Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாளை திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும், தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்தார் சீமான். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, அவரது தம்பிகளுள் ஒருவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

2007-ம் ஆண்டு முதல் இலங்கையில் தொடங்கிய இன அழிப்பு போர் மூலம் லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வந்தனர். இலங்கை அரசு நடத்திய அந்த போருக்கு இந்தியா ஆயுதம் உள்ளிட்டவை கொடுத்து உதவக்கூடாது என்றும், அங்குள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் ராமேஸ்வரத்தில் 2008-ம் ஆண்டு திரை உலகம் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதன் பிறகு சீமான் பேசும் கூட்டங்களுக்கு அன்றைய திமுக அரசு அனுமதி தரவில்லை. இறையாண்மைக்கு எதிரான பேச்சு என பலமுறை அவரைக் கைது செய்தது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் தான் நிரபராதி என வாதிட்டு வென்று வெளியில் வந்தார். இதன் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் சீமான். இந்த நோக்கத்துக்காகவே நாம் தமிழர் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் வேலூர் பொதுக் கூட்டத்தில் அதை அரசியல் கட்சியாகவும் மாற்றினார். கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு மண்ணைக் கவ்வ சீமானின் அனல் பறந்த பிரச்சாரமும் முக்கிய காரணம்.

சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர். அங்கு செந்தமிழன்-அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் காளிமுத்து-மனோகரி தம்பதியின் மகள் கயல்விழியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

பழ.நெடுமாறன் தலைமையில்... சீமான்-கயல்விழி திருமணம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் இணைந்து செய்துள்ளனர். திருமண விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2013/09/07/india-seeman-kaya-vizhi-marriage-tomorrow-182971.html

Edited by nunavilan

  • Replies 126
  • Views 17.5k
  • Created
  • Last Reply

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வாக்கு வங்கியோடு நல்ல நிலையில்தான் இருக்கிறது. சீமானைத்தான் பல இடங்களில் காணவில்லை. எது எப்படியோ... நல்ல முறையில் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கல்யாணமா :unsure: அல்லது இந்துக் கல்யாணமா :D எதுவாயினும் திருமண வாத்துக்கள் :)

ஒரு தமிழன் நாசாமாய்ப்போவதும் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் முன்னிலையில் நிற்பதும் ஒரு திராவிடன் எனும் வகையில் உங்களுக்கு மகிழ்ச்சியா அண்ணை? :(

  • கருத்துக்கள உறவுகள்

ம் கடந்த தேர்த்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது நீங்கள் சந்திர மண்டலத்தில் இருந்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இனிய இல்லற வாழ்வு அமைந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

நாதமுனி.. இது உங்கள் ஆக்கம் இல்லையென்றால் செய்தியின் மூலத்தையும் தாருங்கள்..!

காங்கிரஸ் சீமானுக்கு போடும் கால்கட்டா? வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும்  கைவிட்டபோது

இரத்த உறவுகள்   நாம் இருக்கின்றோம்  என்று உரத்துக்கூறி

எமக்கொரு  கயிறு தந்தவன்...

மறவோம் தம்பி

இனிய இல்லற வாழ்வு அமைந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வாக்கு வங்கியோடு நல்ல நிலையில்தான் இருக்கிறது. சீமானைத்தான் பல இடங்களில் காணவில்லை. எது எப்படியோ... நல்ல முறையில் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

உங்களது பொறுமையை

இவரது திரிகள் உடைத்துவிடுவது தொடர்கிறது

தியானம்   நல்லது அண்ணை.........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறவாழ்வில் காலடி எடுத்து வைக்கும் சீமானிற்கு
நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணன் சீமான். தமிழர்களுக்கும் தமிழர் தேசத்திற்கும் என்றும் உழைக்க இந்த பந்தம் உங்களை இன்னும் பலப்படுத்தியும் நிற்கட்டும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறவாழ்வில் காலடி எடுத்து வைக்கும் சீமானிற்கு
நல்வாழ்த்துக்கள்.

