Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ruwan-seithy-150.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டுவருகின்றன. அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இலங்கை இராணுவத்திடம் சிறிதுகாலம் இருந்துள்ளனர். இந்தநிலையில் நந்திக்கடல் களப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என்பதை அவருடைய சகாக்களே அடையாளம் காண்பித்துள்ளனர். பலியானது பிரபாகரன் என்பதுடன் அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருக்கின்ற புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி ஒத்தாசை நல்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரிவினைவாதத்திற்கு நிதி சேகரிப்பதற்காக இவ்வாறான பேய் கதையை பரப்பிவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=82996&category=TamilNews&language=tamil

  • Replies 75
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஐயம் திரிபற நந்திக்கடலில் உறுதிப்படுத்திவிட்டீர்களே.. பிறகும் ஏன் பேய்க்கதைகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு நிற்கிறீங்க? :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஐயம் திரிபற நந்திக்கடலில் உறுதிப்படுத்திவிட்டீர்களே.. பிறகும் ஏன் பேய்க்கதைகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு நிற்கிறீங்க? :huh::D

உவரும் ஒரு பேய்காய் போலகிடக்கு:D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் எல்லாம் முடிச்சிட்டீங்களில்ல. நாங்களே தேடல்ல.... நீங்களா எரித்திரியா.. உகண்டா.. லிபியா என்று கொண்டு..!! அதுவும் இராணுவப் பேச்சாளர் தோன்றிச் சொல்லுற அளவுக்கு மாற்றர் முக்கியமா இருக்குது...! ம்ம்...! :lol: :lol:

உறுதிப்படுத்திய சகாக்கள்.. கருணாவும்.. தயா மாஸ்டரும். அவை இப்ப உறுதிப்படுத்தினத்திற்குரிய விளைவுகளை அனுபவிச்சுக்கிட்டு குடியும் குட்டியுமா.. சுகபோகமா இருக்கினமில்ல. அப்புறம் என்ன..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உவரும் ஒரு பேய்காய் போலகிடக்கு :D

இன்றைக்கு யாழ்கள ஜாம்பவான்கள் சிலரும் வணிகசூரியவின் கருத்தை உறுதிசெய்வார்கள்..! zen-reading-news.gif

:D

  • கருத்துக்கள உறவுகள்

அவை தாம் ஏற்கனவே சாத்திரம் பார்த்திக்கிட்டு திரியினமில்ல..! :lol::D

இதில் கோபத்தபயா கூறிய மரபணு பரிசோதனைக்கதை முடிவு 100% கைவிடப்பட்டுவிட்டது. அதாவது இனி மேலைய காலங்களில் மரபணு பேய்க்கதையை இராணுவப் பேச்சாளர் சொல்ல வரமாட்டர்.

இன்று தொடக்கம்... போரின் பின்னர் தன்னில் இருந்து ஒரு அணுவை பரிசோதனைக்கு கூட எடுக்க தலைவர் விட்டுவைக்க வைக்க இல்லை என்பதை ராணுவம் ஒத்துக்கொள்கிறது. 

அவை தாம் ஏற்கனவே சாத்திரம் பார்த்திக்கிட்டு திரியினமில்ல..! :lol::D

அவர்கள் எல்லாம் ஈழத் தமிழர் மீதான் உளவியல் போரின் ஒரு அங்கம், முதலில் தம்மை ஈழப் போராட்ட ஆதரவாளர்கள் போன்றும் தமக்கு எல்லாம் தெரியும் மாதிரியும் காட்டுவார்கள், பின்னர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று விஷ்த்தை விதைப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமில்ல..அய்ரோப்பா அணியின் அதிகாரமிக்க அதிபர் என்ற நினைப்பும்...நினைத்தால் யாரையும் நாடுகடத்தமுடியும்....விசாரணை செய்வேன்  என்ற வெருட்டல்கள் வேறு...தடவிக் குத்தல் தான்..

இந்த செய்திகளை பார்க்க சாத்திரம் பார்த்தவைக்கே லேசா வயிறு கலக்கும். உண்மையில் இருக்குராரோ தலைவர்? யாழில் நான் சொல்வதை நம்ப சிலர் இருந்தாங்கள் இப்ப இதுக்கும் ஆப்போ  எண்டு  ஆள் ஓடி திரிவார் 

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பு நீங்கள் எதை நம்புகின்றீர்கள் என்று புரியவில்லை. சாத்திரத்தையா அல்லது அற்புதத்தையா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் தலைவர் இறந்திட்டார் என்ட செய்தி வந்தவுடன் ஏன் ஒருத்தரும் அவருக்காக தீக்குளிக்கவில்லை?[அவர் உயிரோடு இருக்கிறார் அதான் தீக்குளிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்].செய்தி உண்மையோ/பொய்யோ ஆனால் கேள்விப்பட்டவுடன் ஏன் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக்கூடம் போகாத கேசுகளுக்கு போங்கோடா போய் எரிஞ்சு சாவுங்கோடா எண்டு ஒருத்தரும் சொல்லேல்லை போலை கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் தலைவர் இறந்திட்டார் என்ட செய்தி வந்தவுடன் ஏன் ஒருத்தரும் அவருக்காக தீக்குளிக்கவில்லை?[அவர் உயிரோடு இருக்கிறார் அதான் தீக்குளிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்].செய்தி உண்மையோ/பொய்யோ ஆனால் கேள்விப்பட்டவுடன் ஏன் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை :unsure:

