Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
1. Tap the Share icon in Safari
2. Scroll the menu and tap Add to Home Screen.
3. Tap Add in the top-right corner.
To install this app on Android
1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
2. Tap Add to Home screen or Install app.
3. Confirm by tapping Install.

ஆனந்த சங்கரி தோல்வி

Featured Replies

ஆ தலைவரு தோத்திட்டாரா................தீக்குளிக்க போகிறேன் . :D

• கருத்துக்கள உறவுகள்

சங்கரி வெளியால இருந்தா ஆபத்து. ஓரு கதிரையை கொடுத்து உள்ளே இழுத்துப் போடுறதுதான் சமயோசிதம். அதுசரி யாழில்தான் பலருக்கு "சமயோசித நாடி" அறுந்துவிட்டதே!

இலங்கை மாகாண சபை தேர்தல் விதிகள் போட்டியிட்டு தோற்ற ஒருவரையே மாகாண சபை உறுப்பினராக்க அனுமதிக்கிறது. பாராளுமன்றம் போல வெளியாளஇருந்து கொண்டு வர முடியாது.

• கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக்கூட்டணி  என்ற மாபெரும் தமிழர் கட்சிக்குத்

தலமை தாங்கிய ஒரு பெரும் பழுத்த அரசியல் வாதி :lol:

மாகாண சபையில் அரசியல் செய்வது
அரசியல் வாழ்க்கைக்கே இழுக்கு. :D

கூட்டமைப்பு அதற்குத் துணை போகக்கூடாது. :(

ஸ்ரீதரன் M .P க்குமுறையிட்டு ,அவருடாக தலைமைக்கு அழுத்தம் கொடுங்கள் .அதைவிட்டு இதில் எழுதுவதால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது .

• கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்காவின் நிலைதடுமாறாத கொள்கை எது?

என்னைப் பொறுத்தவரை அனந்தி அக்காவுக்கு கிடைத்த வாக்குகள் புலிகளை முன்னிறுத்தி வந்த வாக்குகளும் பெண்களின் விருப்பு வாக்குகளுமாகும். மற்றும்படி அவருக்கென்று கொள்கை என்றெல்லாம் கிடையாது.

ஸ்ரீதரன் M .P க்குமுறையிட்டு ,அவருடாக தலைமைக்கு அழுத்தம் கொடுங்கள் .அதைவிட்டு இதில் எழுதுவதால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது .

அது நல்ல முறை அல்ல.  சிறீதரனை இவற்றுக்குள் இழுக்கக் கூடாது.

ஆந்த சங்கரி நம்ப முடியாதவர். ஆனால் அலுவல் தெரிந்தவர். எனவே நியமனமாக போவது நல்லத்தல்லாமல், தீமை அல்ல. கூட்டணி கூட்டமைப்பு குழுவுக்கு வெளியே இருப்பது பொருத்தமானது அல்ல. தேசிய முன்னணி யாழ்பாணத்தில் சில வேட்பாள்களை கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டிருந்தால் இராமநாதன் கூட்டம் ஒருவரையாவது இழந்திருக்கும்.

நமக்குள் மேலும் ஒற்றுமை தேவை.

• கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக லங்க்காசிறி தமிழ்வின் செய்திகளை காணொளி உட்பட யாழ் களத்தில் இணைப்பது களவிதிகளுகுப் புறம்பானதாகும்.

நீங்கள் இணைத்த இணைப்பில் தனது கொள்கை எதனையும் அனந்தி அக்கா சொல்லவில்லை. மேலெழுந்தவாரியாக மக்கள் ஆணைதந்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மகளுக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனச் சொல்கிறார். திட்டம் வேறு கொள்கைவேறு.

அனந்தி அக்காவின் நேரத்தை விட அறிவிப்பாளர்களின் புலம்பல்கள் தான் அதிகம். அதைவிட அவ ஒரு பெண் உறுப்பினராம் அதனால் அவவுக்கு பதவி கிடைக்குமாம். அய்யோ அய்யோ! :D

தவறான ராசாவும் படு தோல்வியாம்.  ஏண்டப்பா இவங்கள் தங்களுதாங்கள் கூட வாக்கு போடாமல் என்ன செய்தாங்கள் என்றதுதான் புரியவில்லை. :D

குத்தி என்ன செய்ய போகிறார் எதிர்க்கட்சி தலைவருக்கு என்பது தெரியவில்லை. இதற்குள், சாதனையை நிலைநாட்டியிருக்கும் விக்கினேஸ்வரனை விவாததிற்கு அழைத்தவர்தான் இந்த தவறான ராசா. :rolleyes:

• கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால் கூட்டமைப்பு தேர்தல் முடிந்ததுமே மக்கள் ஆணைக்கு எதிராக பயணிக்க ஆரம்பிப்பதாகக் கொள்ளலாம்.