விசுகு! என்ன பொறுமை? நான் சில வாரங்கள் எழுதாமல் இருந்ததன் காரணம் தாயகத்திலும், தமிழ்நாட்டிலும் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். இந்த வாரமே ஜேர்மனி திரும்பினேன்.

தமிழ்நாட்டை அவதானித்த வகையில் சொல்கிறேன், அங்கே சீமான் காங்கிரஸை விரட்டி அடித்துவிட்டார் என்பது மாயை, சீமான்தான் தன்னுடைய நடவடிக்கைகளால் மக்களிடம் அந்நியப்பட்டுக் கொண்டு போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

//சீமான்தான் தன்னுடைய நடவடிக்கைகளால் மக்களிடம் அந்நியப்பட்டுக் கொண்டு போகிறார்.//

அப்ப இதுக்கு முன்னம் மக்களுடன் அந்நியோன்னியம் இருந்தது என்றாவது ஒத்துக்கொள்கிறீர்கள்..?! :rolleyes:

நிச்சயமாக! வைகோ அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்டளவு பேரை அவரை நம்பிப் போனார்கள். ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது.

ஆனால் அவர் நேச சக்திகளை நோக்கி தன்னுடைய ஆயுதத்தை திருப்பினார். அவைகளை பலவீனப்படுத்தும் வேலைகளை தொடங்கினார். இன்றைக்கு அவர் பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றார்.

நீங்கள் இப்படி சொல்லுறீங்கள்.. ஆனால் சிலபேர் அவருக்கு என்றுமே ஆதரவு இருந்ததில்லை/ இல்லை என்கிறார்கள்.. முதலில் உங்கட பஞ்சாயத்தை தீர்க்க வேணும்.. :D

வாழ்த்துக்கள் சீமான்.... யான் பெற்ற (பெறும் ) இன்பம் நீங்களும் பெற்று இன்புற... இதோடை சீமானுக்கு கடவுள் நம்பிக்கை வந்தால் உண்டு... :D :D :D

நிச்சயமாக! வைகோ அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்டளவு பேரை அவரை நம்பிப் போனார்கள். ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது.

ஆனால் அவர் நேச சக்திகளை நோக்கி தன்னுடைய ஆயுதத்தை திருப்பினார். அவைகளை பலவீனப்படுத்தும் வேலைகளை தொடங்கினார். இன்றைக்கு அவர் பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றார்.

சீமான் நல்லவரா கெட்டவரா நாம் அறியோம்... ! ஆனால் அறிந்த விசயம் ஒண்டு இருக்கு .. அது தமிழர்களுக்காக குரல் கொடுக்க நல்லவராக இருக்க வேண்டியதில்லை... அப்படி நல்லவர்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும் எண்றால் வைகோ, நெடுமாறன் அண்ணை க்கு பின்னாலை கூட யாரும் இருக்க மாட்டார்கள்...

குறிப்பாக சொன்னால் சீமான் குரல் கொடுப்பதாக சொல்லப்படும் ஈழத்தமிழர்கள் கூட தங்களின் இனத்துக்கு விசுவாசம் இல்லாதவர்கள்... ( இதில் நான் உட்பட ... )

தமிழ்க் கல்யாணமா :unsure: அல்லது இந்துக் கல்யாணமா :D எதுவாயினும் திருமண வாத்துக்கள் :)

இது தேவர் இன கிருத்துவ கல்யாணம் :)

இருபகுதியும்..தேவர் சாதி கத்தோலிக்க கிருத்துவர்களாம்.. (தமிழ்மணம் Blog இல் யாரோ கூறியது)

Reception: Marina Beach :)

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வாக்கு வங்கியோடு நல்ல நிலையில்தான் இருக்கிறது. சீமானைத்தான் பல இடங்களில் காணவில்லை. எது எப்படியோ... நல்ல முறையில் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

சென்ற  தேர்தலில்  தாத்தாவை  மிரட்டி  66 சீட்  வாங்குனாங்க , இன்னைக்கு  தாத்தா  மிரட்டுறாரு . இது  எதனால்  நல்ல  நிலையில்  இருக்குறனலையா ?  திமுக,காங்கிரேஸ் ,பாமக ,தேமுதிக etc  எல்லாரும்  சேர்ந்தால்  காங்கிரஸ் 'க்கு  எதனை  சீட்  தாத்தா  குடுப்பார் , 7 அல்லது  8 அதுலையும் எத்தனை'இல்  வெற்றி  பெறுவார்கள்  2 அல்லது 3 அதுவும் சந்தேகம்தான்.

