Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காதலியைக் கண்ட காதலன் யாழில் தூக்கிட்டு தற்கொலை

Featured Replies

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருபாலை கிழக்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு வழிபாட்டு ஸ்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இந்தப்  பெண் ஊருக்கு வரும் போது திருமணம் முடித்து  புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதினால் இவர் உயிரை மாய்த்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் கூறினர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில்  3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://akkinikkunchu.com/new/index.php

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளை எல்லாம் தொட்டமா, துடைத்தமா என்றிருக்கவேண்டும். மனசைப் பறிகொடுக்கக்கூடாது. ஏன் இந்தப்பெடியன் யாழ்ப்பணத்தில இருக்கிற மற்ரப் பெடியளிட்டை தனது ஆலோசனயை கேட்கவில்லையென எனக்கு விளங்கேல்லை, இப்பொ அங்கத்தப் பொடியள் பெட்டையளோட நெருக்கமாப் புளங்குறது (பெட்டையளும்தான்) எதுக்கும் வெளிநாடில் யாராவது பேப்பொடியள் இருப்பாங்கள் என்னும் துணிவில்தான், பெட்டைதான் பாவம் வெளிநாட்டு மாப்பிளை மோகம் இங்கைவந்து கஸ்டப்படப்போகுது. வெளிநாட்டில் இருக்கும் அனேகமான ஆண்கள் இப்போது ஒருவித மனநோயாளிகளாவே மாறிவிட்டார்கள். எனினும் பெட்டையள் கைகாறியள் என்ன மாயம் செய்தோ பொடியளை மருட்டிப்போடுவாளவையள். அத்தான் அவிக்கட்டோ பொரிக்கட்டோ முட்டையை என்பார்கள், அனால் உண்மையில் அவிவது வெளிநாட்டு மாப்பிள்ளைகளே.

கள்ள வோட்டுக்கள் போடப்படுவதை தடுப்பது நல்ல முடிவு.

அது எல்லாம் சரி இருபாலை கிழக்கில் செத்தவருக்கு எதுக்கு மானிப்பாய் போலிஸ் விசாரணை செய்யுது. போயா என்று கோப்பாய் போலிஸ் லீவோ ..?? 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் playboy ஆ இருந்திட்டா.. இதெல்லாம் ஒரு கவலையாவே இருக்காது. அதுதான் உயிரின வாழ்வில் அவசியம். இதெற்கெல்லாம் கவலைப்பட்டு தங்களை தாங்களே வருத்திக்கிறதும்.. மாய்த்துக்கிறதும்.. மனிதர்கள் சிலரின் முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு.

எப்பொழுது ஒருவர் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுவதில் இருந்து விடுவிக்கப்படுகிறாரோ அப்பொழுதே அவர் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டும். காதல் என்ற பெயரில் அந்தப் பெண்.. சுற்றித் திருந்தது.. உண்மையில் காதலே அல்ல.. அந்தப் பொய் பேயிடம் இருந்து விடுபட்டதையிட்டு மகிழ்ச்சி அடையனும். அதைவிட்டிட்டு...!

இது பெண் உயிரிகளின் பொதுவான குணமும் கூட..! பெண் உயிர்களைப் பொறுத்தவரை.. தனது முட்டையைக் கருக்கட்ட.. சக பால் தேவை. அது அதற்காக சந்தர்ப்பம் பார்த்து..கிடந்து எழுந்து நடந்து செல்லும்..! அத்தோடு வசதி வாய்ப்பும் வரும் என்றால் சொல்லவா வேண்டும். இந்த யதார்த்தத்திற்குள் நின்று தான் நாம்.. காதல்.. புனிதம் என்ற பதங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டும். மாயை தனம் மனதில் வளர்க்கக் கூடாது.

அதுவும்.. கீழத்தேய நாடுகளில் குறிப்பாக இந்திய உபகண்ட நாடுகளில்.. காதலுக்கு அளிக்கப்பட்டும் "புனிதத் தன்மையும்" சினிமாவில் அவற்றிற்கு காண்பிக்கப்பட்டும் "பெறுமதியும்" தான் இவ்வாறான தற்கொலைகளுக்கு முக்கிய காரணம்..!  இதே மேலை நாடுகளில்.. ஒரு பெண்ணிற்கு சராசரி 20- 30 பாய் பிரண்ட் அமைகிறதாம். அதுகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதென்றால்...????!