ஆனந்தசங்கரி மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னும் அவரை மக்களின் முன் நிறுத்த திணிப்புகளை பாவிப்பது மக்கள் ஆணைக்கு எதிரான செயற்பாடாகும்.

சித்தார்த்தன்.. கொண்டிருந்த அரசியல் பின்புலத்தோடு பார்க்கின்ற போது அனந்தி அக்காக்கு ஒன்றுமே இல்லை எனலாம். சித்தார்த்தனுக்கும் விக்கிக்கும்.. மற்றவர்களுக்கும்.. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடையாளத்துக்குள் இருந்ததால் மக்கள் விருப்பை போட்டார்கள். ஆனால் அனந்தி அக்காவுக்கு அதனையும் தாண்டிய ஒரு மக்கள் ஆதரவு.. உள்ளமை தான் அவரை 2ம் இடத்திற்கு நகர்த்தி வந்துள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன் யார் அனந்தி என்றே மக்களுக்குத் தெரியாது..! அவரை.. சிங்களப் படைகளுக்கு தெரிந்த அளவிற்கு மக்கள் முன் அவர் வந்ததில்லை..! இருந்தும் மக்கள் விருப்பை எப்படி சம்பாதித்தார்..???! காரணம் அவர் கொண்டிருந்த நிலைதடுமாறாத.. கொள்கை. அங்கு தான் எமது மக்கள் நிற்கிறார்கள்..! :icon_idea::)

2004ல் மட்டக்களப்பு தொகுதியில் ஜோசப் பராஜசிங்கம் அவர்கள் தேர்தலில் விருப்புவாக்குகளின் அடிப்படையில் தோல்வியுற்றார். ஆனால் அவர் தேசியப்பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். மாமனிதர் ஜோசப்பராஜசிங்கத்தினையும் ஆனந்தசங்கரியையும் ஒரே தட்டில் உதாரணமாக சொல்வது சரியில்லை என்றாலும், விருப்பு வாக்குகளில் தெரிவு செய்யப்படாதவர்கள் மீண்டும் தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இங்கே பதிந்திருக்கிறேன்

• கருத்துக்கள உறவுகள்

டக்ளஸை மட்டுமல்ல ..நமக்குள்ளேயே இருக்கும் சிலரையும் கூட போட்டுத்தள்ளிவிட்டார்களே...??

உதாரணம் ஆனந்தசங்கரி!!

டக்லசின் ஈபிடிபி கள்ளவோட்டினாலும் ஒவ்வொருமுறையும்( நாடாளுமன்றத்தேர்தலில்) சில இடங்களைப் பிடிக்கும். 2004 தேர்தலில் 10 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் சிறிலங்காவில் இருக்கும் விகிதசாரப்பிரதிநித்துவ அடிப்படையில் ஒரு இடத்தினை யாழில் வென்றது. டக்லஸ் தேவானந்தா வெற்றி பெற்றார் . இந்த மாகாணசபைத்தேர்தலில் ஈபிடிபி கமல் என்பவர் யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் டக்லசுக்குப் போட்டியாக யாழ்ப்பாணத்தில் நாசகார வேலையினைச் செய்யும் அங்கயனும் வெற்றி பெற்றிருக்கிறார்.

• கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக லங்க்காசிறி தமிழ்வின் செய்திகளை காணொளி உட்பட யாழ் களத்தில் இணைப்பது களவிதிகளுகுப் புறம்பானதாகும்.

நீங்கள் இணைத்த இணைப்பில் தனது கொள்கை எதனையும் அனந்தி அக்கா சொல்லவில்லை. மேலெழுந்தவாரியாக மக்கள் ஆணைதந்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மகளுக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனச் சொல்கிறார். திட்டம் வேறு கொள்கைவேறு.