அவர் சுழியர் ..எப்படியோ சுழிச்சு தப்பிவந்திடுவார் என்ற நம்பிக்கை தான்..... :D

சிலவேளை தலைவர் அங்கே பேயாக இருக்கிறாரோ? அது தான் "பேய்" கதை என்று இந்தாள் சொல்லுதோ??

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் தலைவர் இறந்திட்டார் என்ட செய்தி வந்தவுடன் ஏன் ஒருத்தரும் அவருக்காக தீக்குளிக்கவில்லை?[அவர் உயிரோடு இருக்கிறார் அதான் தீக்குளிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்].செய்தி உண்மையோ/பொய்யோ ஆனால் கேள்விப்பட்டவுடன் ஏன் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை :unsure:

40000 + 5000 + 50000 (SLA :) ) போனது காணாதே...

யாழ் அன்பு நீங்கள் எதை நம்புகின்றீர்கள் என்று புரியவில்லை. சாத்திரத்தையா அல்லது அற்புதத்தையா?

அற்புதம் எழுதும் போர்க்கதைகளை இன்னும் வாசிக்க இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சுழியர் ..எப்படியோ சுழிச்சு தப்பிவந்திடுவார் என்ற நம்பிக்கை தான்..... :D

இந்திராகாந்தி செத்தவுடன் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆட்கள் செத்தார்களாம்,தீக்குளித்தும் செத்தவர்களாம் என்று கேள்விப்பட்டேன்.எங்கட தலைவர் இருக்கிறார்/இல்லை என்ட வாதத்திற்கு நான் வரவில்லை ஆனால் அந்த செய்தி கேட்டும் ஏன் எம்மவர்கள் ஒன்றுமே செய்யவில்லை :(
 
தலைவர் திரும்பி வருவார் சாகவில்லை என்று நினைத்தால் சரி ஆனால் ஒரு காலத்தில் தலைவர் உண்மையாக மு.வாய்க்காலில் இறந்திட்டார் எனத் தெரிந்தால் என்ன செய்வார்கள்?
 
தமிழீழம் பெற்று கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் கடமை என்று அப்பவும் இதில் வந்து எழுதுவோம் ஆனால் ஊரில் போய் உயிரைக் கொடுத்து போராட மாட்டோம்

தமிழீழம் பெற்று கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் கடமை என்று அப்பவும் இதில் வந்து எழுதுவோம் ஆனால் ஊரில் போய் உயிரைக் கொடுத்து போராட மாட்டோம்.

போராடக்கூடிய தகமைகள் உள்ளனாங்கள் கோளைத்தனமாக வெளியில் ஓடி வந்திருக்க மாட்டோம்.   இனி தெரிந்த வழிகளால் தொடருவதுதான் செய்யத்தக்கது. 

அதிலும் கோளைத்தனம் காட்டினால் மனிதனாக இருக்கத்தகுதி இல்லை. விடாது தொடர்ந்து அதில் தன்னும் வெற்றி வராதா என்று பார்த்துவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி இறந்ததற்கு ஒருவரும் சிறிலங்காவில் தீ மூட்டி இறக்கவில்லை என நினைக்கிறேன். ஆனால்  தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அவரின் மரணசடங்கை கொண்டாடினார்களாம்.புலிகளுடன் சேர்ந்து பல மக்களும் இறந்தார்கள். அதற்குள் தீ மூட்டியும் இறக்க வேண்டும் என்று உங்கள்  மனம் விரும்புகிறதா??

இன்னும் சிலர் தலைவர் இன்னும் இறக்கவில்லை என நினைக்கிறார்கள்.தலைவர் இறந்து விட்டார், இறக்கவில்லை எனும் இரு தரப்பு தொடர்ந்து கொண்டே  பல காலத்துக்கு இருக்கும்.

ஊரில் என்ன எங்கும் உயிரை கொடுத்தும் ஒரு பிரயோசனமும் இல்லை.கொடுக்க வேண்டிய உயிர்களுக்கு மேல் கொடுத்தும் எதுவித பலனும் கிடைக்காத போது இனியும் ஏன் உயிரை கொடுக்க வேண்டும்?
 
இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆயுதப் போராட்டம் சாத்தியமா தெரியவில்லை.
 
