Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால்பந்து: தமிழீழம் - சீ லாண்ட் போட்டியில் தமிழீழம் வெற்றி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1001615_668844653130527_171027366_n.jpg

 

65020_618928731459881_1427003152_n.jpg

 

945692_618951154790972_1680056752_n.jpg

 

1044233_618980921454662_865087202_n.jpg

 

இன்று நடந்த Tynwald Hill International Football Tournament போட்டில் சீ லாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழீழம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் சீ லாண்ட் அணியை.. வெற்றிபெற்றுள்ளது.

 

நன்றி TYO UK (facebook)

 

வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு. :)

Edited by nedukkalapoovan

தமிழீழ கால்பந்தாட்ட அணி பங்கேற்கும் சர்வதேச போட்டி நேரடி ஒளிபரப்பு!

 

லண்டன்: தமிழீழ கால்பந்தாட்ட அணி (TEFA) பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் என்ற பெயரில் சர்வதேச அணி ஒன்றை ஈழத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த அணி சர்வதேச அணிகளுடன் மோதும் கால்பந்தாட்டப் போட்டி இன்று முதல் டின்வோல்ட் ஹில்லில் நடக்கிறது.

 

04-tamil-eelam-foot-ball-600.jpg

 

சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

தமிழீழ உதைபந்தாட்ட அணி இன்று Isle of Man என்ற இடத்தில் மற்றைய அணிகளுடன் மோதும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு மூலம் அனைவரும் பார்க்க ஈழத் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

www.tamileelamfa.orgwww.tyouk.org ஆகிய தளங்களில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம். மேலும் விவரங்களுக்கு media@tyourk.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை அணியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2013/07/04/world-live-telecast-tamil-eelam-foot-ball-teams-match-178486.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ இளையோருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர்களே..வெற்றி நடை தொடரட்டும் <3

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இளையோருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு.......

இந்த சின்ன சின்ன வெற்றிகளில்தான் ஈழம் இப்போ இருக்கு.

 

வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரர்களே, வெற்றி நடை தொடரட்டும் .... !

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு.

வாழ்த்துக்கள்.....! உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... இந்தச் சீருடையுடன், தமிழீழ அணி வெற்றி பெற்றதை நினைக்க... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள் இளையோர்களே.... மேலும், சாதனை படைக்க வாழ்த்துகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கால்பந்து அணிக்கு வாழ்த்துகள்

தொடர்ந்து முன்னேறிக் கிண்ணத்தை வெற்றி கொள்ள வாழ்த்துகள்

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு.......

இந்த சின்ன சின்ன வெற்றிகளில்தான் ஈழம் இப்போ இருக்கு.

 

வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

மனதில்... சின்ன ஒரு, உறுத்தல். யாரும் குறை நினைக்க வேண்டாம்.
இந்த விளையாட்டு வீரர்கள், தமது காலணிகளையும்... ஒரே நிறத்தில் பாவித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில்... சின்ன ஒரு, உறுத்தல். யாரும் குறை நினைக்க வேண்டாம்.

இந்த விளையாட்டு வீரர்கள், தமது காலணிகளையும்... ஒரே நிறத்தில் பாவித்திருக்கலாம்.

 

சிறி

இதில் பங்கு பற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு நாட்டிலும்  ஒவ்வொரு கழகங்களில் விளையாடுபவர்கள்.

பிரான்சிலிருந்து எனக்குத்தெரிந்த  இருவர் உள்ளனர்.

 

பாடசாலை

வேலை

என.

அவற்றிலிருந்து ஒவ்வொரு நாட்டிலும் பாடசாலை மற்றும் வேலை லீவு  நாட்கள் மாறுபட்டவை.

இவர்களை  ஒன்று சேர்ப்பதே மிகவும் கடினமானது.

 

அடுத்த முறை உங்களது ஆதங்கத்தை   கவனிக்கச்செய்ய  முயற்சிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

இதில் பங்கு பற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு நாட்டிலும்  ஒவ்வொரு கழகங்களில் விளையாடுபவர்கள்.

பிரான்சிலிருந்து எனக்குத்தெரிந்த  இருவர் உள்ளனர்.

