Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையாருக்கு ஏன் இந்த தேவையல்லாத வேலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று. இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கேற்ப, பூதகணங்களும் முதலில் ஒரு யானையை பார்த்தார்கள். பின் அந்த யானையின் தலையை துண்டித்து கொண்டு சென்றார்கள். பின்பு சிவபெருமான் அந்த யானையின் தலையை அச்சிறுவனுக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். அந்நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த பார்வதி, யானை தலையுடன் கூடிய அச்சிறுவனைப் பார்த்து, இந்த பிள்ளை யார்? என்று கேட்டார். அப்படி பார்வதி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதியின் மகனுக்கு பிள்ளையார் என்ற பெயரைச் சூட்டி, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வந்த பெயர்கள் தான் விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் போன்றவைகள். இந்த கதையின் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி என்னும் பண்டிகை கொண்டாடப்படுவதாவும் நம்பிக்கை உள்ளது.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பார்வதி அடிக்கடி நீராடியிருந்தால் விக்னம் வந்திராது.. :unsure::(

Edited by இசைக்கலைஞன்

அதுதான் போல் எல்லோரும் அடிக்கடி தங்கள் எமாற்றங்களை காட்டும் போது  "ஊத்தை பிள்ளையார்" என்று திட்டுவார்களோ. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவாட புருஷன் உள்ள போக விடுறதுக்கு அவருக்கு என்ன வந்திச்சு

  • கருத்துக்கள உறவுகள்

....அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று. இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார்....

ம்..ஆ(னா)ணானப்பட்ட கடவுளே பெண்ணிடம் அச்சமுறுகிறார்... !

ஷேம், ஷேம்.. பப்பி ஷேம். :D

அவாட புருஷன் உள்ள போக விடுறதுக்கு அவருக்கு என்ன வந்திச்சு

காய்ஞ்ச மாடுகளாட்டம் இருக்ககூடாதில்லையா..? எல்லாம் ஒரு இல்லற நாகரீகம் கருதிதான்...!

  • கருத்துக்கள உறவுகள்

அவாட புருஷன் உள்ள போக விடுறதுக்கு அவருக்கு என்ன வந்திச்சு

குளித்துவிட்டு நிற்கும் மனைவி

பல  நாள்  தாகத்தில் கணவன் (சிவன்)

தனக்கு   போட்டியாக ஒருவரை  உருவாக்கிவிடுவார்கள்  என்ற  பயத்தினால்  இருக்கலாம்.. :icon_mrgreen:

ம்..ஆ(னா)ணானப்பட்ட கடவுளே பெண்ணிடம் அச்சமுறுகிறார்... !

ஷேம், ஷேம்.. பப்பி ஷேம். :D

உங்களுக்கு  எப்படி  ஆறுதல்  சொல்வது என்றே  புரியல...... :lol:  :D

1002640_10151689803163579_1637560854_n.j

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சிறுவனை செய்யும் அளவு ஊத்தை  அவா உடலில் இருந்திருக்கிறது.
அப்ப அவா முழுகாமல் இருந்திருக்கிறா??
 
உம் ...ம்ம். அப்பவே அபோர்சன் வேற நடந்திருக்கு!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ எண்டா இப்பிடி ஒரு தலைப்ப போட்டனி என்று பிள்ளையார் என்னையே முறைச்சு பாக்கிற மாதிரி இருக்கு பா அன்பு பெரியப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

தான் துண்டித்த தலையை ஒட்ட வைக்க முடியாதவர்..... வேறொருவரால் வேறெங்கோ வைத்து வெட்டிய தலையை ஒட்ட வைத்தாராம்......எங்கே போய் என் தலையை முட்டுறது :(

  • கருத்துக்கள உறவுகள்

1011504_10151586054804527_753432180_n.jp

பிள்ளையாரை நின்மதியாக தூங்க விடுங்கையா.

