Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மீனுக்கு மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கும் - செல்வம் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

selvam-adaikalanathan.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீனுக்கும் மற்றையதை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் வோட்பாளர் ஒருவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனங்களில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அதன்படி ஐந்து வருட மாகாண சபை பதவிக் காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=7355

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

நல்ல  முடிவு.........

  • கருத்துக்கள உறவுகள்

புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் நல்ல ஒரு 'அரசியல் அனுபவத்துக்கான அடித்தளத்தை அமைத்திட , இந்தத் திட்டம் வழி சமைத்துக் கொடுக்கும்! :icon_idea:

இது இரண்டு விடயங்களை சொல்கிறது

- விட்டுக் கொடுக்கும் தன்மை அற்ற ஆகக் குறைந்தது ஐந்து பதவி வெறியர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்

- இவர்களை தட்டி வைக்கின்ற அளவிற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் ஆளுமை போதவில்லை

ஏமாற்றமாக இருக்கிறது!!!

எனக்கும் புங்கைக்கும் இப்படி சிந்திக்க வருகுதில்லை

அதுக்கு ஆய்வாளராக இருக்கணுமோ???

இப்படி 

கோணலுக்கு சிந்தித்து எழுதிய  ஆய்வாளர்கள் தான் எமது  தோல்விகளுக்கு காரணம் என்று இங்கு ஒரு கதை அடிபடுகுது  சபேசன்.

பார்த்து

பார்த்து ராசா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டு விடயங்களை சொல்கிறது

- விட்டுக் கொடுக்கும் தன்மை அற்ற ஆகக் குறைந்தது ஐந்து பதவி வெறியர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்

- இவர்களை தட்டி வைக்கின்ற அளவிற்கு ஆளுமை போதவில்லை

ஏமாற்றமாக இருக்கிறது!!!

சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் வயசு போச்சுது ..... கூட்டமைப்பு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்று உங்களின் கருத்தையும் முன்வைக்கலாமே ....  :)

  • கருத்துக்கள உறவுகள்

90 வயதிலும் கருணாநிதிக்குப் பதவி ஆசை இருக்கும்போது, இவர்களுக்கு இருக்கக்கூடாதா என்ன?

இது இரண்டு விடயங்களை சொல்கிறது

- விட்டுக் கொடுக்கும் தன்மை அற்ற ஆகக் குறைந்தது ஐந்து பதவி வெறியர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்

- இவர்களை தட்டி வைக்கின்ற அளவிற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் ஆளுமை போதவில்லை

ஏமாற்றமாக இருக்கிறது!!!

வழமையான சபேசனின் ஊகம்.

ஜனநயகத்தில் ஒருவரின் பலம் அவரால் எத்தனை வாக்குகளை எடுக்க முடியும் என்பதில்தான் உள்ளது. வாக்குகளை பிரட்ட முடியாதவரை கட்சிகள் தலையில் வைத்து கொண்டாடுவதில்லை. ஆனால் அவரால் என்ன செய்யமுடியும் என்பது அவரின் தனிப்பட்ட ஆற்றல். இதில் நீதியான முறையாக படுதோல்வியடைந்த ஆனந்தசங்கரிக்கு 5 பேருக்கு கீழ் போய் ஒரு பதவி கொடுக்க கூட்டமைப்பு முன்னால் வருகிறது. அது கூட்டமைப்பு ஒருவரை பயன்படுத்தும் முறை. 

இருந்தாலும் இந்த ஐந்து பேரும் பதவி கேட்டு கூட்டமைப்பிடம் என்ன் சொன்னார்கள் என்றதில் ஒருவசனத்தை தன்னும் சபேசன் அறிந்திருந்தால் அதையும் எழுதி சொன்னவர் பெயரையும் போட்டுவிடலாம். சபேசன் அதை பற்றி எழுதாமல் தொடந்தும் ஊகம் எழுதினால் அவர்  யாருக்காகவோ, எதையோ பிரச்சாரம் செய்கிறார் என்றுதான் பலரும் விளங்க்கிக்கொள்ள முயல்வார்கள். 

