Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... ( இசைக்கவிதை )

Featured Replies

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...
அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே,
இன்று உன்னிடத்தில் இல்லையாம்!
கேள்விப்பட்டேன்.....!

உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்...

கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல!

எப்போதும் திரும்பப்பெறமுடியாத
என்னுடைய  நம்பிக்கைகளை
உன்னிடத்தில் தொலைத்தவன் நான்!
இனிமேலும் அதை நான்
உன்னிடத்தில் தேட மாட்டேன்!!!

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...
உன் வற்றாத நினைவுகளும்
ஆற்றமுடியாத காயங்களும்
ஆறாத கோபமும் கூட.
உன்னையும் நீ செய்த துரோகத்தையும்
எப்படி மறக்கமுடியும்???
என்னை மட்டுமா...
என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...
நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்
அதன் சமுதாய அடையாளத்தையும்
எப்படி மறைக்கமுடியும்???

அன்று  கண்ணீரில்
நான் கலங்கிநிற்க,
காரணமில்லாத காரணங்களுக்காய்...
தூக்கியெறிந்து விட்டுப் போனாய்!

நீயின்று கலங்கையிலே....
உன்னைப்போல்
என்னால்

உதறிவிட்டுப் போக முடியவில்லை.

இப்பொழுதும் என்னை நீ அழவைக்கிறாய்...

உன்னை நினைத்தல்ல,

உன் நிலையை நினைத்து!

பழிவாங்கும் எண்ணத்தில்...
உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!
நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்
ஆறாக் காயங்களில்
இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!
உன்னைப்போல் மனச்சாட்சியை
இன்னும் நான் தொலைக்கவில்லை!

காதலால் மட்டும்தான்
துரோகங்களையும் மன்னிக்க முடிகிறது !?
ஏனென்றால்...
காதலுக்கு நேசிக்க மட்டுந்தான் தெரியும்
!

********* ********* ********* ********** ********* ********* *********

17-08-2013

கவிதையின் இசை வடிவம் இணைக்கப்பட்டுள்ளது

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்
என்ன சொல்வதென்று தெரியவில்லை... :(
 
நாம அழும் போது முதலில் ஆறுதல் சொல்வது 
நாம் நேசித்தவராக இருக்கமாட்டார் 
நம்மை நேசித்தவராக தான் இருப்பாராம் என்று சொல்வார்கள்... அது அவ்வளவும் உண்மைதானே.. இல்லை என்றால் அங்கு வலித்தபோது இந்த கவிதையும் இந்த வலியும் உனக்குள் வந்திருக்காது..
 
போலியான நேசங்களை அடையாளம் காண்பதற்கான சக்தியையும், போலியாக நேசிப்பதற்கான இதயத்தையும் இறைவன் நமக்கு வழங்கியிருந்தால் அவஸ்தைகள் இன்றியும் காயங்கள் இன்றியும் வாழ்ந்திருக்கலாம்....முகத்தை மட்டும் எல்லோரும் பார்க்க கூடியதாக வைத்த இறைவன் ஏன் மனத்தைமட்டும் யாரும் பார்க்க முடியாத படி வைத்தானோ...?
 
சிறிய தவறுகளுக்காக பிரிய முடிவெடுத்து வாழ்வின் பெரிய தவறை செய்து விடுகிறார்கள் பலர் ....
 
எப்பவோ படித்த கவிதை ஒன்று....
 
நமக்கிடையில்
பெருகி வழிந்த மௌனத்தை தவிர்க்க
வலுக்கட்டாயமாய்
ஒரு சிறு புன்னகை செய்து கொண்டோம் 
 
நல்லவேளை
சுற்றியிருந்த எவரும்
கவனிக்கவில்லையென்பதில்
சற்றே நிம்மதியடைந்தோம் 
 
பின்னொரு
மழையற்ற வெறுமை நாளில்
தத்தம் மௌனங்களை
இறுக நெஞ்சோடு அணைத்தபடி
ஒருவரையொருவர் கவனிக்காததை போல்
வெற்றிகரமாய் கடந்து சென்றோம் 
 
கிழிபட்ட இதயமொன்றின்
ரத்த வாடை
அவ்விடத்தில் வீசியதாய்
யாரோ என்னருகில் பேசிகொண்டிருந்தனர் ...
 