புத்தகப்படிப்பு மட்டுமல்ல.. சமூகத்தைப் பற்றிப் படிக்கனும்.. தம்பிகளா..!! அதுக்கு உள்ள இறங்கி கொஞ்சம் விளையாடிப் பார்க்கனும். தூர இருந்து பார்த்தா காதல் புனிதமாகவும்.. பெண் பூ வாகவும் தான் தெரியும். கிட்ட போய் பழகிப் பார்த்தால் தான்.. காதலின் பின்னால் ஒளிந்திருக்கும் கறுமம் கருமாந்திரம் எல்லாம் வெளிவரும். பூ என்று நினைப்பதன் பூகோள நரகத்தனம் தெரியும்.

எனிவே.. இறந்த பின் இதைச் சொல்லி என்ன பயன். மற்றவர்களாகவது திருத்திக் கொள்ளுங்க..!

பொய்யான ஒரு காதலுக்கு வாழ்க்கையைத் தொலைச்சிட்ட அந்த இளைஞனுக்கு.. கண்ணீரஞ்சலி. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இளைஞர் எனக்கு அறிமுகமானவர்.இடப்பெயர்ந்த சிறுவயதில்  அவரோடு விளையாடித் திரிந்திருக்கின்றேன். ஆனால் அதன் பிற்பாடு கனகாலம் தொடர்பு இருக்கவில்லை. உண்மையில் இந்த முடிவு வேதனையைத் தருகின்றது... அதிலும் அதிகமாகக் கோபத்தைத் தருகின்றது.

இவர் தான் குடும்பத்தில் மூத்த பிள்ளையுமாவார்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பல்கலைக்கழக மாணவனின், அநியாயச் சாவு.
சுற்றுலாச் செல்வதாகக் கூறிவிட்டு, கலியாணம் கட்டிவிட்டு வந்தால்... என்ன அர்த்தம்.
அந்தப் பெண்தானும்... உண்மையைக் கூறி, காதலிருந்து நாகரீகமாக பிரிந்திருக்கலாம்.
 
அது ஏனோ தெரியல்ல ஆண்கள் காதலிக்கும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாலும் அதை பெரிசா தூக்கிப்பிடிக்கும் பெண்கள் தாங்கள் முழுப் பொய்யை காதல் முழுக்க சொல்லிட்டு வந்தாலும் அதற்காக வருந்துவதில்லை. அப்படியானவர்களிடம் போய் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா..??! எனி வருந்தித் தான்.. என்ன பயன்.. போன உயிர் தான் திரும்பி வந்திடுமா..??! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ku1_zps5d3e163f.png

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏனோ தெரியல்ல ஆண்கள் காதலிக்கும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாலும் அதை பெரிசா தூக்கிப்பிடிக்கும் பெண்கள் தாங்கள் முழுப் பொய்யை காதல் முழுக்க சொல்லிட்டு வந்தாலும் அதற்காக வருந்துவதில்லை. அப்படியானவர்களிடம் போய் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா..??! எனி வருந்தித் தான்.. என்ன பயன்.. போன உயிர் தான் திரும்பி வந்திடுமா..??! :(:rolleyes:

உண்மையில்... மனச்சாட்சி உள்ள பெண் என்றால்...

அவவின் வாழ்க்கையின் எதிர்காலம் முழுக்க, இந்தச் சம்பவம் உறுத்திக் கொண்டே இருக்கும்.

"எனக்கு வீட்டில், கலியாணம் பேசுகிறார்கள்" என்னை மறந்திடுடா என்று....

உண்மையை... வெளிப்படையாகக் கூறியிருந்தால்... எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.

தமிழ்சிறி அண்ணா, நீங்கள் சொல்லுவதில் நியாயம் இருந்தாலும், இனி அந்த பெண்ணின் பக்கம் என்னவென்று தெரியாமல் கதைப்பது நாகரீகம் இல்லை. சில வேளைகளில் அந்த பெண்ணை சுற்றுலா என்று தான் பெற்றோர் கூட்டிச்சென்று கட்டாய கல்யாணம் கூட பண்ணி வைத்திருக்கலாம் இல்லையா. பெற்றோர் மறைமுக மிரட்டல் (blackmail ) பண்ணி இருக்கலாம் இல்லையா.  என்ன இருந்தாலும் முழுமையாக விசாரிக்காமல் சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த பையன் செய்தது கோழைத்தனமான முடிவு. அவனை படிக்க வைத்த பெற்றோர், சகோதரங்களை வேதனைபடுத்தும் ஒரு செயலை ஓடிப்போன (?) காதலிக்காக செய்திருக்க கூடாது.