நான்நினைக்கவில்லை ஆனந்தசங்கரிக்கு கிடைக்கும் என்று ,மன்னார் ,துணுக்காய் ,கிளிநொச்சி(யில் போட்டியிட்ட மலையகத்தமிழர்) ,முல்லைத்தீவு போன்ற இடங்க ளிற்கு கிடைக்கும் .

இரண்டாவது இடம் ஒரு பெண்ணுக்கு போவதாக இருந்தது (மூலம்: https://www.colombotelegraph.com/index.php/tnas-two-bonus-seats-to-a-muslim-and-to-a-woman-and-not-to-anandasangari/comment-page-1/#comment-704304). ஆனால் அந்த பெண்ணுக்கு எதிராக விமர்சனங்களை வைத்த்து அந்த திட்டத்த்தை முறியடித்த பெருமைக்குரியவர்கள் இன்று வேறொரு முடிவை அறிவித்திருக்கிறார்கள்.

அதே பாணியில் ஆற்றல், தகமை மற்றும் அரசியல்/சமூக செயல்திறன் அடிப்படையில் அமைச்சு பதவிகள் வழங்கி மாகாண நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்று ஒருசாராரும் இல்லை கட்சி அடிப்படையில் அமைச்சு தேவை என்று இன்னொருபகுதியும் முரண்டுபிடித்து கொண்டிருக்கின்றார்கள். 
 
யுத்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட எங்கள் சகோதரிகள் தொடர்ந்து இராணுவ இம்சைக்கும் காமபபசிக்கும் உள்ளாகிவருவது குறித்து நேற்று நவீனீதம்பிள்ளை மேலும் ஒருமுறை உலகுக்கு தெரியபடித்ிஉள்ளார். மேலும் யுத்ததால் கணவனை இழந்தவர்களும், சரணடைந்து பின்னர் விடுதலையான மகளிர் போன்றவர்களின் தேவைகளையும், நீண்டகால உடல்/உழ மருத்துவ உதவிகளையும் சரியானமுறையில் நிறுவனப்படுத்தி கையாள சரியான பெண் பிரதிநித்துத்துவம் எமக்கு தேவை. ஆனால் இஸ்லாமிய சமூகத்தவிருக்கு இடம் ஒதுக்கி கொடுப்பதில் காட்டுகின்ற அரசிய சாணக்கியம் பெண்களுக்கு இடம் ஒதுக்குவதில் இன்னும் வரவில்லை என்பது இன்றைய உலகில் மிகவும் வெட்கப்படவேண்டிய விடயம்.
  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைக்கு காணி அதிகாரங்களே இல்லைன்னு.. இன்னொரு தீர்ப்பு வந்திருக்கே. அப்புறம் எதுக்கையா.. வெற்றுப் பதவிக்கு ஆளையாள் இழுபறிப் படுறீங்க.

முதலில.. மாகாண சபையை.. அதிகாரமுள்ள அமைப்பாக்கிட்டு.. அப்புறம் அடிபடுங்க. அதில ஒரு நியாயம் இருக்கும்.

இதென்னடான்னா.. மக்களை ஏமாற்றி.. அவர்கள் முதுகில் சவாரி செய்வது போல இருக்குது. வந்த நோக்கத்தை மறந்து.. பதவிக்கு அடிபடுறதே நம்மாக்களின் வேலையாப் போச்சுது. இதனால் தான்.. தமிழன் எல்லாத்தையும் இழந்து நிற்கிறான். இன்னுமா..???! :icon_idea::rolleyes:

