Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் குறித்த சிங்களவர்களின் கருத்துகள் சில

Featured Replies

வடக்கில் தமிழ் கூட்டமைப்பின் வெற்றி குறித்து சிங்கள பத்திரிகையான லங்காதீபவின் இணையத்தளத்தில் இடப்பட்டிருந்த பின்னூட்டங்கள் சிலவற்றைப் பார்வையிட்ட போது வடக்கும் தெற்கும் எவ்வாறு பிளவுபட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

 

 

පළමු ප්‍රතිපලයෙන්ම ඊළමට පාර කැපෙන බව පේනවා

 

முதலாவது முடிவிலேயே ஈழத்திற்கான பாதை வகுக்கப்படுகிறது

 

මෙයාලව කොටින්ගෙන් බේරාගෙන . අනාථ කදවුරුවලින් නිදහස් කරලා, නිදහසේ ඉන්න දීපු කෙලෙහි ගුණ තමා මේ ;පෙන්වලා තියන්නේ

 

இவர்களை புலிகளிடமிருந்து காப்பாற்றி அகதி முகாம்களிலிருந்து விடுவித்துசுதந்திரமாக வாழ வழி வகுத்ததற்கு செய்கின்ற பிரதி உபகாரம்

 

මෙහේ ඉන්න මෝඩයොන්ට නමි සීනි බෝල දීලත් ඡන්ද ගන්න පුලුවන් ඒත් අන්න මිනිස්සු සාධාරණ ඡන්දයක් තිබුන නමි ආන්ඩුවට ඇපත් නැහැ උතු

 

இங்கே இருக்கின்ற மடையர்களுக்கு என்றால் சீனி போளை கொடுத்து வாக்கை வாங்கலாம்.  ஆனால் அங்கே நியாயமான தேர்தல் வைத்தால் அரசிற்கு கட்டுப்பணமும் கிடைக்காது

 

උතුරේ ඉන්න හැම එකෙක්ගේම මොලේ සුද්ද කරන්න වෙයි නැතිම් උන්ව ඉන්දියාවට ගිහින් දන්නා වෙයි , අහෝ දුකකි !!

 

வடக்கில் வாழும் அனைவருக்கும் மூளையைச் சுத்தப்படுத்த வேண்டும். அல்லது அவர்களைக் கொண்டு போய் இந்தியாவில் போட வேண்டும். 

 

දැන් තේරෙනවා ඇති නේද උතුරෙන් හමුදාව ඉවත් කළොත් වෙන හරිය

இப்போது தெரிகிறதா வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றினால் என்ன நடக்கும் என்று 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகணதேர்தல் திரியிலே இதுபற்றி எழுதலாமென நினைத்தேன்.அதற்கென திரியே ஆரம்பித்து விட்டீர்கள். சந்தோசம்.தேர்தல் சம்பந்தமாக மட்டுமல்ல....இதர வேளைகளிலும் இப்படியான மாறுபட்ட கருத்துக்களை இணையுங்கள்.

  • தொடங்கியவர்

வடமாகணதேர்தல் திரியிலே இதுபற்றி எழுதலாமென நினைத்தேன்.அதற்கென திரியே ஆரம்பித்து விட்டீர்கள். சந்தோசம்.தேர்தல் சம்பந்தமாக மட்டுமல்ல....இதர வேளைகளிலும் இப்படியான மாறுபட்ட கருத்துக்களை இணையுங்கள்.

 

கருத்திற்கு நன்றி குமாரசாமி அண்ணா!

 

நேரங் கிடைக்கும் போதெல்லாம் முயற்சிக்கிறேன்..

 

களத்தில் இருக்கும் புத்தன், யாழ் வாலி உள்ளிட்ட சிங்கள மொழியறிவுள்ளவர்களும் இந்தப் பணியில் இணைந்து கொள்ளலாம். இதனை ஒரு நிரந்தரமான திரியாக மாற்றுவது குறித்து பொறுப்பாளர்களுடன் கதைத்து முடிவு செய்வோம்...