பகலவன், அந்தப் பெண்ணை வீட்டுக்காரர்... மிரட்டியிருந்தால்,

ஒரு பல்கலைக்கழக மாணவிக்கு அரசல் புரசலாகத் தன்னும், திருமண முன்னேற்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.

இனி மாப்பிள்ளைக்கு... இந்த விசயம் தெரிந்தால்... அடுத்த, பிரச்சினைக்கு அந்தப் பெண் முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனமான  முடிவு

வாழ்ந்து காட்டியிருக்கணும்

எனக்குப்பிடிக்கல

போடா போ.............. :(

குடும்பத்தில் மூத்த பொடியன் என்றால் எவ்வளவு பொறுப்புகள் இருக்கிறதோ தெரியாது. பாவம் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள். யாரோ வீணாய்ப் போன ஒருத்திக்காக உயிரை மாய்த்துள்ளார். அந்தப் பெண் தனது எதிர்காலத்திற் எது நல்லது என்று நினைத்தாரோ அதைத் தெரிவு செய்துள்ளார்.கஷ்டப்படப் போவது அந்தப் பொடியனின் குடும்பம்.

எனது உறவினப் பையனும் சிறிது காலத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டான். ஒரே ஒரு பிள்ளை. படிப்பில் நல்ல கெட்டிக்காரன். அவன் காதலிக்கு சில காதலர்கள். அதில் வீரியமானததை அவள் தெரிந்தெடுத்தாள். இவன் காதலுக்காக உயிர் விட்டான். தாயும் தகப்பனும் பிரிந்து விட்டார்கள். தாய்க்கு மனநிலை சரியில்லாமல் போய் விட்டது.  

சினிமாக்களும் இலக்கியங்களும் காதலுக்கு புனித வர்ணம் பூசியுள்ளன. நடைமுறையில் அது  வெறும் வியாபாரம். இளைய தலைமுறை இதை உணர்ந்து காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்வதைத் நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு கொப்பு தாவும்போது பிடியை நேரக்கணக்கு பார்த்துத்தான் விடும்.. இதுவும் அவ்வகைதான் என நினைக்கிறேன். பெண்களுக்கு பொருளாதார தன்னிறைவு உறுதிப்படும்வரை இப்படி சிலபேர் நடந்துகோள்ளவே செய்வார்கள்..

அந்த இளைஞனின் பெற்றோரின் நிலைதான் வேதனைமிக்கது.. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தி செய்த வேலையாலை ஒரு உயிர்பலி....மற்ற உயிருக்கு வாழ்க்கை முழுக்க சஞ்சலம்.

  • கருத்துக்கள உறவுகள்

"எப்பவும் playboy ஆ இருந்திட்டா.. இதெல்லாம் ஒரு கவலையாவே இருக்காது." இருக்கலாம் தான். ஆனால் சினேகிதனை.. சினேகிதனை.. என்று சொல்லி சொறிஞ்சுவிட ஆளை சம்பளம் கொடுத்து தான் வைக்கவேனும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளை எல்லாம் தொட்டமா, துடைத்தமா என்றிருக்கவேண்டும். மனசைப் பறிகொடுக்கக்கூடாது. ஏன் இந்தப்பெடியன் யாழ்ப்பணத்தில இருக்கிற மற்ரப் பெடியளிட்டை தனது ஆலோசனயை கேட்கவில்லையென எனக்கு விளங்கேல்லை, இப்பொ அங்கத்தப் பொடியள் பெட்டையளோட நெருக்கமாப் புளங்குறது (பெட்டையளும்தான்) எதுக்கும் வெளிநாடில் யாராவது பேப்பொடியள் இருப்பாங்கள் என்னும் துணிவில்தான், பெட்டைதான் பாவம் வெளிநாட்டு மாப்பிளை மோகம் இங்கைவந்து கஸ்டப்படப்போகுது. வெளிநாட்டில் இருக்கும் அனேகமான ஆண்கள் இப்போது ஒருவித மனநோயாளிகளாவே மாறிவிட்டார்கள். எனினும் பெட்டையள் கைகாறியள் என்ன மாயம் செய்தோ பொடியளை மருட்டிப்போடுவாளவையள். அத்தான் அவிக்கட்டோ பொரிக்கட்டோ முட்டையை என்பார்கள், அனால் உண்மையில் அவிவது வெளிநாட்டு மாப்பிள்ளைகளே.

