Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படித்தான் எனக்கு வேலை போச்சுது - நிழலி

Featured Replies

 

பத்து வருடங்கள் முன்னர் ஒரு பெரும் IT நிறுவனத்தில் நிரந்தர வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
 
வேலை தந்த முகாமையாளரை இரண்டரை மாதத்தில் தூக்கி விட்டார்கள்.
 
தற்காலிகமாக ஒரு முகாமையாளரை அமெரிக்காவில் இருந்து தலைமையகம் அனுப்பி இருந்தது. 
 
அவர் இருந்த ஐந்து வாரத்தில், எனது மூன்று மாத 'probation period' முடிவுக்கு வர, உன் குறித்த மதிப்பீடுகளை பதிவு செய்யும் முன்னர், உன்னை எடுத்த முகாமையாளரை தூக்கி விட்டதால், எனக்கு விபரங்கள் போதாமையால் முடிவு  எடுக்க கஷ்டமாக உள்ளது.
 
எனினும், உனது 'குழுத்தலைவர்' உடன் பேசி அவர் தந்த விபரத்தினை வைத்து உன்னை நிரந்தரமாக்க சிபார்சு செய்கிறேன் என்றார். சில பத்திரங்களில் கை எழுத்து இட்டு, எனது கை எழுத்தினையினையும் வாங்கி எனக்கும் ஒரு copy தந்து HR மேல் விபரங்களை அனுப்பி வைக்கும் என்று சொல்லி வைத்தார். 
 
அடுத்த வாரமே புது முகாமையாளர் அமெரிக்காவின் இன்னுமொரு பகுதியில் இருந்து வந்து சேர்ந்தார். இவர் ஒரு பிரிட்டிஷ் காரர் ஆகையால் ஊருக்கு திரும்பி வந்து வேலை பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
 
முதல் நாள் அறிமுகத்திலேயே ஆள் சரியில்லையே என மனம் சொல்லியது. அடுத்த வாரம் அளவில் அங்கிருந்த 'ஆசிய' ஊழியர்கள் மத்தியில் புதியவர் 'bit funny' என்ற அபிப்பிராயம் பரவி இருந்தது.
 
இரண்டாவது வாரம் என்னை அழைத்து,நீ புதியவர் எனபது எனக்குத் தெரியும். இங்கே ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். இதன்படி உனது 'probation period' மூன்று மாதத்தினால் நீடிக்கப் படுகிறது. பின்னர் உனது மதிப்பீட்டினை வைத்து நான் எனது முடிவினை செய்வேன் என்று கூறி தான் சொன்ன கடிதத்தினை எடுத்து, எனக்கு முன் கையெழுத்து வைத்து கையிலேயே தந்து விட்டார்.
 
விடயத்தினை பெரிதாக எடுக்காமல், எனது வேலையில் எனக்கு நம்பிக்கை இருந்ததாலும், பேசாமல் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.
 
இடையே ஒரு சீக்கியரும், ஒரு சீனரும் வேறு வேலை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர். போகும் போது, புது முகாமை குறித்து எனக்கு எச்சரிக்கை  செய்து தான் போனார்கள். 
 
சரியாக மூன்று மாதம் முடிய 2 நாட்கள் இருக்கையில், ஒரு வியாழன் மாலை எல்லோரும் போய் விட்டார்கள். தனியே ஒரு அறிக்கை தயார் செய்து முடிக்கையில், பின்னே இருவர்.
 
திரும்பிப் பார்த்தால், HR முகாமையாளரும், நம்ம முகாமையும். அதே 'Have you got a sec'?
 
என்ன விடயம் என்றால், நீ 'probation fail' ஆகி விட்டாய். எனவே உன்னை போக விடுகின்றோம். 
 
எனக்கு இருந்த அதிர்ச்சியில் எழுந்து கோபத்துடன் வந்து விட்டேன்.  அன்று இரவு நித்திரை வரவில்லை. தீடீரென எழுந்து என்னைப் பார்த்த  மனைவி ஒரே ,  ஒரு வசனம் சொன்னார்: இந்த வேலையை நினைத்தா இங்கே வந்தீர்கள்?  பேசாமல் படுங்கள். எல்லாம் நன்மைக்கே.
 