அனந்தி அக்காவின் நேரத்தை விட அறிவிப்பாளர்களின் புலம்பல்கள் தான் அதிகம். அதைவிட அவ ஒரு பெண் உறுப்பினராம் அதனால் அவவுக்கு பதவி கிடைக்குமாம். அய்யோ அய்யோ! :D

இணைப்பு லங்காசிறி இணையத்தில் இருந்தானதல்ல. யுரியுப்பில் இருந்தானது. மேலும் இணைப்பில் உள்ளது லங்காசிறியின் செய்தியும் அல்ல. நேர்காணல்...! :icon_idea:

அனந்தி அக்கா.. பெரிய கட்சி நடத்தி.. கூட்டமைப்பில் இணைந்தவரல்ல. அவான்ர கொள்கை என்பது முள்ளிவாய்க்காலுக்கு முன் என்ன நிலைப்பாட்டில் இருந்தாவோ அதே நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டு தன் கண் முன்னால் துன்பப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக தனது மனச்சாட்சிக்கு உட்பட்டு உழைப்பது. இதைத்தான் அவா தன்ர கொள்கையாக அங்கு குறிப்பிட்டும் உள்ளா.

எத்தனையோ முன்னாள் போராளிகள் இன்று வழித்தடம் மாறி உள்ள நிலையில்.. அனந்தி அக்கா அப்படி மாறாமலும்.. எதிரியின் சவால்களில் இருந்து மீள முடியும் என்று  காட்டியும் நிற்கிறா. இது கே பி முதல்.. தயா மாஸ்ரர்.. தமிழினி வரை எல்லோருக்கும் பொருந்தலாம் தானே..! :rolleyes:

அறிவிப்பாளரின் புலம்பலைக் கேட்க அல்ல இணைப்பு. அனந்தி அக்காவின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள அவா சொல்வதை கேட்கவே தரப்பட்டுள்ளது இணைப்பு. :)

2006 இலை எழுதினது.  இப்பவும் அதே கோவம் இருக்குது, அதாலை திரும்பவும் இணைக்கிறன்..

அநியாய மங்கரியே!

ஆனந்த மானஎம் தமிழரின் வாழ்வினை
அழித்திடக் கங்கணம் கட்டியே நிக்கிற
அநியாய சங்கலார் உன்னையே கேட்கிறேன்
அடுக்குமோ உன்செயல் அவனியில் சொல்லுவாய்

தந்தையின் வியர்வையில் தோன்றிய கட்சியில்
மந்தியைச் சேர்த்தவன் யாரெனக் கேட்கிறேன்
பந்தியில் சேர்த்திட வொண்ணாப் பாதகன்
நொந்துமே மூடுவன் கண்களைச் சீக்கிரம்

சுந்தரப் பெண்களைச் சுவைத்திடத் துடித்தவன்
சுதந்திரம் பற்றியும் பேசுதல் நீதியோ
தமிழரின் உரிமைகள் பற்றியே பேசிட
தறுதலை உந்தனுக் கேதுமே தகமையாம்

ஈழமண் காத்திட உயிர்தரும் பலரிடை
இழியனாய் இருந்துநீ இழிசெயல் செய்கிறாய்
தரித்திரம் பிடித்தவுன் முகத்தினைத் துரோகியாய்
சரித்திரம் அழுத்தமாய்ப் பதிவினில் வைத்திடும்

அன்றொரு நாளுனை அழுக்கு சங்கரியென
அழைத்ததோர் கும்பலின் காலினைப் பற்றினாய்
அவனியில் இப்படி வாழ்ந்திடல் தேவையோ?
அற்பனே உந்தனை எண்ணினால் கூசுதே

மக்களின் மேடையில் ஏறிய போதெல்லாம்
மகிழ்ச்சியாய் வாழ்வதற்(கு) ஈழமே தீர்வென்றாய்
மந்திக ளோடொரு மந்தியாய்ச் சேர்ந்ததால்
மறதியோ இல்லையேல் மறையது கழன்றதோ?

