Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எல்லாரும் ஊருக்கு போகினம்..!!!

Featured Replies

Deep_Thinking_by_Wissam_Shekhani,_ink_on
 
எல்லாரும் ஊருக்கு போகினம்..!!!
நாங்கள் எப்ப ஊருக்கு போறது?
 
எல்லாருக்கும் இருக்கும் ஆசை
எங்களுக்கும் இருக்கு..!
 
கோயில் திருவிழா
தங்கையின் சாமத்திய வீடு
அண்ணாவின் கலியாணம்
எல்லாரும் போகினம்
நாங்கள் எப்ப போறது?
 
எங்கட கடற்கரை
வெண்மணல் புட்டி
கரைவலை மீன்
ஒடியல் புட்டு
லுமாலா சைக்கிள்
எல்லாருக்கும் இருக்கும் ஆசை
எங்களுக்கும் இ்ருக்கும் தானே..!
 
நெஞ்சு கனக்கும் 
நினைக்கும் போது
மனசு வலிக்கும்.
 
எல்லாரும் ஊருக்கு போகினம்
நாங்கள் எப்ப போறது?

தமிழ்ப்பொடியன்
4/06/2013

புலம்பெயர் நாட்டில்  உண்மைதான் உங்களை எங்களைப் போன்ற பலருக்கு இந்த ஏக்கம் இருக்கு. கவிதைக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகால விடுமுறை நெருங்குகின்றது.

அப்படியான நேரங்களில்  இப்படியான எண்ணங்கள்

வருவது இயல்பு.

கடத்தல் கப்பம் கோருதல் கொள்ளையடித்தல் கொலை செய்தல் போன்ற நிகழ்வுகள் 

சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு ஜன நாய் அக நாட்டிற்குச் செல்ல முன்னர் 

சற்று யோசனை செய்யவேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்

வரேக்க சிறிலங்கன் பாஸ்போட்டைக் கிழிச்சியள்.. போகேக்க.. அந்தந்த நாட்டு பாஸ்போட்டை கிழிச்சு எறிஞ்சிட்டு.. சிறீலங்கன் பாஸ்போட் எடுத்தியள் என்றால் இன்னும் நல்லா இருக்கும். ஊரோடையே இருந்திடலாம். அங்கும் இங்கும் ஓடித் திரியாமல்..! ஊர் மேல அளவு கடந்த காதல் கொண்டோர்.. ஏன் தான் ஓடி வந்தார்களோ.. தெரியல்ல..!

உதெல்லாம் உண்மையில்.. ஊர் மேல காதலில இல்ல. ஊருக்கு விடுப்புக் காட்ட....! :lol::D

இவர்கள் எல்லாம் ஓடிவந்திட்டு இப்ப மூக்கால் கண்ணீர்விடுவது ஒண்றும் ஊர்மேல்இருக்கிற பற்று இல்லை. இது ஒர் பாசன் ஆகிவிட்டது இவர்களுக்கு. தும்பளையான் விரைவில் ஊருக்குபோய் செட்டில் ஆக இருக்கிறார் என்று எழுதினார். நானும் போகப்போறன். போறதெண்டால் போகவேண்டியதுதான. போகவிருப்பமில்லாட்டி இப்பிடி கவிதை கதை எழுதி நடிக்ககூடாது. அங்கை இருக்கிற சனம் என்ன பேயர்களா?

Edited by கதாநாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் ஏக்கத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள் , நன்றாக இருக்கு .

