Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சின்ன சின்ன ஞாபகங்கள்

Featured Replies

:( ம்....... :(  தொடருங்கள் லியோ.

 

 

  • Replies 148
  • Views 11k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்ணூற்றி ஓராம் ஆண்டு ஆனையிறவு சண்டை முடிய அண்ணை

யாழ்ப்பாணத்தில உள்ள சாளி ( நல்லூர்)முகாமில எங்களை சந்தித்து கதைத்தார்.அது எங்களுக்கான பொதுச்சந்திப்பாய் இருந்தது.அப்போது

கதைக்கும் போது அண்ணை சொன்னார்.நாடு கிடைச்சால் நான் ஊனமுற்ற போராளிகள் மக்களை பார்க்கிறதுதான் என்னுடைய கடமையாய்

இருக்கும்.நாடு கிடைச்சால் நாங்கள் வேகமாய் முன்னேறிவிடுவம் ஏனென்றால் எங்களிட்ட ஊழல் இருக்காது. அந்த எண்ணமே இறுதிவரை அவரிடம் இருந்தது.

 அண்ணை தன்னளவில் என்றும் எளிமையாய் இருந்தார்.காலத்தோடு அவரின் எளிமை துளி கூட மாறவில்லை.யாராவது ஏதாவது பொருட்களை அவருக்கு கொடுத்தால்,இந்தப்பொருள் யாருக்கு நல்லா இருக்கும் என்று ஊகித்து அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அவர் எப்போதும் போலவே மரக்கட்டிலில் புல்லுப்பாயை விரித்து கைகளை தலைக்குக்கீழ் வைத்து நித்திரை கொள்ளுவார்(தலை அணை பாவிப்பதில்லை).

அவரிடம் கேட்டால் சொல்லுவார் எழுபதுகளில் ஓடித்திரியும் காலங்களில்

வயல்வெளிகளிலும் ,தோட்டங்களிலும் இப்படி படுத்து பழகிவிட்டதென்று.

 

ஒரு நாள் காலை ஏழரை மணிக்கு பாலதாஸ்,நிதிப்பொறுப்பாளர் தமிழீழம்

அவர்கள் என்னை கிளிநொச்சியில் சந்திப்பதாய் முதல் நாளே தெரியப்படுத்தியிருந்தார்.அன்று காலை சரியாக ஏழரைக்கு வந்தார்.

முகமெல்லாம் நித்திரை இல்லாதது பளிச்சென்று தெரிந்தது.என்ன என்று வினவினேன் . அவர் சொன்னார்  தான் முதல் நாள் இரவு மன்னாரில் இருந்து வந்து இரவு மூன்று மணிக்கு அண்ணையை சந்தித்ததாயும்,சந்திப்பு முடிய தான் புதுக்குடியிருப்பு போய் விடிய இங்கு வர இருந்ததாகவும் , அண்ணை சொல்லிச்சாம் நீர் சரியாய் நித்திரை தூங்குகிறீர் கிளிநொச்சியிலேயே ஒரு முகாமை சொல்லி அங்க படுத்திட்டு விடிய போகச்சொன்னாராம்.  நாலு மணிக்கு போய் படுத்ததென்றும் ஐந்து மணிக்கு ஒருத்தன் வந்து எழுப்பினானாம் அண்ணை சொன்னதென்று ,சிங்கன் உங்கதான் படுத்திருக்கிறார் போய் அமத்து என்று,பிறகு என்ன நித்திரை என்று சிரித்த

பாலதாஸ், அண்ணை எனக்குப்பிறகும் ஒராளை சந்திச்சிருக்கிறார் அண்ணை பாவம் என்றுது.

கிட்டண்ணை இறந்த நேரம் அண்ணை மலசல கூடத்திற்குள் இருந்து விக்கி விக்கி அழுததாய் அப்போது அண்ணையின் பாதுகாப்பில் இருந்த போராளி எனக்கு சொல்லியிருந்தான்.தமிழ்ச்செல்வனின்  வீரச்சாவின் போது அவரின் கண்களில் இருந்து கண்ணீர் ஒழுகியதை கண்டேன்.

      

 

ஓவியன்

Edited by லியோ

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ.. :(

.. லியோ அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ லியோ

தொடருங்கோ லியோ!


:(  :(

தொடருங்கள் லியோ.. :(

.. லியோ அண்ணா..

 

 

இசை, லியோ உங்களை விட 2 வயது குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

இசை, லியோ உங்களை விட 2 வயது குறைவு.

