Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எயர் ஹொஸ்ரஸ் ,நேர்ஸ்மாருக்கெல்லாம் மாப்பிளை எடுக்கிறது வலு கஸ்டம்...... :icon_idea:

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply

இது ஆண்கள் சம்பந்தப்பட்ட திரி என்பதனால் நானும் இதில் எழுதாமல் விட்டிருந்தேன்.  இப்போது எழுத வேண்டிய அவசியம் இருப்பதால் எழுதுகிறேன்.  எங்கள் வீட்டிற்கு ஆண்கள் வந்தால் எனக்கு அறையை விட்டு வெளியில் வர அனுமதி இருக்கவில்லை.  கனடா வந்த பிறகும் அந்நிய ஆண்கள் வந்தால் அறையை விட்டு வெளியில் வருவதற்கு அனுமதி இல்லாமல்தான் இருந்தேன்.  எனது குடும்பம் வேறு பெரியது.  எனக்கு நிறைய ஆண் சகோதரர்கள்.  ஆனால், அவர்களையெல்லாம் மீறி அவர்களுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் உடைத்தெறிந்து நான் விரும்பிய பல்கலைக்கழகத்திற்கு நான் விரும்பிய படிப்பையே படித்தேன்.   நான் சென்ற பல்கலைக்கழகம் எனது வீட்டிலிருந்து 200 கிலோ மீட்டர்களுக்கப்பால் இருந்தது.  வேறு இரண்டு பெண்களோடு ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தேன்.  பல வருடங்களாகத் தமிழீழப்போராட்டத்திலும் எனது பங்களிப்பைச் செய்திருக்கிறேன்.  நான் அறிந்திராத  நாட்டிற்குச் சென்று ஆறு மாதங்களாகத் தனியாகத் தங்கியிருந்தேன்.  அந்த நாட்டிற்குச் செல்லும்வரை அங்கு என்ன மொழி பேசுவார்கள் என்றுகூட அறிந்திருக்கவில்லை.    எனது சுதந்திரத்தை நானே போராடிப் பெற்றுக் கொண்டேன்.  எனக்காக யாரும் (எனது தாயார், சகோதரிகள் உட்பட) கதைத்ததுமில்லை. உதவி செய்ததுமில்லை.  நான் வாழும் நாடு எனக்கு துணிவைக் கொடுத்தது.  அனைத்தும் எனது விருப்பப்படியேதான்  நடக்கிறது. பல்கலைக்கழகத்தில் படித்த போது மட்டுமே தனியாக இருந்தேன்.  மற்றைய காலகட்டங்களிலெல்லாம்  நான் எனது குடும்பத்தினரோடுதான் வாழ்ந்து வருகிறேன்.   

என்னைப் பொறுத்தவரை மைத்ரேயி, பாஞ் குறிப்பிட்டது போல சுதந்திரம் என்பது எமது கைகளிலேயே உள்ளது.     நான் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினால் நான் இழந்தவற்றைவிட சாதித்தவைதான் அதிகம்.  நான் இந்த சமூகத்திற்குப் பயந்து வாழ்ந்திருந்தேனானால் யாழுக்குக் கூட வந்திருக்க முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை கூறுங்கள்.. நீங்கள் வீட்டில் இருக்கும்போது வரும் உறவினர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ உங்கள் கணவர் தேனீர் போட்டுக் கொடுப்பாரா?  :o

கணவர் தேநீர் கொடுப்பதற்கு என்ன பிரச்சனை???? ஆனால் கணவரிலும் பார்க்க நான் சுவையாகப் போடுவதால் விருந்தினர்களை முகம் சுளிக்க வைப்பதில்லை என்னும் முடிவில் நானே போட்டுவிடுவேன். ஏனெனில் விருந்தோம்பல் விடயத்தில் எனக்கென்று ஒரு பெயர் என்னுடன் பழகும் ஆட்களிடமோ அன்றி உறவினரிடமோ இருக்கிறபடியால் அதைத் தக்கவைப்பது என் கடமையல்லவா??? மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழச்சி. எம் சுதந்திரத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பழ பெண்களுக்கு சுதந்திரம் என்பது எது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்கள் பெண்ணை வெளியே விட்டுப் பழக்கினால் எங்கே அவர்கள் தம்பாட்டில் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தில் அன்பு,அக்கறை என்னும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கி தம் துணைவியாரை ஒன்றுமே செய்ய விடுவதில்லை. அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு நகையும் சேலையும் வாங்கிக் குடுத்தே வாய் திறக்காமல் செய்தும் விடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

உங்களையா? தோழிகளையா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழச்சி. எம் சுதந்திரத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பழ பெண்களுக்கு சுதந்திரம் என்பது எது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்கள் பெண்ணை வெளியே விட்டுப் பழக்கினால் எங்கே அவர்கள் தம்பாட்டில் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தில் அன்பு,அக்கறை என்னும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கி தம் துணைவியாரை ஒன்றுமே செய்ய விடுவதில்லை. அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு நகையும் சேலையும் வாங்கிக் குடுத்தே வாய் திறக்காமல் செய்தும் விடுவர்.