விமர்சனங்கள்தான் கலைஞனைப் புடம் போடுவது.  மேன்மேலும்  எழுதுங்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவித வாழ்த்துக்கள். தவிர, சிங்கள ஏவற்பேய்கள் எமை வதைப்பது இன்று நேற்றல்ல, தொடர்ந்து நடப்பவைதான். இவைகளயெல்லம் தாண்டியே எமது கடந்தகால புலத்துவாழ்வு இருந்தது. இப்போது இப்படியான பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொண்டே புலத்தின் வாழ்வு. மேலும் புலம்பெயர் ஹேசமெங்கிலும் அடர்த்தியாக "நானும் ரௌடி" என நிறையவே அல்லக்கைகள் திரிகின்றன. இவைகள் தங்களுக்குத் தெரிந்த, தமிழீழம் நோக்கிய போராட்டத்தின் செவிவழிச்செய்திகளை தங்களால் நடாத்தப்பட்ட வீரப்பிரதாபங்களாக, வரலாறாக, தாம் சார்ந்திருக்கும் புலம்பெயர் நட்புவட்டத்தில் உபகதைகளாகக் கூறி தங்களது தலைக்குமேல் ஒளிவட்டம் தெரிவதாய் நினைப்புடன், கழிப்பறைவசதி, கர் வசதி, சோசல் வசதிகள் போன்றன அங்கு கிடையாது என்பதன் காரணமாய், தெரியும்தானே நான் ஊருக்குப்போனால் பிரச்சனை என வண்டில்கணக்காய் உதார் விட்டு எங்களை பேய்க்கிளாத்திகளாக்கினம். வடக்கில், முக்கால் பைசாவுக்குப் பெறுமதியில்லாத சாராயம் ஒவ்வொருநாளும் ஒருகோடிக்கு விலைபோகுதாம். இதையும்தாண்டி, முன்னாள் போராளி வாழ்வுதான் மிகவும் கவலைக்கிடம். அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு அவ்வளவு அவலங்களையும் அவர்களே தாங்கி நிற்கிறார்கள். இவர்களையும் சீர்கேடுகளுக்குள் நுழைக்க இன்னொரு கூட்டம் ஆள்தேடுது.

இயக்கப் போராளிகள் மனமொன்றி மணமாகி மகவுபெற்று. தலைவன் வீரமரணம் அடைந்து எல்லாமே அற்றுப்போன வேளையில். அவ்வபலைப்பெண்ணை, இந்தியா வரவளைத்து பிள்ளையை பறித்து நடுத்தெருவில் விட்ட மேல்சாதிகளும் புலம்பெயர் தேசத்தில் எம்மத்தியிலேயே வாழ்கின்றன.

நாய் உழைச்சகாசு குரைக்காது, அதுபோல் ஆதிக்கசாதி, கீழ்சாதிகளில் வேலைத்தளங்களில் தொழில்புரிந்தால் காசில் சாதிவாசம் வீசாது, ஆனால் அதே கீழ்சாதி படிப்பிக்கும் தமிழ்ப்பள்ளிகூடத்தில் தமது பிள்ளைகள் படிக்கக்கூடாது எனச்சொல்லும் திமிர் பிடித்தவனும் எம்மத்தியிலேயே.

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்

புலம்பெயர் நாட்டில்  உண்மைதான் உங்களை எங்களைப் போன்ற பலருக்கு இந்த ஏக்கம் இருக்கு. கவிதைக்கு நன்றி 

நன்றி யாழ் அன்பு

  • தொடங்கியவர்

கவிதையில் ஏக்கத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள் , நன்றாக இருக்கு .

விமர்சனங்கள்தான் கலைஞனைப் புடம் போடுவது.  மேன்மேலும்  எழுதுங்கள் !!

நன்றி சுவி

  • தொடங்கியவர்

நல்ல கவித வாழ்த்துக்கள். தவிர, சிங்கள ஏவற்பேய்கள் எமை வதைப்பது இன்று நேற்றல்ல, தொடர்ந்து நடப்பவைதான். இவைகளயெல்லம் தாண்டியே எமது கடந்தகால புலத்துவாழ்வு இருந்தது. இப்போது இப்படியான பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொண்டே புலத்தின் வாழ்வு. மேலும் புலம்பெயர் ஹேசமெங்கிலும் அடர்த்தியாக "நானும் ரௌடி" என நிறையவே அல்லக்கைகள் திரிகின்றன. இவைகள் தங்களுக்குத் தெரிந்த, தமிழீழம் நோக்கிய போராட்டத்தின் செவிவழிச்செய்திகளை தங்களால் நடாத்தப்பட்ட வீரப்பிரதாபங்களாக, வரலாறாக, தாம் சார்ந்திருக்கும் புலம்பெயர் நட்புவட்டத்தில் உபகதைகளாகக் கூறி தங்களது தலைக்குமேல் ஒளிவட்டம் தெரிவதாய் நினைப்புடன், கழிப்பறைவசதி, கர் வசதி, சோசல் வசதிகள் போன்றன அங்கு கிடையாது என்பதன் காரணமாய், தெரியும்தானே நான் ஊருக்குப்போனால் பிரச்சனை என வண்டில்கணக்காய் உதார் விட்டு எங்களை பேய்க்கிளாத்திகளாக்கினம். வடக்கில், முக்கால் பைசாவுக்குப் பெறுமதியில்லாத சாராயம் ஒவ்வொருநாளும் ஒருகோடிக்கு விலைபோகுதாம். இதையும்தாண்டி, முன்னாள் போராளி வாழ்வுதான் மிகவும் கவலைக்கிடம். அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு அவ்வளவு அவலங்களையும் அவர்களே தாங்கி நிற்கிறார்கள். இவர்களையும் சீர்கேடுகளுக்குள் நுழைக்க இன்னொரு கூட்டம் ஆள்தேடுது.