  • கருத்துக்கள உறவுகள்

தான் துண்டித்த தலையை ஒட்ட வைக்க முடியாதவர்..... வேறொருவரால் வேறெங்கோ வைத்து வெட்டிய தலையை ஒட்ட வைத்தாராம்......எங்கே போய் என் தலையை முட்டுறது :(

 நியாயமான... கேள்வி சபேஷ். :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படித்த அதே பம்மாத்துப் புராணக்கதைகளையே எங்கள் அடுத்த தலைமுறைக்கும் ஓதுகிறோம். ஓதிவிட்டு அக்கதைகளைக் கிண்டலடித்துப் பரிகாசமும் செய்து மகிழ்கிறோம். இது தமிழனால் மட்டுமே முடியும்.

ம்..ஆ(னா)ணானப்பட்ட கடவுளே பெண்ணிடம் அச்சமுறுகிறார்... !

ஷேம், ஷேம்.. பப்பி ஷேம். :D

கைலாயத்திலயும் இதுதான் ஆண்களின் கதியா? :o  :lol: 

என்ர சிவபெருமானே!  இந்த ஆண்களைக் காப்பாற்ற யாருமே  இல்லையா? :lol::o

நாங்கள் படித்த அதே பம்மாத்துப் புராணக்கதைகளையே எங்கள் அடுத்த தலைமுறைக்கும் ஓதுகிறோம். ஓதிவிட்டு அக்கதைகளைக் கிண்டலடித்துப் பரிகாசமும் செய்து மகிழ்கிறோம். இது தமிழனால் மட்டுமே முடியும்.

எல்லா இன மக்களிடமும் இப்படிப்பட்ட அடி முட்டாள்தனமான புராணக்கதைகளும் மூடப்பழக்கங்களும் இருந்தன. ஆனால் உலகில் முன்னேறிய பல இனங்கள் இம்முட்டாள் மூடப்பழக்கங்களை தூர எறிந்து விட்டு நவீன யுகத்தில் வாழத் தொங்கிவிட்டன. தமது கலாச்சாரங்களை காலத்திற்கேற்ப சீர்திருத்தம் செய்து வாழ்வதானல் பெருமையுடன் வாழ்கின்றன. நாம் தமிழர் மட்டும் பழைய முட்டாள்தனமான புராணங்களை இப்போதும் தீவிரமாக நம்பியும், மூடப்பழங்கங்களுக்கு ஏதோ வியாக்கியானங்கள் கொடுத்தும் வாழ்கிறோம். எமது கலாச்சாரத்தில் உள்ள கேடுகெட்ட அம்சங்களை கூட மாற்ற விருப்பம் இல்லாதுள்ளோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எமது கலாச்சாரத்தில் உள்ள பழமைவாதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற பொருள்பட நான் எழுதும் போதெல்லாம் அதற்கு பதில் கொடுப்பதற்காக பழமைவாதத்திற்கு வக்காலத்து வாங்கியும்  எமது கலாச்சார நடைமுறைகள் அனைத்தும் (மூடப்பழக்கங்கள் உட்பட) உயர்வானது என்று எழுதும் பலர் இத்திரியில்  கடவுளை கிண்டலடித்து இங்கு கருத்து எழுதி உள்ளது தான்.

கள நிர்வாத்தினருக்கு ஒரு வேண்டுகோள்  இத்தலைப்பை நகைச்சுவைப்  பகுதிக்கு மாற்றவும். ஏனென்றால் எமது பழைமைவாத புராணக்கலாச்சாரம் இக்காலத்தில் நகைச்சுவை பகுதிக்கே ஏற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தான் துண்டித்த தலையை ஒட்ட வைக்க முடியாதவர்..... வேறொருவரால் வேறெங்கோ வைத்து வெட்டிய தலையை ஒட்ட வைத்தாராம்......எங்கே போய் என் தலையை முட்டுறது :(

தன்னிலையை தானே உணர முடியாத மனுசங்ககிட்ட உப்படியான கதைகள் தான் எடுபடும்..! இதுக்குப் போயி.. நீங்க கோவிக்கிறீங்களே.