  • தொடங்கியவர்

இப்படிப்பட்ட கருத்துக்களும் உள்ளன

 

එයාල එයාලගේ ජාතියට ආදරෙයි .අපේ බූරුවෝ වගේ පක්ෂ වලට බෙදිලා මරාගන්නේ නැහැ.අනිත් එක දකුණේ දේශපාලකයෝ හැමදාම කරන්නේ රැවටීම,බොරුව කියල එයාල දැන් දන්නවා

 

அவர்கள் தங்கள் இனத்தின் மீது பாசம் கொண்டவர்கள். எங்கள் கழுதைகளைப் போல கட்சிகளினடிப்படையில் பிரிந்து கொலை செய்து கொள்வதில்லை. அடுத்ததாக தென்னிலங்கை அரசியல் வாதிகள் எப்போதும் செய்வது ஏமாற்றுவதும் பொய் கூறுவதும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறார்கள்

 

සිංහලයා වගේ නෙමේ දෙමළ මිනිස්සු ඡන්දෙ දෙන්නේ තමන්ගේ ජාතිය නියෝජනය කරන අයට.ඒක මේ ඡන්දෙදි හොඳට පැහැදිලි වෙනවා . 

 

சிங்களவர்கள் போல அல்ல தமிழ் மக்கள். அவர்கள் தமது இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். இந்த தேர்தலிலும் அது உணர்த்தப்பட்டுள்ளது.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்
සිංහලයා වගේ නෙමේ දෙමළ මිනිස්සු ඡන්දෙ දෙන්නේ තමන්ගේ ජාතිය නියෝජනය කරන අයට.ඒක මේ ඡන්දෙදි හොඳට පැහැදිලි වෙනවා . சிங்களவர்கள் போல அல்ல தமிழ் மக்கள். அவர்கள் தமது இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். இந்த தேர்தலிலும் அது உணர்த்தப்பட்டுள்ளது.
நாங்கள் சிங்களவர்கள் ஒற்றுமையில் திறம் என்று எழுதுவோம் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமை யில் திறம் என்று எழுதுகிறார்கள்.இக்கரைக்கு அக்கரை பச்சை..... அது சரி எங்கன்ட டமிழ் முற்போக்குவாதிகள் போல சிங்கள முற்போக்குவாதிகள் ஒன்றும் எழுதவில்லையோ.....தமிழர்கள் தங்களது அரசியல் அபிலாசையை வாக்குகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று... :D
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி. மணிவாசகன், பலதரப்பட்ட சிங்களவர்களின் கருத்துக்களை வாசிக்க ஆவல்.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் அருமையான சிந்தனை...........
சில ஆங்கில கருத்து களங்களில்  அவர்களின் கருத்துக்களை அறிய முடியும் ஆனால்  ஒரே ஆட்களே திரும்ப திரும்ப ஒரே வாந்தியை எடுத்து கொண்டிருப்பார்கள்.
இது வித்தியாசமானது.
எமக்கு சிங்கள மொழி அறிவு இல்லை. என்னை போன்றவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.
நன்றி !
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிங்களவர்கள் ஒற்றுமையில் திறம் என்று எழுதுவோம் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமை யில் திறம் என்று எழுதுகிறார்கள்.இக்கரைக்கு அக்கரை பச்சை..... அது சரி எங்கன்ட டமிழ் முற்போக்குவாதிகள் போல சிங்கள முற்போக்குவாதிகள் ஒன்றும் எழுதவில்லையோ.....தமிழர்கள் தங்களது அரசியல் அபிலாசையை வாக்குகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று... :D

 

 

பொதுவாக தெற்கு ஆசிய பகுதிகளில் இந்த பொறாமை புத்தி இருக்கிறது.
பல பிரச்சனைகளுக்கு இதுவே மூல காரணமாக மறைந்து இருக்கிறது.
 
