Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Esai-Vazhuthi-1-600x849.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது  மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.

போராளி போராளி புலிபடையின்

தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள்.

Esai-Vazhuthi-3-600x400.jpg

பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும்  கொண்டு விளங்கினார்  பிரிகேடியர் சரிக்குமார் அவர்கள்.

போராளிகள் மத்தியில் பிரிகேடியர்  ” சரிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள்  மூலம் பல தாக்குதல் நடத்தியமையாலும் மேலும் வேவுத் திட்டமிடளாலும் பெரும் மதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறியாதிருந்தும் இப்படியான் ஓர் தளபதி உள்ளார் என்றும் வெளியில் தெரியா வெளிட்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள் …

Esai-Vazhuthi-4-600x400.jpg

ஆயினும் தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறையில்  – அவர் வழிகாட்டலில்  வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை ஆயினும் விடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே , பிரிகேடியர் சசிக்குமார்மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் பின்வருமாறு விபரிக்கும் வேவுப்புலிகளின் வாழ்வியலிலிருந்து ….. !

Esai-Vazhuthi-2-600x402.jpg

தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம்  தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள  வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து  தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிட்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை …

எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது.பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது ; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி !

Esai-Vazhuthi-5-600x397.jpg

தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது ; உன்னதமானது !

தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் ; தளர்ச்சியற்ற பிணைப்பு !

எத்தனை எத்தனை மாபெரும்

அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.

எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வுவுப்புளி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.

Esai-Vazhuthi-6-600x397.jpg

பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராரிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார்.

இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தகிக்கும் தகிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாக்கி அவரின் விட்டுசென்ற  பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.

- இசைவழுதி.

 

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரத்தளபதிக்கு  எனது  வீரவணக்கங்கள் !!!

 

உங்கள் காலத்தில் வாழ்ந்த பெருமை  எனக்கு....

Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரத்தளபதிக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

Posted

வீரவணக்கம் !

 

Posted

அன்பான உறவுகளே !
தாயக கீதம் - மற்றும் போராட்ட விளுமியத்துடன் மாவீரரின் நாமத்துடன் வீசும் தேசகாற்றை உங்கள் உறவுகளுக்கு மத்தியில் வீசசெய்யுங்கள்.

எம் தேசக்காற்றின் பெயரை வெளித்தெரியாது சில உறவுகள் இதிலிருந்து பதிவுகள் இன்றும் உங்கள் வாசலில் வீசசெய்கின்றன தங்களின் இணைய ஊடகங்கள் ஊடாக - யார் உரைத்தாலும் ஒன்றே என்று நாமும் மெளனித்தே பயனிகின்றோம். ஆனால் எம்மை புதைத்து அதன் மேல் தாங்கள் நடக்க எத்தனிக்கும் போது அது முடியா ஒன்றாகிவிடுகின்றது.

துரோகத்தின் வலிமைகள் கை ஓங்கும் வேளை , நாம் தலை குனிந்து போவதற்க்கு இல்லை நிமிர்ந்த வண்ணம் செயலாற்றுவோம்.

 

http://thesakkaatu.com/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

 

Posted

திரையின் பின்னால் செயற்பட்ட மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவு நாள் வீரவணக்கம் ...சகமாணவன் ஒன்றாக ஒரே வாங்கில் இருந்து கல்விகற்றோம்.....

Posted

மாவீரருக்கு வீரவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேரை போலே வெளியே தெரியா வண்ணம் இருந்தவன்.

 
"பல நாளில் எமது பலமே இவர்தான் என்று நின்றவன்" 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.