நம்மாக்கள் வெளிநாடுகளில்.. கோவில் கட்டினதை விட வேற என்னத்தை உருப்படியா செய்திருக்காங்க..! அதையாவது செய்திட்டுப் போகட்டும் விடுங்க..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இன மக்களிடமும் இப்படிப்பட்ட அடி முட்டாள்தனமான புராணக்கதைகளும் மூடப்பழக்கங்களும் இருந்தன. ஆனால் உலகில் முன்னேறிய பல இனங்கள் இம்முட்டாள் மூடப்பழக்கங்களை தூர எறிந்து விட்டு நவீன யுகத்தில் வாழத் தொங்கிவிட்டன. தமது கலாச்சாரங்களை காலத்திற்கேற்ப சீர்திருத்தம் செய்து வாழ்வதானல் பெருமையுடன் வாழ்கின்றன. நாம் தமிழர் மட்டும் பழைய முட்டாள்தனமான புராணங்களை இப்போதும் தீவிரமாக நம்பியும், மூடப்பழங்கங்களுக்கு ஏதோ வியாக்கியானங்கள் கொடுத்தும் வாழ்கிறோம். எமது கலாச்சாரத்தில் உள்ள கேடுகெட்ட அம்சங்களை கூட மாற்ற விருப்பம் இல்லாதுள்ளோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எமது கலாச்சாரத்தில் உள்ள பழமைவாதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற பொருள்பட நான் எழுதும் போதெல்லாம் அதற்கு பதில் கொடுப்பதற்காக பழமைவாதத்திற்கு வக்காலத்து வாங்கியும்  எமது கலாச்சார நடைமுறைகள் அனைத்தும் (மூடப்பழக்கங்கள் உட்பட) உயர்வானது என்று எழுதும் பலர் இத்திரியில்  கடவுளை கிண்டலடித்து இங்கு கருத்து எழுதி உள்ளது தான்.

கள நிர்வாத்தினருக்கு ஒரு வேண்டுகோள்  இத்தலைப்பை நகைச்சுவைப்  பகுதிக்கு மாற்றவும். ஏனென்றால் எமது பழைமைவாத புராணக்கலாச்சாரம் இக்காலத்தில் நகைச்சுவை பகுதிக்கே ஏற்றது.

பழைமை வாதத்தில் இருந்து புதுமைக்கான தேடலைச் செய்து கொண்டு உதைச் சொன்னால் பறுவாயில்லை. அடுத்தவனின் கலாசாரத்தை களவெடுத்து அதைப் புதிசென்று காட்டிக் கொண்டு.. சீர்திருத்தம் என்றது தான் பழமைவாதிகளை விட மோசமான பிற்போக்கா இருக்குது.

அவனவன் வரலாற்றில் இருந்து.. ஆதாரங்களை எடுத்து.. ஆக்கபூர்வமா எதிர்காலத்தை எப்படி அமைக்கிறது என்ற புதிய நோக்கிற்குப் போறான். நாங்க... இன்னும் புராணங்கள் என்பதை மேலோட்டமாவே நோக்கிக்கிட்டு.. நம்மளே நம்மள மட்டம் தட்டிக்கிட்டு.. அடுத்தவன்ர குப்பைகளை ஒரு விளக்கமும் இல்லாம எடுத்து நம்ம தலையில கொட்டிக்கிட்டு.. சீர்திருத்தம் என்று சிந்து பாடிக்கிறம்.

உதை விட புராணப் புளுகுகள் பரவாயில்லை. அதில கொஞ்சம் சுய சிந்தனையாவது இருக்குது. :lol::D

அய்யோ எண்டா இப்பிடி ஒரு தலைப்ப போட்டனி என்று பிள்ளையார் என்னையே முறைச்சு பாக்கிற மாதிரி இருக்கு பா அன்பு பெரியப்பா....

