிர் முனையில்.. காய்(Hi) படி(buddy).. தமிழ்நாடு கைஸுக்கு சப்போட்டா ஒரு புரட்டஸ்ட் செய்யப் போறம்.. வாறியா என்ற குரலைக் கேட்டதும்.. டோண்ட் வொறி படி..இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க நிற்பன் என்றபடி.. வாழ்த்துச் சொல்லி போனைக் கட் பண்ணினான் நிலோசன்.

 

டிலோ.. ஐ டோன்ட் அண்டஸ்ராண்ட் யு நவ். எனக்கு இப்படி ஒரே.. லவ் லவ் என்று உம்மோட மட்டும் ரைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்க முடியாது. எனக்கும் சொந்தக் கடமை.. வீட்டுக் கடமை.. தேசக் கடமை இருக்குது. அவற்றையும் செய்யனும். கவனிக்கனும். நான் இப்படித்தான். உமக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இதுக்கு மேல உம்மோட நின்று கதைச்சுக்கிட்டு இருக்க எனக்கு நேரமில்ல. இப்ப புரட்டஸ்டுக்குப் போகப் போறன். நம்ம பிரச்சனையை விட்டிட்டு.. நாட்டுப் பிரச்சனையில அக்கறை இருந்தா என் கூட வாரும். இல்லைன்னா உம் முடிவோட நீர் இரும். ஐ  டோண்ட் கெயர் என்றான் அதுவரை அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவன்.. கொஞ்சம் கோபமா.

 

இவற்றை அமைதியாக கேட்டிக் கொண்டிருந்த.. டிலோ... தொடர்ந்து அமைதியாக நின்று கொண்டிருந்தாள்..

 

டிலோ.. நான் போகப் போறன். என்ன முடிவெடுத்திருக்கிறீர் சொல்லும் கெதியா... என்று அவசரப்படுத்தினான் நிலோசன்.

 

நான்.. கொஞ்சம் தனிய இருக்க விரும்பிறன்... நீங்க போக வேண்டிய இடத்துக்கு போகலாம் என்றாள் டிலோ.. காட்டமாக.

 

ஓகே.. பாய். என்று விட்டு வீறோடு நடந்தான் நிலோசன் பார்க்கை விட்டு.

 

++++++++

 

புரட்டஸ்ட்டில்.. கலந்து கொண்டிருந்த போது.. நிலோசனின் ஐபோனின் வாட்ஸ்அப் மெசேஞ்சர்.. குலுங்கியது..

 

எங்க நிற்கிறீங்கள்.. நான்.. இங்க புரட்டஸ்டில தான் நிற்கிறன். நீங்கள் எங்க நிற்கிறீங்கள்.. என்ற மெசேச்.. டிலோவிடம் இருந்து வந்திருந்தது.

 

அதைப் பார்த்ததும்.. உள்ளம் முழுக்க.. பெருமிதம் பொங்க.. சி இஸ் மை டியர்... என்ற முணுமுணுப்போடு.... தான் நிற்கின்ற இடத்தை டிலோவுக்கு ரெக்ஸ்ட் பண்ணிவிட்டு புரட்டஸ்டில்.. தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான் நிலோசன்.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்! பின்னீட்டீங்க நெடுக்க்ஸ்! :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் தாண்டியது தேசபக்தி

எல்லாவற்றையும் மறக்கவைப்பது தேசபக்தி

எல்லோரும்  ஒன்று கூட தேசபக்தி

அதையும் காதலூடு சொன்ன தம்பிக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றுவேசன் கதை என்பது இது தானோ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே உங்கள் கருத்துப் பகிர்விற்கு..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்! பின்னீட்டீங்க நெடுக்க்ஸ்! :)

 

கொஞ்சம் நிஜ அனுபவமும் கலந்தது. அதனால் தான் என்று நினைக்கிறேன்.

