Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் பிச்சைக்காரருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மாளிகை. நீதிபதி அதிர்ச்சி.

Featured Replies

லண்டனில் தினசரி பிச்சையெடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்து அவர் பிச்சையெடுக்க தடை போட்டது லண்டன் நீதிமன்றம்.

லண்டனில்  Natwest bank வங்கியின் முன் தினசரி   Simon Wright என்ற 37 வயது பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.

அவருக்கு தினசரி  £300 வரை வருமானம் வந்தது. அவர் கிழிந்த அழுக்கு உடையுடன் அருகில் நாய் ஒன்றையும் உட்கார வைத்து கொண்டு பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.

ஆனால் மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தை காலி செய்து விட்டு, Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார்.

அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு மாளிகை வீடு இருப்பதை அறிந்த ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

மிகவும் வசதியாக இருந்து கொண்டு பொதுமக்களிடம் பொய்கூறி பிச்சையெடுக்கும் இவரை உடனே அகற்ற வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி  Simon Wright பிச்சையெடுக்க தடை விதித்தார்.

இந்த சம்பவத்தால் லண்டனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.thedipaar.com/new/news/news.php?id=61536

resize_20130605192946.jpgresize_20130605193033.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகல் முழுக்க பிச்சை வேஷம் போட்டு, வீதியில் இருந்து பிச்சை எடுத்து போட்டு  மாலையில் மாளிகையில் இருந்தென்ன பலன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ராசியான வங்கி போல இருக்கு (அட்ரஸ் ஜ ஒருக்கா அனுப்பி விடுங்கப்பா )

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் தொழிலை மாத்தலாமோ எண்டிருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ராசியான வங்கி போல இருக்கு (அட்ரஸ் ஜ ஒருக்கா அனுப்பி விடுங்கப்பா )

வங்கியில ஒண்டுமில்ல

ஏரியாவிலதான் விசயமிருக்கு........

தொழில் ரகசியங்களுக்கு காசு வாங்கப்படும் :D

பேசாமல் தொழிலை மாத்தலாமோ எண்டிருக்கு.. :D

ஏன் ராசா

இப்ப போற  இடத்தில் வேலை செய்கின்ற மாதிரி இருக்கு கேள்வி???? :lol:  :D  :D  :D

பிச்சை  எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான தொழில் கிடையாது

முதுகு வலிக்கு பதில் சொல்லணும் ராசா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுப்பதென்றாலும்   பிச்சை   எடுப்பவர்களுக்கு அனுமதிப்பத்திரம்

வழங்க வேண்டும்  அத்துடன் மருத்துவர்  சான்றிதழும்  கொடுக்க வேண்டும்

எனப் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்  :D    

  • கருத்துக்கள உறவுகள்
மாளிகை இருக்குது என்பதற்காக அன்றாடம் வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா :) ...யாராவது நல்லாய் இருக்கட்டும் என்று விடாமல் அந்தாளை காட்டிக் கொடுத்து,அவர் மீது வழக்குப் போட்டவர் ஒரு எரிச்சல் பிடிச்ச ஆளாய்த் தான் இருப்பர் :rolleyes:  யாழில் உள்ள சிலர் போல  ^_^
 
இப்படியான சுத்துமாத்துப் பேர்வழிகளைப் போட்டுக் கொடுப்பதில் என்ன பொறாமை?

நாங்களே கஸ்ரப்பட்டு உழைக்கின்றோம். எங்கள் உழைப்பில் இப்படியானவர்கள் குளிர்காய விடக்கூடாது.

அது சரி யாழிலை ஆரோடை உங்களுக்குக் கோவம் :D

இப்ப அண்ணைமார்  வேட்டி மடிச்சு கட்டி கொண்டு வரப்போகினம். யார்  என்ரை தங்கச்சியை காட்டி கொடுத்தது என்று. தப்பி ஓடுங்கோ தம்பிமாரே ! :D 

பிரான்சிலும் பொய்யாக பிச்சை எடுப்பவர்கள் அதிகம். ரொமேனியா பெண்கள் சிலர் பொம்மையை துணியால் சுற்றி வைத்து உண்மை பிள்ளை போல் சொல்லி பிச்சை கேட்பார்கள். இத்தனைக்கும் பொம்மையின் முகமும் துணியால் சுற்றப்பட்டிருக்கும். காசு கொடுப்பவர்கள் கவனித்து கொடுப்பதில்லை.