ஆரம்ப நாட்களில் புலிகள் தவிர்த்த வேறு இயக்கங்களுடன் தொடர்பு இருந்தவர்களுக்கு தெரியும். சிங்களவனை அடிப்பதை விட புலிகளை எதிரியாக காட்டுவதிலேயே தலைமைகள் மும்முரம் காட்டும். எமது இயக்கம் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற புத்தி ........... ஏன் புலிகளை எதிரியாக  பார்க்க வேண்டும்? என்று சிந்திக்க விடுவதில்லை. 
அவர்களுடைய தொடர் இராணுவமுகம் தகர்ப்புகள் அவர்களுடைய நகர்வுகளால் மக்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் மரியாதையால் வரும் ஒரு பொறாமை எண்ணம். சகோதர்களை கொல்லும் அளவிற்கு கொண்டு சென்றது ..........
பின்னாளில் ஓரளவு அறிவு உள்ளவர்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் ........ (உதாரணம் தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம்) 
மட்டு மட்டானதுகள் இப்பவும் அதே அறிவுடனேயே ஊர்ந்து திரிகிறார்கள்.
 
சிங்களவர்கள் மத்தியிலும் இந்த பொறமை எண்ணம் இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் விரக்தியிலிருந்து சற்று விடுபடுவதற்கு உதவும் ஒரு மருந்தாக இத்திரி தோற்றம் தருகிறது. அவசியம் இத்திரி தடையின்றித் தொடர யாழ்கள பொறுப்பாளர்கள் தங்கள் கவனத்தை இதில் பதிப்பதோடு, மேலும் மெருகூட்ட முனைவார்கள் என நம்புகிறேன். மணிவாசகன் அவர்களுக்கு நன்றிகள்.

 

நல்லதொரு திரி தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு திரி! 

 

சாதாரண சிங்கள மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் எப்போதுமே உண்டு!

 

தொடருங்கள்,மணி, புத்தன், வாலி! :D

நன்றி தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி!

இது இரண்டு இனங்களும் மறுவாசிப்பிற்கான தளமாக இருப்பின் நன்மை. ஒரு கை ஓசை தருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் அருமையான சிந்தனை...........

எமக்கு சிங்கள மொழி அறிவு இல்லை. என்னை போன்றவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.
நன்றி !

 

  • தொடங்கியவர்

கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் நன்றி..

 

நான் தினந்தோறும் சிங்களப் பத்திரிகைகளை மேய்வதில்லை. எனினும் முக்கியமான செய்திகளையும் பின்னூட்டங்களையும் இணைக்க முயல்கிறேன்.

நல்ல திரி வாழ்த்துக்கள் அண்ணா.தொடருங்கள் உங்கள் பணிய அப்பத்தான் சிங்கவரை ஆதரிப்பவர்கள் திருந்துவார்கள். அவர்கள் எம் மீதி எவ்வளவு வன்மம் கொண்டவர்கள் என்று உணர்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்திற்கு நன்றி குமாரசாமி அண்ணா!

 

நேரங் கிடைக்கும் போதெல்லாம் முயற்சிக்கிறேன்..

 

களத்தில் இருக்கும் புத்தன், யாழ் வாலி உள்ளிட்ட சிங்கள மொழியறிவுள்ளவர்களும் இந்தப் பணியில் இணைந்து கொள்ளலாம். இதனை ஒரு நிரந்தரமான திரியாக மாற்றுவது குறித்து பொறுப்பாளர்களுடன் கதைத்து முடிவு செய்வோம்...