த.தே.கூ பெண் விடுதலைக்காகப் போராட உருவான அமைப்பா அல்லது தமிழர்களின் விடுதலைக்காக உருவான கட்சியா? விக்னேஸ்வரனுக்கு அடுத்த படியாக விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவான அனந்தி பெண்ணில்லையா? அல்லது தமிழ்ப் பெண்களின் பிரச்சினைகள் பற்றித் தெரியாமல்/பேச முடியாமல் இருக்க ஏனைய ஆண் உறுப்பினர்கள் என்ன வெளி நாட்டில் இருந்து வந்திறங்கின வெள்ளைக் காரர்களா? மாகாணசபை உறுப்பினர்களின் ஒரெ வேலை தமிழ் தேசியம் பற்றியதாக மட்டும் தான் இருக்க வேண்டுமேயொழிய ஏனைய சமூகப் பிரச்சினைகளில் விற்பன்னர்களாக விளங்குவதாக இருக்கக் கூடாது-இது தான்  மக்கள் எதிர் பார்ப்பது. 

பெண் என்று இடம் ஒதுக்கப் போனால் நாளைக்கு காலில்லாத ஒருவர் மாற்றுத் திறனாளிகளுக்காகப் பேச தனக்கு ஆசனம் கேட்கக் கூடும், இன்னொருவர் தான் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பேசப் போவதாக ஆசனம் கேட்கலாம். இப்படியே போனால் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்ய இயலாத தமிழ் நாட்டு மாநில அரசு மாதிரி ஆகி விடக் கூடும். அதிக வாக்குப் பெற்றவர்கள் பதவி பெறுவதே நல்ல திட்டம்!

பேசாமல் இந்த நியமன ஆசனத்தை சம்பந்தனுக்கு குடுத்து மாகான ( கிழக்கிலை வெல்ல முடியாத) சபையிலை இருக்க வைத்து தலைமை பொறுப்பை விக்னேஸ்வரனிடம் குடுக்கிறது நல்லது...

2010 சம்பந்தர் தலைமையிலை நாடாளுமண்ற தேர்தலில் கூட்டமைப்பு வாங்கின ஒட்டு மொத்த வாக்குகளின் அரைவாசியை விக்கினேஸ்வரன் தனி ஒருவராக விருப்பு வாக்காக வாங்கி இருக்கிறார்...

அதன் மூலம் உள் சண்டையை தவிர்க்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இரண்டு விடயங்களை சொல்கிறது

- விட்டுக் கொடுக்கும் தன்மை அற்ற ஆகக் குறைந்தது ஐந்து பதவி வெறியர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்

- இவர்களை தட்டி வைக்கின்ற அளவிற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் ஆளுமை போதவில்லை

ஏமாற்றமாக இருக்கிறது!!!

உங்களுடைய சிந்தனை புல்லரிக்க வைக்குது சபேசன் அண்ணா. இளையவர்களுக்கு இல்லை எல்லாருக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதாக்கக் கூட இருக்கலாமல்லவா? ஐந்து பேரில் விருப்பு வாக்கு கூடியவருக்கு குடுத்து போயிட்டே இருக்கலாமல்லவா? இது தெரியாமலா அவர்கள் இருப்பார்கள்? சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் இப்படியான சிந்தனைகள் மூலம் நீங்கள் உங்களையே தரம்தாழ்த்திக் கொள்கிறீர்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டு விடயங்களை சொல்கிறது

- விட்டுக் கொடுக்கும் தன்மை அற்ற ஆகக் குறைந்தது ஐந்து பதவி வெறியர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்

- இவர்களை தட்டி வைக்கின்ற அளவிற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் ஆளுமை போதவில்லை

ஏமாற்றமாக இருக்கிறது!!!

ஆனந்த சங்கரியீறாக யாராவது தனக்கு தான் பதவி தரவேண்டும் என அடம் பிடித்தார்களா?
 
ஜனநாயகரீதியாக யாருக்கு அதிக வாக்குகள் உள்ளதோ அதன் படி அதுவும் சுழற்சி முறையில் பதவி வழங்குவது முறை தானே?
 