நல்லா நொந்து போனியல் போல தம்பி :lol: :lol:

இப்படிப்பட்ட வெங்காயத்தை, படு கோழையை கட்டி காலம் பூரா கஷ்டப்படாமல் நல்ல முடிவெடுத்து தப்பிய பெண்ணுக்கு என் வாழ்த்துகள். அனைத்து சீரும் சிறப்புடனும் அவள் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பவும் playboy ஆ இருந்திட்டா.. இதெல்லாம் ஒரு கவலையாவே இருக்காது. அதுதான் உயிரின வாழ்வில் அவசியம். இதெற்கெல்லாம் கவலைப்பட்டு தங்களை தாங்களே வருத்திக்கிறதும்.. மாய்த்துக்கிறதும்.. மனிதர்கள் சிலரின் முழு முட்டாள் தனத்தின் வெளிப்பாடு.

எப்பொழுது ஒருவர் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுவதில் இருந்து விடுவிக்கப்படுகிறாரோ அப்பொழுதே அவர் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டும். காதல் என்ற பெயரில் அந்தப் பெண்.. சுற்றித் திருந்தது.. உண்மையில் காதலே அல்ல.. அந்தப் பொய் பேயிடம் இருந்து விடுபட்டதையிட்டு மகிழ்ச்சி அடையனும். அதைவிட்டிட்டு...!

இது பெண் உயிரிகளின் பொதுவான குணமும் கூட..! பெண் உயிர்களைப் பொறுத்தவரை.. தனது முட்டையைக் கருக்கட்ட.. சக பால் தேவை. அது அதற்காக சந்தர்ப்பம் பார்த்து..கிடந்து எழுந்து நடந்து செல்லும்..! அத்தோடு வசதி வாய்ப்பும் வரும் என்றால் சொல்லவா வேண்டும். இந்த யதார்த்தத்திற்குள் நின்று தான் நாம்.. காதல்.. புனிதம் என்ற பதங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டும். மாயை தனம் மனதில் வளர்க்கக் கூடாது.

அதுவும்.. கீழத்தேய நாடுகளில் குறிப்பாக இந்திய உபகண்ட நாடுகளில்.. காதலுக்கு அளிக்கப்பட்டும் "புனிதத் தன்மையும்" சினிமாவில் அவற்றிற்கு காண்பிக்கப்பட்டும் "பெறுமதியும்" தான் இவ்வாறான தற்கொலைகளுக்கு முக்கிய காரணம்..!  இதே மேலை நாடுகளில்.. ஒரு பெண்ணிற்கு சராசரி 20- 30 பாய் பிரண்ட் அமைகிறதாம். அதுகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதென்றால்...????!

புத்தகப்படிப்பு மட்டுமல்ல.. சமூகத்தைப் பற்றிப் படிக்கனும்.. தம்பிகளா..!! அதுக்கு உள்ள இறங்கி கொஞ்சம் விளையாடிப் பார்க்கனும். தூர இருந்து பார்த்தா காதல் புனிதமாகவும்.. பெண் பூ வாகவும் தான் தெரியும். கிட்ட போய் பழகிப் பார்த்தால் தான்.. காதலின் பின்னால் ஒளிந்திருக்கும் கறுமம் கருமாந்திரம் எல்லாம் வெளிவரும். பூ என்று நினைப்பதன் பூகோள நரகத்தனம் தெரியும்.

எனிவே.. இறந்த பின் இதைச் சொல்லி என்ன பயன். மற்றவர்களாகவது திருத்திக் கொள்ளுங்க..!