'டூ லேட்' . இனி வாழ்க்கை பூரா  பஸ் நிலையங்களிலும் கோயில் வாசல்களிலும் நின்று  தனியாக  காலம் தள்ள வேண்டியதுதான். :D

பழைமை வாதத்தில் இருந்து புதுமைக்கான தேடலைச் செய்து கொண்டு உதைச் சொன்னால் பறுவாயில்லை. அடுத்தவனின் கலாசாரத்தை களவெடுத்து அதைப் புதிசென்று காட்டிக் கொண்டு.. சீர்திருத்தம் என்றது தான் பழமைவாதிகளை விட மோசமான பிற்போக்கா இருக்குது.

அவனவன் வரலாற்றில் இருந்து.. ஆதாரங்களை எடுத்து.. ஆக்கபூர்வமா எதிர்காலத்தை எப்படி அமைக்கிறது என்ற புதிய நோக்கிற்குப் போறான். நாங்க... இன்னும் புராணங்கள் என்பதை மேலோட்டமாவே நோக்கிக்கிட்டு.. நம்மளே நம்மள மட்டம் தட்டிக்கிட்டு.. அடுத்தவன்ர குப்பைகளை ஒரு விளக்கமும் இல்லாம எடுத்து நம்ம தலையில கொட்டிக்கிட்டு.. சீர்திருத்தம் என்று சிந்து பாடிக்கிறம்.

உதை விட புராணப் புளுகுகள் பரவாயில்லை. அதில கொஞ்சம் சுய சிந்தனையாவது இருக்குது. :lol::D

முட்டாள்தனமான பழமைவாத மூடப்பழக்கங்களை முதலில்  தூக்கி எறிந்தால் தான் புதுமைகளை தேடமுடியும்.உதவாததை தூக்கி வீசிவிட்டு தான் புதுமைகளை தேடமுடியும். அது நம் எல்லோருடைய பொறுப்பும். பழமைக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கும் புதியதை தேடவேண்டும் என்ற பொறுப்பு உண்டு. பழைமை என்ற பல உதவாத குப்பைகளுக்கு வக்காலத்து வாங்கும்போது மட்டும் புதுமைகளை தேடவேண்டும் என்ற உயரிய சிந்தனை வராது.  மூடப்பழங்ககளை கேள்வி கேட்காமல் முட்டாள்தனமாக கடைப்பிடிங்கும் வரை புதுமைகளே தேடவேண்டும் என்ற எண்ணம் அறவே வராது. சற்றே சிந்திக்க வெளிக்கிட்டு பழைய அடிமுட்டாள்தனங்களில்   உள்ள குறைகளை சுட்டிகாட்டும் போது மட்டும் ஐயோ அடுத்தவன குப்பை என்று கத்த தொடங்கிவிடுவார்கள்.

எங்களிடன் புதுமையான சிந்தனை இல்லாது விட்டால் அடுத்தவனதை ஏற்று கொள்வதில் தவறில்லை. எமது கலாச்சாரத்தில் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதில் உள்ள நல்ல விடயங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுடன் அதில் உள்ள பழைய முட்டாள்தனங்கள் அறவே அகற்றப்படவேண்டும். எமது கலாச்சாரம் காப்பாற்றபடவேண்டும் என்ற உயரிய நோக்கம் உங்களுக்கு இருக்குமானால் பழைய குப்பைகள் அகற்றப்பவேண்டும் என்றே நீங்களும் கூறுவீர்கள். போலித்தனமாக பழைய குப்பைகளுகளுக்கு வக்காலத்து வாங்கமாட்டீர்கள்.

அடுத்தவன்றையை குப்பை என்று கூறுவதற்கு எம்மிடம் உயர்வான பழக்கவழக்கங்கள் முதலில் இருக்கவேண்டும். நாங்களே பல குப்பை பழக்கங்களை கைக்கொண்டு கொண்டு அடுத்தவனுடையது எல்லாம் குப்பை என்று எப்படி கூறமுடியும். கையால் சாப்பிடுவதே எமது கலாச்சாரம் ஸ்பூன் பாவிக்கமாட்டோம் என்று அடம் பிடித்து எத்தனை திருமண மண்டபங்களில் கழிவு நீர் குழாயை அடைக்க பண்ணியிருப்போம். விழா தொடங்கி சில மணிநேரங்களி்ல் கைகழுவும் இடங்களை சேறு பண்ணி அடுத்தவன் எள்ளி நகையாடப் பண்ணியிருப்போம். கேட்டால் கலாச்சாரமாம். அடுத்தவனுடய எல்லாம் குப்பையாம். நாம் கலாசார பெருமை கொண்டவர்களாம்.