அசந்து தூங்கிப் போனேன். காலையில் உறுதியுடன் எழுந்தேன். செய்ய வேண்டிய வேலைகள் இரண்டு. வேலை தேடுவது. இரண்டாவது அந்த முகாமைக்கு 'சட்ட ரீதியாக குடைச்சல்' கொடுப்பது. காரணம் அங்கே சட்ட ரீதியான தவறுகள் நடை பெற்று இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததை உணர்ந்திருந்தேன்.
 
இரண்டாவது வாரமே, அதை விட மிகப் பெரிய நிறுவனத்தில் 'contacator' ஆக வேலை எடுத்தேன். (இனிமேல் நிரந்தர வேலை வேண்டாம் என முடிவு எடுத்து இன்று வரை கடைப் பிடிக்கின்றேன்)   
 
ஒரு அரச இலவச சட்ட ஆலோசனை நிறுவனத்தில் ஆலோசனை கேட்கப் போனேன். அங்கு இருந்தவரோ, ஒரு கறுப்பு இனத்தவர். சகலத்தினையும் கேட்டு விட்டு, ஆகா, நல்லா மாட்டுப் பட்டு இருக்கிறார்கள். நான் சொல்வது போல செய். ஒரு சட்ட நிறுவனத்துக்கும் போகாதே. நீயே கடிதம் போடு என சில 'அரிய' ஆலோசனைகள் தந்தார்.
 
அவரது ஆலோசனைப் படி, HR பிரிவு தனியே இருக்கும் நிறுவனத்தில்  அந்த முகாமை, எந்த அதிகாரத்தில் எனது நீடிப்பில் கை எழுத்து போட்டார்? HR அதை ஏன் செய்ய வில்லை.
 
இடையே வந்த முகாமை நிரந்தரமாக்கியது எவ்வாறு? அது குறித்து HR நிலைப்பாடு என்ன?  
 
புதிய முகாமைக்கு 'அனைவருக்கும் சமஉரிமை' குறித்த பயிற்சி வழங்கப் பட்டதா? 
 
ஆம் ஆயின் எப்போது? பயிற்சி அளித்தவர் இவர் குறித்து தனது கருத்தாக எதுவித பதிவும் செய்தாரா? 
 
இல்லையாயின், ஏன் இல்லை.
 
இவர் பதவிக்கு வரும் போது இருந்த ஆசிய ஊழியர்கள் எத்தனை பேர்?
 
இப்போது இருப்பவர்கள் எத்தனை பேர்?
 
காரணம் என்ன?
 
என மொத்தம் 62 கேள்விகள் அனுப்பி இருந்தேன். 
 
மேலும் வழக்கினை பலப் படுத்துவதற்காக 'தொழில் நீதிமன்றில்' ஒரு வழக்கினையும் பதிவு செய்தேன். ஆறு மாதத்துக்கு இடையில் பதவி நீக்கப் படின் unfair dismissal, வழக்கு தள்ளு படி செய்யப் படும் என்பதால்  கறுப்பர் ஆலோசனைப் படி, unfair dismissal basing on race discrimination எனும் பிரிவின் கீழ் இதனை பதிவு செய்து இருந்தேன்.
 
கடிதம் கிடைத்த மூன்றாம் நாள், என்னை தொலை பேசியில் அழைத்த HR, தவறு நிகழ்ந்து விட்டதாயும், மறுபடியும் வேலைக்கு எப்ப வருகின்றாய் என்பதாக கேட்டார்கள்.
 
அட எங்..   கொக்கா மக்கா....
 
கறுப்பரிடம் சொன்னேன். வயிறு குலுங்கச் சிரித்தார். தூண்டில்ல நல்ல மீன் சிக்கி இருக்கிறது. ஏதோ எனக்கு இரண்டு pint வார் என்றார்.
 
போங்கடா, நீங்களும் உங்கட வேலையும் என்று, நியாயமான நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு வழக்கினை வாபஸ் பெற்றேன்.  
 
இதனை எதற்கு சொல்கிறேன் எனில், ஒரு வழி அடிபட்டால், நிழலி பல வழி திறக்கும். 

 

 

இது  backgroud check ஐ பாதிக்காதா?