இயக்கப் போராளிகள் மனமொன்றி மணமாகி மகவுபெற்று. தலைவன் வீரமரணம் அடைந்து எல்லாமே அற்றுப்போன வேளையில். அவ்வபலைப்பெண்ணை, இந்தியா வரவளைத்து பிள்ளையை பறித்து நடுத்தெருவில் விட்ட மேல்சாதிகளும் புலம்பெயர் தேசத்தில் எம்மத்தியிலேயே வாழ்கின்றன.

நாய் உழைச்சகாசு குரைக்காது, அதுபோல் ஆதிக்கசாதி, கீழ்சாதிகளில் வேலைத்தளங்களில் தொழில்புரிந்தால் காசில் சாதிவாசம் வீசாது, ஆனால் அதே கீழ்சாதி படிப்பிக்கும் தமிழ்ப்பள்ளிகூடத்தில் தமது பிள்ளைகள் படிக்கக்கூடாது எனச்சொல்லும் திமிர் பிடித்தவனும் எம்மத்தியிலேயே.

எழுஞாயிறு நன்றிகள்

உங்களின் எல்லா கருத்துக்களையும் 100% ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இருப்பினும் நிறைய விடயங்கள் யாதார்த்தமானவை.

விடுதலைப்போராட்டத்தில் வால் பிடித்த,வாய்ச்சவடால் பூனைகள் பல இப்போது புலம்பெயர் தேசம் எங்கும் கனக்க உலாவுதுகள்.”நாட்டில் இருந்து வந்தவை” எண்ட பேரில சிலர் “உவகதைகளை” சொல்லி இங்க கனபெரை “பேமானி”களாக ஆக்குகிறார்கள்.என்ன பிரச்சினை எண்டால் இந்த “பூனைகள்” அச்சொட்டாய் “புலிகள்” மாதிரி இருப்பதே காரணம்.

இந்த வாய்ச்சவடால் பேர்வழிகள் கனபேர் இப்ப “ஊருக்கு” போய் அங்க “பப்பரப்பா” காட்டி விட்டு வருகினம்.

”எப்பிடி?” எண்டு கேட்டால் “அதெல்லாம் அரசியல் விளையாட்டு” எண்டுகினம்.

ஒண்டுமே புரியலப்பா....!!!

இதயபூர்வமாய் மண்ணையும் மக்களையும் நேசித்த கனபேர் புலம்பெயர் தேசங்களில இருக்கினம்.

விடுதலைப்போராட்டத்தினை பற்றி பேசும் போது கண்களில் நீர் கசிய கனத்த மனதோடு பேசும் நிறைய “மாமனிதர்கள்” கனபேரை கண்டிருக்கிறேன்.அவர்களின் கண்ணீரில் ஒரு துளி கூட கலப்படம் இல்லை.

தாய் தந்தை இறந்த போதும் அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் நான்கு சுவருக்குள் இருந்து அழுது தங்களின் சோகத்தினை தீர்த்தவர்கள் சிலரையும் நான் கண்டிருக்கிறேன்.

இவர்களை மனதில் வைத்தே கவிதை எழுதினேன்.

வெறும் “பீலா” விடும் “பம்மாத்து” பூனைகளையோ இல்லை “நாட்டில் இருந்து “ வந்ததாய் வாய்ச்சவடால் எலிகளையோ நினைத்து எழுதவில்லை.

முக்கிய குறிப்பு: உண்மையான விடுதலைப்போராளி எப்போதும் தான் “ போராளி” என்று     அடையாளப்படுத்தமாட்டான்.அப்படி “பீலா” விட்டு உவகதைகள் சொல்லும் எந்த “எலிகளும்” புலிகளாக இருக்க முடியாது..இது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் எழுதப்படாத இலக்கணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் முந்தானையிலிருந்து,

அவிழ்த்துத் தந்த ஐம்பது சதம்!

