Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகிப்போம் வா......... ( கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

மோகிப்போம் வா......... ( 18+)

 

 

Chastity-belt-wallpaper.jpg

 

 

மெதுமெதுவாய் மேல் எழும்பும்
கறையான் புற்றைப்போல் ,
என் மனதை அரிப்பவளே
வா .........
பள்ளியறையில் மோகிப்போம் வா .

ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே
முயற்சி செய்துதான் எழுதினான்
காமசூத்திரத்தை .
எனக்கும் உனக்கும்
என்னதான் வெட்கம் சயனவறையில் ???

அடி என்னவளே !!!!
மோகம் என்றால்
என்னவென்று தெரியுமா ???
கண்டவுடன் ருசிப்பதல்ல
கண்டு ரசிப்பது ........

அடி சூரியகாந்தப்பூவே !!!!!
இரவின் மடியில்  என் ஆண்மையும் ,
உன் பெண்மையும் அவசியம் .
இதைவிடப் ,
பொறுமையும் திறமையும்
என்ற இரு மைகள்
அத்தியாவசியமடி ........

அடி என் வெல்லக்கட்டியே !!!!!!!
நாங்கள் என்ன மிருகங்களா
உச்சக்கட்டத்தை நோக்கி
உடனே செல்ல .......
காதல் இல்லாத காமமும் ,
காமம் இல்லாத காதலும்
கலவியில் அசிங்கமல்லவா ????

அடி பைங்கிளியே !!!!
இது நாம்கூடும் திருவிழா ....
கோலாகலமாகவே கொண்டாடுவோம் .
அங்கே கலாச்சார நாடகங்கள்
வேண்டவே வேண்டாம் .....
என் அழைப்பு பிழை
என்று நீ சொன்னால் ,
இங்கு பிறப்பும் இல்லை
ஏன் இந்தப் பிரபஞ்சமே இல்லை ...

உனக்கு நானோர் கதைசொல்வேன் ,
உன்னைப் போல் ஒருத்தி
கணவனையே விட்டுவிட்டு
கடவுளையே பள்ளியறைக்கு
கூப்பிட்டிருக்கின்றாள்.....
நான் உன்னைத்தானே கூப்பிடுகின்றேன் ??????
வா .........
மெத்தையில் இருவரும்
இணைந்தே மோட்சிப்போம் .


கோமகன்
13/07/2013

நான் இன்னும் வயதுக்கு வரவில்லை அதனால் படிக்க வில்லை :p

 

 

இந்த உலகத்துக்கு நீங்கள் எதோ சொல்லவாறியல் எண்டு மட்டும் புரியுது பகிர்வுக்கு நன்றி அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் , காமம் இல்லாத காதலும் கலவியில் அசிங்கமல்லவா ????
கோமகன் கவிதை உச்சக்கட்டம் ......

அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் , காமம் இல்லாத காதலும் கலவியில் அசிங்கமல்லவா ????
கோமகன் கவிதை உச்சக்கட்டம் ......
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் செய்யாத களத்துச் சிங்க(ன்) ங்கள் கவனம் :D  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ன இம்புட்டு பெரிய பூட்டா இருக்கு????

திண்டுகல்லு சாவி போட்டா தான் திறக்கும் போல.....:D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் WWPD.. அதாவது Women's Weapon of Mass Destruction.. :D

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதுக்கு மேற்பட்ட கவிதையாகத் தெரியவில்லை!

 

பூட்டுக்கு நல்ல பழப்புளி அப்பவேண்டும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணே கறல் பிடிச்சு போய் இருக்கா.....:(:D

Annai kavithai super but unkada vayasukku romba over.lol

பூட்டுக்கு பூட்டு போடுவதை விட அதை திறக்கும் சாவிக்குத்தான் பூட்டு போடவேண்டும்.

சாவி கவனம் ....!!!

கள்ளச்சாவிகள் இங்கே அதிகம் ஆதலால் பூட்டுக்கள் பத்திரம்...!!!

சாவிகள் இல்லாத பூட்டும்

பூட்டுகள் இல்லாத சாவியும் வீண்.

அடிக்கடி திறக்காத பூட்டுகளும் துருப்பிடிக்கும்...!!!

