Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!

ltte-pottan-528x250.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார்.

போருக்கு பிந்திய யாழ்ப்பாண சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனில் இருந்து வந்து அரியாலையில் நாயன்மார்கட்டில் குடியேறினார்.

இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்து உள்ளார்.

வீட்டில் இருந்து வெளியேறிய பின் திரும்பி வந்த இவர் நெஞ்சு வலியால் அவதி அடைந்து காணப்பட்டார் என்றும் அயல் வீட்டுக்காரர்களிடம் இருந்து தண்ணீர், வெந்நீர் பெற்று குடித்தபோதிலும் குணமாகவில்லை என்றும் இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்து போனார் என்றும் தெரிகின்றது.

மாரடைப்புக்கு காலம் தாழ்த்தி சிகிச்சை பெற வந்தமையால் ஏற்பட்ட இயற்கை மரணம் இது என்று வைத்திய நிபுணர்கள் அறிவித்து உள்ளார்கள்.

http://www.ampalam.com/2013/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மருந்தை ஏற்றினார்களோ யார் அறிவார்..!? ஆழ்ந்த இரங்கல்கள்.!

ஆழ்ந்த இரங்கல்கள்

///போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தின் அமைதிச் சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனில் இருந்து வந்து அரியாலையில் நாயன்மார்கட்டில் குடியேறினார்.///

ஆழ்ந்த இரங்கல்கள் ........

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...இங்கே இருவர் புலனாய்வு  ரேஞ்சிக்கு மற்றவரை துரோகியாக்கி எழுதிச்சினம் எங்கே காணோம் :unsure:  :(

மருந்தை ஏற்றினார்களோ யார் அறிவார்..!? ஆழ்ந்த இரங்கல்கள்.!

இன்னும் சொல்லியிருக்கலாம்..army தான் doctors, பக்கத்து வீட்டு காரர் எல்லாரையும் பயமுறுத்தி பொய் சொல்ல சொல்லியிருக்கலாம் என்று... (German government க்கு பயந்து)

இங்கே தான் எங்கட போராட்டம் நிற்கிறது.....உண்மை எதுவோ இருக்க.....எதையோ நினைத்து எதையோ செய்து....இருந்ததையும் கெடுத்தது தான் எங்களது அறிவாளிகளின் செயல்....

மரணித்தவர் யாழுக்கு vaccation போயிருக்கிறார்.......

Edited by naanthaan

ஆத்மா சாந்தியடையட்டும்...இங்கே இருவர் புலனாய்வு  ரேஞ்சிக்கு மற்றவரை துரோகியாக்கி எழுதிச்சினம் எங்கே காணோம் :unsure:

உங்களுக்கு விளக்கம் குறைவு. நாக்கலை விட்டால் யாழில் எழுதியது சீரோ. எழுத உடனே மனச்சாட்டியை இழுப்பது வழமை.  ஆனால் எழுதுவது இப்படியான பிராக்கு போகாத தனகல்களும், வம்புக்கிளுப்புகளுமே.

பொட்டரை பற்றி  யாழின் மாறுக்கருத்துகள் எழுதுவது எல்லாம் பொய் என்று எல்லோருக்கும் தெரியும். நான் அப்படி கேவலமான  யாழில் தரக்குறைவான எழுத்துக்களை எழுதுவதில்லை. யாழில் பதிய பட்ட செய்திகளை மட்டும்தான் விவாதிப்பேன்.

நக்கலுக்கு மேலே உங்களுக்கு ஏதாவது முடியுமாக இருந்தால்,  பத்திரிகையில் வந்த செய்தியை பற்றி நான் அந்த திரிகளில் எழுதியவற்றை இங்கே கொண்டுவந்து போட்டு உங்கள் விவாத்தை ஆரம்பியுங்கள். அதில் என்ன தர்க்கப் பிழை இருக்கு என்று பார்த்துவிடுவோம்.

துரோகத்தனமாக நடப்போர் தங்களை தாங்கள், கிழிந்து போன கந்தைகளாள்அடிக்கடி இழுத்து மறைக்கிறார்கள். அது சகலருக்கும் தெரிதிறது.

விசாரணை வந்தால் கோத்தாவை காப்பாற்ற அவரை அமைச்சை கூட மாற்றி காப்பாற முயல்கிறாகள். 

பொட்டரின் அண்ணாவின் படம் எங்கே?
இவரை போல தான் அவரா?