அயலகம் துப்பிய எச்சிலை நக்கியே
அழிவுகள் செய்கிற கழிவுமாய்; ஆகினாய்
இழிமகன் நீசெயும் செயலினை எண்ணினால்
இறந்துமே போனவுன் தாயுமே நாணுவாள்

பாரினில் நாடின்றி அலைந்திடும் தமிழர்கள்
பாசத்தைப் பிரிந்திங்கு பதறிடும் உறவுகள்
பலரது சாபமும் உன்னைத் துரத்திடும்
படுக்கையில் கிடந்துமே நொந்துமே சாகுவாய்

• கருத்துக்கள உறவுகள்

டக்லசின் ஈபிடிபி கள்ளவோட்டினாலும் ஒவ்வொருமுறையும்( நாடாளுமன்றத்தேர்தலில்) சில இடங்களைப் பிடிக்கும். 2004 தேர்தலில் 10 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் சிறிலங்காவில் இருக்கும் விகிதசாரப்பிரதிநித்துவ அடிப்படையில் ஒரு இடத்தினை யாழில் வென்றது. டக்லஸ் தேவானந்தா வெற்றி பெற்றார் . இந்த மாகாணசபைத்தேர்தலில் ஈபிடிபி கமல் என்பவர் யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் டக்லசுக்குப் போட்டியாக யாழ்ப்பாணத்தில் நாசகார வேலையினைச் செய்யும் அங்கயனும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கந்தப்பு அண்ணா.. ஜோசப் எம் பி கிழக்கில் போட்டி இட்டவர். அங்கு பல்லின சமூகத்தின் முன்னிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வது என்பது அன்றைய சூழலில் அவருக்கு சில இடர்களை தந்திருக்கலாம். ஆனாலும் அவர் பல முறை தொடர்ச்சியாக மக்கள் ஆதரவோடு வென்று பாராளுமன்றம் போன ஒருவர். அவர் குறைந்த விருப்பு வாக்கு வித்தியாசத்தில் தோற்றதால்.. ( சிங்கள அரசால் கருணா குழுவின் தயவோடு..திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதால்..)  தமிழ் மக்கள் அவர் பாராளுமன்றம் போவதை விரும்பி இருந்ததால்.. அவருக்கு அந்தச் சந்தர்ப்பதை அளித்தார்கள்.

சங்கரி.. வடக்கில்.. அதுவும் புலிகளை அழிந்தால் தான்.. (தமிழ் மக்களை அழித்து).. ஜனநாயகம் தளைக்க.. நான் கிளிநொச்சி போய் தேர்தலில் நின்று வென்று காட்டுவேன் என்று கதையளந்த ஒருவர். புலிகளின் சதியால் தான் தான் தோற்பதாகக் காட்டிக் கொண்டு கொழும்பில் இருந்து கொண்டு சிங்களத்தின் ஊதுகுழலாகச் செயற்பட்டவர்.

மேலும் அவர் முள்ளிவாய்க்காலின் பின்.. எல்லா தேர்தல் வாய்ப்புக்களையும் பயன்படுத்திய போதும்.. மக்களால் தோற்கடிக்கப்படவர். இம்முறை அவருக்கு கிடைந்த விருப்பு வாக்குகள் மற்றைய கூட்டமைப்பு வேட்பாளர்களைக் காட்டிலும் மிகக் குறைவு. அவர்கள் எல்லாம் 20,000 என்று எடுத்திருக்க இவருக்கு வெறும் 2000 சொச்சம். இந்த நிலையில் இவரை நியமன உறுப்பினராக்குவதை மக்கள் விரும்புவார்களா...??!

இவர் கடிதம் எழுதுவார்.. ஐநாவிடம் முறையிடுவார் என்பதற்காக.. அவரே சொந்த மக்கள் செத்தாலும் அழிஞ்சாலும்.. பறுவாயில்லை.. ஜனநாயகமே தன்ர சொத்தென்ற கணக்கில்.. இனிக்கப் பேசிய..ஜனநாயகத்தை.. அவரே..விரோதமாக்கலாமா..???! இது அவருக்கே.. சுய முரண்பாடாக இல்லையா..??! மேலும் ஆனந்த சங்கரிக்கு எல்லாம் இந்த வயதில் என்ன போட்டி அரசியல் வேண்டிக் கிடக்குது. அந்த நியமன உறுப்பினர் பதவிகளை.. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நின்ற.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள.. மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களுக்கு கொடுக்கலாமே..??! அல்லது பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே..???!