  • கருத்துக்கள உறவுகள்

பழிவாங்கும் எண்ணத்தில்...
உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!
நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்
ஆறாக் காயங்களில்
இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!
உன்னைப்போல் மனச்சாட்சியை
இன்னும் நான் தொலைக்கவில்லை!

இன்றைய என் மன உணர்வுகளை அற்புதமாகக் கூறிச்செல்லும் வரிகள்!
 
  • கருத்துக்கள உறவுகள்

காதல்தோல்விக்காரர் ஒன்று கூடிட்டாங்கய்யா..  :(  வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா தாமுண்டு தம் பாடுண்டு.. என்றிருக்கும் மனங்களில்.. காதல் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்துவிட்டு அது விருட்சமானதும்.. ஒரு நொடிப்பொழுதில் வெட்டிச் சாய்த்துவிட்டு.. தாமும் தம்பாடும் என்று சிலரால் வாழ முடிகிறது. ஆனால் பலரால் அது முடிவதில்லை..!

ஒரு பிரிவின் வேதனையை இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை என்ற அளவுக்கு கவிதையின் கவி வரிகள் உள்ளன. பாராட்டுக்கள்..!

என்ன தான் வேதனைகளைத் தந்திருந்தாலும்.. அதனால் கோபங்கள்.. வெறுப்புகள்.. சாதிக்கனும் என்ற வெறி எழுந்தாலும்.. காதலிக்கப்பட்டவர் என்ற ரீதியில்.. ஏமாற்றங்களை தந்தோருக்கும் இதயத்தின் எங்கோ ஓர் முலையில் இரக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனைக் கூட புரிந்து கொள்ள முடியாத மனித ஜந்துகளும்.. காதல் என்ற பெயரால் களித்திருந்து விட்டு பின் கண்காணாமல்.. இந்த உலகில் உலாவருகின்றன. அவற்றை எவர் வரிகளால் வேட்டையாடினும் நாங்க நிச்சயம் வரவேற்போம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

218683-film-twilight-eclipse.jpg

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...

உன் வற்றாத நினைவுகளும்

ஆற்றமுடியாத காயங்களும்

ஆறாத கோபமும் கூட.

உன்னையும் நீ செய்த துரோகத்தையும்

எப்படி மறக்கமுடியும்???

என்னை மட்டுமா...

என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...

நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்

அதன் சமுதாய அடையாளத்தையும்

எப்படி மறைக்கமுடியும்???

********* ********* ********* ********** ********* ********* *********

17-08-2013

இதற்கு என்ன விளக்கம்

யாரவது சொல்லுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு என்ன விளக்கம்

யாரவது சொல்லுங்கப்பா

எங்கள் அனுபவத்தில் சொல்லுறம் கேளுங்க..

என்னைப் பொறுத்தவரை எது செய்தாலும் வீட்டுக்கு பெற்றோருக்கு தெரியனும் என்பது தான் சிறுவயது முதலான நிலைப்பாடு.

அதேபோல்.. ஒருவரால் காதலிக்கப்படும் போதும்.. அது பெற்றோருக்கு சகோதரங்களுக்கு தெரியனும் என்பது தான் என்னுடைய நோக்கம். ஏனெனில் அவர்கள் என் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பது நான் பிறந்தது முதல் இருந்து வருவது. அதனை பாழ்படுத்த முடியாது தானே.