 

பாடசாலை

வேலை

என.

அவற்றிலிருந்து ஒவ்வொரு நாட்டிலும் பாடசாலை மற்றும் வேலை லீவு  நாட்கள் மாறுபட்டவை.

இவர்களை  ஒன்று சேர்ப்பதே மிகவும் கடினமானது.

 

அடுத்த முறை உங்களது ஆதங்கத்தை   கவனிக்கச்செய்ய  முயற்சிக்கின்றேன்.

 

எனக்கும்... விளங்குது விசுகு.

தமிழீழ அணி என்னும் போது.... உச்சியிலிருந்து, உள்ளங்கால் வரை... சீருடை விடயத்திலும், கவனம் செலுத்த வேண்டும்.

 

பல வருடங்களுக்கு, முன்பு... ஆசியாவின் பெரும் நாடும், உலகின் சனத் தொகையின் இரண்டாவது நாடான‌ இந்தியாவிலிருந்து....ஒலிம்பிக் போட்டிக்கு... வெறுங்காலுடன் உதை பந்தாட்டம் விளையாட வந்த,  இந்திய அணியை... ஒலிம்பிக் கமிட்டி மைதானத்தில்.. விளையாட அனுமதிக்காமால் திருப்பி அனுப்பியது செய்திக் குறிப்புகளில் உள்ளது.

 

அந்த வல்லரசு, செய்த தவறை... எமது பிள்ளைகள் செய்யக் கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிட்டேன்.

இப்படியான போட்டிகளை... பல விளையாட்டுக் கழகங்கள், கண் கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கும்.

அது, அந்த விளையாட்டுக் கழகத்துக்கும், விளையாட்டு வீரனின் நல்ல எதிர்கால கனவுகளுக்கும்... கேடு உண்டாக்கலாம்.

வெகு விரைவில் தமிழீழ கிரிக்கட் அணியும் களம் இறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன ,,,,,,,இவற்றை  ஒருங்கிணைத்து செயல் வடிவம் கொடுக்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் .

அடியேனின் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதை பந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013 அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்துகொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateia அணியுடன் மோதினார்கள்


இந்த சர்வதேச போட்டியானது கடந்த வியாழக்கிழமை Isle of man இல் Tynwald என்னும் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் ஆறு அணிகளுக்கான இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக தொடங்கி குழு A மற்றும் குழு B என்ற நிலைப்பாட்டில் குழு Aஇல் மூன்று அணிகளும் குழு B இல் மூன்று அணிகளும்மோதி அதில் தெரிவடைந்த அணிகள் மீண்டும் இன்று முதலிடம் மற்றும் மூன்றாவது ஐந்தாவது இடங்களுக்காக போட்டி இட்டனர்.


இதுவரை நடந்த போட்டிகளில் குழு A இல் இருந்து Occitania அணியும் குழு B இல் இருந்து StJohnsஅணியினரும் பங்கு பெற்ற அணைத்து போட்டிகளிலும் வென்று முதல் இடத்துக்காக இன்று மோதுகின்றனர். அதே போல குழு A இல் இருந்து தமிழீழ அணியும் குழு B இல் இருந்துRaetia அணியினரும் மூன்றாவது இடத்துக்காகவும் குழு A இல் இருந்து Sealland அணியினரும் குழு B இல் இருந்து Alderney அணியினரும்ஐந்தாவது இடத்துக்காக இன்று போட்டியிடுகின்றனர்


நேற்று மாலை (6 ஜூலை 2013 )Occitanaia அணியினருடன் மோதி முதல் இடத்துக்கான போட்டி வாய்ப்பை இழந்த தமிழீழ அணி இன்று மூன்றாவது இடத்துக்காக Raetiaஅணியினருடன் மோதினர்


தமிழீழ தேசிய கீதத்துடன் உற்சாகமாக தொடங்கிய இன்றைய போட்டி கட்டாயமாக வெற்றி காணுவோம் என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக நடந்தது.