அதென்னமோ தெரியல்ல.. யாழிலும் சிலர் சங்கரியிடம்.. ஒற்றுமையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்பு திட்டமிட்டு புறக்கணிப்பதை கண்டுக்கிறார்களே இல்லை. அவர்களும் மக்கள் விரோதமாக கடிதம் எழுதினால்.. சித்தார்த்தன்.. டக்கிளஸ் போல.. ஒட்டுக்குழு நடத்தினால் தான்.. மதிப்பு வருமோ..??! அவர்களா சிந்தித்து மக்களுக்காக இணங்கி அல்லது இணக்க சூழ்நிலையை ஏற்படுத்தி செய்கின்ற அரசியலுக்கு நம்மவர்கள் அளிக்கும் மரியாதை வியக்க வைக்கிறது. என்ன உலகமோ..???! நாமளும் சில வேளைகளில் ஒட்டுக்குழுக்களின் ஆனந்த சங்கரி போன்ற.. ஒட்டுண்ணிகளின்.. உளறல்களுக்கு.. உள்ளூர பயப்பிடுறமோ என்னமோ..??! :):icon_idea:

Edited by nedukkalapoovan

• கருத்துக்கள உறவுகள்

...அதே நேரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் யாழ்பாணத்தில் 3 ஆவது இடத்தில் வந்து இருக்கின்றார். :icon_mrgreen:

அண்ணாச்சியை வவுனியாவில் விட்டால் ............. எல்லாம் விளக்கில் தெரியும்.
யாழில் அதிகம் இவரை பற்றி தெரியாது.
எதோ கூட்டமைப்பில் இருந்ததனால் வாக்கை போட்டிருக்கிறார்கள்.
• கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சியை வவுனியாவில் விட்டால் ............. எல்லாம் விளக்கில் தெரியும்.
யாழில் அதிகம் இவரை பற்றி தெரியாது.
எதோ கூட்டமைப்பில் இருந்ததனால் வாக்கை போட்டிருக்கிறார்கள்.

யாழில் சுதந்திரக் கட்சியில் இருந்து.. அட்டகாசம் புரியும்.. ஒருவர் கூட விருப்பு வாக்கில்.. வென்றிருக்கிறார். ஈபிடிபி ஒட்டுக்குழுவிற்கும் அவருக்கும்.. 13,000 கிடைத்துள்ளது. இந்த விருப்பு வாக்கு முறையில்.. இரண்டாம்.. மூன்றாம் தெரிவுகளை அண்ணாச்சி இலகுவாக யாழில் தக்க வைக்க மேலுள்ள ஒட்டுக்குழு ஆதரவு மற்றும்.. இராணுவத்தின் ரகசிய ஆதரவும்.. இவருக்கு இருந்திருக்கும். குறிப்பாக அனந்தி அக்காவை பின்னால் தள்ளிடனும் என்ற முயற்சியில் தான் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் செயற்பட்டன. ஏனெனில் அவாதான் மகிந்தவுக்கு சவாலான ஒருவராக கூட்டமைப்புச் சார்பில்.. அங்கு நின்ற வேட்பாளர். இந்தச் சூழலே அண்ணாச்சி தப்பிப்பிழைக்க காரணமாகவும் அமைந்தது..! இதனை அண்ணாச்சி விளங்கிக் கொண்டு.. எனியாவது உருப்படியாக மக்களின் உணர்வறிந்து செயற்படுறாரோ அல்லது பழைய குருடி கதவைத் திறவடி நிலை தானோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். :):icon_idea:

• கருத்துக்கள உறவுகள்

...அதே நேரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் யாழ்பாணத்தில் 3 ஆவது இடத்தில் வந்து இருக்கின்றார். :icon_mrgreen:

...அதே நேரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் யாழ்பாணத்தில் 3 ஆவது இடத்தில் வந்து இருக்கின்றார். :icon_mrgreen:

யாழ்ப்பாணத்தில் 6ம் இடத்தினைப் பிடித்தவரும் புளட் அமைப்பினைச் சேர்ந்தவர் என்று பின்வரும் இணையத்தில் இருக்கிறது.

யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள்

இலங்கைகூட்டமைப்புயாழ்

யாழ் மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள்

* சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) -132255

* எ. ஆனந்தி -87870

* த. சித்தார்த்தன் -39715 (புளொட் தலைவர்)

* ஆர். ஆர்னோல்ட் -26888

* சீ.வீ.கே. சிவஞானம் -26747

* பா. கஜதீபன் -23669 (தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், புளொட் வேட்பாளரும்)

* எம்.கே. சிவாஜிலிங்கம் -22660

* எஸ். ஜங்கரநேசன் -22268

* ச. சுகிர்தன் -20541

* எஸ். சயந்தன் -20179

* விந்தன் கனகரத்தினம் -16463

* எஸ். பரம்சோதி -16359

* எஸ். சர்வேஸ்வரன் -14761

* எஸ். சிவயோகம் -13479

* க. தர்மலிங்கம் -13256

* எஸ். குகதாஸ் -13256

* த. தம்பிராசா -7325

* என். வி. சுப்பிரமணியம் -6578

* ஆர். ஜெயசேகரம் -6275

ஈ.பி.டி.பி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள்

க. கமலேந்திரன் -13632

சி. தவராஜா -9803

ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் -5462

ஏ. சூசைமுத்து -4666

எஸ். பாலகிருஸ்ணன் -4611

அ. அகஸ்டின் -2482

எஸ். கணேசன் -1966

சுந்தரம் டிலகலால் -1963

ஞானசக்தி சிறிதரன் -1939

கோ.றுஷாங்கன் -1074

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விருப்பு வாக்குகள்

இ. அங்கஜன் -10034

எம். சீராஸ் -3323

எஸ். அகிலதாஸ் -2482

சர்வானந்தன் -2293

மு. றெமிடியஸ் -1801

எஸ். கதிரவேல் -1605

அ. சுபியான் -1046

எஸ். பொன்னம்பலம் -797

http://www.puradsifm.com/news/eelam-news/vote/

அங்கஜன் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள் தேவாந்தாவுக்கு இனி ஒன்றும் இல்லாமல் போகும் சந்தர்ப்பம் இருக்கு. EPDP அடுத்த தேர்தலின் பின்னர் கடையை மூடும். ரெமிடியசும் எல்லாம் கெட்டார். இனி இவர் கூட்டமைப்புக்கு சென்று பதவியை பெற முடியாது. இதில் K.P. புத்திசாலி. தேர்தல் கேட்கவில்லை.

மக்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்

• கருத்துக்கள உறவுகள்

யாழில் சுதந்திரக் கட்சியில் இருந்து.. அட்டகாசம் புரியும்.. ஒருவர் கூட விருப்பு வாக்கில்.. வென்றிருக்கிறார். ஈபிடிபி ஒட்டுக்குழுவிற்கும் அவருக்கும்.. 13,000 கிடைத்துள்ளது. இந்த விருப்பு வாக்கு முறையில்.. இரண்டாம்.. மூன்றாம் தெரிவுகளை அண்ணாச்சி இலகுவாக யாழில் தக்க வைக்க மேலுள்ள ஒட்டுக்குழு ஆதரவு மற்றும்.. இராணுவத்தின் ரகசிய ஆதரவும்.. இவருக்கு இருந்திருக்கும். குறிப்பாக அனந்தி அக்காவை பின்னால் தள்ளிடனும் என்ற முயற்சியில் தான் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் செயற்பட்டன. ஏனெனில் அவாதான் மகிந்தவுக்கு சவாலான ஒருவராக கூட்டமைப்புச் சார்பில்.. அங்கு நின்ற வேட்பாளர். இந்தச் சூழலே அண்ணாச்சி தப்பிப்பிழைக்க காரணமாகவும் அமைந்தது..! இதனை அண்ணாச்சி விளங்கிக் கொண்டு.. எனியாவது உருப்படியாக மக்களின் உணர்வறிந்து செயற்படுறாரோ அல்லது பழைய குருடி கதவைத் திறவடி நிலை தானோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். :):icon_idea:

சரி விடுங்க பாஸ் நமக்கு நல்லா தெரிஞ்ச பையன் ஒருத்தனும் வந்து இருக்கான் யாழ்ப்பாணம் பிரச்சனை இல்லாமல் போயிட்டு வர உதவும் :D

• கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபைத் தேர்தல் ஊடாக சர்வதேசத்திற்கு தமிழர்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட முடியும்- கூட்டமைப்பின் வேட்பாளர் பா.கஜதீபன்

1-2-300x200.jpgஎமது இருப்பை நிர்­ண­யிக்­கின்ற தேர்தல், தமி­ழர்­க­ளா­கிய நாம் இந்தத் தேர்­தலை சரி­யா­ன­மு­றையில் பயன்படுத்த வேண்டும். எமது ஒற்­று­மையை நாம் சர்­வ­தே­சத்­துக்குப் பறை­சாற்­ற ­வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை நாம் பெற்று ஆட்­சியைக் கைப்­பற்­ற­ வேண்டும்.