 

எங்கட மனசிலும்.. பாய் போட்டு ஒருத்தி குந்தி இருந்தவா. ஒரு தடவை அவா கூட பயணம் செய்யும் போது.. பஸ் சனநெருக்கடியோட வந்திச்சு. அடுத்த பஸ்ஸில போவம் என்று நான் சொல்லிட்டு நிற்க என்ன அவசரமோ தெரியல்ல.. அவா போய் ஏறிட்டா. ஆனால் நான் ஏறல்ல. எனக்கோ படபடப்பு. பாவமாச்சே.. என்று. அடுத்த பஸ்ஸில வாறன் என்று சொல்ல.. போன் பண்ணினன்.. பிக் பண்ணல்ல.

 

நான் அடுத்த பஸ்ஸில போறன்.. இரண்டாவது பஸ் தரிப்பிடத்தில இறங்கி நின்று நான் போன பஸ்ஸில ஏறினா. ஏறினவா தான்.. ஒரு மூச்சுப் பேச்சில்ல..! ரெம்பக் கோவமா இருந்தா.  சத்தியமா நான் அவாவை தனிய விடனுன்னு.. நினைக்கல்ல. நான் முடிவெடுக்கிறதுக்கிடையில அவா ஏறிட்டா. அது தான் அங்க பிரச்சனை.

 

 

அதையே இங்கும் பிரதிபலிச்சிருக்கிறன். என்னமோ தெரியல்ல.. அவா தான்.. எப்பவும் இப்படியான ஆக்கங்கள் படைக்கும் போது.. என் மனசில வந்து வழிகாட்டிறா. இதெல்லாம் தேசத்திற்கும்...அவாவுக்குமே சமர்ப்பணம். :)

இதனை ஏன் நான் உங்களுக்குச் சொல்லுறேன்னா.. நீங்கள் தான் அண்மையில்.. நெடுக்கர் பெண்கள் மீது வெறுப்பை உமிழ்வது போல.. காட்டினாலும்.. அவர்களை அதிகம் ரசிக்கிறார் என்று எழுதி இருந்தீங்க. அது  உண்மை தான்..! ஆனால் எல்லோரையும் ரசிப்பதில்லை. எனக்கு என் மனசிற்கு இயல்பா பிடிச்சாக்களை மட்டும் தூர வைச்சு.. ரசிப்பன். :lol:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ அப்ப அதால அந்த காதலே புட்டுகிச்சா அண்ணா?

எண்டாலும் நீங்க இன்று வரை அவாவையே நேசிச்சு கிட்டு வேற யாருக்கும் உங்க மனச பறி கொடுக்காம இருக்கிறது பாராட்டுக்குரியது.....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ அப்ப அதால அந்த காதலே புட்டுகிச்சா அண்ணா?

எண்டாலும் நீங்க இன்று வரை அவாவையே நேசிச்சு கிட்டு வேற யாருக்கும் உங்க மனச பறி கொடுக்காம இருக்கிறது பாராட்டுக்குரியது..... :D

 

காதல் ஒன்னும் புட்டுக்கிடல்ல. அந்தளவுக்கு நாங்க எங்க காதலை.. (அதுவும் நான் முதலில சொல்லேல்ல. அவா தான் முதலில.. காதலைச் சொன்னதும்) விட்டுக்கொடுக்கல்ல. எங்களைப் பொறுத்த வரை..  சூழ்நிலைகள் (முக்கியமா கல்வி மேலான என் காதல்)... விலத்தி வைச்சிட்டுது. அது தவிர.. எனக்குத் தெரிய தனிப்பட்ட காரணங்கள் என்று.. எதுவும் இல்லை. அதுக்கு மேல யாழில எழுதுவதற்கு ஒன்றுமில்ல..! அதனால தான் இதனை எல்லோரோடும்.. பகிர்ந்து கொள்வதும் இல்லை. :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் கதையில் காணவில்லை நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் கதையில் காணவில்லை நெடுக்ஸ்.