 

அர்ஜுன் அண்ணாவின் தடையை நீக்குங்கோ நல்ல இடத்தில் புது வேலை கிடைக்கும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவலைப்பட‌ எதுவுமே... இல்லை நிழலி.
நீங்கள் செய்த தவறால், உங்களை வேலையிருந்து நிற்பாட்டவில்லை... எல்லோருக்கும் நடந்தது தான்... உங்களுக்கும் நடந்துள்ளது.
முதலில்... ஒரு கிழமை, மனதை ஆசுவாசப்படுத்த பழைய நிகழ்வுகளை மறந்து விட்டு, உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யுங்கள். (ப்ளூ லேபல், குடல்கறி, இரத்தவறை, மூழைப் பொரியல் என்று... வெளுத்து வாங்குங்கோ)
அடுத்த கிழமை உங்கள் அனுபவத்துக்குப் பிடித்தமான வேலைகளை பட்டியல் இட்டு, அந்த நிறுவனங்கள் எங்குள்ளது என்று விலாசங்களை சேகரியுங்கள், முக்கியமாக... பயணத் தூரத்தையும் கவனியுங்கள். இணையத்திலும், ரொறொன்ரோவிலிருந்து வெளிவரும் அனைத்து வேலை  சம்பந்தமான பத்திரிகைகளை வாங்குங்கள், அல்லது அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று... உங்களுக்கு பொருத்தமான வேலைக்கு அழைத்துள்ளார்களா என்று பார்த்து... அழைக்காவிட்டாலும், விண்ணப்பத்தை அனுப்புங்கள். இப்போது... கோடை விடுமுறை முடிந்து வேலை ஆரம்பிக்கும் போது... பல இடங்களில்... வெற்றிடங்கள் ஏற்படுவது வழ‌மை. இந்த நேரம்.. புதிய வேலை தேடுவதற்கு சாத‌கமான நேரம். அத்துடன்... நீங்கள் இதுவரை செய்த வேலைகளில்... சேகரித்த அனுபவங்கள், புதிய வேலை தேடுவதில்... முன்பிருந்ததை விட இலகுவாக இருக்கும். :rolleyes:

 

எனக்கும்... மூன்று தரம் வேலை போனது. ஒவ்வொரு முறை புதிய வேலை எடுக்கும் போதும்... முன்பிருந்ததை விட நன்றான வேலையே... கிடைத்தது.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று... கனநாள் வேலையில்லாமல் இருந்தால்.... மனுசி கூட இளக்கமாய்த்தான் பார்க்கும். அதற்கு முதல், அடுத்த வேலையை.. எடுத்துப் போடுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா, கவலையான செய்தி ஆனால் இதுவும் கடந்து போகும். நிலைமையை இலகுவாக எடுக்கும் உங்கள் மனோதிடத்தை மெச்சுகிறேன். நான், இதுவரை வேலையை விட்டு நீக்கப்படாததால் அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. புதிய, நல்ல வேலை கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். (அவுசில IT காரருக்கு ஓரளவுக்கு வேலையல் இருக்காம்  :unsure:  பிளட்ட வித்துப்போட்டு பிளைட் ஏறுற முடிவெடுத்தால் சொல்லுங்கோ :rolleyes: !)

பி கு - ஈசன் அண்ணாவின் கதையைக் கேட்டால் "இப்பிடித்தான் எனக்கு மனிசி அடிச்சது - நிழலி" எண்ட நிலை வந்தாலும் வரும்  :lol:  .

 

 

வருத்தமான செய்தி

 

தெரிந்ததில் சொந்த வியாபாரம் தொடங்கலாமே

கறுவலுக்கும் வேலை போகப்போகுது. இன்னும் திட்டமாகச் சொல்லவில்லை. சூசகமாகச் சொல்லியாயிற்று. ஒக்டோபர் கடைசிக்குள் எல்லா வேலையும் சிங்கப்பூர் போகுது. நாங்கள் இப்ப சிங்கப்பூர்வாலாக்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். (மாட்டேன் என்று சொன்னால் மாடேறி.. சீ சீ... விடுப்புக் கொடுப்பனவுகள் கிடைக்காது.)

வயசும் வட்டுக்குள் என்பதால் IT இல் இன்னொரு வேலை கிடைக்குமோ தெரியவில்லை. கனடா மாதிரி 60 % கிடைக்காது. 0 % தான் கிடைக்கும்.