அந்த வகையில்..  நான் ஒருவரால் காதலிக்கப்படுகிறேன் என்று வையுங்கள். அது நிச்சயம் என்று தெரிந்ததும்.. பெற்றோருக்கு தெரிய வரும். பெற்றோர் அதனை உறவினர்களோடு பகிரும் நிலை வரும். ஒருவேளை காதலித்தவர்.. ஏதேதோ காரணங்களைச் சொல்லி விலகிப் போனால்.. அதுவும் பெற்றோரிடம் போகும். ஆனால்.. அதனை உறவினர்களிடம் கொண்டு செல்லும் போது.. இவனுக்கு இதுவே வேலையாப் போச்சு என்றது தான் அவர்களின் பேச்சாகும். அல்லது ஒரு பெட்டை ஏமாத்திட்டுப் போயிட்டாம் என்று தான் சொல்லப்படும். அந்த வார்த்தைகளைக் கேட்கும் போது.. நிஜமாகவே காதல் வயப்பட்ட ஒரு மனிதனின் உள்ளத் துடிப்பு என்பது.. வேதனை என்பது வார்த்தையில் அளவிட முடியாது. கண்ணீரால் கூட அளவிட முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி வரும் பக்குவம்.. பின்னர் வந்துவிடும். ஆனால்.. அந்த முதல் அனுபவங்கள் என்பது.. வாழ்க்கையை வெறுக்கச் செய்துவிடும்.

காதலை பொழுதுபோக்கிற்கு.. வேறு வேறு காரணங்களுக்காக ஆள் மாத்தி ஆள் மாத்திப் பண்ணுறவைக்கு உதுகள் யு யு பி. ஆனால்.. காதலை காதலாக மதிக்கிறவன்.. உணர்கிறவன் மத்தியில் காதலி தரும் ஏமாற்றங்கள் என்பது உண்மையில்.. வலி. அந்த வலியை கூட உள்ள சமூகம்.. இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில் கதை பகிர்வது.. எம் சமூகத்தில் உள்ள மோசமான நிலை.

நான் நினைக்கிறேன்.. கவிதை அதனை தான் குறிப்பிட்டுள்ளார் என்று.

என்னைப் பொறுத்த வரை காதலித்து ஏமாற்ற முற்படுபவருக்கு... அவர் வாழ் நாளில் மறக்க முடியாத ஓர் அனுபவத்தை கூடவே கொடுக்கனும் என்றதுதான்.. நிலைப்பாடு. அப்ப தான் அவர்களுக்கும் வலியின் வலிமை தெரியும்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு நாள் யாழ்வாசிப்பில் இண்டைக்குதான் இந்த திரியில நான் நெடுக்காலபோவான் அண்ணாவின் கருத்துக்களை ஒரே வாசிப்பில ரசித்து வாசிச்சன்... அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்..... இன்றைய உங்கள் எழுத்துக்களில் இருப்பது யதார்த்தம்... சா இந்த நேரம் பாத்து பச்சையும் மக்கர் பண்ணுது... :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை அதிகம் அறிந்தவன் என்ற வகையில் உங்கள் வலி என்னையும் கட்டிப்போட்டு விட்டது. :(

உங்களை நேரில் கண்டால் அடிதான் போடவேணும் போய் வேலையைப் பாருங்கோ என்று சொல்லி இருந்தேன். இன்று ......

வார்த்தைகள் இல்லை அண்ணா. சிலரின் அவசரம், தவறான முடிவுகள் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. நடக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது எல்லாம் இவ்வளவு விரைவில் நடக்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.

உங்கள் நலன் வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பழிவாங்கும் எண்ணத்தில்...

உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!

நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்

ஆறாக் காயங்களில்

இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!

உன்னைப்போல் மனச்சாட்சியை

இன்னும் நான் தொலைக்கவில்லை!

கவிதையின் இந்த வரிகள், உங்களிடம் உள்ள 'மனிதத்தின்' உன்னதமான வெளிப்பாடு என நினைக்கிறேன்!

போர்க்களத்தில் நின்ற அர்ஜுனனின், முடியைத் தட்டிச் சென்ற 'நாகாஸ்திரம்' போல இந்தக் காதல் போகட்டும்!