இன்னும் விக்கினேஸ்வரன் பதவி கூட ஏற்கவில்லை. அதற்குள் அவரின் ஆளுமை பற்றி  யாருக்கு என்ன தெரியும்?
"பெண் என்று இடம் ஒதுக்கப் போனால் நாளைக்கு காலில்லாத ஒருவர் மாறுத் திறனாளிகளுக்காகப் பேச தனக்கு ஆசனம் கேட்கக் கூடும், இன்னொருவர் தான் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பேசப் போவதாக ஆசனம் கேட்கலாம்." - ஒரு முற்போக்கு ஜனநாயக நாடுகளில் வாழ்பவர்களை விட அங்குள்ள மக்கள் ஜனநாயக விழுமியங்கள் பற்றி கூடவே அறிந்து வைத்துள்ளனர். குறிப்பாக வெற்றிக்காக வீடு வீடாக சென்று உழைத்த்த பல்கலைக்கழக மாணவர்கள் இளையோர், மற்றும் பெண் பிரதிநித்துததுவம் பற்றி கேட்டபோது சுமந்திரன் அவர்களின் பிரதிநிததுவம் குறைந்தது வருத்தமானது என்று பதிலளித்திருந்தார். (). அந்தளவுக்கு அவர்கள் ஜனநாயக கட்டமைப்பில் பால், வயது ரீதியான பிரதிநிதித்துவம் பற்றி ஆர்வம் செலுத்துகின்றார்கள்!!!
 
 பெண் பிரதிநித்துததுவம் பற்றி  முன்னால் அவஸ்‌ட்ரேலிய பிரதமர் ஜூலியா கிலர்ட்: http://www.youtube.com/watch?v=_nvlN1dTn0c

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு பதவி கொடுக்கும் போது கவனமா இருக்கணும் பிறகு ஜூலியா கெவின் ரட் க்கு பின்னாடி இருந்து முதுகுல குத்தின மாதிரி குத்திட்டா என்ன பண்ணுறது

  • கருத்துக்கள உறவுகள்

"பெண் என்று இடம் ஒதுக்கப் போனால் நாளைக்கு காலில்லாத ஒருவர் மாறுத் திறனாளிகளுக்காகப் பேச தனக்கு ஆசனம் கேட்கக் கூடும், இன்னொருவர் தான் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பேசப் போவதாக ஆசனம் கேட்கலாம்." - ஒரு முற்போக்கு ஜனநாயக நாடுகளில் வாழ்பவர்களை விட அங்குள்ள மக்கள் ஜனநாயக விழுமியங்கள் பற்றி கூடவே அறிந்து வைத்துள்ளனர். குறிப்பாக வெற்றிக்காக வீடு வீடாக சென்று உழைத்த்த பல்கலைக்கழக மாணவர்கள் இளையோர், மற்றும் பெண் பிரதிநித்துததுவம் பற்றி கேட்டபோது சுமந்திரன் அவர்களின் பிரதிநிததுவம் குறைந்தது வருத்தமானது என்று பதிலளித்திருந்தார். (). அந்தளவுக்கு அவர்கள் ஜனநாயக கட்டமைப்பில் பால், வயது ரீதியான பிரதிநிதித்துவம் பற்றி ஆர்வம் செலுத்துகின்றார்கள்!!!

உண்மை தான் சன்! அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக விழுமியம் பற்றி எல்லாரையும் விட அதிகம் தெரியும் உண்மை தான். அதிக வாக்குகள் எடுத்தவர்களை ஓரம் கட்டி விட்டு உடல்/உள அமைப்புகளை வைத்துக் கொண்டு தமிழர்களை இன்னும் கூறு போட்டு நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் சிங்களவனுக்கு யு.என்.பியை உடைத்தது போல உடைத்துப் போட நல்ல வாய்ப்பாகும். சுமந்திரனே ஒரு ajenda வோட திரியுற ஆள்! அவரையே மேற்கோள் காட்டுற அளவுக்கு இருக்கு உங்கட ajenda! 

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இப்படி எழுதுவதற்குக் காரணம் அனந்தசங்கரிக்குப் பதவி கிடைக்காது என்பதால்தான்.போதுமய்யா உங்க ஆய்வு.முடியல!!!!!!