எமது புராணங்களில் சுய சிந்தனை இருக்காம். உலகில் உள்ள அடுத்தவர்கள் எல்லாம் குப்பையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு நாமே சாணம் அடிப்பதில் பெரும் வித்தகர்கள் நாம்.

இஸ்லாமியர்களிடம் மதப் பற்று குறித்து படிக்க வேண்டும்.

கொடுரமாக கொலை செய்யப் பட்ட, ஜேசு நாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்று சொல்கிறார்களே. அது போல தான் இதுவும்.

உண்மையில் பிள்ளையாருக்கு எவ்வாறு யானைத் தலை வந்தது என, அருமையான விளக்கங்கள், சிறு பிள்ளைகளுக்கு புரிய வைக்க முடியாத, பல உள்ளன.

Thatstamil.com உரிமையாளர் ஒரு இந்து அல்ல என்றும், அவர்கள் இது போன்ற விடயங்களை பெரிதாக்கிக் போடும் காரணம் என்ன என்ற கேள்வியும் இணைய உலகில் உண்டு.

இந்து மதம் உலகின் பழமையான மதம். ஒரு ஸ்தாபகர், ஸ்தாபக காலம் என கடந்த 2000 - 2500 வருடங்களுக்கு இடையே வந்த மதங்களுக்கு முன்னரே, 4000 - 5000 ஆண்டுகள் முந்திய மொஹஞ்சடொர - ஹரப்பா நாகரிகத்தில் இந்து மத வழிபாடு இருந்திருகின்றது.

அந்த காலத்தில் இருந்த படிப்பு அறிவு இல்லா மக்களுக்கு புரிய வைக்க சொல்லப் பட்ட பல உவமானக் கதைகளை, இப்பொது விஞ்ஞான காலத்தில் எடுத்து ஆய்வு செய்வது சரி இல்லையே.

அன்றைய சிறு குழந்தைகளுக்கு பிள்ளையாருக்கு யானைத் தலை எவ்வாறு வந்தது என ஒரு சிறு வியாக்கியானம் சொல்ல, அதையே பெரிசுகள் பிடித்து இன்றுவரை போட்டுத் தாக்குகின்றோம்.

இதை இன்றைய குழந்தைகளுக்கு சொன்னால், how the gods involved in such a viloance act என்று தானே சொல்லும்.

தேவையானவகைகளை குழந்தைகள் புரியக் கூடிய வகையில் சொல்வோம்.

புகலிடம் எங்கும், இழுத்து மூடப் பட்ட, பிற மத இடங்களில், கோவிலைக் எழுப்பி, பக்தியில் வெளுத்து வாங்கும் நாம், அடுத்த தலைமுறைகளின் ஆன்மிகத் தேவை குறித்தோ, இந்த கோவில்கள் சமய அறிவு கொண்ட அடுத்த தலைமுறை கையில் கொடுக்கப்படாவிடில். இழுத்து மூடப் படும் என்றோ நினைக்கத் தவறுகின்றோம்.   

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனமான பழமைவாத மூடப்பழக்கங்களை முதலில்  தூக்கி எறிந்தால் தான் புதுமைகளை தேடமுடியும்.உதவாததை தூக்கி வீசிவிட்டு தான் புதுமைகளை தேடமுடியும். அது நம் எல்லோருடைய பொறுப்பும். பழமைக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கும் புதியதை தேடவேண்டும் என்ற பொறுப்பு உண்டு. பழைமை என்ற பல உதவாத குப்பைகளுக்கு வக்காலத்து வாங்கும்போது மட்டும் புதுமைகளை தேடவேண்டும் என்ற உயரிய சிந்தனை வராது.  மூடப்பழங்ககளை கேள்வி கேட்காமல் முட்டாள்தனமாக கடைப்பிடிங்கும் வரை புதுமைகளே தேடவேண்டும் என்ற எண்ணம் அறவே வராது. சற்றே சிந்திக்க வெளிக்கிட்டு பழைய அடிமுட்டாள்தனங்களில்   உள்ள குறைகளை சுட்டிகாட்டும் போது மட்டும் ஐயோ அடுத்தவன குப்பை என்று கத்த தொடங்கிவிடுவார்கள்.