மீண்டுமொரு முறை 'நாகாஸ்திரம்' வரப்போவதில்லை!

வாழ்த்துக்கள், கவிதை!

218683-film-twilight-eclipse.jpg

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்...

அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே,

இன்று உன்னிடத்தில் இல்லையாம்!

கேள்விப்பட்டேன்.....!

உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்...

கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல!

எப்போதும் திரும்பப்பெறமுடியாத

என்னுடைய  நம்பிக்கைகளை

உன்னிடத்தில் தொலைத்தவன் நான்!

இனிமேலும் அதை நான்

உன்னிடத்தில் தேட மாட்டேன்!!!

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...

உன் வற்றாத நினைவுகளும்

ஆற்றமுடியாத காயங்களும்

ஆறாத கோபமும் கூட.

உன்னையும் நீ செய்த துரோகத்தையும்

எப்படி மறக்கமுடியும்???

என்னை மட்டுமா...

என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...

நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்

அதன் சமுதாய அடையாளத்தையும்

எப்படி மறைக்கமுடியும்???

அன்று  கண்ணீரில் நான் கலங்கிநிற்க,

காரணமில்லாத காரணங்களுக்காய்...

தூக்கியெறிந்து விட்டுப் போனாய்!

நீயின்று கலங்கையிலே....

உன்னைப்போல் என்னால்

உதறிவிட்டுப் போக முடியவில்லை.

இப்பொழுதும் என்னை நீ அழவைக்கிறாய்...

உன்னை நினைத்தல்ல,

உன் நிலையை நினைத்து!

பழிவாங்கும் எண்ணத்தில்...

உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!

நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்

ஆறாக் காயங்களில்

இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!

உன்னைப்போல் மனச்சாட்சியை

இன்னும் நான் தொலைக்கவில்லை!

காதலால் மட்டும்தான்

துரோகங்களையும் மன்னிக்க முடிகிறது !?

ஏனென்றால்...

காதலுக்கு நேசிக்க மட்டுந்தான் தெரியும்!

********* ********* ********* ********** ********* ********* *********

17-08-2013

யதார்த்தமான ,உண்மையை கூறி நிற்கும் அழகான வரிகள் ...........வாழ்த்துக்கள் .
 
மீண்டும் வருவேன் .

சும்மா தாமுண்டு தம் பாடுண்டு.. என்றிருக்கும் மனங்களில்.. காதல் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்துவிட்டு அது விருட்சமானதும்.. ஒரு நொடிப்பொழுதில் வெட்டிச் சாய்த்துவிட்டு.. தாமும் தம்பாடும் என்று சிலரால் வாழ முடிகிறது. ஆனால் பலரால் அது முடிவதில்லை..!

ஒரு பிரிவின் வேதனையை இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை என்ற அளவுக்கு கவிதையின் கவி வரிகள் உள்ளன. பாராட்டுக்கள்..!

என்ன தான் வேதனைகளைத் தந்திருந்தாலும்.. அதனால் கோபங்கள்.. வெறுப்புகள்.. சாதிக்கனும் என்ற வெறி எழுந்தாலும்.. காதலிக்கப்பட்டவர் என்ற ரீதியில்.. ஏமாற்றங்களை தந்தோருக்கும் இதயத்தின் எங்கோ ஓர் முலையில் இரக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனைக் கூட புரிந்து கொள்ள முடியாத மனித ஜந்துகளும்.. காதல் என்ற பெயரால் களித்திருந்து விட்டு பின் கண்காணாமல்.. இந்த உலகில் உலாவருகின்றன. அவற்றை எவர் வரிகளால் வேட்டையாடினும் நாங்க நிச்சயம் வரவேற்போம்..! :):icon_idea:

இது சம்பந்தமாக எனது உண்மைக்கதையை இங்கே நான் கூறினால் .................வேண்டாம் இந்த விடயத்தில் மாத்திரம் அந்த அத்தியாயங்களை இந்த நேரத்தில் திறக்க கூடாது என உறுதியோடு செல்ல நினைப்பவன் .............ஆனாலும் சில வேளைகளில் தளம்புவதுண்டு ....மனித மனம் என்னும் பார்வையில் .
 