>கனநாள் வேலையில்லாமல் இருந்தால்.... மனுசி கூட இளக்கமாய்த்தான் பார்க்கும். அதற்கு முதல், அடுத்த வேலையை.. எடுத்துப் போடுங்கள். :)

இப்பவே மனிசி அப்படித்தான் பாக்குது.. அப்ப என் நிலை?

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஒரு வேலையில் நிலைத்திருக்க சில சூட்சுமங்களை கையாள வேண்டிவரும்.

 

எந்த வேலைக்குச் சென்றாலும் அந்த வேலையில் முன்பிருந்தவரின் பங்களிப்பு எப்படி இருந்தது? அதனை எந்த விதத்தில் தம்மால் மேலதிகமாக மேம்படுத்த முடியும்? அதனால் நிறுவனதிற்கு எவ்வளவு செலவு மிச்சம் (cost effective)? என நிரூபித்து வேலையில் நிலைக்க வேண்டும்.

நிலைத்தவுடன் உங்களின் தொழில் சூட்சுமங்களை வள்ளல் மாதிரி பறைசாற்றி, அனைவருக்கும் சொல்லிக்கொடுத்துவிடக் கூடாது. (துரோணர் கூட தன்னிடம் வில்வித்தை பயில வருவோர்க்கு அனைத்து வித்தைகளையும் சொல்லிக் கொடுக்கவில்லை) :icon_idea:

ஏதும் தொழிற் நுட்ப பிரச்சனை என்றால் உங்களால் தான் இதனை சரி செய்ய இயலும் என்ற நிலையில் உங்களின் வேலைத் திறனும், உங்களின் பங்களிப்பும் நிச்சயம் அதில் இருக்க வேண்டும்.

பொதுவாக தகவல் தொழிற்நுட்ப வேலைகள், ஒரு கூட்டு முயற்சியாக, குழுவாக செயல்படும்படியே இருக்கும். அம்மாதிரி சமயங்களில் உங்களின் புத்திக்கூர்மையை பயன்படுத்தி, நீங்கள் பங்களிக்கும் பகுதியை மட்டும் தனிப் பிரிவாக (seperate module) எடுத்து வந்துவிட வேண்டும்.. கூட்டதில் 'கோவிந்தா' போட்டால், உங்களுக்கு எப்பவுமே மதிப்பிருக்காது, நிறுவனத்தின் பொருளாதார தேக நிலையின்போது 'கல்தா' முதலில் உங்களுக்கே வரும்.

உங்கள் வேலை போக, அதனை சார்ந்திருக்கும் அல்லது அதனால் பயன்பெறும் மற்ற துறைக்களிலும் சிறிது கவனம் செலுத்தி அதனையும் கற்றுக்கொள்வது நல்லது. சமயத்தில் இந்த பல்துறை நிபுணத்துவத்தால்(Multi skills) நிறுவனத்தில் உங்களின் மதிப்பு மேலும் உயரும்.

உங்கள் நிபுணத்துவத்தில் நிச்சயம் உலக அங்கீகரிப்பு முத்திரை பெற்ற சான்றிதழ்(accredited certificate) வைத்திருப்பது மிக மிக முக்கியம்.

இதைத் தவிர உங்களின் தொழிலில், திட்டவேலைகளில் சரியான ஆளுமை திறனுக்கான( Management certificate ) சான்றிதழ் பெற்றிருந்தால் இன்னமும் நன்று. பதவி உயர்விற்கும் இது வழிகோலும்.

 

நிறுவனங்களும் எங்கள் நிறுவனத்தில் இத்தனை சான்றிதழ் பெற்ற நிபுணர்கள் இருக்கிறார்களென வியாபார போட்டிகளில் சொல்லி வெற்றி பெற ஏதுவாக இருக்கும். இதனால் உங்களை நிறுவனத்தின் முக்கிய புள்ளியாக எப்பொழுதும் வைத்திருப்பர்.

 

(பொறியியல் படிப்பைத் தவிர ஏழு வகை சான்றிதழ் எம்மிடமுண்டு. அந்த அனுபவத்தில் இதனை சொல்கிறேன்)
 

கூடிய விரைவில் உயர்ந்த வேலையில் அமர வாழ்த்துக்கள்!