இவர்கள் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள். பிள்ளைகளுக்கும் அதையே பழக்குகிறார்கள்.

ஆனால் இவர்களுக்கென்று முகவரி இல்லாமல் வீதி வழியே குடியிருப்பதால் இவர்களை நம்பி யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்பதும் உண்மை. களவெடுத்துக்கொண்டு சென்றால் தேடிப்பிடிக்க முடியாது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் பொய்யாக பிச்சை எடுப்பவர்கள் அதிகம். ரொமேனியா பெண்கள் சிலர் பொம்மையை துணியால் சுற்றி வைத்து உண்மை பிள்ளை போல் சொல்லி பிச்சை கேட்பார்கள். இத்தனைக்கும் முகமும் துணியால் சுற்றப்பட்டிருக்கும். காசு கொடுப்பவர்கள் கவனித்து கொடுப்பதில்லை.

இவர்கள் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள். பிள்ளைகளுக்கும் அதையே பழக்குகிறார்கள்.

ஆனால் இவர்களுக்கென்று முகவரி இல்லாமல் வீதி வழியே குடியிருப்பதால் இவர்களை நம்பி யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்பதும் உண்மை. களவெடுத்துக்கொண்டு சென்றால் தேடிப்பிடிக்க முடியாது.

என்ன  துளசி

உங்களிடமும் அடித்து விட்டார்களா???? :o

நான் எத்தனை துவிச்சக்கரவண்டிகளை . சில வருடங்களுக்கு முன் இழந்தேன் என்று எனக்கே தெரியாது ............................... :(  :rolleyes:  :) 

என்ன  துளசி

உங்களிடமும் அடித்து விட்டார்களா???? :o

இல்லை, காசு கொடுத்தால் வேலைக்கு செல்ல மாட்டார்கள், பிச்சை எடுப்பதையே தொழிலாக்கி விடுவார்கள் என்பதால் நான் வெளிநாடுகளில் பிச்சை கேட்கும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காசு கொடுப்பதில்லை.  ஆனால் மற்றவர்கள் கொடுப்பதை அவதானித்துள்ளேன்.

யாரும் கை, கால் இல்லாதவர்களை கண்டால் சிலவேளை காசு கொடுப்பேன்.

Edited by துளசி

யாழுக்கு தனி அகாராதி வேண்டும். காட்டிகொடுப்பது என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று எங்கேயாவது விபரிக்கப்பட்டிருக்கா? கருணா தமிழர்களை காட்டிக்கொடுத்து பிழைக்கிறாரா அல்லது கருணாவின் பிழைப்பை அம்பலபடுத்துபவர்கள் காட்டிகொடுப்பவர்களா?

இப்படித்தான்  வாழணும்

எப்படியும் வாழலாம்

இதில் எது சரி?

எது வேண்டும்?

வேண்டும் என்று சொன்னால் எமக்கா? சமூகத்துக்கா?

எனக்கு என்று சொன்னால் சமூகத்தில் என் பங்கு என்ன?

இதில் எதுவுமே வேண்டாம் என்பவன்

எதை எடுத்தாலென்ன?

எதை விற்றாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சுத்துமாத்துப் பேர்வழிகளைப் போட்டுக் கொடுப்பதில் என்ன பொறாமை?

நாங்களே கஸ்ரப்பட்டு உழைக்கின்றோம். எங்கள் உழைப்பில் இப்படியானவர்கள் குளிர்காய விடக்கூடாது.

அது சரி யாழிலை ஆரோடை உங்களுக்குக் கோவம் :D

பிச்சை எடுப்பது அவரின்ட தொழில்.அவருக்கு வருமானத்தை கொடுக்க எனக்கு விருப்பமில்லா விட்டால் நான் பிச்சை போடாமல் இருந்திருப்பேன் அதை விட்டுட்டு அவருடைய தொழிலை காட்டி கொடுக்க மாட்டேன்.
 