ஒருவரும் கவிதையை ரசிப்பதா இல்லை பூட்டை திறப்பதில் குறியா உள்ளீர்கள் :p

  • கருத்துக்கள உறவுகள்

மோகிப்போம் வா......... ( 18+)

 

 

Chastity-belt-wallpaper.jpg

 

 

மெதுமெதுவாய் மேல் எழும்பும்

கறையான் புற்றைப்போல் ,

என் மனதை அரிப்பவளே

வா .........

பள்ளியறையில் மோகிப்போம் வா .

ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே

முயற்சி செய்துதான் எழுதினான்

காமசூத்திரத்தை .

எனக்கும் உனக்கும்

என்னதான் வெட்கம் சயனவறையில் ???

அடி என்னவளே !!!!

மோகம் என்றால்

என்னவென்று தெரியுமா ???

கண்டவுடன் ருசிப்பதல்ல

கண்டு ரசிப்பது ........

அடி சூரியகாந்தப்பூவே !!!!!

இரவின் மடியில்  என் ஆண்மையும் ,

உன் பெண்மையும் அவசியம் .

இதைவிடப் ,

பொறுமையும் திறமையும்

என்ற இரு மைகள்

அத்தியாவசியமடி ........

அடி என் வெல்லக்கட்டியே !!!!!!!

நாங்கள் என்ன மிருகங்களா

உச்சக்கட்டத்தை நோக்கி

உடனே செல்ல .......

காதல் இல்லாத காமமும் ,

காமம் இல்லாத காதலும்

கலவியில் அசிங்கமல்லவா ????

அடி பைங்கிளியே !!!!

இது நாம்கூடும் திருவிழா ....

கோலாகலமாகவே கொண்டாடுவோம் .

அங்கே கலாச்சார நாடகங்கள்

வேண்டவே வேண்டாம் .....

என் அழைப்பு பிழை

என்று நீ சொன்னால் ,

இங்கு பிறப்பும் இல்லை

ஏன் இந்தப் பிரபஞ்சமே இல்லை ...

உனக்கு நானோர் கதைசொல்வேன் ,

உன்னைப் போல் ஒருத்தி

கணவனையே விட்டுவிட்டு

கடவுளையே பள்ளியறைக்கு

கூப்பிட்டிருக்கின்றாள்.....

நான் உன்னைத்தானே கூப்பிடுகின்றேன் ??????

வா .........

மெத்தையில் இருவரும்

இணைந்தே மோட்சிப்போம் .

கோமகன்

13/07/2013

 

கவிதை அருமை. பள்ளியறை நினைவுகளை மீட்டிச் செல்லும் இனிய கவிதை.

கலவியைக் காதலுடன் கலந்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

 

காதல் இல்லாத காமமும் ,

காமம் இல்லாத காதலும்

கலவியில் அசிங்கமல்லவா ????

 

 

உண்மை . :lol:  :D ஆனால் கவிதையில் காமம் கூடவா இருக்கு காதலை காணவில்லை 

 

ஆனால் ,இந்த கவிஞன் 10 மணித்தியாலம் ஆக யாருக்கும் பதிலளிக்கவில்லை :D  guess

  • கருத்துக்கள உறவுகள்

மோகம் அழகானது,

காமம் அவசரமானது ,

காதல் களவுடன் கூடியது,

கற்பு பரவசமானது.

  • தொடங்கியவர்

நான் இன்னும் வயதுக்கு வரவில்லை அதனால் படிக்க வில்லை :p

 

 

இந்த உலகத்துக்கு நீங்கள் எதோ சொல்லவாறியல் எண்டு மட்டும் புரியுது பகிர்வுக்கு நன்றி அண்ணே .

 

நான் நம்பமாட்டன்...........  :lol:  :lol:  செரியா வெக்கப்படுறியள் போலை கிடக்கு  :wub:  :wub: . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி அஞ்சரன் :)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்று. ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டதாகத்தெரியவில்லை. "பால்குடி" க்கும் குழந்தையே படித்துவிடலாம் போலுள்ளது. இன்னமும் கவர்ச்சியும் கிளர்ச்சியும் வேண்டும். உதாரணமாக மெத்தென அவளிரு சொத்தினில் - தலை வைத்தொரு கனவினில்........ இப்படி இருக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

மோகிப்போம் வா......... ( 18+)

 

 

Chastity-belt-wallpaper.jpg

 

 

என் மனதை அரிப்பவளே

அடி என்னவளே !!!!

அடி சூரியகாந்தப்பூவே !!!!!

அடி என் வெல்லக்கட்டியே !!!!!!!

அடி பைங்கிளியே !!!!