 

தகவலுக்கு நன்றி அலையக்கா.. என்னைப் பற்றியும் றெக்கீ எடுத்திருக்கிறீங்கள்.. :D திலீபன் காலத்தில் நான் சிறுவன் என்பதால் அப்படி ஒரு கருத்தை எடுக்க நேர்ந்தது.. :D

தொடர்ந்து பகிருங்கள் லியோ ......தொடர்ந்து வாசித்து வருகின்றேன்! .

போராட்டக் களங்களில் இருந்த ஒவ்வொருவருக்கும் பின்னாலும் ஆயிரமாயிரம் நிஜமான கதைகள் இருக்கும்.

அனைத்தையும் பிறழ்வின்றி அப்படியே ஆவணமாக்குங்கள். மிகவும் அவசியமான பதிவு இது. மிக்க நனறி லியோ! :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ..

.. லியோ அண்ணா..

தொடருங்கோ---
இப்படிக்கு உங்களால் வாழ்பவன் 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்களால் தமிழினம் மீண்டும் சரியான பாதையில்

செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

தொடர்ந்து செல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு சம்பவங்களையும், நினைவில் வைத்து அழகாக எழுதுகின்றீர்கள் லியோ.
சில விடயங்களை வாசிக்கும் போது.... சம்பவ இடத்தில் நாமும் நிற்பது போன்ற... தோற்றம் ஏற்படுகின்றது.
தொடருங்கள்... லியோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை யார் கதைத்தாலும் அதற்கு முக்கியத்துவப்படுத்தி செவிசாய்ப்பார்.இளைய போராளிகள் சில நேரம் கதைக்கிறதை கேட்கிறதே எங்களுக்கு கஸ்டமாய் இருக்கும் ஆனால் அதற்கு அண்ணை

விலாவாரியாய் விளங்கப்படுத்துவார்.தெரியாத விடயங்களை எவரிடமிருந்தாலும் கேட்டு அறிந்து கொள்ளுவார்.  புலிகள் மிகவும் நல்ல நிர்வாகத்தை நடத்த வேண்டும் என உளம் நிறைய விரும்பியிருந்தார். அவருடைய எதிர்பார்ப்பை ஓரளவுதான் நடைமுறையில் பூர்த்தி செய்யக்கூடியதாய் இருந்தது.தங்களுடைய   சரிகளையும்,பிழைகளையும் ஏற்றுக்கொண்டு,பிழைகளை திருத்தவேணும் என்று சதா சந்திப்புகளில் சொல்லிக்கொண்டு இருப்பார்.

அண்ணையின் பாதுகாப்புகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் பாதுகாப்பு அணியில் உள்ள போராளிகளுக்கு மழை உடுப்பு வாங்கிக்கொடுக்கும் படி அண்ணை சொல்லியிருந்தது.பொறுப்பாளர் வேலைப்பளுக்களுக்கிடையில் 

மறந்துவிட்டார்.அண்ணை கிளிநொச்சியில் இருந்து தன் முகாம் திரும்பிக்கொண்டு இருந்தபோது பாதுகாப்பு  அணியை சேர்ந்த சில போராளிகள் நனைந்து போவதை கண்டுவிட்டார். பொறுப்பாளர்  தோப்புக்கரணம் அடித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த புதிது ,ஏரியா அரசியல் பொறுப்பாளர் ஒருவர் மீது ஒரு குடும்பம் குற்றம்  ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது.அந்த பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்ச்செல்வனை நான் சந்திக்கப்போயிருந்த நேரம் அவர் அந்த குடும்பத்தை சந்திக்க வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார்.என்னையும் வாங்கோவன் என்றார்.அந்த வீட்டை போனோம் அந்த வீட்டின் தலைவனும் தலைவியும்தான் இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் அந்த விடயத்தை சொல்லி ,எங்களை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கோ என்றார் .அந்த தாயும் தந்தையும் அழத்தொடங்கிவிட்டார்கள் .கடவுளே நீங்கள் அதுக்கு மன்னிப்பு கேட்ககூடாது.நீங்கள் என்னப்பா பிழைசெய்தனீங்கள்.பிரயத்தனப்பட்டு எல்லாவற்றையும் சமாளித்து வெளிக்கிட்டோம். சும்மா வெளிக்கிடுவமே பலாப்பழம் சாப்பிட்டுட்டுத்தான் . 

ஓவியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகச் சிறுக எல்லாமே சரியாக நடக்க வேணுமெண்டதில் சரிபிழைகளைத் திருத்தி நடந்த அந்த நிர்வாகத்தை இனி உலகம் எங்கும் காண முடியாது லியோ அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவலோடு ...

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நெருடும் பதிவுகள், தொடருங்கள் லியோ

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கத்தூண்டும் பதிவுகள்.. நன்றிகள்..