 

எனக்குத்தெரிந்து இசைக்கலைஞன், நிழலி போன்றோர் சிங்களகருத்துக்களங்களை வாசிப்பவர்கள் என நினைக்கின்றேன். அவர்களும் சில நிமிடநேரங்கள் இதற்கென ஒதுக்கினால் வித்தியாசமான,மாறுபட்ட கருத்துக்களை நாமும் அறியலாம். நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்
எமக்கு சிங்கள மொழி அறிவு இல்லை. என்னை போன்றவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.
நன்றி ! Manivasahan நல்லதொரு திரி! 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தொடருங்கள் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தலைப்பு.
மேர்வின் சில்வா.... நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய விருப்பத்தை தெரிவித்த போது, சிங்கள மக்களின் கருத்து.... எப்படி இருந்தது என்று அறிய ஆவலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

அரசாங்கத்துடன் பேசி மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பெற்;றுக் கொள்ளப் போவதாக திரு.விக்னேஸ்வரன் அளித்த பேட்டி தொடர்பான லங்காதீப செய்திக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் சில.....

 

 

 අද අපිට අහිමි උතුර පමණි. හෙට නැගෙනහිර සහ මුලු රටම අහිමි වන දවස වැඩි ඈතක නොවන බව මතක තබාගන්න

 

இன்றைக்கு எங்களுக்குக் கை நழுவிப் போனது வடக்கு மட்டுமல்ல. நாளை கிழக்கும் போகும். முழு நாடுமே கை நழுவிப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

ත්‍රස්ථවාදීන්ගෙන් භමුදාව රට බේරා ගත් නිසා ,සාර්ථක ඡන්දයක් පවත්වා ඡයග්‍රහනය ලබාගත් අය හමුදාවට ස්තුති කරනවා වෙනුවට, ,"විග්නේෂ්වරන් කියන්නේ කරුණාකරලා භමුදාව එලියට දාන්නලු. "

 

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு தேர்ததலொன்றையும் நடத்தியதற்கு படையினருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக விக்னேஸடவரன் படையினரை வெளியேறச் சொல்லுகிறார்.

 

ඔබලාට තීරණක් ගැනීමට අවශ්‍යනම් ,සියලුම දමිල ජනතාව යාපනයට ගෙන්වා ගන්න 

 

உங்களுக்கு முடிவொன்றை எடுக்க வேண்டுமாயின் சகல தமிழரையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.

 

දැන් එහෙනම් අපිට පස්පෝර්ට් එකත් අරන් යන් වෙයි. මේ විහට ගියොත්. මොකද මේ ක්‍රියාත්මක වෙන්නේ කොටින්ට ඕඅන දේ තමා(

 

இப்போது நாங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு போக வேண்டியது தான். ஏனென்றால் இங்கே நடப்பதெல்லாம் புலிகளுக்கு வேண்டியது தான்.

 

ඔය වැඩවලට හොඳම විසදුම පක්ෂය 2ට 3 ට කඩන එකයි

 

இந்த வேலைக்குச் சரியான வழி கட்சியை இரண்டு மூன்றாக உடைப்பது தான் 

 

ඔන්න වැඩ පටන් අරගෙන...

இந்தா வேலையைத் தொடங்கி விட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லையே! ‘கொஞ்சம் புத்தி  தெளிந்த சிங்களவனும் இருக்கின்றானே!....

 

மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கின்றேன்...தொடருங்கள் மணி அண்ணா.

  • தொடங்கியவர்

கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் வெளிவந்திருந்த செய்தியிலிருந்த ஒரேயொரு பின்னூட்டம்.

 

අරයට මොකද වුණේ?

 

அவருக்கு என்ன நடந்தது.

 

 

(ஆனந்தசங்கரியின் பெயர் மிகவும் அடியில் இருப்பதைப் பார்த்து எழுதிய பின்னூட்டமாக இருக்க வேண்டும்.)

  • தொடங்கியவர்

பரவாயில்லையே! ‘கொஞ்சம் புத்தி  தெளிந்த சிங்களவனும் இருக்கின்றானே!....

 

மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கின்றேன்...தொடருங்கள் மணி அண்ணா.

 

வணக்கம் தமிழ் தங்கை. நீண்ட நாட்களின் பின் களத்திலே கண்டதில் மகிழ்ச்சி...

 

நேரங்கிடைக்கும் போதெல்லாம் தொடர்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.