பெண்களுக்கு பதவி கொடுக்கும் போது கவனமா இருக்கணும் பிறகு ஜூலியா கெவின் ரட் க்கு பின்னாடி இருந்து முதுகுல குத்தின மாதிரி குத்திட்டா என்ன பண்ணுறது

நன்றி சுண்டல். நீங்கள் சுவாரசியமாக பதில் அளித்திருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் வரலாற்று தேவைக்காக ஒன்றை இங்கு நான் பதிய வேண்டும்.  ஜூலியா கெவின் ரட் க்கு பின்னாடி இருந்து முதுகுல குத்தினதாக சொல்பவர்கள் அதைப்போலவே செய்த திரு. பால் கீடிங்ஐ பெரிய ஆளுமை பண்புடையவராக வர்ணித்த்தது. திரு. பால் கீடிங்ஐ (Paul Keating) அன்று தேர்த்திலில் வரலாறு படைத்த திரு. பாப் ஹாக்ஐ (Bob Hawke) 56-51 என்ற கணக்கில் வீழ்ட்த்ி பதிவியை பிடித்தார். அவர் திரு. பாப் ஹாக்குக்கு தவிசாளராக இருந்து முதல் முறை அவரை வீழ்ட்த முயன்று தோற்று பின்னர் திரும்பவும் சில மாதங்களில் முயன்று வென்றார். அதட்காக ஆண்களுக்கு பதவி கொடுக்கும் போது கவனமா இருக்கணும் என்று சொன்னா எப்படி இருக்கும்?.

மேலும் ஜூலியாவிக்கு பின்னால் இருந்து அவரை தலைமைக்கு கொண்டுவந்தபின்னர் பிரதிபிரதமர் ஆன வேந்  ஸ்வான் (Wayne Swan) அன்று கெவின் ரட்க்கு தவிசாளர் ஆக இன்றுந்து அவரை வீழ்ட்தும் சதியில் பங்குபெற்றார். இதுவும் இங்கு குறிப்பிடத்த்க்கது. ஆக ஆண்கள் செய்தால் அதை ஆழ்மைத்திறன் என்றும் பெண்கள் செய்தால் முதுகில் குத்தவதென்றும் சொல்வது எமது Double Standardஐ காட்டுகின்றது. 

மூலம்: http://en.wikipedia.org/wiki/Paul_Keating

மாகாண சபைக்கு காணி அதிகாரங்களே இல்லைன்னு.. இன்னொரு தீர்ப்பு வந்திருக்கே. அப்புறம் எதுக்கையா.. வெற்றுப் பதவிக்கு ஆளையாள் இழுபறிப் படுறீங்க.

முதலில.. மாகாண சபையை.. அதிகாரமுள்ள அமைப்பாக்கிட்டு.. அப்புறம் அடிபடுங்க. அதில ஒரு நியாயம் இருக்கும்.

இதென்னடான்னா.. மக்களை ஏமாற்றி.. அவர்கள் முதுகில் சவாரி செய்வது போல இருக்குது. வந்த நோக்கத்தை மறந்து.. பதவிக்கு அடிபடுறதே நம்மாக்களின் வேலையாப் போச்சுது. இதனால் தான்.. தமிழன் எல்லாத்தையும் இழந்து நிற்கிறான். இன்னுமா..???! :icon_idea::rolleyes:

அரசியல்வாதிகள்(கூட்டமைப்பு) மாகாணசபை தேர்தலில் நிற்கும் பொது  அது மக்களுக்கு ஆபந்தான சில நினைவுகளை கொடுக்கலாம். இனி அந்த கவலை தேவை இல்லை.

இனி உள்ளே சில பதவி போட்டிகள் தலை எடுக்கலாம். ஆனால் வடமாகாணத்தை வைத்து லாபம் அடைவது மிக மிக கஸ்டம் என்பதால் இந்த போட்டியை தெற்கு போட்டுகளுடன் ஒப்பிடதேவை இல்லை.