என்ன  கோ

நேற்று  சகோதரி  பிடித்து வெளியில்  விட்டு விட்டாவா?

போடப்பட்ட  பூட்டும்

இவ்வளவு குழையலும்  அதைத்தான்   சொல்லி  நிற்கிறது

 

 பள்ளியறைக்கு

கூப்பிட்டிருக்கின்றாள்.....

 

 

இறுதி  ஆயுதமான

இந்த  பயமுறுத்தல்

அதற்கு சாட்சியாகிறது...... :lol:  :D  :D  :D 

 

 

நம்ம  வழிக்கு வாற  மாதிரி  இருக்கு

தொடருங்கோ

வாழ்த்துக்கள் (கேட்டதெல்லாம் கிடைக்க.... :wub: )

Edited by விசுகு

Chastity-belt-wallpaper.jpg

 

 

 

படத்தைப் பார்க்கும் போது சீனப் படம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
 
கடல் விபத்தில் ஒரு சீனன் தீவொன்றில் ஒதுங்குகிறான். அங்கே எல்லாருமே பெண்கள். ஆண்கள் யாருமில்லை. அதுவும் நிர்வாண அழகிகள்.
 
இவரின் சந்தோசத்துக்கு அளவேயில்லை.
 
தீவு ராணியின் வீராங்கனைகள் இவரைக் கைது செய்து ராணியிடம் கொண்டு போகிறார்கள்.
 
ராணியும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு இவருக்கு ஒரு இரும்பு ஜட்டியை போட்டு அதுக்கு ஒரு பூட்டும் போட்டு விடுகிறாள். சாவி அவளிடம்.
 
 
அதன் பின்பு, இரும்பு ஜட்டியால் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் இவர் படுகிற அவஸ்தை இருக்கே...  :D
 
  • தொடங்கியவர்

கோமகன் கவிதை உச்சக்கட்டம் ......

கோமகன் கவிதை உச்சக்கட்டம் ......

 

அதுக்கேன் நீங்கள் ரெண்டுதரம் உச்சக்கட்டம் போனியள்  :lol:  :lol:  :D  ???? நன்றி புத்தா வரவுக்கும் கருத்துக்கும் :) .

 

நல்ல கவிதை படம் அதிலும் திறம் .

புலவர் கோவே எல்லாப் பாட்டுக்கும் எதிர்ப்பாட்டும் உண்டு. உங்கள் பாட்டுக்கு எற்கவே எழுதபட்ட  பாட்டு 

 

:D

கோ .... திடீரென்று என்னாச்சு? ம்ம்ம்ம் :):wub:  நடக்கட்டும்!!!

மற்றவர்கள் சொல்வதைப்போல... கவிதையில் இன்னும் 'உப்பு புளி காரம்' சேர்த்திருக்கலாம்.

சில விடயங்களை தவிர்த்து இன்னும் சிலவிடயங்களை அழகாகச் சொல்லியிருக்கலாம்.

இருந்தாலும்... நல்லாத்தான் இருக்கு. :)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கு நானோர் கதைசொல்வேன் ,

உன்னைப் போல் ஒருத்தி

கணவனையே விட்டுவிட்டு

கடவுளையே பள்ளியறைக்கு

கூப்பிட்டிருக்கின்றாள்.....

நான் உன்னைத்தானே கூப்பிடுகின்றேன் ??????

கோமகன்

13/07/2013

 

யாரோ செய்ததை சரி என்று சொல்கிறீர்களா?  இல்லை களவொழுக்கத்தை நியாயப்படுத்துகிறீர்களா? :unsure:

 

எனக்கென்னமோ அக்காச்சி பிடிச்சு வெளியிலை விட்ட கடுப்பிலை எழுதிய மாதிரி இருக்கு... :D:lol::icon_mrgreen:

 

 

 

  • தொடங்கியவர்

கலியாணம் செய்யாத களத்துச் சிங்க(ன்) ங்கள் கவனம் :D  :lol:  :lol:

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாத்தியார் :) .

 

  • தொடங்கியவர்

ஆகா என்ன இம்புட்டு பெரிய பூட்டா இருக்கு????

திண்டுகல்லு சாவி போட்டா தான் திறக்கும் போல..... :D

 

சின்னப் பூட்டை போட்டால் நீங்கள் ஊசியலை திறந்து போடுவியள் :wub: :wub: அதுதான்............. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுண்டல் :) .

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கருத்துக்களைப்  பதிந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.