 

என்னை முன்னிறுத்த எழுதவில்லை.. அப்படி எழுதுவதும் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது எனக்கே உரித்த ரகசியம்.. என் ரசிப்புக்கே உரித்தானது.. மற்றவர்கள் அதனை ரசிக்க.. கேலி செய்ய.. பரிகசிக்க... பாராட்ட இடமளிக்கக் கூடாது என்பதில் நான் கவனமானவன். அதனால் இங்கும்.. நிகழ்கால நிஜங்களுக்குள் சில அனுபவ ஊடுருவல்கள் மட்டுமே உள்ளன. எல்லாம் தேசத்துக்காய்..! :)

நன்றி அக்கா தங்கள் கருத்திற்கு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதில்லை நெடுக்ஸ் உங்கள் இயல்பான எழுத்துப் போல் இல்லை. அதைச் சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதில்லை நெடுக்ஸ் உங்கள் இயல்பான எழுத்துப் போல் இல்லை. அதைச் சொன்னேன்.

 

இதுதான் என் இயல்பு என்று அவ்வளவு இலகுவான என்னில் கணக்கிட முடியாது சுமே அக்கா. எழுத்தை வைச்சு உருவத்தை எடை போட முடியாது. உருவத்தை வைச்சு.. மனசை எட போட முடியாது. நாங்க கொஞ்சம் வித்தியாசம்..! :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சது முதல்.. உன்னை சந்தோசமாத்தானே வைச்சிருக்கிறன்.. என்ன குறை வைச்சன்... வை திஸ் கொலைவெறி... பிளீஸ் டிலோ...

 

எனக்கொரு உண்மை தெரியோணும்......நெடுக்கர்??????
 
பெத்த தாய்தகப்பனோ...கட்டின புருசனோ கேக்க வேண்டிய சந்தர்ப்பத்திலை கேக்க வேண்டிய கேள்வியை.........என்னெண்டு களவாய் சந்திக்கிற கட்டளகன் கேக்கலாம்? இல்லை நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஒரு சொக்லேட்டையும் ஒரு தண்டோடை ரோசாப்பூவையும் குடுத்துட்டு.....காணிவயல்தோட்டம்துரவு எழுதிக்குடுத்தமாதிரி பெரிய கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது...இந்த வசனத்தை மாத்தணும்...மாறணும் :)  :D
 
ஆனால் கதையிலை சொல்லவந்த கருத்து அவ்வளவும் பொருள்......எமது விடுதலை எனும் வீட்டுக்கு சுற்றுவட்டாரங்களின் ஆதரவும் அதிகம் என்பது இங்கு தெரிகின்றது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை தெரியோணும்......நெடுக்கர்??????
 
பெத்த தாய்தகப்பனோ...கட்டின புருசனோ கேக்க வேண்டிய சந்தர்ப்பத்திலை கேக்க வேண்டிய கேள்வியை.........என்னெண்டு களவாய் சந்திக்கிற கட்டளகன் கேக்கலாம்? இல்லை நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஒரு சொக்லேட்டையும் ஒரு தண்டோடை ரோசாப்பூவையும் குடுத்துட்டு.....காணிவயல்தோட்டம்துரவு எழுதிக்குடுத்தமாதிரி பெரிய கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது...இந்த வசனத்தை மாத்தணும்...மாறணும் :)  :D
 
ஆனால் கதையிலை சொல்லவந்த கருத்து அவ்வளவும் பொருள்......எமது விடுதலை எனும் வீட்டுக்கு சுற்றுவட்டாரங்களின் ஆதரவும் அதிகம் என்பது இங்கு தெரிகின்றது.

 

ஆணின்.. அந்த அறியாமைக் கேள்வி தானே அண்ணா.. பின்னாடி அந்தப் பொண்ணு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த தூண்டி இருக்குது.