என்வே தெரியப்படும் அங்கத்தவர்கள், போராளிகளா, நிர்வாகிகளா, சமூக பிரதிநிதிகளா.... என்ற கேள்விகளுக்கு, இன்றைய தேவை போராளிகள். விக்கினேவரனின் சட்டப்படிப்பு அவரின் போர் திறமையாகத்தான் காட்டப்பட்டது. அதுவேதான் அனந்திக்கும் இருக்கும் திறமை. ஆனந்த சங்கரிக்கு நிர்வாகத்திறமையும் இருக்கலாம். ஆனால் இல்லாத மாப்பிள்ளையோடு திருமணம் வேண்டுமா?. எனவே அவருக்கு பதவி கொடுக்கமுதல் ஆந்த சங்கரியின் போரட்ட இயல்புகளை மட்டும்தான் பார்க்கவேண்டும். மகாணசபையின் அதிகாரங்களை போராடிப் பெறமுடியாவிட்டால் சந்திர சிறி மட்டும்தான் அங்கு எல்லாமே.

எனவே இதில் சமூக பிரதிகளாக பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள். முஸ்லீம்கள்  எல்லாம் எவ்வளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது சந்திரசிறியின் க்ருணை உள்ளத்தால் அவர் யார் பக்கம் சரிவது என்றதை பொறுத்துத்தான் நடக்கும். அந்த நேரத்தில் தெரியப்பட்ட பிரந்திகள் தமிழர்களின் பொது பிரதிநிதிகளாகளாக இருக்கவிட்டல் அது சந்திர சிறியால் ஆப்பிறுக்க மட்டும் பாவிக்கப்படும். அரசு இதை தந்திரத்தால் விதவைகள் கட்சி ஆரம்பிதது. தேர்தலின் ஆரம்பத்தில் அரசு சிலர் மீது சாதி நாமம் போட்டு சாதிக்கலவரங்களை தூண்டப்பார்த்தது. இதில் ஒரு பகுதிதான் விக்கினேஸ்வரன் மேட்டுக்குடி கதையும். ஆனால் யாழில் கழிக்கப்பட்ட குலங்கள் கூட தம்மையும் பிரதிநிதுவப்படுத்த விக்கினேஸ்வரனைத்தான் நம்புகிறார்கள். 

மாகாணசபை அதிகாரத்தை, உரிமையை பெற போர்க்களமாக பாவிக்கப்பட போகிறதென்றால் தொடர்ந்து போராட்ட போவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். நிர்வாகிகள், சமூகப்பிரந்திகள்.. இரண்டம் கட்டம். அதில் கட்சிகளின் பிரதிதுவம் என்ற கதையே வெளியே வரமுதல் அடக்கப்பட்டுவிட வேண்டும். விக்கினேஸ்வரன் எந்த கட்சியும் இல்லாதவர் என்ற முறையில் பயப்படாமல் இதில் தான் இரும்புக்கரத்தை காட்டலாம். 

உண்மை தான் சன்! அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக விழுமியம் பற்றி எல்லாரையும் விட அதிகம் தெரியும் உண்மை தான். அதிக வாக்குகள் எடுத்தவர்களை ஓரம் கட்டி விட்டு உடல்/உள அமைப்புகளை வைத்துக் கொண்டு தமிழர்களை இன்னும் கூறு போட்டு நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் சிங்களவனுக்கு யு.என்.பியை உடைத்தது போல உடைத்துப் போட நல்ல வாய்ப்பாகும். சுமந்திரனே ஒரு ajenda வோட திரியுற ஆள்! அவரையே மேற்கோள் காட்டுற அளவுக்கு இருக்கு உங்கட ajenda! 