 

 

சோர்வை அடித்து நொறுக்குங்கள்... ! (மனைவியை அல்ல :lol:..)

 

vil2_bowling.gif

 

 

Good Luck.

  • கருத்துக்கள உறவுகள்

கறுவலுக்கும் வேலை போகப்போகுது. இன்னும் திட்டமாகச் சொல்லவில்லை. சூசகமாகச் சொல்லியாயிற்று. ஒக்டோபர் கடைசிக்குள் எல்லா வேலையும் சிங்கப்பூர் போகுது. நாங்கள் இப்ப சிங்கப்பூர்வாலாக்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். (மாட்டேன் என்று சொன்னால் மாடேறி.. சீ சீ... விடுப்புக் கொடுப்பனவுகள் கிடைக்காது.)

வயசும் வட்டுக்குள் என்பதால் IT இல் இன்னொரு வேலை கிடைக்குமோ தெரியவில்லை. கனடா மாதிரி 60 % கிடைக்காது. 0 % தான் கிடைக்கும்.

>கனநாள் வேலையில்லாமல் இருந்தால்.... மனுசி கூட இளக்கமாய்த்தான் பார்க்கும். அதற்கு முதல், அடுத்த வேலையை.. எடுத்துப் போடுங்கள். :)

இப்பவே மனிசி அப்படித்தான் பாக்குது.. அப்ப என் நிலை?

 

கறுவலுக்கும், புதிய வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

பி கு - ஈசன் அண்ணாவின் கதையைக் கேட்டால் "இப்பிடித்தான் எனக்கு மனிசி அடிச்சது - நிழலி" எண்ட நிலை வந்தாலும் வரும்  :lol:  .

 

 

 

என்னுடைய அந்த லூஸ் பதிவுக்குப்பின்னால் பல சீரியசான விசயங்கள் இருக்கிறது தும்பளையான்.
 
அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பெருந்தொகையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டு கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் அந்த நிறுவனம் மேல் எழுந்திருக்கிறது. கூடவே எனது நிலையும் உயர்ந்தது தான். தொழில் நுட்ப ரீதியாக "முடியாது" என்று ஒரு நாளும் சொன்னதே கிடையாது.
 
எனக்கு ஒரு பதவி தருவதாகச் சொன்னார்கள். ஒருவருடத்தின் பின் நடுத்தர வயதான ஒருவரைக் கொண்டுவந்து அந்தப் பதவிக்குப் போட்டார்கள். அந்தாளுக்கும் தொழில் நுட்பத்துக்கும் சமப‌ந்தமில்லை. ஆனால் பிரிதொரு பெயர்பெற்ற கம்பனியில் மேல்நிலைப் பதவியில் இருந்தவர்.
 
அவர் மூலம் கம்பனிக்கு மேலும் பெயரும் வருமானமும் வரும் என்று நம்பினார்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால் அந்தாள் எனக்கும் CEO க்கும் நடுவில் புகுந்து விட்டான். ஏனென்றால் அந்தப் பதவியின் பெயர் CTO.
 
அந்தக்கம்பெனிக்காக  நன்றாக வேலை செய்திருக்கிறேன். வீட்டுக்கும் வேலையைக் கொண்டு வந்து செய்திருக்கிறேன். 
 
ஏமாற்றத்தில் நான் எடுத்த உணர்ச்சிகரமான முடிவுதான் அது. 
 
எல்லாம் நன்மைக்கே!! 

 

இரண்டாவது வாரமே, அதை விட மிகப் பெரிய நிறுவனத்தில் 'contacator' ஆக வேலை எடுத்தேன். (இனிமேல் நிரந்தர வேலை வேண்டாம் என முடிவு எடுத்து இன்று வரை கடைப் பிடிக்கின்றேன்)   
 

 

'நிரந்தர வேலை' என்று பெயர்தான், ஆனால்  வேலைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. சம்பளமும் குறைவு, நிறைய அரசியல், பயம், மன உளைச்சல்தான் மிச்சம். நானும் எலிசபெத் மஹாராணி வந்து கூப்பிட்டாலும் இனி  நிரந்தர வேலைக்கு போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் உயர்ந்த வேலையில் அமர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

 
வேலை இல்லாமல் இருக்கும் போது அடுத்த பிள்ளைக்கு தயார் படுத்தல் "முன்னெடுப்புகளை " மேற்கொள்ளலாமே நிழலி. :icon_idea:

 

 

 

என்னுடைய அந்த லூஸ் பதிவுக்குப்பின்னால் பல சீரியசான விசயங்கள் இருக்கிறது தும்பளையான்.
 
அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பெருந்தொகையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டு கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் அந்த நிறுவனம் மேல் எழுந்திருக்கிறது. கூடவே எனது நிலையும் உயர்ந்தது தான். தொழில் நுட்ப ரீதியாக "முடியாது" என்று ஒரு நாளும் சொன்னதே கிடையாது.
 
எனக்கு ஒரு பதவி தருவதாகச் சொன்னார்கள். ஒருவருடத்தின் பின் நடுத்தர வயதான ஒருவரைக் கொண்டுவந்து அந்தப் பதவிக்குப் போட்டார்கள். அந்தாளுக்கும் தொழில் நுட்பத்துக்கும் சமப‌ந்தமில்லை. ஆனால் பிரிதொரு பெயர்பெற்ற கம்பனியில் மேல்நிலைப் பதவியில் இருந்தவர்.
 
அவர் மூலம் கம்பனிக்கு மேலும் பெயரும் வருமானமும் வரும் என்று நம்பினார்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால் அந்தாள் எனக்கும் CEO க்கும் நடுவில் புகுந்து விட்டான். ஏனென்றால் அந்தப் பதவியின் பெயர் CTO.
 
அந்தக்கம்பெனிக்காக  நன்றாக வேலை செய்திருக்கிறேன். வீட்டுக்கும் வேலையைக் கொண்டு வந்து செய்திருக்கிறேன். 
 
ஏமாற்றத்தில் நான் எடுத்த உணர்ச்சிகரமான முடிவுதான் அது. 
 
எல்லாம் நன்மைக்கே!! 

 

 

பிள்ளை தயார்படுத்தலுக்கு ஏற்ற்பாடு செய்ய சொன்னதுக்குத்தான் உங்கட கதைய கேக்க வேண்டாம் எண்டு சொன்னான் அண்ணா. ஆளப் பத்தி உங்களுக்குத் தெரியும் தானே, நீங்கள் வேற "அந்த" மாதிரியான ஐடியா குடுத்தா, சிங்கம் சிலுப்பிக்கொண்டு வெளிக்கிட சாத்தியம் அதிகம் :wub:

மற்றும்படி நிறுவனங்களுக்காக கடினமாக வேலை செய்பவர்களை அவர்கள் கண்டு கொள்வது இல்லை என்பது மிகவும் உண்மை. முதலாளி மாருக்கு ஜால்ரா போடுபவர்களையே தூக்கிக் கொண்டாடுவார்கள். இவர்களில் அநேகருக்கு தொழில்நுட்ப அறிவு/அனுபவம் பூச்சியம் :(

  • கருத்துக்கள உறவுகள்

40வயது வரை அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது கொள்கைகளில் ஒன்று. 

 

பல துறைகளில், பல நிறுவனங்களை பரிசோதித்துப் பார்த்த பின்னர் ஒரு 40வயதில் இறுதியான முடிவிற்கு வந்து நிரந்தர வேலை தேடுவது தான் எனது நீண்ட நாள் திட்டம். தற்பொழுது அதன்படியே அனைத்தம் நடந்து வருகின்றது. 

 

படிப்பு முடித்து  எங்கும் வேலை கிடைக்கவில்லை. படிப்பில் சுமார் தான். எனவே 6மாதம் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேன். அவர்கள் அந்த ஆறு மாதத்தின் பின்னர் எனது வேலையை (படிப்பை பார்த்து அல்ல) பார்த்து அங்கே தொழிற்கல்வி தொடங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்கள். சம்பளம் என்னவோ அடிமாட்டு நிலை தான். அதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வராது. எனது நல்ல நேரம் அந்த நிறுவனம் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. எனவே எனது படிப்பிற்கு சற்று அதிகமான ஒரு தொழிற்கல்விக்கு சம்மதம் தெரிவித்தனர். இரண்டாண்டுகள் நன்றாக படித்து அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் பூர்த்திசெய்திருந்தேன். 