காதலிப்போர்க்கு என்னாலன ஒரே ஒரு தகவல் ..........காதலுக்கு இடைவெளி அதிகம் கொடுக்க கூடாது .............
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பதே அனுபவங்களின் வழிநடத்தலே..அதனை நாங்களே  தீர்மானிக்கும் அதே நேரம் அதன் பலாபலன்களையும் நாங்களே எதிர்கொள்ளவேண்டும்  தைரியமற்றவன் தற்கொலையும் தைரியமானவனாய் காட்டிக் கொள்பவன் கொலையும் செய்வான் . உண்மையான அனுபவமுள்ள தைரிய சாலி நிதானமாய் தீரக்கமான முடிவை எடுப்பான்  இதில் நீ  எந்த ரகம்???

உண்மைதான்.. தொடர் கொலைகாரர்கள் பலரின் மன இயல்புகளை ஆராய்ந்தபோது தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், கோழைகளாகவும், ஏமாற்றங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாகவும் இருந்துள்ளார்கள்.. இதை ஒரு பொதுவான கருத்தாகத்தான் சொல்கிறேன்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

காதல்தோல்விக்காரர் ஒன்று கூடிட்டாங்கய்யா..  :(  வாழ்த்துக்கள்..! :D

இதத்தான் நானும் நினைச்சன் சகா! கவிதை எழுதிப் புண்ணை நோண்டிக் கொண்டிருக்காமல் அடுத்த காதலையோ தொழிலையோ தேடிப் போங்கப்பா எண்டால் கேக்கிறாங்களா இந்தக் கால இளசுகள்? எடுத்துச் சொல்லுங்கப்பா இவங்களுக்கு! :D

  • தொடங்கியவர்

என்ன சொல்வதென்று தெரியவில்லை... :(
 
நாம அழும் போது முதலில் ஆறுதல் சொல்வது 
நாம் நேசித்தவராக இருக்கமாட்டார் 
நம்மை நேசித்தவராக தான் இருப்பாராம் என்று சொல்வார்கள்... அது அவ்வளவும் உண்மைதானே.. இல்லை என்றால் அங்கு வலித்தபோது இந்த கவிதையும் இந்த வலியும் உனக்குள் வந்திருக்காது..
 
போலியான நேசங்களை அடையாளம் காண்பதற்கான சக்தியையும், போலியாக நேசிப்பதற்கான இதயத்தையும் இறைவன் நமக்கு வழங்கியிருந்தால் அவஸ்தைகள் இன்றியும் காயங்கள் இன்றியும் வாழ்ந்திருக்கலாம்....முகத்தை மட்டும் எல்லோரும் பார்க்க கூடியதாக வைத்த இறைவன் ஏன் மனத்தைமட்டும் யாரும் பார்க்க முடியாத படி வைத்தானோ...?
 
சிறிய தவறுகளுக்காக பிரிய முடிவெடுத்து வாழ்வின் பெரிய தவறை செய்து விடுகிறார்கள் பலர் ....
 
எப்பவோ படித்த கவிதை ஒன்று....
 
நமக்கிடையில்
பெருகி வழிந்த மௌனத்தை தவிர்க்க
வலுக்கட்டாயமாய்
ஒரு சிறு புன்னகை செய்து கொண்டோம் 
 
நல்லவேளை
சுற்றியிருந்த எவரும்
கவனிக்கவில்லையென்பதில்
சற்றே நிம்மதியடைந்தோம் 
 
பின்னொரு
மழையற்ற வெறுமை நாளில்
தத்தம் மௌனங்களை
இறுக நெஞ்சோடு அணைத்தபடி
ஒருவரையொருவர் கவனிக்காததை போல்
வெற்றிகரமாய் கடந்து சென்றோம் 
 
கிழிபட்ட இதயமொன்றின்
ரத்த வாடை
அவ்விடத்தில் வீசியதாய்
யாரோ என்னருகில் பேசிகொண்டிருந்தனர் .