அள்ளித் தந்த சந்தோசத்தை,,

ஆயிரம் அமெரிக்க டொலர்களில்,

இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்!

வெறும் வறுத்த கச்சான் தான்! 

ஆனாலும் திகட்டவில்லை! 

ஏனென்று தெரியுமா?

அது என் மண்ணில் விளைந்தது!

கவிதைக்கு நன்றிகள், தமிழ்ப்பொடியன்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

அம்மாவின் முந்தானையிலிருந்து,

அவிழ்த்துத் தந்த ஐம்பது சதம்!

அள்ளித் தந்த சந்தோசத்தை,,

ஆயிரம் அமெரிக்க டொலர்களில்,

இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்!

வெறும் வறுத்த கச்சான் தான்! 

ஆனாலும் திகட்டவில்லை! 

ஏனென்று தெரியுமா?

அது என் மண்ணில் விளைந்தது!

கவிதைக்கு நன்றிகள், தமிழ்ப்பொடியன்!

அருமை புங்கையூரான்

உங்களின் வரிகளையும் என் கவிதைக்குள் சேர்த்தால் நன்றாக இருக்கும் எண்டு நினைக்கிறன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை தமிழ்ப்பொடியன் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.

புங்கையண்ணாவின் கவிதையும் சூப்பர். :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஊருக்கு போகினம்..!!!
நாங்கள் எப்ப ஊருக்கு போறது?

தமிழ்ப்பொடியன்

4/06/2013

எல்லாத்தமிழரும்

எமது மண்

எமக்கு வேண்டும் 

என்ற முடிவெடுத்து

எழும்பினால்...........

எல்லோரும் போகலாம்

எப்பவும் போகலாம்

எதற்கும் போகலாம்

எங்கும் போகலாம்

நன்றி கவிதை வலிகளுக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான எளிமையான கவிதை நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி 

  • தொடங்கியவர்

அருமை தமிழ்ப்பொடியன் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.

புங்கையண்ணாவின் கவிதையும் சூப்பர். :)

நன்றி ஜீவா

கவிதைக்கு நன்றி 

நன்றி உடையார்

இயல்பான எளிமையான கவிதை நன்றாக உள்ளது.

நன்றி 

எல்லாத்தமிழரும்

எமது மண்

எமக்கு வேண்டும் 

என்ற முடிவெடுத்து

எழும்பினால்...........

எல்லோரும் போகலாம்

எப்பவும் போகலாம்

எதற்கும் போகலாம்

எங்கும் போகலாம்

நன்றி கவிதை வலிகளுக்கு.....

நன்றி அண்ணா

எங்களுக்கும் ஆசைதான்

எப்பவும் போக

எதற்கும் போக

எங்கும் போக

எல்லாரும் போக....!!!

இயல்பான நடையில் கவிதை. வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு வலிக்கும் கவிதை 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஊருக்குப் போகவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், இப்படிக் கவிதைகளைக் கண்டவுடன் அதற்கு வரும் பின்னூட்டங்களைப் பார்த்தால் போக மனம் வருவதில்லை.

இன்னும் 40 வருடத்திற்குப் பின்னர் போகலாம் என்று நினைத்திருக்கின்றேன். அப்போதும் பனை இருக்கும்தானே! ஏனென்றால் பனங்கள்ளை வாழ்நாளில் வாயில் வைத்ததில்லை. நல்ல பங்குனி வெயிலில் பனங்கள்ளு அடித்தால் "அந்த மாதிரித் தூக்கும்" என்று மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 ஏனென்றால் பனங்கள்ளை வாழ்நாளில் வாயில் வைத்ததில்லை. நல்ல பங்குனி வெயிலில் பனங்கள்ளு அடித்தால் "அந்த மாதிரித் தூக்கும்" என்று மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கின்றேன்.

கள்ளெல்லாம்  கள்ளல்ல

பனையின் கீழ் காத்திருந்து பருகும் 

உடன்கள்ளே  கள்ளு  :D  

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஊருக்குப் போகவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், இப்படிக் கவிதைகளைக் கண்டவுடன் அதற்கு வரும் பின்னூட்டங்களைப் பார்த்தால் போக மனம் வருவதில்லை.

இன்னும் 40 வருடத்திற்குப் பின்னர் போகலாம் என்று நினைத்திருக்கின்றேன். அப்போதும் பனை இருக்கும்தானே! ஏனென்றால் பனங்கள்ளை வாழ்நாளில் வாயில் வைத்ததில்லை. நல்ல பங்குனி வெயிலில் பனங்கள்ளு அடித்தால் "அந்த மாதிரித் தூக்கும்" என்று மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கின்றேன்.