"சுமந்திரனே ஒரு அஜெண்டா வோட திரியுற ஆள்! அவரையே மேற்கோள் காட்டுற அளவுக்கு இருக்கு உங்கட அஜெண்டா! "
 
போருக்கு பின்னரான ஒரு கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிததுவம் பற்றி இங்கு கருத்தாட வந்தால் அதை agenda என வருணிக்கின்றீர்கள். திரு. சும்ந்திரனிடம் பெண்கள் மற்றும் இளையோர் பிரதிநித்துவம் பற்றி Twitter ஊடாக கேள்வி கேட்டேவார் சுமந்திரனுக்கு சிம்மசொப்பனமாக இருந்துவரும் எனதருமை யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் தான். (கீழஎ இணைத்துள்ள செய்தியிலும் அவரின் கருத்து வாழங்கியுளர்). தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மொத்தம் 51 வேட்பாளர்கள் தேர்தலைல் நின்றனர். அதில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஒருவருமாக மொத்தம் மூன்று பெண் வேட்பாளர்கள். இந்த நிலமை பற்றி நாங்கள் நேரடியாக Twitter ஊடாக தொடர்புகொள்ளகூடிய சும்ந்திரனிடம் பதில் கேட்டால் அது உங்களுக்கு agendaவாக படுகிறது வியப்புகுரியது.
 
"அதிக வாக்குகள் எடுத்தவர்களை ஓரம் கட்டி விட்டு உடல்/உள அமைப்புகளை வைத்துக் கொண்டு தமிழர்களை இன்னும் கூறு போட்டு நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் சிங்களவனுக்கு யு.என்.பியை உடைத்தது போல உடைத்துப் போட நல்ல வாய்ப்பாகும்."
 
அடுத்ததாக சிங்களவன் U.N.P உடைத்ததை வைத்து பெண்களுக்கு இடம் ஒதுக்கிவிட்தால் தனக்கு இடம் கிடைக்காத மற்றோர் அதேய்போல அரசினால் பாவிக்கப்டும் என்று சொல்கிறீர்கள். அது ஏவாரு சாத்தியமானது என்று சித்தித்து எழுதினீர்களா?. இந்த இரண்டு இடங்களும் போநஸ் இடங்கள். நாங்கள் ஒன்றும் தேர்தலின் தாங்களே வென்ற இடங்களை பெண்களுக்கு விட்டூ கொடுக்குமாறு கேட்கின்றோமா?. மாகாணசபையில் இடம் இல்லாதவர்களை தான் பக்கம் இழுத்த்து அரசு என்ன செய்ய முடியும்?. இப்பொழுது வென்றவர்களை அப்படி செயமுடியாது என்று உங்களுக்கு என்ன உத்தரவாதம்?. அடுத்ததாக U.N.Pயின் பிரச்சனைகள் chnadrika காலத்தில் இருந்தே அதன் தலைமையில் உள்ள குறைபாடுகளால் உருவானமை ஒன்றும் தெரியாதது அல்ல. அந்த குறைபாடுகளை பாவித்து கட்சியில் உள்ளோரை ஆளும் கட்சி உள்வாங்கியமைய் எமக்கு தெரியும். நிலமை இப்படியிருக்க நீங்கள் வெறுமனே பெண்கள் பிரதிநித்துததுவம் விடயத்தில் சாட்டுக்களை அடுக்கி கொண்டுபோவது நன்றன்று.
 
மாறாக பிரதிநித்துததுவம் குறைக்கின்றபோது அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் வேறு வழிமுறைகளை தேடுவது தான் வழமையாக நடப்பதுண்டு. அதனால் அரசியல் கடமைப்புகள் தாளம்பல் நிலைக்கு போவதை நாங்கள் பல நாடுகளில் பார்க்கின்றோம். இதனால் தான் நாம் முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தபோதும் அவர்களுக்கு இடம் கொடுத்தோம். இந்த போருக்கு பின்னரான காலத்த்தில் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை சரியாக பிரதிபலிக்கின்ற ஒருவர் அவ்ரகளுக்கு தேவை என்பதை நாம் என்கின்றோம். அவர் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில் அவர் இடம் தரப்படத்தாக தகவல் இல்லை. 
 