ஒரு சக தோழனாய் உங்கள் புரிந்துணர்வுக்கும் ...

அருமையான கவிதைப் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் சுபேஸ் :)

  • தொடங்கியவர்

பழிவாங்கும் எண்ணத்தில்...

உன் கண்ணீரை ரசிக்க இயலவில்லை!

நீ சிதைத்துவிட்டுப்போன மனசின்

ஆறாக் காயங்களில்

இன்னும் கொஞ்சம் ஈரம் மீதமிருக்கு...!

உன்னைப்போல் மனச்சாட்சியை

இன்னும் நான் தொலைக்கவில்லை!

இன்றைய என் மன உணர்வுகளை அற்புதமாகக் கூறிச்செல்லும் வரிகள்!

எல்லோருக்குள்ளும் ஏதாவது வலிகளும் நினைவுகளும் ஒளிந்திருக்கும். சிலவேளைகளில் மனம் அதை மீட்டிப் பார்க்கும்.

அப்படித்தான் இந்தக் கவிதை வரிகளும் உங்களின் மனவுணர்வினைத் தொட்டிருக்கின்றது என நினைக்கின்றேன்.

தங்களின் மனவுணர்வையும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி :)

  • தொடங்கியவர்

காதல்தோல்விக்காரர் ஒன்று கூடிட்டாங்கய்யா..  :(  வாழ்த்துக்கள்..! :D

என்ன செய்வது இசை...? :rolleyes:

பொதுவாக,  "இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகும்

அதேபோல துன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது பாதியாகக் குறையும்" என்பார்கள்.

அதுதான் பாதிக்கப் பட்டவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடியிருக்கின்றோம். :lol:

நீங்கள் காதலில் ஜெயித்தவர்... உங்களிற்கு எங்களின் 'சங்கம்' அவசியப்படாதுதானே...!? :lol:

  • தொடங்கியவர்

சும்மா தாமுண்டு தம் பாடுண்டு.. என்றிருக்கும் மனங்களில்.. காதல் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்துவிட்டு அது விருட்சமானதும்.. ஒரு நொடிப்பொழுதில் வெட்டிச் சாய்த்துவிட்டு.. தாமும் தம்பாடும் என்று சிலரால் வாழ முடிகிறது. ஆனால் பலரால் அது முடிவதில்லை..!

ஒரு பிரிவின் வேதனையை இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை என்ற அளவுக்கு கவிதையின் கவி வரிகள் உள்ளன. பாராட்டுக்கள்..!

என்ன தான் வேதனைகளைத் தந்திருந்தாலும்.. அதனால் கோபங்கள்.. வெறுப்புகள்.. சாதிக்கனும் என்ற வெறி எழுந்தாலும்.. காதலிக்கப்பட்டவர் என்ற ரீதியில்.. ஏமாற்றங்களை தந்தோருக்கும் இதயத்தின் எங்கோ ஓர் முலையில் இரக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும்.

அதனைக் கூட புரிந்து கொள்ள முடியாத மனித ஜந்துகளும்.. காதல் என்ற பெயரால் களித்திருந்து விட்டு பின் கண்காணாமல்.. இந்த உலகில் உலாவருகின்றன. அவற்றை எவர் வரிகளால் வேட்டையாடினும் நாங்க நிச்சயம் வரவேற்போம்..! :):icon_idea:

நெடுக்ஸ்....  காதலின் வலியை உற்ற நண்பனால், உறவுகளால்.. ஏன் பெற்ற தாயால் கூட முழுமையாக உணரமுடியாது. அதைப் பாதிக்கப்பட்ட அந்த மனசால் மட்டுமே முழுமையாக உணரமுடியும். அதன் வலி கொடிதிலும் கொடிது. ஒரு அவலச் சாவின் வலிகூட இந்த வலியைவிட குறைவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட வலியை கொடுத்துச் செல்பவர்களையும் நேசிக்கத் துடிக்கும் உணர்வுதான் உண்மையான காதல். துரோகங்களையும் மன்னிக்கக்கூடிய பெருந்தன்மையை உண்மையான காதலால் மட்டுமே கொடுக்க முடிகிறது. :)