எங்களிடன் புதுமையான சிந்தனை இல்லாது விட்டால் அடுத்தவனதை ஏற்று கொள்வதில் தவறில்லை. எமது கலாச்சாரத்தில் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதில் உள்ள நல்ல விடயங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுடன் அதில் உள்ள பழைய முட்டாள்தனங்கள் அறவே அகற்றப்படவேண்டும். எமது கலாச்சாரம் காப்பாற்றபடவேண்டும் என்ற உயரிய நோக்கம் உங்களுக்கு இருக்குமானால் பழைய குப்பைகள் அகற்றப்பவேண்டும் என்றே நீங்களும் கூறுவீர்கள். போலித்தனமாக பழைய குப்பைகளுகளுக்கு வக்காலத்து வாங்கமாட்டீர்கள்.

அடுத்தவன்றையை குப்பை என்று கூறுவதற்கு எம்மிடம் உயர்வான பழக்கவழக்கங்கள் முதலில் இருக்கவேண்டும். நாங்களே பல குப்பை பழக்கங்களை கைக்கொண்டு கொண்டு அடுத்தவனுடையது எல்லாம் குப்பை என்று எப்படி கூறமுடியும். கையால் சாப்பிடுவதே எமது கலாச்சாரம் ஸ்பூன் பாவிக்கமாட்டோம் என்று அடம் பிடித்து எத்தனை திருமண மண்டபங்களில் கழிவு நீர் குழாயை அடைக்க பண்ணியிருப்போம். விழா தொடங்கி சில மணிநேரங்களி்ல் கைகழுவும் இடங்களை சேறு பண்ணி அடுத்தவன் எள்ளி நகையாடப் பண்ணியிருப்போம். கேட்டால் கலாச்சாரமாம். அடுத்தவனுடய எல்லாம் குப்பையாம். நாம் கலாசார பெருமை கொண்டவர்களாம்.

எமது புராணங்களில் சுய சிந்தனை இருக்காம். உலகில் உள்ள அடுத்தவர்கள் எல்லாம் குப்பையாம்.

அடிப்படையில் எது புதுமை.. எது பழசு.. எது அவசியம்.. எது அநாவசியம்.. எது முன்னேற்றப்படனும்... எது எங்களது.. எது பிறரது.. என்ற விபரத்தை இதில் உணர முடியவில்லை.

பழமையை துதிபாடுவதல்ல எங்களின் நோக்கம்.

இந்தப் பூமிப் பந்தில் இருந்து எங்களின் உடல் வரைக்கும் கூர்ப்பு என்ற ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பழமையோடு.. புதுமை.. காலமாற்றத்துக்கு ஒவ்வ உள்வாங்கப்பட்டிருக்குது. அது இயங்கு நிலையில் உள்ள ஒரு விடயம். இந்த உலகில் எதுவுமே 100% புதுமையானதும் அல்ல.. 100% பழமையானதும் அல்ல. இதில் முதலில் தெளிவு அவசியம்.

இந்த இடத்தில் மனிதனுக்கு உள்ளதை மனிதனும்.. மீனுக்கு உள்ளதை மீனும் உள்வாங்கும் நிலைதான் இருக்கே தவிர.. மீனுக்குள்ளதை மனித உள்வாங்கும் நிலை இல்லை.