இன்று அந்தோனி நாகலிங்கம் (23) பந்து காப்பளனாக பொறுப்பேற்று சிறப்புடன் விளையாடினர் அவருடன்


அருண் விக்னேஸ்வராஜா (14)

கதிரவன் உதயணன்(18)

சிவரூபன் சத்தியமூர்த்தி (5)

கெவின் நாகேந்திரா (6)

கஜேந்த்திரன் பாலமுரளி (10)

ரொன்சன் வல்லிபுரம்(7)

மதன்ராஜ் உதயணன்(15)

பிரவீன் நல்லதம்பி(20)

ஷாசில் நியாஸ்(4)

பனுஷன் குலேந்திரன் (8)

பிரஷாந்த் ராகவன் (9)

மேனன் நகுலேந்திரன் (2)

ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் (11)


ஆகியோரும் பங்குபெற்றனர்.


போட்டி மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டு இருப்பதையும் வீரர்களின் வேகமான விளையாட்டையும் பார்த்து எமது அணியை ஆதரிக்க வந்தோர் பெருமை கொண்டனர்.

முதலாவது இலக்கை லாவகமாக கைப்பற்றிய சிவரூபன் (5) அவர்கள் போட்டி தொடங்கி 3நிமிடத்துக்குள் தமிழீழ அணிக்கு தமது முதல் பந்தினை கோல் கம்பத்தினுள் செலுத்தி போட்டியின் சமநிலையினை மாற்றினார்கள். அதை அடுத்து 15.20க்கு கஜேந்திரன்(10)உதவியுடன் மதன்ராஜ் (15) அணிக்கான இரண்டாவது இலக்கை உள்ளே செலுத்தி அணியின் இலக்கை இரண்டாக உயர்த்தினர்

மத்தியஸ்தரின் எச்சரிக்கைளையும் மீறி தமிழீழ அணி வீரர்களின் ஆட்டத்தை முறையற்ற வகையில் தடுத்து விளையாடிய Raetia அணியில் மூன்று பேருக்கு சிவப்பு மட்டை காட்டப்பட்டு போட்டியை விட்டு வெளியேற்றபட்டனர். முதலுதவிக்கு பொறுப்பாக இருந்த தீபன் அவர்கள் வீரர்களின் காயங்களை உடனுக்குடன் சரி செய்து அவர்களுக்கு உற்சாகம் தெரிவித்து வீரர்களை போட்டியில் தொடர்ந்து பங்கு பெறுமாறு வழி வகுத்து கொண்டு இருந்தார்

போட்டியின் கடைசி சுற்றில் பனுஷந்துகாக(8) மைதானத்தில் இறங்கிய ஜிவிந்தன்(11) தொடர்ந்து மூன்று உதைபந்தாட்ட இலக்கை எதிர் அணி பந்தாட்ட இலக்கு வலைக்குள் இறக்கி ஈழ அணியின் மொத்த இலக்கு எண்ணிக்கைகளை ஐந்தாக உயர்த்தி அணிக்கு பெருமை சேர்த்தார்

மொத்தம் ஏழு முயற்சியில் இரண்டு இலக்குகள் Raetia அணி பந்து காப்பாளரால் பாதுகாக்கப்பட்டதால் தமிழீழ அணி ஐந்து உதைபந்தாட்ட இலக்குகளை எடுத்து இந்த போட்டியை வேன்றனர்.

இங்கிலாந்து முன்னால் உதைபந்தாட்ட வீரர் திரு Paul Reaney அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தமிழீழ அணி வீரர்களை பாராட்டி அவர்களுக்கு மூன்றாவது இடத்துக்கான வெற்றிக் கோப்பையையும் ஆட்ட கதாநாயகனுக்கான கோப்பையையும் பங்கு பற்றிய அனைவருக்கும் பதக்கம் அணிவித்தார் .

இவர்களின் வெற்றியை உலகெங்கும் பரவ செய்வதில் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் பெருமை கொள்கிறது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அணைத்து உள்ளங்களுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் தமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறது. மீண்டும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டியில் தமிழீழ அணி பங்குபெறும்.
1001884_10153006766550637_146386615_n.jp

நன்றி: முகநூல் மற்றும் TYO (UK)

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இளையோருக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் .

அடுத்த முறை சம்பியன் ஆக வேண்டும் .

தமிழீழ இளையோருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இளையோருக்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இளையோருக்கு வாழ்த்துக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.