மிக உணர்ந்து எழுதிய தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நெடுக்ஸ். :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

இதற்கு என்ன விளக்கம்

யாரவது சொல்லுங்கப்பா

காதலின் பிரிவு தரும் வலிகள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாம். ஆனால் சாகும்வரையிலும் அதன் ஞாபகங்கள் அழியாது.  ஒரு காதலின் பிரிவினை சமுதாயத்தில் உள்ளவர்கள் பார்க்கும் கோணம் எப்படி இருக்கும் என நெடுக்ஸ் அழகாக சொல்லியிருந்தார். அது காதலித்து பிரிபவர்களுக்கு.

ஆனால் அந்தக் காதல் சட்டரீதியான திருமணம் என்ற நிலையை அடைந்து பின்னர் பிரியும் போது.... விவாகரத்துப் பெற்றவன்/ள் என்ற அடையாளம் ஒருவரால் ஒருவருக்கு திணிக்கப்படும்.

அவர்களுக்குள் என்ன நடந்தது, எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், உண்மை என்ன?  எனவெல்லாம் சமூகம் தெளிவாகப் பார்க்காது. சமுதாயத்தின் பார்வையில் "டிவோஸ் எடுத்தவன்/ள் " என்பது மட்டுந்தான் தெரியும். அதனை நாமும் மறைக்கவோ மறுக்கவோ அல்லது மறக்கவோ இயலாத நிலையில் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

அதன் வலியையும் வார்த்தைகளில் அவ்வளவு இலகுவாக சொல்ல இயலாது. சொன்னாலும் அதை உணர்ந்துகொள்வது கடினம். இப்ப டிவோஸ் எல்லாம் சாதாரணம் என்று சொல்வார்கள். ஆனால் அது இரண்டு பக்கமும் இசைந்து எடுக்கும் சந்தர்ப்பங்களில் ஓகே என்று சொல்லலாம். ஆனால் காரணமே இல்லாமல்  ஒருவரின் சுயநலன்களுக்காக ஒருதலைப் பட்ச முடிவுகளால் ஒருவருக்கு விவாகரத்து திணிக்கப்படும் போது அதை ஏற்றுக்கொள்வது கடினம்.

அது நியாயமும் இல்லை. :(

அதைத்தான்............

உன்னையும் நீ செய்த துரோகத்தையும்

எப்படி மறக்கமுடியும்???

என்னை மட்டுமா...

என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி...

நீ தந்துவிட்டுப்போன பிரிவையும்

அதன் சமுதாய அடையாளத்தையும்

எப்படி மறைக்கமுடியும்???

என்ற வரிகள் சொல்லி நிற்கிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

கண் மயங்கிக் காதல் கொள்ளாதீர் உறவுகளே
காதினிக்கும் காதல் மொழிகேட்டும்
கனவுலகில் சஞ்சரித்தும் கனதியான காதல் கொண்டால்
காண்பதெல்லாம் உண்மையாய் கண் மயங்கும்

கற்றறிந்து காதல் கொண்டீரெனில்
காதல் நோய் முற்றி கண்ணில் நீர்கொண்டு
காலமெல்லாம் கவலை கொண்டு
காத்திருக்கும் கேடென்றும் வந்திடாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை !வாழ்த்துகள் !!

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஒருவர் அதிகமாக சுதந்திரத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறார்களோ,அவர்களால் மட்டுமே மறக்க முடியாத வேதனையும் கொடுக்க முடிகிறது....என்ன செய்வது இப்படியானவர்களை திருத்துவம் கடினம் கவிதை...வேறை என்னத்தை சொல்ல முடியும்..நடந்து முடிந்தவைகள் எல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு  முன்னேறிச் செல்லுங்கள்.