அதேபோல தான் கமலா குணசீலனையும் பெண்களின் பிரதிநித்துததுவம் வலுப்பெற போட எடுட்தத முயட்சிகள் தோவியில் முடிந்து இன்று வடக்கில் பெண்களின் பிரதிநிததுவம் பற்றி அவுஸ்திராலியாவின் முன்னணி பத்திரிகையில் வந்துள செய்தியை பார்க்கவும். 
 
-----------------
 
Female vote-winner likely to be sidelined by Tamil alliance

HER advocacy for Sri Lanka's disappeared, and a violent midnight attack on her home ahead of last weekend's historic elections, made Ananthi Sasitharan a prominent face of the victorious Tamil National Alliance campaign.

Ms Sasitharan was the party's second highest vote-winner in the northern council elections, behind former supreme court judge and chief minister-designate CV Wigneswaran, and the only woman elected to the 38-seat council. But her role in the TNA's sweeping electoral win looks unlikely to be reflected in any post-election position.

"When we suggested a ministerial post for Ananthi (the TNA committee) laughed at us because she doesn't speak English and has no political experience," said Saroja Sivachandran, the Jaffna-based director of the Centre for Women and Development.

"The north is still very much in the hands of men."

Ms Sivachandran said her centre had also lobbied for one of two bonus council seats allotted to the TNA - which won 30 out of 38 - to be given to Mary Kamala Gunaseelan, candidate for the war-devastated Mullaitivu district, who lost by just 52 votes.

That too seemed a dim prospect, she conceded.

Sri Lankan women comprise about 53 per cent of the population, and in the north head more than 40,000 households following a brutal 26-year civil war.

Yet a recent collaborative report by political and women's groups, Sri Lankan Women's Agenda, notes the region - still being rebuilt four years after the war's end - had yet to come to terms with the demographic changes that had forced thousands of women to become sole breadwinners.

Violence against women was increasing, and women were being excluded from post-conflict reconstruction efforts and peace-building processes even though their increased participation was critical to the peace process, it says.

"Those who do run for local office face a very aggressive election system that uses violence to intimidate candidates and shape voting patterns," the report says.

An interim report by the Commonwealth Observer Mission has found the government and military compromised last weekend's election environment, and that opposition candidates, supporters and voters "faced instances of intimidation and harassment".

Speculation that Ms Sasitharan could be made the equivalent of parliamentary secretary to the chief minister prompted angry criticism on Twitter yesterday.

Jaffna lawyer and commentator Kumaravadivel Guruparan said the issue with Ms Sasitharan was less about sexism than "internal bickering", wariness over her Tamil Tiger connections and a desire to break with the past.

  • கருத்துக்கள உறவுகள்

"சுமந்திரனே ஒரு அஜெண்டா வோட திரியுற ஆள்! அவரையே மேற்கோள் காட்டுற அளவுக்கு இருக்கு உங்கட அஜெண்டா! "
-----

புத்தாலவன், பதிலைப் பார்த்து ரசித்துச் சிரித்தேன்.

இங்கு பலர் குருட்டுப் பூனை எலி பிடிப்பதைப் போல்.... கதையளக்கிறார்கள்.

முஸ்லீம் கட்சியில்.... இதுவரை... எவனாவது, தமிழனை... தெரிவு செய்த வரலாறு இருக்கா?

ஆகக் குறைந்தது... முஸ்லீம்கள், தமிழர் கட்சிக்கு வாக்குப் போடுகின்றார்கள் என்று... இந்த மாங்காய் மடையர்கள்... நம்பிக் கொண்டிருக்கின்றார்களா?

************

***********

நியானி: பண்பற்ற கருத்து தணிக்கை

Edited by நியானி

முஸ்லீம்கள் எதற்கு தமிழர்களை தெரிவு செய்ய வேண்டும்? அவர்கள் ஒரு சிறுபான்மை இனம். அப்படி செய்ய முடியாது. அவர்களை உள்வாங்க நினைக்கின்ற நாம்தான் அவர்களுக்கு இப்படியான போனஸ் ஆசனங்களைக் கொடுத்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.