 

பின்னர் தொடர்ந்து இன்னும் இரண்டாண்டுகள் அதே நிறுவனத்தில் மீண்டுமொரு உயர் தொழிற்கல்வி தொடங்கினேன். அதுவும் நன்றாக இரண்டாண்டுகளின் பின்னர் முடித்துவிட்டேன். படிப்பில் கொஞ்சம் ஈடுபாடு வந்ததும் இந்த காலகட்டத்தில் தான்.  

 

எனது முதலாளி அவரது நிறுவனம் உள்ள பிராந்தியத்தின் வலது சாரி கட்சியின் (அந்த கட்சி வெளிநாட்டவர்களின் விடயத்தில் கண்டிப்பானது) நிதிப்பொறுப்பாளர். இது எனக்கு பின்னர் தான் தெரியவந்தது. ஆனால் எனது முதலாளி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னை வேறுவிதமாக நடத்தியது இல்லை (நல்லவங்களும் இருக்காங்கய்யா).

 

பல எம்.பி. மார்கள் எனது முதலாளியுடன் வேலை முடிந்து பீர் குடிக்க வருவார்கள். பார்ப்பதற்கு அழுக்குச்சட்டை அணிந்திருப்பார்கள் (அவர்கள் செய்யும் வேலை அப்படி). அவர்கள் எம்.பி. என்பதே பல வருடங்களிற்கு பின்னர் தான் நான் கண்டு பிடிததேன். தொழிற்கல்வி முடிந்ததும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்கள் கடைபிடிக்கும் ஒரு முறை (அங்கேயே இருந்தால் சம்பளம் அதிகமாக கொடுக்கவேண்டும் என்பது தான் காரணம்). 

 

இறுதியாக அங்கு வேலை செய்த நாளில் எனது முதலாளி எனக்கு சொன்ன ஒரு விடயத்தை நான் இன்றும் கடைபிடித்துக்கொண்டு இருக்கின்றேன். 

 

"எந்த நிறுவனமும் தனக்கு ஒரு பிரச்சனை என வரும்போது நிறுவனத்தின் நலனை தான் பார்ப்பார்கள். அதே போல் நீயும் உனது நலனில் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இரு. நீ வெளியேறுவதால் நிறுவனத்திற்கு நஷ்ரம் என்று சிந்திக்காதே.நிறுவனத்திற்கு பிரச்சனை வரும்போது அவர்கள் முதலில் உன்னை தான் வெளியே அனுப்புவார்கள். எனவே நீயும் அவர்களை போல் முதலில் உனது நலன் பற்றியே சிந்திக்கப்பழகு" என்று இறுதியாக ஒரு சென்ரிமென்ட் டச் கொடுத்து வழி அனுப்பிவைத்தார்.

 

அதன் பின்னர் நான் வேறு வேலை தேடத்தொடங்கினேன். வேலை கிடைக்கும் வரை அரசாங்கத்தில் பணம் பெறுவதற்காக பதிவு செய்திருந்தேன். 3 வாரங்களின் பின்னர் ஒரு வேலை கிடைத்தது. இந்த மூன்று வாரத்திற்கும் அரசாங்கம் ஏதாவது பணம் தரும் என்று எதிர்பார்த்தேன். இறுதியில் அவர்கள் எனக்கு தருவதாக இருந்த பணத்தில் அந்த கழிவு இந்த கழிவு என்று கை வைத்து எனக்கு வந்து சேர்ந்தது என்னவோ ஒரு மணத்தியாலத்திற்கான சம்பளம் கூட இல்லை (என்னமா ஏமாத்திறாங்கள்). 

 

புதிய வேலை நேர்முகத்தேர்வுக்கு போக முதல் மொட்டை அடித்திருந்தேன். வேலை வெட்டி இல்லை என்பதால் இப்படியான கிறுக்குத்தனங்கள் செய்தேன். அவர்கள் கேட்டதற்கு நண்பருடன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டேன் என்று ஒரு பொய்யை சொன்னேன். என்னை எடுத்ததற்கு முக்கிய காரணம் எனது முன்னைய முதலாழி என்னை பற்றி நன்றாக சொன்னது தான் காரணம் என்றார்கள். ஆனால் இந்த வேலையிலும் அடிமாட்டு சம்பளம் தான். அனுபவம் இல்லாதவர்கள் வேலையில் அனுபவத்தை பெறுவதற்காகவே இப்படியான வேலைகளை அவர்கள் கொடுத்தார்கள் (இங்கே தொழிற்கல்வி என்பது அனுபவமாக பார்க்கப்கடமாட்டாது).