அந்த வகையில் எங்களுக்கு எந்தச் சூழலில் தப்பித்து எமது அடையாளத்தை பதித்து வாழ எது அவசியமோ அதை தான் நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர எம்மிடம் உள்ளதை எல்லாம் எடுத்தெறிந்துவிட்டு.. இன்னொன்றை பெற முனைந்தால்.. அங்கு நாம் புதிய சூழலில்.. வெறுக்கப்பட்டு மடியும் நிலைக்கு கூட கொண்டு வரலாம்.

மேலும்.. உங்களின் மூடத்தனம் என்ற வரையறைக்குள் என்னால் உங்களின் அறிவியல் விளக்கங்களை இனங்காணவே முடியவில்லை. மூடத்தனம் என்பதை மேலோட்டமான விளங்களின் மூலம்.. மக்கள் செய்து காட்டும் செயல்களின் மூலம் மட்டும்.. வரையறுத்துவிட முடியாது. நாங்கள் மூடத்தனம் என்று தூக்கி எறிந்த எத்தனையோ விடயங்களில் இன்று அறிவியல் பூந்து விளையாடிக்கிட்டு இருக்குது.

உதாரணத்திற்கு.. ஒரு காலத்தில்.. மஞ்சளை உடலில் பூசுவதும்.. சுற்றத்தில் தெளிப்பதும் கூட.. மூடத்தனம் என்று சொல்லப்பட்டது. இன்று.. அதே மஞ்சளின் விளைவுகளை அமெரிக்கா சொந்தம் கொண்டாடுகிறது.

நாங்க கெட்டது எங்களால் தான். ஏன்னா எங்களுக்கு எங்களது பழமைக்குள் இருக்கும் நல்லதைப் பிரித்தெடுத்து முன்னேற்றவும் முடியல்ல.. மற்றவனிடம் உள்ள நல்லதை.. அவனுடைய பாணியில் உள்வாங்கவும் முடியல்ல..! நாம் ஒன்றை கொப்பி பண்ணப் போய் சொதப்பிக்கிட்டு வாழும் ஒரு நாடோடிகளாகவே வாழப் பழகிக் கொண்டு.. பாரம்பரியத்தை தொலையுன்னு சொல்லிக்கிறது எல்லாம் புரட்சியும் ஆகாது.. விவேகமும் ஆகாது. அதுவே முழு பிற்போக்குத்தனம்.. சமூக அறிவிலித்தனம் எனலாம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்த பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்க பாலியல் வக்கிரங்கள் பல கொண்ட, பலபிறப்பு வரலாற்றைக் கொண்டவையாகும். அவைகளைப் பார்ப்போம். 

1.சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்? இவை ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது. எனவே கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையை பாதுகாக்க ஆண்கடவுள்களுடன் போராடவேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படி பாதுகாப்பை பெறமுடியும். ஏனெனின் அந்த தெய்வங்களே பல வக்கிரத்தில் பிறந்ததுடன் பாலியல் வல்லுறவுகள் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்கள் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்கள் சரி பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் ரசிக்கின்றனவா அல்லவா. இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்கின்றது. கடவுள்கள் பாலியல் வல்லுறவு முதல் அவற்றின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பல இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம். 

2.ஒரு நாள் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அதன் நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் பெண் யானை புணர்வதை போன்று கீறியிருந்த காட்சியைக் கண்டு, அதுபோல் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதை கூறும் போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை ரசிக்கும் மனித பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புளுபிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயக சந்தையில் மூலதனமாக்கி கொடிகட்டி நிற்கின்றது. 

3.பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்றுவடிவில் கர்ப்பபைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாக பிள்ளையார் வரலாறு. முட்டாள்களே நம்புங்கள்! இந்து புளுகு மூட்டை. இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்கு தெரிந்தது? 

4.தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டி பொருத்தியதாக பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம்பிடித்து கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா! என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு. இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது. யார் இந்த உரிமையை கொடுத்தது. எங்கு எப்போது இந்த பிறப்புகள் எல்லாம் நடந்தன. 