சுபேஸ் எழுதி இருப்பது போல் போலியானவற்றை இனங்காணும் சக்தியை மனிதர்க்கு இறைவன் கொடுத்து இருந்திருந்தால் உலகில் பாதி பேரின் இதயங்கள் கீறுபடாமலே இருந்திருக்கும்.............

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் பிரிவு தரும் வலிகள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாம். ஆனால் சாகும்வரையிலும் அதன் ஞாபகங்கள் அழியாது.  ஒரு காதலின் பிரிவினை சமுதாயத்தில் உள்ளவர்கள் பார்க்கும் கோணம் எப்படி இருக்கும் என நெடுக்ஸ் அழகாக சொல்லியிருந்தார். அது காதலித்து பிரிபவர்களுக்கு.

ஆனால் அந்தக் காதல் சட்டரீதியான திருமணம் என்ற நிலையை அடைந்து பின்னர் பிரியும் போது.... விவாகரத்துப் பெற்றவன்/ள் என்ற அடையாளம் ஒருவரால் ஒருவருக்கு திணிக்கப்படும்.

அவர்களுக்குள் என்ன நடந்தது, எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், உண்மை என்ன?  எனவெல்லாம் சமூகம் தெளிவாகப் பார்க்காது. சமுதாயத்தின் பார்வையில் "டிவோஸ் எடுத்தவன்/ள் " என்பது மட்டுந்தான் தெரியும். அதனை நாமும் மறைக்கவோ மறுக்கவோ அல்லது மறக்கவோ இயலாத நிலையில் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

அதன் வலியையும் வார்த்தைகளில் அவ்வளவு இலகுவாக சொல்ல இயலாது. சொன்னாலும் அதை உணர்ந்துகொள்வது கடினம். இப்ப டிவோஸ் எல்லாம் சாதாரணம் என்று சொல்வார்கள். ஆனால் அது இரண்டு பக்கமும் இசைந்து எடுக்கும் சந்தர்ப்பங்களில் ஓகே என்று சொல்லலாம். ஆனால் காரணமே இல்லாமல்  ஒருவரின் சுயநலன்களுக்காக ஒருதலைப் பட்ச முடிவுகளால் ஒருவருக்கு விவாகரத்து திணிக்கப்படும் போது அதை ஏற்றுக்கொள்வது கடினம்.

அது நியாயமும் இல்லை. :(

இதைத்தான் நானும் என் மனதில் நினைத்தேன்

எனக்கும் அப்படித்தான் விளங்கியது

இந்தக் கவிதையை ஒரு பெண்  எழுதியிருந்தால்

அவருக்கு காதலின் அடையாளமாக ஒரு குழந்தை கூட இருக்கலாம்

இந்த வலி காதலின் வலியைவிட ஆழமானது

காதலை இழந்தவன் ஏற்றுக் கொள்ளும் திருமணத்தில் சிலவேளைகளில் அதன் வழியை மறக்கலாம்.

காதலின் பின்னர் திருமணம் என வந்து அதன் பின்னர் வரும் இழப்பு மிகக் கொடுமையானது

அந்த நிலையில் இருப்பவர்களுக்குக் கூறக்கூடியது " இதுவும் கடந்து போகும் என நினைத்துக் கொள்ளுங்கள்" என்ற வரிகளே

  • தொடங்கியவர்

உங்களை அதிகம் அறிந்தவன் என்ற வகையில் உங்கள் வலி என்னையும் கட்டிப்போட்டு விட்டது. :(

உங்களை நேரில் கண்டால் அடிதான் போடவேணும் போய் வேலையைப் பாருங்கோ என்று சொல்லி இருந்தேன். இன்று ......

வார்த்தைகள் இல்லை அண்ணா. சிலரின் அவசரம், தவறான முடிவுகள் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. நடக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது எல்லாம் இவ்வளவு விரைவில் நடக்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.

உங்கள் நலன் வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஜீவா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.