 

இப்ப எல்லாம் தோட்டம் துரவு எதிர்பார்க்கிறதில்ல.. அதற்குப் பதிலா.. கிரமமான.. ரெக்ஸ்ட்.. பேஸ்ரைம் சாட்..  ஸ்கைப் சாட்.. பேஸ் புக் சாட்..சினிமா.. ரெஸ்ரோரண்ட்.. கபே.. கிளப்.. பப்.. பார்ட்டி.. டான்ஸ்.. டிஸ்கோ.. அதோட கழுத்தில.. கையில .. காதில.. மாட்டிற.. பொருட்கள்.. கார் வீதி உலா..  ஊருலா.. இப்படி பலதை எதிர்பார்க்கினம். அது தான் வாழ்க்கையின் சந்தோசமுன்னும் நினைச்சிறாங்க பொண்ணுங்களில் பலர்..! அதுவும் ஆண்களை இப்படிக் கேள்வி கேட்க வைக்கலாமில்ல. :):lol:

 

நன்றி உங்கள் கருத்திற்கு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையோடை கதையாய் இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன் நெடுக்கர்!.....சனத்துக்கு வீட்டு அட்ரஸ் இருக்குதோ இல்லையோ நோ ப்பிறொப்ளம்...ஆனால் இப்பவெல்லாம் ஈமெயில் அட்ரஸ் கான்ட்போன் நம்பர் இல்லையோ அதைமாதிரி மரியாதை கெட்ட வாழ்க்கை ஒண்டுமில்லை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையோடை கதையாய் இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன் நெடுக்கர்!.....சனத்துக்கு வீட்டு அட்ரஸ் இருக்குதோ இல்லையோ நோ ப்பிறொப்ளம்...ஆனால் இப்பவெல்லாம் ஈமெயில் அட்ரஸ் கான்ட்போன் நம்பர் இல்லையோ அதைமாதிரி மரியாதை கெட்ட வாழ்க்கை ஒண்டுமில்லை :D

 

சில அறிவிலிகள் தான் அண்ணா இவற்றை அந்தஸ்தாகக் கருதி வைச்சிருக்குதுகள். ஆனால் இவை மனித வாழ்க்கையில்.. அத்தியாவசியமான அம்சங்களாகி விட்டன. மின்னஞ்சல்.. மற்றும் கைபேசி இரண்டும் முக்கிய தொடர்பாடல் தகவல் பரிமாற்ற முறைகளாகி விட்டுள்ளன. அவை பெருமை பேசுற விடயங்கள் அல்ல..! எங்கட ஆக்களுக்கு கார் வைச்சிருக்கிறது வீடு வைச்சிருக்கிறது பெருமை தானே.

 

ஆனால் உணவு.. உடை.. உறையுள்.. மூன்று அடிப்படைத் தேவைகள் என்பதை எம்மவர்களில் பலர் புரிந்து கொள்வதில்லை. கார் என்பது ஒரு நெகிழ்வுப் போக்குள்ள போக்குவரத்து சாதனம். விரும்பின நேரத்திற்கு விரும்பின இடத்திற்கு செல்ல.. உதவுவதால். மற்றும்படி இவை தான் அந்தஸ்தை தீர்மானிப்பவை என்ற எம்மவர் சிந்தனை.. முழு முட்டாள் தனம்..! அப்படியாகவே தான் நான் பார்க்கிறேன். :)

நல்ல கதை, நெடுக்ஸ் தடுக்கிவிழும் தூரமதிகமில்லை :wub:

 

சாதாரணமா.. நிற்கும் போதே ஸ்ரெடியா நிற்கிறமான்னு.. ஒருவாட்டிக்கு நாலுவாட்டி செக் பண்ணிக்கிற நாங்க.. தடுக்கி விழக் கூடிய இடங்களில.. எப்படி நிற்பம்...!!! :lol:

 

நன்றி தங்கள் கருத்திற்கு வந்தியதேவன். :)

 

சாதாரணமா.. நிற்கும் போதே ஸ்ரெடியா நிற்கிறமான்னு.. ஒருவாட்டிக்கு நாலுவாட்டி செக் பண்ணிக்கிற நாங்க.. தடுக்கி விழக் கூடிய இடங்களில.. எப்படி நிற்பம்...!!! :lol:

 