5."பிடியதன் உருவுமை கொள மிகு கரியது 

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் 

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை 

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"128 

என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் பிள்ளையார் பிறப்பை சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று தேவாரம் மூலம் விளக்குகின்றார். இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்த திருஞானசம்பந்தப் பயல் உமாதேவியாரின் பெண் உறுப்புகளை தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தை கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்த திருஞானசம்பந்தன் சமணப் பெண்களை கற்பழிக்க அருள் கோரி "பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்ணற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா. இதை இறைவன் செய்தான் என்பதும், அதை கற்பனை பண்ணி பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்த தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான். 

6.பார்வதி தன் உடல் அழுக்கை கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள ராட்சஷிமாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்ற கதை. எவ்வளவு அருவருப்பை தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஒரினச்சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஒரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்கு புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்கமுடியாதவை. 

7.ஒருநாள் பார்வதி தனது உடல் ஊத்தையை விராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அன்பு சொரிந்து உயிருட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையாராம்;. எப்படி சிவபெருமான் அந்த உத்தைக்கு தந்தையாக முடியும்;. ஒருபால் உறவில் குழந்தை பிறக்க அதிசயம் உலகின் அதிசயங்களாக பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை தோண்டி ரசித்து உண்ணும் பண்பு போல் அல்லவா இந்த பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றது. 

8.பிரம்மாவை வர்த்த புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்தால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தை துடைக்க விஷ்ணு யானைத்தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்கு குழந்தை பிறந்ததை அறிந்து, அவரை பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனிதேவனும் ஒருவராம்;. சனி தான் பாத்தால் குழந்தைக்கு தீது உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவிர்தத்தாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க குழந்தையைப் பார்க்க குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகள் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தை பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கு இந்த பிறப்பின் பல்வேறு கற்பனை பிதற்றல்கள். 

இந்த பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்க சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் பலவிதமான கொண்டட்டங்களை தோற்றுவித்துள்ளது. இந்த கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியை தீர்க்கும் பாலியல் வல்லுறவுகளை செய்யும் ஊடாகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்கலவரத்தின் ஊடகமாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்ற மணமகனும் மணமகளும் திருமணத்தின் பின் உடலுறவைக் குறித்து கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் அன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் பாலியல் வல்லுறவுகள் பிள்ளையாரின் பிறப்பை போல் வக்கரித்த நிகழ்கின்றது. 

இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனித பண்பாட்டையே வக்கரித்து கேலிசெய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி அசுரர்களை அழிக்க அழிக்க தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டு உறுஞ்சி எடுத்ததாக பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்த போது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்தவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டி திட்டமிட்டு கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இந்தக் கோட்பாட்டில்தான்;. பெண்ணின் பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஓரே நோக்கம் என்பதை, இந்த சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.

:icon_mrgreen:
 
Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'டூ லேட்' . இனி வாழ்க்கை பூரா பஸ் நிலையங்களிலும் கோயில் வாசல்களிலும் நின்று தனியாக காலம் தள்ள வேண்டியதுதான். :D

பிள்ளையாருக்கும் ரெண்டு பொண்டாட்டியாம் எண்டு கதை அரசல் புரசலா அடிபடுது சோ why worry be happy :D

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாருக்கும் ரெண்டு பொண்டாட்டியாம் எண்டு கதை அரசல் புரசலா அடிபடுது சோ why worry be happy :D

இதென்னப்பா புதுக்கதையாக்கிடக்கு.....

அந்தாள்

ஆத்தையைப்போல்  பொண்ணு வேண்டுமென்று  தவம் இருப்பதாகத்தானே  இதுவரை  தகவல்....

இது வேறு யாரோ

கணேசமூர்த்தியோ

விநாயகமோ

சிலவேளை

நம்ம பிள்ளையானோ :lol:   தெரியவில்லை... :D  :D

சிவனாருக்கு முரியன் எண்ட சின்ன பொடி இருப்பதாக தமிழர்கள் கும்பிடுவது போல, வட இந்தியாவில் பிள்ளையாருக்கு சித்தி, புத்தி எண்ட இரண்டு மனைவிகள் இருப்பதாக கும்பிடுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.