உயிரை கொடுத்தால் தான் போராட்டம் என யார் சொன்னது??  அப்படி ஏதாவது விதி உண்டா??
  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி செத்தவுடன் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆட்கள் செத்தார்களாம்,தீக்குளித்தும் செத்தவர்களாம் என்று கேள்விப்பட்டேன்.எங்கட தலைவர் இருக்கிறார்/இல்லை என்ட வாதத்திற்கு நான் வரவில்லை ஆனால் அந்த செய்தி கேட்டும் ஏன் எம்மவர்கள் ஒன்றுமே செய்யவில்லை :(
 
தலைவர் திரும்பி வருவார் சாகவில்லை என்று நினைத்தால் சரி ஆனால் ஒரு காலத்தில் தலைவர் உண்மையாக மு.வாய்க்காலில் இறந்திட்டார் எனத் தெரிந்தால் என்ன செய்வார்கள்?
 
தமிழீழம் பெற்று கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் கடமை என்று அப்பவும் இதில் வந்து எழுதுவோம் ஆனால் ஊரில் போய் உயிரைக் கொடுத்து போராட மாட்டோம்

உண்மைதான் ரதி

ஆனால் தலைவர் அரசியல்வாதியல்ல

நீங்கள் குறிப்பிடும் எவருடனும் அவரை ஒப்பிடமுடியாது.

எத்தனையோ விடுதலை வீரர்கள் உலகெங்கும் வீரமரணமடைந்தபோதும் எவரும் தீக்குளிக்கவில்லை.

காரணம் அவர்கள் தங்களை மக்களுக்கு சொல்லியே  வந்தார்கள்.

எப்பொழுதும  எதுவும் நடக்கலாம் என்பதை மக்களும் அறிந்தே இருந்தார்கள்.

தலைவரும் சொல்லியே  வந்தார்.

தீக்குளிக்கணும் என்றால் ஒவ்வொரு கரும்புலிக்கும் தளபதிகளுக்கும் தீக்குளித்திருக்கணும்.

தலைவர் அதை கற்றுக்கொடுக்காது

சில நிமிடங்கள் குனிந்து அஞ்சலித்தவிட்டு கடமையைத்தொடருங்கள் என்று மட்டுமே சொன்னார். செய்தும  காட்டினார்.

(இது தலைவர் இல்லை என்று எழுதப்பட்டதல்ல.  உங்களது கேள்விக்கு எழுதப்பட்டது.  தலைவர் எங்காவது இருக்கணும் என்று விரும்புபவன் நான்)

  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி செத்தவுடன் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆட்கள் செத்தார்களாம்,தீக்குளித்தும் செத்தவர்களாம் என்று கேள்விப்பட்டேன்.எங்கட தலைவர் இருக்கிறார்/இல்லை என்ட வாதத்திற்கு நான் வரவில்லை ஆனால் அந்த செய்தி கேட்டும் ஏன் எம்மவர்கள் ஒன்றுமே செய்யவில்லை :(
 
தலைவர் திரும்பி வருவார் சாகவில்லை என்று நினைத்தால் சரி ஆனால் ஒரு காலத்தில் தலைவர் உண்மையாக மு.வாய்க்காலில் இறந்திட்டார் எனத் தெரிந்தால் என்ன செய்வார்கள்?
 
தமிழீழம் பெற்று கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் கடமை என்று அப்பவும் இதில் வந்து எழுதுவோம் ஆனால் ஊரில் போய் உயிரைக் கொடுத்து போராட மாட்டோம்

சுபாஸ் சந்திரபோஸ்.... இவரின் மரணமும் எப்படி எங்கே நடந்தது என தெரியாது....தலைவரின் நாயகர்களில் இவரும் ஒருவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6ccdbf678df1715139ca3a655d262f06

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பெற்று கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் கடமை என்று அப்பவும் இதில் வந்து எழுதுவோம் ஆனால் ஊரில் போய் உயிரைக் கொடுத்து போராட மாட்டோம்

முதலில் பத்தில் இருந்து முப்பது வரையாண நாடுகள் எம்மை அழிப்பதிற்க்கு ஓரணியில் நின்றார்களே அதற்க்குரிய காரணங்கள் விடைகள் இருக்கின்றணவா உங்களிடம்?

இந்திராகாந்தி செத்தவுடன் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆட்கள் செத்தார்களாம்,தீக்குளித்தும் செத்தவர்களாம் என்று கேள்விப்பட்டேன்.எங்கட தலைவர் இருக்கிறார்/இல்லை என்ட வாதத்திற்கு நான் வரவில்லை ஆனால் அந்த செய்தி கேட்டும் ஏன் எம்மவர்கள் ஒன்றுமே செய்யவில்லை :(
 
தலைவர் திரும்பி வருவார் சாகவில்லை என்று நினைத்தால் சரி ஆனால் ஒரு காலத்தில் தலைவர் உண்மையாக மு.வாய்க்காலில் இறந்திட்டார் எனத் தெரிந்தால் என்ன செய்வார்கள்?
 
கடவுள்களுக்கு இந்த உலகில் யாரும் தீக்குளிப்பதுமில்லை ஒப்பாரி வைச்சு செத்தவீடு கொண்டாடுவதிமில்லை ரதி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிஞ்ஞர் பா.விஜய்.

மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.