Seeman wedding- Seeman Arriving to the wedding hall --

http://www.youtube.com/watch?v=cTR-MxBZLM4 

Edited by VENDAN

  • கருத்துக்கள உறவுகள்

08-seeman-wife-kayal-vizhi1-3000.jpg
 
கயல்விழியை மணந்தார் சீமான்.

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்- கயல்விழி திருமணம் இன்று சென்னையில் நடந்தேறியது.

மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள்தான் கயல்விழி. அவருக்கும், சீமானுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் தமிழர் தலைவர்களான பழ. நெடுமாறன், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று காலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி திருமணம் நடந்தேறியது.

பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். பல்வேறு தமிழர் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பல்துறை பெருமக்கள் திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக் கன்றுகள் நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்காக சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகளை இயக்குநர் அமீர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வையிட்டு கவனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ்தமிழ்.

1175158_671400592871915_1797785300_n.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய இல்லற வாழ்வு அமைந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

நாதமுனி.. இது உங்கள் ஆக்கம் இல்லையென்றால் செய்தியின் மூலத்தையும் தாருங்கள்..!

ஆ. அஸ்கு பிஸ்கு!
 
கீழ இருக்கே!!!
 
நம்மள பத்தி விபரம் விலாவாரியா தெரிஞ்சு தான், வெட்டி ஒட்டும் போது தங்கள் விபரத்தினையும் வருற மாதிரி பண்ணி இருக்காங்க. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக! வைகோ அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்டளவு பேரை அவரை நம்பிப் போனார்கள். ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது.

ஆனால் அவர் நேச சக்திகளை நோக்கி தன்னுடைய ஆயுதத்தை திருப்பினார். அவைகளை பலவீனப்படுத்தும் வேலைகளை தொடங்கினார். இன்றைக்கு அவர் பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றார்.

சபேசன்,
 
உங்கள் அனுமானம் எப்படி இருந்தாலும், சீமான் ஒரு தவிர்க்க முடியாத சிறு அரசியல் பலம் என்பது உண்மை.
 
இது ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளின் மதிப்பு.
 
சேறு பூசும் வதந்திகள் பல. இவருக்கும், ஈழ பெண்ணுக்கும் திருமணம், அந்த பெண்ணை வன்னியில் பார்த்திருந்தார். நடிகை விஜயலட்சுமி விடயம் என பல கல்லடிகள். இதில் எமது பத்திரிகை யாளர்களே ஈடு பட்டு இருகின்றனர். 
 
அவரது அரசியல் நோக்கு, தூர நோக்கு கொண்டதாக தெரிகின்றது. எனது கட்சி MLA இப்ப எட்டாம்  வகுப்பு படிச்சிட்டு இருக்கிறான் என்று சொல்லும் தெளிவு இருக்கிறது. பேச்சு வன்மை இருக்கிறது.
 
இதனால், பெரிய அரசியல் தலைவர்கள் இவரை உடனடி, எதிரியாக பார்க்காமல் விடுவதால், அவர் வளர வாய்ப்பு இருக்கிறது. நேச சக்திகளில் புதைந்து போகாமல். தனியாக நிலை எடுப்பது, தமிழக அரசியலின் முதுகில் குத்தும் கலாச்சாரத்துக்கு, பாதுகாப்பானது. ஆனானப் பட்ட MGR முதுகிலேயே குத்து விழுந்தது.
 
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இருக்கும் நடிகர் விஜயகாந்த்க்கு இவர் பரவாயில்லை என்பது பல தமிழக நண்பர்கள் நிலைப்பாடு.
 
அனைத்துக்கும் மேலாக,  சிறை சென்று இருக்கிறார். அது ஒரு தமிழக அரசியல் தாரதரம். 
 
பார்க்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.