கிருபன், வலு சிம்பிளாத் 'தூக்கும்' எண்டு உங்களுக்குப் பிழையாச் சொல்லிப்போட்டினம்!

அது தான், 'ஞானிகள்' தேடும் பரவச நிலை! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.புலம்பெயர் ஹேசமெங்கிலும் அடர்த்தியாக "நானும் ரௌடி" என நிறையவே அல்லக்கைகள் திரிகின்றன. இவைகள் தங்களுக்குத் தெரிந்த, தமிழீழம் நோக்கிய போராட்டத்தின் செவிவழிச்செய்திகளை தங்களால் நடாத்தப்பட்ட வீரப்பிரதாபங்களாக, வரலாறாக, தாம் சார்ந்திருக்கும் புலம்பெயர் நட்புவட்டத்தில் உபகதைகளாகக் கூறி தங்களது தலைக்குமேல் ஒளிவட்டம் தெரிவதாய் நினைப்புடன், கழிப்பறைவசதி, கர் வசதி, சோசல் வசதிகள் போன்றன அங்கு கிடையாது என்பதன் காரணமாய், தெரியும்தானே நான் ஊருக்குப்போனால் பிரச்சனை என வண்டில்கணக்காய் உதார் விட்டு எங்களை பேய்க்கிளாத்திகளாக்கினம்.

2.இயக்கப் போராளிகள் மனமொன்றி மணமாகி மகவுபெற்று. தலைவன் வீரமரணம் அடைந்து எல்லாமே அற்றுப்போன வேளையில். அவ்வபலைப்பெண்ணை, இந்தியா வரவளைத்து பிள்ளையை பறித்து நடுத்தெருவில் விட்ட மேல்சாதிகளும் புலம்பெயர் தேசத்தில் எம்மத்தியிலேயே வாழ்கின்றன.

1.

இப்படி சொல்லித்திரிகிற அல்லக்கைகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா?  நீங்கள் சொல்லுகிறீர்களா, போராடத்தில நேரடியாக பாதிக்கபட்டவர்கள்தான் இங்கே அதிகம் ஓடிவந்து இருக்கிறார்கள் என்றோ  அல்லது போரில் நேரடியாக ஈடுபட்டவர்கள்தான் அதிகம் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று?

போகப்போறம் என்று  சொல்லுபவர்களையும் போகிறவர்களை விடுவோம், இங்கே இருந்து ஈழம் எடுப்பம் என்று சொல்லுகிற வெங்காயங்களை என்ன சொல்லாம்? சண்டை தொடங்க முதல் ஓடிவந்தவர்கள் அவர்கள்தான், அதிகமானவர்களுக்கு உந்த "செவிவழி" கதைகள் கூட தெரியாது. சண்டை (பெரிதாக) தொடங்க முதல் ஓடி வந்து போட்டு வந்து புலி அடிக்கிறான் என்று அசைலம் அடித்ததுதான் முதல் செய்த வேலை. அந்த காலத்தில (?)புதுவையின் பாட்டு இருக்கிறது,

"பொங்கும் கடலும் பொழியும் நிலவும் உங்கள் கதை சொல்லும்...எங்கள் மனதில் எழுந்து நிற்கும் மாவீரர் கதை சொல்லும்...

 எங்கள் நாட்டின் இளைஞர் கூட்டம் வேற்று நாட்டினில் அலைகையிலே சொந்த மண்ணின்  போரில் மடிந்த மழலை வீரர் கதை சொல்லும்"

இங்கே இருபவர்களுக்கு  சிங்கள நண்பர்கள் இருப்பார்கள், அவர்களுடன் சேர்ந்து சிங்களவர்களுக்கு உதவுவார்கள், அவர்களுடைய உறவினர்கள், வீடுக்காரர் இலங்கை போய்வருவார்கள்.  ஆனால் ?2 டொலருக்கு  லெமன் பாப் வாங்கினால் சிங்கள பொருளதரத்திக்கு முண்டு கொடுக்கிறாய் என்று கணக்கு காட்டுவார்கள்.

உன்னால் எது செய்யமுடியுமோ அதை செய்வதுதான் இப்ப செய்யக்கூடியது. நன்றி வணக்கம்..

2வது விளங்கவில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.