உங்களையா? தோழிகளையா? :rolleyes:

தோழிகளுக்குத்தான் வேறென்ன??? :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

புரியுது... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரியுது... :D

புரியுதோ வயிறு எரியுதோ அண்ணா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழச்சி. எம் சுதந்திரத்தை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பழ பெண்களுக்கு சுதந்திரம் என்பது எது என்றே தெரியாது வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்கள் பெண்ணை வெளியே விட்டுப் பழக்கினால் எங்கே அவர்கள் தம்பாட்டில் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்னும் அச்சத்தில் அன்பு,அக்கறை என்னும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கி தம் துணைவியாரை ஒன்றுமே செய்ய விடுவதில்லை. அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு நகையும் சேலையும் வாங்கிக் குடுத்தே வாய் திறக்காமல் செய்தும் விடுவர்.

தோழிகளுக்குத்தான் வேறென்ன??? :D

நாங்கள் எங்கையோ போட்டம், சுமே!

நீங்கள் இன்னும் நாவாந்துறை, கோணாந்தோட்டம் லெவல்ல தான் சிந்திக்கிறீங்கள் போல கிடக்கு! :D

 மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

இதென்ன பெரிய விசயம். நான் எண்டால் தோழிகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருப்பன். :D

கணவர் தேநீர் கொடுப்பதற்கு என்ன பிரச்சனை???? ஆனால் கணவரிலும் பார்க்க நான் சுவையாகப் போடுவதால் விருந்தினர்களை முகம் சுளிக்க வைப்பதில்லை என்னும் முடிவில் நானே போட்டுவிடுவேன். ஏனெனில் விருந்தோம்பல் விடயத்தில் எனக்கென்று ஒரு பெயர் என்னுடன் பழகும் ஆட்களிடமோ அன்றி உறவினரிடமோ இருக்கிறபடியால் அதைத் தக்கவைப்பது என் கடமையல்லவா??? மற்றப்படி போலிக் கவுரவம் பார்க்கமாட்டார் என் கணவர். ஒருமுறை என் நண்பிகள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தபொழுது என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார்.

ஆலயங்களில் அன்னதானம், கலியாணவீடு என்று சபைகள் சந்திகளில் ஆண்கள் உணவு பரிமாறி அசத்துவது ஒன்றும் பெரிய விடயமே அல்ல. விருந்தினர் வீட்டுக்கு வந்தால் இறைச்சிகூடச் சமைப்பார்கள். ஆனால் இவற்றை அவர்கள் தாம் விரும்பும்போது மாத்திரமே செய்வார்கள். மனைவி கூறி செய்வார்கள் என்பது சந்தேகமே. இதுதான் சாதாரணமாக ஒரு தமிழ் ஆணின் இயல்பு. ஆனால் இதே ஆண் வேற்றினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் தானாகவே பலவற்றை செய்வதை அவதானிக்கலாம். ஆகவே முட்டையில் மயிர் பிடுங்குவதுபோல இவற்றை பெண்களுக்கான சுதந்திரமின்மை எனக் கருதினால் சகல தமிழ் பெண்களும் சுதந்திரமில்லாமல்தான் வாழ்கிறார்கள்.  

இப்படியான நிகழ்வுகளை கண்டு எழுதிய சிறுகதைகள் சில:

சாகாவரம்

மறுவிசாரணை 

யாகாவாராயினும் நாகாக்க!  

விசவித்துக்கள்...! 

:D 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கையோ போட்டம், சுமே!