 

சரி கிடைத்ததை செய்வோம் என்று சம்மதித்தேன். அடுத்த வாரம் எனது பழைய முதலாழிக்கு ஒரு பாகிஸ்தான் மாம்பழப்பெட்டி பறந்தது (எல்லாம் ஒரு நன்றிக்கடன் தான்).

 

புதிய நிறுவனத்திலும் ஒரு இரண்டாண்டுகள் குப்பை கொட்டியாகிவிட்டது. அடுத்து என்ன? அந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவர்களின் கணணியில் இருந்து வேறு வேலை தேடினேன். அடுத்த வேலை கிடைத்ததும் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். 

 

இங்கேயும் எனக்கு கிடைத்தது ஒரு அருமையான இளைமையான மேலாளர் தான். அருவம் தனது பங்கிற்கு போகும் வழியில் ஒரு சென்டிமென்ட் பஞ்ச் தந்துவிட்டார். 

 

"எப்பொழுதுமே தொடர்ந்து ஏதாவது கற்றுக்கொள். கல்வி தான் அதி சிறந்த மூலதானம். பின்பொரு காலத்தில் அந்த மூலதானம் உனக்கு பல மடங்காக திரும்பிவரும்". 

 

உடனே புதிய வேலையுடன் ஒரு பட்டப்படிப்பயும் சேர்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 4ஆண்டுகள் படிப்பு முடியும் வரை அந்த நிறுவனத்தில் வேலை செய்தேன். படிப்பும் நன்றாக முடிந்தது. உனது தகுதிக்கு இந்த வேலை சரிவராது, உன்னுடைய படிப்பிற்கு எங்களால் சம்பளமும் தர முடியாது என்றனர். அதன் பின்னர் அங்கிருந்து நானாகவே விடைபெற்றேன். எனது வேலைக்கான சான்றிதழையும் என்னையே எழுதச்சொன்னார்கள். அப்படியொரு நற்பெயர் எனக்கு. எனது HR பொறுப்பாளர் என்னிடம் வந்து சான்றிதழ்கள் எழுதும் புத்தகம் ஒன்றை தந்து "இதில் உள்ள எந்த வசனங்களை வேண்டுமென்றாலும் இனி கொப்பி பண்ணி போடலாம்" என்றார். 

 

அதன் பின்னர் தற்பொழுது வேலை செய்தும் நிறுவனத்தில் சேர்ந்தேன். எனது சான்றிதழும் முன்னைய நிறுவனத்திடம் இருந்த நற்பெயரும் வேலை வாங்கிதந்தது. 

 

தற்பொழுது இங்கும் இரண்டு வருடங்கள் குப்பைகொட்டியாகிவிட்டது. 

 

இனி நான் என்ன சொய்வேன் என்று உங்களுக்கு நான் எழுதித்தான் தெரியனும் என்று இல்லை....

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளுக்கெல்லாம் இப்படியான திரியளுக்குள்ளை வேலையே இல்ல...  :o  :( 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மனதுக்குப் பிடித்தமான வேலையும், நிறைய சம்பளமும் கிடைக்க வாழ்த்துக்கள் !

 

கருவலுக்கும் அதே !

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் நிழலி ஒரு வாசல் மூடினால் ஒன்பது வாசல்கள் திறக்கும் என்பார்கள். இதைவிட நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது  backgroud check ஐ பாதிக்காதா?

 

 

நீங்கள் சட்ட ரீதியாக செய்யும் செயல்களினால் எவ்வித பாதிப்பும்  வராது. இது background search செய்கையில் வராமல் சட்டம் தடை செய்கிறது.

 

இதே வேலைக்கு நான் திரும்பி போய் இருந்தால், மறந்து, சட்டைப் பையில் கொண்டு வரக் கூடிய பேனா கூட, திருட்டுக் குற்றம் சுமத்தப் போதுமானது.
 
அவ்வாறு வெளியே அனுப்பினால், background search செய்கையில் வரும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.