எமது மக்கள் எமக்கு ஒரு­மித்து வாக்­க­ளித்து, அதனைப் பெற்­றுத்­த­ரு­வார்கள் என்­பது உறுதி என, தமிழ்த் தேசி­யக் ­கூட்டமைப்பின் வட ­மா­கா­ண ­சபை வேட்­பா­ளரும், தமி­ழ­ரசுக் கட்­சியின் இளைஞர் அணித் தலை­வ­ரு­மா­கிய பா.கஜ­தீபன் தெரி­வித்தார். சாவ­கச்­சேரி பிர­தே­ச­சபை உறுப்­பினர் கிஷோர் தலை­மையில் கைத­டியில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், இணக்கம் என்­ப­தற்கு அர்த்தம் புரி­யாது பேசு­கின்­றார்கள். இணக்­கப்­பாட்டு அர­சியல் இணக்கப்­பாடு என்றால் என்ன? என்­பது பற்றித் தெரி­யா­த­வர்கள் புரி­யா­த­வர்கள் இணக்­கப்­பாட்டு அர­சியல் பற்­றிப்­ பேசுகின்றார்கள். நாம் எமது உரி­மை­களைக் கோரு­வதை எதிர்ப்பு அர­சியல் என்­கின்­றார்கள்.

இணக்­கப்­பாட்டு அர­சியல் என்­பது நாம் கோரு­கின்ற எமது உரி­மைகள் பற்­றிய நியா­யா­திக்­கத்­துக்கு அர­சாங்கம் சிற்­சில மாற்­றங்­களை அல்­லது திருத்­தங்­களை முன்­வைத்தால், எது எம்மால் – தமிழ் மக்­களால் – பூரண மனத் திருப்­தி­யுடன் ஏற்கப்ப­டு­மாயின், இரண்டு தரப்­புக்­களும் இணங்கி பொது முடிவைப் பெறு­வதே இணக்­கப்­பாடு ஆகும்.

இவற்றின் அர்த்தம் புரி­யா­த­வர்கள் இணக்­கப்­பாட்டு அர­சியல் பற்றிப் பேசு­கின்­றார்கள். அரசு எம்­மீது திணிக்­கின்ற ஒரு தீர்வுத்­திட்­டத்­துக்கு நாம் தலை­சாய்த்து, அதற்கு அடி­மைப்­பட்டு, எமது கையா­லாகத் தன்­மையால் அதை ஏற்­பது அடிமை அர­சியல் ஆகும்.

இன்று ஈ.பி.டி.பியினர் செய்­வதும் அடிமை அர­சி­யல்தான். ஆரம்­பத்தில் மத்­தியில் கூட்­டாட்சி மாநி­லத்தில் சுயாட்சி என்றைக்­குமே பிரிக்­க­மு­டி­யாத வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்­றார்கள். இன்று மத்­தியில் கூட்­டாட்­சியும் இல்லை. மாநி­லத்தில் சுயாட்­சியும் இல்லை.

இறு­தியில் வடக்கு கிழக்கும் பிரிக்­கப்­பட்டு, வடக்கு மாகா­ணத்­துக்கு மட்­டுமே போட்­டி­யி­டு­கின்­றார்கள். இன்று தமது அரசியல் சுய­லா­பத்­துக்­காக அடி­மைத்­த­னத்தை ஏற்று இவர்கள் புரி­வது அடிமை அர­சியல் ஆகும். எம்மைப் பார்த்து எதிர்ப்பு அர­சியல் நடத்­து­கின்­றார்கள் என்­கின்­றார்கள். ஆமாம், நாம் எதிர்ப்பு அர­சி­யல்தான் நடத்­து­கின்றோம். எதற்­காக எதிர்ப்பு அரசியல் நடத்­து­கின்றோம்? எமது மக்­க­ளுக்­காக.