தொடருங்கள் அண்ணா  உங்கள் பதிவுகள் எதையுமே தவற விடுறேல்ல...   நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்

லியோ தொடருங்கள்

 

தொடருங்கள் லியோ, வாசிக்க மிக ஆவல்! கூடவாய் எழுதுங்கோ உங்களுக்குச் சுலபம் எங்களுக்கும் ................ :D

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்ன ஞாபகங்கள்  சின்ன சின்னதாகவே தொடரட்டும் . அதுதான் அழகாய் இருக்கின்றது லியோ !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருகை தந்து ஊக்கப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் 


வசந்தன் மாஸ்டர் ஒரு சிறந்த பயிற்சி ஆசிரியர்.கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவர்.தற்காப்பு கலையில் கிட்டத்தட்ட பைத்தியம்தான் அவருக்கு.எவ்வளவு விடயங்களை அவர் அதில் பயின்று வைத்திருந்தார். தான் கற்ற விடயங்களை இளம்போராளிகளுக்கு பயிற்றுவிப்பதில் அவருக்கு அலாதி பிரியம். வசந்தன் என்றவுடன் மனதில் படிகிறது அந்த கள்ளமில்லா வெண்சிரிப்பு, எங்கு கண்டாலும் நின்று கதைத்துப்போகும் தோழமை.

அவன் இறுதியுத்த காலத்தில் தலைமைச் செயலகத்தில் ஆயுதப்பொருட்களின் சேமித்து விநியோகத்திற்கு பொறுப்பாய்இருந்தான்.

இறுதி யுத்த நேரத்தில் ஆயுத வழங்கலை சர்வதேசம் தடுத்ததால் எமது கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டது.இருந்த ஆயுதப்பொருட்களை மிகக் கஸ்டப்பட்டு சேமித்து விநியோகித்தான். அந்த இறுதிநாட்களில் ஒரு நாள் அவனது ஒரு வாகனம் நிரம்பிய ஆயுதப்பொருட்களில் எதிரியின்  துப்பாக்கி சன்னம் பட்டு சிறிது எரியத்தொடங்கியது.முழுதும் எரிந்து முடியும் முதல் இயன்ற அளவு பொருட்களை இறக்க வசந்தன் முயன்று கொண்டிருந்தான். மற்றயவர்கள் கத்தினார்கள் வசந்தன்னை உது வெடிக்கும் இறங்குங்கோ.எனக்கு தெரியும் இது வெடிக்கும் ஆனால் அதுக்கிடையில இறக்கிறதை இறக்கிறன். அவன் ஓரளவை இறக்கிப்போடும்போது அது வெடித்துச் சிதறியது.அந்த சிறு எரிமலையை சற்று தொலைவில் இருந்து நாங்களும் பார்த்தோம்,எங்களுடைய வசந்தனும் சிதறி எரிவதை தெரியாமல். நேற்றுப்பின்னேரம்தான்இடுப்பில் கட்டிய பிஸ்டலுமாய் வந்து நின்று கதைத்துப்போனான் நாட்கள் எண்ணப்படுகின்றன,யார் முந்துறமோ தெரியாது?.

 

லோலோ,தமீழீழ சுகாதாரசேவைகளின் தொற்று நோய்த்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தான்.இவ்வளவு இடம்பெயர்வுகளுக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் வராமல் காத்ததில் இவனது  உழைப்பு இருந்தது.எப்போதும் மக்களுக்கு தொற்று நோய்கள் வந்தாலும் என்று ஒரு பொதி மருந்தை களஞ்சியப்படுத்தி வந்தான்.அந்த மருந்து பயன்படுத்தாமலே இருந்தது.இறுதி நாட்களில் ஒரு முன்னிரவு எதிரியின் பொஸ்பரஸ் குண்டுக்கு அவன் காயப்படும் போது,அந்த மருந்துகளும் எரிந்துவிட்டன. அவன் காயப்பட்டு ,பின் வீரச்சாவு அடையும்வரை தொற்று நோய்கள் ஏதாவது வந்ததா?என்றே வினவிக்கொண்டிருந்தான்.

 

ஓவியன்

  • கருத்துக்கள உறவுகள்

 தொடருங்கோ....லியோ

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மீதும் போராட்டம் மீதும் எவளவு பற்று இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது பெருமையே..... இப்பிடியான போராளிகளின் வாழ்வு வரலாறு நினைவுகூரப்பட வேண்டியவை இன்னும் எழுதுங்கள் அண்ணா....

  • கருத்துக்கள உறவுகள்

வரும் சந்ததிகளுக்கு ஒரு எதிர்காலம் கிடைக்க, தமது நிகழ்காலத்தை வழங்கியவர்களின் கதைகள்.. பகிர்வுக்கு நன்றி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.