நீங்கள் இன்னும் நாவாந்துறை, கோணாந்தோட்டம் லெவல்ல தான் சிந்திக்கிறீங்கள் போல கிடக்கு! :D

புங்கை.. உது லண்டன் சமாச்சாரம்.. ;-)

இதென்ன பெரிய விசயம். நான் எண்டால் தோழிகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருப்பன். :D

கவனிச்சுப் பாருங்கோ.. உங்கட வீட்டுக்கு தோழியரே வராயினமே.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

எயர் ஹொஸ்ரஸ் ,நேர்ஸ்மாருக்கெல்லாம் மாப்பிளை எடுக்கிறது வலு கஸ்டம்...... :icon_idea:

இந்த  திரியை  கவனித்தால் தெரியும்

வயசு வந்த பிள்ளைகளை உடையோர் எல்லோரும் தமது வயதாலும்

அனுபவத்திலும்

பிள்ளைகளின் அக்கறையின் பாலும்

தமது பிள்ளைகளை ஒரு வரம்புக்குட்பட்டே வளர்க்கிறார்கள் என்பது இங்கு தெரிகிறது.

மற்றவர்கள்

சிறு பிள்ளைகளை உடையோர்

கேட்டறிவும்

அனுபவமுமின்றி  எழுதுகின்றார்கள் என்பது தெரிகிறது.

எனது 2வது மகன்  விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி  அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரே ஒரு காரணம் தான்

அந்த தொழிலுக்கும் குடும்ப  வாழ்க்கைக்கும் சரி வராது என்று தான். :(

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விசயம். நான் எண்டால் தோழிகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருப்பன். :D

கையாலா கரண்டியாலா???

  • கருத்துக்கள உறவுகள்

கையாலா கரண்டியாலா???

தப்பிலி அந்த நேர தேவையைப் பொறுத்து செய்வார்

இந்த  திரியை  கவனித்தால் தெரியும்

வயசு வந்த பிள்ளைகளை உடையோர் எல்லோரும் தமது வயதாலும்

அனுபவத்திலும்

பிள்ளைகளின் அக்கறையின் பாலும்

தமது பிள்ளைகளை ஒரு வரம்புக்குட்பட்டே வளர்க்கிறார்கள் என்பது இங்கு தெரிகிறது.

மற்றவர்கள்

சிறு பிள்ளைகளை உடையோர்

கேட்டறிவும்

அனுபவமுமின்றி  எழுதுகின்றார்கள் என்பது தெரிகிறது.

எனது 2வது மகன்  விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி  அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரே ஒரு காரணம் தான்

அந்த தொழிலுக்கும் குடும்ப  வாழ்க்கைக்கும் சரி வராது என்று தான். :(

.

எனது சகோதரனுக்கும் இதே நிலைமைதான் இருந்தது.  அவர் பல்கலைக்கழகம் செல்லும்போது எனது குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  அதனால் அவர் வேறு துறையில்தான் படித்தார்.  படித்து முடித்ததும் தனது செலவிலேயே விமானிக்குப் படித்து இப்போது சிறு விமானங்கள் மற்றும் வர்த்தக விமானங்கள் செலுத்தும் விமானியாக இருக்கிறார்.  அதேபோல், எனது மருமகன் ஒருவரும் விமானப் பொறியியலாளராக (Aeronautical Engineering) வர விரும்பினார்.  அதனை இங்கு பல்கலைக்கழகத்தில் படிப்பிப்பதில்லை.  கல்லூரிகளிலேயே படிப்பிப்பார்கள்.  அதனால், எனது அண்ணா இவரை அப்படிப்பிற்கு அனுமதிக்கவில்லை.  பெற்றோரின் விருப்பப்படியே பல்கலைக்கழகத்திற்குச் சென்று, முதலாவது ஆண்டை முடித்து விட்டு,  கல்லூரிக்குச் சென்று இப்போது விமானப் பொறியியலாளர் படிப்பையே தொடர்கிறார்.   தந்தையின் விருப்பப்படி, தான் ஒரு டிகிரி எடுத்துத் தருவேன் என்ற உறுதிமொழியும் கொடுத்திருக்கிறார்.   இவருக்கு அடுத்தவர் அவரது மற்றும் பெற்றோரின் விருப்பப்படி கம்பியூட்டர் இன்ஜீனயரிங் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படிக்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

எனது 2வது மகன் விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரே ஒரு காரணம் தான்

அந்த தொழிலுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் சரி வராது என்று தான். :(

.

உங்களது அவதானங்களை (observations) சொல்லியிருந்தீர்களாயின், அது ஏற்புடையதே. ஆனால் நீங்கள் விமானத்துறையில் இல்லாதபட்சத்தில் ஒருஆலோசனையாக (advise) அதைச் சொல்லியிருந்தீர்களாயின் அது ஏற்புடையதல்ல என்பது என் கருத்து. :unsure:

மகன் நாளை தான் ஒரு விமானியாக வந்திருக்கலாமே என்று வருந்தினால் அதற்கு பொறுப்புக்கூறும் கடமை உங்களை வந்து சேர்ந்துவிடும்.