Edited by naanthaan

பொட்டரின் அண்ணாவின் படம் எங்கே?

இவரை போல தான் அவரா?

பகிடிதான் எழுதீனீர்களா.

எது ஊர்?

:lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டரின் அண்ணாவின் படம் எங்கே?

இவரை போல தான் அவரா?

அண்ணா அல்ல தம்பி என்று நினைக்கிறேன்.  அவர்கூட ஊருக்கு Vacation போயிருக்கிறார் என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அல்ல தம்பி என்று நினைக்கிறேன்.  அவர்கூட ஊருக்கு Vacation போயிருக்கிறார் என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்.  

Vacation என்றால்.அவர், தனது குடும்பத்தை, வாழும் நாட்டில் விட்டு, விட்டு... தனி ஆளாய்ப் போவது வைக்கேஷனா?

நீங்க‌ளும், உங்க‌டை வைகேஷ‌னை, இப்ப‌டித்தான்... கொண்டாடுகின்ற‌னீர்க‌ளா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...இங்கே இருவர் புலனாய்வு  ரேஞ்சிக்கு மற்றவரை துரோகியாக்கி எழுதிச்சினம் எங்கே காணோம் :unsure:  :(

வதந்திகளை வாந்தி எடுக்கும் ஊடகங்களை சாடாமல் ஊடகங்களில் வாசித்த இருவர் வாதிடுவதை சாடுவது முறையோ??

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டரின் அண்ணாவின் படம் எங்கே?

இவரை போல தான் அவரா?

உங்களுக்கு..... இப்படியான, தலைப்புக்களில் மட்டும், கருத்து எழுதச் சொல்லி யார் சொல்லித் தந்தாங்கள்.

அதை முதலில், சொன்னால்... நீங்கள், ஆவளுடன் கேட்ட படத்தை காட்டுவதைப் பற்றி, பின்னர்... யோசித்து, முடிவெடுத்து... அறியத் தருகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சொல்லியிருக்கலாம்..army தான் doctors, பக்கத்து வீட்டு காரர் எல்லாரையும் பயமுறுத்தி பொய் சொல்ல சொல்லியிருக்கலாம் என்று... (German government க்கு பயந்து)

இங்கே தான் எங்கட போராட்டம் நிற்கிறது.....உண்மை எதுவோ இருக்க.....எதையோ நினைத்து எதையோ செய்து....இருந்ததையும் கெடுத்தது தான் எங்களது அறிவாளிகளின் செயல்....

மரணித்தவர் யாழுக்கு vaccation போயிருக்கிறார்.......

அறிவாளி என்று ஒத்துக்கொண்டதுக்கு நன்றி.. :D ஆர்ம்ஸ்ட்ரோங் நிலாவில் இறங்கினாரா என்பதையே கேள்வி கேட்கினம்.. நீங்கள் வேறை..

நான் இந்தச் செய்தியை தேசிய ஊடகங்கள் என்று செல்லிக்கொள்கிற சில சுயவிளம்பர ஊடகங்களில் பார்த்தேன். ஓரு ஊடகத்தில் பொட்டம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
இன்னொரு ஊடகத்தில்  பொட்டம்மானின் சகோதரர் படுகொலை என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் செய்தியை வாசித்த போது அவர் மாரடைப்பால் காலமானார் என்று தான் உள்ளே இருந்தது.
ஜேர்மனியில் வசித்த அவர் ஏன் ஊருக்குச் சென்றார்? பொட்டம்மானின் சகோதரர் என்று தெரிந்தால் உயிருக்கு ஆபத்து எற்படும் என்பதை ஏன் அவர் உணரவில்லை.அல்லது அப்படி ஒன்றும் நடக்காது ஊருக்கு நீங்கள் வரலாம் என்று யாரும் அவருக்கு உத்தரவாதம் கொடுத்தார்களா? இதைப்பற்றி எல்லாம் எந்தத் தகவலும் இல்லை.
அவர் இறந்தது மாரடைப்பால்.அது இயற்கையாகவும் வந்திருக்கலாம் சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியதன் மூலமும் வந்திருக்கலாம்;.அது பற்றியும் எந்த விரிவான தகவலும் இல்லை.
ஆனால்  பொட்டம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு - பொட்டம்மானின் சகோதரர் படுகொலை என்று தலைப்பு போட்டு அதை பரபரப்பு செய்தியாக்கி(தலைப்பு மட்டும் தான் பரபரப்பு செய்தி உள்ளே இயற்றை மரணம் என்ற சாதாரண செய்தி தான்.) இந்த ஊடகங்கள் வெளியிட்டதை பார்த்தபோது முன்பு ஊர் கோவில்களில் கச்சான் விற்பவர்கள் ஒரு சுண்டு 2 ரூபா 3 சுண்டு 5 ரூபா என்று கூவிக் கூவி விற்றதைப் போல பொட்டம்மான் 5யூரோ பொட்டம்மான் 10 யூரோ என்று கூவி விற்பதை போன்ற ஒரு உணர்வு தான் ஏற்பட்டது.
 