சில மேடு பள்ளத்தாக்குகள் ஸ்ரேடிய நிற்கின்ற எந்த ஒரு உறுதியான ஆண் மகனையும் தடுக்கிவிழ செய்துவிடும் அதில் நீங்களும் விதிவிலக்கல்ல, அல்லது இதுவரை அப்படியொரு சந்தர்ப்பம் அமையவில்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில மேடு பள்ளத்தாக்குகள் ஸ்ரேடிய நிற்கின்ற எந்த ஒரு உறுதியான ஆண் மகனையும் தடுக்கிவிழ செய்துவிடும் அதில் நீங்களும் விதிவிலக்கல்ல, அல்லது இதுவரை அப்படியொரு சந்தர்ப்பம் அமையவில்லை :lol:

 

மேடு பள்ளங்களாக பார்க்கிறவைக்கு ஸ்ரெடியா நிற்கிறது பிரச்சனையாக இருக்கலாம்.. அந்த மேடு பள்ளங்களின் பலம் பலவீனம்.. ஆக்கம் பற்றி அறிஞ்சு கொண்ட நாங்களும் போய் அதில மயங்கினா.. நாங்கள் பெற்ற அறிவுக்கு என்ன பயன்..! அவங்க தடுக்கி விழலாம் அது அறியாமைக் குற்றம். நாங்கள் விழுந்தால் அது எங்கள் குற்றம். அப்படி இருக்கிறப்போ.. அவதானம் தானே வருமில்ல..! :lol::D

பெண்ணை எப்பொழுதும் ஒரு போகப்பொருளாக சிந்திக்கும் ஆணாதிக்க சிந்தனைகளையே இந்த கதையில் கண்டேன் . ஒரு பெண்ணின் மன உணர்வுகளை உணர்ந்தவனே முழுமனிதனாக முடியும் . ஆனாலும் உங்கள் கதையை என்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. வாழ்த்துக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நெடுக்கர்.

உங்கள் கதைகளில் தாயகம் பற்றிய 'ஏக்கம்' எப்போதுமே, மறைபொருளாக எனினும் மறைந்திருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை எப்பொழுதும் ஒரு போகப்பொருளாக சிந்திக்கும் ஆணாதிக்க சிந்தனைகளையே இந்த கதையில் கண்டேன் . ஒரு பெண்ணின் மன உணர்வுகளை உணர்ந்தவனே முழுமனிதனாக முடியும் . ஆனாலும் உங்கள் கதையை என்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. வாழ்த்துக்கள் :) :) .

 

ஆணாதிக்கம் என்று சொல்வதிலும் ஆணின் தன்னை முதன்மைப் படுத்தும்.. பெருவிருப்பு என்று சொல்லலாம் தானே. பெண்களிலும் தங்களை முதன்மைப்படுத்தும் பெருவிருப்புள்ளோர் இருக்கினம் தானே.

 

நன்றி தங்கள் கருத்திற்கு. :)

 

புங்கையூரன் உங்களுக்கும் எனது நன்றி. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்டாலும் நீங்கள் உங்கடை ஆளிலை கொஞ்சம் அக்கறையா இருக்கவேணும் . இல்லாட்டில் போய்வா காதலா போய்வா தான் :D  :D . பேந்து தனிய இருந்து அவாவின்ரை நினைப்பிலை கவலைபடுகிறதிலை வேலையில்லை . உங்கடை கதைக்கு வாழ்த்து சொல்லிறன் .

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
இது தான் உங்கட கதையை வாசிக்கேக்குள்ள மனதிற்குள் வந்து போச்சு :)

சில மேடு பள்ளத்தாக்குகள் ஸ்ரேடிய நிற்கின்ற எந்த ஒரு உறுதியான ஆண் மகனையும் தடுக்கிவிழ செய்துவிடும் அதில் நீங்களும் விதிவிலக்கல்ல, அல்லது இதுவரை அப்படியொரு சந்தர்ப்பம் அமையவில்லை :lol:

யாரையோ போட்டு வாங்குவது போலிருக்கு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.