பி.கு.: இன்று மகன் சரி என்று சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், குடும்ப உணர்வு, பொருளாதாரம் என.. ஆனால் Gen-x வகையைச்சேர்ந்த எமது சிந்தனைகளுக்கும், millennials என்கிற அவர்களது சிந்தனைகளுக்கும் இடையில் பலத்த வேறுபாடுகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன்.

ஒரு பெண்ணின் சுதந்திரம். 

எனது 2வது மகன்  விமானிக்கு படிக்கப்போவதாக சொல்லி  அபிப்பிராயம் கேட்ட போது நான் சொன்னது.

நல்லவிடயம்

கேட்க சந்தோசமாகவும் இருக்கு.

ஆனால் எனக்கு விருப்பமில்லை

ஒரு ஆணின் சுதந்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவற்றை அவர்கள் தாம் விரும்பும்போது மாத்திரமே செய்வார்கள். மனைவி கூறி செய்வார்கள் என்பது சந்தேகமே. இதுதான் சாதாரணமாக ஒரு தமிழ் ஆணின் இயல்பு. ஆனால் இதே ஆண் வேற்றினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் தானாகவே பலவற்றை செய்வதை அவதானிக்கலாம். ஆகவே முட்டையில் மயிர் பிடுங்குவதுபோல இவற்றை பெண்களுக்கான சுதந்திரமின்மை எனக் கருதினால் சகல தமிழ் பெண்களும் சுதந்திரமில்லாமல்தான் வாழ்கிறார்கள்.  

:D 

ஏன் வேற்றினப்பெண்ணை மணந்தால் மட்டும் தமிழ் ஆண் ஏன் சகஜமாக எல்லா வேலைகளையும்  பகிர்ந்து செய்வார் ? விளக்கம் வேணும் அண்ணோய் ?

 யாயினியின் கருத்துக்கு,

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?! ... என்று கேட்டிருக்கிறேன். ஏனெனில் சமுதாயத்திற்காக தங்களைத் தொலைத்தவர்கள்தானே அவர்கள்_!

போராளிகள் பற்றி விவாதிப்பதானால் சோழி புதிய திரியை ஆரம்பியுங்கோ அதுதான் பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது. அவர் நினைத்தாலும் தனியாக செல்ல முடியாது. அதற்காக அவருக்கு சுதந்திரம் இல்லை என்று கூறிவிட முடியுமா? பெண் சமூகத்தின் உற்பத்திக்கான காரணி என்பதால் சமூகமானது பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகளை விதித்தால் அவற்றை எப்படி அடக்குமுறை என்று கூறமுடியும்?

இங்கு நான் சிவப்பால் அடையாளமிட்டிருக்கும் கருத்துக்கான எனது பதில் :-

15வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகைப் பேட்டியில் பெண் விடுதலை தொடர்பாக பேசப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணும் கலந்ததாக நினைவு. குறித்த ஆணின் கருத்துக்கு பதில் கொடுத்திருந்தார். இறுதியில் அந்து ஆண் பெண்ணின் கருத்தை வெல்ல முடியாத நிலமை வந்ததும் இறுதி முற்று வைத்திருந்தார்.

ஆண் சிறுநீர் கழிப்பது போல பெண்ணால் முடியுமா என. இதே போன்ற மனநிலையில் தான் உங்கள் கருத்தும் அமைந்திருக்கிறது.

உற்பத்தி மெஷின் தானாக தன்னை காப்பாற்றாதவரை அது தனத தரத்தை இழந்து போவது தவிர்க்க முடியாது.

பெண் உற்பத்தி மெஷினாக நீங்கள் நினைத்து காப்பாற்றத் துடிப்பது பாதுகாப்பதற்கு அல்ல பக்கா சுயநலம்.

மகன் நாளை தான் ஒரு விமானியாக வந்திருக்கலாமே என்று வருந்தினால் அதற்கு பொறுப்புக்கூறும் கடமை உங்களை வந்து சேர்ந்துவிடும்.

இதேபோன்றதொரு நிலமை சகாராவின் மகளின் மனதிலும் நிச்சயம் இருக்கும். விசுகுவின் மகனின் எண்ணத்திலும் மறக்காத காயமாக இருக்கும்.

எனக்குப் பிடித்த கல்வியை அடைய முடியாமற்போனதற்கு காரணமான எனது உறவினர்களை நான் இப்போதும் நினைத்து வருந்துவது மட்டுமல்ல. என் வாழ்வில் மன்னிக்க முடியாதவர்களாகவும் அவர்கள் என் மனசில் இருக்கிறார்கள்.