அறிவாளி என்று ஒத்துக்கொண்டதுக்கு நன்றி.. :D ஆர்ம்ஸ்ட்ரோங் நிலாவில் இறங்கினாரா என்பதையே கேள்வி கேட்கினம்.. நீங்கள் வேறை..

என்ன ஆம்ஸ்ட்ரோங் நிலவில் இறங்கிட்‌டாரா????

உங்களுக்கு..... இப்படியான, தலைப்புக்களில் மட்டும், கருத்து எழுதச் சொல்லி யார் சொல்லித் தந்தாங்கள்.

அதை முதலில், சொன்னால்... நீங்கள், ஆவளுடன் கேட்ட படத்தை காட்டுவதைப் பற்றி, பின்னர்... யோசித்து, முடிவெடுத்து... அறியத் தருகின்றேன்.

குழம்புற குட்டையை கூட குழப்புவம் என்று ஒரு பொதுநல நோக்கு தான்

:)

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவினது அரசபயங்கரவாத இயந்திரம், தமிழக்கெதிராகத் தாம் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும் திருகுதாளம் நிறைந்ததாகவே இப்போதும் உள்ளது. இங்கு கருத்தெழுதுவோர் தேவையில்லாது , சரியான தகவல் இல்லாது, அரச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் அப்பட்டமான பொய்யுரைகளை நம்பியும், யார்மீதோ இருக்கும் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளையும் உள்ளடக்கியும் மறுத்தான் போடுபர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு திறந்தவெளிச்சிறைச்சாலையில் என்னவெல்லாம் நடக்கவேண்டுமோ அவையெல்லாம் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றது. அதற்காக புலம்பெயர் தேசங்களிலிருந்து எம்மவர்களோ அன்றேல் புலி உறுப்பினர்களோ இல்லையே அவர்களது உறவுகளோ புலம்நோக்கிச் செல்வதை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. புறமுதுகில் குதிக்கால்பட அதிவிரவு ஓட்டத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்களே இங்கு அதிகம் செமிபாட்டிற்காக கருத்தெழுதுவது, எப்போதடா குத்தலாம் என மங்கலுக்குள் ஒழிந்திருந்து வசைபாடுவது இவகள் அனைத்தையும் விட்டொழியுங்கள். தமிழீழத்துக்காகப் போராடிய மாவீரர் மற்ரும் களத்தில் நின்ற உறவுகள் முகங்களில் சேறள்ளிவீசும் கைங்கரியத்தை இத்தோடு விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தச் செய்தியை தேசிய ஊடகங்கள் என்று செல்லிக்கொள்கிற சில சுயவிளம்பர ஊடகங்களில் பார்த்தேன். ஓரு ஊடகத்தில் பொட்டம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
இன்னொரு ஊடகத்தில்  பொட்டம்மானின் சகோதரர் படுகொலை என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் செய்தியை வாசித்த போது அவர் மாரடைப்பால் காலமானார் என்று தான் உள்ளே இருந்தது.
ஜேர்மனியில் வசித்த அவர் ஏன் ஊருக்குச் சென்றார்? பொட்டம்மானின் சகோதரர் என்று தெரிந்தால் உயிருக்கு ஆபத்து எற்படும் என்பதை ஏன் அவர் உணரவில்லை.அல்லது அப்படி ஒன்றும் நடக்காது ஊருக்கு நீங்கள் வரலாம் என்று யாரும் அவருக்கு உத்தரவாதம் கொடுத்தார்களா? இதைப்பற்றி எல்லாம் எந்தத் தகவலும் இல்லை.
அவர் இறந்தது மாரடைப்பால்.அது இயற்கையாகவும் வந்திருக்கலாம் சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியதன் மூலமும் வந்திருக்கலாம்;.அது பற்றியும் எந்த விரிவான தகவலும் இல்லை.
ஆனால்  பொட்டம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு - பொட்டம்மானின் சகோதரர் படுகொலை என்று தலைப்பு போட்டு அதை பரபரப்பு செய்தியாக்கி(தலைப்பு மட்டும் தான் பரபரப்பு செய்தி உள்ளே இயற்றை மரணம் என்ற சாதாரண செய்தி தான்.) இந்த ஊடகங்கள் வெளியிட்டதை பார்த்தபோது முன்பு ஊர் கோவில்களில் கச்சான் விற்பவர்கள் ஒரு சுண்டு 2 ரூபா 3 சுண்டு 5 ரூபா என்று கூவிக் கூவி விற்றதைப் போல பொட்டம்மான் 5யூரோ பொட்டம்மான் 10 யூரோ என்று கூவி விற்பதை போன்ற ஒரு உணர்வு தான் ஏற்பட்டது.