யாழில எல்லோரும் சொக்கத் தங்கம் என்டா நினைக்கிறீங்கள் <_< 

இப்ப அண்ணைமார்  வேட்டி மடிச்சு கட்டி கொண்டு வரப்போகினம். யார்  என்ரை தங்கச்சியை காட்டி கொடுத்தது என்று. தப்பி ஓடுங்கோ தம்பிமாரே ! :D 

என்ட அண்ணமாருக்கு நீங்கள் எழுதினது கண்ணிலே படேல்ல போல இருக்கு :)  பட்டுது என்ட தங்கச்சியையாட :lol: பிச்சைக்காரி என்று சொன்னாய் என்று அடிக்க வந்திருப்பாங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

-----

லண்டனில்  Natwest bank வங்கியின் முன் தினசரி   Simon Wright என்ற 37 வயது பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.

அவருக்கு தினசரி  £300 வரை வருமானம் வந்தது. அவர் கிழிந்த அழுக்கு உடையுடன் அருகில் நாய் ஒன்றையும் உட்கார வைத்து கொண்டு பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.

ஆனால் மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தை காலி செய்து விட்டு, Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார்.

அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு மாளிகை வீடு இருப்பதை அறிந்த ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

-------

resize_20130605192946.jpgresize_20130605193033.jpg

பகல் முழுக்க... லண்டன் குளிர் காத்துக்குள் அவர், பிச்சை எடுக்கின்ற முயற்சிக்கு வாழ்த்துங்கள்.

உங்களால்... குளிருக்குள், எத்தனை மணித்தியாலம்.. பக்கத்திலை நாயை.. வேறை வைத்துக் கொண்டு, சும்மா... இருப்பீர்கள்.

கை, கால் எல்லாம்... விறைச்சுப் போயிடும்.

அவ‌ருடைய‌, முக‌த்தில்... 37 வய‌து உள்ள‌வ‌ர் மாதிரி தெரிகிற‌தா?

பாவ‌ம்... அவ‌ர், குளிருக்குள் இருந்து க‌டுமையாக‌ வேலை செய்த‌ ப‌டியால்...

67 வ‌ய‌து கிழ‌வ‌ன் மாதிரி இருக்கிறார். :D

அவ‌ர்.. மண்டையை... போட்ட‌வுட‌ன், அர‌சாங்க‌த்துக்குச் சேரும் சொத்துத் தான்... அவ‌ரின் மாட‌ மாளிகை. :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுப்பது அவரின்ட தொழில்.அவருக்கு வருமானத்தை கொடுக்க எனக்கு விருப்பமில்லா விட்டால் நான் பிச்சை போடாமல் இருந்திருப்பேன் அதை விட்டுட்டு அவருடைய தொழிலை காட்டி கொடுக்க மாட்டேன்.
 
பிச்சை எடுப்பது அவரது தொழிலானால் வருமான வரி ஏய்ப்பு வழக்கிலும் 

சிக்கும் அபாயம் இருக்கின்றது.

மக்களை மட்டுமல்லாமல் அரசாங்கத்தையும் முட்டாளாக்க நினைத்த இவருக்குத் 

தகுந்த தண்டனை வழங்க வேண்டும்  மை லார்ட் :D

பிச்சை எடுப்பது அவரின்ட தொழில்.அவருக்கு வருமானத்தை கொடுக்க எனக்கு விருப்பமில்லா விட்டால் நான் பிச்சை போடாமல் இருந்திருப்பேன் அதை விட்டுட்டு அவருடைய தொழிலை காட்டி கொடுக்க மாட்டேன்.
 
யாழில எல்லோரும் சொக்கத் தங்கம் என்டா நினைக்கிறீங்கள் <_< 

என்ட அண்ணமாருக்கு நீங்கள் எழுதினது கண்ணிலே படேல்ல போல இருக்கு :)  பட்டுது என்ட தங்கச்சியையாட :lol: பிச்சைக்காரி என்று சொன்னாய் என்று அடிக்க வந்திருப்பாங்கள் :rolleyes:

இப்படி அண்ணன்மாரிடம் காட்டி கொடுத்து விட்டீங்களே அம்மணி ! h24040.gif

:lol:

£300,000  பணத்துக்கு வாங்க கூடிய 'மாளிகை' லண்டனில் எங்குள்ளது என்று தயவு செய்து அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

£300,000  பணத்துக்கு வாங்க கூடிய 'மாளிகை' லண்டனில் எங்குள்ளது என்று தயவு செய்து அறியத்தரவும்.

comfortable flat in Fulham

http://www.standard.co.uk/news/crime/beggar-who-earned-50000ayear-and-lives-in-300000-fulham-flat-is-arrested-again-8646973.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.