பொய்யான ஒரு காதலுக்கு வாழ்க்கையைத் தொலைச்சிட்ட அந்த இளைஞனுக்கு.. கண்ணீரஞ்சலி. :(

அதே.. :)

நான் இதுக்கு நல்ல பதில் எழுதவேணும் போல இருந்தாலும் ஏதோ ஒன்று கையைக் கட்டிப் போடுது. :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிப்படி முட்டாள் வேலை செய்யிறவையோ  தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருமே பெண்களை குறைகூறுகின்றனர். எனக்கு இதயம் வலிக்கிறது. காதலனுக்கு தன்னை அர்ப்பணித்தபின், அந்தக் காதலனைக் கைப்பிடிக்கத் தடையாக நிற்கும் தாய்தந்தையரையே கொன்றுவிடும் பெண்களும் உள்ளதை நினைவுகூருங்கள். அண்மைய ஆதாரம் மட்டக்களப்புச் செங்கலடி இரட்டைக் கொலை.

அவசரமாக முடிவுக்கு வருகிறொம். காதலில் புனிதமே இல்லை என்றே வாதாடுகிறோம். பள்ளியில் தோற்றவன் பொலிடோல் அருந்துகிறான். படையில் தோற்றவன் குப்பி கடிக்கிறான். தொழிலில் தோற்றவன்  ஓடும் ரயில் முன் பாய்கிறான்.  காதலில் தோற்றுவிட்டால் மட்டும் நாம் பலவற்றை இழுத்துவந்து கிழி கிழி என்று கிழிப்பது ஏனோ?

மேலை நாடுகளில் டீன் ஏஜ் தற்கொலைகளை இப்படித்தான் அணுகுகிறார்களா?

தனது மனக்கவலைக்கு மருந்து தேடாமல் யாரவது இறந்தால் கல்வியில் சரஸ்வதி தேவியை காணக்கூடாது; தொழிலில் இலட்சுமியை காணக்கூடாது; படையில் துர்க்காவை காணக்கூடாது என்றேல்லாம் வாதிக்கிறோமா? இதுவா நாடுப்பற்று? செய்யும் தொழிலே தெய்வம் என்று நாம் கூறுவதில்லையா? கற்பதை சுற்றி ஆயிரம் சட்டங்கள் போட்டு தான் நாம் கல்வியை பாதுகாக்கிறோம் என்பது உண்மை இல்லையா?

மனத்தில் இருக்க வேண்டிய தூய்மையை உடைக்க வேண்டும் என்பதற்காக அறிஞ்ஞர்கள் காந்திய காலங்களிலிருந்து விதவைகள் மறு மணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள் என்றா நாம் நினைக்கிறோம். எத்தனை பெண்கள் வளர்ந்து வந்த குட்டியை தாய் மிருகம் துரத்தி விட்டு திருப்ப ஆண் துணை தேடி போவது போன்ற மனநிலையில் இருப்பார்கள். மனதூய்மையாக நடந்து கொள்ளவேண்டியது என்ற பாடம் பொது வாழ்வில் அரசியலில் தொடங்கி பிள்ளை வளர்க்கும் பெற்றோர் வரைக்கும் வந்து சேர வேண்டியதில்லையா? இவையல்ல ஆரம்ப காலத்தி மற்ற மிருகளின் கணக்கோ கணக்காக இருந்த நாம் இன்று புவியோட்டில் வெற்றிகரமான உயிரினமாக இருப்பது. இது மனித இனத்தின் கூர்ப்பின் பாகம் இல்லையா?