பெண் என்ற காரணத்துக்காக எனக்கு மறுக்கப்பட்ட உயர்கல்வி எனது தெரிவை அப்போது என்னால் முன்னெடுக்க இப்போது போல யாரும் துணையாய் இருக்கவில்லை.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
அக்கா மற்றப் பெண்களைப் பற்றி தேவையில்லாமல் கதைப்பதால் மற்றப் பெண்கள் அக்காவின்ட‌ மகளைப் பற்றி கதைப்பினம் என்ட பயமோ :unsure:  :(
 
ஏன் வேற்றினப்பெண்ணை மணந்தால் மட்டும் தமிழ் ஆண் ஏன் சகஜமாக எல்லா வேலைகளையும்  பகிர்ந்து செய்வார் ? விளக்கம் வேணும் அண்ணோய் ?

போராளிகள் பற்றி விவாதிப்பதானால் சோழி புதிய திரியை ஆரம்பியுங்கோ அதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதற்கான விளக்கத்தை வேற்றினப் பெண்ணை திருமணம் செய்தவர்களைத்தான் கேட்க வேண்டும். எனினும், நான் நினைக்கிறேன் வேற்றினப் பெண்கள் சீதனம் கொடுப்பதுமில்லை, ஆண்களிடத்தில் அவர்களின் பதவிகளையோ வசதிகளையோ எதிர்பார்ப்பதுமில்லை.

அந்த கருத்துக்கு போராளிகளும் பொருத்தமாக அமைந்தார்கள். மற்றும்படி, அவர்களைப்பற்றி விவாதிப்பதானால் நீங்கள் எதிராகவும், நான் ஆதரவாகவும்தான் விவாதிக்கலாம்.  :lol:  :o

இங்கு நான் சிவப்பால் அடையாளமிட்டிருக்கும் கருத்துக்கான எனது பதில் :-

15வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகைப் பேட்டியில் பெண் விடுதலை தொடர்பாக பேசப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணும் கலந்ததாக நினைவு. குறித்த ஆணின் கருத்துக்கு பதில் கொடுத்திருந்தார். இறுதியில் அந்து ஆண் பெண்ணின் கருத்தை வெல்ல முடியாத நிலமை வந்ததும் இறுதி முற்று வைத்திருந்தார்.

ஆண் சிறுநீர் கழிப்பது போல பெண்ணால் முடியுமா என. இதே போன்ற மனநிலையில் தான் உங்கள் கருத்தும் அமைந்திருக்கிறது.

உற்பத்தி மெஷின் தானாக தன்னை காப்பாற்றாதவரை அது தனத தரத்தை இழந்து போவது தவிர்க்க முடியாது.

பெண் உற்பத்தி மெஷினாக நீங்கள் நினைத்து காப்பாற்றத் துடிப்பது பாதுகாப்பதற்கு அல்ல பக்கா சுயநலம்.

உங்களுடைய அகராதியில் அப்படியான அர்த்தம் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்.

இயற்கையின் நியதிப்படி பெண் உற்பத்திக்கு உரியவள்தான். அதற்காக அவளுக்கான தவிர்க்கமுடியாத கட்டுப்பாடுகள் சுயநலம் என்றால், பிறகு ஏன் ஆண் இணை? குழந்தை? பொட்டு? தாலி? எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்... எறியமாட்டார்கள்.. தங்கள் வீட்டில் அடக்குமுறை இல்லை என்பார்கள்.. இதுதான் பல தமிழ் பெண்ணியவாதிகளின் கூற்று.  :D

இந்தக் காலத்தில் புதிய தலைமுறை தாலி எல்லாம் போடுகிறார்களா என்ன ??? எங்கே இருக்கிறீர்கள் ??? பெண்கள் பொட்டு அணிவது தம்மை அழகுபடுத்தவேயன்றி வேறு எதற்கும் இல்லை. பெண் உற்பத்திக்கு உரியவள்தான். ஆனால் இணை இன்றியே உற்பத்தி செய்யக்கூடியவள். அனால் நீங்கள் எதுவென்றாலும் பெண்ணிடம்தான் வரவேண்டும் சோழி. :lol:

எது என்றாலும் மனுசியிட்ட வரவேணும் என்றதாலதானே 1988ல 3 முறை ஏஜென்சிக்கு காசு கட்டி (2 முறை ஏமாத்திட்டாங்க) ஊர் பெட்டையை மனுசியா கூப்பிட்டனான். :wub:  :lol:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.