எல்லாம் ஊடக விபச்சாரம் அண்ணா..

பொட்டரின் அண்ணாவின் படம் எங்கே?

இவரை போல தான் அவரா?

பொட்டருக்கு கறுப்பு மை அப்பி.. உடம்பு கட்டை கொஞ்சம் குறைத்தால் சரி.. :)

நான் இந்தச் செய்தியை தேசிய ஊடகங்கள் என்று செல்லிக்கொள்கிற சில சுயவிளம்பர ஊடகங்களில் பார்த்தேன். ஓரு ஊடகத்தில் பொட்டம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
இன்னொரு ஊடகத்தில்  பொட்டம்மானின் சகோதரர் படுகொலை என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் செய்தியை வாசித்த போது அவர் மாரடைப்பால் காலமானார் என்று தான் உள்ளே இருந்தது.
ஜேர்மனியில் வசித்த அவர் ஏன் ஊருக்குச் சென்றார்? பொட்டம்மானின் சகோதரர் என்று தெரிந்தால் உயிருக்கு ஆபத்து எற்படும் என்பதை ஏன் அவர் உணரவில்லை.அல்லது அப்படி ஒன்றும் நடக்காது ஊருக்கு நீங்கள் வரலாம் என்று யாரும் அவருக்கு உத்தரவாதம் கொடுத்தார்களா? இதைப்பற்றி எல்லாம் எந்தத் தகவலும் இல்லை.
அவர் இறந்தது மாரடைப்பால்.அது இயற்கையாகவும் வந்திருக்கலாம் சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியதன் மூலமும் வந்திருக்கலாம்;.அது பற்றியும் எந்த விரிவான தகவலும் இல்லை.

அவர் ஒரு சில வருடங்களாக பக்திக்குள் தன்னை ஆழ்த்தி ஒரு பற்றற்ற வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருந்தார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு நாட்டில் நடந்த நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம்.. வீட்டில் நடந்த நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம். அத்துடன் ஐரோப்பிய வாழ்க்கைக்கு தயாராகும் எம்மவர்கள் குடும்ப அங்கத்தினர்களில் காட்டும் அக்கறை என்பது மழுங்கிக் கொண்டு வருகிறதோ என்றும் சில வீடுகளைப் பார்க்கும்போது எண்ணத் தோன்றுகிறது. இப்படியானவர்கள் அல்லேலுயா போன்ற சபைகளை நாடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் இவரோ யேர்மன்காரர்கள் காவியுடுத்தி நடாத்தும் ஒரு இந்து சபையை நாடி அதிலே தன்னை இணைத்திருக்கிறார் என்பதை தற்பொழுதுதான் என்னாலும் அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவரோ யேர்மன்காரர்கள் காவியுடுத்தி நடாத்தும் ஒரு இந்து சபையை நாடி அதிலே தன்னை இணைத்திருக்கிறார் என்பதை தற்பொழுதுதான் என்னாலும் அறிய முடிகிறது.

ஐம்பதை தாண்டினால் எல்லொருக்கும் பக்தி வருகுது.........கரே ராம கரே கிருஷ்ணா

ஐம்பதை தாண்டினால் எல்லொருக்கும் பக்தி வருகுது.........கரே ராம கரே கிருஷ்ணா

எனக்கு 50க்கு முதலே பக்தி இருந்தது. 50க்குப் பிறகுதான் அதை வெளிக்காட்டும் தைரியம் வந்திருக்கிறது! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.