பலதடவைகளில் எமது அவசரத்துக்கு விஞ்ஞானத்தையும் துணைக்கு அழைக்கிறோம்.  கூர்ப்பில் ஆண்துணையை தேடத்தக்கதாக பெண் உயிரினம் வளர்ச்சிடைந்திருக்கிறது.  ஆனல் ஒரு ஆணுடன் ஒரு பெண் வாழ்வதா(சில பறவைகள்), ஒரு ஆண் அதிகாரம் உள்ளவரை பல பெண்களை வைத்திருந்து அதிகாரம் இழக்கும் போது எல்லோரையும் இழப்பதா(சிங்கங்கள்),  இனபெருக்க பருவகாலம் என்று ஒன்றில் தானால் ஆன பெண்களை கைப்பற்ற மற்ற ஆண்களுடன் சண்டை போட்டு வென்று அதிகமான பெண்களை வைத்திருந்துவிட்டு அந்த வருடத்துடன் இறந்துவிடுவதா (ரெயின் டியர்) அல்லது ஊர் நாய்கள்  போன்று சந்தர்ப்பத்தை மற்று பயன்படுத்தி வாழ்வதா என்பது விலங்குக்கு விலங்கு மாறு படுகிறது. பிளக் விடோ கூட தனது காதல் உறவில் புதுமையான நடத்தைகளை காட்டுகிறது. இதில் நாம் திணிக்க விரும்பும் "ஒரு பொதுவிதி" எங்கும் இல்லை.  காதல் வாழ்வில்  ஆண் விலங்கு அடையும் கூர்ப்பை அனுசரித்து பெண் விலங்கும் கூர்ப்படையும் போதே(மறு வழமும்) அந்த விலங்கு பூமியில் தரிக்கிறது. பிரதியேகமாக பறவைகளின் காதல் வாழ்க்கை பலவேறு விசித்திர நடத்தைகளை காட்டுகிறது. இதை நாம் விஞ்ஞான மாக ஏற்க பழகவேண்டும்.

ஏமாற்றுவது மனம் தொழில் படும் விலங்குகளுக்கு மட்டும் உரியது. எமாற்றுவது எல்ல இடத்திலும் இந்த வகை மிருகங்களில் காணப்படுகிறது.  காகம், நரி போன்ற மிருகங்களின் சாதுரிய நடத்தை பழைய காலங்களில் இருந்து அவதானிக்க பட்டிருக்கிறது. ஆனால் "உன்னோடுதான் உயிர்வாழ்ந்தால்" என்று காதல் நேரம் வாக்கு கொடுத்துவிட்டு மாறுவது மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். எதிர்பார்ப்பதும் வாக்கு கொடுப்பதும் மனிதர்களிடம் மட்டும் தான் உள்ளது.

மேற்கு நாடுகளில் காதல் உறவுகளில் ஈடுபடும் போது திருமணம் பற்றிய பிரஸ்தாபங்கள் இப்போது அருகி வருகிறது. இது மேற்கு நாடுகளில் இது வரை கடைபிடிக்கப்பட்டுவந்த இறுக்குமான சட்டங்களினால் வந்த முடிவு( அல்லது இன்று நடந்து கொண்டிருக்கும் ஒரு பரிசோதனை). ஆனால் இது கூர்ப்பின் வழி செல்வதல்ல. இயற்கை ஒட்டத்துடன் ஓடாமல் தனது படிபறிவை இணைத்து செயற்கையாக(காதல் வாழ்வில்) வாழ மனிதன் மட்டும்தான் இன்றுவரையில் கூர்ப்படைந்திருக்கிறான். இது வரை  மனித இனம் கண்டிருக்கும் வெற்றி, காதல் வாழ்வின் வெற்றி இயற்கையால் தனது  பதையை தொடரும் போதே. செயற்கையாக இயற்கையின் பாதை  தடுக்கப்பட்ட சூழ்நிலையில் மனித இனம் வெற்றி காணுமா என்பது இன்றைய பரிசோதனைக்காலம் முடிவடைந்த பின்னர்தான் கண்டறியப்படும்.

எனவே தற்கொலையை தடுப்பதற்கான வழி காதலின் தூய்மையை தூற்றுவதால் என்ற மாயைக்குள் நாம் விழுந்துவிடக்கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
பகலவன் சொல்வது போல அந்த பெண் என்ன சூழ்நிலையில் இத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார் என்பது தெரியாமல் கதைக்க கூடாது.நிழலி சொல்வது போல அந்தப் பெடியன் ஒரு கோழை என்பது தான் என் கருத்தும்.கண நேரத்தில் பெத்து வளர்த்த,கூடப் பிறந்த சகோதரங்களை விட்டு சாக மனம் வருகுது என்டால் இவர் ஒரு கடைந்தெடுத்த சுயல்வாதி
 
கள உறவு ஒருவர் இன்னொரு திரியில் சிங்கள் மாணவர்கள் செத்ததிற்கு சிங்களவர் தானே போய்த் தொலையட்டும் என்று எழுதியிருந்தார் இதற்கு என்ன எழுதுவாரோ :unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறதெண்டு முடிவெடுத்தவன் ....

சா .... கொண்டு போயிருப்பன் ....  :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.