எமது மக்கள் தன்­மா­னத்­துடன் வாழ­வேண்டும் என்­ப­தற்­காக. எமது மக்கள் சுய­நிர்­ண­யத்­துடன் வாழ­வேண்டும் என்பதற்காக. எமது மக்­களை அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­காக. எமது மக்­களின் கலா­சாரம், பண்­பாடு என்­பன சீர­ழி­யப்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக.

உண்­மையில் மக்கள் மீது அக்­கறை கொண்­ட­வர்கள் யார்? எதிர்ப்பு அர­சியல் நடத்தும் நாமா? அல்­லது அடிமை அர­சியல் நடத்தும் அரச ஆத­ரவுக் கட்­சி­யி­னரா? இந்தத் தேர்­தலில் மக்கள் தாம் அடி­மை­க­ளாக வாழ்­வதா? அல்­லது உரி­மை­களைப் பெறு­வ­தற்­காகப் போரா­டு­வதா? என்று தீர்­மா­னித்து இவர்­க­ளுக்கு நல்ல பாடம் புகட்­டுவர்.

ஆகவே, எமது இ­னிய அன்­பான தமிழ் மக்­களே! நாம் எமது உரி­மை­களைக் கோரு­வதை எதிர்ப்பு அர­சியல் என்­கின்­றார்கள். எமது இருப்பை நிர்­ண­யிக்­கின்ற தேர்தல். தமி­ழர்­க­ளா­கிய நாம் இந்தத் தேர்­தலை சரி­யான முறையில் பயன்­ப­டுத்­த­வேண்டும். எமது ஒற்­று­மையை நாம் சர்வதேசத்துக்குப் பறைசாற்றவேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாம் பெற்று ஆட்சியைக் கைப்பற்றவேண்டும்.

எமது மக்கள் எமக்கு ஒருமித்து வாக்களித்து அதனைப் பெற்றுத்தருவார்கள் என்பது உறுதி. இந்தத் தேர்தலில் மக்கள் சலுகைகளுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் என்றைக்கும் விலைபோகமாட்டார்கள் என்பது நம்பிக்கை என்றார்.

http://www.radarnews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F/

அது நல்ல முறை அல்ல.  சிறீதரனை இவற்றுக்குள் இழுக்கக் கூடாது.

ஆந்த சங்கரி நம்ப முடியாதவர். ஆனால் அலுவல் தெரிந்தவர். எனவே நியமனமாக போவது நல்லத்தல்லாமல், தீமை அல்ல. கூட்டணி கூட்டமைப்பு குழுவுக்கு வெளியே இருப்பது பொருத்தமானது அல்ல. தேசிய முன்னணி யாழ்பாணத்தில் சில வேட்பாள்களை கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டிருந்தால் இராமநாதன் கூட்டம் ஒருவரையாவது இழந்திருக்கும்.

நமக்குள் மேலும் ஒற்றுமை தேவை.

ஸ்ரீதரன் எம்பி பகிரங்கமாகவே சங்கரியை எதிர்த்தவர் .அதனாலதான் சங்கரியுடன் ஒன்றாக பிரச்சாரம் செய்யமுடியாதென்று வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறவில்லை .தலைமைகள் மறைமுகமாக ஸ்ரீதரன் எம்பிக்கு தேவையானவைகளை செய்தனர் .அதனாலதான் கிழக்கு எம்பிக்கள் ஸ்ரீதரனுடன் பல நாட்களாக நின்று பாடுபட்டனர் .கடைசி நேரத்தில் கூட ஸ்ரீதரன் எம்பி கேட்ட பெரும் உதவியை கனடா உறவுகள் செய்தனர் .

இப்படியானவர்களை முளையிலேயே அழிக்கவேண்டும் அல்லது ------அழிக்கவேண்டும் .

• கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆபிசில் கிளர்க்கு வேலைக்கு (எழுத்தர் வேலை - கடிதம் எழுதுதல்) வைத்து கொள்ளலாம் அல்லவா? எதற்கு இவரை எல்லாம் உள்ள சேர்த்துட்டு?? :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
1. Tap the lock icon next to the address bar.
2. Tap Permissions → Notifications.
3. Adjust your preference.
Chrome (Desktop)
1. Click the padlock icon in the address bar.
2. Select Site settings.
3. Find Notifications and adjust your preference.